ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

கோடீஸ்வர யோகம் அமையும்

1) மேஷ லக்கினதில் உதித்தவர்களுக்கு சூரியன்செவ்வாய்குரு ஜாதகத்தில் பிரகாசித்தால் கோடீஸ்வர யோகம் ஏற்படும்.


2) ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனி நட்பு நிலையில்நல்லவர்கள் சம்பந்தம் பெற்றிருந்தால் கோடீஸ்வரர் ஆகலாம்.

3) மிதுன லக்கினத்தில் உதிதவர்களுக்கு புதன்சுக்கிரன் ஜாதகத்தில் சிறந்து விளங்கினால் கோடீஸ்வரர் ஆக முடியும்.

4) கடக லக்கினத்தில் குருசெவ்வாய் பலம் கோடீஸ்வர யோகம் பெறஉதவும்.

5) சிம்ம லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சூரியன்புதன்செவ்வாய்,சுக்கிரன் ஆகியோர்களது சுபத்துவ சம்பந்தம் கோடீஸ்வரர் ஆக உதவும்.

6)கன்னி லக்கினத்தில் உதித்தவர்களுக்கு புதன் உச்சம்சுக்கிரனின் சுபத்துவ சம்பந்தம் பெற்று வலுவுடன் விளங்கினால் கோடீஸ்வரர் ஆகலாம்.

7) துலா லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனியும் சுக்கிரனும் சிறந்து விளங்கினாலே கோடீஸ்வரர் ஆக முடியும்.

8)விருச்சிக‌ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு செவ்வாய் மற்றும் சூரியசந்திரர்கள் பிராகாசிப்பதைப் பொறுத்து கோடீஸ்வர யோகம் அமையும்குரு பலம் மற்றும் குரு பார்வை அதில் விசேட சிறப்பைத்தரும்

9)தனுசு லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 2ம் இடம், 4ம் இடம்
10ம் இடம் மற்றும் 11ம் இடம் ஆகியவற்றில் இரு இடங்களாவது குருபார்வை பெறுவது மற்றும் சூரியன் புதன் குரு பார்வை பெற்று சிற‌ப்பான இடங்களில் இருந்தால் கோடீஸ்வரர் ஆக முடியும்.


10)மகர‌ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனிபுதன்சுக்கிரன் ஆகியோர் சிறந்து விளங்கினால் கோடீஸ்வரர் யோகம் அமையும்.

11)கும்ப‌ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சனிசுக்கிரன்செவ்வாய் சிறந்து விளங்குவதை பொறுத்து கோடீஸ்வரர் யோகம் ஏற்படும்.

12)மீன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு குரு கேந்திரங்கள் அல்லாத இடங்களில் நல்ல விதமாக அமைந்துநல்ல இடங்களைப் பார்ப்பதுமற்றும் செவ்வாய் பலத்தினால் கோடீஸ்வர யோகம் அமையும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

நவ கிரக பாதிப்பு தீர பல பரிகாரம் உள்ளது

 இதில் முதல் தர பரிகாரம் ஒன்று உள்ளது  புது வருட பஞ்சாங்கம் வாங்கி அதை உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு ஒரு ரூபாய் மற்றும் வெற்றிலை பாக்கு வைத...