செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

விளக்கு தத்துவம்

Photo: விளக்கு தத்துவம்
--------------------------
அகல், எண்ணெய், திரி, சுடர் ஆகிய நான்கும் சேர்வதே விளக்காகும். இவை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கினையும் குறிக்கும். இவையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு சாதனங்களும் ஆகும். இதனைக் கொண்டே நாம் ஆன்ம ஒளியைப் பெற வேண்டும் என்பதே விளக்கின் தத்துவம். 

உடலும் தீபமும் விளக்கின் அடிப்பாகம், நமது உடலின் தொப்புளுக்கு கீழ் உள்ள மூலாதாரம், விளக்கின் தண்டு முதுகுத்தண்டு வழியே மேல் நோக்கி செல்லும் சூட்சுமநாடி! கழுத்துக்கு மேற்பட்ட பகுதியே குத்துவிளக்கின் தீபம். 

தொடர்பு ஏற்படுத்தும் தீபம் :  

ஆன்மாவுக்கும், ஆண்டவனுக்கும் இடையில் உள்ள உறவை விளக்குகள் உணர்த்துகின்றன! விளக்கு உடலாகவும், நெய் உணர்வுகளாகவும், திரிகள் ஆன்மாவாகவும், சுடர் ஆன்ம ஒளியாகவும் திகழ்கின்றன! விளக்கின் சுடரை ஏற்றும் மற்றொரு சுடர் இறையருள் ஒளியாக உள்ளது. 

எந்த விளக்கும் தானே எரியாது. சுடரைத் தூண்டக் கூடிய மற்றொரு சுடர் நிச்சயம் தேவை. அதைப் போல எந்த ஆன்மாவும் தானே முக்தியடைய முடியாது. அதற்குத் துணை செய்ய இறையருள் ஒளி தேவை. 

இறையருள் ஒளி ஆன்மாவுக்கு கிடைக்கும் போது கிளர்ந்தெழுகின்ற ஆன்மா, தானும் சுடராய்ப் பிரகாசிக்கின்றது. இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு விளக்கும் (உடலும்), நெய்யும் (உணர்வுகளும்), திரிகளும் (ஆன்மாவும்) கச்சிதமாகப் பக்குவப்பட்டிருக்க வேண்டும். 

குத்துவிளக்கில் பெண்மை! :  

குத்துவிளக்கில் இருக்கின்ற ஐந்து முகங்களும், பெண்களுக்கு இருக்க வேண்டிய ஐந்து முக்கிய குணங்களை நினைவூட்டுகின்றன. அவை, அன்பு, மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை ஆகியவனாகும். 

விளக்கு பூஜைக்கு ஏற்ற நாட்கள்! :  

வெள்ளிக்கிழமை, கார்த்திகை, திருவாதிரை, பூசம், விசாகம், திருவோணம் ஆகிய நட்சத்திர நாட்கள், பவுர்ணமி, அமாவாசை, சதுர்த்தி, பஞ்சமி, ஏகாதசி ஆகிய திதிகளிலும் மற்றும் நவராத்திரி, சிவராத்திரி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, தைச் செவ்வாய், தை வெள்ளி ஆகிய நாட்கள் திருவிளக்கு பூஜைக்கு ஏற்ற நாட்கள் ஆகும். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனையாக விளக்கு பூஜை செய்வது மிகுந்த நன்மையை தரும். 

பூஜைக்கு ஏற்ற விளக்குகள்! :  

தீபம் ஏற்ற சிறந்த உலோகம்:

லக்ஷ்மி கடாட்சம் வேண்டுமென்றால் வெள்ளி விளக்கிலும் ,
ஆரோகியம் ஏற்பட வெண்கல விளக்கிலும்,
தேவதைகளின் வசியம் ஏற்பட பஞ்சலோக விளக்கிலும்,
சனி தோஷம் விலக இரும்பு விளக்கிலும் விளகேற்ற வேண்டும்.
உலோகங்களில் மிக உயர்ந்தது தங்கம் தான்.தங்கம் விலை உயர்ந்த உலோகமாக இருப்பினும் அதில் பல சிறப்புகள் உள்ளது.அதில் விளக்கேற்றுவது மிக சிறந்த பலனை தரும்.

இவை அனைத்தையும் விட சகல தோசங்களையும் , பீடைகளையும் போக்க கூடியது மண் விளக்கில்(அகல்) தீபம் ஏற்றி வழிபடுவது ஆகும். 

ஆனால் எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்கை, பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவதற்கோ பயன்படுத்தக் கூடாது. 
 
விளக்கிற்கு ஏற்ற ஆசனம்! :  
விளக்குகளை வெறும் தரையில் வைக்கக்கூடாது! அவற்றை வெள்ளி, செம்பு, பித்தளை, பஞ்சலோகம் முதலியவற்றால் ஆன ஒரு தாம்பளத்தின் மீதே வைக்க வேண்டும். அல்லது மரத்தினால் ஆன பலகையின் மீதாவது வைத்து, திருவிளக்கிற்கு ஏற்ற ஆசனத்தை அமைக்க வேண்டும்.

தீபம் ஏற்றும் நேரம்! :  
தினமும் அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் தீபம் ஏற்ற சர்வமங்கல யோகத்தை தரும். காலையில் வாசலில் சாணம் தெளித்து, கோலம் இட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும். மாலை 6 மணி அளவில் வீட்டில் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை தேடி வரும். 

மாலையில், விளக்கேற்றும் போது வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் இட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும். காலை, மாலை விளக்கேற்றும் போது கொல்லப்புறக்கதவை சாத்திவிட வேண்டும். 

கொல்லைப்புற கதவு இல்லாதவர்கள் பின்பக்கமுள்ள சன்னல் கதவை சாத்தியே விளக்கேற்ற வேண்டும். விளக்கேற்றும் போது விளக்கிற்குப் பால், கல்கண்டு நிவேதம் வைத்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். --------------------------

கொல்லைப்புற கதவு இல்லாதவர்கள் பின்பக்கமுள்ள சன்னல் கதவை சாத்தியே விளக்கேற்ற வேண்டும். விளக்கேற்றும் போது விளக்கிற்குப் பால், கல்கண்டு நிவேதம் வைத்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...