செவ்வாய், 28 ஜூன், 2016

பூர்வ புண்ணிய ஸ்தானம்

பொதுவாக ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம், மனசு, இதயம் மகிழ்ச்சி, திட்டம், தாய்மாமன், பாட்டனார், மந்திர உபேதசம், குரு உபதேசம், கனவுகள் இவற்றைக் குறிக்கும், இந்த ஸ்தானத்தில் கிரகங்கள் அமைவதும், பலம் பெறுவதும், இந்த ஸ்தானதிபதி சுப ஸ்தானம் பெறுவதும், சுபகிரக சேர்க்கை பெறுவதும் அவன், அவன் செய்த பூர்வஜென்ம புண்ணியத்தை பொறுத்தே அமையும், இந்த ஸ்தானம் மிகப்பெரிய சூட்சும ஸ்தானம் ஆகும், முன்பிறப்பில் பெற்ற தாய் தந்தையாரை சரியாக கவனிக்காதவர்கள், அவரை வேதனை படுத்தியவர்களும், அவர்களின் கடைசி காலத்தில் சரியான நேரத்தில் உணவு தராமலும் ஏற்பட்ட பித்ரு சாபங்கள் எல்லாம் ஐந்தாம் இடத்தில் பாப கிரகங்களாக அமர்ந்து பலவிதமான இன்னல்களை பெறுவார்கள் ஐந்தாம் இடம் என்பது அடுத்த ஜென்மம், ஒன்பதாம் இடம் என்பது போன ஜென்மம் பெண்கள் ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என்பது கர்ப்பஸ்தானம், ஆண்கள் ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என்பது புத்திரஸ்தானம், பெண்கள் ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் என்பது புத்திரஸ்தானம் பொதுவாக ஒன்பதாம் இடம் என்பது பாக்கியஸ்தானம் ஆகும் முன் ஜென்மாவில் செய்த கர்ம வினையின் காரணமாக இந்த ஜென்மாவில் அடையும் பாக்கியம்தான் பூர்வ புண்ணியமாகும் திரிகோன ஸ்தானங்கள் என்பது ஒன்றாம் இடம், ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம் ஆகும் இந்த மூன்று ஸ்தானங்கலும் மிக சிறப்பு வாய்ந்த உன்னதமான சூட்சம ஸ்தானங்கள் ஆகும். ஐந்தாம் இடத்திற்கு ஐந்தாவது இடம் ஒன்பதாம் இடம் ஆகும், அதுபோல ஒன்பதாம் இடத்திற்கு ஐந்தாவது இடம் ஒன்றாம் இடம் ஆகும், அதுபோல ஒன்றாம் இடத்திற்கு ஐந்தாவது இடம் ஐந்தாம் இடம் ஆகும் இதுதான் பூர்வஜென்ம புண்ணிய பாக்கிய கணக்கு எனவே இந்த ஸ்தானங்கள் கெட்டுவிட்டால் எதுவுமே இல்லை அதிஷ்டம் இல்லை யோகம் இல்லை, பாக்கியம் இல்லை, குழந்தைகள் இல்லை நிம்மதி இல்லை எதுவுமே இல்லை, எல்லாமே கஷ்டப்ட்டுதான் முடிக்கவேண்டும் பூர்வ புண்ணிய பாக்கியஸ்தானங்கள் பலம் பெற அதனால் நலம்பெற தொடர்ந்து வலைப்பூவை பார்த்து வாருங்கள் விடைகள் கிடைக்கும் ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம், மனசு, இதயம் மகிழ்ச்சி, திட்டம், தாய்மாமன், பாட்டனார், மந்திர உபேதசம், குரு உபதேசம், கனவுகள் இவற்றைக் குறிக்கும், எனவே மேற்கண்டவைகள் எல்லாம் பூர்வ புண்ணியம் பாதிக்கும் பொழுது மேற்கண்டவைகள் எல்லாம் பாதிப்பு அடையும்பிள்ளைகள் வகையில் தொல்லைகள், காரிய தாமதம், கவலை, என்னங்கள் ஈடேராமல் போகுதல், திட்டங்கள் நடைபெறாமல் போகுதல், ரத்த உறவுகளான அப்பா மற்றும் பிள்ளைகளால் அவமானமும் வேதனையும் தாய்வழிப்பகையும், புத்திரர்கள் பகையும், அவமானமும், பெண்பிள்ளைகள் வாழாவெட்டியாவதும் விவாகரத்து ஆகி வாழ முடியாமல் தவிப்பதும் இவைகள் எல்லாம் பூர்வ ஜென்ம கணக்கில் சேர்ந்துவிடும் ஐந்தாம் இடம் மிக சிறப்பு வாய்ந்த உன்னதமான சூட்சம ஸ்தானங்கள் ஆகும் எனவே நல்லதே செய்யுங்கள்

திங்கள், 27 ஜூன், 2016

நான் யார்

மனிதன்! உயிர் இருந்தால் தான்? இல்லையேல் பிணம்! மனிதர்களாகிய நம் உடலினுள் உயிர் இருந்தால் தான் நாம் சிவம்! இல்லையேல் நாம் சவம்! உயிர் இருந்தால் தான் வாழ்வு! உயிர் உடலைவிட்டு போய்விட்டால்? சாவுதான்! உடலும் உயிரும் சேர்ந்திருந்தாலே பிரயோஜனம்! பிரிந்திருந்தால் இயக்கம் இல்லை! உடலோடு உயிர் இருந்தாலே இயக்கம்! உடலைவிட உயிரே முக்கியமானது! உயிர் உடலுடன் இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறான் மனிதன். இப்படி “தலை கால்” தெரியாமல் ஆடுபவனெல்லாம் அடிமுட்டாள்களே! ஒருவன் எப்படி பிறக்கிறான்? பிறப்பு என்றால் என்ன? ஏன் பிறக்கிறான்? இதுதான் “தேவரகசியம்”. பிறப்பின் இரகசியம். ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தை பிறந்து விடுமா? நடக்காது!? இன்றைக்கும் குழந்தையில்லாத தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்களே? விஞ்ஞான வளர்ச்சி, டெஸ்ட்டியுப் குழந்தை உருவானது. ஆயிரம் பல்லாயிரம் முயற்சி செய்தால் ஒன்று உருவாகிறது! எல்லாம் ஜனிப்பதில்லை! எல்லோராலும் முடியாது! விஞ்ஞானம் ஒரு வரையரைக்கு உட்பட்டதே! இன்றைய உலக வளர்ச்சி விஞ்ஞானத்தின் பரிமாணம் தான் மறுக்க முடியாது! பஞ்சபூதங்களை அப்படி இப்படி, எதையாவது செய்து ஏதோதோ கண்டுபிடித்து சுகபோகமாக வாழ வழி கண்டனர் பலர்! எல்லோரும் இந்த பூமியில் உள்ளவர்கள் தானே! இந்த பூமியில்தானே பிறந்தார்கள், இந்த பூமியில் தானே, எப்படியெப்படியோ வாழ்ந்து மடிந்தார்கள். இந்த மனிதர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? பூமியில் கொஞ்சகாலம் வாழ்ந்தார்கள்! எல்லோரும் – பெரும்பாலானவர்கள் இறந்துபோயினர்! இறந்து அவர்கள் போனது எங்கே!? பிறந்தவர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? இறந்தவர்கள் எங்கு போனார்கள்? பிறந்தபோது வந்த உடல், இறந்தபோதும் இருக்கின்றதே? அப்டியானால் பிறப்பு இறப்பு உடலுக்கு இல்லையே?! பின் எதற்கு? உயிர்கொண்டு உடல் வந்தாலே பிரயோஜனம்! உயிர் இன்றி உடல் இருந்தால் மண்தான்!. உயிர்தான் பிரதானம்! உயிர்தான் பிறக்கிறது உடல் கொண்டு! உடலைவிட்டு உயிர் பிரிவதே மரணம்! பிறப்பும், இறப்பும் உயிர் வருவதும் போவதும் தான்! நம்மை ஈன்ற தாய் நமக்கு கொடுத்தது உடல் மட்டுமே! அன்னையின் உடலில் உடலிலிருந்து மாதந்தோறும் வெளியேறும் உதிரமே, அன்னை தந்தையின் சுரோணித சுக்கில சேர்க்கையால் உருண்டு திரண்டு கருவாகி பிண்டம் உருவாகிறது! தீட்டு என்கிறோமே – நம் உடலே தீட்டுதான்! நம் தாயின் தீட்டு தான் நாம்! மனிதன் மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளும் இப்படியே! ஆணின் உயிர் சக்தி சுக்கிலம், பெண்ணின் உயிர் சக்தி சுரோணிதம் இரண்டும் சேர்ந்தால்தான் புதிய உயிர் தோன்றுவதற்கு அஸ்திவாரம்! ஆணும் பெண்ணும், சிவமும் சக்தியும், பாஸிடிவ் நெகடிவ் சேர்ந்தாலே-இணைந்தாலே சக்தி பிறக்கும்-இயக்கம் ஆரம்பமாகும்! தாயின் கருவிலே வயிற்றிலே உருவாகிறது பிண்டம், மூன்று மாதத்திற்கு பிறகு தான் உயிர் வருகிறது! இதுவே அற்புதம் கருவுக்கு உயிர் எப்படி வந்தது? இங்கேதான் ஆரம்பிக்கிறது நமது மெய்ஞ்ஞானம்! தாயின் வயிற்றிலே குழந்தையின் உடல்தான் உருவாகிறது! உயிர் எல்லாம் வல்ல இறைவன் அருளால் வந்து சேர்க்கிறது! இன்னாருக்கு இன்னார் வந்து பிறக்க வேண்டும் என்ற நியதி – விதி – கணக்கு எல்லாம் வல்லவன் வகுத்து வைத்தது! அவன் அருள் ஆக்ஞைபடியே உயிர் தாய் கருவிலே வருகிறது! இதுவே தேவரகசியம்! எப்படி வருகிறது? யாரும் இதுவரை அறிந்திராத ஒன்று! இந்த காலத்தில் வருகிறது - வந்தது என்று அறியலாமே தவிர எப்படி வந்தது என அறிவார் இல்லை?! “உயிர்” என்றால் என்ன? உயிர் எங்கிருந்தது? எப்படி உடலினுள் பிரவேசித்தது? உடலில் எங்கு இருக்கிறது? எந்த வடிவில் தன்மையில் இருக்கின்றது? இதையெல்லாம் அறிந்தவனே ஞானி!! அவனே சித்தன்!! ஒரு சிசு தாயின் கருவிலே 10 மாதம் வளர்ந்து பூரணமாகிறது. ஒரு மாதம் என்பது 27 நாட்களே! 27 நட்சத்திரங்களே 1 மாதம். 10 மாதம் என்றால் 270 நாட்களே. பிரசவ வலியே சிசுவின் பிரவேசத்திற்கு அறிகுறி! கன்னிக்குடத்திலே – குளத்திலே மிதந்து கொண்டு, ‘ஸ்டிரா” மூலம் குளிர்பானம் அருந்துவது போல, தொப்புள் கொடி மூலம் வேண்டிய உணவை தாயிடமிருந்து உறிஞ்சும் சிசு! படைக்கும் பரமாத்மா உயிர்களை படைக்கும் ஆற்றல் இருக்கிறதே, அப்பப்பா அதிசயம்! அற்புதம்! எண்ணிப் பார்க்க இயலாத ஒப்பற்ற அதிஉன்னத செயலாகும்! படைத்த பரமன் காக்க மாட்டானா? இறைவன் தான் நம்மை காப்பாற்றுகிறான்!! தாயின் கருவிலிருந்து எப்போதும் துணையாக இருந்து காப்பவன் இறைவன் மட்டுமே! கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் படியளப்பவன் காப்பவன் இறைவன் ஒருவனே! நம்மை படைத்து காப்பவன் நம்மிடமிருந்து, நான் யார்? ஏன் பிறந்தேன்? எப்படி பிறந்தேன்? இதுபோன்ற எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமறியா குழந்தையாக்கி உலகில் விட்டுவிடுகிறான்! என்னே! அவனின் திருவிளையாடல்! பிறப்பிக்க வைத்த அந்த இறைவனே எல்லா உயிர்களுக்கும் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் தன்னை வெளிப்படுத்திக் காட்டு கின்றான்! ஆனால் அறிவோர் உணர்வோர் வெகுசிலரே! எல்லாம் வல்ல அந்த இறைவனே கருணையே உருவானவன்! அருங்கடல்! எல்லா உயிர்களும் தன்னை அடைய அருள்மழை பொழிகிறான்! மனிதனாக பிறக்கும் அனைவருக்கும் இறைவன் அருளும் அரிய சந்தர்ப்பம் இது! மனிதனை படைத்து காத்து மறைத்து அருளும் எல்லாம் வல்ல பரம்பொருளே அவரவர் வினைக்கு ஏற்ப வாழ்வை முடித்தும் வைக்கிறான்! அதாவது உடலை அழித்து அல்லது மாற்றி அவரவர் பரிபக்குவத்திற்குக்கேற்ற நிலையை தந்தருள்கிறார்! எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே! அவரே படைக்கிறார் அப்போது அவர் பிரம்மா! அவரே காக்கிறார் அப்போது அவர் விஷ்ணு! அவரே மறைக்கிறார் அப்போது அவர் மகேஸ்வரன்! அவரே அருள்கிறார் அப்போது அவர் சதாசிவன்! அவரே அழிக்கிறார் அப்போது அவரே ருத்திரன்! ஆக ஏக இறைவனே எல்லாம் புரிகிறார்! எல்லாமே அவன் செயலே! அவனின்றி ஓர் அணுவும் அசையாது! அணுவுக்கும் அணுவாக இருந்து எல்லாம் புரிந்து ஆள்வதும் அருள்வதும் அவன் திருவிளையாடல்களே! அற்புதங்களே! அனுவுக்கு அனுவானவன், எல்லாம் ஆனவனே, எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவனே, அண்ட பகிரண்டமெங்கும் ஒளியாக ஒளிர்பவனே, நம் உயிராகவும் உள்ளான்!? அணுவுக்கு அணுவாக ஒளிர்பவன் மனித உடலினுள் பலகோடி அணுத்துகள்கள் உள்ளத்தில் இல்லாமல் போவானா?! எங்கும் இருக்கும் இறைவன், தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் நம் உடலினுள்ளும் இருக்கிறான் “உயிராக”!! இதுவே ஆதிகாலம் தொட்டு நமது ஞானிகள் எல்லோரும் உரைத்த உண்மை! வேதங்களில் சொல்லப்பட்ட இறை இரகசியம்! “அகம் பிரம்மாஸ்மி”. இறைவன் பரமாத்மா பரம்பொருள் பெரும்ஜோதி ஆண்டவன் தானே சிறுஜோதியாக தன்னை குறுக்கிக் கொண்டு ஜீவாத்மாவாக உயிராக பிராணனாக நம்முள் இருக்கிறார்! நம் உள் மனம் கடந்த நிலையில் இருப்பதால் தான், உள்கடந்து இருப்பதால் தான் ஆன்றோர் கடவுள் என்றனர்! கட உள்ளே கடத்தினுள்ளே, உன் உடலினுள்ளே என்றுதான் இதற்கு பொருள்! கடவுளே என்று உலகத்திலே தேடுபவன் காண்பது அரிது! கடவுளே என்று உடலிலே தேடுபவன் காண்பான் கண்களினாலேயே! வெளியிலே தேடுவது பக்தி! உடலுள்ளே தேடுவது ஞானம்! இறைவன் கூப்பிடுதூரத்தில் உள்ளான் கைக்கெட்டின இடத்தில் இருக்கிறான் என்பர் பெரியோர்கள்! நம் உடலே இறைவன் வாழும் ஆலயம்! ஜீவர்களே நடமாடும் சிவம்!

முன் ஜென்ம பாவம் போக்கும் சித்திரகுப்தர் கோவில்

சித்திரகுப்தர். இவரை பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்வோம். சிவன் தன் கைகளால் ஒரு அழகான சித்திரம் வரைந்தார். அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்தாள் அம்பிகை. இப்படி உயிர் பெற்ற சித்திரமே சித்திரகுப்தர். அன்னை பராசக்தி அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்த நாள் ஒரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம் என்பதுவும் இதில் விசேஷம். அதனால் கூட அவருக்கு சித்திரகுப்தர் என பெயர் பொருந்தியது. பிறந்து வளர்ந்தவனுக்கு ஒரு வேலை வேண்டாமா?. அதனால் சித்திரகுப்தருக்கு ஒரு வேலையும் தந்தார் இறைவன். மனிதர்கள் செய்யும் பாவ – புண்ணிய கணக்கை எழுதி, மறுபிறவியில் அதற்கு ஏற்ப வாழ்க்கை நிலை அமைத்து தருவதுதான் சித்திரனின் வேலை. ஞானக்காரகனான கேது, புர்வ பண்ணியத்தை நிர்ணயித்து கொடுப்பவர். ஒருவர் ஜாதகத்தில் கேது சரியில்லை என்றால் பல பிரச்சனைகளும் உடல் உபாதைகளும் அனுபவிக்க நேரிடும். அதனால்தான் ஜோதிட சாஸ்திரம், “ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார்“ இல்லை என்கிறது. இப்பேர்பட்ட கேது பகவானின் தொல்லையில் இருந்து விடுபட வருடத்திற்கு ஒருமுறையாவது சித்திரகுப்தனை வணங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். முன் ஜென்மம் இருந்ததா – இல்லையா? என்றால் நிச்சயமாக நம் எல்லோருக்கும் இருந்தது. “ஜடாதரராகிய“ என்ற முனிவர், காட்டின் வழியாக வந்து கொண்டு இருந்தார். இருட்டிவிட்டது. இதை கண்ட ஆகுகன் – ஆகுகி என்ற வேட தம்பதிகள், “இந்த இருட்டில் நடந்து சென்றால் உங்களுக்கு மிருகத்தால் ஆபத்து வரும். அதனால் எங்கள் குடிசையில் தங்கி மறுநாள் செல்லுங்கள்.“ என்றனர் முனிவரிடம். கனிவான பேச்சு, ஜடாதரராகி முனிவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. சரி என்று வேடனின் குடிசையில் தங்க சம்மதித்தார். மிகவும் சிறிய குடிசையாக இருப்பதால் இரண்டு பேருக்கு மேல் தூங்க கூட முடியாத அளவில் மிகச்சிறு குடிசை அது. அதனால் முனிவர், “அப்பா… நான் வெளியே படுத்துக்கொள்கிறேன். நீங்கள் இருவரும் உள்ளே உறங்குகள்.“ என்றார். அதற்கு வேடனோ, “நீங்கள் விருந்தினர். விருந்தினரை வாசலில் படுக்கவைப்பது முறையல்ல. அதனால் நானும் என் மனைவியும் வெளியே உறங்கிக்கொள்கிறோம்.“ என்றார் ஆகுகன். “ஒரு பெண்ணை வெளியே படுக்கவைப்பதா.? அது பாவச்செயல்.“ என்றார் ஜடாதரராகி முனிவர். “சாமீ.. நீங்கள் என் தந்தையை போன்றவர். நான் உள்ளே உறங்குகிறேன்.“ என்று கூறி முனிவரும் ஆகுகியும் குடிசைக்குள் உறங்கினார்கள். வேடன் குடிசையின் வெளியே உறங்கினான். விடிந்தது – விடிந்ததும் குடிசையைவிட்டு வெளியே வந்து பார்த்தாள் வேடனின் மனைவி ஆகுகி. “அய்யோ…“ என கதறி துடித்தாள் அவள். அவள் கதறலை கேட்டு பதறிய முனிவர், வெளியே வந்து பார்த்தார். ஏதோ ஒரு கொடும் மிருகத்தால் வேடன் கொல்லப்பட்டு கிடந்தான். அவன் உடலை மிருகங்கள் குதறி துண்டாக்கி இருந்தது. தன் கணவரின் உடலுக்கு இறுதி சடங்கு செய்தாள் ஆகுகி. கணவரின் உடலுக்கு தீ மூட்டிவிட்டு முனிவர் தடுத்தும் கேளாமல் அதிலேயே அவளும் உடன்கட்டை ஏறினாள். என்னை தம் தந்தையாக கருதி உபசரித்த இப்பிள்ளைகள், என்னால்தானே இந்த கொடிய நிலையை அடைந்தனர். பிள்ளைகள் தம் கண் முன்னால் எரிவதை பார்ப்பவன் எத்தனை பாவம் செய்த பாவி என நினைத்து துடித்தார் முனிவர். அதனால் அவரும் எரிந்து கொண்டிருந்த தீயில் விழுந்து தன் உயிரையும் விட்டார் முனிவர். இந்த மூவரும் மறுபிறவி எடுத்தார்கள். வேடன் நிஷததேசத்தில் வீரசேன மகாராஜனின் மகனாக நளன் என்ற பெயரில் பிறந்தார். ஆகுகி, விதர்ப்ப தேசத்தில் வீமராஜன் மகளாக தமயந்தி என்ற பெயரில் பிறந்தாள். தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் பாவச் செயல் பாவச்செயல்தான் என்பதால் முனிவராக இருந்து தம்பதிகளை பிரித்த பாவத்திற்காக மறுபிறவில் அன்னப்பறவையாக பிறந்து, நள – தமயந்தியை சேர்த்து வைத்தார் அன்னப்பறவை வடிவில் பிறந்த முனிவர் என்கிறது நள – தமயந்தி சரித்திரம். முன்ஜென்மம் இருக்கிறது என்று புராணகதைகளில் மட்டும் சொல்லவில்லை. இக்காலத்திலும் பல சம்பவங்கள் நமக்கு கிடைக்கிறது. ஒரு செய்திதாளில் வந்த தகவல். அதில் – பஞ்சாப் மாநிலத்தில் ஒரு சிறுவன் தன் பூர்வ ஜென்ம நினைவு திரும்பப் பெற்றான். போன ஜென்மத்தில் வாழ்ந்த இடத்திற்கு சென்று, அங்கு இருந்த முதிய பெண்மணியை கண்டு அழதான். “தன் மகன் மகள் திருமணம் நடந்ததா? மகள் திருமணத்தில்தான் நான் இறந்தேன்.“ என்று பழைய சம்பவங்களை எல்லாம் சரியாக சொல்லி சுற்றி நின்ற உறவினர் நண்பர்களையும் சரியாக பெயர் சொல்லி அழைத்து அதிர வைத்தான். இப்படி போன ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் இந்த ஜென்மத்தில் பெரிய பாதகத்தை கொடுக்க கூடாது என்ற கருத்தில்தான் சிவசக்தியே சித்திரகுப்தரை உருவாக்கினர். திருமணதடை, சொத்து தகராறு, உடல் உபாதைகள் குடும்பத்தில் நிம்மதியின்மை போன்ற பிரச்சனைக்களுக்கு காரணம் முன் ஜென்ம கர்மவினையே என்கிறது நம் இந்து சமயம். சித்திரகுப்தரை வணங்கினால் பாவங்கள் குறையும். பாவங்கள் குறைந்தால்தான் நல்ல நேரத்தில் இன்னும் பல நல்ல விஷயங்கள் நடக்கும். காஞ்சிபுரம் பஸ் நிலையத்தின் அருகே சித்ரகுப்தரின் கோவில் இருக்கிறது. அவரின் ஒரு கையில் ஒலைச்சுவடியும் மற்றொரு கையில் எழுத்தாணியும் இருக்கும். நாம் இவரை வணங்கினால் ஞானமும் ஏற்றமும், கேதுவால் வரும் தொல்லையும் நீங்கும். அத்துடன் பாவங்களும் குறைய வாய்ப்பும் இருக்கிறது என்கிறது ஸ்தல புராணம்.

புதன், 22 ஜூன், 2016

கிரக பலன்கள்

ஐந்தாவது இடத்தில் செவ்வாய், சனி சேர்ந்திருந்தால்? ஜோதிட சாஸ்திரப்படி ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. எனவே, அங்கு செவ்வாய், சனி சேர்க்கை நடைபெறாமல் இருப்பது நல்லது. 5இல் செவ்வாய் இருப்பதை பழங்கால ஜோதிட நூல்கள் அவ்வளவு சிறப்பாக குறிப்பிடவில்லை. “ஐந்தினில் இரவித் திங்கள் ஐங்காரகன் அமர்ந்திருக்க” என்ற பாடலில் 5ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய் அல்லது சந்திரன் இருந்தால் அவ்வளவு நல்லதல்ல என்பதே அதன் பொருள், இதனால் குழந்தை பேறு பாதிக்கும். குறிப்பாக ஐந்தில் செவ்வாய் இருந்தால் தீவிரவாத எண்ணங்கள் மேலோங்கியிருக்கும். நான் இங்கு குறிப்பிடுவது நாட்டிற்கு எதிரான தீவிரவாதம் அல்ல. அதாவது எந்த ஒரு செயலையும் விரைவாக முடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள், பொறுமையில்லாமல் இருப்பது போன்ற குணங்கள் அதிகம் காணப்படும். குழந்தைப்பேறு கிடைப்பதில் தடைகள் ஏற்படும். ஐந்தில் செவ்வாய், சனி இணைந்திருந்தால் கெடு பலன்களே அதிகம் ஏற்படும். தாய் மாமனுக்கு ஆகாது. அந்தக் குழந்தை பிறந்த உடனேயே தாய் மாமனுக்கு பல்வேறு பிரச்சனைகள், சிக்கல்கள் ஏற்படும். தாய்வழி உறவுகள் துண்டிக்கப்படுதல், மனத்தாங்கல்கள் ஏற்படும். பிறப்புறுப்பு தொடர்பான நோய்கள் அடிக்கடி ஏற்படும். ஆணாக இருந்தால் விதைப்பகுதி பாதிக்கப்படலாம். இதனால் குழந்தைபேறு கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் சில லக்னங்களுக்கு 5இல் செவ்வாய் இருந்தால் சிறப்பான பலன்கள் கிட்டும். உதாரணத்திற்கு கன்னி லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 5இல் செவ்வாய், சனி அமர்ந்தால் பல வேதங்களை அறிந்தவராக அவர் திகழ்வார். வேத நூல்கள், உபநிடங்களுக்கு விரிவுரை, தெளிவுரை எழுதும் தகுதியைப் பெற்றிருப்பர். அவர்களுக்கு அனைத்து வகையிலும் திறமைமிக்க புதல்வர்கள் பிறப்பார்கள். அழகு, அறிவு, மதி நுட்பம் ஆகியவை அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அபரிமிதமாக இருக்கும். எனவே கன்னி லக்னத்திற்கு மட்டும் 5இல் செவ்வாய், சனி நற்பலன்களை அளிக்கும் என்று உறுதியாகக் கூறலாம். மற்ற ஜாதகர்களுக்கு 5இல் செவ்வாய், சனி இருப்பதால் ஏற்படும் பாதிப்புகளை நல்ல ஆதிபத்தியம் உள்ள குரு பார்த்தால் கெடு பலன்கள் குறையும். பரிகாரம்: செவ்வாய், சனி சேர்க்க பெற்றவர்கள் ரத்த தானம் செய்வது நல்ல பலன்களை அளிக்கும். அதேபோல் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு முதலுதவி அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.உயிர்ப்பலியை எதிர்க்கும் பிரசாரங்கள், அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்படலாம். தெய்வ வழிபாடு: ஆஞ்சநேயர், சரபேஸ்வரர் வழிபாடு ஆகியவை செவ்வாய், சனி சேர்க்கையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும். உண்மையிலேயே ஞானியாக வாழ்ந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்கள் துயரைப் போக்க செயலாற்றிய சித்தரின் ஜீவ சமாதிக்கு சென்றும் வழிபடலாம். ----------------------------- லக்னத்திற்கு 4,7 ஆகிய கேந்திரங்களில் சுபக் கிரகங்கள் சேர்ந்து நிற்கப் பிறந்த ஜாதகன் பொன் பொருள் மற்றும் கோடி ரூபாய் சம்பாதிக்கும் திறம் பெற்று சிறப்புடன் வாழ்வான். பலவித வாகனம் பெற்று பெருமை அடைவான். * லக்னத்திற்கு 4ம் இடம் சர ராசியாக அமைய அதில் ஒரு கிரகம் நின்றால் அந்த ஜாதகன் அரசனுக்குரிய ஆடம்பர வாழ்க்கை பெற்று யோகவானாக விளங்குவான். பெரியவர்களின் தொடர்பு பெற்று அரசாங்கத்தால் விருது மற்றும் பொருள் பெறுவான். இனிய மனைவி அமைந்து சுக ஜீவனம் செய்வான். * செவ்வாய், சனி, ராகு இவர்கள் ஒரே வீட்டில் கூடி நின்றால் பெண்களால் தன லாபம் உண்டாகும். வீடு கட்டை சுகத்துடன் வாழ்வான். எனினும் தீய தசைகள் நடக்கும் போது இந்த சேர்க்கையினால் சிற்சில துன்பங்களும் உண்டாகும். * பத்தாம் இடத்தில் 3 கிரகங்கள் இருக்கப்பெற்ற ஜாதகன் உலகம் புகழும் சன்னியாசியாக விளங்குவான். இரண்டு கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகன் தபசியாகவும் ஞானியாகவும் யோகியாகவும் இருந்து மக்களுக்கு அருள் புரிவான். * 4ம் வீட்டிற்கு அதிபதியும் சந்திரனுக்கு நான்கிற்குடையோனும் எந்த ராசியில் கூடி நின்றாலும் மேலும் சுக்கிரன் பலம் பெற அந்த ஜாதகன் தேவி பராசக்தியாகிய துர்கையின் மீது பற்று கொண்டு பூஜை செய்து தேவி அனுக்கிரகம் பெறுவான். கொடியவர்களில் சூழ்ச்சிகள் இவனிடம் பலிக்காமல் இவன் வெற்றி கொள்வான். * ஒரு ராசியில் சுபக்கிரகத்துடன் 4 கோள்கள் நிற்க அதற்கு 4லில் இன்னொருவன் இருக்க அந்த ஜாதகன் தீர்க்க ஆயுளுடன் சுகமாக வாழ்வான். குதிரை, யானை பெற்ற அரசனைப் போல அனேகர் புகழ பொன் பொருள் பெற்று சிறப்பான். * 8க்குடையவன் 12க்குடையவன் செவ்வாய் ஆகிய மூவரும் எந்த இடத்தில் கூடி நின்றாலும் அந்த ஜாதகன் அன்னிய தேசம் செல்வான். அதே சமயத்தில் இவர்களை சந்திரன் பார்த்தால் சில காலம் வெளிநாட்டில் அதிக பணம் ஈட்டி பின்னர் சொந்த தேசத்திற்கு வந்து சுகமுடன் வாழ்வான். * சனி, செவ்வாய், ராகு இவர்கள் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தோனுடன் கூடி நின்றால் அந்த ஜாதகன் சிவ பூஜையில் பிரசித்தி பெற்றவனாவான். மேலும் ஐயனார், காளி, வீரபத்திரன் போன்ற தெய்வங்களை வணங்கி தேவதை அருள் பெற்று வசியம் செய்யும் வித்தையும் அறிந்தவனாவான். * குருவும் சனியும் ராகுவும் சரம் மற்றும் உபய ராசிகளில் நின்றால் அந்த ஜாதகன் சொந்த இருப்பிடத்தை விட்டு தேச சஞ்சாரம் செய்வான். அதே சமயத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று இருந்தால் சொந்த ஊரிலேயே பலகாலம் வசிப்பான். * சிம்ம ராசியில் அசுர குருவான சுக்கிரனும் செவ்வாயும் கூடியிருந்தால் அந்த ஜாதகன் வித்தைகளில் தேர்ச்சி பெற்று சிற்ப சாஸ்திரத்தில் வல்லமையும் புத்தக ஆராய்ச்சியில் ஈடுபடுபவனாகவும் இருந்து அதிக பொருள் சேர்ப்பான். அன்றியும் அவன் விதவைக்கு வாழ்வளிப்பவனாய் விளங்குவான். * குருவுடன் செவ்வாயும் சுக்கிரனும் சேர அந்த ஜாதகன் நிறைந்த தனங்கள் பெற்று அரசாங்க மரியாதையும் புகழும் அடைவான். செவ்வாயும் புதனும் இணைந்தால் அவன் செல்வச் செழிப்பு மிக்க பண்டிதனாக விளங்குவான். ஆனால் செவ்வாய் புதன் இவர்களுடன் சுக்கிரன் செர்ந்து எங்கு இருந்தாலும் அவனுக்கு அங்க குறைபாடு ஏற்படும். * குரு, சந்திரன், புதன் இவர்கள் சேர்ந்து எங்கு இருந்தாலும் நல்ல அழகும் ஆயுளும் பெற்று செல்வந்தனாகத் திகழ்வான். சுக்கிரன், சந்திரன், புதன் ஆகியோர் சேர துஷ்டனாகவும் காமியாகவும் விளங்குவான். * இரண்டாம் இடத்தில் விரய ஸ்தானதிபதி நின்றால் அந்த ஜாதகன் மாட மாளிகை ஆகிய வீடுகள் கட்டி சிறந்து விளங்குவான். மேலும் லக்னாதிபதியாக குரு, சந்திரன், புதன், சுக்கிரன் இவர்கள் சுபஸ்தானங்களில் நிற்க பொன், பொருள் சேரும். இவர்கள் தசா, புக்தியில் நற்பலன்கள் தருவார்கள். * சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஓரிடத்தில் நிற்க அவன் தனவானாகவும் மனைவியிடம் அன்பு கொண்டவனாகவும் இருப்பான். சூரியனும் குருவும் சேர அரசாங்க செல்வாக்கு பெற்று ஐஸ்வர்யத்துடன் வாழ்வான். சூரியனும் சுக்கிரனும் சேர நல்ல மனைவி அமையப்பெற்று தாம்பத்தியம் அனுபவிப்பதில் சிறந்து விளங்குவான். சனியுடன் சுக்கிரன் கூடினால் கணவன் பேச்சை கேட்காத மனைவி வாய்ப்பாள். * சந்திரன், செவ்வாய், புதன், சூரியன், குரு ஆகியோர் சேர்ந்து இருந்தால் தீய பலன்களே உண்டாகும். அவன் பிறரையும் கெடுப்பான். மேலும் சூரியன், செவ்வாய், சனி, சுக்கிரன் ஒரே வீட்டில் கூடினாலும் ஜாதகன் வறுமையில் உழன்று பிச்சை எடுத்து உண்ணும் கதிக்கு ஆளாவான். * புதன், குரு இவர்களுடன் சந்திரன், சுக்கிரன் இவர்கள் பலம் பெற்று சேர்ந்து நிற்க அதிக செல்வமும் பூமியும் பொன்னும் பொருளும் பெற்று சுகமுடன் வாழ்வான். மேற்கண்ட கிரகங்களுடன் சனி சேர அங்க குறைவு ஏற்படும். * குரு, சுக்கிரன், சூரியன், புதன் இவர்கள் இணைந்து நின்றவன் அதிக திரவியங்கள் பெற்று சுக போகங்களை அனுபவிப்பான். குரு, சுக்கிரன், சூரியன், செவ்வாய் இவர்கள் சேர அவனும் செல்வாக்கு படைத்த தலைவனாகவும் தீர்க்க தரிசியாகவும் செல்வம் மிகுந்து வாழ்வான். * செவ்வாய்க்கு 4, 7 ஆகிய இடங்களில் சுக்கிரன் நின்றாலோ அல்லது சுக்கிரனுக்கு 5,7,11 ஆகியவற்றில் செவ்வாய் நின்றாலோ அந்த ஜாதகன் பூமியில் சிறந்து விளங்குவான். மேலும் லக்னாதிபதி கேந்திர, கோணத்தில் இருக்க வாகன சேர்க்கையும் சொந்தத் தொழில் மூலம் அனைத்து பாக்கியங்கள் அடைதலும் உண்டாகும். விளை நிலங்களும் சேரும். இதனை இவர்களின் தசா, புக்தி காலங்களில் கொடுப்பார்கள். * குரு, சனி, செவ்வாய், புதன் சேர்ந்து நிற்க சந்திரன், சுக்கிரன் இவர்கள் இணையப்பெற்ற ஜாதகன் புவியியல் சாஸ்திரங்கள் அறிந்தவனாக விளங்குவான். * சந்திரன், சுக்கிரன் ஒன்றுசேர குரு, புதன், செவ்வாய் ஒரிடத்தில் நிற்க அந்த ஜாதகன் பாக்கியசாலி ஆவான். அனேக திரவியமும் செல்வாக்கும் அடைவான். பலரை ஆதரித்து எல்லோராலும் புகழப்படுவான். * குரு, புதன், சனி, செவ்வாய், சந்திரன் ஆகியோர் ஒரே இடத்தில் நிற்கப் பிறந்தவன் துன்பங்களை அனுபவித்து கஷ்ட ஜீவனம் செய்வான். குரு சனி சேர்க்கை கன்னி லக்னத்திற்கு உத்தியோகத்தில் பிரச்சனைகள், மண வாழ்க்கையில் பிரச்சனைகளை குரு சண்டாள யோகம் ஏற்படுத்தும். துலா லக்னத்திற்கு இந்த யோகம் காணப்பட்டால், ஓரளவு நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனால் விருச்சிக லக்னத்திற்கு குரு-சனி சேர்க்கை நன்மையை அளிக்கும். வேதங்கள், இதிகாசங்களில் ஆர்வம் ஏற்படும். தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய லக்னங்களுக்கு குரு-சனி சேர்க்கை மிகப் பெரிய முன்னேற்றத்தை அளிக்கும். இவர்களுக்கு குரு அல்லது சனி தசை நடக்கும் போது ராஜ யோகத்தின் பலன்களை அனுபவிப்பார்கள். பொதுவாக எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் குரு-சனி சேர்க்கை 11வது இடத்தில் அமைந்திருந்தால், அது யோகப் பலன்களை அளிக்கும். அது சர லக்னமாக இருந்தாலும் நல்ல பலன்கள் கிட்டும். இதற்கு காரணம் குரு, சனி இருவருக்குமே 11ஆம் இடம் உகந்தது என்பதே. கேந்திர வீடுகளில் (குறிப்பாக 4ஆம், 7ஆம் இடத்தில்) குரு-சனி சேர்க்கை இல்லாமல் இருந்தால் நல்லது. குரு-சனி சேர்க்கை நன்றாக இல்லாத இடங்களில் காணப்பட்டால் ஈமச் சடங்குகளுக்கு உதவலாம் (ஏனெனில் சனி கர்மத்திற்கு உரிய கிரகம்). நல்ல வேதம் தெரிந்த அந்தணர்களுக்கு உதவலாம். மேலும் குருவும், சனியும் ஆலயத்திற்கு உரிய கிரகங்கள் என்பதால் அவற்றை புதுப்பிக்க, சீரமைக்க உதவலாம். ஜோதிடத்தைப் பொருத்த வரை சனி, குருவுக்கு மட்டுமே ராஜ கிரகங்கத்திற்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது . இதில், ஒருவரது ஜனன ஜாதகத்தில் ஒரேவீட்டில்இந்த2கிரகங்களும்இருந்தால்கிடைக்கும்பலன்கள் . குரு, சனி சேர்ந்திருந்தால் அதனை குரு சண்டாள யோகம் என்று கூறுவர். பொதுவாக வேதம், உபநிடங்கள் இதற்கெல்லாம் உரிய கிரகம் குரு. அதேபோல் சனி சத்ரிய கிரகம் என்று கூறுவர். எனவே, குரு-சனி சேர்க்கை பெற்றவர்கள் அனைத்திலும் திறமையானவர்களாகத் திகழ்வர். ஆனால் எந்த லக்னத்திற்கு குரு-சனி ஏற்றது என்பதையும் இங்கே கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஏனென்றால் மேஷ லக்னத்திற்கு குரு சண்டாள யோகம் ஒரு பலனையும் அளிக்காது. நல்ல பலனைத் தராது என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் ரிஷப லக்னத்திற்கு இந்த யோகம் இருந்தால் சிறு வயதிலேயே பெற்றோர் உயிரிழப்பது அல்லது தகப்பானருக்கு சில இடர்பாடுகள் ஏற்படுவது. மிதுன லக்னத்திற்கு குரு சண்டாள யோகம் இருந்தால் திருமணத் தடைகள் ஏற்படும். திருமணத்திற்கு பின்னரும் மனைவி தரப்பில் சில சிக்கல்கள் காணப்படும். கடகம் மற்றும் சிம்ம லக்னத்திற்கு குரு சண்டாள யோகம் அமைந்தால் உத்தமமான மனைவி, மனைவி அமைந்த பின் யோகப் பலன்கள், வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். கன்னி லக்னத்திற்கு உத்தியோகத்தில் பிரச்சனைகள், மண வாழ்க்கையில் பிரச்சனைகளை குரு சண்டாள யோகம் ஏற்படுத்தும். துலா லக்னத்திற்கு இந்த யோகம் காணப்பட்டால், ஓரளவு நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனால் விருச்சிக லக்னத்திற்கு குரு-சனி சேர்க்கை நன்மையை அளிக்கும். வேதங்கள், இதிகாசங்களில் ஆர்வம் ஏற்படும். தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய லக்னங்களுக்கு குரு-சனி சேர்க்கை மிகப் பெரிய முன்னேற்றத்தை அளிக்கும். இவர்களுக்கு குரு அல்லது சனி தசை நடக்கும் போது ராஜ யோகத்தின் பலன்களை அனுபவிப்பார்கள். பொதுவாக எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் குரு-சனி சேர்க்கை 11வது இடத்தில் அமைந்திருந்தால், அது யோகப் பலன்களை அளிக்கும். அது சர லக்னமாக இருந்தாலும் நல்ல பலன்கள் கிட்டும். இதற்கு காரணம் குரு, சனி இருவருக்குமே 11ஆம் இடம் உகந்தது என்பதே. கேந்திர வீடுகளில் (குறிப்பாக 4ஆம், 7ஆம் இடத்தில்) குரு-சனி சேர்க்கை இல்லாமல் இருந்தால் நல்லது. குரு-சனி சேர்க்கை நன்றாக இல்லாத இடங்களில் காணப்பட்டால் ஈமச் சடங்குகளுக்கு உதவலாம் (ஏனெனில் சனி கர்மத்திற்கு உரிய கிரகம்). நல்ல வேதம் தெரிந்த அந்தணர்களுக்கு உதவலாம். மேலும் குருவும், சனியும் ஆலயத்திற்கு உரிய கிரகங்கள் என்பதால் அவற்றை புதுப்பிக்க, சீரமைக்க உதவலாம் ஒன்பதாம் இடத்தில் சேர்க்கை ஒன்பதம் வீடு தந்தை. மத ஆச்சாரம். குல வழக்கம். குரு. உடனே பலம் தரும் தெய்வம். மதப்பற்று. மறுஉலக தொடர்பு. பெரியவர்கள். தூரத்து செய்திகள். திருமண மண்டபம். கலாச்சார விருப்பம். நீண்ட தூரப் பயணம். தொழில் விரயம். தெய்வ வழிப்பாட்டு இடம். தம்பியின் மனைவி. ஒன்றினை தியாகம் செய்தல். பணம் புரட்டுதல். ஜபம். உயர் கல்வி. வெளிநாட்டுப் பயணம்,தந்தை, தந்தை வழி உறவுகள், பூர்வீகச்சொத்துக்கள், தான, தர்ம குணங்கள்,வெளி நாட்டுப் பயணங்கள், முயற்சி இன்றிக் கிடைக்கக்கூடிய ஆதாயங்கள். பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்: 9ஆம் வீடு: இடுப்பு, இடுப்பு இணைப்புக்கள் அனைத்தும் ஒன்பதாம் வீடு. 1. ஒன்பதில் சூரியன் சென்று நல்லவிதமாக அமர்ந்திருந்தால், ஜாதகன் பொறுப்புணர்வு மிகுந்தவனாக இருப்பான். இறை நம்பிக்கை உள்ளவனாக இருப்பான். ஜாதகன் எதிலும் ஆர்வம் உள்ளவனாக இருப்பான். ரசனை, நகைச்சுவை உணர்வுகள் மிகுந்தவனாக இருப்பான். 2. ஒன்பதில் சூரியனும், புதனும் சேர்ந்து அமர்ந்திருந்தால் (அதற்கு புத ஆதித்ய யோகம் என்று பெயர்) ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், செல்வம் மிகுந்தவனாகவும் இருப்பான். 3. ஒன்பதில் சூரியனுடன், சுக்கிரன் கைகோர்த்து அமர்ந்திருந்தால் ஜாதகன் நோய்கள் உள்ளவனாகவும், மிகுந்த உடல் உபாதைகள் உள்ளவனாகவும் இருப்பான். 4, இங்கே சூரியன் கெட்டுப்போய் அமர்ந்திருந்தால் அல்லது தீயவர்களின் கூட்டோடு அமர்ந்திருந்தால், ஜாதகன் தெனாவெட்டாக இருப்பான். தன்னுடைய தந்தை, பெரியவர்கள் என யாரையும் மதிக்க மாட்டான். இறை நம்பிக்கை இல்லாதவனாக இருப்பான். 5. ஒன்பதில் குரு அல்லது சுக்கிரன் இருவரில் ஒருவர் அமர்ந்திருந்தாலும் அல்லது இருவரும் சேர்ந்து அமர்ந்திருந்தாலும் (5 பாகை இடைவெளியுடன்) அதோடு அவர்கள் ஒன்பதாம் அதிபனின் பார்வை பெற்றிருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டம் உடையவனாக வாழ்வான். அவனுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 6. லக்கினாதிபதியும், ஒன்பதாம் இடத்து அதிபதியும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் (அதாவது ஒருவர் வீட்டில் இன்னொருவர் மாறி அமர்வது (The lagna lord and ninth lord exchanging their houses), ஜாதகன் எல்லா விதத்திலும் அதிர்ஷ்டம் உள்ளவனாக இருப்பான். The native of the horoscope will be very lucky in all respects. 7. ஒன்பதாம் இடமும், பத்தாம் இடமும் மிகவும் முக்கியமானதாகும். ஒன்பதிற்குப் பெயர் தர்ம ஸ்தானம். 10ற்குப் பெயர் கர்ம ஸ்தானம். அந்த இரு இடங்களுக்கும் உரிய வீட்டு அதிபர்களுக்குப் பெயர் தர்ம - கர்ம அதிபதிகள். அவர்கள் இருவரும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் (அதாவது ஒருவர் வீட்டில் இன்னொருவர் மாறி அமர்வது The ninth lord and tenth lord exchanging their houses) அந்த யோகத்திற்குப் பெயர் தர்மகர்மாதிபதி யோகம். அந்த யோகம் பெற்றவன் அதீதமான பொருள் ஈட்டுவான். ஏராளமான தர்ம காரியங்களைச் செய்வான். கோவில்களுக்குத் திருப்பணி செய்வது, இலவச மருத்துவமனைகள் கட்டுவது, பள்ளிகள், கல்லூரிகளைக் கட்டுவது, பெரிய அளவில் அடிக்கடி அன்னதானம் செய்வது, ஏழைகள், எளிய மக்களுக்கு உதவிகள் செய்வது - ஆகிய செயல்கள் தர்ம காரியங்கள் ஆகும் (இது அதைப்பற்றித் தெரியாத இளைஞர்களுக்காக விவரிக்கப்பட்டுள்ளது அல்லது எடுத்துச் சொல்லப்பட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள்) 8. ஒன்பதாம் வீட்டில் குரு அல்லது சுக்கிரன் அல்லது சந்திரன் வந்து அமர்ந்திருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன். 9. ஒன்பதாம் வீட்டில் சனி அல்லது ராகு அல்லது கேது அமர்ந்திருந்தால், ஜாதகன் துரதிர்ஷ்டமானவன். 10. 11ஆம் இடத்து அதிபதி ஒன்பதில் அமர்ந்து, பத்தாம் இடத்து அதிபதியின் பார்வை பெற்றால், ஜாதகனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. 11. அதேபோல ஒன்பதாம் வீட்டுக்காரன் 2ல் அமர்ந்து, பத்தாம் வீட்டு அதிபதியின் பார்வை பெற்றாலும் ஜாதகனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. 12. ஒன்பதில் சந்திரன் அமர்ந்திருந்தால், ஜாதகன் அதிர்ஷ்டமானவன். வளமாக வாழக்கூடியவன். நிறையக் குழந்தைகள், உறவினர்கள், நண்பர் களை உடையவன். அதிகாரத்தில் உள்ளவர்களின் தொடர்பு உடையவன். கொள்கைப்படி நடப்பவன். பெருந்தன்மை உடையவன். 13. இங்கே அமரும் சந்திரன் நல்ல பார்வை பெற்று அமர்ந்தால், ஜாதகன் பல தர்மச் செயல்களைச் செய்வான். பலவிதமான சொத்துக்களை வாங்கிக் குவிப்பான். பல நாடுகளுக்கும் சென்று வருவான். 14. ஒன்பதில் சந்திரனுடன் சனியும் சேர்ந்தமர்ந்தால் அல்லது இங்கே அமரும் சந்திரன் சனியின் பார்வை பெற்றால், ஜாதகன் பலவிதமான துன்பங்களை அனுபவிக்க நேரிடும். 15. ஒன்பதில் சந்திரன் இருந்து, அந்தச் சந்திரனை, சனி, செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் பார்த்தால் (தங்களது பார்வையால்) ஜாதகன் ஒரு அரசனைப் போல வாழ்வான். (He will be a ruler) 16. சந்திரனுடன், செவ்வாய் சேர்ந்து ஒன்பதில் இருந்தால், ஜாதகனின் தாய்க்கு விபத்து போன்ற துன்பங்கள் நேரிடலாம். 17. இங்கே இருக்கும் சந்திரன் சுக்கிரனின் சேர்க்கை பெற்றால், ஜாதகன் நெறிமுறைகள் இல்லாதவனாக இருப்பான். பல பெண்களோடு தொடர்பு கொண்டு வாழ்வான். ஜாதகிக்கும் இதே பலன்கள்தான். 18. Second lord in the 11th, 11th lord in the ninth and ninth lord in the second (exchanges), the native will be very lucky. ஆதீதமான பொருள் சேரும். 19. 3ஆம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் சேர்ந்து நல்ல நிலைமையில் இருந்தால் அல்லது வலுவாக இருந்தால், ஜாதகன் தன் சகோதரர்கள் மூலமாக பல உதவிகளைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பான். 20. 5ஆம் அதிபதியும், 9ஆம் அதிபதியும் சேர்ந்து நல்ல நிலைமையில் இருந்தால், ஜாதகனின் பின்வாழ்க்கை நன்றாக இருக்கும். அவன் தன்னுடைய வயதான காலத்தில் தன் குழந்தைகள் மூலம் வசதியாக வாழ்வான். 21. ஒன்பதாம் வீட்டு அதிபதி பாவ கிரகங்களின் வீட்டில் அமர்ந்தல் ஜாதகன் தன் தந்தையைத் தன் இளம் வயதிலேயே இழக்க நேரிடும். 22. லக்கினத்திற்கு ஏழில் சூரியன் நல்ல நிலைமையில் இருந்தால், ஜாதகனுக்கு அவனுடைய தந்தை மூலமாக செல்வங்கள் கிடைக்கும். 23. ஜாதகத்தில் சூரியன் எந்த இடத்தில் இருந்தாலும் - நல்ல நிலைமை யில் இருந்தால், ஜாதகன் தன் தந்தைக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியவன். 24. ஜாதகத்தில் சூரியன், சனி அல்லது ராகு அல்லது கேது அல்லது மாந்தியால் கெட்டிருந்தால், ஜாதகனால் அவனுடைய தந்தைக்குத் துன்பங்கள்தான் ஏற்படும். 25. சூரியனுக்குத் திரிகோணத்தில் செவ்வாயும் அல்லது சந்திரனுக்குத் திரிகோணத்தில் சனியும் இருந்தால், ஜாதகன், அவனுடைய பெற்றோர் களால் புறக்கணிக்கப்படுவான். 26.ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் சென்றமர்ந்தால், ஜாதகன் அதிகாரங்கள் உடையவனாக இருப்பான்.வேலையில் அல்லது தொழிலில் அல்லது ஆட்சியில் அல்லது அரசில் எப்படி வேண்டுமென்றாலும் அந்த அதிகாரம் அமையும். அந்த அமைப்பானது அவனது தொழில் ஸ்தானத்தைவைத்து மாறுபடும். ஆனால் அதிகாரங்கள் உடையவனாக இருப்பான். 27. ஒன்பதாம் இடத்தில் அமரும் செவ்வாயோடு சுக்கிரன் சேர்ந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் அல்லது பெண்கள் தொடர்பு உண்டாகும். ஜாதகனுக்கு வெளிநாட்டு வாழ்க்கை ஏற்படும். 28. ஒன்பதில் செவ்வாயும், சனியும் கூட்டாக அமர்ந்தால் ஜாதகன் போதைக்கு அடிமையாவான். போதை என்பது பல விதமான போதைகளில் ஒன்றைக் குறிக்கும் (addiction to women or some other things). பிடிவாதக்காரனாகவும், முரண்பாடுகள் உடையவனாகவும் இருப்பான். 29. ஒன்பதாம் இடத்தில் புதன் அமர்ந்தால், கல்வியாளனாக ஜாதகன் இருப்பான் (scholar). 30. ஒன்பதில், புதனுடன் சுக்கிரனும் சேர்ந்திருந்தால், ஜாதகன் விஞ்ஞானியாக அல்லது பெரிய இசை மேதையாக இருப்பான். கெட்டிக்காரனாக இருப்பான். அந்த அமைப்பானது அவனது தொழில் ஸ்தானத்தை வைத்து மாறுபடும். ஆனால் மேதையாக இருப்பான். 31. ஒன்பதில், புதனுடன் குரு சேர்ந்திருந்தால், ஜாதகன் சிறந்த அறிவாளியாக இருப்பான். நகைச்சுவை உணர்வு மேலோங்கியவனாக இருப்பான். தந்தையுடன் நட்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பான். பல அமைப்புக்களில் சிறப்பாக உரை யாற்றுபவனாக இருப்பான். வெளி நாடுகளில் உள்ள கழகங்களின் அழைப்பின் பேரில் சென்று உரையாற்றுபவனாக இருப்பான். 32. ஒன்பதில் சனி இருந்தால், ஜாதகன் தனித்து வாழும்படி ஆகிவிடும். சிலருக்குத் திருமண வாழ்க்கை இல்லாதுபோய்விடும். இந்த அமைப்புள்ள ஜாதகன் ராணுவத்தில் இருந்தால் பெரிய வீரனாகச் சிறப்படைவான். 33.ஒன்பதில், சனியுடன் சூரியனும் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குத் தன் தந்தை மற்றும் தன் குழந்தைகளுடன் நேசம் இருக்காது. 34.ஒன்பதில், சனியுடன் புதன் சேர்ந்திருந்து, நல்ல பார்வை எதுவும் இல்லை யென்றால், ஜாதகன் நம்பிக்கைக்கு உரியவனாக இருக்கமாட்டான். பலரையும் ஏமாற்றிப் பிழைப்பான். அவன் செல்வந்தனாக இருந்தாலும், இப்படிப்பட்ட குணமுடையவனாகத்தான் இருப்பான். 35.ஒன்பதில் குரு இருந்தால், ஜாதகன் சட்டத்துறையில் அல்லது தத்துவத்தில் நிபுணனாக இருப்பான். இங்கே அமரும் குரு நல்ல பார்வை பெற்றால், அபரிதமான பொருள் ஈட்டுவான். சொத்துக்கள் சேரும். சகோதரர்கள் மேல் நேசமுடைய வனாக இருப்பான். 36.ஒன்பதில் இருக்கும் குரு, சந்திரன் மற்றும் செவ்வாயின் பார்வை பெற்றால், ஜாதகன் ராணுவம் அல்லது காவல்துறையில் பெரிய அதிகாரியாக விளங்குவான். 37. ஒன்பதில் குருவுடன் சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்ந்தால், ஜாதகன் நடத்தை சரியில்லாதவனாக ஆகிவிடுவான். 38. ஒன்பதில் சுக்கிரன் இருந்தால், ஜாதகன் மிகவும் அதிர்ஷ்டமானவன். கல்வி, வேலை, மனைவி, குழந்தைகள் என்று எல்லாமே அவனுக்குச் சிறப்பாகக் கிடைக்கும். மகிழ்ச்சியாக வாழ்வான். 39. ஒன்பதில் சுக்கிரனும் சூரியனும் சேர்ந்திருந்தால், ஜாதகன் அருமையாகப் பேசக்கூடியவனாக இருப்பான். உடல் உபாதைகள் உடையவனாகவும் இருப்பான். 40. ஒன்பதில் சுக்கிரனுடன் சனி சேர்ந்திருந்தால் ஜாதகன் பஞ்சாயத்து, சமரசப் பேச்சுக்கள்,தூதுவராகச் செயல்படுவது ஆகியவற்றில் சிறந்து விளங்குவான். ஒரு அரசனின் கீழோ அல்லது ஒரு நாட்டு அரசிற்கோ தூதுவனாகச் செயல்படுவான். மனிதர்களைப் பற்றியும் உலக நடைமுறை விஷயங்களைப் பற்றிய அவனுடைய கருத்துக்களும், கண்ணோட்டங்களும் சிறப்பாக இருக்கும். 41.ஒன்பதில் சுக்கிரனுடன் சூரியனும், சனியும் சேர்ந்திருந்தால் ஜாதகன் notorius criminal ஆக இருப்பான். அல்லது அதுபோன்ற விஷயங்களில் தீவிர ஈடுபாடு உடையவனாக இருப்பான். 42. ஒன்பதில் ராகு இருப்பது பலவிதங்களில் நல்லதல்ல. அந்த ராகு வேறு நல்ல கிரகங்களின் பார்வை பெறவில்லை என்றால், ஜாதகன் கடுகடுப்பான ஆசாமியாக இருப்பான். வாழ்க்கை துன்பங்கள் நிறைந்ததாக இருக்கும். 43. ஒன்பதில் ராகு இருந்து ஜாதகனின் ஏழாம் வீடும் கெட்டிருந்தால், ஜாதகனுக்கு மிகவும் அவலட்சணமான மனைவி வந்து சேர்வாள். அவனுடைய மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. 44. ஒன்பதில் ராகு இருந்தால் பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்காது. ஜாதகத்தின் வேறு அமைப்புக்களால் கிடைத்தாலும், மிகுந்த வம்பு, வழக்கு, போராட்டங்களுக்குப் பிறகே கிடைக்கும். 45. ஒன்பதில் கேது இருந்தால், ஜாதகன் உணர்ச்சி வசப்படுபவன் (short tempered). மனநிலை பிரள்பவன். 46. ஒன்பதாம் இடத்துக் கேது, ஜாதகனுக்கு அவனுடைய பெற்றோர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்தாது. 47. ஒன்பதாம் இடம், தந்தை, தந்தைவழி உறவினர்கள், பூர்வீகச் சொத்துக்கள், வெளிநாட்டுப் பயணங்கள் அல்லது வெளிநாட்டு வாழ்க்கை, முயற்சி இன்றிக் கிடைக்கும் பலன்கள் (பாக்கியம்) ஆகியவை சம்பந்தப்பட்டது. 48. பெண்களுக்கு இந்த வீடு மிகவும் முக்கியமானது. இது நன்றாக அமையப் பெற்ற பெண் வாழ்க்கையில் எல்லா பாக்கியங்களையும் பெற்று மகிழ்வோடு வாழ்வாள். 49. இந்த வீடு சரிவர அமையாத மங்கை நல்லாள் வாழ்க்கையில் பலவித இன்னல்களுக்கு ஆளாவாள். 50. இந்த ஒன்பதாம் வீட்டிற்குரிய பலன்கள், அதன் அதிபதி, மற்றும் அதில் அமர்ந்துள்ள கிரகங்களின் தசா, புத்தி காலங்களில் கிடைக்கும் அல்லது உண்டாகும் அல்லது நடைபெறும். -------------------------------------------------- குரு கேது சேர்க்கை ஆன்மீகத்தில் உயர்வு ஏற்படும். சூரியன் புதன் சேர்க்கை - நல்ல கல்வி அறிவு ஆராய்ச்சி பத்தி பெரும் அமைப்பு கிடைக்கும். செவ்வாய் சுக்கிரன் இணைவு மனைவி மூலம் லாபம் யோகம், எப்போதும் காம எண்ணம் இருக்கும். குரு ராகு சேர்க்கை வெளி நாடு யோகம் மற்றும் நாத்திக எண்ணம் வரும். சுக்கிரன் சனி சேர்க்கை காம செயலில் ஈடுபாடு . வாகன வசதி செல்வா சேர்க்கை வரும். சுக்கிரன் ராகு அல்லது கேது குடும்ப வாழ்வில் சிக்கல். செவ்வாய் சனி சேர்க்கை சகோதர பகை ,சிக்கலான நிலம், ரத்தம் சம்பந்தமான நோய். பாக்கிய ஸ்தானாதிபதி அந்த ஸ்தானத்திற்கு திரிகோணங்களான 1, 5, 9 ல் இருக்க அமைந்த ஜாதகனுக்கு பொருள் சேர்க்கையும் நிலம், தோப்பு மற்றும் அரண்மனை போன்ற வீடு இவை அமைந்து மகிழ்வுடன் வாழ்வான். தான தருமம்மற்றும் கோயில் பணிகள் செய்து பேரும் புகழும் அடைவான். அதே சமயத்தில் லக்னாதிபதி 6, 8, 12 ல் மறைய தனவிரயமும் பூர்வீக சொத்துக்கள் நஷ்டமும் உண்டாகும். 5, 6 க்குடைய கிரகங்கள் 3 ல் நிற்க அவர்களைப் பாவர் நோக்க அந்த ஜாதகனுக்கு பிள்ளைகள் இருக்காது. ஆனால் குரு பகவான் பார்வை பெற குழந்தைகள் உண்டாகும். குரு, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் 5ல் நிற்க அமையப் பெற்ற ஜாதகன் இவ்வுலகில் சிறப்புடன் வாழ்வான். யோகங்கள் உண்டு. குரு 5ல் தனித்து நிற்க புத்திர பாக்கியம் குறைவு. சந்திரன் 5ல் தனித்திருக்க பெண் குழந்தைகள் உண்டு. மேற்சொன்ன மூவரும் 2, 11ம் இடங்களில் இருந்தால் அந்த ஜாதகன் உத்தமனாகவும் கீர்த்திமானாகவும் விளங்குவான். பல வாகனங்களும் சேரும். பல வித்தைகளில் சிறந்து விளங்குவான். புதையலும் தனமும் கிட்டும். சுக்கிரன் கேந்திர ஸ்தானமான 4ல் இருந்தால் யோகங்கள் அதிகம் உண்டாகும். வாகனங்கள் சேரும். பூமி லாபம் பெறுவான். சுக போகங்களை அனுபவிப்பான். அதே சமயத்தில் பாவக்கிரகமான சனி 10ம் இடத்தில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு பிரபல யோகம் உண்டாகும். சந்திரனுக்கு 6, 7, 8 ஆகிய இடங்களில் சுபக் கிரகங்கள் நிற்கப் பிறந்த ஜாதகன் சிறந்த பலன்களும் நலமான வாழ்வும் அடைவான். மந்திர சக்தியும் பெறுவான். அரசாங்க நன்மைகளும் உண்டாகும். இருப்பினும் லக்னாதிபதி வலுப்பெறாவிட்டால் மேற்கண்ட யோகங்கள் உண்டாகாது. சூரியன், சனி, பாக்கியாதிபதி இவர்கள் 6ம் இடத்தில் நிற்க அந்த ஜாதகனுக்கு திரவியம் அதிகம் உண்டு. மற்ற இடங்களில் இருந்தாலும் நகைச்சுவை, நடிப்பு போன்ற துறைகளில் சிறந்து விளங்குவான் என்பதாகும். குருவுடன் புதன் சேர நல்ல பாக்கியங்கள் அடைந்து உத்தமனாவான். சுக்கிரனுடன் புதன் சேர்ந்தால் பெரியோர்கள் நட்பு பெற்றவனாகவும், சிறந்த பாடகனாகவும் விளங்குவான். சனியோடு புதன் சேர பெரிய தனவானாவன். மேலும் எதிரி பயமோ விஷ பயமோ இல்லாமல் அதிக பொருள் சேர்ப்பான். இவர்கள் சேர்க்கை சுப ஸ்தானங்களில் இருக்க நன்மை பயக்கும். சனி, செவ்வாய், சந்திரன், புதன் இவர்கள் சேர ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் உண்டு. எனினும் சோம்பேறியாகவும், வருமானம் இல்லாதவனாகவும் அலைச்சல் அடைவான். சொந்த வீடு இருக்காது. இவர்களை குரு பார்க்க மேற்கண்ட துயரங்கள் நீங்கி நற்பலன்கள் உண்டாகும். சூரியன், புதன் இவர்கள் சேர்ந்து 1,4,8 ஆகிய இடங்களில் நிற்க குருவும் 10ம் அதிபதியும் நோக்க அந்த ஜாதகன் பெரும் செல்வம் அடைந்து புகழடைவான். பூமி, வாகனம் அமைந்து ஏவலாட்கள் பணி செய்வர். 5, 6 க்குடைய கிரகங்கள் 3 ல் நிற்க அவர்களைப் பாவர் நோக்க அந்த ஜாதகனுக்கு பிள்ளைகள் இருக்காது. ஆனால் குரு பகவான் பார்வை பெற குழந்தைகள் உண்டாகும். சூரியன், சனி, பாக்கியாதிபதி இவர்கள் 6ம் இடத்தில் நிற்க அந்த ஜாதகனுக்கு திரவியம் அதிகம் உண்டு. மற்ற இடங்களில் இருந்தாலும் நகைச்சுவை, நடிப்பு போன்ற துறைகளில் சிறந்து விளங்குவான் என்பதாகும். குருவுடன் புதன் சேர நல்ல பாக்கியங்கள் அடைந்து உத்தமனாவான். சுக்கிரனுடன் புதன் சேர்ந்தால் பெரியோர்கள் நட்பு பெற்றவனாகவும், சிறந்த பாடகனாகவும் விளங்குவான். சனியோடு புதன் சேர பெரிய தனவானாவன். மேலும் எதிரி பயமோ விஷ பயமோ இல்லாமல் அதிக பொருள் சேர்ப்பான். இவர்கள் சேர்க்கை சுப ஸ்தானங்களில் இருக்க நன்மை பயக்கும். சனி, செவ்வாய், சந்திரன், புதன் இவர்கள் சேர ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் உண்டு. எனினும் சோம்பேறியாகவும், வருமானம் இல்லாதவனாகவும் அலைச்சல் அடைவான். சொந்த வீடு இருக்காது. இவர்களை குரு பார்க்க மேற்கண்ட துயரங்கள் நீங்கி நற்பலன்கள் உண்டாகும். சூரியன், புதன் இவர்கள் சேர்ந்து 1,4,8 ஆகிய இடங்களில் நிற்க குருவும் 10ம் அதிபதியும் நோக்க அந்த ஜாதகன் பெரும் செல்வம் அடைந்து புகழடைவான். பூமி, வாகனம் அமைந்து ஏவலாட்கள் பணி செய்வர்.

செவ்வாய், 14 ஜூன், 2016

லக்னமும் தொழில் அமைப்பும்

மேஷம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். பொதுவாக, தொழில் காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் இந்த லக்னத்திற்கு10ம் அதிபதி என்பதால் அவர் சுக்கிரன், புதன், குரு போன்றகிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக அமையப் பெற்றால், சொந்தத் தொழில் செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சனியே பாதகாதிபதியாகவும் இருப்பதால், வேலையாட்களிடமும் ஸ்பெகுலேஷன் சார்ந்த தொழில் விஷயங்களிலும் முதலீடு செய்கின்ற போது முன்னெச்சரிக்கையுடன் இருந்து நிலையான விஷயங்களில் மட்டும் முதலீடு செய்தால்,லாபங்களை அடைய முடியும். 10ம் அதிபதி சனி பலமாகஅமையப் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் இரும்பு,எந்திரங்கள், வண்டி, வாகனங்களில் மூலம் அனுகூலங்கள்,பழைய பொருட்களை விற்பனை செய்யும் தொழில், கடின உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் போன்றவற்றை செய்ய நேரிடும். சனி சுக்கிரனுடன் புதனும் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் யோகம், பலரை நிர்வாகம் செய்து சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகும்.அதுமட்டுமின்றி வணிகம், வியாபாரம், ஏஜென்ஸி கமிஷன் தொடர்புடைய தொழில்களும் ஏற்றத்தை ஏற்படுத்தும். சனி பகவானுடன் குரு சேர்க்கைப் பெற்று பலமாக இருந்தால் வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும்,கொடுக்கல், வாங்கல், ஏஜென்ஸி கமிஷன் போன்ற வற்றாலும் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். இதுமட்டுமின்றி மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் துறை, வக்கீல் பணி, நீதித்துறை, இன்சூரன்ஸ் போன்றவைகளில் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.குருபகவானுக்கு 10ம் வீடு நீச ஸ்தானம் என்பதனால் குரு வக்ரம் பெற்றிருந்தாலோ, உடன் சனி அமைந்திருந்தாலோ மட்டும்தான் கௌரவமான பணிகள் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். மேற்கூறியவாறு குரு அமையப் பெற்றுபுதனுடன் இணைந்திருந்தால் பள்ளிகல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியர்களாக பணியுரியக்கூடிய வாய்ப்பு,மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதில் வல்லவராக விளங்கக்கூடிய வாய்ப்பு, வங்கி பணி போன்றவற்றின் மூலம் சம்பாதிக்க முடியும். மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதியான செவ்வாய்க்கு 10ம் வீடு உச்ச ஸ்தானமாகும். செவ்வாய் 10ல் அமைந்து உச்சம்,திக் பலம் பெற்று இருந்தால், மிகச் சிறந்த நிர்வாகியாக விளங்கக்கூடிய அமைப்பு, போலீஸ், இராணுவம் போன்ற துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, பேருந்து, ரயில்வே துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு, அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்புஉண்டாகும். செவ்வாய் சூரியன் சேர்க்கைப் பெற்றிருந்தால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் சம்பாதிக்கும் அமைப்பைக் கொடுக்கும். உடன் சனியும் பலம் பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் பதவிகள் தேடிவரும். 10ல்செவ்வாய் அல்லது சூரியன் அமையப் பெற்று உடன் சந்திரன் ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றால் மருத்துவத் துறையில் பணிபுரியக்கூடிய வாய்ப்புஉண்டாகும். சூரியன் செவ்வாயுடன் குரு சேர்க்கை அல்லது பார்வையிலிருந்தால் கௌரவமான உத்தியோகம் கிடைக்கும். சனி பகவான் ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் வாழ்வில் பல்வேறு வகையில் சோதனைகள், சட்ட சிக்கல்கள் நிறைந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்புஉண்டாகும். அதிலும் சுபர் பார்வையின்றி இருந்தால் மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் அவலநிலை உண்டாகும். சனி பகவான் பலமிழந்திருந்தால் நிலையான வேலை, நல்ல வருமானம் இல்லாமல் பல்வேறு துறைகளில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் நிலை,அடிமைத் தொழில் செய்யக்கூடிய சூழ்நிலை உண்டாகும். ரிஷபம் லக்னமும் தொழில் அமைப்பும் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். சனி 9,10 க்கு அதிபதியாகி தர்மகர்மாதிபதி என்பதாலும், லக்னாதிபதி சுக்கிரனுக்குநட்புக் கிரகம் என்பதாலும் மிகச்சிறந்த யோககாரகனாவார். ரிஷப லக்னகாரர்களுக்கு சனி ஆட்சி உச்சம் பெற்றோ,திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற்றோ, திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற்றோ இருந்தால், கொரவமானபதவிகளை வகிக்கும் யோகம், அதன் மூலம் நிலையான வருமானம் உண்டாகும். சனி பலம் பெற்று சுக்கிரன், புதன் போன்ற நட்புக் கிரகங்களின் சேர்க்கையுடனிருந்தால் சொந்தத் தொழில் செய்யக்கூடிய யோகம், நிலையானவருமானம், ஒரு சிறந்த முதலாளியாகி பலருக்கு வேலை கொடுக்கும் யோகம் உண்டாகும். மேற்கூறிய கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகத்தின் திசை நடைபெற்றால் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு சம்பாதிக்கும் வாய்ப்பு, சுகமான வாழ்க்கை வாழக்கூடிய யோகமும் உண்டாகும். 10ம் அதிபதி சனி என்பதனால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில், எந்திரங்கள்,வேலையாட்களை வைத்து தொழில் செய்யும் அமைப்பு,பழைய பொருட்களை வாங்கி விற்பதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். சனி பகவான் சுக்கிரனின் சேர்க்கையைப் பெற்றால் வண்டி வாகனங்கள் மூலமும், டிராவல்ஸ் போன்றவற்றிலும்,பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்கள்விற்பனை, கட்டிடத் துறைகளில் சாதிக்கும் அமைப்பு உண்டாகும். ரிஷப லக்னாதிபதி சுக்கிரன் சந்திரனின் சேர்க்கை பெற்று இந்த இரு கிரகங்களில் ஒரு கிரகம் ஆட்சிப் பெற்றாலும் பரிவர்த்தனை பெற்றாலும் கலை,இசை, சங்கீதம், சினிமா போன்ற துறைகளில் தங்களை ஈடுபடுத்தி சாதிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும். நல்ல வருவாய் அமையும். சனி பகவான் புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் சொந்தமாக வியாபாரம் செய்யக்கூடிய அமைப்பு, சிறந்த வியாபாரியாக செயல்பட்டு வாழ்வில் முன்னுக்கு வரக்கூடியவாய்ப்பு உண்டாகும். இது மட்டுமின்றி கணிதம், கம்ப்யூட்டர், பங்குச் சந்தை போன்ற துறைகளிலும் ஈடுபாடு உண்டாகும். புதன்10 ல் அமையப் பெற்று குரு சேர்க்கை பெற்றால் சிறந்த அறிவாளியாக விளங்கி, மற்றவர்களை வழி நடத்துவது,ஆலோசனை கூறுவது, தாங்கள் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுக்கும் தொழில் போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும். சனி பகவான் குரு சேர்க்கையுடனிருந்தால் ஏஜென்ஸி, கமிஷன் சார்ந்த வியாபாரம், கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் ஈடுபட்டு,சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். சனி பகவான் செவ்வாய் சேர்க்கையுடனிருந்தால் கூட்டுத் தொழில் செய்யும் அமைப்பு, பூமி, மனை போன்றவற்றால் சம்பாதிக்கும் வாய்ப்பு, அதிலும் சுக்கிரனுடன் இருந்தால் கட்டிடங்களை கட்டி விற்கும் துறை, கட்டிட வல்லுநராகவிளங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சனி, செவ்வாய் இணைந்து உடன் சந்திரன் அல்லது ராகு இருந்தாலும் அல்லது ரிஷப லக்னத்திற்கு 9,12 ல் ராகு பகவான் அமையப் பெற்றாலும் வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய தொழில், கடல் கடந்து அயல்நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். சனி பகவான் ராகு சேர்க்கை பெற்று சாதகமான ஸ்தானங்களில் அமையப் பெற்றால், எதிர்பாராத திடீர் யோகங்கள் அதிலும் குறிப்பாக பல்வேறு மறைமுகத் தொழில்களில் ஈடுபட்டு கோடி கோடியாக சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். அதுவே பலஹீனமாக அமைந்து விட்டால் ஒரு நிலையான வருமானம் இல்லாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.அடிமையாக வேலை செய்யக்கூடிய அனுகூலமற்ற சூழ்நிலை உண்டாகும். பத்தாம் அதிபதி சனி பகவானுக்கு சூரியன், செவ்வாய் போன்றோர் பகை கிரகங்கள் என்பதனால் அரசுத்துறை யில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். கும்பராசியில் (10 ம் வீடு) அமையும் சூரியன், செவ்வாய்,ராகுவின் நட்சத்திரமான சதயத்தில் அமைந்து விடாமல் செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டத்திலோ, குருவின் நட்சத்திரமான பூராட்டத்திலோ அமைந்து இருந்தால் அரசு,அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய அமைப்பு,அதிலும் குரு பார்வையுடன் அமைந்து இருந்தால் உயர் பதவிகள், அரசு துறையில் பதவி வகிக்கும் யோகம் உண்டாகும். சூரியன், செவ்வாய், சனியுடன் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் அரசு வழியில் நல்ல பணியினை அடைய முடியும். சூரியன், செவ்வாய் பலம் பெற்று உடன் சந்திரனோ,ராகுவோ இருந்தால் மருத்துவத்துறையில் சாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். மிதுனம் லக்னமும் தொழில் அமைப்பும் மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி குரு பகவானாவார். குரு பகவான் ஆட்சி பெற்று வலுப்பெற்றால் செல்வம், செல்வாக்கு, உயர் பதவிகளைவகிக்க்கூடிய யோகம் மற்றும் மற்றவர்களை வழி நடத்துவதிலும் ஆலோசனை கூறுவதிலும் கைதேர்ந்தவர்களாக விளங்கக்கூடிய அமைப்பும் உண்டாகும். வங்கியில் பணிபுரியும் அமைப்பு, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இடங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். தனக்காரகன் குரு என்றாலும் மிதுனலக்னத்திற்கு குரு பாதகாதிபதி என்பதால் கொடுக்கல்,வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. இது மட்டுமின்றி கூட்டுத் தொழிலில் ஈடுபடாமல் தனித்து செயல்பட்டால்தான் லாபத்தை பெற முடியும். 10ம் அதிபதி குரு பகவான், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்றாலும்10ல் சூரியன். செவ்வாய் அமையப் பெற்று திக் பலம்பெற்றாலும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் கௌரவமானப் பதவிக¬ள் வகிக்கக்கூடிய யோகம், சிறந்த நிர்வாகியாக விளங்கி பலரை வழி நடத்தும் அமைப்பு உண்டாகும். சனி பகவானும் பலம் பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் பதவிகளை வகிக்கும் உன்னத அமைப்பு உண்டாகும். 10ல் அமையக்கூடிய சூரியன்,செவ்வாயுடன் புதன் சேர்க்கைப் பெற்றால் பொறியியல் துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு கம்ப்யூட்டர் துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். குரு பகவான் செவ்வாய் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் பூமி மனை, ரியல் எஸ்டேட் துறைகளில் அனுகூலங்கள் உண்டாகி சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பும் உண்டாகும். குரு சந்திரனுடன் சேர்க்கைப் பெற்றால் ஏஜென்ஸி, கமிஷன், உணவு வகைகள், ஜல தொடர்புடையதொழில்களில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். குருவுடன் சந்திரன் இணைந்து உடன் புதன் அல்லது செவ்வாய் இருந்தால் கடல் சார்ந்த துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு,உணவகம் நடத்தும் வாய்ப்பு அமையும். குரு பகவான் புதனுடன் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் சிறந்த அறிவாற்றலுடன் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, மற்றவர்களை வழி நடத்தக்கூடிய உன்னத திறன், வழக்கறிஞராகக் கூடிய அமைப்பு, பத்திரிகை துறை, எழுத்துத் துறைகளில் பணியாற்றும் வாய்ப்பு உண்டாகும். குரு சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று 10ல் இருந்தால் ஆடை,ஆபரணத்தொழில்கள், கலை சம்பந்தப்பட்ட பொருட்களை வியாபாரம் செய்வது, பெண்கள் உபயோகிக்கக்கூடியபொருட்கள் விற்பனை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். குரு சுக்கிரனுடன் சனியும் சேர்க்கை பெற்றால் வண்டி, வாகனங்கள்,டிராவல்ஸ் தொடர்புடைய தொழில், வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய தொழில்களால் அனுகூலங்கள் உண்டாகும். குரு சுக்கிரனுடன் புதன் அல்லது சந்திரனும் சேர்க்கைப் பெற்றால் கலைத்துறை, சினிமாத்துறை, சினிமா சார்ந்த உட்பிரிவுத் துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்கள் செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். வீடு,பங்களாக்களை கட்டி விற்பனை செய்யும் வாய்ப்பு உண்டாகும். செவ்வாய், ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் நவீனகரமான பொருட்களை வியாபாரம் செய்வது, தகவல் தொடர்புத்துறை, மருந்து கெமிக்கல்,இராசாயணம் தொடர்புடைய தொழில்களில் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். குரு பகவான் பலவீனமாக இருந்து சனி, ராகு போன்ற பாவகிரகங்களின் சேர்க்கை பெற்றால் நிலையான வருமானங்களை அடையக்கூடிய தொழில்கள் அமையாமல் கஷ்ட ஜீவனம் அடைய நேரிடும். சனி ராகு சேர்க்கை 10ம் வீட்டில் அமைந்து சுபர் பார்வையின்றி இருந்தால் சட்ட சிக்கல்கள் நிறைந்த தொழில்கள் மூலம்சம்பாதிக்க நேரிடும். கடகம் லக்னமும் தொழில் அமைப்பும் கடக லக்னத்திற்கு ஜீவனாதிபதி செவ்வாயாவார். ஜீவன ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் ஐந்தாம் அதிபதியாகவும் விளங்குகிறார். கேந்திர திரிகோணத்திற்குஅதிபதியான செவ்வாய் லக்னாதிபதி சந்திரனுக்கு நட்புக் கிரகம் என்பதால், இந்த லக்னத்திற்கு மிகச்சிறந்த யோக காரகனாவார். செவ்வாய் நிர்வாக காரகன் என்பதினால்,பொதுவாகவே கடக லக்னத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர்களாகவும் அதிகார குணம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். அரசு, அரசு சார்ந்த துறைகளுக்கு காரகனாக சூரியன், கடக லக்னத்திற்கு 10ம் வீடான மேஷத்தில் உச்சம் பெற்று உடன் செவ்வாய் சேர்க்கை பெற்றால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். சூரியன், செவ்வாய் இணைந்து குரு பார்வைப் பெற்றால் அரசுத் துறையில் சிறந்த நிர்வாகியாக விளங்கும் அமைப்பு,போலீஸ், ராணுவம், பாதுகாப்புத் துறைகளில் பணிபுரியும் அமைப்பு, பலருக்கு உதவி செய்யும் பண்பு உண்டாகும். சூரியன், செவ்வாய் 10 ல் அமையப் பெற்று சனி பகவானும் பலம் பெற்றிருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய உயர் பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.சூரியன், செவ்வாய் உடன் இணைந்து சந்திரன், ராகு அல்லது கேது சேர்க்கையோ, சாரமோ பெற்றால் மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சை நிபுணராக விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். சூரியன், செவ்வாய்,புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் கட்டிடப் பொறியாளர் கம்ப்யூட்டர் பொறியாளராக விளங்கக்கூடும். செவ்வாய், சந்திரன், ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றால் மருந்து, கெமிக்கல் ரசாயன தொடர்புடையத் துறை, வேளாண்மை, உணவு வகைகள், ஓட்டல் எனவும்,மேற்கண்டவற்றுடன் இணைந்து குரு பார்வையும் பெற்றால் அரசுத் துறையில் கௌரவமான பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். பொதுவாகவே செவ்வாய் தனக்கு நட்பு கிரகங்களான சூரியன், சந்திரன், குரு போன்றவர்களின் சேர்க்கை பெற்று பலம் பெற்றிருந்தால் செய்யும் தொழில் உத்தியோக ரீதியாக உயர்வுகளையும்,அரசு வழியில் உதவிகளையும் சிறப்பாகப் பெற முடியும். செவ்வாய், குரு, புதன் சேர்க்கைப் பெற்று வலுவாக அமையப் பெற்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் செய்யும் யோகம், வங்கிப் பணிகள், வெளியூர், வெளிநாடு தொடர்புடைய தொழில், பணம் கொடுக்கல் வாங்கல், பங்குச் சந்தை மற்றும் ஏஜென்ஸி, கமிஷன் போன்றவற்றின் மூலமாக லாபங்கள் உண்டாகும். குரு, புதன் போன்றவர்கள்10ல் அமையப் பெற்றால் சிறந்த அறிவாளியாக விளங்கிமற்றவர்களை வழி நடத்தக்கூடிய யோகம், பள்ளி,கல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியர்களாக விளங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். குரு புதனுடன் சனியும் பலம் பெற்றால் வக்கீல் பணி,நீதித்துறையில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். செவ்வாய், சனி இணைந்தோ, பரிவர்த்தனை பெற்றோ அமையப் பெற்றால் கூட்டுத் தொழில் மூலமாக அனுகூலம், கட்டிடக்கலை ரியல் எஸ்டேட் போன்றவற்றில் சம்பாதிக்க முடியும். செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்று உடன் சந்திரனும் இருந்தால் கலை, இசை சம்பந்தப்பட்டதுறைகளில் நல்ல வருமானம் அமையும், செவ்வாய் சுக்கிரனுடன் புதன் அல்லது சனி சேர்க்கை பெற்றால் சொந்தத் தொழில் செய்யக்கூடிய யோகம்,ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களில் வருமானம் ஈட்டக்வடிய அமைப்பு உண்டாகும். செவ்வாய், சனி, ராகு சேர்க்கைப் பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால் சட்ட சிக்கல்கள் நிறைந்த தொழில் உண்டாகும். 10ம் வீட்டில் சனி நீசம் பெறுவதால் சனி 10ல் அமைந்து உடன் ராகு அல்லது கேதுவின் சேர்க்கைப் பெற்றால் அடிமைத் தொழில், நிலையான வருமானமற்ற நிலை ஏற்படும்.செவ்வாய் புதனுடன் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் கணக்கு, கம்ப்யூட்டர் போன்ற துறைகளில் அனுகூலங்கள்,சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும், கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பூமி, மனை மூலமும், உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புடன் சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும். சிம்ம லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சுக்கிர பகவானாவார். சுக்கிரன் சுக காரகன் என்பதால் அவர் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்று தனக்கு நட்பு கிரகங்களான சனி, புதன் போன்றவர்களின் சேர்க்கையுடன், சுபர் பார்வையும் பெற்றிருந்தால் நல்ல நிலையான ஜீவனம் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு,அதன் மூலம் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு வாழக்கூடிய யோகம் உண்டாகும். அதிலும் இப்படி சேர்க்கைப் பெற்று பலம் பெற்ற புதன், சனி, சுக்கிரன் போன்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களில் சிறப்பான வருமானமும், கூட்டுத் தொழில், சொந்த தொழில் செய்து சம்பாதித்து மிகப் பெரியஅளவில் செல்வந்தராகக்கூடிய அற்புதமான அமைப்பும் உண்டாகும். சிம்ம லக்னத்திற்கு 10ம் அதிபதி சுக்கிரன் கலை காரகன் என்பதாலும், சுக்கிரனே 3ம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதாலும் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கலை,இசை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு அதிகம்இருக்கும். சுக்கிரன் பலமாக அமைந்து சுபர் பார்வையுடனிருந்தால் ஆடை, ஆபரணங்கள், பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களைக் கொண்ட தொழிலில சம்பாதிக்க முடியும். சுக்கிரன் தன லாப அதிபதியான புதனின் சேர்க்கை பெற்றிருந்தால் மற்றவர்களை வழி நடத்தும் திறன், அறிவாற்றல்,பேச்சாற்றல், எழுத்தாற்றல், கதை, கவிதை எழுதக்கூடிய கற்பனை ஆற்றல், சினிமாத் துறைகளில் உள்ள உட்பிரிவுகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு அமையும். அதிலும் 10ல் புதன் பலம் பெறும் போது சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பத்திரிகைத் துறை, புத்தக பதிப்பு,சொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புஉண்டாகும். சுக்கிரன் புதன், குருவுடன் சேர்க்கைப் பெற்றிருந்தால் ஆசிரியர் பணி, மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய பணி, தனது அறிவாற்றலால்முன்னேறும் வாய்ப்பு, பள்ளி கல்லூரிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். லக்னாதிபதி சூரியன் 10ம் வீட்டில் பலம் பெற்று செவ்வாய் சேர்க்கைப் பெற்றிருந்தால் நல்ல நிர்வாகத் திறமை,கௌரவமான பதவிகள் தேடி வரக்கூடிய வாய்ப்பு, உயர் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் பலமாக அமைந்திருந்தால் நல்ல நிர்வாகியாக பணிபுரிந்து எந்தத் துறையில் செயல்பட்டாலும், அதில் மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவராக விளங்க முடியும். சுக்கிரன்,சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் நல்ல வேலை அமையும். 10 ல் சூரியன், குரு சேர்க்கை பார்வையுடனிருந்தால் நல்ல வேலை அமைந்து அதன் மூலம் சம்பாதித்து வாழ்வில் முன்னேற்றமடைய முடியும். சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றிருந்தால் கூட்டுத் தொழிலில் சம்பாதிக்கும் அமைப்பு, வண்டி வாகனங்கள் மற்றும் டிராவல்ஸ் மூலம் சம்பாதிக்கும் அமைப்பு உண்டாகும். நல்ல வேலையாட்களும் கிடைக்கப்பெற்று அவர்களாலும் முன்னேற்றமான பலன்கள் அமையும். சுக்கிரன் சந்திரன் சேர்க்கை பெற்று 9,12 ல் ராகு அமையப் பெற்றால் வெளியூர், வெளிநாடு சம்மந்தமுடைய தொழில்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். இதுமட்டுமின்றி சந்திரன் 10ல் உச்சம் பெற்றுஅமைந்திருந்தால், கடல் சார்ந்த பணிகளில் பணிபுரியும் அமைப்பு, ஜல சம்பந்தப்பட்ட தொழில், உணவு வகைகள் சம்பந்தப்பட்ட தொழில், உணவகம் நடத்தும் வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன், செவ்வாயுடன் இணைந்து பலமாக அமையப் பெற்றிருந்தால், மனை, பூமி, கட்டிடத்துறை, ரியல் எஸ்டேட் தொடர்புடைய தொடர்புடைய தொழில்களில் பணிபுரிய நேரிடும். சந்திரன் சேது சேர்க்கை பெற்றால் மருந்து, கெமிக்கல், ரசாயன தொடர்புடைய தொழிலில் யோகம் உண்டாகும். சுக்கிர பகவான் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலமாக அமையப் பெற்று சனி, புதனுடன் இணைந்திருந்தால் சொந்தத் தொழில் மூலம் சம்பாதிக்கும் யோகம் அமையும். அதுவே சுக்கிரன் மறைவு ஸ்தானங்களிலிருந்தாலோ சிம்ம லக்னத்திற்கு பாதக ஸ்தானமான 9ம் வீட்டில் இருந்தாலோ உத்தியோகம் செய்யக்கூடிய வாய்ப்பே அமையும். அதிலும் குறிப்பாக சுக்கிரன் பலமிழந்து சனி, ராகு சேர்க்கை பெற்றுபகை வீடுகளில் அமைந்தால் நிலையான ஜீவனம் இல்லாமல அடிமைத் தொழில் செய்யக்கூடிய அமைப்பு,சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடியசூழ்நிலை உண்டாகும். கன்னிலக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும் கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 10 ம் அதிபதி புதன் பகவானாவார். லக்னாதிபதி புதன் பகவானே ஜீவனாதிபதியாகவும் இருப்பது மிகவும் அற்புதமானஅமைப்பாகும். பொதுவாகவே, கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாளியாகவும் எதிலும் சிந்தித்து செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள். கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ஆட்சி உச்சம் பெற்று தனக்கு நட்புகிரகங்களான சுக்கிரன், சனி போன்றவர்களின் சேர்க்கை பெற்று, குரு போன்ற சுபகிரகங்களின் பார்வைப் பெற்றால் சமுதாயத்தில் சிறப்பான உயர் நிலையினை அடைவார்கள். அதிகாரமிக்க பதவிகளை அடையக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். புதன் வலுப்பெறுவது மட்டுமின்றி உடன் செவ்வாய் சூரியன் சேர்க்கை உண்டானால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர்வான பதவிகளை அடைய கூடிய யோகம் அமையும். இத்துடன் சனியும் பலம் பெற்று அமைந்து விடுமாயின் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய உயர் பதவிகள் ஜாதகரைத் தேடி வரும். இது மட்டுமின்றிபுதன் கேந்திர திரிகோணங்களில் சூரியன் சேர்க்கை பெற்று சந்திரனும் பலமாக அமைந்த குரு பார்வை செய்தாலும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பும் அதன் மூலம் பொருளாதார மேன்மைகளும் பெற்றுவாழ்வில் உயர்வு உண்டாகும். புதன் பகவான் சுக்கிரன், சனி போன்ற நட்பு கிரக சேர்க்கைப் பெற்று வலுவாக அமையப் பெற்றால் சொந்தத்தொழில் செய்யும் யோகம், வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் அற்புத நிலை உண்டாகும். புதனுடன் சுக்கிரன், சந்திரன் சேர்க்கை உண்டாகி 9,12 ல் ராகு பகவான் அமையப் பெற்றால் ஜாதகர் கடல் கடந்து வெளிநாடு சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். புதனுடன் சந்திரன் அமைந்து சுக்கிரனும் சேர்க்கை பெற்றால், பயிர் தொழிலில் செய்யக்கூடிய அமைப்பு,புதனுடன் செவ்வாய் சேர்க்கைப் பெற்றால் பூமி,வேளாண்மை, விவசாய தொடர்புடைய பணிகள் அமையும். புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று வலுப்பெற்றிருந்தால் கலை, இலக்கியம், சங்கீத துறையில் புகழ் பெறும் அமைப்பு உண்டாகும். புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று, கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்று, உடன் குரு பார்வையும் இருந்தால் பெண்கள் வழியிலும், பெண்கள் சம்பந்தப்பட்டதொழில்களிலும் சம்பாதிக்கக்கூடிய (பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் ) வாய்ப்பு அமையும். இது மட்டுமின்றி கணிதம், கம்ப்யூட்டர் துறையில் வல்லவராகத் திகழ்வார். புதன் தனித்து பலம் பெற்று குரு போன்றசுபகிரகங்களின் பார்வை இருந்தால் ஆசிரியர் பணி,பதிப்பகம், பத்திரிகைத் தொழில், புத்தகம் வெளியிடும் பணி,வக்கீல் தொழில், வாக்கால் பேச்சால், முன்னேறக்கூடிய தொழில் போன்றவற்றில் அனுகூலங்கள் உண்டாகும். புதன் தனக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், சனி சேர்க்கை பெறுவதும், சுக்கிரன், சனி வீடுகளில் அமைவதும் கல்விக்கு சம்பந்தமில்லாத துறைகளில் முன்னேற்றத்தை கொடுக்கும். சனி, புதன் சேர்க்கை பெற்று வலு இழந்திருந்தால் அடிமைத்தொழில் அமைப்பு, சனி, ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தால் இழிவான வேலைகளைச்செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். புதனுக்கு 7ல் சனி,செவ்வாய், ராகு கேது போன்ற பாவிகள் இருந்தால்,எவ்வளவு திறமை இருந்தாலும் வாழ்வில் மேன்மை அடைய இடையூறுகள் உண்டாகும். அது போல புதனுக்கு இருபுறமும் பாவிகள் இருந்தாலும் வாழ்வில் முன்னேற்றம் உண்டாக தடை ஏற்படும். கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் முடிந்தவரை கூட்டு சேர்ந்து தொழில் செய்வதை தவிர்த்து எதிலும் தனித்து செயல்படுவதும், பிறரை சார்ந்து உத்தியோகம் செய்வதும் நல்லது-. துலாம் லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும் துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சந்திர பகவானாவார். இவர் ஒரு வீட்டு ஆதிபத்யம் கொண்டவர். சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று குரு போன்ற சுபகிரக சேர்க்கையுடன், நட்பு கிரக வீடுகளில் அமையப் பெறுவாரேயானால், அந்த ஜாதகருக்கு சமுதாயத்தில் கௌரவத்துடன் வாழக்கூடிய அற்புதமான அமைப்பு,தொழில் ரீதியாக கை நிறைய சம்பாதித்து சுக வாழ்க்கை வாழக்கூடிய யோகம் உண்டாகும். சந்திரன் ஜல காரகன் என்பதால், அவர் துலாம் லக்னத்திற்கு 9,12 க்கு அதிபதியாக விளங்கக்கூடிய புதன் பகவானின் சேர்க்கை பெற்று 9 அல்லது 12 ல் அமையப் பெறுவாரேயானால், அந்த ஜாதகர் கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் சென்று தொழில், உத்தியோகம் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும், அந்திய நாட்டவர்களால் அனுகூலங்களும் உண்டாகும். குரு, சந்ஙதிரன் ஆட்சி உச்சம் பெற்று 10 ம் வீட்டில் பலமாக அமையப் பெற்றிருந்தால் அரசு, அரசு சார்ந்த பணிகளில் உயர் பதவிகள் வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். குரு சந்திரன் பலம் பெற்று சனி, புதன் வீட்டில் இருந்தாலும்,துலாம் லக்னத்திற்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோக காரகனாகிய சனி பலம் பெற்று அமைந்திருந்தாலும்,அரசாங்க அதிகாரியாகவும், அரசுத் துறையில் பணிபுரிபவராகவும் இருக்கக்கூட வாய்ப்பு உண்டாகும். அதுபோல சந்திரனுக்கு நட்பு கிரகங்களாகிய சூரியனும்குருவும் பலம் பெற்று அமைந்தாலும் அரசுத் துறையில் பணியுரியக்கூடிய வாய்ப்பு அமையும். துலாம் லக்னத்திற்கு ஜீவன ஸ்தானத்தில் அந்த வீட்டதிபதியான சந்திரன் தனித்து ஆட்சிப் பெற்று பலமாக அமைந்திருந்தால் ஜல சம்பந்தப்பட்ட தொழில், உணவுசம்பந்தப்பட்ட தொழில், ஹோட்டல் தொழில் போன்றவற்ல் நல்ல லாபம் அமையும். மேலே குறிப்பிட்டது போல சந்திரன் ஜல காரகன் என்பதால், கடல் சார்ந்த துறைகளில்கூட பணி புரியக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். சூரியன்,செவ்வாய் 10ல் பலம் பெறுகின்றபோது அரசு துறைகளில் பணிபுரியும் அமைப்பு, நல்ல நிர்வாகத் திறன் உண்டாகும். குரு 10ல் பலம் பெற்றிருந்தால் சிறந்த ஆலோசகராக விளங்கக்கூடிய வாய்ப்பு, தொழில் ரீதியாக முன்னேற்றம்,வாக்கால் பேச்சால் சம்பாதிக்கக்கூடிய யோகம், வக்கில் பணி, ஆசிரியர் பணி போன்றவை உண்டாகும். சுக்கிரன் பலம் பெற்று உடன் சந்திரன் 10ல் அமையப் பெற்றால் கலை, இசை, சினிமாத்துறை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். சந்திரன், செவ்வாய் பலம் பெற்று 10ல் அமையப் பெற்றால் கலை, இசை,சினிமாத்துறை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். சந்திரன், செவ்வாய் பலம் பெற்று 10ல் அமைந்தால் பூமி,மனை சம்பந்தப்பட்ட தொழிலில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். புதன் பலம் பெற்று 10ல் அமைந்து குரு பார்வை இருக்குமேயானால் கணக்கு, கம்ப்யூட்டர், தொழில் மற்றும் வணிக தொடர்புடைய தொழிலில் சம்பாதிக்க முடியும். புதன், சந்திரன் சேர்க்கை பெற்று 10ல் கேது சந்திரன் சேர்க்கை பெற்றால் மருந்து, கெமிக்கல் தொடர்புடைய தொழில் வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று சுபர்சேர்க்கையுடன்அமைந்து 10ம் வீட்டிற்கும் குரு பார்வை இருந்தால் நிலையான வருமானம் உண்டாகும். அதுவே சந்திரன் பலமிழந்து சனி 10 ம் வீட்டில் அமைந்தாலும் சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் 10ம் வீட்டில் அமையப் பெற்றாலும் அடிமைத் தொழில் செய்யக்கூடிய நிலை, சில சட்டத்திற்கு விரோதமான தொழில்கள் செய்து சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சனி பார்வை 10 ம் வீட்டிற்குஇருந்தாலும், சந்திரனுக்கு இருந்தாலும் தொழில் ரீதியாக நிறைய போரட்டங்களைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக சந்திரன் தேய்பிறை சந்திரனாக இருந்து சனி, ராகு போன்ற பாவ கிரகங்களின் சேர்க்கைப் பெற்றால் நிலையானதொழில் என்பது அமையாமல் வாழ்க்கையானது போராட்டகரமாகவே இருக்கும். விருச்சிகம் லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும் விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நவகிரகங்களில் முதன்மை கிரகமாக விளங்கக்கூடிய சூரிய பகவான் 10ம் அதிபதியாவார். 10ம் அதிபதி சூரியனானவர் ஒரு வீட்டு அதிபத்யம் கொண்டவர். நவகிரகங்களுக்கெல்லாம் அரசனாக விளங்கக்கூடிய சூரிய பகவானை ஜீவன ஸ்தானாதிபதியாக பெற்ற பெருமை விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே உண்டு. சூரியன் ஆட்சி உச்சம் பெற்று லக்னாதிபதி செவ்வாயின் சேர்க்கையுடன் குரு பார்வை பெற்றிருந்தாலும், தனக்கு நட்பு கிரகங்களான செவ்வாய், சந்திரன் குரு போன்றவற்றின் வீடுகளில் அமைந்திருந்தாலும் சமுதாயத்தில் கௌரவமான பதவிகளை வகிக்கக்கூடிய யோகம், அரசு,அரசு சார்ந்த துறைகளில் அதிகாரமிக்க பதவிகளைவகிக்கக்கூடிய வாய்ப்பு சிறப்பாக அமையும். சூரிய பகவான் குரு, செவ்வாய் சேர்க்கையுடன் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலம் பெற்று அமைந்திருந்தாலும்மேற்கூறிய நற்பலன்களை அடைய முடியும். 10ம் வீட்டில் சுக்கிரன், சந்திரன் இணைந்திருந்தாலும் சூரியன், சுக்கிரன்,சந்திரன் போனற் கிரக சேர்க்கைகள் 9,10,12 ம் வீடுகளில் அமையப்பெற்றிருந்தாலும் கடல் கடந்து அந்நியநாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு அமையும். சூரியன் சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 10ல் அமைந்து குரு பார்வை பெற்றால் கூட்டுத் தொழில் முலம் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும். சுக்கிரன் 10ல் அமையப் பெற்றால் ஆடை, ஆபரணம், கலைத்துறை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் போன்றவற்றால் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். சூரியன் , புதன் சேர்க்கையுடன் குரு பார்வை பெற்று 10ல் அமையப் பெற்றால் கணக்கு வழக்கு தொடர்புடைய தொழில், வணிக தொழிலில் ஏற்றம் ஏற்படும். சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று பலம் பெற்றால் நிர்வாகத் தொடர்புடைய தொழில், அதிகார பதவி,பூமி,மனை, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் ஏற்றம்உண்டாகும். சூரியன், செவ்வாய் பலமாக சேர்க்கை பெறுவதுடன் சனி பகவானும் ஆட்சி உச்சம் பெறுவாரேயானால் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய உயர் பதவி தேடி வரும். சூரியன், சந்திரன், செவ்வாய், கேது போன்ற நட்பு கிரக சேர்க்கை பெற்றிருந்தால் மருத்துவத்துறையில் பல சாதனைகள் செய்யக்கூடிய அமைப்பு ஏற்ஙபடும். குரு, புதன் இணைந்து 10ம் வீட்டில் அமையப் பெறுமேயானால் வாக்கால், பேச்சால் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு அமையும். 10 ம் வீட்டில் சந்திரன், ராகு அல்லது சந்திரன் கேது சேர்க்கை பெற்றிருந்தால் மருந்து, கெமிக்கல் போன்ற துறைகளில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். விருச்சிக லக்னத்திற்கு ஜீவனாதிபதியாகிய சூரியன் கேந்திர திரிகோணங்களில் அமைந்து சுபர் பார்வையுடனிருந்ஙதால் சமுதாயத்தில் கௌரவமான நிலை, கை நிறைய சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். அதுவே 10ம் அதிபதி சூரியன் தனக்கு பகை கிரகங்களான சனி, ராகு சேர்க்கைப் பெற்றால் சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்யும் அமைப்பு, அதிலும் சுபர் பார்வையின்றி இருந்து விட்டால் சட்டத்திற்கு விரோதமான வகையில்சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சனி, ராகு சேர்க்கையுடன் சூரியன் 8,12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் அமைந்தாலும் ஜாதகருக்கு நிலையானவருமானமில்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்தக்கூடிய சூழ்நிலை உண்டாகும். தனுசுலக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும் தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் 10ம் அதிபதியாவார். பொதுவாகவே ஒருவர் ஜாதகத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் பலமாகஅமைந்திருந்தால் அவருக்கு நல்ல அறிவாற்றல்,நினைவாற்றல், எதிலும் சிந்தித்து செயல்படக்கூடிய திறன்போன்ற யாவும் சிறப்பாக இருக்கும். புதனேஜீவனாதிபதியாக விளங்குவதால் அவர் பலம் பெற்றிருந்தால் செய்யும் தொழில், உத்தியோக ரீதியாக சிறப்பான உயர்வினை அடைய முடியும். புதன் பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன், சனி சேர்க்கையுடன் லக்னாதிபதி குருவின் பார்வையும் பெற்று அமைவாரேயானால் அவருக்கு நிலையான தொழிலும்,சமுதாயத்தில் ஓர் உன்னதமான நிலையும் உண்டாகும். புதன் பலம் பெற்று சூரியன், செவ்வாய் 10 ல் அமையப் பெற்றால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவிகளை வகித்து சிறப்பான வருமானத்தை ஈட்ட முடியும். மக்கள் செல்வாக்கு காரகன் என வர்ணிக்கக்கூடிய சனி வலிமை பெற்று, 10 ல் சூரியன் செவ்வாய் இருந்தால் அரசாங்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய கௌரவமானப் பதவிகள் தேடி வரும். அதிகாரமிக்க பதவிகள் அமையும். மக்களிடம் செல்வம், செல்வாக்கு உயரும். 10ல் சூரியன் செவ்வாய் இருந்தாலும் புதன் சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றாலும் அரசு, அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். புதனுடன் 9,12 க்கு அதிபதிகளான சூரியன், செவ்வாய் இணைந்து 9,12 ல் சந்திரன், ராகு போன்ற கிரகங்கள் அமையப் பெற்றால், கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய அற்புத அமைப்பு உண்டாகும். அதுபோல புதன் பலம் பெற்று உடன் சனி, சுக்கிரன் சேர்க்கையுடன் வலிமையாக அமையப் பெற்றால், சொந்தத் தொழில் செய்யக்கூடிய யோகம், வியாபாரத்தில் லட்ச லட்சமாக சம்பாதித்து கொடி கட்டி பறக்கும் யோகம் உண்டாகும். புதன், செவ்வாய் சேர்க்கை பெற்றால் பூமி, வேளாண்மை,விவசாய தொடர்புடைய தொழில், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 10ல் புதன் சந்திரன் சேர்க்கை பெற்று பலம் பெற்றால் ஜலதொடர்புடைய தொழில் செய்யக்கூடும். புதனுடன் சனி சேர்க்கைப் பெற்றால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்யக்கூடிய வாய்ப்பும், சனி பலமிழந்திருந்தால் அடிமைத் தொழில் செய்யக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். புதன், குரு சேர்க்கை பெற்றால் வக்கீல் தொழிலில் அரசாங்க ஜீவனம் உண்டாகும். புதன் சுக்கிரன் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்று குரு பார்த்தால் பெண்கள் வழியில் முன்னேற்றம்,நல்ல தன லாபத்தை அடையக்கூடிய வாய்ப்பு உண்டாகும.புதன், சுக்கிரன், சந்திரன் இணைந்து ரிஷபம், கடகம்,துலாமில் அமையப் பெற்றால் கலை, இசை,இலக்கியத்துறைகளில் புகழ்பெறக்கூடிய வாய்ப்புஉண்டாகும். புதன் அதிபலம் பெற்றால் கம்ப்யூட்டர், கணிதம், வங்கிப் பணி, பங்குச் சந்தை போன்றவற்றில் அனுகூலமும், குரு போன்ற சுபர் பார்வை பெற்றால் நூல் ஆசிரியர், பதிப்பகம்,பத்திரிகைத் துறை, புத்தக வெளியீடு, ஆசிரியர் பணிபோன்ற துறைகளில் புகழ் பெறக்கூடிய யோகமும் அமையும். ஆகவே, புதன் பகவான் பலமிழந்தாலும் பாவிகளுக்கிடையே அமையப் பெற்றாலும், புதனுக்கு 7ல் சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவிகள் இருந்தாலும் வாழ்வில் மேன்மையடைய இடையூறுகள் உண்டாகும். ராகு, கேது போன்ற பாவிகளின் சேர்க்கைப் பெற்றால்சட்டத்திற்கு புறம்பான தொழிலில் ஈடுபடக்கூடிய அவலநிலை ஏற்படும். தனுசு லக்னம் உபய லக்னம் என்பதாலும், புதன் 10ம் அதிபதி மட்டுமின்றி 7ம் அதிபதியாகவும் இருப்பதாலும்,உபய லக்னத்திற்கு 7ம் அதிபதி பாதகாதிபதி என்பதாலும்,திரிகோணங்களில் அமைந்தால் மட்டும் கூட்டால் நற்பலனை பெறமுடியும். தனுசு லக்னத்திற்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால், கூட்டுத் தொழில் செசய்வதைத் தவிர்த்து, எதிலும் தனித்து செயல்படுவது, உத்தியோகம்செய்வது உத்தமம். மகரம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும் மகர லக்னததில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சுக்கிரனாவார். 10ம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரபகவானே5ம் வீட்டிற்கும் அதிபதியாகி, லக்னாதிபதி சனிக்கும் நட்பு கிரகமாக விளங்குவது அற்புதமான அமைப்பாகும். 10ம் அதிபதி சுக்கிரன் தனக்கு நட்பு கிரகங்களான புதன், சனி சேர்க்கை பெற்று உடன் ராகும் இணைந்து இருந்தால் ஜாதகருக்கு செல்வம், செல்வாக்கு, தொழில் ரீதியாக உயர்வுகள், பெயர், புகழ் போன்ற யாவும் சிறப்பாக அமைந்துசுகவாழ்க்கை வாழக்கூடிய யோகம் உண்டாகும். சனி, புதன்,சுக்கிரன் சேர்க்கையோ, சுக்கிரன், புதன் இணைந்து குரு பார்வையோ அமைந்து சுக்கிரன், புதன், சனி போன்றவற்றில் ஏதாவது ஒரு கிரகத்தின் திசை நடந்தால், ஜாதகர்சொந்தமாக தொழில் செய்து, மிகச் சிறந்த செல்வந்தராக வாழக்கூடிய யோகம் உண்டாகும். பொருளாதார ரீதியாக உயர்வும், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலையும்கிட்டும். அரசு, அரசு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு காரகனான சூரியன் மகர லக்னத்திற்கு 10ம் வீடான துலாமில் நீசம் பெறுவதால் இந்த லக்னத்தில்பிறந்தவர்களுக்கு அரசுத் துறையைவிட தனியார் துறைகளிலும், சுய தொழில்களிலும் சம்பாதிக்க கூடிய வாய்ப்பே அதிகமாக இருக்கும். 10ல் சூரியன் நீசம்பெற்றாலும் உடன் சுக்கிரன் ஆட்சிப் பெற்று அமைந்து நீசபங்க ராஜயோகம் உண்டானால் அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் ஓரளவுக்கு அனுகூலத்தை அடைய முடியும். சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று உடன் சுக்கிரனும்10ல் இருந்தால் அரசு பணி அமையக்கூடிய வாய்ப்புகள் அமையும். சனி புதன், சுக்கிரன், சேர்க்கை பெற்று 10 ல் அமைந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்கள் செய்து அபரிமிதமான செல்வ சேர்க்கையினை பெறக்கூடிய அமைப்பு உண்டாகும். சந்திரன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்றால் கூட்டுத் தொழில், கலை, இசை போன்றவற்றின் மூலமாக அனுகூலங்கள், சுக்கிரன் சந்திரனுடன், புதனும்குருவும் சேர்க்கை பெற்றால் வெளியூர், வெளிநாடுகள் மூலம் தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு, சுக்கிரன, புதன் சேர்க்கைப் பெற்றால் கணக்கு, கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறை, எழுத்துத் துறை போன்றவற்றில் சம்பாதிக்கும் யோகம், சுக்கிரன் குரு சேர்க்கைப் பெற்றால் மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய துறைகளில் உயர்வான அந்தஸ்து அமையும். சுக்கிரன்வலுவாக அமையப் பெற்றால் ஆடை, ஆபரணங்கள்,பெண்கள் உபயோகப்படுத்தும் பொருட்கள் போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். மகரலக்னத்திற்கு 10ல் மக்கள் செல்வாக்கு காரகனாகிய சனி பகவான் உச்சம் பெறுவதால் ஒருவரின் ஜாதகத்தில் சனி உச்சம் பெற்று சூரியனும், செவ்வாயும் பலமாக அமைந்திருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய உயர் பதவிகள் தேடி வரும். சந்திரன், செவ்வாய், சூரியன் சேர்க்கை பெற்று 10ல் இருந்தால் மருத்துவத்துறையில் சாதனை செய்ய முடியும். சந்திரன், ராகு சேர்க்கைப் பெற்றிருந்தால் மருந்து, கெமிக்கல் துறையில் வல்லுனராக முடியும். 10ம் வீட்டில் குரு, புதன் இணைந்திருந்தால் வாக்கல், பேச்சால் சம்பாதிக்கும் யோகம்,ஆசிரியர் பணி, வக்கீல் தொழில் அமையும். அதுவே, சுக்கிரன் வலு இழந்து சனி, ராகு சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றியிருந்தால் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை, சுக்கிரன்,பலமிழந்து செவ்வாய் ராகு, கேது சேர்க்கை பெற்றால் அடிமைத் தொழில் செய்யும் நிலை, சுக்கிரன் பலமிழந்து சனி, செவ்வாய், ராகு, கேது சேர்க்கைப் பெற்றால் தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி பொய் சொல்லக்கூடியசூழ்நிலையால் தொழிலில் நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடும். 10ல் பாவிகள் அமையப் பெற்று சுபர் பார்வையின்றி இருந்தால் பொய் பித்தலாட்டம் செய்துசம்பாதிக்கக்கூடிய அவல நிலை உண்டாகும். கும்பம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும் கும்ப லக்னத்திற்கு ஜீவன ஸ்தானாதிபதி செவ்வாயாவார். செவ்வாய் பகவான் ஆட்சி உச்சம் பெற்று குரு போன்ற சுப கிரகங்களில் பார்வை பெற்றால் சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலையினை அடையக்கூடிய யோகம் உண்டாகும். நவகிரகங்களில் நிர்வாகத்திற்கு காரகனான செவ்வாய் சிறந்த நிர்வாகத் திறமைக்கும, போலீஸ்இராணுவம் பாதுகாப்பு போன்ற துறைகளில் உயர் பதவிகள் வகிப்பதற்கும் காரண காத்தாவாக விளங்குகிறார். செவ்வயர் பலமாக அமைந்து சூரியன் சேர்க்கை பெற்று சுபர் பார்வையுடன் அமையப் பெற்றால் அரசு, அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் உயர் பதவிகளை வகிக்கும் யோகம், உடன் குருவும் சேர்க்கை பெற்றால் அரசாங்கஅதிகாரியாகும் யோகம், பலரை வழி நடத்திச் செல்லக்கூடிய அமைப்பு உண்டாகும். குறிப்பாக செவ்வாய்,சூரியன், குரு சந்திரன் போன்ற நட்பு கிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் சமுதாயத்தில் மற்றவரால் மதிக்கப்படக்கூடிய அளவில் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும். செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று உடன் சந்திரன் ராகுவும் அமையப் பெற்றால் மருத்துவத்துறையில் சாதனை செய்யக்கூடிய அமைப்பு, சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக விளங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். செவ்வாய்,சந்திரன், ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தால் மருந்து கெமிக்கல், இராசாயனம் தொடர்புடைய துறைகளிலும், வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய தொழில்களிலும் சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும். செவ்வாய் பலமாக அமைந்தவர்களுக்கு இயற்கையிலேயே அதிகாரமிக்க குணம் இருக்கும் என்பதால் செவ்வாய்,சந்திரன், குரு சேர்க்கை பெற்றிருந்தாலும்,ஒருவருக்கொருவர் கேந்திர திரிகோணங்களில் அமையப்பெற்றாலும் அதிகாரமிக்க உயர் பதவிகளை வகிக்கக்கூடிய அற்புத யோகம் உண்டாகும். செவ்வாய், சூரியன், புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் சிறந்த பொறியாளராகும் யோகம், கம்ப்யூட்டர் துறைகளில் சாதனை செய்யக்கூடிய திறன் உண்டாகும். செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோணங்களில் பலமாக அமையப் பெற்றால் கலை, வியாபாரம், சொந்தத் தொழில் மூலம் சம்பாதிக்கும் யோகமும், செவ்வாய் சுக்கிரனுடன்,சந்திரன் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடுகளில்மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும், 10 ல் குரு அமைந்து உடன் புதன் சேர்க்கையும் ஏற்படுமேயானால் மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் வாய்ப்பு, பள்ளி,கல்லூரிகளில் பணி புரியும் வாய்ப்பு உண்டாகும். அதுவே செவ்வாய், ராகு, கேது போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றி இருந்தாலும், செவ்வாய் பலமிழந்திருந்தாலும் சனி பார்வை 10ம் வீட்டிற்கு இருந்தாலும் வாழ்வில் ஒரு நிலையான தொழில் இல்லாமல் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். 10ல் ராகு அமைந்து உடன் சனி இருந்து சுபர் பார்வையின்றி இருந்தால் சட்டத்திற்குப் புறம்பான தொழில் செய்து சம்பாதிக்க வேண்டியிருக்கும். மீனம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும் மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி குரு பகவானே பத்தாம் அதிபதியாகவும் இருப்பது சிறப்பாகும்.10ம் அதிபதி குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று பலமாக அமைந்து விட்டால் செல்வம், செல்வாக்கு, சமுதாயத்தில் கௌரவமான பதவியினை அடையும் யோகம் உண்டாகும். அது மட்டுமின்றி மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதில் வல்லவராகவும் வழி நடத்துவதில் கைதேர்ந்தவர்களாகவும்இருப்பார்கள். பேச்சால், வாக்கால் சம்பாதிக்கும் யோகம்,ஆசிரியர் பணி, கல்வி நிறுவனங்களில் பணபுரியக்கூடிய வாய்ப்பு, வங்கிப் பணி போன்றவை சிறப்பாக அமையும்.10ல் குரு, புதன் சேர்க்கை பெற்றாலும் மேற்கூறிய பலன்களே உண்டாகும். 10ம் அதிபதி குரு பகவான் தனக்கு நட்பு கிரகங்களான சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றாலும் 10ல் சூரியன்,செவ்வாய் திக் பலம் பெற்று அமைந்திருந்தாலும் அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பு, அரசு அரசுசார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். அதுபோல சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால்கௌரவமான பதவிகள் தேடி வரும். குரு, சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும் குரு, சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும் குரு, சனி, சந்திரன் சேர்க்கை பெற்றிருந்தாலும் பிறந்த ஊரை, விட வெளியூர்,வெளிநாடுகள் மூலம் அனுகூலங்கள், பயணங்கள் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். குரு, சந்திரன், கேது சேர்க்கை பெற்று 10 ல் இருந்தாலும் திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் சமூக நலப் பணிகளில் ஈடுபாடு, மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பணிகள் செய்யும் அமைப்பு, ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும். மக்கள் தொடர்புக்கு காரகனான சனி பகவான் 10ல் அமையப் பெற்று குரு, சூரியனும் பலம் பெற்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய அளவிற்கு உயர்ந்தபதவிகளை அடைய முடியும். இது மட்டுமின்றி சொந்த தொழில் செய்யக் கூடிய வாய்ப்பு, இரும்பு, விவசாயம்,எண்ணெய், தொடர்புடைய தொழில், பல வேலையாட்களைவைத்து வேலை வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சூரியன் 10ல் அமைந்தால் அரசு சார்ந்த துறைகளிலும்,செவ்வாய் 10 ல் அமைந்தால் நிர்வாகத் தொடர்புடையத் துறைகளிலும் மற்றும் பூமி, மனை, ரியல் எஸ்டேட்,போன்றவற்றிலும் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் 10ல் அமைந்தால் குருவுக்கு சுக்ஙகிரன் பகை கிரகம் என்றாலும் ஆடை, ஆபரணம், கலை, இசை துறைகளிலும், பெண்கள் உபயோகிக்கக்வடிய பொருட்கள்,டிராவல்ஸ் போன்றவற்றின் மூலமாகவும் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும். ராகு 10ல் இருந்தால் மருந்து, கெமிக்கல் தொடர்புடையவற்றிலும் 10 ல் சந்திரனுடன் ராகு அல்லது கேது சேர்க்கைப் பெற்றிருந்தால் மருத்துவத் துறையிலும் முன்ன«ற்றம் கொடுக்கும். 10 ல் புதன் அமைந்தால் கணக்கு,கம்ப்யூட்டர் தொடர்புடைய துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். 10 ல் புதன் அமைந்தால் புதன் 7ம் அதிபதி என்பதால் நெருங்கியவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்வது அல்லது உத்தியோகம் செய்வது நல்லது. குறிப்பாக மீன லக்னம் உபய லக்னம் என்பதால் கூட்டுத் தொழில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே செய்ய வேண்டியிருந்தாலும் மேலே கூறியது போல மனைவி மற்றும் மிக நெருங்கியவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்வது உத்தமம். அதுவே, குரு பகவான் பகை நீசம் பெற்று பாவ கிரக சேர்க்கையுடன் பலமிழந்திருந்தாலும்,அஸ்தங்கம் பெற்றிருந்தாலும், 6,8,12 ல் மறைந்திருந்தாலும் நிலையான வருமானம் இல்லாமல் கஷ்ட ஜீவனம் செய்யவேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக 10ம் வீட்டையோ10ம் அதிபதி குருவையோ சனி பார்வை செய்தால் தகுதிக்கு குறைவான வேலை கிடைக்கப் பெற்று வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...