செவ்வாய், 27 மே, 2014

வாஸ்து மனை அடி சாஸ்திரம் (குழி கணக்குடன்)


                                                                  


ஓலைச் சுவடிகள் :- அரசினர் சுவடி நூலகம், சென்னை -600 005. மனையடி சாஸ்திரம் R.3396, R.2678, R.3818, மனை சாஸ்திரம் R.165, R.195, மனை நூல் R.243
     
            இதை துணை நூலகக் கொண்டு எழுதப்பட்ட நூல்களைப்  பார்த்து இதில் உள்ள விபரங்கள்  தெரிவிக்கப் பட்டுள்ளது.

குழி கணக்கு சாஸ்திரம்  :- கட்டிடத்தின் வெளி பக்க அளவுகளை கணக்கிட்டு குழி கணக்காக மாற்றி 11 பொருத்தங்களில் எத்தனை பொருத்தங்கள் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதில் அதிக நன்மைகள் தரக்கூடிய  பொருத்தங்கள்   வரும்படியாக கட்டிடம் கட்ட வேண்டும்.  முக்கியமாக  கட்டிடத்திற்கு  அதிகமான வயது வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
            குழி என்பது 3 அடி அகலம் 3 அடி நீளம் கொண்ட 9 சதுரஅடிக் கொண்டது ஒரு குழி எனப்படும்.

உதாரணம் :-   இடத்தின் அகலம் 27 அடி, நீளம் 39 அடி என்றால் 
                                 27 * 39
                                     9               = 117  குழிகள் 
பொருத்தங்கள் மொத்தம் 11 அவைகள் 

  1. கருப்பம்
  2. வரவு 
  3. செலவு 
  4. யோனி 
  5. வயது 
  6. இராசி 
  7. இனம்
  8. அங்கிசம் 
  9. நட்சத்திரம் 
  10. திதி
  11. வாரம் 
[வகுக்கபடும் போது மீதி வர வில்லை என்றால் வகுக்கபடும் எண்ணை மீதி எண்ணாக கொள்ள வேண்டும்]
  1. 1. கருப்பம்  :- ஆதாயம், பலன், கற்பம் என்றுப் பொருள். இடத்தின் அளவுப் படி குழிகளை கணக்கிட்டு வந்த குழி எண்ணிக்கையை 8 ல் வகுக்க, வகுத்து மீதி வரும் எண் கற்ப எண் எனப்படும்.மீதி இல்லையானால் மீதி 8 என்று எடுத்துக்கொண்டு பலன் காண வேண்டும்.
சிறப்பான எண் - 1, 2, 3, 5, 7.

உதாரணம் :-  அகலம் 27 அடி,  நீளம் 39 அடி 

                               27 * 39
                                     9               = 117  குழிகள் 
மொத்த குழிகள் 117 ஐ   8 ல் வகுக்க வருவது 14 ம் மீதி 5 தும் இந்த 5 கற்ப எண் எனப்படும். இந்த 5 சிறப்பான எண்  (சிறப்பு 1,2,3,5,7)ஆகவே  கருப்பம்  பொருத்தம் உண்டு  என்றுக் கொள்ள வேண்டும் 
2.  வரவு பலன்  :-  மொத்தக் குழியை 8 ல் பெருக்கி பெருக்குத் தொகையை 12 ல் வகுக்க வந்த மீதி வரவு எனப்படும். மீதி இல்லையானால் மீதி 12 என்று எடுத்துக்கொண்டு பலன் காண வேண்டும் 
அனைத்து எண்களும் சிறப்பானவைகளே   ஆனால் இதில் பார்க்க வேண்டியது அடுத்து வரக்கூடிய செலவு எண்ணை விட இந்த எண் அதிகமாக வரவேண்டும்.
3. செலவு பலன் :- மொத்த குழியை  9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 10 ல் வகுக்க வரும் மீதி எண் செலவு எண் எனப்படும். மீதி இல்லையென்றால் மீதி 10 செலவு எண்ணாக  கொள்ள வேண்டும் 
சிறப்பான எண்கள் - 3, 4, 6, 8, 10.
4. யோனி  பலன் :-  மொத்தக் குழியை 3 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 8 ல் வகுக்க வரும் மீதி யோனி எண் மீதி வரவில்லையானால் மீதி 8 ஆக கொள்ள வேண்டும்.
சிறப்பு எண்கள் - 1, 3, 5, 7.
5. வயது பலன் :-  மொத்தக் குழியை 27 ல் பெருக்கி, வந்தத் தொகையை 100 ல் வகுக்க மீதி வரும் எண் கட்டடத்தின் வயது ஆகும் மீதி வராவிடில் வயது எண் 100 ஆக கொள்ள வேண்டும்.
வயது எண்  45 க்கு மேல் வருவது நல்லது வயது எண் அதிகமாக, அதிகமாக சிறப்பானது 

6. இராசி பலன் :-  மொத்த குழியை  4 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 12 ல் வகுக்க மீதி வரும் எண் இராசி எண் ஆகும் 
சிறப்பான எண்கள் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12.

7. இனம் பலன்கள் :-  மொத்தக் குழியினை 9 ல் பெருக்கி, வந்த தொகையை 4 ல் வகுக்க மீதி வருவது இன எண் ஆகும் 
சிறப்பான எண்கள் - 1, 2, 3.

8. அங்கிச பலன்கள் :-  மொத்தக் குழியை 4 ல் பெருக்கி வந்த தொகையை 9 ல் வகுக்க வரும் மீதி அங்கிசம் எண் ஆகும்.
சிறப்பான எண்கள் - 2, 3, 4, 5, 6, 8, 9.

9. நட்சத்திர பலன் :-  மொத்தக்  குழியினை 8 ல் பெருக்கி, பெருக்குத் தொகையினை 27 ல் வகுக்க மீதி வரும் எண் நட்சத்திர எண் ஆகும் .
சிறப்பான எண் - 1, 4, 6, 7, 10, 11, 12, 14, 15, 17, 21, 22, 24, 26.
10.  திதி பலன்கள் :-  மொத்தக் குழியினை 9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 30 ல் வகுக்க மீதி வரும் எண் திதி எண் ஆகும் 
சிறப்பான எண்கள் - 1, 2, 3, 5, 6, 7, 10, 12, 13, 15, 16, 17, 18, 20, 21, 22, 25, 27, 28, 30

11.  வார  பலன்கள் :- மொத்த குழியினை 9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 7 ல் வகுக்க  வரும் மீதி நாள் எண் ஆகும்.
சிறப்பான எண்கள் - 2, 4, 5, 6.

                                    *******************************

மனை  அடி சாஸ்திரம்  வீட்டின் அறைகளின் உள் அளவு அடி அதில் வாழ்பவரின் அம்சமாகும் அறைகளின் உள் அளவு நல்ல பலனுள்ள அளவுகளாக வரும்படி அமைக்க வேண்டும். அனைத்து அறைகளும் அப்படி அமைக்க முடியாது. அமைக்க முடியாத அந்த அறைகளுக்குள் ஒரு வரியோ அல்லது இரண்டு வரியோ செங்கல் வைத்து திட்டு கட்டி அந்த அடியை சரி செய்து கொள்ள வேண்டும்

வீட்டின் உள் அளவு   நீள அகல அடிகளில் சிறப்பான அடிகள் :- 

  6 - 8 - 10 - 11 -16 - 17 - 20 - 21 -22 - 26 -27 - 28 - 29 -  30 - 32 - 33 - 35 - 36 - 37 - 39 - 41 - 42 - 45 - 50 -  52 - 56 - 60 - 64 - 66 - 68 - 70 - 71 - 72 - 73 - 74 - 77 - 79 - 80 - 84 - 85 - 87 - 88 - 89 - 90 - 91 - 92 - 95 - 97 - 99 - 100.


                                                     *************************

 வாஸ்து நாட்கள் :-  

     சித்திரை -   10     நாழிகை     5     நேரம்-   காலை    8-54   முதல்  9-30   வரை

    வைகாசி  -    21            "             8            "                "          9-58         "      10-34         "

             ஆடி  -    11            "             2            "                "          7-44          "        8-20         "

     ஆவணி  -      6            "            21           "                 "          7-23         "        7-59         "

         ஐப்பசி  -    11            "              2           "                 "          7-44         "        8-20         "

கார்த்திகை  -     8            "             12           "                 "        11-29        "      12-05         "

              தை  -    12            "               8           "                 "        10-41        "      11-17         "

            மாசி  -    22            "               8           "                 "        10-32        "      11-08         "
                                        ******************************

வாஸ்து செய்யும் மாதம் :-  


  1. வடக்கு வாசல்     -------------     சித்திரை, வைகாசி 
  2. கிழக்கு வாசல்     -------------     ஆடி, ஆவணி 
  3. தெற்கு வாசல்      -------------     ஐப்பசி, கார்த்திகை
  4. மேற்கு வாசல்     -------------      தை,  மாசி 
                                        ***************************

வீடு கட்டுவதற்குரிய பலன் :-

  1. சித்திரை          ---------     செல்வம் குறையும் 
  2. வைகாசி         ----------    வெற்றி உண்டாகும் 
  3. ஆனி                 ----------    பகைவர் பயம், புத்திரருக்கு  ஆகாது 
  4. ஆடி                   ----------    பசுக்கள் நஷ்டம், செல்வம் அழியும் 
  5. ஆவணி          ----------     உறவினர் வருகை 
  6. புரட்டாசி       -----------     பல வகை பிணிகள் வருத்தும் 
  7. ஐப்பசி            -----------     கலகம், ஆடை அணிகள் சேதம் 
  8. கார்த்திகை  -----------     செல்வம் நிலைக்கும், தீங்கு ஏற்படாது 
  9. மார்கழி          -----------     பயம் மிகும் 
  10. தை                   -----------    மரணம் உண்டாகும் 
  11. மாசி                -----------     துன்பம் நீங்கும், செல்வம் உண்டாகும் 
  12. பங்குனி        -----------     ஆடை ஆபரணங்களும்,       
                                                      உள்ள  செல்வமும்  கொள்ளை   போகும்

                                ******************************

வீட்டுக்கு உரியவரின் இராசிக்கு ஏற்ற திசை :-    


  • கிழக்கு வாசல் -----------------விருச்சிகம், மீனம், கடகம் 
  • மேற்கு வாசல் ------------------துலாம், மிதுனம், கும்பம்
  • வடக்கு வாசல் ------------------தனுசு, மேஷம்,சிம்மம் 
  • தெற்கு வாசல் ------------------ரிஷபம், மகரம்,கன்னி              
இராசிக் காரர்களுக்கு இத்திசைகள் உயர்வைத் தரும்

                                       
************************

வாசற்கால் வைக்கும் பாகம் :-

           வாசற்கால் வைக்கும் திசையின் நீளம் அல்லது அகலத்தை அளந்து அதை 8 பாகங்களாக பகுக்க வேண்டும்.  அவற்றில் முதல் இரண்டு பாகம் மற்றும் கடைசி இரண்டு பாகங்களை தவிர்த்து இடையில் உள்ள  3, 4, 5,6 ஆகிய பாகங்களில் எங்கு வேண்டுமானாலும், வாசற்ப்படி அமைக்கலாம்.

வாசற்கால் வைக்க நவக்கிரக பலன் :-

             வாசற்படி வைக்கும் திசையின் நீளம் அல்லது அகலத்தை அளந்து  9  பாகங்களாக பகுக்க வேண்டும்.  முதல் பாகம் சூரியனிலிருந்து சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன்,
சனி, இராகு, ஒன்பதாவது பாகம் கேதுவாக கொள்ள வேண்டும். 

             இதில்  4, 5, 6, வது பாகமான புதன், குரு, சுக்கிரனில் வாசற்கால் வைக்கலாம் 

                                      **********************

வாசற்காலின் அளவுகள் :-

          9 : 5,  6  3/4 : 3  3/4,  ---   உயரம்  9 அடி, அகலம்  5 அடி அல்லது உயரம்  6  3/4  அடி, அகலம் 3  3/4  அடி.   இது வெளிபுற அளவு.
         
          கதவு ஒரே பலகையில் அமைவது சிறப்பு இல்லையெனில்  3, 5, 7, என்று ஒற்றைப்படை பலகைகளால் அமைக்கலாம். ஒரே மரத்தினுடைய பலகையாக இருக்க வேண்டும்.
          தலை வாசற்காலை விட உட்புற வாசற்கால்கள் படிப்படியாக சிறிது உயரமாக இருக்க வேண்டும். அதாவது தலை வாசற்கால் உயரம்  6 அடியானால் அடுத்தது 6 அடி 1 அங்குலம் அடுத்தது 6 அடி 2 அங்குலம் இருக்க வேண்டும். அதே போல தரை அமைப்பிலும் சிறிது உயர்வாகத்  தூக்கி வாசற்காலைப் பொருத்த வேண்டும்.

                                          ***********************
கிணறு :-  
   
வடக்கு, கிழக்கு வாசல் வீடுகளுக்கு தென்மேற்கு பகுதியிலும், 

தெற்கு, மேற்கு வாசல் வீடுகளுக்கு வடகிழக்கு பகுதியிலும் கிணறு எடுக்க வேண்டும்.

மாடி :-   கிழக்கு பக்கத்திலும், வடக்கு பக்கத்திலும் மேல் மாடி வீடு கட்டுவது நல்லது.
மாடிப்படி :-   வடக்கு, கிழக்கு நோக்கி ஏறுமாறு அமைப்பது சிறந்தது 

                                                ************************

சுப காரியங்கள் செய்யும் நட்சத்திரம் :-


      1. ரோகினி, ஆதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, திருவோணம், அவிட்டம்,            சதயம்.

பட்டாபிஷேகம் உத்தியோகம், இராஜதரிசனம், வியாபாரம், வீடு, ஆபரணம், சுப காரியங்கள் செய்யவும் அபிவிருத்தியாய் வருமென்று அறிக

       2.  அசுவினி,மிருகசீரம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி.

சுப காரியங்களுக்கு உத்தமம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...