திங்கள், 14 ஜூன், 2021

திசா புத்தி பலன் சொல்வது எப்படி

 T.V.வெங்கட் ராம்ஜி சென்னை 8124 8124 70

இனி விதிகள் பற்றி பார்ப்போம்
திசா நாதன் இருக்கும் இடத்தை லக்னம் போல் பார்க்க வேண்டும்
இங்கு லக்னம் தேவை இல்லை எந்த திசையிலும் லக்னம் வேவை படாது
திசா நாதன் இருக்கும் இடமே முதன்மை ஆன இடம்
திசா நாதனுக்கு மாந்தி தொடர்பு இருந்தால் அந்த திசையில் கர்மா உண்டு
திசா நாதனுக்கு 7 ல் மாந்தி இருந்தால் அந்த திசையில் கர்மா உண்டு
திசா நாதன் மாந்தியை பார்த்தாலும் அந்த திசை காலத்திலும் கர்மா உண்டு
இதே போல் புத்தி நாதனுக்கும் அந்ததர நாதனுக்கும்
பொருந்தும்
திசா நாதனுக்கு
1.2.4.5.7.9.11. ல் இருக்கும் கிரகங்கள் இருந்து புத்தி நடத்தும் போது சுப பலன் கிடைக்கும்
இந்த இடத்தில் திசா நாதனுக்கு 3.6.8.12. ஆம் அதிபதி இருந்தாலும் சுப பலன் கிடைக்கும்
திசா நாதனுக்கு 1.2.4.5.7.9.11.அதிபதிகள்
3.6.8.10.12. ல் இருந்து புத்தி நடத்தும் போது சுப பலன் இருக்காது
திசா நாதன் இருக்கும் இடத்தில் இருந்து 5 ல் இருக்கும் கிரகம் புத்தி நாதன் ஆக இருந்தால் அந்த காலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்
மற்றும் 11 ல் இருந்து புத்தி நாதன் தனது பார்வையாக 5 ஆம் இடத்தை தனது ஒரு பார்வை மூலம் பார்த்தாலும் குழந்தை பிறக்கும்
திசா நாதன் இருக்கும் இடத்தில் இருந்து 7 ல் இருக்கும் கிரகத்தின் புத்தியில் திருமணம் நடக்கும் அதே போல் திசா நாதன் தான் இருக்கும் இடத்தை தனது பார்வை மூலம் 7 ஆம் இடத்தை பார்தாலும் திருமணம் நடக்கும் மற்றும் புத்தி நாதன் 7 ல் இருந்தாலும் 7ஆம் இடத்தை புத்தி நாதன் தனது பார்வை மூலம் பார்தாலும் 7 ல் இருந்தாலும் அந்த கால கட்டம் திருமணம் நடக்கும்
திசா நாதன் இருக்கும் இடத்தில் இருந்து 6 ல் இருக்கும் கிரகத்தின் புத்தியில் கடன் நோய் வழக்கு உத்தியோகம் மாற்றம் ஏற்படும் இதே போல் 6 ஆம் பாவத்தை பார்க்கும் கிரகத்தின் புத்தியில் பாதிப்பு இருக்கும்
திசா நாதனுக்கு
8 ல் இருக்கும் கிரகத்தின் புத்தியில் சங்கடம் அவமானம் ஆயுள் கண்டம் வரும்
திசா நாதனுக்கு 12 ல் உள்ள கிரகத்தின் புத்தியில் இடம் மற்றும் வரும் உறவில் ஒருவர் மோட்சம் இருக்கும்
திசா நாதனுக்கு 1 ல் ஒரு கிரகம் இருந்து புத்தி நடந்தும் போது வளர்ச்சி இருக்கும் திருமணம் கூட்டு தொழில் இரண்டாவது குழந்தை பிறப்பு கிடைக்கும் 7 ல் இருந்தாலும் சிறப்பாக இருக்கும்
7 ஆம் இடத்தை பார்த்தாலும் சிறப்பாக இருக்கும்
திசா நாதனுக்கு 2 ல் இருந்து ஒரு கிரகம் புத்தி நடத்தும் போது அந்த கால கட்டத்தில் வருமானம் சிறப்பாக இருக்கும்
திசா நாதனுக்கு 3 ல் ஒரு கிரகம் இருந்து புத்தி நடத்தும் போது இடம் மாற்றம் பத்திரம் சார்ந்த வகையில் அழைத்து செல்லும் மற்றும் செயற்கை மரணம் சார்ந்த வழியில் சம்பவங்கள் நடை பெறும்
திசா நாதனுக்கு
4 ல் இருக்கும் கிரகத்தின் புத்தியில் வீடு வாகனம் படிப்பு சார்ந்த வகையில் வளர்ச்சி தரும் இந்த புத்தி நாதன் 10 ஆம் இடத்தை பார்க்கும் கர்மா வை தரும் தாய் தந்தை வழியில்
திசா நாதனுக்கு
5 ல் உள்ள கிரகம் புத்தியில் குழந்தை பிறக்கும்
பூர்வீக சொத்து வரும் உயர் கல்வி சிறப்பாக இருக்கும்
திசா நாதனுக்கு 6 ல் இருக்கும் புத்தி நாதன் நடை பெறும் போது கடன் தொழில் நோய் சார்ந்த உபாதைகள் வரும்
திசா நாதனுக்கு 7 ல் இருக்கும் கிரகத்தின் புத்தியில் திருமணம் நடக்கும்
கூட்டு தொழில் சிறப்பாக இருக்கும்
திசா நாதனுக்கு 8 ல் உள்ள கிரகத்தின் புத்தியில்
அவமானம் சங்கடம் ஆயுள் பாதிப்பு தற்கொலை என்னம் வரும்
திசா நாதனுக்கு 9 ல் ஒரு கிரகம் இருந்து புத்தி நடத்தும் போது வெளி ஊரில் வளர்ச்சி தரும்
ஜாதகரை தந்தை ஆக்கும்
திசா நாதனுக்கு 10 ல் ஒரு கிரகம் இருந்து புத்தி நடக்கும் போது ஒரு கர்மாவை தரும் தொழில் சார்ந்த வகையில் மாற்றம் தரும்
திசா நாதனுக்கு 11 ஆம் இடத்தில் இருக்கும் கிரகத்தின் புத்தியில் காமம் அதிகம் இருக்கும்
நண்பர்கள் அதிகம் இருக்கும் லாபம் அதிகம் இருக்கும் இரண்டாவது திருமணம் தொடர்பு ஏற்படுத்தும்
திசா நாதனுக்கு 12 ல் ஒரு கிரகம் இருந்து புத்தி நடத்தும் போது வெளி ஊரில் வளர்ச்சி தரும்
உறவில் ஒருவர் மோட்சம் அடைவார்கள்
இது வரை பொது பலன் மட்டுமே இதில் 70 சதவீதம் சரியாக இருக்கும்
திசா நாதனுக்கு மற்றும் புத்தி நாதனுக்கு மாந்தி பார்வை இல்லாமல் இருக்க வேண்டும் மற்றும் திசா நாதன் புத்தி நாதன் மாந்தியை பார்த்து விட்டால் அந்த காலம் கர்மா உண்டு
12 பாவத்தில்
அதாவது திசா நாதன் புத்தி நாதன் இவர்களுக்கு மாந்தி பார்வை இருக்க கூடாது
அதே போல் திசா நாதன் புத்தி நாதன் இவர்கள் மாந்தியை பார்க்க கூடாது இவ்வளவு தான் தகவல்
இதில் திசா நாதன் புத்தி நாதன் வக்கரம் ஆனால் ரிவர்ஸ் ஆக பார்க்க வேண்டும்
ராகு கேது சாரத்தில் திசா நாதன் புத்தி நாதன் இருந்தால் ரிவர்ஸ் ஆக கணிக்க வேண்டும்
ஆசிரியர் தங்க பாண்டியன் ஐயா அவர்கள் வழி முறைகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
திசா நாதனுக்கு மாந்தி பார்வை இல்லாமல் இருப்பது சிறப்பு
அல்லது திசா நாதன் மாந்தியை பார்க்காமல் இருப்பது சிறப்பு
இதே போல் தான் புத்தி நாதனுக்கும் அந்தர நாதனுக்கும்
இதை சரியாக பயன்படுத்தி பயிற்சி எடுங்கள் முக்காலமும் உங்களால் சொல்ல முடியும்
இதனுடன் RJ ஜோதிட முறைகள் இனைத்து பாருங்கள்
நீங்கள் ஜோதிட உலகில் மிக சிறந்த ஜோதிடர் என்பது உங்களுக்கே புரியும்
ஏற்கனவே திசா நாதனுக்கு 10
புத்தி நாதனுக்கு 10
ஏற்கனவே சொல்லி தந்து இருப்பேன் இதையும் மனதில் வைத்து பலன் சொல்லுங்கள்
என்றும்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124 8124 70
வாழ்க ஜோதிடம் வளர்க ஜோதிட மாணவர்கள்

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...