சனி, 15 செப்டம்பர், 2018

. செவ்வாய் லக்கினத்தில் இருந்தால் மற்றும் செவ்வாய் லக்கினத்தை பார்த்தால் என்ன பலன்கள்..?



லக்னத்தில் அல்லது லக்னத்தை. செவ்வாய் பார்வை செய்வதால் ஜாதகர் கோபம் உண்டு. சொத்து இருக்கும் முகத்தில் தழும்பு இருக்கலாம். சர்ஜரி நடந்திருக்கலாம். ரத்த  சம்பந்தபட்ட வியாதிவரும்.    முரட்டுகுணம் இருக்கும் கண்எரிச்சல். பிளட்பிரஷர். தந்தையுடன் சுமுகமான உறவு இருக்காது.  எந்த வேலையும் திறம்படசெய்வர். லக்னத்தில் செவ்வாய் உஷ்ண தேகம் பிடிவாத குணம் நடுத்தர உயரம்
அவசர செயல் உள்ளவர். லக்னத்தில் செவ்வாய்  சுய கவுரவத்தை எங்கும்  இழக்க மாட்டார்கள். களத்திரதோஷம் உள்ளவர். மீசை பெரியதாக இருக்கும் போலிஸ் மீசை போல். மதுரை வீரன் போல். குடும்பத்தை ராணுவம் போல் வைத்து இருப்பார்.
பார்வையாலே எல்லா செயல்களும் நடக்க வேண்டும் எதிர்பார்ப்பவர். வாழ்நாள் முழுவதும் ஏதாவது வழக்கு பிரச்சினை இருக்கலாம். செவ்வாய் லக்னத்தில் இருந்தாலும் செவ்வாய் பார்வை லக்னத்திற்கு கிடைத்தாலும்  வீடு அருகில் கடைகள் இருக்கும் எலக்ட்ரிகல் தொடர்பான  அரசு  சாதனங்கள் இருக்கும். இவருக்கு சகோதரர் இருப்பார்கள். வீடு இடம் சொத்து அமைப்பு இருக்கும். செவ்வாய் லக்னத்தில் இருந்தால் முன்கோபக்காரர்கள் இருப்பார் பெரிய மனிதர்களின் நட்பு இருக்கும் உஷ்ணமாக இருக்கும் முரட்டு குணம் இருக்கும் உடம்பில் தழும்புகள் இருக்கும் மற்றவர்களுக்கு வேலை செய்ய தயங்க மாட்டார்கள் மூலநோய் அறுவைசிகிச்சை மற்றும் தழும்புகள் இருக்கும் தாராளமாக செலவு செய்வார்கள்.முன் யோசனை குறைவாக இருக்கும்.மற்றவர்களை பயப்பட  செய்வார்கள். செவ்வாய் பார்வை 2ம் இடத்திற்கு இருந்தால், மிகவும் கோபமானவார். வார்த்தையில் நிதானம் இருக்காது. இவர்கள் கெடுதல் சொன்னால் உடனே நடக்கும். அடியாட்கள் போல வேலை செய்பவர்கள். மருத்துவம் சம்பந்தம் வரும். லக்னத்தில் செவ்வாய் உள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மருத்துவர் ஆக இருப்பார்கள். லக்னத்தில் செவ்வாய் முன்பின் யோசிக்காமல் காரியம்/அடிதடி இறங்கிவிடுவார்கள் பின் யோசிப்பார்கள். தைரியம் வீரியம் போராட்டகுணம்   ரியல் எஸ்டேட். மருந்துவிற்பனை விவசாயம் இருக்கும். சிவப்பு நிறத்தை விரும்புவார்கள் நெருப்பு அடுப்பு சம்பந்தமான தொழில்கள் இருப்பார்கள். இவர்களுக்கு ரத்தக் கோளாறுகள் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும். ஆண் ஜாதகத்தில் இளைய சகோதரர், மைத்துனர் மற்றும் நெருங்கிய ரத்த பந்த உறவு. பெண் ஜாதகத்தில் கணவர்.. லக்னத்தில் செவ்வாய் விளையாட்டு வீரர்கள்.. காலபுருஷ தத்துவப்படி நெருப்பு ராசியில் செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருப்பதால் , லக் செவ்வாய் இருக்க பெற்ற ஜாதகர் சிவந்த நிறமுடையவர்,அதிகார தோரணை , சொந்த உழைப்பில் வீடு, நிலம் பெற கூடியவர்.. இவர்களுக்கு முருகன் சுப்பிரமணியர் சம்பந்தப்பட்ட பெயர்கள் அமையும்.. செவ்வாய் லக்னத்தில் இருப்பவர் சூடான பானம் விரும்புபவர்.. சகோதரர் பாசம் உள்ளவர்.. ஆயுதங்கள் சம்பந்தமான தொழிலும் அமையும் போலீஸ் செக்யூரிட்டி பயர் ஆபீஸ் மின்சாரம் போன்ற தொழில்கள் அமையும்.. உடல் சம்பந்தமான விளையாட்டில் ஆர்வம்.. லக்னத்தில் செவ் தைரியமானவன் சொந்தமுயற்சியில் வாழ்க்கையில் முன்னேறுவான் ஜாதகரருடைய சகோதர்கள் ஜாதகர் மீது அன்பு காட்டுவார்கள்.. வீடு , மனை , ஆராய்ச்சி கூடம், விபத்து நடக்கும் இடம், சமையல் அறை, தென் மேற்கு திசை கனரக வாகனம், எல்லா விதமான இயந்திரம் பெண் வீட்டில்  துர்க்கை ஆண் வீட்டில் முருகன். உக்ர தெய்வங்கள்.. செவ்வாய் லக்னத்தில் முன் கோபி பின்னர் வருந்துபவர். பாதுகாப்பு உணர்வு அதிகம். லக்கினத்தில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் கோபக்காரன். எடுத்தற்கெல்லாம் சட்டென்று கோபம் வரும்! உக்கிரமானவன். சிலருக்கு அடிக்கடி உடற் காயங்கள் ஏற்படும். சிலருக்கு (ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் சரியாக இல்லாவிட்டால்) குறைந்த ஆயுளிலேயே போர்டிங் பாஸ் கொடுக்கப்பட்டுவிடும். ஒரு வியாதி போனால் இன்னொரு வியாதி கதைவைத் திறந்து கொண்டு உடனே வரும்! ஜாதகன் சலனபுத்திக் காரணாக இருப்பான். தீரனாகவுன் இருப்பான் சிலர் வன்கன்மையாளராகவும் (cruel) இருப்பார்கள். தலை அல்லது நெற்றியில் தழும்புகள் இருக்கும்.. கர்வம் உடையவர்களாக இருப்பார்கள் விடாமுயற்சி இருக்கும். போராடத் தயங்காதவர்கள். எந்த சூழ்நிலையையும் சமாளிப்பார்கள்‌. பொறுமை இருக்காது... லக்னாதிபதி செவ்வாயாக இருந்தாலும் நெற்றியில் தழும்பு இருக்கும்.. பித்த உடம்புக்காரர்கள். சபல புத்தி இருக்கும் . மாமிசம் விரும்பி உண்பார்கள்.. உணவு சூடாக சாப்பிடவிரும்புவார்கள். சூடான காரமான மற்றும் அசைவ உணவை விரும்புபவர்கள்.. திருச்செந்தூர் முருகன் வழிபாடு நன்மையை தரும். அம்பிகை வழிபாட்டில் நாட்டம் உண்டு.. சூடான உடல்அடிக்கடி தாகம் எடுக்கும். அரசியல் அரசு பணியில் ஆர்வம். துருதுரு என்று இருப்பவர்.. பெண்கள் அதிக நேரம் சமையலறையில் அடுப்பிற்கு அருகில் அதிக நேரம் செலவழிப்பர். ஆண்கள் உடல் பலத்தில் அதிக அக்கறை
: குழந்தைகள் மண்ணில் விளையாட அதிகம் விருப்பம். டற்பயிற்சி செய்வதில் ஆர்வம் இருக்கும். சூடு சம்பந்தமான நோய்கள் காயங்கள் ஏற்படும். Sir my husband also body builder ஆக இருந்தார் 30வது வயதில் அவருக்கு செவ்வாய் லக்னாதிபதி. எனக்கு லக்னாதிபதி செவ்வாய் முன்கோபம் அதிகம். செவ்வாய் பலமாக இருந்து அதன் பார்வை லக்னத்தில் இருந்தால் நல்ல புகழ் செல்வம் நிலம் சொத்துக்கள் கட்டிடங்கள் எதிரிகளை வெல்வார் .களத்திர தோஷமும் ரத்த சம்பந்தமான நோய்களும் வரும் ஏழாம் பார்வையாக பார்த்தால்.. லக்னத்தில் செவ்வாய் பிடிவாதம் அதிகம். பிறர் சொல் பேச்சு கேட்க மாட்டார்கள். எல்லா விஷயங்களிலும் ஒழுங்கு முறை எதிர்பார்ப்பார்கள்.. செவ்வாய் பலமாக இருந்து நாலாம் பார்வையாகப் பார்த்தால் சிறந்த கல்வி தானம் ஞானம் உடையவர். செவ்வாய் உச்சம்.நல்ல தைரியம்,என் முயற்சியில், வேலை செய்ய பிடிக்கும்.GYM க்கு போய் வந்மேன்,5 வருடமாக  உடற்பயிற்சியை விட்டுவிட்டேன்.. செவ்வாய் லக்ன பாவி ஆக இருந்தது லக்னத்திற்கு 8 ஆம் வீட்டை பார்ப்பதால் மூல நோயின் தாக்கம் இருக்கும். செவ்வாய்,4ல் உச்சமானதால்,7,10,11 பாவங்களில் ,அவர் 4,7,8 ம் பார்வை விழுவதால் 3 பாவமும் மிக சிறப்பாக உள்ளது. 11பாதகாதிபதி இருந்தும் கூட .. செவ்வாய் பார்வை லக்னத்தில் இருந்தால் அரசியல் மோகம் வரும் செவ்வாய் குரு பலம் இருந்தால் அரசியலில் வெல்வார்கள். செவ்வாய் சிற்றின்ப நாட்டத்தை கொடுக்கக்கூடியவர். ஏழில் இருந்து ஏழாம் பார்வையாக செவ்வாய் பார்த்தால் மனைவியுடன் வீண் வம்பு வழக்குகள் பிரச்சினைகள் உடல்நிலை பாதிப்பு தொழில் பாதிப்பு உண்டாகும்.. செவ்வாய் மற்றவர்கள் பற்றிய எண்ணம் இருக்காது.
உதாரணமாக மேலதிகாரி செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர் என்றால் நீங்கள் உடல்நிலை சரியில்லை விடுமுறை கேட்டால் உங்களுக்கு தரப்பட்டுள்ள பணியை முடித்து விட்டு பிறகு கேளுங்கள் என்பார். என் மகனுக்கு லக்னத்தில் செவ் முன்கோபம் பிடிவாதம் straight forward கூடவே சந்திரன் தாயிடம் சண்டை யும் இருக்கும் அதிக பாசமும் இருக்கும். என் மகனுக்கு லக்னத்தில் செவ்வாய் straight forward. அதிகார தோரணை. அடுத்தவரை அதிகாரம் செய்வதில் விருப்பம்.. இருதடவை கைமுறிவு அதில் ஒரு தடவை அவன் தம்பி கீழே தள்ளிவிட்டு. அனைத்திலும் தலைமை வகிக்க விருப்பம் அதனால் பிரச்சனைகள் போட்டி பொறாமைகள் இவருக்கு இருக்கும். செவ்வாய் உச்சம் எனக்கு. கபடியில் என்னை பிடிக்க வந்தவர் இரு பற்கள் என் தலையால் பிடுங்கப்பட்டு என் தலையின் உள்ளே.. அறுவை சிகிச்சை செய்து பற்கள் எடுக்கப்பட்டன. இவர்கள் முருக்கு போன்ற கடின உணவை சூடாக விரும்புவர். செவ்வாய் உச்சம் எனக்கு  எனது நண்பர் உடன் கை முட்டியை டேபிலில் வைத்து விட்டு இருவரும் பலம் போட்டி விளையாட்டு விலையாடினோம் தலை  அடிபடும்
தலையில்  பாரம் சுமந்து  நடப்பவர். லக்கினத்தில் செவ்வாய்-  தைரியவான், பிடிவாதக்கார், கோபக்கார தாய், களத்திர கருத்து பேதம், சொந்த மனை, முகத்தில் தழும்பு.. கணவருடன்  காலம்  முழுவதும் மசண்டை திருமண வாழ்வு  போராட்டம். அவரும் செவ்வாயின் ஆதிக்கம். செவ்வாய் கணவன் காரகன் சகோதர காரகன்
ஆடு  வளர்பார்கள். கிணறு  இருக்கும் வீடு..                            2,4,7,8,12 செவ்வாய் இருந்தால் தோஷம்.வீட்டின் முன் ஆடு கண்டிப்பாக வரும்.
காரமான உணவுகள் முரட்டுத்தனம் முன் கோபம் போலீஸ் ராணுவம்.. .                                                                  முன் கோபம்  வரும் சுறுசுப்பாக இருப்பார்கள் சீருடை பணியில் விருப்பம் சீருடைப்பணி..பாடல்  கேட்ட படி சமையல் செய்வார்கள் சிறு வயதில் சமையல் செய்ய ஆரம்பித்து  விடுவார்கள் இசை  அறிந்தவர் இசை கற்றவர்கள் அதிக உணர்சி வசப்படும் இயல்பு.. அடாவடித்தனம்  கைகலப்புக்கு அஞ்சமாட்டார்கள்.. மந்திரம் தந்திரம் இதில் விருப்பம் உள்ளவர்கள். Bp வரும்  தையல் கற்றவர் கோபக்கனல் முகம் தையல்  இயந்திரம் வைத்திருப்பார் சிவப்பு நிறம் விரும்புவார்கள். ஆஜானுபாகுவான தோற்றம். உடலில் ரத்தக்காயங்கள் ஆகிக் கொண்டே இருக்கும் பசி உடையவர் அறுவைசிகிச்சை உண்டு.. அடிக்கடி சிறுநீரகக்கல் பிரச்னைகள் உண்டு வீட்டில்  சிவப்பு  நிற பூக்கள்  உண்டு விளையாட்டு பிரியர்கள் சுறுசுறுப்பானவர்கள் டெக்னிக்கல் பொறியியல் தொழில்நுட்ப வேலைகள் சங்கீத ஆசிரியர்  அடுத்தவர்க்காக உழைத்துத் தன் ரத்தத்தை சக்தியை இழப்பவர்கள். ஆயுதம் தாங்கிய கடவுள்வழிபாடு முனிஸ்வரன்  போன்ற தெய்வ வழிபாடு. பின்  வைத்து  பல்குத்துவார்கள் பல் சொத்தை வரும்.. அரிவாள்  மனை அதிகம்  பயன்படுத்தி சமையல் செய்வார்கள்.. ஆட்டுக்கறி விரும்பி சாப்பிடுவார்.. தலையில் தழும்பு இருக்கும்..                                           சகோதாரன்.கணவன் பழிவாங்குதல். மனவலிமை.காவல் துறை.இராணுவம். வெட்டுக்காயம்.வீரம். பூமி.ரத்தம்.பல்.முருகன். எதிரிகள்கூர்மையான ஆயுதம்.விவசாயம். அடுப்பு.மின்கருவி. பாறை.வீட்டுஉத்திரம். தீயணைப்புதுறை. செங்கல்சூளை.தாதுப் பொருட்கள்.பொறியியல்துறை.சுரங்கத்துறை. அறுவைச்சிகிச்சை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...