வெள்ளி, 11 அக்டோபர், 2019

திருமணம் முடிந்த கொஞ்ச காலத்தில் ஏன் பிரிவுகள்

ஜாதகத்தில் லக்னம் என்பது முதல் வீடு
இதில் இருந்து 7 ஆம் பாவம் களத்திர பாவம் இந்த வீட்டின் அதிபதி
களத்திர ஸ்தானாதிபதி
இவர் 6.8.12. ஆம் அதிபதி சாரத்தில் இருந்தாலும் 6.8.12. ஆம் பாவத்தில் இருந்து நாடி முறையில் 6.8.12. ஆம் அதிபதியை முதலில் தொட்டாலும் திருமணம் முடிந்து பிரிவுகள் வரும்
நிரந்தர பிரிவு வர மேலும்
7 ஆம் அதிபதி ஷட் பலத்தில் பலம் இழந்து இருப்பது
மற்றும் 7 ஆம் பாவம் திதி சூனியம் ஆவது மற்றும் 7 ஆம் அதிபதி திதி சூனியம் வீட்டில் இருப்பது மற்றும்
7 அதிபதியை 7 ஆம் பாவத்தை இரண்டிற்கும் மேற்பட்ட பாவ கிரகங்கள் பார்ப்பது
இந்த அமைப்பு இருந்தால் திருமணம் முடிந்த பிறகு பிரிவுகள் இழப்புகள் இருக்கும்
இதில் 2 ஆம் பாவம் இரண்டாம் அதிபதி மேல் சொன்ன விதிகள் மூலம் பாதிப்பு அடைந்தால் குடும்ப வாழ்க்கை அமையாது மற்றும் சில மாதங்கள் குடும்ப வாழ்க்கை அமைந்து பிரிவுகள் தந்து விடும்
4 ஆம் பாவம் 4 ஆம் அதிபதி மேலே சொன்ன விதிகள் மூலம் பாதிப்பு அடைந்தால் சுக வாழ்க்கை இருக்காது
ஆயுள் முழுவதும் சுக வாழ்க்கை பிரச்சனை
களத்திர காரகன் ஆண்களுக்கு சுக்கிரன் பெண்களுக்கு செவ்வாய்
பாதிப்பு அடையும் போது
திருமணம் நடக்கவே சிரமம் இருக்கும்
களத்திர காரன் திருமணம் நடப்பதற்கு முன்பு இருக்கும் நிலையை சொல்லும்
களத்திர ஸ்தானாதிபதி
திருமணம் நடந்த பிறகு நடக்கும் விஷயத்தை சொல்லும்

திருமணம் நடக்கும் வயது

உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டை வைத்து உங்களுக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் நடந்து இருக்கும் என்பதை சொல்ல முடியும்
உதாரண விளக்கம்
உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன்
1.5.9. இருந்து சுக்கிரனுக்கு திரிகோன இடங்கள் பாதிப்பு இல்லாமல் இருந்தால்
21 25 29 வயதில் திருமணம்
சுக்கிரன் லக்னத்தில் இருந்து 2.6.10. இடங்களில் இருந்தால்
22 26 30 வயதில் திருமணம்
சுக்கிரன் லக்னத்தில் இருந்து 3.7.11.ஆகிய இடங்களில் இருந்தால்
23 27 31 வயதில் திருமணம்
சுக்கிரன் லக்னத்தில் இருந்து 4.8.12.ஆகிய இடங்களில் இருந்தால்
24 28 32 வயதில் திருமணம்
சுக்கிரனுக்கு மூன்று திரிகோன இடங்கள் பாதிப்பு இருந்தால்
30 வயது + சுக்கிரன் இருக்கும் இடத்தின் வயதை கூட்டி கொள்ள வேண்டும்
உதாரணமாக
ஒருவருக்கு பத்தில் சுக்கிரன்
சுக்கிரனுக்கு திரிகோன இடங்கள்
லக்ன ரீதியாக 2 6 10
இடங்கள்
சுக்கிரன் இருக்கும் இடம் 10 ஆம் இடம்
எனவே 32 36 40 வயதில் திருமணம் இது தாமத திருமணம் அமைப்பு
மற்றும்
இதே போல் பெண்களுக்கு
செவ்வாயை வைத்து திருமணம் வயது சொல்ல முடியும்.
செவ்வாய். 1.5.9.ல் இருந்தால்
21 25 29 வயது
இனி விதிகள்
ஆண்களுக்கு சுக்கிரனுக்கு திரிகோன இடங்கள் திதி சூனியம் பாதகம் தொடர்பு இருந்தால் தடை
இதே போல் பெண்களுக்கு
செவ்வாய் இருக்கும் இடத்திற்கு
1.5.9.
இடங்கள் பாதிப்பு அடைந்தால் தடை தாமதம்
மற்றும் சுக்கிரன் செவ்வாய் இருக்கும் இடம் பாவ சக்கரத்தில் மாற்றம் இருந்தால் இதையும் கணக்கில் எடுத்து கொண்டு கணிக்க வேண்டும்
டிகிரி அடிப்படையில்
சுக்கிரன் செவ்வாய்
ராசி கட்டத்தில் முதல் டிகிரி
29 வது டிகிரி யில் இருந்தால் இதையும் கவனித்து கணிக்க வேண்டும்

கிரகம். Frequency

கிரகம். Frequency. Keyboard tone
புதன் 141.27. C#
சுக்ரன் 221.23. A
செவ்வாய் 144.72 D
வியாழன் 183.58 F#
சனி 147.85 D
சூரியன் 126.22 B
வளர்பிறை சந்திரன் 210.42 G#
தேய்பிறை சந்திரன் 227.43 A#
ராகு 241.56 B
கேது 246.04 B

ஒரு ஜாதகம் பலன் 5 நிமிடத்தில் சொல்ல வேண்டும் என்றால்


மாணவர்களுக்கு தெரிந்து இருக்க வேண்டிய முக்கிய பாடம்
1.கிரக காரகத்துவம்
2.பாவ காரகத்துவம்
3 ராசி காரகத்துவம்
4 ஷட் பலம்
இந்த நான்கும் முக்கியமான ஒன்று
ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் நன்மை தருமா அல்லது நன்மை தராதா அல்லது தீமை தருமா என்பதை பார்ப்பது தான் ஒரு கிரகத்தின் பலம் பலவீனம் இதை தெரிந்து கொள்ள ஷட் பலம் மூலம் பலம் இழந்த கிரகத்தின் பாவங்கள் பாதிப்பு அடையும் பலம் இழந்த கிரகத்தின் காரகத்துவம் பாதிப்பு அடையும் பலம் இழந்த கிரகம் எங்கு உள்ளதோ அந்த இடத்தின் பலன்களும் பாதிப்பு அடையும் ஜோதிடத்தில் கிரக பலம் அறியும் வழிகள் பல உள்ளன கேந்திர பலம் திரிகோண பலம் ஸ்தான பலம் பார்வை பலம் சார பலம் வர்க பலம் அஷ்டவர்க பலம் திதி சூன்யாதிபதி நிலை பாதகாதிபதி நிலை யோகி அவ யோகி நிலை முடக்கு லாடம் போன்ற பலம் இன்னும் நிறைய வழிகளில் ஒரு கிரகம் பலமாக உள்ளதா இல்லை பலவீனமாக உள்ளதா என்பதை பார்க்க இதை எல்லாம் பார்ப்போம் இதை ஒட்டு மொத்தமாக கணிதம் மூலம் பார்ப்பதே ஷட் பலம் இதை தெரிந்து கொண்டால் ஜோதிட பலன்கள் எளிதாக சொல்லி விட முடியும் பலம் இழந்த கிரகம் தான் திதி சூனியம் பாதிப்பு அடைந்து இருக்கும் பலம் இழந்த கிரகம் தான் பாதகம் தொடர்பு அடைந்து இருக்கும் பலம் இழந்த கிரகம் தான் லாடம் லத்தை முடக்கு போன்ற முறைகளில் பலம் இழந்து இருக்கும் பலம் இழந்த கிரகம் தான் 6.8.12.தொடர்பு பெற்று இருக்கும் நீச வீட்டில் இருக்கும் கிரகம் கூட ஷட் பலம் மூலம் பலம் பெற்று இருக்கும்
உச்ச வீட்டில் இருக்கும் கிரகம் கூட ஷட் பலத்தில் பலம் இழந்து இருக்கும் எனவே கிரகங்களின் உண்மையான பலம் அறிந்து பலன் சொல்வது ஜோதிடர்கள் கடமை எனவே கிரக பலம் அறிந்து கொள்ள ஷட் பலம் அருமையான வழி எனவே மாணவர்கள் இதை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...