வெள்ளி, 11 அக்டோபர், 2019

திருமணம் முடிந்த கொஞ்ச காலத்தில் ஏன் பிரிவுகள்

ஜாதகத்தில் லக்னம் என்பது முதல் வீடு
இதில் இருந்து 7 ஆம் பாவம் களத்திர பாவம் இந்த வீட்டின் அதிபதி
களத்திர ஸ்தானாதிபதி
இவர் 6.8.12. ஆம் அதிபதி சாரத்தில் இருந்தாலும் 6.8.12. ஆம் பாவத்தில் இருந்து நாடி முறையில் 6.8.12. ஆம் அதிபதியை முதலில் தொட்டாலும் திருமணம் முடிந்து பிரிவுகள் வரும்
நிரந்தர பிரிவு வர மேலும்
7 ஆம் அதிபதி ஷட் பலத்தில் பலம் இழந்து இருப்பது
மற்றும் 7 ஆம் பாவம் திதி சூனியம் ஆவது மற்றும் 7 ஆம் அதிபதி திதி சூனியம் வீட்டில் இருப்பது மற்றும்
7 அதிபதியை 7 ஆம் பாவத்தை இரண்டிற்கும் மேற்பட்ட பாவ கிரகங்கள் பார்ப்பது
இந்த அமைப்பு இருந்தால் திருமணம் முடிந்த பிறகு பிரிவுகள் இழப்புகள் இருக்கும்
இதில் 2 ஆம் பாவம் இரண்டாம் அதிபதி மேல் சொன்ன விதிகள் மூலம் பாதிப்பு அடைந்தால் குடும்ப வாழ்க்கை அமையாது மற்றும் சில மாதங்கள் குடும்ப வாழ்க்கை அமைந்து பிரிவுகள் தந்து விடும்
4 ஆம் பாவம் 4 ஆம் அதிபதி மேலே சொன்ன விதிகள் மூலம் பாதிப்பு அடைந்தால் சுக வாழ்க்கை இருக்காது
ஆயுள் முழுவதும் சுக வாழ்க்கை பிரச்சனை
களத்திர காரகன் ஆண்களுக்கு சுக்கிரன் பெண்களுக்கு செவ்வாய்
பாதிப்பு அடையும் போது
திருமணம் நடக்கவே சிரமம் இருக்கும்
களத்திர காரன் திருமணம் நடப்பதற்கு முன்பு இருக்கும் நிலையை சொல்லும்
களத்திர ஸ்தானாதிபதி
திருமணம் நடந்த பிறகு நடக்கும் விஷயத்தை சொல்லும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...