வியாழன், 29 செப்டம்பர், 2016

வசியம் ஒரு கலை ஆழ்மனம்

வசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன் படும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பல்வேறு இடங்களில் உண்மையில் செய்வினை வசியம் என்ற பெயரில் ஏற்படுத்தப்படும் அனைத்து பாதிப்புகளுமே மூலிகைகள் மற்றும் ஆழ்மன சக்தியைக் கொண்டு ஏற்படுத்தப்படும் மன உடல் பாதிப்புகளே என்பதற்கு மிக வலுவான சான்றுகள் உள்ளன. ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒருவரின் மனதை தன் உத்திரவுக்கு கட்டுபடுத்தி செயல்படுத்தும் ஹிப்னாடிஸத்தை நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆழ்மன சக்தியை ஒருங்கினைத்து மன மொழி உத்தரவுகளை செலுத்தி தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கமுடியும் என்று ரெய்கி மருத்துவம் நிரூபித்திருக்கிறது. ஆழ்மன சக்த்தியை ஒருங்கினைத்து தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு செய்திகளை அனுப்பும் டெலிபதி முறையை நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளை பயன்படுத்தி மன பாதிப்புகளையும் உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. எங்கோ இருக்கும் ஒருவரை ரெய்கி மூலமாக குணப்படுத்தமுடியும் என்றால், எங்கோ இருக்கும் ஒருவரிடம் டெலிபதி மூலம் பேச முடியும் என்றால் எங்கோ இருக்கும் ஒருவருக்கு வித்வ பிரயோகம் மூலம் ஏன் பாதிப்புகளை ஏற்படுத்தமுடியாது என்பது வித்வ பிரயோக வல்லுனர்களின் கேள்வி எது எப்படியிருந்தாலும் ஆன்மீக வழியான வித்வ பிரயோகத்திலும் மூலிகைகளின் சக்தியே அடிப்படையாகவும் முக்கியமானதாகவும் பயன் படுத்தப்படுகிறது. காதல் வெற்றிக்கு..... காதல் வசப்படுபவர்களில் நிறைய பேர் தங்களின் காதல் வெற்றி பெற வசியம் செய்பவர்களை தேடி செல்வதை அதிகம் பார்க்க முடிகிறது. வசியம் என்பது ஏதோ மிகப்பெரிய சக்தி வாய்ந்தது போலவும் யாரை வேண்டுமென்றாலும் வசியம் செய்து விடலாம் என்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது. உண்மையில் வசியம் செய்வதற்க்கு சில விதி முறைகளை ஸ்ரீ தேவி யட்சினி மகாத்மியம் சொல்கிறது அதன்படி...... திருமணமாகி கணவனுடன் இருக்கும் பெண்ணை வசியம் செய்ய கூடாது வேறு ஒரு ஆணுடன் காதல் வயப்பட்டபெண்ணை வசியம் செய்யகூடாது உறவு முறையற்ற பெண்ணை வசியம் செய்ய கூடாது தன்னை விட மூத்த வயதுடைய பெண்ணை வசியம் செய்ய கூடாது அடைக்கலம் தேடிவந்த பெண்ணை வசியம் செய்ய கூடாது அறிமுகம் இல்லாத பெண்னை வசியம் செய்ய முடியாது சிம்ம லக்னம் கொண்ட பெண்னை வசியம் செய்ய முடியாது வைஜயந்தி உபாசனை செய்யும் பெண்ணை வசியம் செய்ய முடியாது இத்தகைய பெண்களை தவிர்த்துத்தான் வசியத்தை பிரயோகிக்க முடியும். அதே போல பெண்களும். திருமணமான ஆண்களை வசியம் செய்ய கூடாது குரு ஸ்தானத்தில் இருப்பவரை வசியம் செய்ய கூடாது விரதம் மேற்கொண்டிருப்பவரை வசியம் செய்ய கூடாது (இன்னும் சில நிபந்தனைகள் வருணம், ஜாதி போன்றவை குறித்து சொல்லப்பட்டிருக்கின்றன) காதலில் வெற்றி பெற யட்சினி உபாசனைகளில் பூஜை முறைகளே அதிகம் சொல்லப்பட்டிருக்கின்றன. மனதில் எண்ணியவரையே கணவராக அடைய அமாவாசை கழித்து வரும் மூன்றாம் பிறையன்று துவங்கி மதன மேகலா லக்ன பீடம் வைத்து செவ்வாய் வெள்ளிகிழமைகளில் மந்திர உச்சாடனம் செய்துவர எண்ணிய திருமணம் பலிதமாகும். மதன மேகலா என்பது விஸ்ரூப யட்சிணி அதாவது நீர், காற்று, மண் தீ போன்ற இயற்கை சக்தியில் அட்சராம்சம் கொண்டது. மதன மேகலா லக்ன பீடம் ஐந்து அங்குல நீளம் நான்கு அங்குல அகலம் கொண்டது இதன் உள்ளே ரதிமன்மத வசிய சக்ரமும் விவாக பந்தினி சக்ரமும் பதிக்கப்பட்டிருக்கும். (சில இடங்களில் குறிப்பிட்ட ஆடவனின் ஜாதகமும் பந்தனம் செய்யப்படுவதுண்டு) பொதுவாக இந்த உபாசனையை நீரில் நின்றுக்கொண்டு செய்ய வேண்டும் ஆனால் குளியலறையில் குளித்து முடித்தப்பின் ஈர உடலோடு ஆடைஏதும் அணியாமல் கிழக்கு நோக்கி நின்று வலது உள்ளங்கையில் பீடத்தை வைத்து இடது கையால் தாங்கி, ஓம் ஈம் க்லீம் நமோ பகவதி ரதி வித்மயே மஹா மோஹினீ காமேசி மம பந்தம் சித்த பதீம் ஸ்வயம் பூர்வம் பந்தம் வசி குரு குரு ஸ்வாஹா என்ற மந்திரத்தை ஒன்பது முறைகள் சொல்லி உடலில் இருந்து நீரை எடுத்து மூன்று முறை பீடத்தை சுற்றி குறிப்பிட்ட ஆடவனை நினைத்து காற்றில் தெளிக்க வேண்டும். இந்த முறை பல இடங்களில் பரிபூரண வெற்றியை கொடுத்திருக்கிறது. இதை தவிர்த்து காதலில் வெற்றி பெற வசிய பொடி அல்லது சொக்கு பொடியை பயன்படுத்துவதாக மலையாள மாந்த்ரீகத்திலும், சித்தர் வழி முறைகளிலும் சொல்லப்படுகின்றன. குறிப்பாக சிதம்பர அஷ்ட கர்மத்தில் கருவூர் சித்தர் பல முறைகளை சொல்லுகின்றார். மலையாள மாந்த்ரீகத்தில் இந்திர கோபம்.மதனகாமபூ, வெண்குன்றி மணி,சுழல் வண்டு, ஈப்புலி, நீர் மேல் நெருப்பு போன்றவற்றை அஷ்ட்டாங்க திராவகம் எனப்படும் குறிப்பிட்ட சில எண்ணைகளை சேர்த்து தயாரிக்கப்படும் களிம்பை மூங்கில் குறுத்தில் காப்பிட்டு வீனாயட்சினி மூலமந்திரத்தை ஒன்பது வேளை 1008 உரு ஏற்றி பெண்ணின் உடல் திரவத்தோடு கலந்து உட்கொள்ள கொடுக்க ஆண்களை வசப்படுத்தமுடியும் என்று சொல்லப்படுகிறது. மரமஞ்சள்.கஸ்தூரி,தாழம்பூத்தாள்,கல்மதம்,பாதிரி, வென்கற்கை ஆகியவற்றுடன் குறிப்பிட்ட சில பூஞ்சைகளை குழிதைலத்தில் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி வெங்கார பற்பத்தில் புடம்போட்டு வாகை பலகையில் வைத்து மதன கன்னிகா மூல மந்திரத்தால் உரு ஏற்றி உணவில் கலந்து கொடுத்தாலும், பாற்குரண்டி வேரில் கணமாக பூசி காயவைத்து குறிப்பிட்ட ஆணின் உடமைகளில் வைத்தாலும் உச்சிஸ்ட்ட மதன கன்னிகா அந்த ஆணின் உறக்கத்தில் போய் குறிப்பிட்ட பெண்ணோடு சேர உத்தரவு கொடுக்கும் என்று யட்சிணி வசிய நிகண்டு என்ற நூல் குறிப்பிடுகிறது. எத்தகைய வசிய முறையை பின் பற்றினாலும் முதலில் வசியம் படுத்தும் நபரின் லக்ன பலன், தாரா பலன், பஞ்சக பலன் தெரிந்து அதற்கு தக்கவாறு வசிய முறைகளை பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் தீர.. ..... ..... கணவன் மனைவி இடையே ஏற்படும் மன வேறுபாடுகள், விருப்பமின்மை, தாம்பத்தியத்தில் ஈடுபாடுஇன்மை, வெறுப்பு ஆகியவற்றை எதிர்மறை சக்த்திகளால் ஏற்படுத்தமுடியுமா என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது. விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளை பயன்படுத்தி மன பாதிப்புகளையும் உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. வித்வ பிரயோகம் எனப்படும் பூதபிரேத பைசாச பிரயோகங்கள் துர் தேவதைகள் யட்சிணிகள் மற்றும் பிரம்ம ராட்சசர்களைக்கொண்டு செயல் படுத்தப்படுவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் மனோசக்தி யைக்கொண்டு எதிர்மறை பதிவுகளை ஆழ்மனத்தில் ஏற்படுத்துவதன் மூலமாகவே செயல் படுத்தப்படுகின்றன. பொதுவாக கணவன் மனைவிக்குள் பிரச்சனைகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று முற்சி செய்பவர்கள் மூன்று வழிகளை பயன் படுத்துவதுண்டு. சமாதானமாக இருக்கும் கணவன் அல்லது மனைவியை குறிவைத்து அவர்களின் மனத்தை மாற்றி கணவன் அல்லது மனைவியை பற்றிய சிந்தனைகளை மறக்கசெய்வது அல்லது எதிற்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துவது வித்வேசனம் எனப்படும். ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவிக்கிடையே எதிற்மறையான எண்னங்களை ஏற்படுத்தி தேவையற்ற சந்தேகங்கள், பயங்கள், மற்றும் குழப்பங்கள் அதிகரிக்க செய்வது இதன் அடிப்படையாகும். கணவன் அல்லது மனைவியின் உடல் அணுக்களில் நச்சுத்தண்மையை ஏற்படுத்தி அவர்களுக்குள் தம்பத்திய உறவும் நெருக்கமும் ஏற்படாமல் செய்வது அஸ்ரஸ்வதம் எனப்படும். இதனால் கணவன் மனைவிக்குள் தாம்பத்திய உறவு ஏற்பட்டால் கணவனுக்கோ மனைவிக்கோ உடல் பாதிப்புகள்,சிரமங்கள் மற்றும் சங்கடங்கள் ஏற்பட்டு ஒருவரை விட்டு ஒருவர் விலகும் நிலை ஏற்படும். இந்த முறையை பயன்படுத்தும் போது கணவன் மனைவி அல்லது காதலர்களிடையே உடல் நெருக்கம் ஏற்பட்டாலோ, உடல் ஸ்பரிசம் ஏற்பட்டாலோ, கந்த ஸ்பரிசம் ஏற்பட்டாலோ அவர்களுக்கிடையே எதிற்மறை எண்னங்கள் ஏற்பட்டு வெறுப்பும் பகையும் ஏற்படும். இதனால் உடல் நெருக்கத்தை தவிர்த்து ஒருவரை ஒருவர் விட்டு விலகி செல்லும் நிலை ஏற்படும். அடுத்ததாக கணவன் அல்லது மனைவிக்கிடையில் மன சஞ்சலங்களை ஏற்படுத்தி மூன்றாம் நபரை பிரவேசிக்க செய்வது இது அந்தராசனம் அல்லது அந்தரபிரவேசம் எனப்படும். ஒழுக்கமான பெண் அல்லது ஆணுக்கு வேற்று ஆண் அல்லது பெண்ணோடு தொடர்புகள் அல்லது உறவுகள் ஏற்பட்டு அதனால் குடும்பத்தில் விரிசலும் பிரிவும் ஏற்பட செய்வது. பொதுவாக எல்லாவித வசியமுறைகளிலும் திலகம்,அஞ்சனம், மசிகந்தம், ஔஷதம், குளிகை என்ற ஐந்து வித மூலிகை பொருட்கள்அதிகம் பயன் படுத்தப்படுகின்றன.இதில் திலகம் என்பது நெற்றி அல்லது வகிட்டில் வைக்கப்படும் பொட்டையும், அஞ்சனம் என்பது கண்கள் அல்லது புருவத்தில் பூசப்படும் மையையும், மசிகந்தம் என்பது உடலில் பூசும் வசியபொடியையும், ஔஷதம் என்பது உட்கொள்ளும் மருந்தையும், குளிகை என்பது மருந்து உருண்டைகளையும் குறிக்கும். பாதிப்புகளை ஏற்படுத்தவும் ஏற்பட்ட பாதிப்புகளை தடுக்கவும் என இரண்டு வழிகளுக்கும் இந்த ஐந்து பொருட்க்களும் பயன் படுத்தப்படுகின்றன. ஆண்களை வசியம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் மசிகந்தம் அல்லது ஔஷதம் என்ற இரண்டு வழிகளையே பின்பற்றுகின்றனர். சந்தர்ப்ப வசத்தால் நெருக்கமாக பழகும் சூழ்நிலை ஏற்பட்டாலோ உடல் உறவு கொள்ளும் நிலை ஏற்பட்டாலோ மசிகந்தம் முறையில் வசிய மருந்தை உடலில் பூசிக்கொண்டு அந்த ஆனோடு நெருங்கி பழகுகின்றனர். உடலில் பூசப்படும் மூலிகை கலவையின் சக்தி பெண்ணின் ஜீவகாந்த அணுக்கள் மற்றும் மூலிகை கலவையோடு சேர்ந்து ஆணின் வியர்வை துவாரங்கள் வழியாகவும் , உடல் திரவங்கள் வழியாகவும் உடாலுக்குள் ஊடுருவியும், வாசானை நாசி வழியே சுவாசத்தில் கலந்தும் விஷுவல் எனப்படும் காட்சி வடிவிலும்,ஆடிட்டரி எனப்படும் ஒலி வடிவிலும்,கினஸ்தடிக் எனப்படும் உணர்வு வடிவிலும் ஆழ்மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் ஆழ்மனதில் பதிந்த பெண்ணின் தோற்றம், நறுமணம்,செயல் போன்றவை மீண்டும் மீண்டும் அந்த ஆணின் மனதில் ஆதிக்கம் செலுத்துகிறது. இவ்வாறு வசியம் செய்யப்பட்ட ஆண் தனது சுய கட்டுப்பாட்டை இழந்து வசியம் செய்தவர்களின் சிந்தனையிலேயே இருப்பான். அவர்களை தவிர மற்ற அனைத்தும் ஒரு பொருட்டாகவே தெரியாது. வசியத்தை செயல் படுத்தியவர்களை நேரில் பார்த்தாலோ, அவர்களின் குரலை கேட்டாலோ ஒரு வித பயம் அல்லது பதட்டம் ஏற்படும். மற்றவர்களின் கருத்தைவிட வசியத்தை செயல் படுத்தியவர்களின் உத்திரவுக்கு முழுமையாக கட்டுபடுவான். ஔஷதம் எனப்படும் வசிய மருந்துகளை உட்கொள்ள செய்தால் முதலில் உட்கொள்ளுபவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும். உடலில் தளர்ச்சியும் சோர்வும் அதிகமாகும். வயிற்றில் குத்தல் அல்லது வலி விட்டு விட்டு ஏற்படும், முதுகின் கீழ் புறத்திலும் நடு முதுகிலும் தொடர்ந்து வலி ஏற்படும்.உணவு உட்கொள்ளுவது படிப்படியாக குறையும் நாளடைவில் வசியம் வைத்தவரின் முழு கட்டுப்பாட்டில் அவர்களூக்கு மட்டுமே ஆதரவாக மாறிவிடுவார்கள். உட்கொள்ள கொடுக்கப்படும் மருந்துகள் உடல் திரவங்களை பாதித்து மனத்தின் செயல் இயக்கத்தை மாற்றுவதால் சுய கட்டுபாடு இழந்து ஒரு குறிப்பிட்ட நபரை பற்றிய தொடர் சிந்தனைகள் ஏற்படுகின்றன. இத்தகைய வித்வபிரயோகத்தை செயல்படுத்துபவர்கள் மந்திர யந்திர ஔஷத சக்திகளால் மனமொழி உத்தரவுகளை செலுத்துவதுண்டு. இவ்வாறு மந்திர பிரயோகங்களை பயன் படுத்தினால் 90 நாட்களிலும், யந்திர பிரயோகங்களை பயன் படுத்தினால் 60 நாட்களிலும், ஔஷதங்கள் எனப்படும் மருந்துக்களை பயன் படுத்தினால் 30 நாட்களிலும் பாதிப்புகள் ஏற்படும் என்பது பொதுவான கருத்து. மாந்த்ரீக சாஸ்திரத்தில் உபதேவதை வழிபாட்டின் மூலமாகவே இத்தகைய பிரயோகங்கள் செயல் படுத்தப்படுகின்றன. உச்சிஸ்டசன்டாளி,உச்சிஸ்டகாளிகா, பந்தினி, மதனமேகலா, வடயட்சிணி. துமாவதி, சங்கதரணி போன்ற யட்சிணி உபாசனைகளை பயன்படுத்தி வசியம், தம்பனம், மோகனம், வித்வேசனம், மாரணம்,உச்சாடனம் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. உதாரணமாக உச்சிஸ்ட்ட சண்டாளி மூல மந்திரத்தை 1008 உரு நாற்பத்தி எட்டு நாட்க்கள் ஜெபம் செய்து மந்திர ஸித்தியானதும். கர்னீகரம்,புன்னாகமலர்,ஜபபுஷ்பம்,பாதிரி, பாற்குறண்டி இவற்றை முதல் முறையாக காய் விடும் தென்னை மரத்தின் இளனீரில் சேர்த்தரைத்து புடம்போட்டு உணவில் கலந்து கொடுத்தால் சத்ரு வசியம் ஸ்த்ரீவசியம் புருஷ வசியம் ஏற்படும் என்று ருத்ர ஸ்யாமளா என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது. நீலி தாரா என்ற யட்சிணி உபாசனையை 1000 இலுப்பை சமித்தில் பசு நெய் கொண்டு ஹோமம் செய்து சந்தனம், கோரோசனை, கஸ்தூரி,புனுகு,கும்குமபூ,வெள்ளாடனை,ஆகியவற்றை அயகாந்த செந்தூரத்துடன் கலந்து மண்சட்டியின் உட்புறத்தில் பூசி ஒன்பது நாட்க்கள் நிழலில் அதன் பின் அரசு சமித்தில் பசு நெய் தடவி தீயிலிட்டு எறித்து அதன் தீயை மன்சட்டியில் காட்டி கரியாக எடுத்து அதோடு எண்ணை கலந்து உலர்த்தி திலகமாக இட்டால் பதி வசியம் ஏற்படும். காமதேவனான மன்மதனின் ஐந்து வித மலர் அம்புகளான தாமரை, மாம்பூ,அசோகம்,முல்லை,நீலோற்பவம் ஆகியவற்றை மசித்து அத்துடன் வெங்காரம் ,மனோசிலை, உத்தரோணிபூஆகியவற்றை மணிக்கு ஒண்றாக கலந்து வேப்பெண்னை தவிர்த்து ஏதாவது ஒரு எண்னையில் கலந்து மூன்று நாட்க்கள் ஊறவைத்து உச்சிஸ்ட பைரவி மூலமந்திரத்தை மூன்றூ வேளை மூன்று நாட்கள் வளர் பிறையில் உரு ஏற்றி உடல் முழுவதும் தேய்த்து மூன்று நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) உடலில் ஊற விட்டு அதன்பின் ஸ்னானம் செய்தால் மன வேற்றுமையால் பிரிந்த கணவன் மனைவி ஓன்றாக சேர்வார்கள். என்றும்,( மனைவியின் மணம்,ஸ்பரிசம், நெருக்கம் கணவனின் அண்மையில் இருக்க வேண்டும்) மேற்படி கலவையை பனை ஓலையில் தேய்த்து மனைவியின் கூந்தல் ரோமம் மூன்றை பந்தனம் செய்து நன்றாக காய வைத்து விருப்பம் இல்லாத கணவனின் படுக்கையில் வைத்தால் அவனுக்கு மனைவிமீது அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். மேற்சொன்ன ஐந்து பூக்களுடன் கன்று ஈனாத பசுவின் கோமியம் ஒரு பலம், சரம் கொன்றை மிளறு, தேவதாரு வேர், இலந்தை வேர்,வெண்டை வேர், வெம்பலி (வெள்ளை கொள்ளுகாடை வேர்) ஆகியவற்றை கலந்து மண்கலயத்தில் வைத்து காலை நேரத்து சூரிய ஒளியில் சூடாக்கி உடலில் தேய்த்து மூன்று நாழிகை கழித்து ஆணுடன் உறவு கொண்டால் அந்த ஆண் எந்த காலத்திலும் அந்த பெண்ணை விட்டு விலக மாட்டான். என்றும் பைரவி தந்த்ரம் என்ற நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. இத்தகைய மருந்து கலவைகளை பெண்கள் தங்கள் கணவனிடம் பயன் படுத்தினால் அது அவர்களின் குடும்ப வாழ்வில் அதிக நெருக்கத்தையும் இன்பத்தையும் தரும் ஆனால் துரதிருஷ்டவசமாக சில பெண்கள் தங்களுக்கு பிடித்தமான அல்லது உதவிகரமான அல்லது வசதியான, திருமணமான ஆண்களிடம் பயன் படுத்தும் போது அது அந்த ஆடவனின் குடும்ப வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. அவ்வாறு தவறாக பயன்படுத்தி ஆண்களின் மனதை மற்றும் முயற்சிகளை தடுக்கவும் நமது பாரம்பர்ய சாஸ்திரங்கள் வழிகளை சொல்லி இருக்கின்றன. பெண்கள் தங்களுக்கு வேறு யாராவது எதிர்மறை பிரயோகங்களை செலுத்திவிடுவார்கள் என்ற பயம் இருந்தாலோ, எதிர்மறை பிரயோகங்களால் தன் கணவனின் உயிருக்கோ ஆரோக்கியத்திற்க்கோ பாதிப்பு ஏற்படும் என்ற பயம் இருந்தாலோ வைஜயந்தி யந்திரம் என்னும் அஸ்வரூட ரக்ஷையை வெள்ளி கிழமையும் பஞ்சமி திதியும் சேர்ந்து வரும் நாளில் மாங்கல்யத்தில் கோர்த்து அணிவது பாதுகாப்பை தரும். அஷ்வரூடா என்பவள் பராசக்தியின் பாஸ பானத்தில் இருந்து தோன்றியவள். கணவன் மனைவி ஒற்றுமைக்கும், குடும்ப அமைதிக்கும் உரிய தெய்வமாக தேவி மஹாத்மியம் சொல்கிறது. ரக்ஷையில் இருக்கும் அஸ்வரூடா யந்திரம் கணவன் மனைவிக்கிடையே ஜென்ம பந்தம் எனப்படும் மன இணைப்பை அதிக படுத்துவதுடன், பகளாமுகி யந்திரம் கணவன் மனைவி ஒர்ருமையான திருமண பந்தத்திற்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது. ஔஷதம் எனப்படும் மருந்துகள் கொடுக்கப் பட்டிருந்தால் என்ன வகையான மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து அவற்றை செயல் இழக்க செய்யும் எதிருரை மருந்துகளை ஸ்ரீதேவி கார்த்யாயணி மந்திர பிரயோகத்தால் ஒன்பது வேளைகள் உரு ஏற்றி தேய் பிறை நாட்களில் உட்கொண்டால் செலுத்தப்பட்ட விஷம் உடல் கழிவுகள் வழியாக வெளியேரும். எதிர் மறை சக்திகளால் குடும்பதலைவனின் பொறுப்பின்மை அதிகரித்தாலோ, குடும்பத்தில் குழப்பங்களும் அமைதியின்மையும் நிலவினாலும் கார்த்யாயனி யந்திர பீடத்தை வீட்டில் வைத்து வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பூஜித்து வந்தால் அனைத்து வித ஸாகினி, டாகினி,மோகினி,பில்லி, சூனியம்,வைப்பு,ஏவல் முதலிய துஷ்ட சக்திகளின் பாதிப்புகளை தடுத்து நீக்கிவிடும்.

சனி, 24 செப்டம்பர், 2016

நம்ம மீனாட்சி தாய் வரலாறு

மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆலயம் மீனாட்சி , சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. மீனாட்சி அம்மன் திருக்கோவில் சுமார் ௮௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி ஆக இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலுனுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலினுள் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயககர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக் கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் போன்ற கலையழகு மிக்க மண்டபங்கள் இருக்கின்றன. கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் இங்கு அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் மிகச் சிறப்பு பெற்ற ஒன்றாகும். இம்மண்டபத்தில் 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது. (இந்த புது மண்டபம் முழுவதும் சிறு வணிகக்கடைகளாக அமைக்கப்பட்டு உள்ளது.) மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம். மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதீகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும். 'மீனாட்சி சுந்தரேஸ்வரர்' ஆலயத்தில் மீனாட்சி , சுந்தரேஸ்வரர் விகிரக வடிவிலும் பூரிக்கப்படுகின்றன. மதுரை மீனாட்சியில் அமைந்துள்ள முதன்மை விக்கிரகம் முழுவதுமாக தூய மரகத மாணிக்கத்தினால் உருவாக்கப்பட்டதாகும். மரகத்தின் இயற்கை வர்ணமான பச்சை நிறத்தில் காட்சி தரும் மூல விக்கிரகத்தினை "மரகதவல்லி" எனவும் அழைக்கின்றனர். மதுரை மீனாட்சி கோவில் 45 ஏக்கர் (180,000 சதுர மீட்டர்கள்) நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.ஆலயத்தின் மொத்த தள அமைப்பு 254 மீட்டர் நீளமும் 237 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. இந்த ஆலயம் 8 கோபுரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 8 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இரட்டை கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரர்க்கும் அர்பணிக்கப்பட்டுள்ளது. ஒன்பது தட்டுக்களை (அடுக்கு) கொண்ட கோபுரங்களுள் பிரசித்தமானதும் மிக உயரமானதுமாக தெற்கு வாசல் 170 அடி (52 மீற்றர்) உயரமுடையது.மற்றய வடக்கு, மேற்கு, கிழக்கு கோபுரங்கள் முறையே 160, 163, 161 அடி உயரம் என்பதும் குறிப்பிடதக்கது. மீனாட்சி ஆலயம் பல உள்ளக மண்டபங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் ஆயிரம் கால் (1000 தூண்கள்) மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது. 600 வருடங்களின் மேலான கட்டுமானத்தில் உருவாகியதும் , மிகவும் கலை அம்சம் மிக்கதுமான இந்த ஆலயத்தில் மொத்தமாக 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. ஆலய உட்பகுதியில் ஒரு ஏக்கர் விஸ்தீரனத்தில் அமைந்துள்ள பொற்தாமரை குளமும் , தலவிருட்ஷமான கடம்ப மரமும் ஆலயத்தின் வரலாற்றில் மேலும் சிறப்பு சேர்க்கின்றன. பலநூற்றாண்டு பழமையான கட்டிடவேலைப்பாடுகளை கொண்டுள்ள இந்த ஆலயம் நவீன பல் வர்ண பூர்ச்சுக்களால் தற்காலத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ளது. வரலாற்று தொன்மையும் பிரமிக்கவைக்கும் கலை நுணுக்கமும் ஒன்றுசேர உள்ள இந்த ஆலயமனது உலக அதிசையங்களின் வரிசையில் போட்டி போட்டது நினைவிருக்கலாம்.

பரிகார கோவில்கள்

மனிதப்பிறவி என்பதே மிகப் பாவியானது என்கிறார்கள் யோகிகள். எனவேதான் இன்னும் ஒரு பிறப்பு என்பதே வேண்டாம். இறைவா உன்னிடத்தில் என்னை சேர்த்துக் கொள். மீண்டும் என்னை இப்பூவுலகில் பிறக்க வைத்து ஊன் உடலால் உழல விடாதே என்று வேண்டி தவமிருப்போர் பலர். மனிதனாகப் பிறந்து விட்டாலே இந்த உலகில் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது அவன் கட்டளை. இருப்பினும் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார சிவன் கோயில்கள் உள்ளன. அவை எந்தெந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன. அந்தக் கோயில்களுக்கு சென்று வழிபட்டால் நாம் எவ்வாறு துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பதைப் பார்ப்போம். நீண்ட காலமாக திருமணம் நடக்காமல் இருப்போர ், திருமணம் தட்டிப்போவோருக்கு - திருமணஞ்சேர ி, திருவீழிமிழலை. இந்த இரு தலங்களுமே திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருப்பது சிறப்பு. குழந்தைப்பேறு வேண்டுவோர் - திருவெண்காடு சென்று வழிபடலாம். இந்த தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் - திருநாகேஸ்வரம் (தஞ்சாவூர் மாவட்டம்), சங்கரன்கோயில் (திருநெல்வேலி மாவட்டம்). மூட்டு வலி போன்ற தீராத நோய்கள் நீங்க - வைத்தீஸ்வரன் கோயில் (நாகை மாவட்டம்), சூரியனார் கோயிலை ஒட்டியுள்ள திருமங்கலக்குடி (தஞ்சாவூர்). மனநோய் தீர திருமுருகன் பூண்டி சென்று வழிபட வேண்டும். இக்கோயில் கோவை மாவட்டத்தில் உள்ளது. குருவருள் பெற (குருஸ்தலம்) - ஆலங்குடி (திருவாரூர்), திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்). தீமைகள் யாவும் தொலைய பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் சென்று வழிபட வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் இக்கோயில் உள்ளது. பிறவியற்ற நிலையை அடைய திருவாரூர ், திருவண்ணாமல ை, சிதம்பரம் (கடலூர்) சிவன் கோயில்களை வழிபடல் வேண்டும். கடன் தொல்லை தீர்ந்து நிம்மதி பெற திருச்சேறை ரண ருண ஈஸ்வரரை (தஞ்சாவூர்) வழிபட வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு திருக்கருகாவூர் கர்ப்பரட்சகாம்பிகை (தஞ்சை) மற்றும் குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரரை (திருச்சி) வணங்குதல் வேண்டும். பித்ரு தோஷம் எனப்படும் முன்னோர்களை வழிபடத் தவறியவர்களுக்கு ஏற்படும் தீவினைகளுக்கு ராமேஸ்வரத்தில் (ராமநாதபுரம்) உள்ள ராமநாத சுவாமியை வழிபடலாம். செவ்வாய் தோஷம் நீங்க வைத்தீஸ்வரன் கோயில் (நாகப்பட்டினம்). விஷக்கடி நிவாரணத்திற்கு சங்கரன் கோயில் (திருநெல்வேலி) சங்கரநயினாரை வழிபட வேண்டும். சிவகங்கையில் உள்ள நயினார் கோயில் சென்றும் வழிபடலாம். வழக்குகளில் வெற்றியடைய அய்யாவாடி பிரத்யங்கிர ா, திருப்புவனம் (தஞ்சாவூர்) கடவுள் வழிபாடு. சனி தோஷம் நீங்கி சுபிட்சம் பெற திருநள்ளாறு (காரைக்கால்), திருக்கொள்ளிக்காடு (தஞ்சாவூர்) சென்று வணங்கலாம். ராகு கேது பரிகாரத்தை இணைந்து மேற்கொள்ள திருப்பாம்புரம் (திருவாரூர்) கோயில்

பிறந்த கிழமையின் பலன்கள்

பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறப்பெடுக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவான அவர்களுடைய செயல்பாடுகளின் பலாபலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. எண்கணித அடிப்படையில் கிழமைகள், குறிப்பிட்ட கிழமையில் பிறந்த அன்பர்களது குணநலன்கள், அவர்களுக்கான பலாபலன்கள், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பரிகார வழிபாடுகள் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. அதுபற்றி நாமும் அறிவோம்.  ஞாயிற்றுக்கிழமை கடின வேலைகளையும் மிக எளிதாகவும் திறமையாகவும் முடித்து சாதனை படைப்பார்கள். சொன்னதைச் செய்வார்கள். இயலாது எனில் மௌனம் சாதிப்பார்கள். உற்றார்- உறவினருக்கு உதவும் குணம் கொண்டவர். இவரது தலைமையின் கீழ் பலபேர் பணிபுரிவார்கள். நல்லன அருளும் தேதிகள்: ஞாயிற்றுக்கிழமையுடன் 1, 10, 19, 28 ஆகிய தேதிகள் இணைந்திருக்க பிறந்தவர்களுக்கு எதிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை இந்தத் தேதிகளில் துவங்கலாம். ஏற்றம் தரும் வயது காலங்கள்: 19, 28, 37, 45, 55, 64, 73 வளம் தரும் கிழமை: வெள்ளி வழிபாடு: ஞாயிறன்று சூரிய உதயத்துக்குமுன் எழுந்து காலைக்கடன்களை முடித்து, ஆதித்ய ஹ்ருதயத்தை பாராயணம் செய்வதால், நல்ல பலன்களைப் பெறலாம்; ஆயுள் விருத்தி உண்டாகும். தந்தையிடமும், பெரியோரிடமும், ஆன்றோரிடமும் ஆசிபெற வேண்டும். தெய்வ வழிபாடுகளில் கோதுமை பண்டத்தால் நைவேத்தியம் செய்தல் நலம்.  திங்கள்கிழமை சாந்தமான மனம் படைத்தவர். இனிமை, அன்பு, உதவும் உள்ளம் உள்ளவர். எதிரிகளையும் நண்பர்களாக பாவிப்பர். தர்ம- நியாயங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதி உள்ளவர். இவர்களுக்குச் சொந்தத் தொழில் கைகொடுக்கும். குளிர்ச்சியான தேகம் உடையவர். நல்லன அருளும் தேதிகள்: இவர்கள் 2, 7, 11, 16, 20, 25, 29 ஆகிய தேதிகளில் புதிய தொழில் தொடங்குதல், பொருள்களை வாங்கி சேகரித்தல், சுப நிகழ்ச்சிகள் செய்வது சிறப்பு. ஏற்றம் தரும் வயது காலங்கள்: 20, 29, 38, 47, 56, 65, 74 இந்த வயதுகள் நடக்கும்போது திருப்திகரமான திருப்பங்கள் உண்டாகும். வளம் தரும் கிழமை: திங்கள்கிழமையே! பரிகார வழிபாடு: திங்கள்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து காலைக்கடன் முடித்து நீராடி, தாயை வணங்கி ஆசிபெறுவதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அத்துடன், சக்தி தலங்களுக்குச் சென்று வெள்ளை நிறப் பூக்களால் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் விசேஷம். கற்கண்டு கலந்த நைவேத்தியங்களைப் படைத்து வழிபடலாம்.  செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் பலரிடமும் பலவிதமான யோசனைகளைக் கேட்பார்கள். ஆனாலும் தான் வைத்ததே சட்டம்; தான் நினைப்பதே சரி எனும் மனப்போக்குடன் திகழ்வார்கள். நல்லவர்களுக்கு நல்லவர்; கெட்டவர்களுக்கு கெட்டவராகத் திகழ்வார். அதனாலேயே பலருக்கும் இவரைப் பிடிக்காது. ஆனால், அதைப் பற்றி இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். நியாய- தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். நல்லன அருளும் தேதிகள்: 9, 18, 27 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளை கையிலெடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும். ஏற்றம் தரும் வயது காலங்கள்: 18, 27, 36, 45, 54, 63, 72 ஆகிய வயதுகளில் நல்ல திருப்பங்கள் உண்டாகும். வளம் தரும் கிழமை: வியாழன் பரிகார வழிபாடு: செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை எழுந்து நீராடி, அரளிப்பூவால் முருகப்பெருமானை அர்ச்சித்து வழிபட்டால், வாழ்க்கை வளம்பெறும். அன்றைய மாலைப்பொழுதில் ஸ்ரீபைரவரை வழிபடுதல் விசேஷம். துவரம் பருப்பால் செய்த நைவேத்தியத்தை சமர்ப்பிப்பது சிறப்பு.  புதன்கிழமை இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் நல்ல அறிவாளிகளாகத் திகழ்வார்கள். இயந்திரம், வைத்தியம், ஜோதிடம், துப்பறியும் கலை, ஓவியம் ஆகியவற்றில் திறமைசாலிகளாக விளங்குவர். ரகசியம் காப்பதில் வல்லவர். மற்றவர்களின் மனதில் உள்ளதைத் துல்லியமாக அறிந்து அதற்கேற்ப செயல்படுவார்கள். பலதுறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள். மருத்துவர், நீதிபதி, பொறியாளர், எழுத்தாளர் என்று உயர்ந்த நிலையில் வாழ்வார்கள். நல்லன அருளும் தேதிகள்: 5, 14, 23 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளைத் துவங்கினால் வெற்றி கிடைக்கும். ஏற்றமிகு வயது காலங்கள்: 23, 32, 41, 50, 59, 68 ஆகிய வயதுகளில் நல்ல முன்னேற்றம் உண்டு. வளம் தரும் கிழமை: வியாழன் பரிகார வழிபாடு: புதன்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி துளசி மற்றும் மருக்கொழுந்தால் ஸ்ரீமகாவிஷ்ணுவை வழிபடலாம். மேலும் விஷ்ணு சகஸ்ரநாமம், கிருஷ்ணாஷ்டகம் பாராயணம் செய்வதும் சிறப்பு. பாசிப்பயறு சுண்டல் செய்து நைவேத்தியம் செய்தல் நலம்.  வியாழக்கிழமை வியாழனன்று பிறந்தவர்கள் நீதி-தர்மத் துக்கு பக்கபலமாக விளங்குவர். குறுக்கு வழியில் செல்பவரையும் திருத்தி நல்வழிப் படுத்துவதற்கு பாடுபடுவர். உற்றார்- உறவுகளுக்கு உதவிபுரிவர். எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முன்னேற்றம் அடைவர். நல்லன அருளும் தேதிகள்: 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளைத் துவங்க ஏற்றம் உண்டாகும். ஏற்றம் தரும் வயது காலங்கள்: 21, 30, 48, 57, 66, 75, 84 ஆகிய வயதுகளில் வாழ்க்கையில் முன்னேற்றம் (வீடு, மனை, வண்டி, வாகனம்) வசதி ஏற்படும். வளம் தரும் கிழமை: வெள்ளி பரிகார வழிபாடு: வியாழக்கிழமைகளில் சூரிய உதயத்திற்கு முன் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகத்தைப் பாராயணம் செய்து வழிபடுவது சிறப்பு. தேவகுரு பிரகஸ்பதியை வழிபடுவதால் வளம் பெருகும். மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். கொண்டைக் கடலை சுண்டல் செய்து நைவேத்தியம் செய்தல் நலம். கருட தரிசனம் செய்வது மிக நன்று.  வெள்ளிக்கிழமை இந்தக் கிழமையில் பிறந்தவர்கள், பிறக்கும்போதே ‘சமர்த்துப் பிள்ளை’ என்று பெயரெடுப்பார்கள். பேச்சாலேயே மற்றவர் களை தன் வயப்படுத்துவார். தமது பேச்சை கேட்காதவர்களை புறக்கணித்து விடுவார்கள். எந்த வேலையையும் சிரமம் இல்லாமல் மற்றவர்களின் துணையுடன் பூர்த்தி செய்வார் கள். கணவன் அல்லது மனைவியின் அளவற்ற அன்பிலும் பாசத்திலும் மூழ்கித் திளைப்பர். நல்லன அருளும் தேதிகள்: 4, 8, 13, 17, 26, 31 ஆகிய தேதிகள் நலம் பயக்கும். ஏற்றம் தரும் வயது காலங்கள்: 22, 26, 31, 35, 44, 53, 62, 66, 71 வயதுகளில் குடும்பம் பல நன்மைகளைச் சந்திக்கும். வளம் தரும் கிழமை: திங்கள். பரிகார வழிபாடு: வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி மல்லிகைப் பூக்களால் ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம், ஸ்ரீலலிதா திரிசதி ஆகியவற்றை பாராயணம் செய்வது சிறப்பு. பால், பழம், கற்கண்டு, தேன் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபடுவது விசேஷம்.  சனிக்கிழமை இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் பொறுமைசாலிகள். வேலை என்று வந்துவிட்டால் அதை முடித்துவிட்டே மற்ற வேலைகளைத் துவங்குவர். சான்றோரிடமும் ஆன்றோரிடமும் மிகுந்த பக்தி உள்ளவர். எப்போதும் தான் உண்டு தன்வேலை உண்டு என நினைப்பவர் நல்லன அருளும் தேதிகள்: 8, 17, 26 ஆகிய தேதிகளில் சிறப்பான நன்மைகள் பல பெற்றிடுவீர். ஏற்றம் தரும் வயது காலங்கள்: 22, 26, 31, 35, 41, 50, 53, 58, 62, 67 ஆகிய வயதுகளில் வாழ்வில் இன்பம் சேரும். வளம் தரும் கிழமை: வியாழன் பரிகார வழிபாடு: சனிக்கிழமை காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து, நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து, நீலாம்பரம், நீல சங்குபூ, வில்வம் சாற்றி சிவனாரை வழிபடுவது சிறப்பு. சிவாலயங்களில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் தோஷங்கள் நீங்கும். வீட்டில் பூஜைக்கு பிறகு காகத்துக்கு எள் கலந்த நெய்சாதம் இடவேண்டும். கருட தரிசனமும் நலம்பயக்கும்.

புதன், 21 செப்டம்பர், 2016

ஆன்லைன் ஜோதிடம்

ஸ்ரீ சிவசக்தி ஜோதிடம். இப்பொழுது புதிதாக  ஆன்லைன் ஜோதிடம் துவக்கி உள்ளது.  ஜோதிடம். ஜாதகம். எண்கணிதம். வாஸ்து. மிக சிறந்த முறையில் பார்க்கப்படும்.  ஒரு ஜாதகம் பார்க்க கட்டணம் ரூபாய் 500   எனது வாங்கி கணக்கில் செலுத்தி விட்டு தகவல் தரவும். வாட்சப் மூலம். உங்களுக்கு ஜாதகம் பார்க்கப்படும். உங்கள் ஜாதகம் 50.பக்கம் கொண்டது உங்களுக்கு அனுப்ப படும் மற்றும் உங்களின் ஜாதகத்தில் உள்ள பிரச்சனைக்கு தீர்வாக MS ஆஃபீஸ்  பைல் மூலம் அனுப்பப்படும் மேலும்  தொலை பேசி மூலமும் உங்களுடன் பேசுவேன்    செல் நெம்பர் 9380531339 WHATSAPP நெம்பர் 8124812470  எனது வலைத்தளம்   www.sssjna.blogspot.com    எனது வாங்கி விவரம் பெயர் V.VENKATESAN STATE BANK OF INDIA  AC/NO.34790428329  IFS. CODE.SBIN0001603 CHENNAI TIRUVOTTIYUR  இவை கட்டண சேவைக்கு மட்டும்  எனது செல் நெம்பர் 9380531339  WHATSAPP NO 8124812470 EMAIL.ID sssjn2412@gmail.com முகவரி ஸ்ரீ சிவசக்தி ஜோதிடம்  நெம்பர்  7.ராஜிவ் காந்தி நகர் காமராஜர் சாலை  அண்ணா மலை நகர் முதல் தெரு SBI. ATM  அருகில் திருவொற்றியூர் சென்னை 600 019

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

ரத்தின மோதிரங்கள் கிடைக்கும்

ரத்தினங்கள் வாங்கும் போது ரத்தினத்தை நன்கு தெரிந்தவரிடம் (Gem Expert) வாங்க வேண்டும். ஜெம்ஸ், ராசியான கல் தேர்வு செய்ய செல்  9380531339 வாட்சாப் 8124812470 தொடர்பு கொள்ளவும். ஜாதகம், எண் ராசி, பெயர் ராசி, பார்த்து தோஷ பரிகார பலனை கூறி வாழ்க்கைக்கு முன்னேற்றம் தரக்கூடிய ரத்தினம் அணிந்தால் வாழ்க்கையில் சிறப்புடன் வாழலாம். நீங்கள் வாங்கும் எந்த ராசிகற்களாக இருந்தாலும் அது முறையாக சுத்தி செய்தும், சக்தியினை முறைபடுத்தி பூஜை செய்யப்பட்டதாகவும் உள்ளதா? என கேட்டு வாங்கவும். ஸ்ரசிவசக்தி ஜோதிட மையம் மூலம் கிடைக்கும் இரத்தின கற்கள் 100% உயிரோட்டம் மிகுந்த கற்களாகவும், முறையே சுத்தி செய்து, பிரத்தியேகமாக உங்களுக்காகவே மிக சிறப்பாக பூஜை செய்து  தருகிறோம் தங்கம் வெள்ளி ரத்தின மோதிரங்கள் எங்களிடம் கிடைக்கும். ஜோதிட ரீதியாக நீங்கள் என்ன ரத்தினம் அணியலாம் என்று நீங்கள் ஆலோசனை பெறலாம் செல் 9380531339 வாட்சாப் 8124812470  சென்னை திருவொற்றியூர்

பணம் வர தாந்ரீக பரிகாரம்

வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும். வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும் வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும். நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும். அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும். வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. பணம் ஓடிவிடும். பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும். வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும். அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும். யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசை தான். பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும். முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்து பின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்கு அளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடை நீங்கும். வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும். பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும். பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும். பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும். தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும். குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும். +++++++++++++++++++++++++++++ ஆடுகளை உணவாக கொள்ளாதவர்களுக்கு மட்டுமே கீழ்க்கண்டவை பயன் கொடுத்துள்ளது . தொடர்ந்த துர் அதிர்ஷ்டம், எல்லா விஷயங்களிலும் தோல்வி மற்றும் முடியும் என்று கடைசி வரை சென்று முடியாமல் போகும் காரியங்கள், ராகு திசை மற்றும் புத்தி ஜாதகத்தில் இருப்பின், அஷ்டமத்தில் ராகு, காலை எழும் பொழுது சோம்பல், இரவு அதிக நேரம் தூங்காமல் இருப்பவர்கள், துர் சகவாசம் உள்ளோர், குடியின் வசம் சிக்கி தவிப்போர் போன்ற அனைத்திற்கும் ஆடுகள் கொட்டகையில் அமர்ந்து தினமும் சிறிது நேரம் அவைகளை கண்டு வந்தாலோ அல்லது அவைகளின் படத்தை வைத்து தினசரி 15 நிமிடங்கள் பார்த்து வந்தாலோ மேற்கண்ட பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து முடிவில் மாற்றம் நிகழும். மேஷம் மற்றும் ரிஷப ராசியினர் பார்த்து வந்தாலும் பயன் தரும்.மேலும் குழந்தை பேறு தாமதமாவோரும் பார்த்து வர பலன் உண்டு. படிப்பில் நாட்டமில்லாத குழந்தைகள் மற்றும் வியாபாரத்தில் தொடர் நஷ்டம் கண்டு வருவோர் புதன் கிழமை அன்று மதியம் 1-2 க்குள் ஆடுகளுக்கு பச்சை கீரைகள் தொடர்ந்து வாங்கி கொடுத்து வர கல்வி அறிவு மேம்படும்-வியாபாரம் செழிக்கும். குறிப்பாக ஜோதிடர்கள் இதை செய்து வரலாம்.வாக்கு வன்மை கூடும். ஜாதகத்தில் புதன் நீச்சமாக இருப்போரும் வாழ் நாள் பரிகாரமாக இதை செய்து வர நல்லவை நடக்கும். தொடர் பிரச்சனைகள், தரித்திர நிலை நீங்க எளிய பரிகாரம் தொடர்ந்து 12 வியாழன் அன்று மதியம் 1-2 மணிக்குள் அரச மர நிழலில் 30 நிமிடங்கள் இருந்து பின்பு தானாக விழுந்த 3 இலைகளை எடுத்து, வீடு வந்ததும் அதை மஞ்சள் நீரில் அலம்பி பின்பு சிறு அரச மர குச்சியால் மஞ்சள் கொண்டு 'ஸ்ரீம்' மந்திரம் எழுதி அது மூன்றையும் இரவு 8-9 மணியளவில் மஹாலக்ஷ்மி கோவிலில் மறைவான இடத்தில் வைத்து வந்து விடவும். இதனால் நீண்ட கால பிரச்சனைகள், தரித்திர நிலை,பண பிரச்சனைகள்,தொடர் தோல்விகள் அனைத்தும் நீங்கி அனைத்து நன்மைகளும் தேடி வரும். +++++++±+++++++++++++++++++++++++++++++++++++ உடனடி பண முன்னேற்றத்திற்கு அமானுஷ்ய பரிகாரம் தொடர்ந்து ஆறு புதன்கிழமைகள் ஓடும் நீர் அல்லது கடல், ஏரி போன்றவற்றில் சிறிய குவளை (jug) (செம்பு அல்லது ஸ்டீல்) ஓன்றை விட்டு வர, நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் காணலாம். மிகுந்த பலன் தரும் பரிகாரம் இது. எந்த நபர் செய்ய ஆரம்பிக்கிறாரோ அவரே தொடர்ந்து செய்ய வேண்டும். மதியம் 1-2 இதை செய்ய உகந்த நேரம். முடியாதவர்கள் வேறு நேரத்தில் செய்யலாம்-மாலை ஆறு மணிக்குள். திடீர் பண வரவிற்கு எளிய தாந்த்ரீக பரிகாரம் தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் காலை ஆறு முதல் ஏழு மணிக்குள் அல்லது மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிக்குள் அதுவும் இயலாதோர் இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் கீழ்காணும் பரிகார முறையைசெய்து வர திடீர் பண வரவு உண்டாகும்-செல்வ நிலை உயரும். இருபது மொச்சை கொட்டைகளை சிறிது சக்கரை சேர்த்து வேக வைக்கவும்.குழைந்து விடக்கூடாது. முழு மொச்சைகளாக தெரிய வேண்டும். அவற்றை ஒரு வெள்ளை துணி அல்லது கைகுட்டையில் இட்டு முடிச்சு அவிழுமாறு லேசாக கட்டிக்கொள்ளவும் பின்பு கீழ்க்கண்ட மந்திரத்தை ஆறு முறை கூறி முடித்து அதை ஓடும் நீர்நிலைகளில் விட்டு விடவும். கைமேல் பலன் தரும் சிறந்த தாந்த்ரீக பரிகாரம் இது. மந்திரம் : ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸகல சௌபாக்யம் தேஹி தேஹி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ : வியாபாரத்தில் / தொழிலில் லாபம் அதிகரிக்க இதை செவ்வாய் கிழமை அன்று தொடங்கி தொடர்ந்து செவ்வாய்கிழமைகளில் செய்து வரலாம். எவ்வளவு வாரங்கள் தொடர்கிறோமோ அவ்வளவு நன்மை வந்து சேரும். செவ்வாய் அன்று அதிகாலை ஆறு மணியளவில் குளித்து ஆஞ்சநேயர் படம்/விக்கிரகம் முன்பு சுந்தர காண்டம் புத்தகம் வைத்து அதற்கு சந்தனம் மஞ்சள் மற்றும் குங்குமம் இட்டு தூப தீபம் காட்டி வழிபட்டு பின்பு 'ஓம் ஹம் அனுமதயே நமஹ்" மந்திரத்தை 108 முறை கூறி பின்பு நிவேதனம் செய்யவும். இந்நாளில் பால் பழம் மட்டும் உண்டு விரதம் அனுஷ்டிப்பது நன்மை சேர்க்கும். மாலையில் ஆறு மணியளவில் செம்பினால் ஆன சொம்பு ஒன்றில் சுத்தமான நீர் நிரப்பி அதில் பச்சை கற்பூரம், ஏலக்காய் மற்றும் ஒரு ரூபாய் நாணயம் இட்டு அதன் மேல் ஒரு தேங்காயை வைக்கவும்.சொம்பை சிகப்பு துணியினால் அலங்கரித்து அதன் மேல் பூக்கள் வைக்கவும். பின்பு கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 கூறி அனுமனை வழிபட்டு நிவேதனம் செய்து பூஜையை முடித்து விடலாம். மறு நாள் சொம்பில் உள்ள நீரை யாரும் கால் படாதவாறு ஏதேனும் மரத்தில் விட்டு விடலாம். மிகுந்த சக்தி வாய்ந்த இந்த பூஜை முறை உடனடியாக தொழில்/வியாபாரம்/வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வை பெற்று தரும். செய்து பயன் அடையுங்கள். மந்திரம் : ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாயை மஹாபலாயை சுவாஹா || பௌர்ணமியில் செய்ய வேண்டியவை இந்நாளில் இல்லற சேர்க்கை, அசைவ உணவு கண்டிப்பாக தவிர்த்தல் நலம். மேலும் அன்னதானம் செய்ய மிக உகந்த தினம். தயிர் தேய்து குளித்தாலும் நலம் தரும். அண்ணாமலையாரை வணங்கி சிவ ஸ்தோத்திரம் கூறி வர மனம் மகிழ்ச்சியுறும். வளர்பிறை சதுர்தசியில் செய்ய வேண்டியவை இந்நாளில் அசைவ உணவு அறவே தவிர்த்தல் வேண்டும்-மேலும் சண்டை சச்சரவுகள், வீண் வாக்குவாதங்களை தவிர்த்தல் நல்லது.108 மணிகள் கொண்ட ருத்திராக்ஷ மாலையை அணிந்தவாறு ருத்ர ஜபம் செய்தல் அல்லது 'ருத்ரம் சமகம்' கேட்டு வருதல்-சிவ சன்னதியில் உழவார பணி செய்தல் நலம் வளர்பிறை த்ரியோதசியில் செய்ய வேண்டியவை பிரதோஷ வழிபாட்டிற்கு பூஜை சாமான்கள் வாங்கி கொடுப்பது, பிரதோஷ வேலை முழுதும் கர்ப்ப கிரகம் அருகில் அமர்ந்த படி சிவ தியானம் செய்து வருவது பாவங்களை போக்கும். சண்டை சச்சரவுகளில் இருந்து இந்நாளில் ஒதுங்கி இருப்பது நலம் தரும். வளர்பிறை துவாதசியில் செய்ய வேண்டியவை காலையில் குளித்தததும் மூன்று முறை விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் அல்லது ஒலிப்பேழையில் கேட்டு வருதல் நலம் தரும். மாலையில் விஷ்ணு (பெருமாள்) கோவில் சென்று கர்ப கிரக விளக்கிற்கு நெய் கொடுத்தல் மற்றும் அலங்காரத்திற்கு பூ கொடுத்து வர நன்மை பன்மடங்காகும். இந்நாளில் பண செலவு விஷயங்களில் எச்சரிக்கை தேவை. --------++++++++++++----------- திடீர் பண வரவிற்கு எளிய தாந்த்ரீக பரிகாரம் தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் காலை ஆறு முதல் ஏழு மணிக்குள் அல்லது மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிக்குள் அதுவும் இயலாதோர் இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் கீழ்காணும் பரிகார முறையைசெய்து வர திடீர் பண வரவு உண்டாகும்-செல்வ நிலை உயரும். இருபது மொச்சை கொட்டைகளை சிறிது சக்கரை சேர்த்து வேக வைக்கவும்.குழைந்து விடக்கூடாது. முழு மொச்சைகளாக தெரிய வேண்டும். அவற்றை ஒரு வெள்ளை துணி அல்லது கைகுட்டையில் இட்டு முடிச்சு அவிழுமாறு லேசாக கட்டிக்கொள்ளவும் பின்பு கீழ்க்கண்ட மந்திரத்தை ஆறு முறை கூறி முடித்து அதை ஓடும் நீர்நிலைகளில் விட்டு விடவும். கைமேல் பலன் தரும் சிறந்த தாந்த்ரீக பரிகாரம் இது. மந்திரம் : ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸகல சௌபாக்யம் தேஹி தேஹி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ : வாழை மரத்தின் ரகசிய மாந்திரீக முறைகள் 1. தரித்திர பிணிகள் விலக அமாவாசை திதி அல்லது தேய்பிறை அஷ்டமி திதிகளில் மூன்று வாழை பூக்களை எடுத்து சூரியன் மறையும் வேளையில் இரண்டு மணிக்கு மேற்பட்டு கடலில் குளித்து விட்டு, தம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படும்படி தடவிவிட்டு, தாம் அணிந்திருக்கும் சட்டை அல்லது பனியன், பெண்ணாக இருப்பின் ஜாக்கெட், புடவை போன்ற துணியில் மூன்று பூக்களையும் கட்டி கடலில் வீசிவட வேண்டும். இப்படி செய்தால் நம்மை பிடித்த தரித்திர பிணிகள் விலகிவிடும். 2. திருமணம் தடை விலக திருமணம் தடைப்பட்ட பெண்கள் வாழைப்பூ இதழில் மூன்று குண்டு மஞ்சளை வைத்து முடித்து, வாழை நாரினால் கட்டி முடியிட்டு, வாழை மரத்தின் இலை, குலை தள்ளும் இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். இது போன்று மூன்று சஷ்டி திதி அன்று செய்துவர, விரைவில் திருமணம் நடைபெறும், அதைப்போல் ஆண்கள், குண்டுமஞ்சளுக்கு பதில் கொட்டைப்பாக்கு வைத்து கட்ட வேண்டும். 3. சர்வ தரித்திரங்கள் விலக ஞாயிற்றுக்கிழமைகளில் பிரம்ம முகுர்த்த வேலையில் வாழை மரத்தின் வேர் பகுதியில் இருந்து (1/2 ) அறை அடிக்கு மேலே ஒரு மூங்கில் குச்சியில் குத்தினால் வாழை நீர் ( கங்கை நீர்) வழியும் அந்த நீரை மண் பாத்திரத்தில் பிடித்து கடல் நீருடன் கலந்து வீடுகளில், தொழில்கூடங்களில், நம்மீதும் தெளித்துக் கொண்டு வந்தால் சர்வ தரித்திரங்களும் விலகும். ( வாழை மரத்தை வெட்டினலோ அல்லது குத்தினாலோ அதிலிருந்து வடியும் நீர் கங்கை நதி நீருக்கு சமமானது, கைலாய கங்கை நீரில் மிதந்து கொண்டு தான் விஸ்வகர்மாவை நோக்கி தவம் புரிந்ததே இதற்கு காரணம்.) 4. குழந்தை பாக்கியம் பெற குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கடவுளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வித்து, வாழைமரக்கன்றை தானமாகக் கொடுக்கலாம். பின்பு கோயிலுக்கு வரும் பெண்களுக்கு வாழைப்பழங்களை தானமாகக் கொடுக்கலாம். ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில் இரட்டை வாழைப்பழத்தை கோவிலில் உள்ள ஏதாவது தெய்வத்திற்கு படைத்து, பின்பு வீட்டிற்கு எடுத்து வந்து அந்த பழத்தின் தோலில் உள்ள சதயை நகம் படாமல் சுரண்டி எடுத்து காய்ச்சிய பாலில் போட்டு சுத்தமான தேன் கலந்து கணவன், மனைவி இருவரும் பருகிய பின் ஒன்று சேர்ந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். 5. பித்ரு தோஷம் விலக 100 கிராம் கருப்பு எள்ளை வாங்கி அதை வெல்லத்துடன் கலந்து ஐந்து பாகங்களாக பிரிந்து, ஐந்து வெள்ளை துணியில் மூட்டை போல் கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஐந்து வாழைக்காய் எடுத்து, ஒவ்வொரு வாழைக்காயில் உள்ள காம்பில் ஒவ்வொரு எள் மூட்டையை மஞ்சள் நூலினால் கட்டி பித்ருக்களை வேண்டி அமாவாசை திதியில் கடலில் விட்டால் பித்ரு தோஷம் விலகும். 6. செல்லவம் மேலும் பெருக சம்பள பணத்தையோ அல்லது சுப காரியய்த்திற்கு பயன்படுத்தப்பட இருக்கும் பணத்தையோ, வாழைப்பூ இதழில் வைத்து, வீட்டின் பூஜை அறையில் பூஜை செய்து பின் பயன்படுத்தினால் வீண் விரையம் மற்றும் செலவுகள் வராது. அதேபோல் புதிய தங்க நகை அல்லது வெள்ளி பொருட்களை வாங்கி வந்து, அதையும் வாழைப்பூ இதழில் வைத்து பூஜித்து எடுத்து கொண்டால் செல்லவம் மேலும் பெருகும். 7. அன்ன தரித்திரம் விலக அட்சய சக்தி மிகுந்த இந்த வாழை மரத்திற்கு மற்றொரு மகத்தான பெருமையும் உண்டு. அட்சயதிதி அன்று புதிய தங்கம் வாங்க செய்து, மஞ்சள் கலர் துணியில் முடிந்து, கிழக்கு முகமாக நின்று, ஆபரண மூட்டையை வாழை மரத்தில் கட்டி தீபம் காட்டி, சாம்பிராணி புகையிட்டு, பூஜை முடிந்த பின்பு எடுத்து அணிந்து கொண்டால் ஆபரணங்கள் பெருகும். அதைப்போல் நெல்மணிக்களை கட்டி பூஜித்து அரிசி மூட்டையில் போட்டு வைத்தால் அன்ன தரித்திரம் விலகும். 8. வியாபார விருத்தி பெருக இதைப்போல் பெளர்ணமி நிலவு ஒளியில், சுக்கிர ஓரை வேளையில், வடக்கு பக்கமாக உள்ள வாழை மரத்தின் வேரை நகமும். இரும்பு கத்தியும் படாமல் எடுத்து கஸ்தூரி மஞ்சளில் சேர்த்து, சிகப்பு நூல் கட்டி கருப்பு வெற்றிலையில் மடித்து, தொழில் நடக்கும் இடத்தில், பணம் வைக்கும் பெட்டியில் வைத்து சாம்பிராணி புகையிட்டுவந்தால் வியாபார விருத்தி பெருகும். 9. வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெற வாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து முகுர்த்த நாளில் சுபவேலையில் அதன் வேர்ப் பகுதியில் சிறு குழி எடுத்து வலம் புரி சங்கை கிழக்கு முகமாக புதைத்துவிட வேண்டும். பின்பு வாழை மரத்தின் வேர்பகுதியில் சங்கு இருக்கும் இடத்தில் தினம் சிறிது பாலை ஊற்றி நாற்பத்தியைந்து (45) நாட்கள் வாழைமரத்திற்கு இஷ்ட தெய்வத்தை நினைத்து தூப தீபம் காட்டி பூஜித்து வரவேண்டும், பின்பு ஒரு முகுர்த்த நாளில் சுப வேலையில் சங்கை எடுத்து மூன்று வித அபிஷேகங்கள் செய்து தூப தீபம் காட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தோமானால். நாம் வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெறும், குடும்பம் சுபிக்ஷ்ம் பெருகும், பணம் வீன் விரையம் ஆகாது, தெய்வகுறைகள் விலகும், குல விருத்தி அடையும். 10. பிள்ளைவரம் பெற வாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து அந்த மரம் வாழை குலை தள்ளுவதற்க்காக முளைவிடும் வேலையில் ஒரு சுபனாளில் சுபவேலையில் வாழை மரத்தின் வடக்கு திசை உள்ள வேர்பகுதியில் சிறு குழி எடுத்து மூன்று அங்குளம் உள்ள ஒரு வலம்புரி சங்கை வடக்கு திசை நோக்கினார் போல் குழியினுல் வைத்து பசும்பல் ஊற்றி குழியை மூடிவிட வேண்டும்.

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

ஸ்படிகமணி பயன்கள் நன்மைகள்

அன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா ? கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூம்புகார் போன்ற விற்பனை நிலையங்களிலும் ஸ்படிகமணி மாலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகின்றது ? அதை மாலையாக்கி அணிந்து கொள்வதால் என்ன பயன் ? அதனை ஏன் அணிய வேண்டும் ? பார்க்கலாம். படிகாரம் என்பதும் ஸ்படிகம் என்பதும் வேறு வேறு. சிறு சிறு காயங்கள் படும் இடத்தில் படிகாரத்தை நீரில் தொட்டு லேசாக தடவினால் காயமான இடம் செப்டிக் ஆகாமல் தடுக்கப்படும். இதனை பெரும்பாலும் சலூன்களில் பயன்படுத்துவதை பார்க்கலாம். சில இடங்களில் படிகாரத்தை திருஷ்டிக்காக கருப்பு கயிற்றில் கட்டி வாசலில் தொங்க விட்டிருப்பார்கள். மேலும் சில சித்த வைத்திய தேவைகளுக்கும் படிகாரம் பயன்படுத்தப்படுகிறது . ஆனால் ஸ்படிகம் முற்றிலுமாக மாறுபட்டது. பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் உறைந்து போகும் நீர் பாறைகளாக உருப்பெற்று விடும். அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதில் உள்ளே அழுக்கில்லாத, தூசிகள் இல்லாத, கம்பிகள் இல்லாத, உடைசல்கள் இல்லாத, தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் , உருண்டையாகவும் , பட்டைதீட்டியும் தயாரித்து அதில் துவாரமிட்டு மாலையாக்கி விற்பனை செய்யப்படுகிறது. இதுவே ஸ்படிக மாலை எனப்படுகிறது. இந்த பாறைகள் , பெரும் பெரும் மலையின் பாறைகள் போலில்லாமல் ஆறு பட்டை கொண்ட தூண்கள் போலவும் , ஏழு பட்டைகள் கொண்ட குச்சிகள் போலவும் பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. அதில் எல்லாம் தேர்ந்தெடுத்து கொஞ்சமும் பழுதில்லாத உள்ளே புகையோ , கருப்போ இல்லாத சுத்தமான ஸ்படிகங்களை மாலையாக்கி விற்பனை செய்கிறார்கள் . இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி , ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு. உயர்ந்த தான ஸ்படிகமணி மாலையை நீரில் போட்டால் தெரியாது , நீரோடு நீராக ஒன்றி இருக்கும் , தனியாக தெரியாது. முதல் தரம் , இரண்டாம் தரம் , மூன்றாம் தரம் என பத்தாம் தரம் வரை ஸ்படிக மாலைகள் கிடைக்கின்றன. முதல் தரமாலை 108 மணிகளைக் கொண்டது சுமாரான அளவு உள்ளது ரூ.1000 முதல் கிடைக்கிறது. அதில் உள்ள 108 மணிகளும் ஒரே மாதிரியான அளவிலும் , மிகவும் துல்லியமானதாகவும், நீர்த்துளிகளை கோர்த்தது போல் இருக்கும் , முதல்தர ஸ்படிகமணி மாலைதான் நல்லது. பூம்புகார் , காதி கிராப்ட் , மற்றும் சில கடைகள் நல்ல ஸ்படிகமணிகளுக்கு இடையில் மிக சாதாரணமான ஸ்படிகமணிகளை இணைத்து விற்கின்றார்கள். அது நல்லதல்ல. துல்லியமற்றதும் , ஊடுருவும் தன்மையற்றதும் , வெள்ளையாகவும் இருக்கும் ஸ்படிகமணி மாலைகள் எதற்கும் உபயோகமற்றதாகும். அப்படி என்னதான் இருக்கின்றது அந்த உயர்ந்த ஸ்படிகமணி மாலையில் ? மனிதர்காகிய நாம் ஒருநாளில் விடும் மூச்சு எண்ணிக்கை என்ன தெரியுமா? சராசரியாக 21,600 மூச்சாகும். நாம் சரியான விகிதத்தில் மூச்சு விடுவோமானால் ஒருநாளில் 21600 மூச்சு விடுவோம். ஆனால் இன்றைய பரபரப்பு உலகில் முப்பதாயிரம் வரை விடுவதாக சொல்கிறார்கள். (இதனால் ஆயுள் குறையும்). இந்த ஸ்படிக மணி ஒன்று, ஒரு மணி நேரத்திற்கு 21600 அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கின்றார்கள். அப்படியானால் நம் கழுத்தில் அணியும் 108 ஸ்படிகமணிகள் கொண்ட மாலை எவ்வளவு அதிர்வலைகளை நம்மைச் சுற்றிலும் பரவிடச் செய்யும் என்று எண்ணிப் பாருங்கள். ஒரு அரண்போல நம்மை பாதுகாக்கும் முழுமையான கவசமாக முதல்தர ஸ்படிகமணி மாலை விளங்குகிறது. அதனால் என்ன ? தெய்வ அருள் , மனஅமைதி, சாந்தம் , நல்ல சிந்தனை , பரோபகார செயல்கள், தெளிவான அறிவு , தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும் அதிசய கருவியாகும். மேலும் .. ஸ்படிகமணி மாலை அணிந்து கொண்டவர்களுக்கு , அவர்களிடம் சொல்லப்படும் , அவர்கள் கேள்விப்படும் , பார்க்கும் எந்த சோகமான செய்தியும் , காட்சியும் அவர்களுக்கு உள்ளே புகமுடியாது , அதனால் அவர்களை பாதிக்காது. இல்லாவிடில் ஒருவர் கேள்விப்படும் அல்லது அவரிடம் சொல்லப்படும் , அவர் பார்க்கும் எந்த சோகமான செய்தியும் அவரை பல நாட்களுக்கு மனவேதனை அடையச் செய்யும். (இது உபாசகர்களுக்கு பொருந்தும்.) இது ஒரிஜனலான முதல்தர ஸ்படிகமணி மாலைக்கு மட்டுமே பொருந்தும். ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து மாலை அணியக்கூடாது .(ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாது அதனை தனியாக அணிந்து கொள்ளலாம்) கீழே உள்ளது போல் அணிவது தவறு. கொஞ்சம் தரமற்ற ஸ்படிகமணி மாலையாக இருந்தாலும் அது செயல்படாது. கவனித்து பார்த்து வாங்குங்கள் , நிறைவான பலன் பெறுங்கள்.

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...