சனி, 24 செப்டம்பர், 2016

பிறந்த கிழமையின் பலன்கள்

பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறப்பெடுக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவான அவர்களுடைய செயல்பாடுகளின் பலாபலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. எண்கணித அடிப்படையில் கிழமைகள், குறிப்பிட்ட கிழமையில் பிறந்த அன்பர்களது குணநலன்கள், அவர்களுக்கான பலாபலன்கள், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பரிகார வழிபாடுகள் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. அதுபற்றி நாமும் அறிவோம்.  ஞாயிற்றுக்கிழமை கடின வேலைகளையும் மிக எளிதாகவும் திறமையாகவும் முடித்து சாதனை படைப்பார்கள். சொன்னதைச் செய்வார்கள். இயலாது எனில் மௌனம் சாதிப்பார்கள். உற்றார்- உறவினருக்கு உதவும் குணம் கொண்டவர். இவரது தலைமையின் கீழ் பலபேர் பணிபுரிவார்கள். நல்லன அருளும் தேதிகள்: ஞாயிற்றுக்கிழமையுடன் 1, 10, 19, 28 ஆகிய தேதிகள் இணைந்திருக்க பிறந்தவர்களுக்கு எதிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை இந்தத் தேதிகளில் துவங்கலாம். ஏற்றம் தரும் வயது காலங்கள்: 19, 28, 37, 45, 55, 64, 73 வளம் தரும் கிழமை: வெள்ளி வழிபாடு: ஞாயிறன்று சூரிய உதயத்துக்குமுன் எழுந்து காலைக்கடன்களை முடித்து, ஆதித்ய ஹ்ருதயத்தை பாராயணம் செய்வதால், நல்ல பலன்களைப் பெறலாம்; ஆயுள் விருத்தி உண்டாகும். தந்தையிடமும், பெரியோரிடமும், ஆன்றோரிடமும் ஆசிபெற வேண்டும். தெய்வ வழிபாடுகளில் கோதுமை பண்டத்தால் நைவேத்தியம் செய்தல் நலம்.  திங்கள்கிழமை சாந்தமான மனம் படைத்தவர். இனிமை, அன்பு, உதவும் உள்ளம் உள்ளவர். எதிரிகளையும் நண்பர்களாக பாவிப்பர். தர்ம- நியாயங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதி உள்ளவர். இவர்களுக்குச் சொந்தத் தொழில் கைகொடுக்கும். குளிர்ச்சியான தேகம் உடையவர். நல்லன அருளும் தேதிகள்: இவர்கள் 2, 7, 11, 16, 20, 25, 29 ஆகிய தேதிகளில் புதிய தொழில் தொடங்குதல், பொருள்களை வாங்கி சேகரித்தல், சுப நிகழ்ச்சிகள் செய்வது சிறப்பு. ஏற்றம் தரும் வயது காலங்கள்: 20, 29, 38, 47, 56, 65, 74 இந்த வயதுகள் நடக்கும்போது திருப்திகரமான திருப்பங்கள் உண்டாகும். வளம் தரும் கிழமை: திங்கள்கிழமையே! பரிகார வழிபாடு: திங்கள்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து காலைக்கடன் முடித்து நீராடி, தாயை வணங்கி ஆசிபெறுவதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அத்துடன், சக்தி தலங்களுக்குச் சென்று வெள்ளை நிறப் பூக்களால் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் விசேஷம். கற்கண்டு கலந்த நைவேத்தியங்களைப் படைத்து வழிபடலாம்.  செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் பலரிடமும் பலவிதமான யோசனைகளைக் கேட்பார்கள். ஆனாலும் தான் வைத்ததே சட்டம்; தான் நினைப்பதே சரி எனும் மனப்போக்குடன் திகழ்வார்கள். நல்லவர்களுக்கு நல்லவர்; கெட்டவர்களுக்கு கெட்டவராகத் திகழ்வார். அதனாலேயே பலருக்கும் இவரைப் பிடிக்காது. ஆனால், அதைப் பற்றி இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். நியாய- தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். நல்லன அருளும் தேதிகள்: 9, 18, 27 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளை கையிலெடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும். ஏற்றம் தரும் வயது காலங்கள்: 18, 27, 36, 45, 54, 63, 72 ஆகிய வயதுகளில் நல்ல திருப்பங்கள் உண்டாகும். வளம் தரும் கிழமை: வியாழன் பரிகார வழிபாடு: செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை எழுந்து நீராடி, அரளிப்பூவால் முருகப்பெருமானை அர்ச்சித்து வழிபட்டால், வாழ்க்கை வளம்பெறும். அன்றைய மாலைப்பொழுதில் ஸ்ரீபைரவரை வழிபடுதல் விசேஷம். துவரம் பருப்பால் செய்த நைவேத்தியத்தை சமர்ப்பிப்பது சிறப்பு.  புதன்கிழமை இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் நல்ல அறிவாளிகளாகத் திகழ்வார்கள். இயந்திரம், வைத்தியம், ஜோதிடம், துப்பறியும் கலை, ஓவியம் ஆகியவற்றில் திறமைசாலிகளாக விளங்குவர். ரகசியம் காப்பதில் வல்லவர். மற்றவர்களின் மனதில் உள்ளதைத் துல்லியமாக அறிந்து அதற்கேற்ப செயல்படுவார்கள். பலதுறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள். மருத்துவர், நீதிபதி, பொறியாளர், எழுத்தாளர் என்று உயர்ந்த நிலையில் வாழ்வார்கள். நல்லன அருளும் தேதிகள்: 5, 14, 23 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளைத் துவங்கினால் வெற்றி கிடைக்கும். ஏற்றமிகு வயது காலங்கள்: 23, 32, 41, 50, 59, 68 ஆகிய வயதுகளில் நல்ல முன்னேற்றம் உண்டு. வளம் தரும் கிழமை: வியாழன் பரிகார வழிபாடு: புதன்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி துளசி மற்றும் மருக்கொழுந்தால் ஸ்ரீமகாவிஷ்ணுவை வழிபடலாம். மேலும் விஷ்ணு சகஸ்ரநாமம், கிருஷ்ணாஷ்டகம் பாராயணம் செய்வதும் சிறப்பு. பாசிப்பயறு சுண்டல் செய்து நைவேத்தியம் செய்தல் நலம்.  வியாழக்கிழமை வியாழனன்று பிறந்தவர்கள் நீதி-தர்மத் துக்கு பக்கபலமாக விளங்குவர். குறுக்கு வழியில் செல்பவரையும் திருத்தி நல்வழிப் படுத்துவதற்கு பாடுபடுவர். உற்றார்- உறவுகளுக்கு உதவிபுரிவர். எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முன்னேற்றம் அடைவர். நல்லன அருளும் தேதிகள்: 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளைத் துவங்க ஏற்றம் உண்டாகும். ஏற்றம் தரும் வயது காலங்கள்: 21, 30, 48, 57, 66, 75, 84 ஆகிய வயதுகளில் வாழ்க்கையில் முன்னேற்றம் (வீடு, மனை, வண்டி, வாகனம்) வசதி ஏற்படும். வளம் தரும் கிழமை: வெள்ளி பரிகார வழிபாடு: வியாழக்கிழமைகளில் சூரிய உதயத்திற்கு முன் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகத்தைப் பாராயணம் செய்து வழிபடுவது சிறப்பு. தேவகுரு பிரகஸ்பதியை வழிபடுவதால் வளம் பெருகும். மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். கொண்டைக் கடலை சுண்டல் செய்து நைவேத்தியம் செய்தல் நலம். கருட தரிசனம் செய்வது மிக நன்று.  வெள்ளிக்கிழமை இந்தக் கிழமையில் பிறந்தவர்கள், பிறக்கும்போதே ‘சமர்த்துப் பிள்ளை’ என்று பெயரெடுப்பார்கள். பேச்சாலேயே மற்றவர் களை தன் வயப்படுத்துவார். தமது பேச்சை கேட்காதவர்களை புறக்கணித்து விடுவார்கள். எந்த வேலையையும் சிரமம் இல்லாமல் மற்றவர்களின் துணையுடன் பூர்த்தி செய்வார் கள். கணவன் அல்லது மனைவியின் அளவற்ற அன்பிலும் பாசத்திலும் மூழ்கித் திளைப்பர். நல்லன அருளும் தேதிகள்: 4, 8, 13, 17, 26, 31 ஆகிய தேதிகள் நலம் பயக்கும். ஏற்றம் தரும் வயது காலங்கள்: 22, 26, 31, 35, 44, 53, 62, 66, 71 வயதுகளில் குடும்பம் பல நன்மைகளைச் சந்திக்கும். வளம் தரும் கிழமை: திங்கள். பரிகார வழிபாடு: வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி மல்லிகைப் பூக்களால் ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம், ஸ்ரீலலிதா திரிசதி ஆகியவற்றை பாராயணம் செய்வது சிறப்பு. பால், பழம், கற்கண்டு, தேன் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபடுவது விசேஷம்.  சனிக்கிழமை இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் பொறுமைசாலிகள். வேலை என்று வந்துவிட்டால் அதை முடித்துவிட்டே மற்ற வேலைகளைத் துவங்குவர். சான்றோரிடமும் ஆன்றோரிடமும் மிகுந்த பக்தி உள்ளவர். எப்போதும் தான் உண்டு தன்வேலை உண்டு என நினைப்பவர் நல்லன அருளும் தேதிகள்: 8, 17, 26 ஆகிய தேதிகளில் சிறப்பான நன்மைகள் பல பெற்றிடுவீர். ஏற்றம் தரும் வயது காலங்கள்: 22, 26, 31, 35, 41, 50, 53, 58, 62, 67 ஆகிய வயதுகளில் வாழ்வில் இன்பம் சேரும். வளம் தரும் கிழமை: வியாழன் பரிகார வழிபாடு: சனிக்கிழமை காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து, நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து, நீலாம்பரம், நீல சங்குபூ, வில்வம் சாற்றி சிவனாரை வழிபடுவது சிறப்பு. சிவாலயங்களில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் தோஷங்கள் நீங்கும். வீட்டில் பூஜைக்கு பிறகு காகத்துக்கு எள் கலந்த நெய்சாதம் இடவேண்டும். கருட தரிசனமும் நலம்பயக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...