சிவலோகத்தில் சிவபெருமானுக்கு உறுதுணையாக இருந்து வந்த சிவகணங்களில் ஒருவர் வாகீசர்.ராவணன் இன்றைய மீரட்டில் பிராமண வம்சத்தில் பிறந்தவன்;மனிதர்கள் அனைவருக்கும் கதி மோட்சம் தரக்கூடியவர் சிவபெருமான் என்பதை உணர்ந்து,பல நூற்றாண்டுகளாக சிவவழிபாடு செய்து வந்தான்;அவனது காலத்தில் இலங்கை செல்வச் செழிப்பு மிக்கதாக இருந்தது;அதனால்,அங்கே சென்று,மன்னன் ஆனான்;தனது சிவபக்தியால் நவக்கிரகங்களையே தனது படிக்கட்டுக்களாக்கி,அந்த படிக்கட்டுக்களின் மீது ஏறி அரியணையில் அமர்ந்து ஆட்சி புரிவதை வழக்கமாக்கி வைத்திருந்தான் ஒருமுறை தனது புஷ்பக விமானத்தின் மூலமாக ஆகாய சஞ்சாரம் செய்து கொண்டிருந்தான்;அப்போது வழியில் சிவபெருமான் வசித்து வரும் திருக்கையிலாயம் எதிர்ப்பட்டது;புஷ்பகவிமானத்தி ல் வந்த ராவணனிடம்,திருக்கையிலாயத்தின் தலைமை பாதுகாப்பு காவலரான நந்திதேவர்,திருக்கையிலாயத்தை சுற்றிச் செல்லும்படி அறிவுறுத்தினார்;ராவணன் நந்திதேவரின் பேச்சை மதிக்காமல்,தனது அகங்காரத்தினால்,திருக்கையிலாய மலையையே தூக்கிட முயற்சித்தான்;இதை உணர்ந்த சிவபெருமான் தனது கால் பெருவிரலால் திருக்கையிலாய மலையை அழுத்தினார்;இதனால்,திருக்கையி லாய மலையின் அடியில் ராவணனின் கைகள் சிக்கிக் கொண்டன;வலி தாங்காமல் அழுது புலம்பினான்;எவ்வளவு காலமாகத் தெரியுமா? ஆயிரம் யுகங்கள் வரையிலும்!
அவனது அழுகுரலுக்கு இரக்கப்பட்டார் ஒரு சிவகணம்! அவர் பெயர் வாகீசர்!! ராவணனிடம் சென்று, “நீ சிவபெருமானைப் புகழ்ந்து பாடினால்,அவர் மனம் இரங்கி உன்னை விடுவித்துவிடுவார்” என்றார்.
அதன்படி,தனது உடலில் இருக்கும் நரம்புகளால் யாழ் செய்து,சிவபெருமானை நினைத்து மனம் உருகப் பாடினான் ராவணன்.சில யுகங்களில் சிவபெருமானின் மனதில் ராவணனின் கீர்த்தனைகள் இரக்கத்தைத் தூண்டியது;சிவபெருமானும் ராவணனை மன்னித்து,திருக்கையிலாய மலைக்கு அடியில் சிக்கியிருந்த அவனது கைகளை விடுவிக்கச் செய்தார்;ராவணனும் அங்கிருந்து புறப்பட்டான்;
அதே சமயம்,சிவகணமாகிய வாகீசரை அழைத்து, “தவறு செய்த ராவணனின் விடுதலைக்கு நீ காரணமாகிவிட்டாய்;இதற்குப் பரிகாரமாக நீ பூலோகத்திற்குப் போய் மனிதனாகப் பிறப்பாயாக” என்று சாபமிட்டார் சிவபெருமான்.
அந்த வாகீசரே சைவக் குரவர்கள்(பக்தியினால் சிவனை அடைந்தவர்களுக்கு குரவர் என்று பெயர்) நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் ஆவார்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக