யாரெல்லாம் முந்தைய மூன்று பிறவிகளுக்குள் சித்தர்களின் சீடர்களில் ஒருவராக இருந்தாரே,யாரெல்லாம் முந்தைய மூன்று பிறவிகளுக்குள் வரும் ஏதாவது ஒரு பிறவி முழுவதும் சிவவழிபாடு செய்தார்களோ அவர்கள் மட்டுமே இப்பிறவியில் தொடர்ந்து பைரவ வழிபாடு செய்ய முடியும் என்பது சித்தர் அனுபவமொழி!
சிவனின்றி ஓர் அணுவும் அசையாது;
எல்லாம் சிவன் செயல்;
என்ற பழமொழிகளே காலப் போக்கில் அவனின்றி ஓர் அணுவும் அசையாது;எல்லாம் அவன் செயல் என்று மாறியது;
கலியுகத்தில் நாம் ஒவ்வொருவராலுமே நமது அனைத்து கர்மவினைகளில் இருந்தும் மீள முடியும்;அதற்கு முதல் தகுதி அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்துவதும்,மது முதலான போதைப் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பதுமே!
தொடர்ந்து ஆறு வளர்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்து வந்தால்,
1.நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்;
2.நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாமே உருவாக்கியிருந்த கர்மவினைகள் கரையத் துவங்கும்;அதனால்,இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்தப் பின்னர்,நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கும்;வருமானம்/லாபம்/ஊக்கத் தொகை அதிகரிக்கத் துவங்கும்;
3.அம்மா,அப்பா,சகோதரன்,சகோதரி, அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை, கணவன்,மனைவி இவர்களிடையே இருந்து வரும் காழ்ப்புணர்ச்சி படிப்படியாகக் குறையத் துவங்கும்;
4.வாக்குச்சனியால் அவதிப்படும் கன்னிராசியினர் அதிலிருந்து விடுபடுவர்.
5.ஜன்மச்சனியால் வாழ்வின் விரக்தியில் இருக்கும் துலாம் ராசியினர்,நிம்மதி அடைவார்கள்;
6.விரையச்சனியால் சேமிக்கமுடியாமல் திண்டாடும் விருச்சிகராசியினர் அதிலிருந்து மீளத் துவங்குவார்கள்;
7.அஷ்டமச்சனியால் துன்பப்படும் மீனராசியினர்,அதிலிருந்து விலகி நிரந்தரமான வேலை/தொழிலை அடைவார்கள்;
8.கண்டச்சனியால் தம்பதியரிடையே கருத்து வேறுபாட்டுடன் தவிக்கும் மேஷ ராசியினர் ஒற்றுமையைப் பெறுவார்கள்;
9.அர்த்தாஷ்டமச்சனியால் தடுமாறும் கடகராசியினர் தெளிவான மனைநிலையை அடைவார்கள்.
வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது;வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவப்பெருமானை வழிபடலாம்;
வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்பவர்கள்,ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்யக் கூடாது;மீறினால்,வழிபாட்டின் பலன்கள் கிட்டுவது கடினம்.
ஜய வருடத்தின் முதல் வளர்பிறை அஷ்டமி இந்த சித்திரை மாதத்தில் 24 ஆம் நாளன்று(7.5.2014 புதன் கிழமை) அன்று வர இருக்கிறது.
இந்த நாளில் ஸ்ரீகாலபைரவப் பெருமான் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபடலாம்;
வெகுதூர தேசங்களில் வசிப்பவர்கள்,ஸ்ரீகாலபைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியை ஜபிக்கலாம்;
அல்லது
ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியையோ,துர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீசொர்ண பைரவ அஷ்டகம் பாடலாம்;
அடுத்த வளர்பிறை அஷ்டமி: வைகாசி 22 வியாழக்கிழமை (5.6.14)காலை 11.26க்குத் துவங்கி,வைகாசி 23 வெள்ளிக்கிழமை (6.6.14) மதியம் 12.54 க்கு நிறைவடைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக