உலகின் ஆதி சமயம் சைவமே!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
என்ற போற்றியானது நமது தமிழ்நாட்டில் கடந்த 20,000 ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வரும் நிரந்தர உண்மை ஆகும்;இதற்கான ஆதாரங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் ஆன்மீக அரசு குழுமம் பெருமை கொள்கிறது;
இன்றைக்கு உலகம் முழுவதும் இருக்கும் 220 நாடுகளிலும் பின்பற்றப்படும் அனைத்து மதங்களின் எண்ணிக்கை சுமார் 76 ஆகும்.இந்த 76 மதங்களும் இறைவன் ஒருவனே என்று போதிக்கின்றன;அந்த இறைவன் ஆதி சிவனே ஆவார்; “யார் எந்த தெய்வ உருவிலும் என்னை வழிபட்டாலும்,அந்த பக்தி உணர்வு என்னையே வந்து சேரும்” என்று நாம் பகவத் கீதையில் வாசித்திருக்கிறோம்;இந்த உண்மையானது நிஜத்தில் 5111 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பகவத் கீதையில் இடைச்செருகல் செய்யப்பட்டதே.
இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்
பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி
எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென்
ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே
என்ற திருமூலரின் திருமந்திரம் 1568 ஆம் பாடலில் இருந்து இடைச்செருகல் செய்யப்பட்டிருக்கிறது.இப்பாடலின் கருத்து என்னவெனில், யார் எந்த தெய்வத்தை வழிபட்டாலும்,எங்கோ பிறந்திருந்து,எந்த விதமான சமயமுறைப்படி இறை நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும்,அவர்களின் பக்தி உணர்வுக்கு வரமாக,பிரார்த்தனை பலன்களாக தருபவர் ஆதிசிவன் என்ற சதாசிவனே!
சிவபெருமானின் உடுக்கை ஒலியில் இருந்து உலகத்தின் மூலமொழிகள் தோன்றின;உடுக்கையின் வலது பக்க ஒலியில் இருந்து தமிழ் மொழி தோன்றியது;இடது பக்க ஒலியில் இருந்து சமஸ்க்ருதம் தோன்றியது;தமிழ் மொழியை ஆதிசிவன், சித்தர்களின் தலைவரான அகத்தியமகரிஷிக்குப் போதித்தார்;சமஸ்க்ருத மொழியை பாணினி என்ற ரிஷிக்கு ஆதிசிவன் போதித்தார்;
தமிழ் மொழியை அகத்திய மகரிஷி இன்றைய தமிழ்நாடு,இலங்கை,இந்து மஹாசமுத்திரத்தினுள் மூழ்கியிருக்கும் குமரிக்கண்டம் என்ற லெமூரியக் கண்டம் ஆகிய பகுதிகளில் பரப்பினார்;தமிழ் மொழிக்கான இலக்கணத்தொகுப்பை தொல்காப்பியர் வகுத்தார்;தொல்காப்பியரின் குரு அகத்தியமகரிஷியே!
தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்களுக்குள் சிவனும் சக்தியும் சேர்ந்து சிவசக்தியாக வாழ்ந்து வருகின்றனர்;இதை திருமந்திரத் தொகுப்பு எனப்படும் திருமந்திரம் பாடல் எண்:910 மூலமாக நாம் உணர்ந்துகொள்ளலாம்;
ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென் றறைந்திட
ஆனந்தம் ஆனந்தம் ஆ=ஈ=ஊ=ஏ=ஓமென் றறைந்திடம்
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும தாயிடும்
ஆனந்தம் ஆனந்தம் அம்=ஹ்ரீம்= அம்=க்ஷம் ஆம் ஆகுமே.
தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்களில் குற்றெழுத்துக்களான அ,இ,உ,எ,ஓ ஆகியன ஆதியில் தோன்றின;பின்னர் இவையே தீர்க்கமானபோது ஆ,ஈ,ஊ,ஏ,ஓ என்று நெட்டு எழுத்துக்களாகவும் வளர்ந்தன;இதில் குற்றெழுத்துக்கள் சிவமாகச் செயல்பட்டு வருகின்றன;நெட்டு எழுத்துக்கள் சக்தியாகச் செயல்பட்டு தமிழ் மொழியையும் தமிழ் சமுதாயத்தையும் பாதுகாத்து வருகின்றன;
பரமசிவனை, நாராயணன் வழிபட்டு,பூஜை புரிந்து சாபநிவர்த்தி ஆன சிங்கபுரம் என்ற இடமே இன்றைய சிங்கப்பூர் ஆகும்;
பராசக்தி மயிலாக வந்து புன்னை மரத்தினடியில் லிங்கப்பரம் பொருளை பல நூற்றாண்டுகளாக பூஜை செய்து சாபவிமோசனம் பெற்ற திருத்தலம் அக்காலத்தில் மயிலைபுரி.அதுவே இக்காலத்தில் சென்னையின் ஒரு பகுதியான மயிலாப்பூர் ஆகும்;
மூன்று கோட்டைகளை அழிப்பதற்காக சர்வேஸ்வரன் இமய மலையை வில்லாக வளைத்த இடமே திருவாரூர் அருகே அமைந்திருக்கும் திருவிற்குடி;
ராமபிரான் வனவாசம் இருந்த காலத்திலும் தந்தை தசரதனுக்கு திவசம் செய்து வந்திருக்கிறார்;அவ்வாறு திவசம் செய்த பித்ரு கடன் நிறைவேற்றி வழிபட்ட கோவில்களில் திருக்குறுக்கை(அக்காலத்தில் கொற்கை)யும் ஒன்று;இந்த திருக்குறுக்கை மயிலாடுதுறைக்கு அருகில் அமைந்திருக்கும் கிராமங்களில் ஒன்று;அட்டவீரட்டானங்களில் முக்கியமானது திருக்குறுக்கை;
இன்றைய மீரட்டில் பிறந்த பிராமணனே அன்றைய ராவணன்;செல்வச் செழிப்பு மிக்க நாடாக லங்கா என்ற ஸ்ரீலங்கா அக்காலத்தில்(17,50,000 ஆண்டுகளுக்கு முன்பு) இருந்ததால்,அங்கே சென்று அரச பதவியை பிடித்தான் ராவணன்;தனது மனைவி சீதாபிராட்டியை ராவணன் கவர்ந்து சென்றதால்,அவனைக் கொன்று தனது மனனவி சீதாபிராட்டியை மீட்டான் ராமபிரான்;
பசு,குழந்தைகள்,பச்சை தாவரங்கள்,பிராமணன் ஆகியவற்றைக் கொல்வது கொடூரமான பஞ்சமா பாதகங்களில் ஒன்று;ராவணன் சிறந்த சிவபக்தன்;இருந்த போதிலும்,பெண்ணாசையால் மஹாவிஷ்ணுவின் அவதாரமான ராமபிரானால் இறக்க நேரிட்டது;இந்த பஞ்சாமாபாதகம் நீங்கிட சிவவழிபாடே சிறந்தது என்பதை அறிந்தான்;எனவே,ராமபிரான் லிங்கப் பரம்பொருளான ஆதிசிவனை வழிபட்டதால்,அந்த இடமே இராமேஸ்வரம் என்ற பெயராகியது;ராமேஸ்வரர் என்றால் ராமனுக்கு இறைவன் என்று அர்த்தம்;அதுவே தற்காலத்தில் ராமநாதசுவாமி என்று மருவியிருக்கிறது;
அயன் என்ற பிரம்மா தனது பதவியை தக்க வைப்பதற்காக பல நூற்றாண்டுகளாக சிவ வழிபாடு செய்த இடமே அயனீஸ்வரம் என்று பெயர் பெற்றது;அயனீஸ்வரமே இன்று அயர்லாந்து என்ற பெயரில் வட கோளத்தில் இன்றைய நார்வே நாட்டிற்கு வடமேற்கே அமைந்திருக்கிறது;
குவைப்பதி லிங்கம் என்ற பெயரில் மிகப் பிரம்மாண்டமான சிவாலயமும்,அதே பெயரில் இருந்த நகரமுமே இன்றைய குவைத் என்று நாட்டின் பெயராக உருவாகியிருக்கிறது;
எகிப்தில் ஆண்ட ஒரு மன்னர் வம்சத்தின் கொடி நந்திக் கொடியாகும்;
தமிழ்நாட்டில் உள்ள திருமால்பேறு என்ற ஊரின் சாயலில் இன்றைய தென் அமெரிக்கக் கண்டத்தில் உருவாக்கப்பட்ட சிவாலயமே பேறு ஆகும்; அதுவே இன்றைய தென் அமெரிக்க நாட்டின் பெயராக பெரு என்று உருமாறியிருக்கிறது;
அகஸ்தியர் ஆலயா என்பது இன்று ஆஸ்திரேலியா என்று வழங்கப்படுகிறது;மக்கீஸ்வரம்,மத்தீஸ்வரம் என்பவை முறையே மக்கா,மதீனா என்று வழங்கப்படுகிறது.(ஆதாரம்:முழு முதல் பரம்பொருள் மகிமை,பக்கம் 350)மக்கீ என்ற சமஸ்க்ருதச் சொல்லுக்கு ஈ என்று பொருள்;தமிழ்நாட்டில் ஈங்கோய்மலை திருக்கோவில் போன்று சவுதி அரேபியாவில் மக்கீஸ்வரம் என்ற புகழ்பெற்ற சிவாலயமாக சிறப்படைந்திருந்தது;இன்றும் கூட மக்காவிற்குச் செல்லும் முகம்மதியர்கள் அங்கு உள்ள ஏழடி உயரமான லிங்கப் பரம்பொருளையே சைத்தான் என்று சொல்லி கல்லெறிந்துவிட்டு வருகின்றனர்;
ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகிறது;
படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்து தொழில்கள் புரிபவர் பரமசிவன் என்ற ஆதிசிவன்;இவரை பிரம்மன்,விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்(பிரம்ம லோகம்,விஷ்ணு லோகம்,சிவலோகம்) வாழ்க்கையையும்,பதவியையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்;இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலம் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள திரிநாடு(த்ரிநாட் என்ற டிரினிடாட்).
வட அமெரிக்கக் கண்டத்தில் கொலாடோ என்ற ஆற்றங்கரையின் அருகே உள்ள குன்றின் மீது ஒரு சிவாலயம் கண்டெடுக்கப்பட்டது;அதன் வயது 10,000 ஆண்டுகள்!
இத்தாலியில் ஒரு பழமையான சிவாலயம் வீடு கட்டும் போது கிடைத்தது;அதன் வயது 5,000 ஆண்டுகள்!!தற்போது அங்கே இருக்கும் பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது;
எகிப்தின் முக்கிய நகரமான அலெக்ஸாண்டிரியாவில் 129 அடி உயரமுள்ள சிவலிங்கம் பாலைநிலத்தில் புதைந்திருப்பதைக் கண்டெடுத்துள்ளனர்;
பாபிலோனியாவில் கிடைத்திருக்கும் களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் பல இடங்களில் காணப்படுகிறது;அங்கே நடைமுறையில் இருக்கும் மாதங்களில் சிவன் என்ற மாதமும் இருக்கிறது;
எகிப்து நாட்டில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் இருந்திருக்கிறது;அந்த நகரில் இருந்த பழமையான சிவாலயத்தில் சிவலிங்கம்,நந்தி,பாம்பு,புலி,சிங்கம் ஆகியவைகளுடன் தனித்தனியே சிவலிங்கங்கள் இருந்திருக்கின்றன;
சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரமே இருந்திருக்கிறது;அழிந்துபோன இந்த நகரத்தின் எஞ்சியுள்ள பகுதிகள் லிங்கப் பரம்பொருளையும் நந்தியும் இங்கே வழிபடப்பட்டதைக் காட்டுகின்றன;
சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் இருக்கிறது;ஜப்பானில் சந்திகளிலும்,சதுக்கங்களிலும் சிவாலயத்தை நிர்மாணித்து வழிபட்டு வந்துள்ளனர்;திபத்,சீனா,பூட்டான்,மெக்ஸிகோ ஆகிய நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக சிவவழிபாடு செய்து வந்துள்ளதற்கான சான்றுகள் கிட்டியுள்ளன;
போர்னியா நாட்டுக் குகைகளில் இருந்து ஈசன் திருவுருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன;சுமத்ராவில் பெரிய அளவிலான சிவலிங்கங்களும்,அர்த்தநாரீஸ்வர வடிவங்களும் கிடைத்துள்ளன;நடராஜர் திருவுருவம் மலேஷியாவில் கிடைத்துள்ளது;சேரம் என்ற ஊரில் ஆடல் நாயகனும் தங்கத்தால் ஆன சிவலிங்கமும் கிடைத்திருக்கின்றன;பொன் லிங்க வழிபாட்டை அரசர்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்றிவந்துள்ளனர் என்பதை திருமூலரின் திருமந்திரம் தெரிவிக்கிறது;
சிறிய லிங்கங்கள் வீட்டில் வைத்து பூசை செய்யப்படும் கிரியை வழிபாட்டுக்குரியவை;பெரிய லிங்கங்கள் சரியை எனப்படும் கோவில் வழிபாட்டிற்கு உரியவை;சிறிய லிங்கங்களும்,பெரிய லிங்கங்களும் மொகஞ்சோதராவில் கிடைத்துள்ளன;முகம் அஞ்சு ஓதரன் என்ற வார்த்தைக்கு விளக்கம் ஐந்து முகங்களால் ஓதுபவன் என்பதாகும்;இந்த முகம் அஞ்சு ஓதரன் என்ற பெயரே மொகஞ்சோதரா ஆயிற்று;ஐந்து தொழில்(படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல்) புரியும் ஐந்தொழில் நாயகன் ஐந்து முகங்களால் ஆகமங்கள் ஓதி அருளினார்;
மாவேட்டாகிய ஆகமம் வாங்கியும்
மற்று அவை தன்னை மகேந்திரத்து இருந்து
உற்ற ஐம்முகங்களால் பணித்து அருளியும்
என்று பழம்பெரும் திருவாசகம்,ஆகமங்களை ஓதிய மொகஞ்சோதரனைப் போற்றுகிறது; ஹர என்ற வடமொழிச் சொல்லும்,அப்பா என்ற தமிழ்ச்சொல்லும் சேர்ந்து ஹரப்பா என்று ஆயிற்று;வேத ஆகமங்களை ஓதியருளியதால் விஸ்வேஸ்வரனுக்கு ஓதீஸ்வரர் என்று பெயர்;பஞ்சாக்கை என்ற சிவத்தலைத்தை அப்பர் தேவாரம் போற்றியுள்ளது;பஞ்சாக்கையே இன்று பஞ்சாப்பாக மருவியிருக்கிறது;ஓங்காரேஸ்வரரின் சுருக்கமே ஓமன் என்று ஆகியிருக்கிறது;திருவல்லிக்கேணி என்பது ட்ரிப்பிளிகேண் என்று ஆனது போல பிள்ளைப்பண் என்பதே பிலிப்பைன்ஸாக மாறியிருக்கிறது;சூரிநாம்,சகாரா,ருமேனியா,யமன்(ஏமன்),மங்கோலியா ஆகியவையெல்லாம் ஆரிய மொழிச் சொற்களே;ப்ரம்மதேசமே பர்மா ஆகியிருக்கிறது;
திருச்செந்தூருக்கும் இலங்கைக்கும் இடையே கந்தமாதனம் என்ற சிவாலயம் இருந்திருக்கிறது;
திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே (திருமந்திரம் 25)
ஓம்சிவசக்திஓம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக