சந்திரனுக்கு தட்சன் தனது 27 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்தார்;அவர்களில் ரோகிணி,கார்த்திகை ஆகிய மனைவிகள் மீது மட்டும் அதிக பாசம் கொண்டார் சந்திரன்;இதனால் மனம் வருந்திய மற்ற மனைவிகள் தனது தந்தையிடம் புகார் செய்தனர்;
தட்சன் தனது மருமகன் சந்திரனைச் சந்தித்து, “நீ அழகாக இருப்பதால் தான் ஆட்டம் போடுகிறாய்;உன் முகத்தின் பிரகாசம் மறையட்டும்” என்று சாபம் இட்டார்;
இதனால் சந்திரனின் கலைகள் தேயத் துவங்கின;இதுவே வளர்பிறை,தேய்பிறை என்று உருவாகக் காரணமாகவும் அமைந்தது;
ரோகிணியும்,கார்த்திகையும் தட்சனிடம் சென்று அவரது சாபத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தினர்;தட்சனுக்கு அப்போது தவவலிமை குறைந்ததால்,சாபத்தைத் திரும்பப் பெற முடியவில்லை;
உடனே ரோகிணியும்,கார்த்திகையும் சிவனை நினைத்து தவம் செய்யத் துவங்கினர்;அவர்களது நீண்ட கடும் தவத்தினால் சிவன் அவர்களுக்கு காட்சியளித்து அவர்களின் கோரிக்கையை செவிமடுத்தார்;
கார்த்திகை,ரோகிணி இருவரின் கோரிக்கையை ஏற்று,அவர்களின் கணவன் சந்திரனின் சாபம் தீர,சந்திரன் தனது தலை மீது அமரும் பாக்கியத்தை அருளினார்;
ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசைக்கு மூன்றாவது நாளன்று வரும் திதி த்ரிதியை ஆகும்;மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால்,சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம்;தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வற்றாத செல்வ வளத்தைப் பெறுவார்கள்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக