புதன், 26 பிப்ரவரி, 2014

கோவில் 1



திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே உள்ளது எட்டுக்குடி முருகன் கோவில் .அறுபடை வீடு முருகன் கோவில்கள் தவிர புகழ் பெற்ற முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஓன்று .இது மிக பழமையான கோவில்களில் ஓன்று.அருணகிரிநாதர் இந்த கோவில் குறித்து பாடல்கள் இயற்றியுள்ளார் .நாகப்பட்டினம் அருகில் பொருள்வைத்த்சேரி என்ற ஊரில் ஒருசிற்பி இருந்தார். அவர் ஒரு தீவிர முருக பக்தர்.அவர் ஒரு சமயம் முருகன் சிலையை செய்து கொண்டிருந்த பொழுது அங்கு வந்த சோழ மன்னர் முருகன் சிலையின் அழகில் மயங்கி சிற்பி இதுபோன்ற சிலையை வேறு எங்கும் உருவாக்க கூடாது என்று நினைத்து சிற்பியின் கட்டை விரலை அறுத்து விடுகிறார்..சிற்பி அந்த ஊரை விட்டு பக்கத்தில் இருந்த வேறு ஊருக்கு செல்கிறார் .
 
அந்த கிராமத்திலும் ஒரு முருகன் சிலையை வடிக்கிறார். கட்டை  விரல் இல்லாமலும் அதே போன்று இன்னொரு அழகான சிலையை வடிக்கிறார்.அந்த சமயம் முத்தரசன் என்ற ஒரு குறுநில மன்னர் அந்த வழியே வருகிறார் .மன்னரை பார்த்ததும் முருகன் அமர்ந்து இருந்த மயில் பறக்க ஆரம்பிக்கிறது . மன்னர் காவலாளிகளை பார்த்து அந்த மயிலை ' எட்டிப்பிடி ' என்று கூறுகிறார் .காவலர்கள் மயிலை பிடிக்கும் பொழுது மயிலின் கால் சிறிது சேதம் அடைந்துவிடுகிறது . மயில் சிலை அஙகயே நின்று விடுகிறது .எட்டுப்பிடி என்ற பெயர் தான் மருவி பின்பு எட்டுக்குடி ஆனது . பின்பு மீண்டும் அதே சிற்பி இன்னொரு முருகன் சிலை வடித்தார் .அது தான் என்கண் கோவிலில் உள்ள முருகன் சிலை .முதலில் செய்த சிலை தான் சிக்கல் கோவிலில் உள்ள சிலை.
 
எட்டுக்குடியில் உள்ள முருகன் வள்ளி தெய்வானை சகிதம் காட்சி தருகிறார்.முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே. இந்த கோவிலில் முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள்தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள்.இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலபிஷேகம் செய்கிறார்கள். பிரகாரத்தில் முருகனுடன் சூரபத்மன் வதத்திற்கு துணையாக சென்ற 9 வீரர்களுக்கு சிலைகள் உள்ளது. சூரா சம்ஹாரம் செய்ய முருகன் இங்கிருந்து புறப்பட்டதாக ஐதீகம் . வான்மீகி சித்தர் கோவில் கொண்ட ஸ்தலம் .சத்ரு சம்ஹாரம் செய்ய இங்கு வேண்டுவார்கள் ஆசைக்கு குழந்தை வரம் வேண்டுபவர்கள் இங்கு ஓசைக்கு மணி கட்டுவதாக வேண்டுகிறார்கள் . எல்லா முருகன் கோவில்களிலும்  இருப்பது போல் இங்கும் காவடி எடுப்பது மிகவும் சிறப்பு .

Arulmigu Karbarakshaambigai
தஞ்சாவூர் அருகில் உள்ள பாபநாசம் என்ற ஊரில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருகருகாவூர்.இங்கு அம்மன் பெயர் .கர்பரக்ஷாம்பிகை .இறைவன் பெயர் முல்லைநாதர் . அம்மன் பெயரில் உள்ளது போல கர்ப்பிணி பெண்களின் கருவை காப்பதும் ,சுக பிரசவம் ஆவதற்கும் பெண்கள் இந்த அம்மனை மனம் உருகி வேண்டுவார்கள்.அதுமட்டுமல்ல குழந்தை வரம் வேண்டியும் அம்மனை வேண்டுவதும் உண்டு.முன்னொரு காலத்தில் கௌதமர்; மற்றும் கர்கேயர் என்ற இரு முனிவர்கள் முல்லைவனம் என்ற இடத்தில் தவம் இருந்தார்கள் .அது ஒரு முல்லை தோட்டம் .நித்ருவ வேதிகா என்ற குழந்தை இல்லா தம்பதியரும் அங்கு தங்கி முனிவர்களுக்கு சேவை செய்து வந்தனர் .முனிவர்கள் குழந்தை வரம் வேண்டி கர்பரக்ஷாம்பிகையை வேண்டுமாறு தம்பதிகளுக்கு அறிவுரை சொல்கிறார்கள் .அவர்கள் வேண்டியபடி அம்மன் அவர்களுக்கு குழந்தை வரம் அளிக்கிறாள் . நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் போது கணவர் வீட்டில் இல்லாத சமயம் வேதிகா மயங்கி விழுகிறாள்.அந்நேரம் உர்த்யபாத என்ற முனிவர் பிச்சை கேட்டு வருகிறார் .மயக்கத்தில் இருந்த வேதிகாவால் முனிவருக்கு ஏதும் அளிக்க முடியவில்லை .கோபத்தில் முனிவர் சபிக்கிறார் .அதில் கரு கலைந்து வெளியேறி விடுகிறது .அதிர்ச்சி அடைந்த வேதிகா கர்பரக்ஷாம்பிகை அம்மனை வேண்டுகிறார் .ப்ரத்யக்ஷமான அம்மன் அந்த கருவை தாங்கி ஒரு குவளையில் வைத்து காத்து முழு வளர்ச்சி அடைந்தவுடன் வேதிகாவிடம் அந்த ஆண்  குழந்தையை கொடுக்கிறாள் .மகிழ்ச்சியில் திளைத்த வேதிகா அம்மனிடம் அதே இடத்தில் தங்கி கர்ப்பிணிகளையும் ,அவர்கள் வயிற்றில்வளரும் கருக்களையும் காக்க வேண்டும் என்று வேண்டுகிறாள்.வேதிகாவின் வேண்டுகோளுக்கு இணங்கி அம்மனும் அந்த இடத்தில் இருந்து கர்ப்பிணிகளின் கருக்களை அம்மனாக வரம் தருகிறாள் . அது மட்டுமல்ல குழந்தை வரம் வேண்டி வருபவர்களுக்கும் அருள் பாலிக்கிறாள்.கருவை காப்பதாலேயே அம்மனுக்கு கர்பரக்ஷாம்பிகை என்று பெயர்.ஊருக்கும்அதனால் திருகருகாவூர் என்று பெயர்.
இறைவனுக்கு பெயர் முல்லைவனநாதர்.முல்லை வன கொடிகள் இறைவன் மேல் படர்ந்ததால் அந்த தடம் இன்றும் சிவா லிங்கத்தின் மேல் இருப்பதை காணலாம் என்று சொல்ல படுகிறது.இந்த லிங்கம் எறும்பு புற்றினால் ஆனது என்பதால் இங்கு மூலவருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது .குணபடுத்த முடியாத நோய்களால் அவதி படுபவர்கள் இங்கு வந்து இறைவனுக்கு புணுகு சட்டம் சார்த்துவார்கள் .அப்படி செய்து நோய் குணமானவர்கள் ஏராளம் .இன்றும் இந்த வேண்டுதல் பக்தர்களால் செய்ய படுகிறது .
இறைவனுக்கு பெயர் முல்லைவனநாதர்.முல்லை வன கொடிகள் இறைவன் மேல் படர்ந்ததால் அந்த தடம் இன்றும் சிவா லிங்கத்தின் மேல் இருப்பதை காணலாம் என்று சொல்ல படுகிறது.இந்த லிங்கம் எறும்பு புற்றினால் ஆனது என்பதால் இங்கு மூலவருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது .குணபடுத்த முடியாத நோய்களால் அவதி படுபவர்கள் இங்கு வந்து இறைவனுக்கு புணுகு சட்டம் சார்த்துவார்கள் . அப்படி செய்து நோய் குணமானவர்கள் ஏராளம் .இன்றும் இந்த வேண்டுதல் பக்தர்களால் செய்ய படுகிறது .
இந்த கோவில் பிரசாதம் ஆக விளக்கு எண்ணை அளிக்கபடுகிறது . இந்த எண்ணையை கர்ப்பிணி பெண்கள் அடி வயிற்றில் தடவி வந்தால் சுக பிரசவம் ஆகும் என்று இன்றும் மக்களால் நம்ப படுகிறது.நேரில் வர முடியாதவர்கள் கோவிலுக்கு பணம் அனுப்பி தபால் மூலமும் பிரசாதம் பெறலாம் .குழந்தை வரம் வேண்டும் பெண்கள் நேரில் வர வேண்டும்.இத்தலத்தில் 11 நெய் விளக்கு ஏற்றி அம்பாள் சன்னதியில் படி மெழுகி கோலமிட்டு வேண்டுதல் செய்ய வேண்டும் .பின்பு 1 கிலோ பிரசாத நெய் வாங்கி சென்று 48 நாட்களுக்கு பக்தி சிரத்தையுடன் சாப்பிடவேண்டும்.இத்துடன் கர்பரக்ஷாம்பிகை ஸ்லோகமும் சொல்ல வேண்டும்.கண்டிப்பாக குழந்தை வரம் அம்பாள் அளிப்பதாக இன்றும் நம்பபடுகிறது.
வளர் பிறை பிரதோஷ தினங்களில் இறைவனுக்கு புனுகு சட்டம் சார்த்த படுகிறது .நோயால் அவதி படுபவர்கள் இந்த வேண்டுதல் செய்யலாம் .அம்பாள் அருளால் குழந்தை வரம் பெற்றவர்களும் ,சுக பிரசவம் ஆனவர்களும் இங்கு குழந்தைகளுக்கு துலாபாரம் எடுக்கிறார்கள்.மற்றொரு அருமையான வேண்டுதல் தங்க தொட்டிலில் குழந்தையை வைத்து குழந்தையின் பெற்றோர்களும் ,உறவினர்களும் குழந்தையை அம்பாள் சன்னதியை பிரதட்சிணமாக தள்ளி செல்லலாம் .இங்கு அழகு அழகான குழந்தைகள் தங்க தொட்டிலில் பவனி வருவதை காண்பது ஒரு கண் கொள்ளா கட்சி .
திருமணம் ,குழந்தை வரம் வேண்டும் ஸ்லோகம்

ஓம் தேவேந்திராணி நமச்துபயம்
தேவேந்திர பிரிய பாமினி
விவாஹ பாக்கியம் ,ஆரோக்கியம்
புத்திர லாபாம்ச தேஹிமே
பத்திம் தேஹி ,சுதம் தேஹி
சௌபாக்கிய தேஹிமே சுபே
சௌமங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே கர்ப்ப ரக்ஷகே
காத்யாயினி மஹாமாயே
மகா யோக்ஹினிய தீச்வரி
நந்தகோபம் சுதம் தேவம்
பத்திம் மே குருதே நம

சுக பிரசவம் ஆக சொல்ல வேண்டிய  இரு ஸ்லோகங்கள்

1.ஹே சங்கரா சமாரஹர ப்ரஹ்மததி
நாதரி மன்னத சம்ப சசிசூடா
ஹரத்திரி சூலின் சம்போ சுக பிரசவ க்ரித்பவமே
தாயாலோ ஹே மாதவி வனேச பளையம்மன் நமஸ்தே

2.ஹிமவாத் உத்தரே பார்ஸ்வே சுரதா
நமயாக்ஷினே
தஸ்ய சமரன மத்ரேயா விசல்யா
கர்பினேபவது


கோவில் முகவரி

அருள்மிகு கர்பரக்ஷாம்பிகை முல்லை வனநாதர் கோவில்
திருகருகாவூர் -614 302
பாபநாசம் தாலுகா
தஞ்சாவூர் மாவட்டம்
தொலைபேசி  04374 - 273423
கைபேசி -04374 - 273423
மின் அஞ்சல் - eomullaivananathartkr@gmail.com

Patteswaram Durai amman
கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ  தொலைவில் உள்ளது பட்டீஸ்வரம்  .காமதேனுவின்  கன்றுக்கு பட்டி என்று பெயர்.பட்டிக்கன்று மணலினால் ஓர் சுயம்பு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்று பெயர்.2000 ஆண்டு பழமையான கோவில் இது .பாடல் பெற்ற ஸ்தலம் .இறைவன் பெயர் பட்டீசுவரர் .இறைவனுக்கு இன்னொரு பெயர் தேனுபுரீசுவரர் .இறைவி பெயர் பல்வளநாயகி . இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. இங்கு துர்க்கை சாந்த சொரூபியாக அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள்.அஷ்டபுஜங்களுடன் அருள் பாலிக்கும் துர்கையை வழிபட்டால் ராகு கேது செவ்வாய் தோசங்கள் நீங்கும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை கிடைக்கப் பெறலாம்.இத்தலத்து பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் . விஷக்கடி ,நாய்க்கடி ஆகியவையால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து வேண்டி குணம் ஆனதாக சொல்லபடுகிறது .
இத்தலத்தின் ஏனைய சிறப்புகள் ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துபந்தல் அமைத்து வெயில் கொடுமை தெரியாமல் நடப்பதற்கு வழி செய்து கொடுத்தது .ஞானசம்பந்தர் இறைவன் அருளை வியந்து பணிந்து போற்றி முத்துப்பந்தலின் நிழலில் வந்தார். ஞானசம்பந்தர் நடந்து வந்த அழகிய காட்சியை காணவும், திருஞானசம்பந்தர் தன்னை தரிசிக்கவும் பெருமான் நந்தி தேவரை விலகி இருக்க கட்டளையிட்டார். நந்தியும் விலகியது.இன்றும் இத்தலத்தில் முத்து பந்தல் திருவிழா நடைபெறுகிறது. ஆனிமாதம் முதல் தேதியில் திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் முத்துப்பந்தல் அளிக்கும் விழா நடைபெறும்.இதுவே இத்தலத்தின் சிறப்பு விழா. முத்துப்பந்தல் விழா நாளில் பகல் 12 மணிக்கு திருஞானசம்பந்தர் அடியார்களுடன் திருச்சத்திமுற்றம் கோயில் சன்னதியிலிருந்து முத்துப்பந்தல் நிழலில் எழுந்தருளி, பட்டீச்சரத்துக்கு வருதலும், பதிகம் பாடுதலும், திருமடத்துக்கு எழுந்தருளுதலும் ஆகிய காட்சிகள் நடைபெறும்.
பராசக்தியே தவம் செய்து வழிபட்ட தலம்.தவத்திற்கு உதவவேண்டி காமதேனு தன் புத்திரி பட்டியை அனுப்பியது. தேவியாரின் தவத்திற்கு உதவியான பணிவிடைகள் செய்தது.பட்டி தானும் பெருமானை பூஜிக்க விரும்பி மணலினால் ஓர் லிங்கம் அமைத்து நாள்தோறும் விதிப்படி பூசித்து வந்தது. தனது தூய்மையான பாலைக் கொண்டும், ஞானவாவியின் நீரைக் கொண்டும் நீராட்டி வழிபட்டது. பெருமான் அவ்வழிபாட்டிற்கு மகிழ்ந்து மணலினால் ஆகிய லிங்கத்தில் என்றும் நிலையாய் அமர்ந்தருளினார்.

சுந்தரேஸ்வரர் என்ற சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த ஊர் திருமணஞ்சேரி.கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவு.சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் நடந்த திருமணம். கன்னிகா தானம் செய்து நடத்தி வைத்தவரோ சாட்சாத் மகாவிஷ்ணு. இந்த தெய்வத் திருமணத்திற்குப் பின் சிவனும் - பார்வதியும், விஷ்ணுவும் - லட்சுமியும் நால்வருமாக அங்கேயே வாசம் செய்கிறார்கள்.பூமியில் பசுவாகப் பிறக்கும்படி பார்வதி சாபம் பெற்றாள்.பார்வதி இங்கே வந்தபோது, அந்தப் பசுவை மேய்க்கும் இடையனாக விஷ்ணுவும் உடன் வந்தார். சாப விமோசனம் பெற்ற பின் பார்வதி சிவனை மணந்துகொண்டார். அப்போது விஷ்ணுவே பார்வதியை சிவனுக்கு கன்யாதானம் செய்து வைத்தார். திருமணஞ்சேரியில் மணந்துகொண்டதால் இங்குள்ள சிவனின் திருநாமம் கல்யாண சுந்தரேசுவரர். அம்பிகை கோகிலாம்பாள். மணமாகாதவர்கள் மணவாழ்வு வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்தால் அவர்களுக்கு உடனேயே திருமணம் கைகூடுகிறது.அம்மையும், அப்பனும் அருள்புரியும் இந்த தலத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் மணமாலை வேண்டி வழிபடுவது இத்தலத்தின் தனிச்சிறப்பு.விபூதியையும், குங்குமத்தையும் அணிந்து வர வேண்டும். இப்படி செய்தால் விரைவில் திருமணம் கைகூடிவிடும் என்பது ஐதீகம்.இப்படி திருமணம் நடந்த பின், தம்பதியர் சகிதம் மீண்டும் இக்கோவிலுக்கு வந்து அர்ச்சனை செய்து, ஏற்கனவே இங்கு தந்த மாலையை கோவிலில் சேர்த்துவிட வேண்டும்.
சிவன் கோயிலுக்கு அருகில் சுமார் 200 மீட்டர் தொலைவில் இருப்பது மேலத் திருமணஞ்சேரி. அங்கேதான் திருமணத்திற்கு வந்த தேவர்களையெல்லாம் விஷ்ணு வரவேற்றாராம். அதனால் எதிர்கொள்பாடி என்று பெயர் பெற்றது.திருக்கல்யாணத்திற்கு இன்றைக்கும் சீர் வரிசைகள் லட்சுமி நாராயணப் பெருமாளின் எதிர்கொள்பாடியிலிருந்துதான் கொண்டு செல்லப்படுகின்றன. 
விடையானை மேலுலகும் ஏழுமிப் பாரெல்லாம்
உடையானை ஊழிதோ றூழி உளதாய
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை அடையவல்லார்க்கு இல்லை அல்லலே.

மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் குத்தாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது திருவேள்விக்குடி .இதுவும் ஒரு பாடல் பெற்ற சிவ ஸ்தலம். இறைவன் பெயர் கல்யாணசுந்தரேச்வரர் ,அம்மன் பெயர் பரிமள சுகந்தநாயகி .சம்பந்தரரும் சுந்தரரும் இந்த ஆலயம் குறித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள் .சம்பந்தர் இந்த ஆலயத்தின் அக்னி தீர்த்தத்தில் நீராடி தனது நோயை போக்கினார் என்று சொல்லபடுகிறது.திருமணஞ்சேரியில் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் நடக்கும் முன்பு திருமண வைதீக சடங்குகள் திருவேள்விக்குடியில் நடந்ததாக சொல்லபடுகிறது .சம்பந்தர் இந்த ஆலயத்தின் அக்னி தீர்த்தத்தில் நீராடி தனது நோயை போக்கினார் என்று சொல்லபடுகிறது .இந்த தலத்தின் இன்னொரு சிறப்பு சிவ பெருமான் தன உடலில் ஒரு பாதியை உமையவளுக்கு அளித்து அர்த்தநாரீஸ்வரர் வழிபாட்டு முறையை முதன் முதலாக தொடங்கியதே திருவேள்விகுடியில் தான் என்றும் சொல்லபடுகிறது . திருமண தடை நீக்கும் திருத்தலம் திருவேள்விக்குடி.விரைவில் திருமணம் நடக்க வேண்டுவோரும் திருவேள்விக்குடிக்கு வந்து ஈசனையும் அம்மனையும் தரிசனம் செய்து பலன் அடைகிறார்கள் . இந்த திருத்தலத்திற்கு வெகு அருகிலேயே திருமணஞ்சேரி என்ற திருத்தலம் உள்ளது .

தஞ்சாவூர் -நீடாமங்கலம் சாலையில் சுமார் 5 கி.மீ.தொலைவில் உள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில். 18 ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் வெங்கோஜி ராவ் தான் இந்த கோவிலை கட்டினார்.அதற்க்கு முன்பு புற்று வடிவில் தான் இந்த ஆலயம் இருந்தது . அம்மை மற்றும் தோல் சம்பந்தமான் நோய்களை குணமாக்கும் சக்தி புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு உள்ளது.
ஒரு முறை வெங்கோஜி மகாராஜா சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வழியில் ஓரிடத்தில் ஓய்வெடுத்த பொழுது கனவில் வந்த மாரியம்மன் தஞ்சையை அடுத்த ஒரு புன்னை மர காட்டில் தான் இருப்பதாக சொல்கிறார் .உடனே அங்கு விரைந்த மன்னர் புன்னை காட்டில் ஒரு வெள்ளை எறும்பு புற்றை காண்கிறார் அந்த இடத்திலயே ஆலயம் எழுப்புகிறார் .பின்பு ஆட்சி புரிந்த சரபோஜி மன்னரும் இந்த கோவிலை புனரமைத்தார் .ஒரு முறை துலஜா ராஜாவின் மகளுக்கு கண் பார்வை இழந்த போது புன்னைநல்லூர் மாரியம்மனை வேண்டி பார்வை திரும்ப கிடைத்ததாக சொல்லபடுகிறது .சதாசிவ பிரம்மேந்திரர்  இந்த கோவிலுக்கு வந்து புற்றில் மாரியம்மன் முக வடிவை அமைத்ததாகவும் ஸ்ரீசக்ரம் பதித்ததாகவும் சொல்லபடுகிறது .இங்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்வது கிடையாது . விஷ்ணு துர்க்கைக்கும் அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் தினமும் அபிஷேகம் நடத்தப்படும்.ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்களுக்கு மர்ரியம்மனுக்கு புணுகு சட்டம் சார்த்தப்படுகிறது. .அந்த நேரம் திரை போடபட்டிருக்கும் . 400 ரூ கட்டணம் செலுத்தினால் அம்மனுக்கு தங்க பாவாடை தங்க மேலங்கி அணிந்த திவ்ய தரிசனத்தை பார்க்கலாம்.இன்றும் வெயில் காலத்தில் அம்மா முகத்தில் முத்து போன்ற வியர்வை துளிகளை காணமுடியும் .அதனாலேயே அம்மனுக்கு பெயர் முத்து மாரியம்மன் .புரட்டாசி மாதம் இங்கு அம்மனுக்கு தெப்ப திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.இது தவிர ஆவணி தேரோட்ட விழாவும் சிறப்பாக நடைபெறும் .



தஞ்சை -திருவையாறு சாலையில் உள்ள கண்டியூர் அருகில் உள்ளது திருவேதிக்குடி .மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பதை பார்த்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது .கோவில் கோபுரத்தில் செடிகள் வளர்ந்து நிற்கிறது . இங்கு ஒரு கால பூஜை தான் நடை பெறுகிறது.கோவில் காலை 10 மணிக்கு தான் திறக்கிறார்கள்.கோவில் பூஜை செய்பவருக்கும் காவலருக்கும் சம்பளம்ஏதும் இல்லை என்றும் சொன்னார்கள். அறநிலைய துறையின் கீழ் இயங்கும் கோவில் என்று தான் சொல்கிறார்கள்.பின்பு ஏன் இந்த அவல நிலை என்று  தெரியவில்லை..திருவேதிகுடி ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். திருஞானசம்பந்தர் நிறைய பதிகங்களில் திருவேதிகுடி குறித்து பாடியுள்ளார்.திருமண வரம் வேண்டுவோர் மங்கையர்க்கரசி உடனுறை வேதபுரீஸ்வரரைவேண்டினால் திருமணம் கை கூடுவது திண்ணம்.வேதபுரீஸ்வரர் ஒரு சுயம்புமூர்த்தி .ஒவ்வொரு பங்குனி மாதமும் 13-14 தேதிகளில் சூரிய ஒளி இறைவன் மேல் விழும் அதிசயத்தை இந்த கோவிலில் காணலாம் .வாழை தோப்பில் இருந்து இறைவன் சுயம்புவாக வந்ததால் இறைவனுக்கு மற்றொரு பெயர் வாழைமாடு நாதர் .பிரம்மா இங்கு சிவனை வழிபட்டதால் இந்த ஊருக்கு திருவேதிக்குடி என்று பெயர் வந்தது என்று சொல்லபடுகிறது.தி.ருநாவுக்கரசரும் இந்த சிவ ஸ்தலம் குறித்து பதிகங்கள் பாடியுள்ளார்.பொதுவாக உமையவள் அர்த்தநாரீஸ்வரரின் இடது புறம் தான் இருப்பது வழக்கம்.ஆனால் திருவேதிகுடியில் உமையவள் ஈசனின் வலதுபுறம் இருப்பதை காணலாம் .மங்கையர்க்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இறைவன் இங்கு இவ்வாறு காட்சி அளிக்கிறார்.முன்னொரு காலத்தில் வேத விற்பன்னர்கள் அதிக அளவில் இந்த ஊரில் இருந்ததாக நம்பபடுகிறது.ரிக் வேதம் ,யஜுர் வேதம் ,சாம வேதம் அதர்வ வேதம் நான்கிலும் சிறந்தவர்கள் இங்கு வாழ்ந்ததாக நம்பபடுகிறது .அப்பொழுது இந்த ஊரின் பெயர் சதுர்வேதி மங்கலம் . நான்கு வேதங்களிலும் சிறந்தவர்கள் இருந்ததால் இந்த காரண பெயர் இந்த ஊருக்கு இருந்திருக்கிறது.நான்கு வேதங்களிலும் இறைவனை வழிபடுவதை சுவாமி சன்னதிக்கு வெளியில் இருக்கும் விநாயகர் செவி சாய்த்து கேட்டதால் இந்த விநாயகருக்கு பெயர் செவி சாய்த்த விநாயகர்.. இன்றும் அந்த விநாயகர் சாய்ந்த நிலையில் இருப்பதை காணலாம்.இந்திரன் ,வியாச முனிவர் ,விஷ்ணு ஆகியோர் இங்கு சிவனை வழிபட்டதாக கூறபடுகிறது .இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோவில் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு ஐந்து கால பூஜை இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் மூன்று கால பூஜை நடக்கும் அளவுக்கு அரசும் ,அறநிலைய துறையும் ,பக்தர்களும் சேர்ந்து ஆவன செய்ய வேண்டும் என்பது பலரது ,குறிப்பாக இந்த ஊர் மக்களின் விருப்பம் .

Mangayarkarasi amman
இந்த கோவிலின் பெயர் பலகையில் திருமண தோஷம்,தடை நீக்கும் பரிகார ஸ்தலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது . திருமண தடை,தோஷம் பரிகாரத்திற்கு சம்பந்தர் ,திருநாவுக்கரசர் அருளிய கீழ்கண்ட பதிகம் கோவிலில் அறிவிப்பாக எழுதி வைத்துள்ளார்கள் .

"உன்னி இருபோதும் அடியேனும் அடியார்தம்
இடர் ஒல்க அருளி கன்னியரோடு ஆடவர்கள்
மாமணம் விரும்பி அருமங்கலமிக மின்இயலும்
நுன் இடை நன் மங்கையர் இயற்றுபதி வேதிகுடியே ' -சம்பந்தர்

இப்பாடலை கலை மாலை இருவேளையும் பாராயணம் செய்தால் திருமணம் விரைவில் நடக்கும் என்று சம்பந்தர் ஆணையிட்டு பாடிய திருத்தலம் தான் திருவேதிக்குடி .

திண்ணன் வினை தீர்க்கும் பிரான் திருவேதிக்குடி
நண்ண வரிய அமுதினை நாமடைந்தாடுதுமே ' - நாவுக்கரசர்

இன்று வரகூர் என்று அறியப்படும் இந்த ஊரின் பழைய பெயர் பூபதிராஜபுரம் . குடமுருட்டியாறு காவிரியின் கிளை ஆறு. குடமுருட்டி ஆற்று  கரையில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது .ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்ற  மகான் கிருஷ்ணா லீலா தரங்கிணி என்ற மகா காவியத்தை வரகூரில் தான் படைத்தார். ஆந்திரத்தை சேர்ந்த நாராயண தீர்த்தர் ஒரு நதியை கடக்கும் போது  ஏற்பட்ட திடீர் வெளள் பெருக்கால் தெற்கு நோக்கி பயணம் செய்கிறார். குடமுருட்டி ஆற்றை கடக்கும் பொது கடும் வயிற்று வலியால் .அவதிபடுகிறார். அன்று கனவில் தோன்றிய கடவுள் ஒரு வெள்ளை  வரஹத்தை (பன்றி ) பின் பற்றி செல்ல கட்டளையிடுகிறார்.அந்த வராகம் பூபதிராஜபுரத்தில் உள்ள பெருமாள் கோவில் உட்புறம்  சென்று மறைந்து விடுகிறது.அன்று முதல் ஊர் பெயர் வராஹபுரி என்று மாறி பின்பு மறுகி வரகூர் என்று இன்று அறியபடுகிறது என்பது இந்த ஊரின் தல வரலாறு .தன பிணி நீங்கியதை உணர்ந்த நாராயணர் வரகூரில் தங்கி மகாபாரதத்தில் உள்ள சாரத்தை உள்ளடக்கி கிருஷ்ணா லீலா தரங்கிணி என்ற காவியத்தை வடமொழியில் படைக்கிறார். நாராயணர் வரகூரில் தங்கி தான் இயற்றிய பாடல்களை பாடிய  பொழுது  திரைக்கு பின் பெருமாள்  நடனமாடியதாகவும் ,சலங்கை சத்தம் கேட்டதாகவும் சொல்லபடுகிறது . இன்னொரு சிறப்பு அனுமார் தாளம் போட்டதாவகவும் சொல்லபடுகிறது. அதனால் வரகூர் ஆஞ்சநேயருக்கு தாளம் தட்டி ஆஞ்சநேயர் என்று பெயர்.இந்த கோவிலில் கிருஷ்ணா ஜெயந்தி பெரிய திருவிழாவாக கொண்டாடபடுகி.றது வரகூர் கோவிலின் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தம் . வரகூர் பெருமாளின் பெயர் லக்ஷ்மிநாராயணர் .லக்ஷ்மி பெருமாளின் இடது தொடையில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். குழந்தை வரம் வேண்டுவோர் பெருமாள் காலடியில் வைத்து வேண்டிய கொலுசை அணிவது இங்கு வாடிக்கை. இன்னொரு சிறப்பு பெருமாள் கோவிலின் மிக அருகிலேயே சிவன் கோவிலும் உள்ளது . பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவிலில் ஆண்கள் மேல் சட்டையை கழட்டி விட்டு தான் உள்ளே செல்ல வேண்டும் .

தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் உள்ளது இந்த ராமர் கோவில். ராமரும் சீதையும் திருமண கோலத்தில் இந்த தலத்தில் காட்சி தருகிறார். லக்ஷ்மணரும் ஆஞ்சநேயரும் உடனிருக்கிறார்கள்.இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கு வடக்கு நோக்கி இருக்கும் ஹயக்ரீவர் சன்னதியும் உண்டு.ராமர் 14 ஆண்டு கால வனவாசாம் முடித்து திரும்பும் வழியில் வடுவூரில் உள்ள ரிஷிகள் அவரிடம் போக வேண்டாம் என்று மன்றாடினார்கள். ராமர் தன்னுடைய அழகிய சிலையை அவரே உடன் உருவாக்கினார்.ரிஷிகளே ராமருக்கு பதிலாக ராமர் உருவாக்கிய ராமர் சிலையின் அழகில் மயங்கி ராமருக்கு பதில் அந்த சிலையையே போதும் என்றனர் . திருவாரூர் தேரழகு, மன்னார்குடி மதிலழகு, வடுவூர் சிலையழகு என்று ஒருங்கிணைந்த தஞ்சாவூர் பக்கம் கிராமங்களில் கூறுவார்கள்.அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ராமர் விக்கிரஹத்தை அங்கு விட்டு செல்கிறார்.பின்னர் அவர்கள் அந்த சிலையை திருகண்ணபுரம் கொண்டு வைக்கிறார்கள். சிறிது காலத்திற்கு பின்பு அவர்கள் அந்த ராமர் சிலையுடன் சீதை ,லக்ஷ்மணன் ,மற்றும் ஹனுமான் சிலைகளையும் சேர்த்து திருத்துறைபூண்டி அருகில் திருஞாயிறு என்ற ஊரில் புதைத்து வைக்கிறார்கள் .

தஞ்சை ஆண்ட சரபோஜி மன்னர் கனவில் ராமர் வந்து அந்த இடத்தில் புதையுண்டு கிடக்கும் சிலைகளை பற்றி தெரிவிக்கிறார். அங்கு வந்து பார்த்த மன்னர் இந்த சிலைகளை தஞ்சை கொண்டு செல்லவிரும்பினார். ஆனால் வடுவூர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி வடுவூரிலையே அந்த ராமர் கோவில் அமைத்தார். அழகிய சிலைகளை வடுவூரில் உள்ள கோபாலன் கோவிலில் நிறுவிகிறார் . .

இது ஒரு பாடல் பெற்ற சிவ ஸ்தலம் . இந்த ஸ்தலத்திற்கு மற்றொரு பெயர் திருகண்ணார் கோவில். மயிலாடுதுறையில் இருந்து வைதீஸ்வரன் கோவில் செல்லும் பாதையில் குறுமாணகுடி செல்லும் 'பாகசாலை' விலக்கு பாதை உள்ளது . இந்த பாதையில் சுமார் ஒரு 4 கி.மீ சென்றால் கோவிலை  சென்று அடையலாம்.வாமனமூர்திக்கு (மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டவர் ) மற்றொரு பெயர் குறுமாணி .அவர் வழிபட்ட ஸ்தலம் என்பதால் இந்த இடத்திற்கு குறுமாணக்குடி என்று பெயர்.
இந்திரனக்குகௌதம  முனிவரின் மனைவி அகலிகை மேல் மோகம்.இதற்காக இந்திரன் முனிவர் வடிவத்தில் அகலிகையிடம் செல்கிறான் .வந்திருப்பது தன கணவர் அல்ல என்று தெரிந்திருந்தும் அகலிகை தவறு செய்ய சம்மதிக்கிறாள்.அந்த நேரம் பார்த்து முனிவர் திரும்ப வருகிறார். உடனே இந்திரன் பூனை வடிவம் எடுக்கிறான் . இதையறிந்து கோபம் கொண்ட முனிவர் இந்திரன் உடல் முழுவதும் ஆயிரம் யோனிகள் உண்டாகும் படி சபிக்கிறார் .அகலிகை கல்லாகும் படியும் சபிக்கிறார். அகலிகை சாப விமோசனம் கோருகிறார்.ராமர் காலடி பட்டதும் அகலிகைக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்கிறார்.அதே போல் இந்திரன் சாப விமோசனத்திற்கு பிரம்மாவிடம் வேண்டுகிறார்.அதற்க்கு பிரம்மா குறுமாணகுடி சிவனை வழிபாட்டு சாப விமோசனம் பெற வழி சொல்கிறார்.இந்திரன் குறுமாணகுடி தீர்த்தத்தில் நீராடி (இன்று அந்த மிக பெரிய தீர்த்தம் தண்ணீர் இல்லாமல் வற்றி இருக்கிறது சிவனை வழிபட அவனுடைய ஆயிரம் குறிகளும் ஆயிரம் கண்களாக மாறி இறைவன் ஏற்றுகொள்கிறார்.இன்றும் சிவலிங்கத்தில் ஆயிரம் கண்களை காணலாம்.அப்படி இத்தல இறைவன்  கண்ணாயிரமுடையார் ஆகிறார்.சம்பந்தர் ,மாணிக்கவாசகர் ,சேக்கிழார் ,ராமலிங்க அடிகளார் ஆகியோர் இந்த திருத்தலத்தை தரிசனம் செய்துள்ளார்கள் .
இங்குள்ள அம்மன் சன்னதிக்கு மேல் 12 ராசிகுள்ள கட்டங்கள் செதுக்கபடுள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கண் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் இங்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் சிறந்த பலன் உண்டு என்பதும் நம்பிக்கை. திருமணமாகாதோர் இங்கு வந்து சுவாமிக்கு மாலை சார்த்தி வழிபடுதலும், அவ்வாறு வழிபட்டோர் திருமணத்திற்கு பிறகும் இங்கு வந்து மாலை சார்த்துதலும் மரபாக உள்ளது. இந்த கோவில் சுமார் இரண்டாயிரம் வருடம் பழமையானது .சோழகர்களால் கட்டப்பட்ட கோவில் .

சுப்பிரமணிய சுவாமி கோவில் ,அல்சூர்-பெங்களூரு பெங்களூரு அல்சூர் பகுதியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது .அ ல்சூர் முருகன் கோவிலில் உள்ள முருகன் அறுபடை வீடான திருத்தணி முருகன் சிலை போலவே உள்ளது .இந்த கோவிலில் வள்ளி தெய்வானைக்கு தனி சன்னதிகள் உள்ளது.இது தவிர விநாயகர்,அர்த்த நாரீஸ்வரர் ,துர்கா ,சூரியநாராயணர் ,காலபைரவர் என்று தனி சன்னதிகள் உள்ளது .ஆதர்ஷ் தியேட்டர் அருகில் இந்த கோவில் உள்ளது. கோவிலுக்கு அருகிலேயே தெப்பகுளம் உள்ளது.இந்த கோவிலின் முக்கிய விசேஷம் காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் தினமும் நடக்கும் பஞ்சாம்ருத அபிஷேகம் தான். அல்சூர் சோமேஷ்வர் கோவிலின் எதிர்புறம் மிக அருகில் இந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

                                          

  நாமக்கல் ஆஞ்சநேய சுவாமி கோவில் , லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தின் நிர்வாகத்தில் வரும் கோவில் . லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்திற்கு நேர் எதிர்புறம் ஆஞ்சநேய சுவாமி ஆலயம் உள்ளது.மலை அடிவாரத்தில் உள்ள குடைவரை கோவில் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம். நரசிம்மரை நோக்கி வணங்கி நிற்பது  போல எதிர்புறம் ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது .ஆஞ்சநேய சுவாமி சிலை 18 அடி உயரம் கொண்டது . ஆரம்ப காலத்தில் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்திற்கு எதிர்புறம் வெட்ட வெளியில் தான் ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார்..தற்பொழுது கோவிலை சுற்றி மண்டபம் எழுப்ப பட்டிருந்தாலும் ஆஞ்சநேய சுவாமிக்கு மேல் கூரை ஏதும் இல்லாமல் இப்பொழுதும் வெட்டவெளியில் தான் இருக்கிறார். ஆஞ்சநேய சுவாமிக்கு மேல்புறம் கட்டடம் ஏதும் எழுப்ப இயலவில்லை என்றும் இங்கு பலராலும் சொல்லபடுகிறது . கிட்ட தட்ட 2000 ஆண்டு பழமையான கோவில் இது.நாமக்கல் ஆஞ்சநேய சுவாமியின் இன்னொரு சிறப்பு ,கையில் ஜெப மாலையுடனும் இடுப்பில் வாளுடனும் இங்கு பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். ஆஞ்சநேய சுவாமி கோவிலில் மிகவும் அழகாக அஷ்டபுஜ நரசிம்மர்,வைகுண்ட பெருமாள்,வராஹர்,உலகாண்ட பெருமாள் ஆகியோரின் வண்ண ஓவியங்கள் சுவர்களில் வரையப்பட்டுள்ளது .திருமண வரம் ,குழந்தை பேறு , கல்வியில் சிறப்பு வேண்டி அதிக அளவில் பக்தர்கள் இங்கு வருகிறார்கள். தேர்வு எழுத செல்லும் முன் மாணவர்கள் அதிக அளவில் நாமக்கல் ஆஞ்சநேயரை வந்து வணங்கி செல்கிறார்கள் .
லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தில் உள்ள நரசிம்மர் சிலை மலையை குடைந்து உருவானது. ஹிரண்ய வதம் செய்ததால் நரசிம்மரின் கை நகங்களின் கூர்மையை சுவாமி சிலையில் காணலாம்.மற்றுமொரு ஆதிசயம் சுவாமியின் உள்ளங்கையில் ரத்த கறை இன்றும் காண்பது தான். கருவறையில் நரசிம்மருடன் சனாதனர் ,சூரியன் ,சந்திரன் பிரம்மா ஆகியோரும் உள்ளனர்.வழக்கமாக லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தில் சுவாமியின் மடியில் லக்ஷ்மியை அமர்ந்த கோலத்தில் காணலாம் .ஆனால் இங்கு லக்ஷ்மி சுவாமியின் மார்பில் உள்ளார்.குடவரை கோவில் என்பதால் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்வது கிடையாது. உற்சவருக்கு  தான் இங்கு திருமஞ்சனம் செய்யபடுகிறது ..நாமகிரி தாயார் (மகாலட்சுமி)சன்னதி தனியாக கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது .
ஆஞ்சநேய சுவாமி நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் ஸ்நானம் செய்து கொண்டிருக்கும் பொழுது அவர் கையில் விஷ்ணுவின் சாளிக்ராம்  கிடைக்கிறது.அதை எடுத்து கொண்டு சுவாமி வான வீதியில் பறந்து வந்து  கொண்டிருந்தார்.பயணத்தின் போது மீண்டும் ஒரு முறை ஸ்நானம் செய்ய விரும்பினார்.அனால் அவர் சாளிகிராமை தரையில் எங்கும் வைக்க விரும்ப வில்லை .அப்பொழுது மகாலக்ஷ்மி தவம் செய்து கொண்டிருப்பதை பார்க்கிறார்.என்ன தவம் என்று வினவுகிறார். நரசிம்ம சுவாமி தரிசனம் வேண்டி தவம் செய்கிறேன் என்கிறார் மகாலட்சுமி.சாளிகிராமை தான் குளித்து வரும் வரை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி வேண்டுகிறார்.அன்ஞ்சநேய சுவாமியின் வேண்டுகோளை ஏற்று கொண்ட மகாலட்சுமி தாயார் ஒரு நிபந்தனை விதிக்கிறார் .குறிப்பிட்ட நேரத்தில் ஆஞ்சநேயர் வராவிட்டால் சாளிகிராமை தரையில் வைத்துவிடுவேன் என்று சொல்கிறார்.ஆஞ்சநேயசுவாமியால் குறித்த நேரத்தில் வர முடியவில்லை .மகாலக்ஷ்மி சாளிகிராமை தரையில் வைத்து விடுகிறார்.சாளிகிரமம் வளர்ந்து பெரிய மலை ஆகிறது .அது தான் நாமக்கல் மலை.நரசிம்மர் லக்ஷ்மி முன் தோன்றி தரிசனம் தருகிறார். ஆஞ்சநேயரும் நரசிம்ம சுவாமியை நோக்கி வணங்கி நிற்கிறார். இது தான் நாமக்கல் கோவில் தல வரலாறு. நாமக்கல் சேலத்தில் இருந்து 52 கி.மீ தொலைவில் உள்ளது .

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஆறாவது அறுபடை வீடான பழமுதிர்சோலை மதுரை அருகில் உள்ள அழகர் மலையில் உள்ளது . முதல் அறுபடை வீடான திருப்பரங்குன்றமும் ஆறாவது வீடான பழமுதிர்சோலையும் மதுரை அருகில் உள்ளது சிறப்புக்குரியது.இங்கு முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார் .கோவில் தாண்டி மலை முகப்புக்கு சென்றால் அங்கு என்றும் வற்றாத ஒரு நீரூற்று உள்ளது. நூபுர கங்கை என்று பெயர்.அருணகிரிநாதர் இந்த தலத்தை பற்றி திருப்புகழில் 16 பாடல்கள் இயற்றியுள்ளார்.நக்கீரரும் திருமுருகாற்றுபடையில் இந்த தலம் குறித்து பாடியுள்ளார். முருக பெருமான் ஔவையாரை சோதித்த நெல்லி மரம் இன்றும் இங்கு உள்ளது .பக்தர்கள் இந்த மரத்தையும் வழிபட்டு செல்கிறார்கள் . மலை அடிவாரத்தில் இருந்து வாகனம் மூலம் கோவிலுக்கு செல்ல மலை பாதை உள்ளது . நடந்து செல்ல காட்டு வழி பாதையும் உள்ளது .

அறுபடை வீடுகளில்  முதல் வீடு தான் திருபரங்குன்றம் . மதுரையில்  இருந்து  சுமார் 5 கி.மீ  தொலைவில் உள்ளது . 1050 அடி உயரம் உள்ள ஒரு மலை  அடிவாரத்தில் இந்த கோவில் உள்ளது.இது ஒரு குடைவரை கோவில் . மலையை  குடைந்து  தான்  மூல விக்கிரஹம் உருவாக்க பட்டுள்ளது  .நக்கீரர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருபரங்குன்றத்தில் தான் 'திருமுருகாற்றுப்படை ' இயற்றினார்' .திருசெந்தூரில்சூரனை வதம் செய்த பின்பு திருபரங்குன்றத்தில் முருகன் இந்திரனின்  மகள் தெய்வயானையை மணந்ததாக தான் தல புராணம் சொல்கிறது . சன்னதியில்  பிள்ளையார் ,சிவன்,துர்க்கை  விஷ்ணு என தனி தனி  சன்னதிகள் உள்ளது.  மலையை சுற்றி நிறையை சிறு குடைவரை கோவில்களில் உள்ளது . மலையின் பின்புறம் இன்னொரு குடைவரை கோவில் உள்ளது.இந்த கோவில் தென்பரங்குன்றம் என்று அறியபடுகிறது . இந்த சிவன்  கோவிலுக்கு  காசி     விஸ்வநாதர்  கோவில்  என்று பெயர். திருவண்ணாமலை போல இங்கும் பக்தர்கள்  பௌர்ணமி  அன்று கிரிவலம் செல்கிறார்கள் .இந்த கோவில் தற்பொழுது  இந்திய தொல்பொருள் கழகத்தின் கட்டுபாட்டில் உள்ளது .இந்து மதம் ,புத்த மதம் ,சமணர்கள் குறித்த பல அரிய கல்வெட்டுகள்  இந்த மலையில் உள்ளது.சமணர்களின் படுக்கை என்று அறியப்படும் அரிய கல்வெட்டுகளும் இங்கு உள்ளது .மேலும் இது  மதுரையின் தொன்மையை குறிப்பதும் ஆகும் .மலையின் மேல் புறம்  சமண துறவியின் நின்ற கோல சிலையும்  உள்ளது.காசி விஸ்வநாதகோவில்   அருகில் ஒரு   சுனை உள்ளது .காசி சுனை என்று இது அழைக்கபடுகிறது .இந்த மலையின் மேல் உள்ள குகையில் 18 சித்தர்கள்  சமாதி அடைந்ததாக சொல்லபடுகிறது .இந்த குகைக்கு யாரும் இது வரை   போக முடியவில்லை என்றும் சொல்கிறார்கள் .18 சித்தர்களும் இன்றும் அங்கு இருப்பதாக நம்பபடுகிறது .திருஞான சம்பந்தர் ,சுந்தர மூர்த்தி நாயனார் ,நக்கீரர் ,அருணகிரிநாதர்  ஆகியோர்  இந்த  தலம் குறித்து பாடல்கள் இயற்றியுள்ளனர் .இந்த மலையின்  இன்னொரு சிறப்பு மலை மேல் ஒரு முஸ்லிம் தர்கா உள்ளது .இந்த பகுதி சிக்கந்தர் மலை என்று அறியபடுகிறது .ஜெட்டாவை சேர்ந்த ஹசரத் சிக்கந்தர் சுல்தான்  பாதுஷாவும் , மதினாவில் இருந்து வந்த ஹசரத் சுல்தான் சையத் இப்ராஹிமும்  9 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்ததாக சொல்கிறார்கள் .அவர்களின் தர்கா தான் இது .கேரளாவில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் எல்லா மதத்தினரும் இங்கு வருகிறார்கள் .திருவண்ணாமலை போல இங்கும் மலை மேல்  திருகார்த்திகை அன்று தீபம் தீபம் ஏற்றுகிறார்கள் .

காடி சுப்ரமணிய சுவாமி கோவில் கர்நாடக மாநிலத்தில் மிகவும் புகழ் பெற்ற முருகன் கோவில். கர்நாடகாவில் இரண்டு புகழ் பெற்ற முருகன் கோவில்கள் உள்ளது.ஓன்று காடி சுப்பிரமணிய கோவில் .இது தொட்டபல்லாபூர் அருகில் உள்ளது. இது பெங்களூருவில் இருந்து சுமார் 60 கி.மீ.தொலைவில் உள்ளது .இன்னொன்று குக்கே சுப்ரமணிய கோவில்.இது மங்களூரு அருகில் சுப்ரமணியா என்ற கிராமத்தில் உள்ளது. ஆம்,அந்த ஊரின் பெயரே சுப்ரமண்யா தான்.இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது;காடி சுப்ரமணிய கோவில் பற்றியது. முருகன் கோவில் என்ற உடன் நம்மூரில் இருப்பது போல் முருகன் கையில் வேலுடன் மயில் மேல் அமர்ந்திருப்பது போல் சுவாமி சிலை இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.கர்நாடகாவில் பொதுவாக முருகனை சர்ப்பமாக தான் வழிபடுகிறார்கள்.கடுமையான சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் மற்றும் கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் முக்கியமாக இந்த இரண்டு முருகன் கோவிலில் ஏதாவது ஒன்றில் சர்ப்ப;வழிபாடு செய்து தோஷம் நீங்க வேண்டி கொள்கிறார்கள்.பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறிய உடன் சர்ப்ப் சிலைகளை கோவிலில் இதற்கென்றே உள்ளஅரச மரத்தடியில் வைக்கிறார்கள். காடி சுப்பிரமணிய ஆலயத்தில் உள்ள அரசமரத்தடியில் ஆயிர கணக்கில் சர்ப்ப சிலைகளை காணலாம். காடி சுப்பிரமணிய கோவிலில் உள்ள மூல சன்னதியில் உள்ள சிலை சுயம்பு ஆக வந்தது என்று சொல்ல படுகிறது. படமெடுத்த ஐந்து தலை சர்ப்பத்தினுள் சிறிய முருகன் சிலை உள்ளது.இதை கூர்ந்து நோக்கினால் மட்டுமே பார்க்க முடியும். முருகன் கிழக்கு நோக்கி உள்ளது. இதன் நேர் பின்புறம் அதே சிலையில் மேற்கு நோக்கி நரசிம்ஹர் சிலை உள்ளது. ஒரே கல்லில் இரண்டு சிலைகளும் உள்ளது. இரண்டு சிலைகளுமே சுயம்புவாக் வந்தது என்று நம்பபடுகிறது..பக்தர்கள் நரசிம்ஹரையும்,முருகனையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய ஏதுவாக் மூல ஸ்தானத்தில் ஒரு கண்ணாடி வைக்க பட்டுள்ளது. முருகனை நேராகவும் நரசிம்ஹரை கண்ணாடி வழியாகவும் தரிசிக்கலாம்.பொதுவாகவே கையில் வேலுடன் உள்ள முருகன் கோவில்களிலும் கர்நாடகாவில் முருகன் காலடியில் சர்ப்பம் வைத்திருப்பார்கள்..மிகவும் சக்தி வாய்ந்த முருகன் கோவில் காடி சுப்பிரமணிய கோவில்.

சங்கரன்கோவில் -கோவில்பட்டி சாலையில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த முருகன் கோவில் தான்  கழுகுமலை கோவில். கோவில்பட்டியில் இருந்து  சுமார் 20 கி.மீ  தொலைவில் உள்ளது இந்த திருத்தலம். இந்த கோவில் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது என அறியபடுகிறது. இது ஒரு புகழ் வாய்ந்த பாடல் பெற்ற ஸ்தலம் . அருணகிரிநாதர் இந்த ஆலயம் பற்றி பாடல் இயற்றி உள்ளார்.பிரபல கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்வாமி தீட்சிதரும் கழுகாசல மூர்த்தி குறித்து பாடல் இயற்றி உள்ளார்.காவடி சிந்து புகழ்  அண்ணாமலை ரெட்டியாரும்  கழுகுமலை முருகனை குறித்து பாடல் இயற்றி உள்ளார்.கழுகுமலைக்கு கழுகாசலம் என்று ஒரு பெயரும் உண்டு.தென் பழனி என்றும் கழுகுமலை அறியபடுகிறது.பழனியைப் போல மேற்கு முகமாக முருகன் சன்னிதானம் உள்ளதால்  தென் பழனி  என்று சொல்லபடுகிறது.இது ஒரு குடவரை ( Rock cut ) கோவில்.இந்த  ஊருக்கு இந்த பெயர் வருவதற்கு  இன்னொரு காரணமும் சொல்லபடுகிறது . கழுகு முனிவர்  என்று பெயருடைய சம்பாதி முனிவர் இந்த ஊர் முருகனை வழிபட்டதால் கழுகுமலை என்று  பெயர் வந்தது என்றும் சொல்லபடுகிறது.சம்பாதி முனிவர் ஜடாயுவின் சகோதரர் .ஸ்ரீ ராமர் சொன்னதின் பேரில் சம்பாதி இக்கோவில் தவம் செய்ததாகவும் சொல்லபடுகிறது.அகத்தியர்  பொதிகை மலை செல்லும் முன் இந்த கோவிலில் இளைப்பாறியதாகவும் சொல்லபடுகிறது. இக்கோவிலுக்கு மலையே விமானமாக திகழ்கிறது. குடவரைக்கோவில் என்பதால்  கோவில் பிரகாரம் சுற்றி வர வேண்டுமானால் மலையைச் சுற்றி கிரிவலம் வர வேண்டும். கருவறையும் , அர்த்த மண்டபமும் மலையைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ளன. கருவறையில் வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சியளிக்கிறார். மற்ற கோவில்களில் உள்ளதை போல இல்லாமல் முருகனின் வாகனமான மயில்  இடது பக்கத்தில் தோற்றம் அளிப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.தை பூசம்,பங்குனி உத்திரம் ,வைகாசி விசாகம் போன்ற விழாக்கள் இந்த கோவிலில் சிறப்பாக கொண்டாடபடுகிறது.மலையின் உச்சியில் பிள்ளையார் கோவிலும் (வெட்டுவான் கோவில் ), கோவிலுக்குச் செல்லும் வழியில் சமணர் சிலைகளும் அய்யனார் கோவிலும்  குகையும்,சுனையும் உள்ளன. இந்த கோவிலில் பல சிறந்த சிற்ப வேலைபாடுகளை காணலாம்.சமண தீர்த்தங்கரர்களின் அருமையான சிற்பங்களையும் இந்த மலையில் காணலாம்.

வட சென்னையில் உள்ள பழமையான சிவன் கோவில் திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் ஆலயம்.இது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம் .இது ஒரு 7ஆம் நூற்றாண்டு கோவில்.சுந்தரர் இந்த கோவில் பற்றி பாடல் இயற்றி உள்ளார். பட்டினத்தாரும் இந்த கோவிலுடன் தொடர்புள்ளவர். பூமியில் பிரளயம் ஏற்பட்ட சமயம் சிவபெருமான் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார்.அதனால்இத்தலத்திற்கு ஒற்றியூர் எனப் பெயர்.வெப்பத்தை இறைவன் ஒற்றிக் கொண்டதால் இறைவன் திருநாமம் ஒற்றீசர் எனவும் அழைக்கப்பட்டுகிறது.பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும், பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.இறைவனின் லிங்கத் திருமேனி புற்று மண்ணால் ஆனது. வருடத்தில் 3 நாட்களைத் தவிர மற்ற நாட்களில் லிங்கம் கவசத்தால் மூடியே இருக்கும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்பட்டு 3 நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த நாட்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.அம்மனின் திருநாமம் வடிவுடைய அம்மன் .சுவாமிக்கு தியாகராஜர் ,தியாகேசர் ,மாணிக்க தியாகர் என பல பெயர்கள் உண்டு .இந்த கோவிலுக்கு பல நாயன்மார்களும் அடியவர்களும் விஜயம் செய்து சுவாமி தரிசனம் செய்துள்ளார்கள்.அருணகிரிநாதர் ,பட்டினத்தார்,ராமலிங்க சுவாமிகள் ,சுந்தரர்,சம்பந்தர் ,கம்பர் என்று பல அடியவர்கள் இந்த கோவில் குறித்து பாடல்கள் இயற்றி உள்ளார்கள்.தவிர பட்டினத்தார் முக்தி பெற்ற ஸ்தலம் திருவொற்றியூர் .திருவேற்காடு ாலாம்பிகையையும்,திருவொற்றியூர் வடிவாம்பிகையும் திருவலிதாயம் ஜகதாம்பிகையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால் வாழ்வு சிறக்கும் என்று ஒரு நம்பிக்கை உண்டு.சுக்கிர தோஷம் உள்ளவர்களும் இந்த கோவிலில் வழிபாடு செய்து நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.

பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ளது இந்த பழமையான சோமேஷ்வர் கோவில் சோழ பரம்பரை மன்னர்களால் கட்டப்பட்ட கோவில் .பின்னர்  16  அம நூற்றாண்டில்  விஜயநகர சாம்ரஜ்யத்தால் அல்சூர் கிராமம்,பெங்களூரு நகரை உருவாக்கிய  ஒன்றாம் கெம்பே கௌடாவுக்கு நன்கொடையாக் அளிக்கப்பட்டது.அல்சூரு ஏரி இரண்டாம் கெம்பே கௌடா உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவில் முகப்பில் வன்னி மரத்தடியில் விநாயகர் சன்னதி உள்ளது. மூலவர் சோமேஷ்வர் ,அம்மன் காமட்சஅம்பாள் .இது போக அருணாச்சலேஸ்வர ,நஞ்சுண்டேஸ்வர ,பஞ்சலிங்கேச்வர என்று தனி சன்னதிகள் உண்டு. அம்மன் சந்நிதிக்கும் சுவாமி சன்னதிக்கும் நடுவில் வீர ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. காலபைரவர்,துர்க்கை,சரஸ்வதி ,தக்ஷினாமூர்த்தி மற்றும் நவ கிரகங்கள் சன்னதிகளும் உள்ளது.இந்த ஆலயத்தில் ஸ்வாமி மற்றும் அம்மன் கோவிகளின் வெளி புற சுவர்களில் அருமையான சிற்பங்களை செதுக்கியுள்ளார்கள்.இன்னொரு விசேஷம் ,இந்த ஆலயத்தில் வன்னிமரம் ,ஆல மரம் ,வில்வ மரம் ,நாக லிங்க மரம் ஆகியவை உள்ளது.நகரின் மையா பகுதியில் இருக்கும் இந்த புராதன கோவில் பார்க்க வேண்டிய ஒரு கோவில்.அல்சூர் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள பஜார் வீதியில் உள்ளது இந்த கோவில்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது சங்கரன்கோவில் .திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது .இது ஒரு சிவஸ்தலம் .ஈஸ்வரன் திருநாமம்  சங்கரலிங்கம் .அம்மன் திருநாமம் கோமதி . அம்மனுக்கு இன்னொரு திருநாமம் ஆவுடை அம்பாள் .அரசு  ஆவணங்களில்  இந்த ஊர் பெயர் சங்கர நைனார் கோவில் என்று தான் உள்ளது.காலபோக்கில் மருவி சங்கரன்கோவில் என்று தற்பொழுது அறியபடுகிறது. மதுரை ஆண்ட உக்கிரமபாண்டிய மன்னரால் பதினொன்றாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோவில் இது.இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு இங்கு சங்கரநாராயணன் சன்னதி உள்ளது .சிவபெருமானும் விஷ்ணுவும் சரிபாதியாக அமைந்துள்ள சன்னதி இது..லிங்கோத்பவர் தோன்றிய புற்று இந்த சுவாமி சன்னதியில் வட மேற்கு பகுதியில் காணலாம் .சுவாமி கோவிலில் யோகா நரசிம்மருக்கும் பிரம்மாவுக்கும் தனி சன்னதிகள் உள்ளது .பிரம்மா விஷ்ணு சிவன் என்று மூவரும் எழுந்தருளியுள்ள ஸ்தலம் சங்கரன்கோவில்.தல வரலாறு படி ஆடி மாதம் கோமதி அம்மன் புன்னைவனத்தில் தவம் செய்தாள்.ஆனால் ஈசன் தன மேனியின் ஒரு பாதியை நாராயணருக்கு தந்தார்.எனவே அம்மன் ஈசனை மணம் புரிய முடியவில்லை.அம்மன் ஐப்பசியில்மீண்டும் தவம் இருந்து சங்கரலிங்க சுவாமியை மணம் புரிந்தார் என்பது ஸ்தல  புராணம் .எனவே தான் இந்த கோவிலில் ஆடி தபசும் ஐப்பசி தபசும் மிகவும் விமரிசயாக கொண்டாடபடுகிறது .கோமதி அம்மன் சன்னதியில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை உள்ளது. சங்கர நாராயணர் சன்னதியில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதில்லை .இந்த கோவிலில் தினமும் ஏழு கால பூஜை நடைபெறுகிறது .அர்த்த ஜாம பூஜையின் போது அம்மன் சன்னதியில் பால் நிவேதனம் செய்யபடுகிறது .அந்த பால் பருகினால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் அருளுகிறாள் அன்னை கோமதி. இங்குள்ள புத்து மண் சகல நோய்களை தீர்க்கும் மருந்தாக கருதபடுகிறது.

சென்னை திருவான்மியூரில் உள்ளது அருள்மிகு மருந்தீஸ்வரர் ஆலயம்.திருவான்மியூர் பேரூந்து நிலையத்திற்கு மிக அருகாமையில் உள்ளது .கிழக்கு கடற்க்கரை சாலை (ஈஸ்ட் கோஸ்ட் ரோடு ) இங்கிருந்து தான் ஆரம்பம். இதுவும் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம் தான் .இறைவன் திருநாமம் மருந்தீஸ்வரர் மற்றும் பால்வண்ண நாதர், அம்மன் திருநாமம் திருபுரசுந்தரி .இந்த கோவிலில் இறைவன் அகத்திய முனிவருக்கும் ,வான்மீகிக்கும் இங்கு காட்சி அளித்ததாக வரலாறு. வசிஷ்டரின் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்க காமதேனு வான்மியூர் சுயம்பு லிங்கமான ஈசன் மேல் பால் சொரிந்து சாப விமோசனம் பெற்றதாக ஸ்தல வரலாறு. பால் சொரிந்ததால் வெள்ளை நிறமாக காட்சி அளித்த ஈசன் பால்வண்ண நாதர் என்ற பெயரால் வான்மியூரில் அறியபடுகிறார்.இத்தலத்தில் சிவ பெருமானும் அம்மனும் திருமண கோலத்தில் அகத்தியருக்கு காட்சி அளித்து நோய்கள் பற்றியும் மருந்துகள் பற்றியும் உபதேசம் செய்ததாக இன்னொரு தல வரலாறு உள்ளது.இந்த கோவிலில் உள்ள வன்னி மரத்தில் தான் இறைவனும் இறைவியும் காட்சி அளித்ததாக சொல்லபடுகிறது .இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு ,இந்த கோவிலில் நவக்கிரக சன்னதி கிடையாது .சூரியனும் சந்திரனும் சிவபெருமானை இந்த தலத்தில் வழிபட்டதால் நவக்கிரக சன்னதி கிடையாது ன்று ொல்லபடுகிறது.நோய்களில் இருந்து மீள்வதற்கு மருந்தீஸ்வறரை வேண்டி பால் அபிஷேகம் செய்தால் நோய்கள் குணமாகும் என்று நம்பபடுகிறது.திருவொற்றியூர் கோவில் உள்ளது போல இங்கும் திருவாரூர் தியாகராசர் சன்னதி உள்ளது .வெளி பிராகாரத்தில் 3 கணபதி சன்னதி ஒன்றும் உள்ளது. இங்கு 3 விநாயகர் ஒன்றாக காட்சி அளிக்கிறார்கள் .

முருகனின் அறுபடை வீடு கோவில்களும் ஒரே இடத்தில் அமைந்திருப்பது தமிழகத்தில் கோவை அடுத்துள்ள சூலூரிலும் ,சென்னை பெசன்ட் நகரிலும் அமைந்துள்ளது . இங்கு அறுபடை வீடு ஊர்களின் பெயர்களிலேயே முருகனுக்கு தனி சன்னதிகள் உண்டு . கோவை கோவில் சாலை ஓரத்திலும் , சென்னை கோவில் கடற்கரை அருகிலும் அமைந்துள்ளது. தற்பொழுது இந்த வரிசையில் பெங்களூரில் குறிஞ்சி கடவுள் முருகனுக்கு ஒரு சிறிய குன்றின் மேலே அறுபடை வீடு கோவில்கள் அமைத்துள்ளார்கள் . கண்டிப்பாக தரிசனம் செய்து பரவசம் அடைய வேண்டிய ஒரு கோவில் . இந்த கோவிலுக்கு பல சிறப்புகள் உண்டு . மைசூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ராஜ ராஜேஸ்வரி நகரில் உள்ள பெம்ல் லே அவுட்டில் ,இந்த ஷண்முகர் கோவில் அமைந்துள்ளது.

ஒரே இடத்தில் அறுபடை வீட்டு முருகனையும் தரிசனம் செய்த பலன் கிடைக்கும்.ஸ்ரின்கேரி சங்கராச்சார்யா சுவாமிகளின் உத்தரவு படி அருணாச்சல முதலியார்  என்பவர் இந்த கோவிலை உருவாக்கி உள்ளார்.சற்று தொலைவில் இருந்து பார்த்தாலும் குன்றின் மேல் ஆறு முகங்களும் தெரியும் படி கோபுர அமைப்பு உள்ளது .முருகன் சன்னதிகள் குன்றின் மேல் வட்டவடிவத்தில் அமைத்துள்ளார்கள் .கீழே பஞ்சமுக விநாயகர் சன்னதி உள்ளது.

கோவிலின் உச்சியில்  சூரிய ஒளியை உள்வாங்கும் நான்கு  உணரிகள் பொருத்தி உள்ளார்கள்.இதில் இரண்டு உணரிகள் பக்கவாட்டிலும் இரண்டு செங்குத்தாகவும் பொருத்தி உள்ளார்கள் .இவைகள் காலை முதல் மாலை வரை  அதிக பட்ச சூரிய ஒளியை உள்வாங்கும் திசைக்கு தானாகவே இடம் மாற்றி கொள்கிறது.இப்படி உள்வாங்கப்படும் சூரிய ஒளி காலை முதல் மாலை வரை மூல விகரகத்தின் மேலும் விழும் படி அமைத்துள்ளார்கள்.இதை சூர்யா கிரண அபிஷேகம் என்று சொல்கிறார்கள் .இது தவிர கோபுர உச்சியில் ஒரு பளிங்கு குவிமாடம் உள்ளது .இது 42 அடி உயரத்தில் அமைத்துள்ளார்கள் .இதில்  ஒரு இஞ்சு அகலத்தில் 2500 பளிங்கு கற்கள் பதித்துள்ளார்கள் .பகல் நேரத்தில் சூரிய ஒளி இந்த கற்களின் மேல் படும் பொழுது அழகிய வானவில் நிறங்களை அதில் காண முடியும் .இரவில் 27 வாட் LED விளக்குகளால் ஒளிமயமாகிறது .அப்பொழுது இந்த பளிங்கு கற்களில் இருந்து 16 விதமான வண்ணங்கள் வெளிபடுகிறது.ஏறக்குறைய 138 விதமான வெவ்வேறு வடிவங்களாக  வெளிபடுகிறது .சுற்று வட்டாரத்தில் 10 கி.மீ ஆரத்திற்கு இந்த ஒளிமயமான காட்சிகள் தெரியும் என்று சொல்லபடுகிறது .பளிங்கு கோபுரம் நல்ல உயரத்தில் குன்றின் மேல் இருப்பதால் இது சாத்தியமே.

கேரள மாநிலத்தின் தலை நகரமான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது அனந்த பத்மநாப சுவாமி திரு கோவில்.பெருமாள் அனந்த சயன கோலத்தில் அமர்ந்திருக்கும் கோவில் இது .அதனால் தான் இந்த நகருக்கு அனந்தபுரி என்று பெயர். அதுவே பிற்காலத்தில் திருவனந்தபுரம் என்று அழைக்கபடுகிறது .பெருமாளின் 108 திவ்ய ஸ்தலங்களில்   இதுவும் ஓன்று.திவ்ய பிரபந்தத்தில் இந்த கோவில் குறித்த பாசுரங்கள் உள்ளது. தமிழ் ஆழ்வார்கள் இந்த கோவில் குறித்து பாசுரங்கள் இயற்றி உள்ளனர்.கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாறு என்ற இடத்தில் உள்ள ஆதிகேசவபெருமாள் கோவில் போன்றே உருவாக்கிய கோவில் தான் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவில். ஆதிகேசவ பெருமாள் கோவிலிலும் பெருமாள் சயன கோலத்தில் தரிசனம் தருகிறார்.பத்மநாப சுவாமி கோவிலை விட பழமை வாய்ந்தது திருவட்டாறு அதிகேசவ பெருமாள் ஆலயம். இதுவும் 108 திவ்ய தேசங்களில் ஓன்று.நம்மாழ்வார் திருவட்டார் கோவில் குறித்து 11 பாசுரங்கள் பாடியுள்ளார்.திருவனந்தபுரம் கோவிலில் பெருமாள் யோகா நித்திரையில் இருப்பதாக கூறபடுகிறது.மூல சன்னதியில் பெருமாள் ஆதிசேஷன் மேல் சயன கோலத்தில் உள்ளார்.அவரது வலது கை சிவ லிங்கத்தின் மேல் வைத்துள்ளது போல் உள்ளது .ஸ்ரீதேவி ,பூதேவி சமேதராக காட்சி அளிக்கிறார்.இந்த கோவிலின் பொக்கிஷங்கள் ஆறு ரகசிய அறைகளில் பாதுகாகபடுகிறது .இதில் ஒரு அறை பத்மநாப சுவாமிக்கு உரியது என்றும் கோவில் பொக்கிஷங்களுடன்  தொடுர்புடயது அல்ல என்றும் நம்பபடுகிறது.அந்த அறையில் ஒரு ஸ்ரீ சகரமும் ,பத்மநாப சுவாமி விக்ரஹமும் உள்ளதாக சொல்லபடுகிறது.இந்த கோவிலின் மிக பெரிய திருவிழா என்பது 'லக்ஷ தீப திருவிழா' தான் .இந்த திருவிழா ஆறு வருஷங்களுக்கு  ஒரு முறை மட்டும் கொண்டாடபடுகிறது .இந்த விழாவிற்கு முன்பு 56 நாட்கள் வேத மந்திரங்கள் பாராயணம் செய்யபடுகிறது .விழாவின் கடைசி நாளன்று லக்ஷ தீபங்கள் கோவிலை சுற்றி ஏற்றபடுகிறது .லக்ஷ தீப திருவிழா அடுத்து 2014 ஆம் ஆண்டு நடக்க உள்ளது .இந்த கோவிலில் கேரள கோவில்களில் உள்ள வழக்கப்படி முழுகால் பான்ட் அணிந்து செல்ல அனுமதியில்லை . சிறுவர்கள் அரைகால் பான்ட் அணியலாம் .மேல் சட்டை அணிய முடியாது .பான்ட் அணிதிருப்பவர் கண்டிப்பாக வேஷ்டி அணிந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கபடுவார். அது போல் பெண்களுக்கு சுரிதார் மற்றும் பான்ட் அணிய அனுமதியில்லை .அவர்கள் கண்டிப்பாக சுரிதார் மேல் ஒரு வேஷ்டி  அணிந்து தான் செல்ல வேண்டும்.இல்லை என்றால் கோவில் உள் செல்ல அனுமதி மறுக்கப்படும் .

திருநெல்வேலி நகரின் மைய பகுதியில் உள்ளது அருள்மிகு நெல்லையப்பர் கோவில் . இறைவன் திருநாமம் நெல்லையப்பர் .அம்மன் திருநாமம் காந்திமதி . ஸ்தல வரலாறு படி ஒரு சிவ பக்தன் தினமும் வீடு வீடாக சென்று பெற்று வந்த நெல்லை இறைவன் நைவேதியத்துக்கு கொடுப்பது வழக்கம் .இப்படி சேகரித்த நெல்லை சன்னதி முன் உலரவிட்ட பின் அவர் குளிக்க செல்வது வழக்கம் .ஒரு நாள் அவ்வாறு குளிக்க சென்ற பொழுது திடீரென்று மழை பெய்திருக்கிறது.நெல நனைந்து விடுமே என்ற பதட்டத்தில் பக்தன் வேகமாக வந்த பார்த்த பொழுது ஒரு அதிசயத்தை கண்டார்.நெல் உலருவதற்கு போட்டிருந்த  இடத்தில் மட்டும் மழை பெய்யவில்லை .அதை சுற்றி மட்டும் மழை பெய்திருந்தது .நெல் உலர்த்திய இடத்தில் வெயில் அடித்தது . இறைவன் நெல்லுக்கு வேலி அமைத்து காத்ததினால் இந்த நகருக்கு திருநெல்வேலி என்ற காரண பெயர் வந்தது.அதுவரை இந்த ஸ்தலத்தின் பெயர்  வேணுவனம் என்று இருந்ததாக வரலாறு .இன்னொரு சிறப்பு சிவபெருமான் நடராச பெருமானாக நடனமாடிய ஐந்து திருசபைகளில் ,இதுவும் ஓன்று .நெல்லைஅப்பர் கோவில் தாமிரை சபை என்று அழைக்க படுகிறது .இங்கும் மதுரை மீனாக்ஷி கோவிலில் உள்ளது போல ஒரு ஆயிரம் கால் மண்டபம் உள்ளது .ஆண்டுதோறும் அம்மன் திருகல்யாணம் இந்த மண்டபத்தில் நடைபெறும் .இரண்டாவது பிரகாரத்தில் தாமிரை சபை உள்ளது .மூன்றாவது பிரகாரத்தில் முரக பெருமானுக்கு தனி சன்னதி உண்டு.மயில் அமர்ந்த கோலத்தில் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார்.இன்னொரு சிறப்பு தமிழகம் எங்கும் உள்ள கோவில்களில் மார்கழி மாதம் அதிகாலை 4 மணிக்கே திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும் .அனால் நெல்லையப்பர் கோவிலில் மார்கழி சிறப்பு ஆராதனைகள் இல்லை.அதற்க்கு பதில் கார்த்திகை மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கே திறந்து சிறப்பு ஆராதனைகள் செய்யபடுகிறது . இதை பற்றி மேலும் விவரம் தெரிந்தவர்கள் எதனால் இவ்வாறு செயபடுகிறது என்று தெரிவிக்கலாம் .இன்னொரு சிறப்பு இங்கு நந்தி வெள்ளையாக உள்ளது .

நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் பாதையில் உள்ளது முறப்பநாடு .இந்த ஊரில் உள்ளது தான் கைலாசநாதர் கோவில். இந்த சிவாலயமும் தாமிரபரணி நதி கரையில் உள்ளது. நவகைலாய கோவில்களில் இதுவும் ஓன்று. இந்த கோவில் குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது . தக்ஷின காசி என்றும் இந்த ஸ்தலம் அறியபடுகிறது . இங்கு தாமிரபரணியில் குளித்துவிட்டு கைலாசநாதரை வழிபட்டால் காசியில் ,கங்கை நதியில் ஸ்நானம் செய்தது போல் என்றும் நம்பபடுகிறது.இந்த கோவிலின் நந்திக்கு குதிரை முகம் இருப்பது ஒரு விசேஷம்.சோழமன்னன் ஒருவனுக்குப் பெண்குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தையின் முகம் குதிரை முகமாக இருந்தது. பெண்குழந்தைக்குக் குதிரை முகமா என வருந்திய மன்னன், முகம் மாறவேண்டி சிவனை எண்ணிப் பிரார்த்தித்தான். சிவபெருமான் மன்னன் கனவில் தோன்றி தாமிரபரணியின் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் நீராடி வழிபாடுகள் செய்யச் சொல்ல, மன்னனும் அவ்வாறே செய்து வந்தான். நாளா வட்டத்தில் குழந்தையின் முகமும் மனித முகமாக மாறியது.முன் பிறவியில் செய்த பாவத்தால் குதிரை முகத்தோடு பிறந்த மன்னன் மகளின் பாவத்தை ஈசன் நந்தியை ஏற்க வைத்ததாகவும், அதன் காரணமாகவே நந்திக்குக் குதிரை முகம் என்றும் சொல்லுகின்றனர்.அம்பாள் பெயர் சிவகாமி அம்மை. அம்பாளுக்குத் தனிச் சந்நிதி உண்டு.கலை ஏழு மணி முதல் மதியம் 12 மணி வரை கோவில் திறந்திருக்கும். மாலை 7 மணிக்கு கோவில் நடை சாத்துகிறார்கள்.இங்குள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றது.

தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ள சிவன் கோவில் தான் அம்மநாதர் கோவில். நெல்லை மாவட்டம் ,சேரன்மகாதேவியில் உள்ளது இந்த கோவில்.சுவாமியின் திருநாமம் அம்மநாதர் அல்லது அம்மையப்பர் என்பதாகும் .அம்பாளின் திருநாமம் ஆவுடைநாயகி .அம்மனுக்கு இன்னொரு திருநாமமும் உண்டு.கோமதி அம்மன் என்பது தான் அந்த திருநாமம். நெல்லை ,மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் நவ கைலாய கோவில்கள் உள்ளது .நவகைலாய கோவில்களில் ஓன்று தான் ,இந்த அம்மநாதர் கோவில். இங்கும் நந்தி கொடிமரத்தில் இருந்து சற்று விலகிய படி காணலாம்.மேலும் கொடிமரத்தில் நந்தனார் சிலை உள்ளது .அதனால் நந்தனார் இங்கு தரிசனம் பண்ணியிருக்கலாம் என்றும் நம்பபடுகிறது.இந்த கோவிலில் மற்றொரு சிறப்பு ,திருமண தோஷம் உள்ளவர்கள் இங்கு சிவனுக்கு மாதுளம் சாறு அபிஷேகம் செய்கிறார்கள்.இக்கோவிலை கட்டியது இரு சகோதரிகள் என்றும் சொல்லபடுகிறது. சுவாமி சன்னதிக்கு முன்பு உள்ள மண்டபத்தில் இந்த இரு சகோதரிகள் நெல்லு குத்தும் சிற்பமும் உள்ளது.இந்த கோவில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உள்ளதால் காலை 7 மணியளவில் நடை சாத்திவிடுகிறார்கள் .அதே போல் மாலையிலும் 6 .30 மணியளவில் நடை சாத்தி விடுகிறார்கள் .கோவிலுக்கு செல்லும் பாதையும் செப்பனிட வேண்டும்.

கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழியில் சடைமுடிநாத சுவாமி கோவில் உள்ளது. அம்பாள் பெயர் பெரியநாயகி . இந்த கோவிலில் தான் ஸ்வேதா விநாயகர் அல்லது வெள்ளை பிள்ளையார் சன்னதி உள்ளது .இந்த கோவில் வெள்ளை பிள்ளையார் கோவில் என்றே பிரபலமாக அறியபடுகிறது .இத்தலத்தில் காவிரி நதியானது ஈசனை வலம் சுழித்து வழிபட்டு சென்றதால் திருவலஞ்சுழி என்னும் காரணப்பெயர் பெற்றது.அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை மிக அருகில் உள்ளது.இந்த விநாயகருக்கு மற்றொரு பெயர் ஸ்வேதா விநாயகர் என்பதாகும்.இந்த விநாயகர் மூர்த்தி 9 அங்குலம் மட்டுமே உள்ள வெள்ளை நிற விநாயகர். தேவர்கள் திருப்பாற்கடல் கடையும் பொழுது விநாயகரை வழிபடாமல் ஆரம்பித்து விட்டார்கள் .அதனால் அந்த காரியம் தடைபட்டது.உடனே தேவேந்திரன் கடல் நுரையயே பிள்ளையார் உருவாக்கி பூஜை செய்தான்.பூஜை முடிந்த உடன் பிள்ளயார அசைக்க முயன்ற பொது முடியவில்லை .அதனால் இந்த விநாயகருக்கு இன்னொரு பெயர் நுரை விநாயகர்.ஸ்வேதா விநாயகர் சன்னதி முன் 16 துளைகளுடன் கூடிய ஒரு பலகணி உள்ளது.பாடல் பெற்ற சிவஸ்தலமாக இருந்தாலும் இந்த பகுதியில் இந்த கோவில் வெள்ளை பிள்ளையார் கோவில் என்றே அறியபடுகிறது . தடைபட்ட காரியங்கள்தடை விலகி நடை பெறுவதார்க்கு ஸ்வேதா விநாயகர் அருள் புரிவார் என்பது நம்பிக்கை .அதனால் இந்த விநாயாகர் பரிகார விநாயகர் என்றும் அறியபடுகிறது

பெங்களூரு ஹனுமந்த நகரில் உள்ள கோவில் குமாரஸ்வாமி கோவில் .பசவனகுடியில் உள்ள ஒரு சிறு குன்றின் மீது உள்ளது இந்த குமாரஸ்வாமி கோவில்.இந்த சிறு குன்றை mount of joy என்று இந்த பகுதியில் சொல்கிறார்கள்.வெகு எளிதாக ஏற கூடிய வகையில் படிகள் அமைக்கபட்டுள்ளது.இந்த கோவிலில் பூஜை செய்யும் பூசாரிகள் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள்.இந்த கோவிலின் அடிவாரத்தில் ஒரு பஞ்சமுகி விநாயகர் உள்ளது.வினயாகர் சன்னதிக்கு எதிர்புறம் நவக்கிரக சன்னதி உள்ளது .இரு புதல்வர்களுடன் ம்ருத்யன்ஜர் சுவாமியின் சன்னதியும் உள்ளது .இங்குள்ள முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை மிகவும் விமரிசையாக கொண்டாட படுகிறது.அந்த சமயத்தில் அநேக முருக பக்தர்கள் இங்கு காவடி எடுக்கிறார்கள்.இங்கு வரும் ஏராளமான முருக பக்தர்களுக்கு தீராத பல நோய்களும் தீர்ந்ததாக நம்பபடுகிறது . கண்டிப்பாக பார்க்க வேண்டிய கோவில் இது .



திருசெங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்.சம்பந்தர் இந்த சிவ ஸ்தலம் பற்றி பதிகம் பாடியுள்ளார்.அருணகிரிநாதரும் செங்கோட்டு வேலவன் குறித்து பதிகம் பாடியுள்ளார்.நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது திருச்செங்கோடு ஈரோடில் இருந்து 18கி.மீ தொலைவில் உள்ளது. நமகல்லில் இருந்து 32 கி.மீ தொலைவில் உள்ளது . சேலத்தில் இருந்து 27 கி.மீ தூரத்தில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து கோவில் வரை 1200 படிகள் கொண்ட நடை பாதை உள்ளது. வாகனங்கள் மேலே செல்வதற்கு மலை பாதையும் உள்ளது .சுமார் 2 .5 கி.மீ உள்ளது இந்த மலை பாதை .இந்த கோவிலில் சிவன் ஆண் பாதியாகவும் பெண் பாதியாகவும் காட்சி தருகிறார்.வலப்பக்கம் பார்வதியாகவும் இடப்பக்கம் சிவன் ஆகவும் காட்சி தருகிறார்.அதனால் இறைவனுக்கு உமையொருபாகன் என்ற காரண பெயரும் உண்டு.இங்குள்ள மூலவர் சிற்பம் உளி படாத சுயம்பு சிற்பம் என்று சொல்லபடுகிறது.தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிப்பர். மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது.படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. நாக தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.ஆதிசேஷன் மஹாவிஷ்னு ஆகியோர் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர். ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் மஹாவிஷ்னு தனிக்கோயிலில் காட்சி தருகிறார். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது இவருக்கு தனியே கொடியேற்றி 10ம் நாளில்திருக்கல்யாணமும்பின் தேரோட்டமும் நடக்கும். சிவராத்திரியன்று இரவில் இவருக்கு 4 கால பூஜை நடப்பது விசேஷம். ஏகாதசி நாட்களில் கருடசேவை சாதிப்பார்.இந்த கோவிலில் ஆதி சேஷனுக்கு தனி சன்னதி உள்ளது. தவிர , ஆதிகேசவ பெருமாளுக்கு ஒரு சன்னதி ,பெருமாள் சன்னதி முன் கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளார். மீனாக்ஷி அம்மன்,குபேர லக்ஷ்மி,விஷ்ணு துர்கா,நரசிம்மர்,மல்லிகார்ஜுனர், ஆகியோருக்கும் இங்கு சன்னதி உள்ளது. நாகலிங்கம் என்று நாகேஸ்வரருக்கு ஒரு தனி சன்னதி உள்ளது. கோவில் மிகவும் சுத்தமாக உள்ளது. மலை மேலிருந்து திருச்செங்கோடு நகரின் அழகிய தோற்றம் காணலாம். நிறைய மண்டபங்கள் உள்ளது .பக்தர்கள் அமர்ந்து இளைப்பாற்ற வசதியாக உள்ளது. கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு கோவில்.


பொதுவாக் சிவன் கோவில் மலை மீது இருப்பது மிகவும் அபூர்வம் என்று சொல்லபடுகிறது.ஓசூர்-கிர்ஷ்ணகிரி தேசீய நெடுஞ்சாலையில் இருந்து மலை கோவில் செல்லும் பாதை பிரிகிறது.இது ஒரு சின்ன மலை தான்.கோவில் வரை வாகனங்கள் செல்வதற்கு மலை பாதையும் உள்ளது.பக்தர்கள் நடந்து மலை ஏறுவதற்கு படிகளும் உள்ளது. இது ஆயிரம் ஆண்டு பழமை உள்ள கோவில். இந்த கோவிலுக்கு கர்நாடகா ,ஆந்திரா மற்றும் தமிழகத்தில் இருந்து நிறைய பதர்கள் வருகிறார்கள்.இங்கு றைவனின் பெயர் சந்திரசூடேஸ்வரர் என்றும் இறைவியின் பெயர் மரகதாம்பாள் என்பதும் ஆகும்.கயிலையில் இருந்து வரும் பொழுது இறைவன் ஒரு பல்லியின் வடிவம் கொண்டதாகவும் ,அந்த அழகிய பல்லியை பின் தொடர்ந்து வந்த அம்பாள் இந்து மலைக்கு வந்தாதகவும் சொல்லபடுகிறது. மலை மேல் இரு முனிவர்கள் தவம் செய்து வந்தார்கள்.அவர்களின் தவ வலிமையினால் அவர்கள் வந்திருக்கும் பல்லி இறைவன் என்று அறிந்து பல்லியை பிடிக்க முயலுகிறார்கள். அப்பொழுது அந்த பல்லி மறைந்து விடுகிறது .இதை பார்த்து கோபமுற்ற அம்மன் முனிவர்களுக்கு சாபம் அளிக்கிறாள். பின்பு தவம் செய்த அம்மன் முன் இறைவன் தோன்றியதாக தல வரலாறு சொல்கிறது.இன்றும் கோவில் அமைந்திருக்கும் மலை பாறையின் மீது ஒரு பல்லியின் வடிவம் உள்ளதாக சொல்ல படுகிறது. மலை மேல் இருந்து ஓசூர் நகரின் அழகை ரசிக்கலாம். இந்த கோவிலில் இன்னொரு விஷேஷம் இங்கு ஒரு காளிகாம்பாள் சன்னதி உள்ளது தான்.



பெங்களூரு பன்னேர்கட்டா சாலையில் ஒரு மீனக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில்உள்ளது .மீனக்ஷி மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதி தவிர இந்த கோவிலின் வெளி பிராகாரத்தில் பிள்ளையார்,முருகன் வெங்கடாசலபதி ,ஐயப்பன் ,நவகிரகாம் ,ஆஞ்சநேயர் போன்ற சன்னதிகளும் உள்ளது. வெளிபிராகாரம் மிகவும்பெரிதாக உள்ளது .மெஜஸ்டிக்கில் இருந்து பன்னேர்கட்டா செல்லும் வோல்வோ ஏசி பேரூந்தில் வந்தால் கோவில் முன் நிறுத்தம் உள்ளது.அல்லது டயரி சர்க்கிளில் இருந்தும் இங்கு வரலாம். மதியம் 1 மணி வரை கோவில் திறந்திருக்கும் .பின்பு மாலை 4 .30 மணிக்கு மீண்டும் திறப்பார்கள் . பெங்களூரில் இதை விட பழமையான ஒரு மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில் சிவாஜி நகர் பேரூந்து நிலையம் அருகில் உள்ளது. இது 150 ஆண்டு பழமையான கோவில். கல்யாண சுந்தரர் ஆக இங்கு சுவாமி எழுந்தருளி உள்ளார்.

நரசிங்கம் என்ற கிராமம் மதுரை மேலூர் சாலையில் 8 கி.மீ தொலைவில் உள்ளது.இங்குள்ள மலை அடிவாரத்தில் யோக நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த ஆலயம் மலையை குடைந்து உருவான கோவில்.கி.பி.770 ஆண்டு உருவான கோவில்.நரசிம்ம பெருமாளின் சிலை மலை பாறையில் செதுக்கபட்டுள்ளது.இந்த ஆலயத்திற்க்கு முன்பு நரசிங்கவல்லிக்கு ஒரு கோவில் உள்ளது.இன்னொரு சிறப்பு இந்த ஆலயம் பிரசித்தி பெற்ற இரு பெருமாள் கோவில்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.வடக்கே அழகர் கோவில்,கிழக்கே திருமோகூர் காளமேக பெருமாள் கோவில்.ரோமசா என்ற முனிவர் குழந்தை வரம் வேண்டி இந்த இடத்தி ல் தவம் இருந்ததாகவும் நரசிம்மர் உக்கிர நரசிம்மராக இங்கு காட்சி அளிததாவகவும் ஸ்தலபுராணம். பெருமாளின் கோபத்தை தணிக்க மகாலக்ஷ்மி இங்கு நரசிங்கவல்லியாக அவதரித்த பின்பு கோபம் தணிந்து பெருமாள் யோக நரசிம்மராக காட்சி அளிப்பதாக சொல்லபடுகிறது.பின்பு அந்த முனிவருக்கு வேண் டிய வரம் அளித்ததாகவும் வரலாறு.மாசி மாதம் மகம் நட்சதிர நாளில் இங்கு நரசிம்ம ஜெயந்தி கொண்டாட்படுகிறது.அழகர் கோவிலை சுற்றியுள்ள் கோட்டை இரணியன் கோட்டை என்று அறியபடுகிறது.இந்த சுவரின் நுழைவாயிலின் மேலே ஒரு யோக நரசிம்மர் சிலை உள்ளது.அழகர் கோவிலின் வெளி பிரகாரத்தில் ஒரு யோக நரசிம்மர் சிலை உள்ளது.இந்த சிலை மிகவும் உக் கிரமாக காட்சி அளிக்கும்.ஜுவால நரசிம்மர் என்றும் இந்த பெருமாள் அறியபடுகிறார்.பெருமாளின் கோபம் தணிய தினமும் நல்லெண்ணையில் அபிஷேகம் செய்யப்டுவதாக சொல்லபடுகிறது.இந்த பெருமாள் இருக்கும் இடத்திற்க்கு மேல் கூரையில் ஒரு துவாரம் உள்ளது.பெருமாளின் கோபாக்கினியால் இந்த தூவாரம் ஏற்பட்டதாக சொல்லபடுகிறது.











இது தமிழகத்தில் உள்ள சிவகங்கை அல்ல. பெங்களூரு அருகில் உள்ள தும்கூரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள ஒரு பழமையான கோவில்.கோவில் மலை உச்சியில் உள்ளது.சிறிய மலை தான் .மேலே செல்வதற்க்கு படிகள் உள்ளது.ஆலயம் மலையை குடைந்து கட்டபட்டதால் மேர்கூரை மிகவும் தாழ்வாக உள்ளது.அதனால் காற்றோட்டம் மிகவும் குறைவாக உள்ளது.சிறிது நேரம் தான் சன்னதி உள்ளே நிற்க இயலும்.அதற்க்குள் வியர்த்து விடும்.ஒரு புறம் இருந்து பார்த்தால் மலை சிவ லிங்க வடிவில் காட்சி அளிக்கிறது.கோவில் இருக்கும் ஊருக்கு பெயர் டோப்ஸ்பேட்டை.இந்த கோவில் தக்ஷிண காசி என்றும் அறியபடுகிறது.மூலவர் பெயர் கங்காதீஸ்வரர்.மலைமேல் கோவில் தவிர பார்க்க வேண்டிய இடங்கள் ஒலகல் தீர்த்தம்,ஒற்றை கல் நந்தி.இந்த ஊர் பெங்களூரில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ளது.இந்த கோவிலின் மூக்கிய சிறப்பு ,மூலவருக்கு நெய் அபிஷேகம் செய்தால் அது வெண்ணையாக மாறுகிறது என்பது தான்.பெங்களூரில் இருந்து இந்த கோவிலுக்கு வருவதற்க்கு ஏதுவாக ஒரு சிறிய குகை பாதை ஒன்று உள்ளது. ஆனால் இது வரைக்கும் யாரும் அந்த பாதையில் செல்ல முயன்றதில்லை.ஒலகல தீர்த்தம் என்று ஒரு சிறிய துவாரம் உள்ளது.அதனுள் கையை விட்டு பார்ப்பவருக்கு நீர் கிடைத்தால் அவர் புண்ணியவான் என்றும் கிடைக்காதவர் பாவம் செய்தவர் என்றும் பொருள் என்று நம்பிக்கை இருப்பதாக் சொல்கிறார்கள்.கோவிலை விட்டு வெளியே வந்து செங்குத்தான மலை ஏறினால் ஒரு பெரிய ஒற்றை கல் பாறையின் மேல் கம்பீரமாக நிற்க்கும் நந்தியை காணலாம்.சற்று ஆபத்தானது என்றாலும் மேலே செல்பவர்களும் உள்ளார்கள்.

மைசூர் தசரா விழா போலவே மிகவும் சிறப்பு வாய்ந்தது குலசை தசரா விழா. திருசெந்தூர் அருகில் உள்ள ஒரு கடலோர கிராமம் தான் குலசேகரன்பட்டிணம்.குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழா மிகவும் புகழ் வாய்ந்தது.நவராத்திரி நேரத்தில் முத்தாரம்மனுக்கு ஒன்பது நாட்களும் வெவ்வேறு அலங்காரங்கள் நடைபெறும்.இந்த கோவிலின் ஒரு முக்கிய விசேஷம் அம்மனும் ஸ்வாமியும் ஒரே சன்னதியில் இருப்பது தான்.இங்குள்ள ஸ்வாமியின் பெயர் ஞானமுக்தீஸ்வரர் .அம்மனின் பெயர் முத்தாரம்மன்.தசரா விழாவின் கடைசி நாளில் மஹிஷாசுர வதம் நடைபெறும்.


முந்திய பதிவில் குறிப்பிட்டிருந்த 'bugle park ' என்ற இடத்தில் உள்ள பூங்காவில் உள்ளது தான் இந்த ஆலயமும் .கன்னடத்தில் தொட்ட என்றால் பெரியது என்று அர்த்தம்.பெயருக்கு ஏற்றார் போல் இந்த கணேசர் 'தொட்டவரு' தான். கர்நாடகத்தில் பலருக்கும் தொட்ட கணேஷ் என்று பெயர் உள்ளது.(முன்பு ஒரு கிரிக்கெட் வீரர் கூட இருந்தார்).இந்த கணேசர் விக்கிரகமும் கெம்பே கௌடா காலத்தில் செதுக்க பட்டது தான்.ஒரே கல்லில் 18 அடி உயரத்திலும் 16 அடி அகலத்திலும் இந்த கணேசர் உள்ளார். பலவிதமான அலங்காரங்கள் கணேசருக்கு செய்யபட்டாலும் இங்கு மிகவும் பிரபலமானது வெண்ணை அலங்காரம் தான். பெரும்பாலான நேரங்களில் வெண்ணை அலங்காரம் தான் செய்ய பட்டிருக்கும்.100 கிலோ வெண்ணை தேவை படுமாம். நெசவாளர்கள் இந்த கணபதிக்கு வேண்டி கொண்டு தங்களது தறியில் ஒரு தேங்காய் கட்டி தொங்க விடுவார்களாம்.வேண்டுதல் நிறைவேறிய உடன் அந்த தேங்காயுடன் சேர்த்து நூறு காய்கள் சேர்த்து 101 காய்களை விநாயகருக்கு படைப்பார்களாம். இந்த காட்சியை இங்கு அடிக்கடி காணலாம்.


நந்தி கோவில் என்று தலைப்பு கொடுத்தாலும் இந்த பிரபலாமான கோவில் Bull temple என்ற ஆங்கில பெயராலயே பரவலாக அறிய படுகிறது.ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி 15 அடி உயரத்திலும் 20 அடி நீளத்திலும் உள்ளது.பதினாறாம் நூற்றாண்டில் கெம்பே கௌடா என்பவரால் இந்த ஆலயம் எழுப்ப பட்டது. இந்த ஆலயம் 'bugle rock' என்ற ஒரு பாறையின் மேல் உள்ளது. இந்த பாறை 'bugle park ' என்ற ஒரு பூங்காவிற்குள்உள்ளது.இந்த ஆலயம் குறித்து பரவலாக சொல்லப்படும் ஒரு கதையும் உள்ளது. இந்த ஆலயம் இருக்கும் பகுதியில் முன்பு கடலை விவசாயம் அதிக அளவில் நடந்ததாக சொல்ல படுகிறது. ஒரு காளை கடலை பயிர்களை மேய்ந்து அடிக்கடி நாசம் செய்து வந்ததாம்.இதனால் ஆத்திரமுற்ற ஒரு விவசாயி அந்த காளையை தாக்குகிறார்.தாக்கிய உடனே அந்த காளை கல்லாக மாறி விட்டதாம்.இது உண்மையா இல்லையா என்று தெரியாது .ஆனால் இன்றும் ஆண்டு தோறும் கடலை காய் விழா என்ற பெயரில் ஒரு விழா இந்த கோவிலில் விமரசியாக நடைபெறுகிறது. நவம்பர் டிசம்பர் மாதத்தில் கடலை காய் அறுவடை செய்யும் சமயம் விவசாயிகள் முதலில் அறுவடை செய்யும் கடலைகளை நந்திக்கு படைக்கிறார்கள். விவசாயிகளின் இந்த நம்பிக்கை காரணமாக கர்நாடக மாநிலமெங்கும் இருந்து விவசாயிகள் இங்கு வந்து முதல் கடலை அறுவடை இங்கு படைக்கிறார்கள்.கன்னடத்தில் இந்த விழாவை 'கடலேக்கயி பரிஷே' என்று அழைக்கிறார்கள்.இந்த கோவில் பசவன்குடியில் உள்ளது.இந்த கோவிலின் மிக அருகிலயே அதே பூங்காவிற்குள் 'தொட்ட கணேஷர்'ஆலயம் உள்ளது.அடுத்த பதிவை பார்க்கவும்


மதுரை என்றதும் எல்லாருக்கும் நினைவில் வருவது மீனாக்ஷி அம்மன் கோவில் தான்.ஆனால் அதே மதுரையில் இன்னொரு பழமையான சிவாலயம் உள்ளது.பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களில் இதுவும் ஓன்று.அது தான் ஆப்புடயநாதர் கோவில்.நகரின் மத்தியில் உள்ள இந்த கோவில் பலருக்கும் தெரிவதில்லை. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்ததும் மிகவும் சக்தி வாய்ந்ததுமான ஒரு ஆலயமாகும்.இந்த ஊரின் முந்தய பெயர் திருஆப்பனூர் என்பதாகும்.வைகை ஆற்றின் கரையில் செல்லூர் பகுதியில் இந்த கோவில் உள்ளது.இங்குள்ள இறைவனுக்கு மூன்று பெயர்கள். ஆப்புடையார்,அன்னவிநோதன் மற்றும் இடபுரேஸ்வரர்.இறைவியின் பெயர் குரவன்கழல் குழலி என்பதாகும்.சம்பந்தர் இந்த கோவில் குறித்து ஒரு பதிகம் பாடியுள்ளார்.(முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா இளம்பிறையன்).சோழாந்தகன் என்னும் ஒரு மன்னனுக்காக இறைவன் ஒரு ஆப்பினடத்தில் காட்சி அளித்த இடம்.உலையில் இட்ட வைகை ஆற்று மணலை அன்னமாக மாற்றி அன்னவிநோதன் என்று பெயர் பெற்ற ஸ்தலம்.

மகா சரஸ்வதிக்கு என்று ஒரு தனி ஆலயம் தமிழ் நாட்டில் மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் உள்ள சிற்றூரான பூந்தோட்டம் அருகில் கூத்தனூர் என்ற இடத்தில் உள்ளது.இரண்டாம் ராசராசன் அவ்வை புலவராக இருந்த ஓட்டகூத்தனாருக்கு இந்த ஊரை பரிசாக வழங்கினார். கூத்தன் ஊர் என்பது பிற்காலத்தில் கூத்தனூர் என்றாகிவிட்டது.ஒட்டகூத்தர் வரகவி பாடும திறன் வேண்டி கலைமகளை பூசித்தார்.ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த கலைமகள் தன வாய் தாம்பூலத்தை ஓட்டகூதனாருக்கு வழங்கி அவரை வரகவியாக்கினாள் என்பது வரலாறு.
பின்பு மூன்று சோழ பேரசரர்களின் அவை புலவராக ஒட்டகூத்தர் விளங்கினார்.இந்த ஆலயத்தில் அம்மன் வெள்ளுடை அணிந்து வெண்தாமரையில் பத்மாசனத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறாள். வாய் பேசாதவர்களும் மூளை வளர்ச்சி குன்றியவர்களும்அம்மனை முறையாக வழிபட்டு பயனடைந்துள்ளார்கள்.மாணவர்கள் புத்தகங்களை கலைமகளின் பாத கமலத்தில் வைத்து ஆசி பெற்ற பின் பள்ளிக்கு செல்ல துவங்குகிறார்கள்.தேர்வுக்கு செல்லும் முன் பேனாவை அம்மன் மடியில் வைத்து அர்ச்சனை செய்த பின்பு செல்கின்றார்கள். இங்குள்ள கோவில் கடைகளில் இதற்காகவே நோட்டு புஸ்தங்கள் மற்றும் பேனாக்கள் விற்க படுகிறது.இக்கோவிலில் தென் மேற்கு மூலையில் நர்த்தன விநாயகர் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.
சொல் விற்பனமும் அவதானமும் கல்வி சொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் ! நலினாசனஞ்சேர்
செல்விக்கு அரிதென்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்வி பெருஞ்செல்வ பேரே ! சகலகலா வல்லியே !
-குமாரகுரபரர்


ஆதி விநாயகர் என்பது யானை முகவிநாயகர் தோன்றுவதற்குமுன் உள்ள விநாயகர் தோற்றம்.இந்த விநாயகர் தும்பிக்கை இல்லாமல் திரு முகத்துடன் காட்சி தருவார். திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் மிக பழமையான மதிமுக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்.இந்த ஆலய வாசலில் தான் ஆதி விநாயகர் சன்னதி உள்ளது . திருஞான்சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார். இத்தல முருகன் குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார். ஈஸ்வரன் திருநாமம் முக்தீஸ்வரர் .அம்மன் திருநாமம் சுவர்ண நாயகி மற்றும் மரகதவல்லி என்பதாகும். கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்திற்கு முன்பே இந்த ஆலயம் பூந்தோட்டம் கிராமத்தில் அமைந்துள்ளது. ராம லக்ஷ்மணர்கள் இந்த இடத்தில் தசரதனுக்கும் ஜடாயுவுக்கும் தர்ப்பணம் செய்ததாக வரலாறு.ராமர் தர்ப்பணம் செய்யும்போது நாலு பிண்டங்கள் பிடித்து வைக்கிறார். அந்த பிண்டங்கள் சிவ லிங்கமாக மாறுகிறது. இந்த நாலு லிங்கங்கள் கோவிலின் பிராகாரத்தில் காணலாம்.இந்த கோவிலில் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் பண்ணுவது மிகவும் விசேஷம். இங்கு தர்ப்பணம் பண்ண அம்மாவசை திதி நட்சத்திரம் முதலியவை பார்க்க தேவையில்லை. எந்த நாளிலும் இங்கு பித்ரு தர்ப்பணம் செய்யலாம்.

திருவாலங்காடு என்ற பெயரில் தமிழ்நாட்டில் இரண்டு ஊர்கள் உண்டு. இரண்டு ஊர்களிலும் வட ஆரண்யேச்வர் கோவில் உண்டு. இரண்டு ஆலயங்களிலும் வண்டார்குழலி என்பது தான் அம்மன் பெயர்..இரண்டும் புகழ் பெற்ற இரண்டு சிவ ஸ்தலங்கள் ஆகும்.ஒரு கோவில் அரக்கோணம் அருகில் உள்ளது. திருவள்ளூர் அரக்கோணம் சாலையில் உள்ளது. திருவள்ளூர் அரக்கோணம் ரயில் பாதையில் திருவாலங்காடு ரயில் நிலையம் உள்ளது. ரயில் நிலையம் அருகில் இருந்து வடஆரண்யேச்வர் ஆலயம் செல்ல ஆட்டோ வசதி உண்டு.இந்த திருவாலங்காடு தான் சிவபெருமான் நாட்டியம் ஆடிய ரத்தினசபை.கோவில் குளத்துக்கு அருகாமையில் ஒரு காளி கோவில் உள்ளது. இது சிவன் கோவிலில் இருந்து சற்று தள்ளி இருக்கிறது. பொதுவாக காளி கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு தான் சிவன் கோவிலுக்கு செல்வது இங்கு நிலவி வரும் வழக்கம்.நின்ற நிலையில் இருக்கும் காளி நடனம் ஆடும் நிலையில் இருப்பதாக சொல்லபடுகிறது. சிவபெருமானுக்கும் காளிக்கும் நடுவில் ஒரு நடன போட்டி இங்கு நடந்ததாக வரலாறு.நடனம் ஆடும் பொழுது சிவ பெருமானின் தோடு கழண்டு விழ அதை காலால் எடுத்து காதில் அணிந்து கொள்கிறார்.பெண் என்ற காரணத்தினால் காளியால் நடனத்தில் இதை போல் செய்ய முடியவில்லை. நடன போட்டியில் காளி தோல்வி அடைகிறார்.இங்குள்ள சுவாமி பெயர் வட ஆரண்யேஸ்வரர்.அம்மன் பெயர் வண்டார்குழலி.இந்த ஆலயத்தின் மற்றொரு விசேஷம் காரைக்கால் அம்மையார் இங்கு தான் முக்தி அடைந்ததாக சொல்லபடுகிறது.காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி.பரமதத்தன் என்ற வணிகரை மணந்து கொள்கிறார்.வணிக விஷயமாக அவரை சந்தித்த நபர் அளித்த இரண்டு மாம்பழங்களை வீட்டுக்கு கொடுத்து அனுப்புகிறார்.அந்த சமயம் பார்த்து ஒரு சிவனடியார் புனிதவதியின் வீட்டுக்கு வருகிறார். சிவ பக்தையான புனிதவதி சிவனடியாருக்கு மதிய உணவு படைக்கிறார்.அப்பொழுது தன கணவர் அனுப்பிய இரண்டு மாம்பழங்களில் ஒன்றை கொடுக்கிறார்.புனிதவதியின் விருந்தோம்பலில் மகிழ்ந்த சிவனடியார் ஆசீர்வாதம் செய்து விட்டு செல்கிறார். மதிய உணவின் பொழுது மிச்சம் இருந்த ஒரு மாம்பழத்தை கணவனுக்கு கொடுக்கிறார். அதன் சுவையில் மயங்கி பரமதத்தர் இன்னொரு மாம்பழம் கேட்கிறார். என்ன செய்வதென்று அறியாத புனிதவதி சிவபெருமானிடம் வேண்டுகிறார்.என்ன அதிசயம்! அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றுகிறது.அதை கணவனுக்கு கொடுக்கிறார். அவர் இந்த மாம்பழம் முதல் பழத்தை விட சுவையாக இருக்கிறதென்று சொல்கிறார். அதை பற்றி அவர் விசாரிக்க புனிதவதி உண்மையை சொல்கிறார்.இதை கேட்ட புனிதவதியின் கணவர் தான் அவருக்கு கணவராக இருப்பதற்கு யோக்கியதை அற்றவர் என்று கருதி அவரை விட்டு செல்கிறார்.புனிதவதி சிவபெருமானிடம் வேண்டுகிறார்.தனக்கு உயிர் இருக்கும் வரை சிவ பெருமானை வணங்கி வாழ்வதற்கு ஒரு உடல் கேட்கிறார். அப்படி அவர் காரைக்கால் அம்மையார் ஆகிறார்.மோக்ஷம் தேடி அம்மையார் கைலாசம் செல்ல சிவ பெருமான் அவரை திருவாலங்காட்டில் சென்று காத்திருக்க சொல்கிறார். திருவாலங்காட்டில் காரைக்கால் அம்மையாருக்கு சிவ பெருமான் காட்சியளித்து முக்தி கொடுக்கிறார்.


இரண்டாவது திருவாலங்காடு மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் உள்ளது.குலோத்துங்க சோழனால் புனரமைக்கபட்ட ஆலயம் இது. இங்கு இரு சிவ சன்னதிகள் உள்ளது. மூல ஸ்தானம் வட ஆரண்யேஸ்வரர். இன்னொரு சிவ சன்னதிக்கு பெயர் புத்ரகாமேஸ்வரர். அம்மன் பெயர் வண்டார்குழலி.தற்பொழுது இந்த ஆலயம் திருவாடுதுறை ஆதீனத்தின் கட்டுபாட்டில் உள்ளது.ஸ்தல புராண கதைப்படி பரதன் சுபத்ரா என்ற தம்பதியர் குழந்தை வரம் வேண்டி சிவ பெருமானை வேண்டுகிறார்கள். ஒரு நாள் அவர்களுக்கு ஒரு அசரீரி குரல் கேட்கிறது. திருவாலங்காடு சென்று வட ஆரண்யேஸ்வரர் தரிசித்து வந்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்று .அந்த தம்பதியர் ஆலயத்திற்கு சென்றுகோவில் குளத்தில் நீராடி புத்ரகாமேஷ்டி யாகம் நடுத்துகிறார்கள். இங்கு இருக்கும் இரட்டை பிள்ளையார் சந்தான கணபதி என்று அறியபடுகிறார். அவர்களுக்கு குழந்தைகளாக சிவ பெருமானும் பார்வதியும் பிறந்ததாக வரலாறு.இங்குள்ள நந்தி சற்று தாழ்வான நிலையில் உள்ளதால் பாதாள நந்தி என்று அறியபடுகிறது. இன்றும் குழந்தை வரம் வேண்டி இங்கு பலரும் வந்து வணங்கி செல்கிறார்கள்.மிகவும் சக்தி வாய்ந்த ஆலயம்.பழைய அம்மன் சன்னதி சற்று சிதிலம் அடைந்த நிலையில் புதிதாக ஒரு அம்மன் சன்னதி அமைத்திருக்கிறார்கள்.புராதன அம்மன் சன்னதி பழைய அம்மன் என்று குறிபிட்டுள்ளார்கள்.

பாண்டிச்சேரியில் உள்ளது மணக்குள விநாயகர் ஆலயம்.நகரின் மத்தியில் உள்ளது.ஆளுநர் மாளிகையின் பின்புறம் அமைந்துள்ளது இந்த ஆலயம்.500 ஆண்டு பழைமையான ஆலயம் இது.விநாயக சதுர்த்தி இங்கு விமரசியாக கொண்டாடப்படும்.ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோத்சவம் இங்கு பிரபலம். 18 நாட்கள் வெகு சிறப்பாக இந்த விழா  கொண்டாடப்படும்.பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த சமயம், பல முறை பிரெஞ்சு ஆட்சியாளர்கள் விநாயகர் சிலையை அகற்ற முயற்சித்த பொழுது மீண்டும் மீண்டும் விநாயகர் அங்கு தோன்றிய அதிசயம் நடந்ததாக சொல்லப்படுகிறது.ஆண்டு திருவிழா நடத்த பிரெஞ்சு ஆதிக்க அதிகாரிகள் தடை விதித்த போது அதிக அளவில் மக்கள் சென்னைக்கு குடிபெயற முயற்சித்த பொழுது, இதனால் அங்கிருந்த பிரெஞ்சு ஜவுளி ஆலை பாதிக்க படும் என்று தெரிந்து( பெரும்பாலோர் ஜவுளி ஆலை தொழிலாளர்கள்) பிரெஞ்சு அரசு விழா நடத்த அனுமதித்தது.இறுதியில் பிரெஞ்சு துரை டுப்லே விநாயகர் பக்தராக மாறிய அதிசயமும் நடந்தது.கடலுக்கு மிக அருகில் மனற்பரப்புகளுக்கு மத்தியில் இருந்ததால் மணர்குள விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் என்றாகி விட்டது.கோவிலுக்குள் ஒரு சின்ன குளம்காண படுகிறது.இந்த இடம் சற்று இருள் சூழ்ந்து காணப்படுவதால் சூடன் ஒளியில் இந்த கிணற்றை பூசாரி பக்தர்களுக்கு அடையாளம் காட்டுகிறார்.தனி விநாயக ஆலயங்களில் மணக்குள விநாயகர் ஆலயம் மிகவும் பிரசத்தி பெற்றது.

தென்னாங்கூர்,திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர்.காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் உள்ளது.ஹரிதாஸ் கிரிதர சுவாமிகளால் எழுப்பப்பட்ட ஆலயம். தலை வாயில் ராஜகோபுரம் தென்னிந்திய பாணியிலும்,கருவறை விமான கோபுரம் பூரி ஜெகநாதர் ஆலயம் பாணியிலும் அமைந்துள்ளது. ஹரிதாஸ் கிரிதர சுவாமிகளின் குரு அவரது கனவில் வந்து பண்டரிபுரம் செல்ல சொல்கிறார்.அதன்படி அங்கு சென்ற சுவாமிகளுக்கு பண்டரிபுரம் கோவில் பூசாரி பாண்டுரெங்கன்-ரகுமாயி சிலைகளை கொடுத்துவிட்டு குரு ஞானாந்த சுவாமிகள் அவரின் கனவில் வந்து ஹரிதாஸ் சுவாமிகளிடம் குடுக்க சொன்னார் என்று சொல்கிறார்.அப்போது தான் ஹரிதாஸ் சுவாமிகளுக்கு பாண்டுரங்கன் ஆலயம் எழுப்பும் யோசனை வருகிறது.அந்த சிலைகளை உற்சவர்களாக கொண்டு பெரிய மூல ஸ்தான சிலைகள் அமைக்கபட்டு பாண்டுரங்கன் ஆலயத்தை ஹரிதாஸ் சுவாமிகள் எழுப்பினார்.பாண்டுரங்கன் ரகுமாயி சிலைகள்
முறையே 10 1/2 அடி மற்றும் 8 1/2 அடி உயரத்தில் கம்பீரமாக உள்ளது.வரதராஜ பெருமாள் சீதேவி பூதேவியுடன் பஞ்சலோக சிலைகளாகவும் இங்கு காணலாம்.வெள்ளி கிழமைகளில் பாண்டுரங்கன்-ரகுமாயி திருப்பதி வெங்கடாசல பெருமாள்-மகாலக்ஷ்மி அலங்காரத்தில் காண்பது கண் கொள்ளா ஆட்சி. கருவறை கோபுரம் 120 அடி உயரம்.அதன் மேல் உள்ள தங்க விமானம் 10 1/2 டி உயரம்.மதுரை மீனாக்ஷி அம்மனுக்கும் தென்னான்கூருக்கும் ஒரு தொடர்பு உள்ளது.பாண்டிய மன்னன் குழந்தை வேண்டி தென்னாங்கூரில் தான் யாகம் நடத்துகிறார்.அந்த இடத்தில் தோன்றிய குழந்தை தான் மீனாக்ஷி. பாண்டிய மன்னன் அந்த குழந்தையை அழைத்து கொண்டு மதுரை சென்றதாக சொல்கிறது புராணம்.அப்படி சப்தரிஷிகளால் யாகம் மூலம் மீனாக்ஷி அவதரித்த இந்த ஸ்தலத்தை காஞ்சி மகா பெரியவர் 'மீனாக்ஷி தோன்றிய ஸ்தலம்' என்று குறிப்பிட்டுள்ளார்.கோவிலுக்கு பின்புறம் ஞானாந்த சுவாமிகளின் மடம் உள்ளது.அங்கு ஹரிதாஸ் கிரிதர சுவாமிகளுக்கு துளசி பிரிந்தாவனமும் உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ளது பன்னாரி மாரியம்மன் கோவில்.ஈரோடில் இருந்து 75 கி.மீ தொலைவிலும் சத்யமங்கலத்தில் இருந்து 10 கி.மீ தொலைவிலும் உள்ளது.கோவை,ஈரோடு,திருப்பூர்,அவினாசி போன்ற இடங்களில் இருந்தும் பன்னாரி சென்று வர பேரூந்து வசதிகள் உள்ளது.தற்பொழுது பன்னாரி அம்மன் ஆலயம் இருக்கும் இடம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் தன நாயக்கன் காடு என்று அழைக்கப்பட்டது.இங்கு சிறுவர்கள் வழக்கமாக பசுக்களை மேயவிட்டு வந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.அப்படி மேயப்பட்ட பசுக்களில் ஒரு குறிப்பிட்ட பசு மட்டும் கன்றையும் நெருங்கவிடவில்லை ,பாலும் கறக்க அனுமதிக்கவில்லை.மேய்ப்பவன் அந்த பசுவை தொடர்ந்து கண்காணித்து வந்தபோது ஒரு விஷயம் புலப்பட்டது.அந்த பசு ஒரு குறிப்பிட்ட வேங்கை மரத்தின் அடியில் போய் நின்ற உடன் தானகவே மடுவில் இருந்து பால் சுரக்க ஆரம்பித்தது.இதை மாடு மேய்க்கும் சிறுவன் தெரிவித்த உடன் ஊர் மக்கள் ஒன்று திரண்டு அந்த இடத்துக்கு வந்து வேங்கை மரத்தின் அடி பாகத்தை தோண்டி பார்த்த பொழுது அங்கு ஒரு சுயம்பு சிவ லிங்கம் இருந்தது.அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு இறை அருள் வந்து அருள் வாக்கு சொல்லி இருக்கிறார்.அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வணிகர்கள் சுமைகளை மாடுகள் மேல் சுமந்து மைசூருக்கு இந்த பாதை வழியாக தான் அப்பொழுது சென்று வந்துள்ளார்கள்.அவ்வாறு செல்லும் வணிகர்களின் காவல் தெய்வம் தான் என்றும் தனக்கு இந்த இடத்தில் ஒரு ஆலயம் அமைத்து பன்னாரி அம்மன் என்ற பெயரில் வழிபடவும் என்று சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.அன்று முதல் பன்னாரி அம்மனை அந்த பகுதி மக்கள் அங்கு வழி பட்டு வந்திருக்கிறார்கள்.மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் ஆலயம் இது.கோவையில் இருந்து மைசூர் செல்லும் பாதையில் சாலை ஓரமாக இந்த ஆலயம் உள்ளது.

கோவை அருகே உள்ளது மருதமலை.இது முருக பெருமானின் மற்றொரு பிரபல மலை கோவில்.கோவையில் இருந்து தடாகம் சாலை வழியாக மருதமலை சென்றடையலாம்.மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து மருதமலைக்கு போவதற்கு பேரூந்துகள் உள்ளன.மருத மலையில் மிகுந்த அளவில் மருத மரங்கள் உள்ளது.மிகவும் களைப்படைந்த ஒரு முனிவர் மருத மரத்தின் நிழலில் அமர்ந்து தண்ணீர் வேண்டி முருக பெருமானை வேண்டியபொழுது ஒரு மருத மரத்தின் வேரில் இருந்து தண்ணீர் பிரவாகம் எடுத்து சுரந்ததாக ஸ்தல வரலாறு.தண்ணீரை பார்த்த முனிவர் மருத ஜலம் வந்ததால் மருதாச்சலபதி என்று முருக பெருமானை அழைத்ததாகவும் கூறப்படுகிறது.மலை கோவிலின் இன்னொரு சிறப்பு மலை மேல் இருக்கும் பாம்பாட்டி சித்தர் குகை. பாம்பாட்டி சித்தர் குகையில் அமர்ந்து முருகனை நினைந்து தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது.இங்கு ஒரு பாம்பாட்டி சுனையும் உள்ளது.சித்தர் குகையில் உள்ள நாகராஜர் சுயம்பு என்றும் சொல்லப்படுகிறது.மலை கோவிலுக்கு செல்ல படிகள் உள்ளன. தேவஸ்தான பேரூந்துகளும் உள்ளன.மூல சன்னதிக்கு வெளி புறமாக பக்தர்கள் அமர்வதற்கு ஏதுவாக ஒரு பெரிய கூடம் உள்ளது. மருத மலையில் இருந்து வரும் மூலிகை காற்றினை இங்கு அமர்ந்து அனுபவிக்கலாம். மலை மேல் முருக பெருமானின் திரு உருவ தரிசனம் முடித்து விட்டு வெளியில் வந்து பார்த்தால் கோவை நகரின் அழகை காணலாம். மருத மலையில் தான் கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் உள்ளது.


அவினாசி கோவையில் இருந்து 40 கி.மீ தொலைவிலும் திருப்பூரில் இருந்து 15 கி.மீ தொலைவிலும் உள்ளது. இது ஒரு பாடல் பெற்ற சிவ ஸ்தலம்.இறைவன் திருநாமம் அவிநாசியப்பர்,அம்மன் திருநாமம் கருணாம்பிகை. சுந்தரரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது.சுந்தரமூர்த்தி நாயனார் இங்குள்ள தாமரைக்குளத்தில் 'முதலை வாயில்' சிக்கிய சிறுவனை காப்பாற்றியதாக வரலாறு உள்ளது.பிரம்மன் இங்கு நூறு ஆண்டுகளாக சிவனை வழிபட்டதாகவும் ,இந்திரனின் யானை ஐராவதம் இந்த சிவஸ்தலத்தில் 12 ஆண்டுகள் வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.முருகன்,காரைக்கால் அம்மன் மற்றும் காலபைரவருக்கும் தனி சன்னதிகள் உள்ளது.காலபைரவருக்கு வட மாலை சாற்றி வழிபாடு செய்வது இங்கு மிகவும் விசேஷம்.

சங்கமேஸ்வரர் ஆலயம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் உள்ளது.இது ஒரு கொங்கு நாடு பாடல் பெற்ற ஸ்தலம். இதற்க்கு மறுபெயர் கூடுதுறை . மூன்று நதிகள் கூடும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது. பவனி ஆறு,காவிரி மற்றும் அம்ரிதவாகினி என்பது அந்த மூன்று நதிகளாகும்.அம்ரிதவாகினி என்பது சரஸ்வதி நதி போன்றது. அது மண்ணிற்கு அடியில் பாய்வதாக ஐதீகம்.கூடுதுறை திரிவேணி சங்கமத்திற்கு இணையானது.சங்கமேஸ்வரரையும் வேதநாயகி அம்மனையும் வணங்கினால் எந்த தீமையும் அணுகாது என்பது நம்பிக்கை.பவானிக்கு இன்னொரு பெயர் திருநன்னா அதாவது தீமை நன்னா ஊர் என்று பொருள்.
இந்த ஆலயத்தை சுற்றி ஐந்து மலைகள் உள்ளது.சங்ககிரி,திருசெங்கோடு,பத்மகிரி,மங்களகிரி மற்றும் வேதகிரி என்பதாகும் இந்த மலைகள்.சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது. இன்னொரு முக்கியமான விஷயம் இது ஒரு சிவ ஸ்தலமாக இருந்தாலும் இங்கு பெருமாளுக்கும் தனி ஆலயம் உள்ளது. அதிகேசவ பெருமாள் மற்றும் சௌந்தரவல்லி தாயார் சன்னதியும் இங்கு உள்ளது. சுப்பிரமணியருக்கும் தனி சன்னதி உள்ளது. அருணகிரிநாதர் இங்கு வந்து முருகனை தரிசித்து பாடல்கள் இயற்றி உள்ளார்.பவானி ஈரோடில் இருந்தி 15 கி.மீ தொலைவிலும் சேலத்தில் இருந்து 56 கி.மீ தொலைவிலும் உள்ளது. கோவை,திருப்பூர் மற்றும் ஈரோடில் இருந்து இங்கு சென்று வர பேரூந்து வசதிகள் உள்ளது.

இஷா தியான மண்டபத்தில் இருந்து சுமார் ஐந்து கி.மீ தூரம் சென்றால் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள கோவில் சென்றடையலாம். மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி நாதர் கோவில் உள்ளது. அம்மன் திருநாமம் சௌந்தரிய நாயகி.கோவில் பின் புறம் இருந்து மலை கோவில் செல்லும் பாதை தொடங்குகிறது.தென் கயிலை என்று அறியப்படும் வெள்ளியங்கிரி மலை மேல் இயற்கையாக அமைந்த குகைக்குள் பஞ்சலிங்கம் உள்ளது. அடிவாரத்தில் உள்ள கோவில் மட்டுமே எங்களால் தரிசனம் செய்ய முடிந்தது. சுமார் 6 கி.மீ தூரம் செங்குத்தான மலையில் ஏறி பஞ்சலிங்க தரிசனம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.ஏழு மலைகள் ஏறவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த மூலிகைகள் நிறைந்த மலை இது .இயற்க்கை சுனைகள் நிறைந்த மலை . பொதுவாக பௌர்ணமி இரவில் தான் வெள்ளியங்கிரி மலை ஏறுவார்கள் என்று எனது கோவை நண்பர் வெள்ளியங்கிரி சொல்லி இருக்கிறார். மலை ஏறி சிவ லிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆர்வம் இருந்தும் என்னால் அங்கு செல்ல முடியவில்லை.பங்குனி உத்திரம்,சித்திரா பௌர்ணமி,மகா சிவராத்திரி போன்ற சமயங்களில் அதிக அளவில் பக்த ஜனங்கள் வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை செல்வார்கள் .தென்னக மக்கள் அமர்நாத் யாத்திரை அளவு வெள்ளியங்கிரி பஞ்சலிங்க தரிசனத்தையும் புனிதமாக கருதுகிறார்கள்.

பேரூரில் இருந்து சிறுவாணி செல்லும் பாதையில் செல்லும் விலக்கு பாதையில் சென்றால் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் செல்லும் பாதையில் சுமார் நாலு அல்லது ஐந்து கி.மீ முன்பு தியானலிங்கம் செல்லும் பாதை பிரிகிறது.மெயின் சாலையில் இருந்து சுமார் ஒரு கி.மீ தூரம் உள்ளே நடந்து தான் செல்லவேண்டும். சொந்த வாகனத்தில் போனீர்கள் என்றால் தியானலிங்க மையம் வரை செல்லலாம்.சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களால் உருவாக்கப்பட்ட இஷா யோகா மையத்தினர் தான் இந்த தியானலிங்க ஆலயத்தை நிர்வாகம் பண்ணுகிறார்கள். இது ஒரு ஆலயம் என்று சொல்லமுடியாது. ஒரு தியான மண்டபம்.எல்லா மதத்தினரும் தியானத்திற்கு என்று வந்து போகும் இடம். அதற்க்கு ஏற்றார் போல உள்ளே நுழையும் முன் ஒரு சர்வ மத ஸ்தம்பம் இருப்பதை பார்க்கலாம்.அதில் இந்து,கிறிஸ்துவ,இஸ்லாமிய மற்றும் சீக்கிய ,ஜைன மதங்கள் சம்பந்தப்பட்ட சின்னங்கள் காணலாம். சிவலிங்கம் ஒரு தியான சின்னமாக தான் இங்கு கருதபடுகிறதே தவிர,இந்து மதம் சம்பந்தப்பட்ட ஒரு சின்னமாக அல்ல.இங்கு எந்த மொழியிலும் இறைவனை துதிப்பதோ பிரார்த்தனை செய்வதோ கிடையாது. தியான மண்டபத்திற்குள் நுழையும் முன்பு இந்த விஷயம் உங்களுக்கு சொல்லப்படுகிறது.லிங்கத்தை வணங்க கூடாது.எதுவும் வேண்டுவதோ பிரார்த்தனை செய்வதோ கூடாது. லிங்கத்தை நோக்கி மௌனமாக அமர்ந்து தியானம் மட்டும் செய்யுங்கள் என்று அறிவுரை தருகிறார்கள்.தியான மண்டபம் dome shaped ஆக உள்ளது இதன் தனித்தன்மை.எந்த விதமான தூண்களும் வட்டவடிவத்தில் இருக்கும் இந்த தியான மண்டபத்தில் இல்லை. அரை வட்டவடிவில் இருக்கும் தியான மண்டபத்தின் கூரை பிரமபிப்பு ஊட்டும். தியான மண்டபத்திற்குள் நடுநாயகமாக சர்ப்ப சுருள் மேல் பதிமூன்று அடி உயர சிவலிங்கம் காட்சி தருகிறது. வட்ட வடிவ கூரையில் இருந்து ஒரு கூம்பு வழி நீர் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சிவலிங்கம் மேல் விழுந்து கொண்டே இருக்கிறது. வட்ட வடிவத்தில் இருக்கும் மண்டபத்திற்குள் சுற்றிலும் சிறு சிறு தியான மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் உள் அமர்ந்து தியானம் பண்ணுகிறார்கள். இது அல்லாமல் சுற்றிலும் பாய் விரித்து வைத்துள்ளார்கள்..அதில் அமர்ந்தும் தியானம் செய்யலாம். எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரம் அமர்ந்து தியானம் செய்யலாம்.மண்டபத்திற்குள் நுழைந்த உடனயே நம்மை அங்கு நிலவும் அசாத்தியமான மௌனம் தாக்கும்.உண்மையிலயே இது போன்ற மௌனமான ஒரு சூழ்நிலையை நான் வேறு எங்கும் கண்டதில்லை. ஏதோ ஒரு வித அதிர்வு உங்களை தாக்குவதையும் உங்களால் உணரமுடிகிறது. பல பேர் செய்த தியான சக்தி லிங்கத்தில் உறைந்து அதிர்வுகளை நம்மை வந்தடைகிறது என்றும் சொல்கிறார்கள்.மண்டபத்திற்குள் நடப்பவர்கள் கட்டை விரல்களை தரையில் ஊன்றி தான் நடக்க வேண்டும்.நாம் சாதாரணமாக தரையில் நடக்கும்போது எந்த அளவிற்கு சப்தம் ஏற்படுகிறது என்று நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சிலர் தவறுதலாக சில சமயம் பாதம் தரையில் ஊன்றி நடந்துவிட்டால் அங்கு ஏற்படும் சத்தம் மிகவும் பெரிதாக கேட்கிறது. அது தியானத்திற்கு இடையூறாக இருப்பது நமக்கு உடனே புரிகிறது.இதனாலயே தியான மண்டபத்திற்கு உள் நுழையும் முன் பெண்களிடம் கொலுசு போன்றவை அணிந்திருந்தால் கழற்றி விடுமாறு அறிவுரை கூறுகிறார்கள்.இங்கு யோகா மற்றும் தியான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. வெளி நாட்டினரும் இங்கு தியானம் செய்வதற்காக அதிக அளவில் வருகிறார்கள்.

கோயம்பத்தூரில் இருந்து சிறுவாணி செல்லும் பாதையில் சுமார் ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்.இது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்.இந்த ஆலயத்தின் கர்பகிரகத்தை கரிகால சோழன் எழுப்பினார் என்பது வரலாறு.ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் இங்கு வந்து தரிசித்து பதிகங்கள் இயற்றி உள்ளார்.காமதேனுவின் மகள் பட்டி சிவனை இங்கு வழிபட்டதால் ஈஸ்வரனுக்கு பட்டீஸ்வரர் என்று திருநாமம்.மூலகிரகத்தில் சிவலிங்கத்திற்கு பின்னால் சுவற்றில் இன்றும் காமதேனுவின் ஓவியம் உள்ளது.பிற்காலத்தில் கர்நாடகத்தின் ஹோய்சால மன்னர்களும் விஜயநகர மன்னர்களும் கூட இங்கு சிவனை வழிபட்டதாக சொல்லப்படுகிறது.இங்குள்ள நடராஜ சபை கனகசபை என்று அழைக்கப்படுகிறது.மிகுந்த கலை வேலைபாடுகள் நிறைந்த சபை இது.மதுரை நாயக்கர் மன்னர் வழிதோன்றல் அழகாத்ரி நாய்கரால் எழுப்பப்பட்டது இந்த கனகசபை.இந்த பதிவு ஆரூத்ரா தரிசனத்தன்று எழுதப்படுவது தற்செயலாக அமைந்த ஒரு சிறப்பு என்று நான் கருதிகிறேன்.மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரன்று ஆரூத்ரா தரிசனம் செய்வது மிகவும் விசேஷம்.எல்லா சிவ ஆலயங்களிலும் ஆரூத்ரா தரிசனம் சிறப்பாக கொண்டாடபட்டாலும் மிகவும் விசேஷம் ஐந்து சபைகளில் நடைபெறும் அரூத்ரா தரிசனம் தான். பஞ்ச சபைகள் என்று சொல்லப்படும் இந்த சபைகளில் சிவ பெருமான் நடனமாடியதாக சொல்லப்படுகிறது.
1.தில்லை நடராஜர் ஆலயத்தில் உள்ள கனகசபை
2.மதுரை மீனாக்ஷி ஆலயத்தில் உள்ள வெள்ளி அம்பலம்( இங்கு இறைவன் கால் மாற்றி ஆடியதாக சொல்லப்படுகிறது)
3.சென்னை அருகே உள்ள திருவலங்காட்டில் ரத்தின சபை (திருவள்ளூர் அரக்கோணம் பாதையில் உள்ளது)
4.திருநெல்வேலியில் நெல்லையப்பர் ஆலயத்தில் தாமிரசபை
5.குற்றாலத்தில் குற்றாலநாதர் ஆலயத்தில் சித்திரசபை
இந்த பஞ்ச சபைகள் தவிர புகழ் வாய்ந்த மற்ற நடராஜர் சன்னதிகள் சிலவற்றிலும் அரூத்ரா தரிசனம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
1.பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்
2.குடந்தை கீழ்கோட்டம் ஆலயம்
3.திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் (விழுப்புரம் அருகில்)
4.உத்திரகோசமங்கை மரகத நடராஜர்
5.திருவாரூர் ஆலயம்
6.திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயம்
பேரூர் கோவிலில் நடைபெறும் நாட்டிய அஞ்சலி விழா மிகவும் பிரசித்தம்.இறைவனுக்கு நாட்டிய கலை வடிவில் வழிபாடு செய்யும் கலை விழா இது.வெளி பிரகாரத்தில் அம்மன் மரகதாம்பாள் சன்னதி உள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து சுமார் 24 கி.மீ தொலைவில் ஆனைமலையில் உள்ளது அருள்மிகு மாசானி அம்மன் திருகோவில்.சீதையை தேடி ராமர் சென்ற பொழுது ஆனைமலை மயானத்தில் தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.அப்பொழுது ராமர் களி மண்ணில் அம்மன் சிலை செய்து அங்கு வழிபட்டதாக சொல்லப்படுகிறது.அம்மன் காட்சி அளித்து ராவண வத்திற்கு அருளியதாக சொல்லப்படுகிறது. வடமொழியில் மயானத்தை ஸ்மஸாநம் என்று சொல்லப்படுகிறது.அம்மனின் திருபெயர் ஆரம்பத்தில் ச்மாசனி என்று இருந்தது மருவி மாசானி என்றானது என்றும் சொல்லப்படுகிறது.ஆழியார் மற்றும் உப்பர் நதிகள் இரண்டும் கலக்கும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது.மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் ஆலயம் இது.குறை தீர்க்கும் ஆலயம் என்றும் இதற்க்கு பெயர் உண்டு.மிக முக்கியமான விஷயம் இந்த கோவிலில் அம்மன் மல்லாக்க படுத்த நிலையில் காட்சி தருகிறார்.நான்கு கைகளுடன் 15 அடி உயரமுள்ள அம்மன் விக்கிரகம் படுத்த நிலையில் அருள் பாலிக்கிறார்.இரண்டு கைகள் தரையில் வைத்த நிலையிலும் இன்னும் இரண்டு கைகள் உயர்த்தி பிடித்த நிலையிலும் அம்மன் காட்சி தருகிறார்.பக்தர்களின் குறைகள்,உடல் நல குறைபாடுகள் மற்றும் வம்பு வழக்குகளில் நீதி வழுங்கதல் போன்றவை மாசானி அம்மன் அருளால் நடைபெறுகிறது என்று இன்றும் பக்த ஜனங்கள் நம்புகிறார்கள்.இந்த ஆலயத்தில் ஒரு நீதி கல் உள்ளது.பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள்,பிரார்த்தனைகள்,ஒரு காதிகத்தில் எழுதி அம்மன் முன் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து விட்டு ,மிளகாய் அரைத்து நீதி கல்லில் தேய்த்து பிரார்த்தனை செய்தால் 19 நாட்களுக்குள் அவர்களது பிரார்த்தனை நிறைவேறும் என்பது நம்பிக்கை.
ஓம் ஸ்ரீ ஹரி ஆதி மகாசக்தி மாசானி அம்மே சரணம்

கோவை அருகே உள்ள இன்னொரு பிரபலமான விநாயகர் ஆலயம் தான் புளியகுளம் முந்தி விநாயகர் ஆலயம். ஆசியாவிலையே இது தான் மிக பெரிய விநாயகர் விக்கிரகம்.இந்த விநாயகர் விக்கிரகத்தின் எடை பதினான்கு டன் என்று சொல்லப்படுகிறது.1993 ஆம் அண்டு முதல் இந்த ஆலயம் உள்ளது. தமிழகத்தில் பிரபலமான பல விநாயகர் பிரதிஷ்டைகள் பல ஆலயங்களில் உள்ளது.அவைகளில் சில கீழே தரப்பட்டுள்ளது.


மதுரை மீனாக்ஷி கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகர்
மூன்று குறுணி அரிசி மாவில் மோதகம் செய்து விநாயகருக்கு படைக்கபடுவதால் முக்குறுணி விநாயகர் என்று பெயர்.


சிவ லிங்கம் கையில் வைத்திருக்கும் பிள்ளையார்பட்டி விநாயகர்
மூஞ்சிறு மேல் அமர்ந்திருக்கும் பிள்ளையார் திருவல்லத்தில் உள்ளது
ஸிம்ஹ வாகனத்தில் அமர்ந்திருக்கும் விநாயகரை சென்னை பாரி முனையில் உள்ள கச்சலீஸ்வரர் ஆலயத்தில் காணலாம்.

சுவாமிமலையில் உள்ள கணபதிக்கு நேத்ரா கணபதி என்று பெயர்.

திருபரங்குன்றத்தில் உள்ள விநாயகர் கையில் கரும்புடன் காணபடுகிறார்.

காரைக்குடி அருகே இலுப்பைகுடியில் இருப்பதிலையே சின்ன விநாயகரை காணலாம்.

புளியகுளம் விநாயகர் சுமார் 19 அடி உயரம் உள்ள விக்கிரகம்

கோயம்பத்தூர் அருகே உள்ள மிக முக்கியமான விநாயகர் ஆலயங்களில் ஈச்சனாரி விநாயகர் ஆலயமும் ஓன்று.மிகவும் பழமையான ஆலயம். கி.பி. 1500 ஆம் ஆண்டு முதலே இந்த ஆலயம் உள்ளதகாக வரலாறு. கோயம்பத்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பாதையில் கோவையில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் சாலை ஓரத்திலயே உள்ளது இந்த விநாயகர் ஆலயம்.விநாயகர் சிலை ஆறு அடி உயரமும் மூன்று அடி அகலமும் கொண்டது. மதுரையில் இருந்து பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்திற்கு இந்த விநாயகர் சிலையை கொண்டு செல்லும் பாதையில் வாகனம் இந்த இடத்தில் சிக்கி,மேலும் நகர்த்த முடியாமல் போனது. அதனால் விநாயகர் சிலையை அந்த இடத்திலயே வைத்து விட்டனர்.இது தான் ஈச்சனாரி கோவிலின் ஸ்தல வரலாறு. இந்த விநாயகருக்கு தங்க ரத வாகனம் உண்டு.

முருகனுக்கு அறுபடை வீடு போல அய்யப்பனுக்கு ஐந்து திருத்தலங்கள்.அவை  குளத்தூபுழை,ஆரியன்காவு,அச்சன்கோவில்,எருமேலி,சபரிமலை ஆகும்.பெருமாளின் 10 அவதாரங்களில் ஒருவரான பரசுராமன் தான் இந்த ஐந்து அய்யப்ப கோவில்களில் அமைய காரணமானவர் என்பது வரலாறு.செங்கோட்டையில் இருந்து அச்சன் கோவில் செல்ல மலை பாதை உள்ளது.செங்கோட்டையில் இருந்து 30 கி.மீ மலை மேல் அடர்ந்த காட்டில் உள்ளது இந்த ஐயப்பன் ஆலயம். செங்கோட்டையில் இருந்து தமிழக மற்றும் கேரள அரசு பேரூந்துகள் அச்சன் கோவில் செல்ல இயக்கப்பட்டு வருகிறது.ஆனால் நாங்கள் சென்ற நேரம் புனலூர் செங்கோட்டை மலைப்பாதை செப்பனிட்டு வந்த காரணத்தினால் கேரளாவில் இருந்து பேரூந்துகள் வர இயலாத நிலையில், பயணிகள் குறைவாக இருந்த காரணத்தால், இரண்டு அரசு போக்குவரத்து பேரூந்துகளும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டிருந்தது.அதே காரணத்தினால் எங்களால் ஆரியன்காவு மற்றும் குளத்தூபுழை செல்ல முடியவில்லை.செங்கோட்டை பேரூந்து நிலையத்தில் இருந்து அச்சன் கோவில் சென்று வர டாக்சி 550 ரூபாய் கேட்கிறார்கள்.நாங்கள் அப்படி தான் சென்றோம்.அச்சன் கோவில் இருக்கும் மலை பகுதி கேரள மாநிலத்தின் எல்லைக்கு உட்பட்டது.போகும் வழியில் மணலார் மற்றும் கும்புவுருட்டி நீர்வீழ்ச்சிகள் உள்ளது.குற்றால அருவி போல இதுவும் ஒரு சுற்றுலா ஸ்தலமாக திகழ்கிறது.கோவிலில் இருக்கும் அயப்பன் விக்கிரகம் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.இங்கு கொடுக்கும் ஐயப்பன் சந்தனம் பாம்பு கடிக்கு பயன்படும் மருந்தாக பக்தர்கள் நம்புகிறார்கள்.அச்சன் கோவிலில் ஐயப்பன் பூர்ணா புஷ்கலா என்று இரண்டு தேவியருடன் காட்சி அளிக்கிறார்.ஐயப்பன் தனது ஐந்து திருதலங்களிலும் வேறு வேறு கோலத்தில் தரிசனம் தருகிறார்.குளத்தூபுழையில் பாலகனாகவும்,ஆரியங்காவில் இளைஞனாகவும் ,அச்சன் கோவிலில் குடும்பஸ்தனாக மனைவியருடனும்,எருமேலியில் காக்கும் கடவுள் தர்ம சாஸ்தாவாக்வும், சபரிமலையில் பிரம்மசாரியாகவும் காட்சி தருகிறார்.சாமியே சரணம் ஐயப்பா.

திருநெவேலி மாவட்டத்தில் தென்காசிக்கு அருகில் உள்ளது குற்றாலம்.பல அருவிகள் உள்ள ஒரு சுற்றுலா ஸ்தலமும் கூட.இது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்.சிவ பெருமான் சங்கு வடிவத்தில் இங்கு காட்சி அளிக்கிறார். நடராஜர் சந்நிதி சித்திரசபை என்று அறியப்படுகிறது. அருவிக்கு மிக அருகாமையில் ,அருவி சத்தம் எப்பொழுதும் கேட்டு கொண்டே இருக்கும் ஓர் ஆலயம். கைலாயத்தில் சிவ பெருமான் பார்வதி தேவி திருமணம் நடக்கும் சமயத்தில் அனைத்து கடவுள்களும் அங்கு கூடி விடுவதால் ஒரு பக்கமாக உலகம் சாயவும் சமநிலைபடுத்துவதற்காக சிவ பெருமான் அகத்திய முனிவரை தெற்கு நோக்கி செல்ல பணிக்கிறார்.அப்படி குற்றாலம் வரும் அகத்தியர் இப்போது குற்றாலநாதர் ஆலயம் இருக்கும் இடத்திற்கு வருகிறார்.அபொழுது அங்கு ஒரு வைஷ்ணவ ஆலயம் இருந்திருக்கிறது.அகத்தியர் அந்த ஆலயத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.அகத்தியர் இலஞ்சியில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வேண்டுகிறார்.பின்பு ஒரு வைணவ பக்தர் போல மீண்டும் குற்றாலத்திற்கு வருகிறார்.அங்கு அவர் பெருமாளை சிவலிங்கமாக மாற்றி அற்புதம் செய்கிறார்.அப்படி சுருங்கி சிவ லிங்கமாக மாறியதினால் குறுகுடல் என்றும் ஒரு பெயர் உண்டு.அந்த பெயர் தான் மருவி குற்றாலம் என்றானது என்றும் சொல்லப்படுகிறது.அதனால் தானோ என்னவோ இங்கு ஆண்டு திருவிழா நேரத்தில் சிவ பெருமான் ஆறு கோலத்தில் காட்சி தருகிறார். பிரம்மா,விஷ்ணு,ருத்திரர்,ஈஸ்வரர்,சதாசிவர்,மற்றும் சுப்பிரமணியர் என்று காட்சி தருகிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது தென்காசி.தென்காசி என்பது தக்ஷின காசி என்று பெயர் பெற்ற ஸ்தலம்.வடக்கே வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் போல தெற்க்கே உள்ளது தென்காசியில் உள்ள இந்த காசி விஸ்வநாதர் கோவில்.சுவாமியின் திருநாமம் காசி விஸ்வநாதர் ,அம்மன் உலகம்மை .பராகிரம பாண்டியரால் எழுப்பப்பட்ட ஆலயம்.சிவ பக்தரான மன்னர் காசியில் உள்ளது போலவே இங்கும் ஒரு கோவில்வேண்டும் என்று எண்ணி எழுபப்பிய கோவில் தான் இது.புத்திரபேறு இல்லாத குலசேகர பாண்டியனக்கு மகளாக அம்பிகை பிறக்கிறாள்.அதை பிற்காலத்தில் அறிந்த மன்னன் உலகநாயகியே தனக்கு மகளாக இருந்ததை எண்ணி அம்மனை உலகம்மை என்ற பெயரிலேயே அழைக்க அம்மனின் திருநாமம் உலகம்மை என்றே வழக்கில் வந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது.வடகாசியில் அம்மனின் திருப்பெயர் விசாலாக்ஷி என்பதாகும்.இந்த கோவிலின் புராதன ராஜகோபுரம் பழுதாகி 1990 ஆம் ஆண்டு மீண்டும் ராஜகோபுரம் எழுப்பப்பட்டது.கோபுரத்திற்கு வெளியில் காற்று ஒரு திசையிலும் கோபுரத்திற்கு உள்புறம் காற்று எதிர் திசையிலும் அடிக்கும் அதிசயத்தை இங்கு காணலாம்.ஆங்கிலத்தில் crosswind draft என்று கூறுவார்களே அந்த முறையில் கோபுரம் அமைந்துள்ளது.வெளி பிரகாரத்தில் கங்கை கிணறு உள்ளது.சுவாமிக்கு அபிஷேகம் செய்ய இந்த நீர் பயன்படுகிறது.விக்கிரகம் இல்லாமல் இரண்டு பீட சந்நதிகளையும் இந்த கோவிலில் காணலாம்.ஓன்று ஆலோசகர் சன்னதி.இந்த கோவில் எழுப்பப்பட்டபோது சிவனே அடியாராக வந்து ஆலோசனைகள் வழங்கியதாக வரலாறு.ஆலோகசகர் சன்னதியில் பீடம் மட்டும் உள்ளது.இன்னொன்று பராசக்தி பீடம்.அம்பாளே இந்த பீட வடிவில் இருப்பதாக ஐதீகம்.இந்த பீடத்தை தாரணி பீடம் என்று சொல்கிறார்கள்.

ஹொரநாடு கர்நாடக மாநிலத்தின் சிக்க்மகலூர் மாவட்டத்தில் உள்ள ஊர்.இது மேற்கு மலை தொடர்ச்சியில் உள்ளது.சிச்கமகலூரில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் அடர்ந்த காடு மற்றும் பள்ளத்தாக்கு சூழ உள்ள பகுதியில் உள்ளது.முடிகேரி ,கலாச வழியாக ஹொரநாடு சென்று அடைய வேண்டும்.தேயில தோட்டங்கள் ,காப்பி தோட்டங்கள் செல்லும் பாதை முழுவதும் உள்ளது.கலாசாவில் இருந்து ஹொரநாடு வரை உள்ள மலைப்பாதை மிகவும் மோசமாக உள்ளது.குண்டும் குழியுமாக உள்ளது.சாலை இப்பொழுது செப்பனிட்டு வருகிறார்கள்.இருந்தாலும் தற்காலிமாக செப்பனிடுவது போல தான் தோன்றுகிறது.இது போன்ற அருமையான ஒரு திருத்தலத்திற்கு செல்லும் பாதை மிகவும் சீக்கிரம் செப்பனிட்டால் நல்லது என்று தோன்றுகிறது.இது ஒரு புராதன ஆலயம்.இங்குள்ள அன்னபூர்ணேஸ்வரி அகத்தியரால் நிறுவப்பட்டது என்று சொல்லப்படுகிறது.ஆனால் தற்பொழுது இருக்கும் அம்மன் சிலை1973 இல் கோவில் புனருத்தாரணம் செய்த பொழுது பிரதிஷ்டை செய்யப்பட்டது.இப்பொழுது அம்மன் ஆதி சக்த்யமகா அன்னபூர்ணேஸ்வரி என்ற திருநாமத்தில் அறியபடுகிறாள்.அம்மன் நான்கு கைகளுடன் நின்ற கோலத்தில் உள்ளது.அன்னபூர்ணதேவியை இங்கு கையில் சங்கு சக்கிரத்துடன் காணலாம்.முழுவதும் தங்கத்தால் ஆன விக்கிரகம்.வரும் பக்தர்கள் அனைவருக்கும் மூன்று நேரமும் அன்னம் அளிக்கப்படுகிறது.அன்னபூர்ணேஸ்வரி அல்லவா,பக்தர்களை பசியுடன் அனுப்பவது இல்லை.கல்யாண சாப்பாடு போல இரண்டு மாடிகளில் மிக பெரிய ஹாலில் மிகவும் சுத்தமான முறையில் வரும் பக்தர்கள் அனைவருக்கும் பாயாசத்துடன் சாப்பாடு போடுகிறார்கள்.அது தான் இங்கு பிரசாதம்.அன்னம்,சாம்பார்,ரசம்,மோரு,கறி,பூந்தி மற்றும் பாயாசத்துடன் வரும் பக்தர்கள் அனைவருக்கும் சாப்பாடு அளிக்கிறார்கள்.மலை மேலே தங்கும் விடுதிகள் உள்ளது.பேரூந்து நிலையமும் உள்ளது.சிக்மகளூர் மற்றும் பெங்களூர் உள்பட கர்நாடகத்தின் பல பாகங்களில் இருந்து இங்கு வர பேரூந்துவசதியும் உள்ளது.காசியில் உள்ள அன்னபூர்ணேஸ்வரி அமர்ந்த கோலத்தில் உள்ளது.அதுவும் தங்கத்தால் ஆன விக்கிரகம் தான்.காசியில் உள்ள அன்னபூர்ணேஸ்வரி கையில் அன்ன கரண்டியுடன் காண படுவாள்.தினமும் அன்னபூர்ணேஸ்வரியை வணங்கினால் ஒருவனுக்கு வாழ்கையில் அன்னத்திற்கு திண்டாட்டம் வராது என்பது நம்பிக்கை.




பேலூர் கர்நாடகத்தின் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்.இது ஒரு காலத்தில் ஹோய்சால மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது.இங்கு உள்ள சென்னகேசவ ஆலயம் மிகவும் கலை நயம் மிகுந்தது.ஹளபேடு போல இங்கும் அருமையான கலை சிற்பங்களை கண்டு களிக்கலாம்.ஹோய்சால பாணியில் அமைந்த கோவில் இது.ஆனால் முகப்பில் உள்ள ராஜகோபுரம் மட்டும் திராவிட பாணியில் உள்ளது.இதற்க்கு காரணம் இந்த கோபுரம் மட்டும் பிற்காலத்திலே விஜயநகர மன்னர்களால் எழுப்பப்பட்டது.சென்னகேசவ என்றால் கன்னடத்தில் அழகான விஷ்ணு என்று பொருள்.ஹோய்சால மன்னன் விஷ்ணுவர்த்தனால் எழுப்பப்பட்ட ஆலயம்.தலக்காட்டில் சோழ மன்னர்களை வென்ற பிறகு அந்த வெற்றியை கொண்டாட எழுப்பப்பட்ட ஆலயம் தான் இது.இது ஒரு 10 ஆம் நூற்றாண்டு ஆலயம்.இந்த ஆலயம் கட்டிமுடிக்க சுமார் 108 ஆண்டுகள் ஆனது என்று சொல்லப்படுகிறது.விஷ்னுவர்த்தனரின் பேரன் காலத்தில் தான் ஆலயம் முழுமை பெற்றது.ஹளபேடு போல இங்கும் சைவ வைணவ சிற்பங்களின் அழகை கண்டு களிக்கலாம்.மிகவும் நுட்பமான கலை வேலைப்பாடுகள்.ஹளபேடு ஆலயம் எழுப்ப 190 ஆண்டுகள் ஆயின என்று சொல்லப்படுகிறது.இருந்தும் அந்த ஆலயம் முழுமை பெறவில்லை.ஆனால் பேலூர் ஆலயம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டது.சென்னகேசவர் தான் இங்கு மூலவர்.கம்பீரமாக நிற்கும் மூலவர் கண்ணை கவருகிறது.சௌமிய தேவி தாயார் சன்னதி உள்ளது.ஆண்டாள் சன்னதியும் உள்ளது.கோவில் உள்ளேயே புஷ்கரனியும் உள்ளது.பல இடங்களில் லக்ஷ்மி நரஸிம்ஹர் சிற்பங்களை அற்புதமாக பல அளவுகளில் கண்டு ரசிக்கலாம்.நாங்கள் சென்றிருந்த சமயம் பெருமாளுக்கு அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது.அந்த நேரத்திலே பக்தர்களுக்கு மிகவும் நன்றாக தெரிவதற்கு ஏதுவாக பெருமாள் மேல light focus செய்யப்படுகிறது.பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாக இருக்கிறது. ரதம்,நாட்டிய நிலைகள் இவைகளெல்லாம் கூட மிகவும் அருமையாக சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.ஹசனில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ளது பேலூர்.பேலூர் செல்லும் பாதையில் உள்ளது ஹளபேடு.

12 ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தை ஆண்ட ஹோய்சால மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது தான் ஹளபேடு. ஹோய்சால மன்னர்கள் அருமையான கலை ரசிகர்கள்.அவர்களால் உருவாக்கப்பட்ட ஹோய்சலேச்வர ஆலயம்,கேதாரேச்வர ஆலயம்,பசாதி ஆலயம்(ஜெயின் ஆலயம் ) மற்றும் ரெங்கநாதர் ஆலயம் இதற்க்கு சான்றாக விளங்குகிறது.உண்மையிலேயே இது போன்ற நுட்பமான நுண்ணிய சில்ப கலை சிறப்புகளை இந்தியாவில் வேறு எங்கும் காண இயலாது.ஹோய்சால மன்னர்களால் அமைக்கப்பட்ட பேலூர்,ஹளபேடு ஆலயங்களே அதற்க்கு சாட்சி. இன்னொரு முக்கியமான விடயம் ஹோய்சால மன்னர்கள் உண்மையிலேயே மத சார்பற்ற ஆட்சி நடத்தி இருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஆலயங்களே சாட்சி. சைவ,வைணவ மற்றும் ஜெயின் ஆலயங்களை அவர்கள் எந்த வித பாகுபாடுகளும் இல்லாமல் உருவாக்கி இருக்கிறார்கள்.இன்னும் சொல்லபோனால் சைவ ஆலயங்களில் அருமையான வைணவ கடவுள் சிலைகள் வடிக்கபட்டிருக்கிறது. அதே போல சைவ ஆலயங்களில் வைணவ சிலைகளையும் காணலாம்.அருமையான மிக பெரிய இரண்டு நந்தி சிலைகளும் கணேசர் சிலையும் கண்ணை கவருகிறது.நந்தி சிலைகளில் காணப்படும் வேலைபாடுகள் வேறு எங்கும் காணகிடைககாதவை.இங்கு ஆலயத்தை சுற்றி உள்ள சுவர்களில் வடிக்கப்பட்டுள்ள சிலைகள் பல வடிவங்களில் காணலாம்.மிகவும் சிறிய நுண்ணிய வேலைபாடுகள் நிறைந்த சிலைகள் ,நடுத்தர மற்றும் பெரிய அளவிலான சிலைகள் ஆகியவைகளை காணலாம்.முக்கியமான விடயம் என்னவென்றால் எல்லா சிலைகளும் இன்றும் உயிரோவியமாக திகழ்வது தான்.மிக சிறிய சிலைகள் சிலது பழுது ஆகி இருக்கிறது.இருந்தாலும் அவைகளின் அழகை காண கண் கோடி வேண்டும்.சிவ தர்பார்,பாலகிருஷ்ண லீலைகள்,அர்சுனனுக்கும் கர்ணனுக்கும் நடந்த போர், கிருஷ்ணர் கோவர்த்தனகிரியை தூக்குவது,கஜேந்திர மோக்ஷம்,மத்ஸ்ய யந்திரம்,ராமரும் வானர சேனையும்,கிருஷ்ணரும் அர்ச்சுனரும் ரதத்தில் இருந்து இறங்குவது,ராவணன் கைலாச பர்வதத்தை தூக்குவது போன்றவைகளும் அருமையான சிலைகளாக வடிக்க பட்டுள்ளது.இரண்டு நந்திகளுக்கு எதிரில் இரு மிக பெரிய சிவ லிங்கங்கள் மூலவராக உள்ளது.இதற்க்கு இங்கு இன்றும் பூஜைகள் செய்யப்படுகிறது.ஆனால் ஒரு நெருடலான விடயம் வழக்கமாக சிவாலயங்களில் காணப்படும் அம்மன் சன்னதி இங்கு இல்லாதது தான்.கண்டிப்பாக அனைவரும் வாழ்க்கையில் ஒரு முறையாக பார்க்க வேண்டிய இடம் இது.ஆலயத்திற்கு வெளியில் அருமையான் புலவெளியும் தோட்டமும் ஒரு குளமும் உள்ளது.ஊருக்குள் இருக்கும் ரெங்கநாதர் ஆலயத்திற்கு சென்றபொழுது ஏனோ அந்த ஆலயம் மூடப்பட்டிருந்தது.சுற்றிலும் புதர்கள் நிறைந்திருந்தது.அதனால் பார்க்க இயலவில்லை. ஹசனில் இருந்து பேலூர் செல்லும் பாதையில் உள்ளது ஹளபேடு.

கோமதேஸ்வரர் ஒரு ஜெயின் துறவி. இந்தியாவில் உள்ள மிக முக்கியமான ஜெயின் ஆலயங்களில் கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் உள்ள ச்ர்வனபேலகொலாவில் உள்ள கொமேதஸ்வரர் ஆலயமும் ஓன்று. சுமார் 60 அடி உயரத்தில் உள்ள கோமதேஸ்வரர் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிலை.இது போன்ற சிலைகளில் உலகிலேயே இது தான் மிகவும் உயரமானது என்று கூறப்படுகிறது.ஹோய்சால மன்னர்களால் அன்றைய கர்நாடகாவில் பல ஹிந்து,மற்றும் ஜெயின் ஆலயங்கள் எழுப்ப பட்டன.அவற்றில் முக்கியமான ஜெயின் ஆலயம் தான் இது. இந்த ஆலயம் தற்பொழுது வழிபாட்டில் இருந்தாலும் ஒரு சுற்றுலா ஸ்தலம் போல பிற மதத்தினரும் அதிக அளவில் வருகிறார்கள்.ஜெயின் துறவிகளை தீர்த்தங்கரர் என்று அழைக்கிறார்கள்.ஜெயின் துறவிகளின் சிலைகள் பொதுவாக நிர்வாணமாக தான் இருக்கும்.கோமதேஸ்வரரின் சிலையும் அந்த வகையிலேயே உள்ளது.மிகவும் உயரமான ஒரு மலையின் மேல் தான் இந்த ஆலயம் உள்ளது.சுமார் 700 படிகள் செங்குத்தாக ஏறி இந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.மலை உச்சியில் கம்பீரமாக கோமதேஸ்வரர் சிலை நிற்கிறது.கோமதேஸ்வரர் சிலைக்கு மேலே கூரை இல்லை.திறந்த வெளியிலேயே இருக்கிறது.ஆனால் சுற்றிலும் ஆலயம் உள்ளது.இது ஒரு 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆலயம்.குன்றின் மேல் இருந்து பார்த்தால் மிகவும் ரம்ம்யமாக இருக்கிறது.அருமையான ஹோய்சால கால சிற்ப கலைகளையும் இங்கு கண்டு களிக்கலாம்.கோமதேஸ்வரருக்கு மற்றொரு பெயர் பஹுபாலி.24 ஜெயின் தீர்த்தங்கரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.அதில் முதல் தீர்த்தங்கரரின் புதல்வர் தான் பஹுபாலி.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கு பஹுபாலிக்கு மகாஅபிஷேகம் நடைபெறும்.ஜெயினர்களுக்கு அது ஒரு மிக பெரிய விழா ஆகும்

மங்களூரில் இருந்து 128 கி.மீ தொலைவில் உள்ளது கொல்லூர் மூகாம்பிகா ஆலயம். சிவனும் சக்தியும் இணைந்த ஜோதிர் லிங்க ஸ்தலம் இது.ஆதி சங்கரரால் அமைக்கப்பட்ட ஸ்ரீ சக்ரத்தின் மேல் தான் மூகாம்பிகா அம்மனின் பஞ்சலோக விக்கிரகம் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் ஒரு பஞ்சமுக விநாயகரும் உள்ளார். சௌபர்ணிகா நதி கரையில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.சப்தரிஷிகள் கவுமாசுரன் என்ற அசுரனை அழிக்க யாகம் செய்யும் பொழுது சுக்ராசார்யார் வரபோகும் ஆபத்தை அவனுக்கு உணர வைக்கிரார். அந்த அசுரன் உடனே சிவ பூஜை செய்கிறான். அவன் முன் தரிசனம் தந்த சிவ பெருமான் 'என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார்'.அசுரன் கேட்க்கும் வரத்தால் வர இருக்கும் ஆபத்தை உணர்ந்து வாகதேவி அவனை உமை ஆக மாற்றுகிறாள். அன்று முதல் பேச முடியாத கவுமாசுரன் மூகாசுரனாக அறியபடுகிறான்.பின்பு கோல ரிஷியின் வேண்டுதலுக்கு இணங்கி அம்மனின் சக்தியால் மூகாசுரன் அழிக்க படுகிறான்.மூகாசுரன் அழிக்க பட்ட அந்த இடத்தில் தான் அன்னை மூகாம்பிகை ஆலயம் அமைந்துள்ளது.லக்ஷ்மி,பார்வதி மற்றும் சரஸ்வதி மூன்றும் சேர்ந்த ஒரு சக்தி தான் மூகாம்பிகை அம்மன்.இங்கு அன்னை இருப்பதை அறிந்து ஆதி சங்கரரால் ஸ்ரீ சக்கரத்தில் மூகாம்பிகை அம்மன் பிரதிஷ்டை செய்யபடப்பட்டது .பரசுராமரால் கர்நாடகத்தில் உருவாக்கப்பட்ட ஏழு முக்தி ஸ்தலங்களில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் ஓன்று. இங்கு மூகாம்பிகை அம்மன் பத்மாசன தோற்றத்தில் காட்சி தருவது இன்னொரு விசேஷம்

மங்களூரில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உடுப்பி உள்ளது. இங்கு உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆலயம் மிகவும் பிரபலம்.மதவச்சர்யரின் மடத்தில் தான் இந்த ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம் உள்ளது.
ஸ்தல புராணம்
துவரகாவில் முழுவதும் சந்தனத்தால் மறைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர் சிலையை ஒரு மாலுமி தவறுதலாக சந்தன கட்டை என்று கருதி கப்பலின் சமநிலைக்கு பயனபடுத்தும் பெரிய எடைக்கு பயன்படும் என்று கருதி எடுத்து செல்கிறார்.மாலபே அருகே கப்பல் கரையை கடக்கும் பொழுது ஒரு பெரும் புயலில் சிக்குகிறது.அந்த நேரத்தில் தியானத்தில் இருந்த மத்வாச்சர்யரின் ஞான திருஷ்டியால் இந்த விஷயம் தெரிந்த உடனே அவர் தனது சக்தியால் புயலின் சீற்றத்தை குறைத்து கப்பலை பாதுகாப்பாக கரை சேர்க்கிறார்.அந்த மாலுமி உடனே நன்றி கடனாக கப்பலில் இருக்கும் பொருள்களில் என்ன வேண்டுமோ கேளுங்கள் என்று கூறுகிறார். மத்வசார்யர் சந்தனகட்டையை கேட்கிறார். அந்த சந்தன கட்டையை மடத்துக்கு கொண்டு வந்து சுத்தப்படுத்தி ஸ்ரீ கிருஷ்ணர் சிலையை மடத்தில் நிறுவுகிறார்.16 ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ கிருஷ்ணரின் தீவிர பக்தர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த கனகதாசரக்கு ஆலய பிரவேசம் நிராகரிக்கபடுகிறது. இருந்தும் கவலைப்படாமல் அவர் ஆலய வாசலில் நின்று தியானம் செய்தபடியே இருக்கிறார்.ஸ்ரீ கிருஷ்ணர் தனது தீவிர பக்தருக்காக அப்படியே திரும்பி சுவற்றில் ஒரு சிறு துவாரம் உருவாக்கி அதன் மூலம் தனது பக்தருக்கு காட்சி அளிக்கிறார்.அன்று முதல் இன்று வரை ஸ்ரீ கிருஷ்ணரை அந்த திரும்பிய நிலையில் ஜன்னல் துவாரம் வழியாகவே பக்தர்கள் தரிசிக்கிறார்கள்.அந்த ஜன்னலை கனகனகிந்தி என்று கன்னடத்தில் சொல்கிறார்கள்.

உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுரா என்ற ஊருக்கு மிக அருகில் உள்ள ஊர் தான் ஆநேகுட்டே. இங்கு உள்ள ஸித்தி விநாயகர் ஆலயம் மிகவும் பிரிசித்தம்.பிள்ளையார்பட்டி,காணிப்பாக்கம்,ஈச்சனாரி,மணக்குள விநாயகர் போன்ற தனி விநாயகர் ஆலயம் இது.மங்களூரில் இருந்து 90 கி.மீ தொலைவிலும் ,உடுப்பியில் இருந்து 30 கி.மீ தொலைவிலும் ,குந்தாபுராவில் இருந்து 3 கி.மீ தொலைவிலும் இந்த கோவில் உள்ளது. இந்த ஊருக்கு கும்பாசி என்று மற்றொரு பெயரும் உண்டு.
முன்னொரு காலத்தில் இந்த ஊர் வறட்சியின் பிடியில் இருந்த பொழுது அகத்தியர் மழை வேண்டி இங்கு யாகம் செய்கிறார்.அப்பொழுது கும்பாசுரன் அந்த யாகத்திற்கு விக்கினம் ஏற்படுத்த முனைகிறான். அப்பொழுது ஸித்தி விநாயகர் பாண்டவர்களில் ஒருவரான பீமருக்கு ஒரு வாள் அளிக்கிறார். அந்த வாளினால் பீமர் குபாசுரனை சம்ஹாரம் செய்கிறார். அதனால் இந்த ஊருக்கு கும்பாசி என்று ஒரு பெயரும் உண்டு.இங்கு விநாயகரை வெள்ளி கவ்ச அலங்காரத்தில் தரிசிக்கலாம்.நான்கு கரங்குளுடைய விநாயகரின் இரண்டு கரங்கள் வரம் அருளும் ஹஸ்த கரங்கள்.மாற்ற இரண்டு கரங்கள் கீழ் நோக்கி பக்தர்களுக்கு அபயம் அளிக்கும் கரங்கள். கர்நாடகத்தில் உள்ள ஏழு முக்தி ஸ்தலங்களில் இதுவும்ஓன்று. உடுப்பி கொல்லூர் சுப்ரமண்யா சுப்ரமண்யா
சங்கரநாராயணா கோகரணம் ஆகியவை  மற்றவை ஆகும்

ஹம்பி மற்றும் விஜயநகர சாம்ராஜ்ய புராதன கலாசார சின்னங்களை பற்றி தனியாகவும் விரிவாகவும் எழுத உள்ளேன்.அனால் இந்த பதிவில் விருபாக்ஷ சுவாமி ஆலயத்தை பற்றி மட்டுமே கூறியுள்ளேன்.அதற்க்கு ஒரு காரணமும் உண்டு.பரந்து விரிந்து கிடக்கும் விஜயநகர சாம்ராஜ்ய அழிவுகளில் அழிந்த நிலையில், எந்த வித தெய்வ வழிபாடும் இல்லாமல்,வெறும் சுற்றுலா ஸ்தலமாக பல ஆலயங்கள் இருக்கும் இடத்தில் இன்றும் ஓங்கி உயர்ந்து கம்பீரமாக மக்கள் தினசரி வழிபடும் ஆலயமாக திகழ்வது இந்த விருபாக்ஷ சுவாமி ஆலயம் மட்டுமே.ஹம்பியில் துங்கபத்ரா நதி கரையில் உள்ளது இந்த சிவாலயம்.விருபாக்ஷச்வாமி என்பது சுவாமியின் திருநாமம்.அம்மனின் திருநாமம் பம்பாதேவி. இங்கும் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது.துங்கபத்ரா நதிக்கு இன்னொரு பெயர் பம்பா நதி. அதனாலயே இறைவனுக்கு இங்கு பம்பாபதி என்றும் ஒரு பெயர் உண்டு.ஆலயத்திற்கு நடுவிலும் பூமிக்கு அடியில் துங்கபத்ராவின் ஒரு சிறு பகுதி ஓடுகிறதாக சொல்லப்படுகிறது.விஜயநகர அரசர்களின் குலதெய்வம் விருபாக்ஷச்வாமி .விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு ஆரம்பத்தில் விருபாக்ஷா நகர சாம்ராஜ்யம் என்று ஒரு பெயர் இருந்ததாக கூற படுகிறது.அற்புதமான வேலைப்பாடுகள் நிறைந்த ஆலயம்.விஜய நகர சாம்ராஜ்ய சிற்ப கலையின் நுட்பத்தை இங்கு கண்டு களிக்கலாம். தத்ரூபமாக கல்லிலேயே பெரிய கொப்பரை ஓன்று உள்ளது.அதே போல் சுவாமி சன்னதிக்கு முன் கல்லிலேயே பெரிய விபூதி மறை செதுக்கி உள்ளார்கள்.மிகவும் அற்புதமாக உள்ளது. இந்த ஆலயத்தில் ஒரு அபூர்வ மூன்று தலை நந்தி உள்ளது.மூல ஸ்தானத்திற்கு முன் உள்ள நடு மண்டபம் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இரு அம்மன் சன்னதிகள் உள்ளது.பம்பா தேவி மற்றும் புவநேஸ்வரிதேவி .சிவன் சன்னதிக்கு பின் புறம் உள்ள படிக்கட்டுகளில் ஏறி வலது புறம் பார்த்தால் ஒரு சிறு துவாரம் வழியாக கிழக்கு புறம் உள்ள பிரதான கோபுரம் தெரியும்.அதற்க்கு நேர் எதிர் புறம் திரும்பி சுவற்றில் பார்த்தால் கோவில் கோபுர நிழல் தலை கீழாக தெரியும்.இது ஒரு விந்தையான விடயம்.சுற்றிலும் பல சமகால ஆலயங்கள் முற்றிலும் அழிந்த நிலையில் இருக்க இந்த சிவாலயம் மட்டும் வழிபாட்டு ஸ்தலமாக இன்றும் திகழ்வதும் ஒரு ஆச்சர்யமே.

கர்நாடக மாநிலத்தில் ஹோஸ்பெட் அருகில் உள்ள இடம் தான் அநேகொந்தி. இங்கு தான் நவபிரிந்தாவனம் ஆலயம் உள்ளது.ஸ்ரீ ராகவேந்தரின் ஒன்பது மாதவ ஆசார்ய குருமார்களின் சமாதி இங்கு அமைந்து உள்ளது.இது மிகவும் புனிதமானதும் சக்தி வாய்ந்ததுமான ஸ்தலமாக கருதப்படுகின்றது. இந்த ஒன்பது சமாதிகளில் அந்த மகான்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.திரு ஏ.எம்.ஆர் அவர்கள் குமுதம் ஜோதிடம் இதழில் இந்த இடத்தின் மகாமத்யத்தை பற்றி பல முறை விளக்கி எழுதி உள்ளார்கள்.பக்தர்களும் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் அவர்களின் வாழ்கையில் நடந்த அதிசயங்களையும் குமுதம் ஜோதிடம் மூலம் வாசகர்களுடன் பகிர்ந்திருக்கிறார்கள்.இந்த இடத்தின் மற்றொரு சிறப்பு இந்த இடம் தான் ராமாயணத்தில் சொல்லப்படும் கிஷ்கிந்தா.சுக்ரீவரும் அவரது வானர சேனையும் இங்கு தான் இருந்ததாக சொல்லப்படுகிறது.நவபிரிந்தாவனம் அமைந்து இருக்கும் இடம் ஒரு தீவு.ஒரு புறம் துங்கா நதி ஓடுகிறது.மறுபுறம் பத்ரா நதி ஓடுகிறது.இரண்டும் சங்கமித்து துங்கபத்ரா நதியாக மாறும் இடத்தில் ஒரு பாறையின் மேல் உள்ளது நவபிரிந்தாவனம்.அநேகொந்தியில் இருந்து மோட்டார் படகு மூலம் தான் இந்த இடத்தை சென்று அடைய முடியும்.சீதையை தேடி புறப்பட்ட ராமரும் லக்ஷ்மணரும் இந்த பாறையின் மேல் தங்கி இருந்ததாக வரலாறு.மேலும் இந்த இடத்தில் தான் ராமர் ஆஞ்சநேயரை சந்திக்கிறார்.அந்த இடத்தில் தான் ஒன்பது மகான்களின் சமாதி அமைந்துள்ளது.நவபிரிந்தாவனத்தில் ஒன்பது சமாதி போக ஆஞ்சநேயர் மற்றும் ரங்கனாதருக்கும் சிறு சன்னதிகள் உள்ளது.இந்த ஒன்பது மகான்களில் முதல் ஆசார்யர் ஸ்ரீ பத்மநாபா தீர்த்தர்.இவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.இவர் தான் மத்வசார்யரின் முதல் சீடர்.உலகின் முதல் ஜீவா சமாதி இவருடையது தான்.பல கால கட்டத்தில் வாழ்ந்த ஒன்பது மகான்களின் சமாதிகள் இங்குள்ளது.அந்த ஒன்பது மகான்கள்
1.ஸ்ரீ பத்மநாபா தீர்த்தர்
2.ஸ்ரீ ரகுவர்யா தீர்த்தர்
3.ஸ்ரீ கவீந்த்ரா தீர்த்தர்
4.ஸ்ரீ வாகீச தீர்த்தர்
5.ஸ்ரீ வ்யாசராஜா தீர்த்தர்
6.ஸ்ரீ ஸ்ரீனிவாச தீர்த்தர்
7.ஸ்ரீ ராம தீர்த்தர்
8.ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர்
9.ஸ்ரீ கோவிந்த ஒடெயர்

நவப்பிரிந்தாவனம் தியான ஸ்லோகம்

பத்மநாபம் கவீந்திரம் ச வாசீகம்
வ்யாசராஜகம் ஸ்ரீநிவாசம் ராமதீர்த்தம்
ததைவச் ஸ்ரீ சுதீந்திரம் ச கோவிந்தம்
நவபிரிந்தாவனம் பஜே

மந்திராலயத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள இடம் தான் எம்மிகநூர். இங்கு தான் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.இந்த இடத்தை பஞ்சமுகி என்றும் அழைக்கிறார்கள். இந்த இடத்திற்கு செல்லும் சாலை இறுதியில் சுமார் 5 கி.மீ மிகவும் குறுகலான மோசமான சாலையாக உள்ளது. ஒரு பெரிய பாறையின் மேல் அமைந்து உள்ள குன்றில் தான் இந்த ஆலயம் உள்ளது.குகை வடிவில் உள்ள இந்த இடத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் 12 ஆண்டு காலம் தவம் இருந்திருக்கிறார்.இந்த இடத்திலும் இதன் சுற்று வட்டாரத்திலும் பல வித வடிவங்களில் பெரிய பாறைகள் நிறைந்திருக்கிறது.Boulders என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அந்த வித பாறைகள். இந்த வடிவங்கள் இயற்கையாக அமைந்தவை.விமான வடிவ பாறை,மெத்தை தலையனை வடிவ பாறை போன்றவைகளும் இங்கு உள்ளது. இங்கு பாறை மேல் உள்ள ஆஞ்சநேயர் சுயம்புவாக வந்தது .ஐந்து தலை மற்றும் பத்து கைகளுடன் அமைந்துள்ளது. ஸ்ரீ ராகவேந்தரின் தவத்தை அடுத்து , திருப்பதி வேங்கடவர்,மகாலக்ஷ்மி,பஞ்சமுகி ப்ரானதேவரு மற்றும் கூர்மாவதாரர் ராகவேந்திர சுவாமிகளுக்கு காட்சி அளித்ததாக வரலாறு.அதற்க்கு பின்பு தான் சுவாமிகள் மந்திராலயம் சென்று ஜீவ சமாதி அடைகிறார்கள்.ஹனுமான்,கருடர்,நரசிம்ஹர்,வராஹர் மற்றும் ஹயக்ரீவர் தான் இந்த ஐந்து முகங்கள்.கிழக்கு நோக்கி இருப்பது அனுமன் முகம்,தெற்கு நோக்கி இருப்பது நரசிம்ஹர்,மேற்கு நோக்கி இருப்பது கருடர்,வடக்கு நோக்கி இருப்பது வராஹர் .உச்சியில் இருப்பது ஹயக்ரீவர்.ஐந்து வகையில் இறை வழிபாடு செய்யலாம். இறைவன் நாமாவளி சொல்வது,இறைவனை ஸ்மரித்து கொண்டே இருப்பது,இறைவனை கீர்த்தனைகள் மூலம் பாடி துதிப்பது,இறைவனிடம் யாசிப்பது கடைசியில் இறைவனிடம் சரணாகதி அடைவது.பஞ்சமுகத்தில் உள்ள ஐந்து முகங்களும் இந்த ஐந்து நிலைகளை தான் குறிக்கிறது.


கடந்த சில தினங்களில் மந்திராலயம்,பஞ்சமுகி ,நவபிரிந்தாவனம்,ஹம்பி,ஆநேகுட்டி,உடுப்பி மற்றும் கொல்லூர் சென்று வந்தேன்.இந்த பயண விபரங்களை விரிவாக பல பகுதிகளாக இணையதள நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றுள்ளேன்.தமிழில் இந்த ஆலய தரிசன வலைப்பதிவினை கடந்த சூலை மாதம் தான் தொடங்கினேன்.அதற்க்கு முன்பு நான் சென்று வந்த பல ஆலயங்களை பற்றியும் எழுத எண்ணி இருந்தேன். ஆனால் அதற்குள்ளாக இந்த பயணம் செல்ல வேண்டி வந்தது.அதனால் முதலில் சமீபத்தில் சென்று வந்த விபரங்களை வலைபதிவில் பகிர்ந்த பின்பு மற்றவை குறித்து எழுதலாம் என்றுள்ளேன்.ஆந்திராவில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் எம்மிகநூர்.இது துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது.அங்கு தான் ஸ்ரீ குரு ராகவேந்திரா மந்திராலயம் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ராகவேந்திரர் இங்கு ஜீவ சமாதி அடைந்து பிரிந்தாவனத்தில் பிரவேசித்தார்.அவர் இன்றும் தனது யோக சமாதியில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டிருக்கிறார். கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்தும் ராய்ச்சூர் செல்லும் பாதை வழியாகவும் மந்திராலயம் வந்து சேரலாம்.இங்கு ராகவேந்திரர் தவிர வாதீந்திர தீர்த்தருக்கும் பிரிந்தாவனம் உள்ளது.ராகவேந்தரரின் பிரிந்தாவனதிற்க்கு செல்லும் முன் வலது புறம் மஞ்சலம்மா சன்னதி உள்ளது. இங்கு வழிபட்ட பின்பு தான் ராகவேந்தரரின் பிரிந்தாவன தரிசனத்திற்கு செல்ல வேண்டும். பிரிந்தாவனத்தின் எதிர்புறம் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.பூர்வாச்ரமத்தில் அவரது இயற் பெயர் வேங்கடநாதர் .அவரது குரு சுதீந்திர தீர்த்தர் அவரை பீட பொறுப்பை ஏற்குமாறு பணித்த போது மரியாதையுடன் மறுத்து விடுகிறார்.தனக்கு குடும்பம்,மனைவி,மற்றும் மகன் உள்ளதால் ஏற்க முடியாது என்று கூறி விடுகிறார்.ஆனால் தெய்வ செயல் வேறு விதமாக இருக்கவும் இறுதியில் குடும்பத்தை துறந்து சன்யாசம் மேற்கொள்கிறார்.பல அதிசயங்களை நிகழ்த்தி உள்ளார்.இறந்தவருக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார்,தீராத வியாதிகளை குணப்படுத்தி உள்ளார்.சித்தி மசூத் கான் என்ற நவாப் வேண்டும் என்றே பழம் மற்றும் இனிப்புகளுடன் மாமிசத்தையும் மைத்து சுவாமிகளிடம் கொடுத்துள்ளார்.ராகவேந்திரர் தனது சக்தியால் அவற்றை பழங்கள் மற்றும் முந்திரி பருப்புகளாக மாற்றி நவாபை திகைக்க வைத்தார்.உடனே சுவாமிகளிடம் மன்னிப்பு கோரிவிட்டு விளைநிலத்தை மடத்திற்கு தானமாக அளிக்கிறார்.ஆனால் சுவாமிகள் அதை மறுத்து விட்டு மடத்திற்கு மானியம் கோருகிறார்.இன்னொரு அதிசயம் சர் தாமஸ் மன்றோ சம்பந்தப்பட்டது.மானியங்களை திரும்ப பெறும் சட்டம் மூலம் மடத்துக்கு கொடுக்கப்பட்டிருந்த மானியம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது.மந்திராலயம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியாளரிடம் மசூத் கான் மடத்துக்கு தானமாக கொடுத்த நிலத்தை திரும்ப பெற கூடாது என்று கோரிக்கை எழுப்பினார்கள்.அந்த நேரம் பெல்லாரி மாவட்ட ஆட்சியாளராக இருந்த மன்றோ நேரில் சென்று விசாரிக்க எண்ணி மடத்துக்கு சென்றார்.மடத்துக்குள் நுழைந்த உடன் அவர் ஆங்கிலத்தில் யாருடனோ உரையாட ஆரம்பித்தார்.சுற்றி இருந்தவர்களுக்கு அவர் யாருடன் உரையாடினார் என்பது புரியவில்லை.மன்றோ நீங்கள் குறிப்பிடும் மகான் இவர் தானா என்று மட்டும் கேட்டு விட்டு சென்று விடுகிறார். பின்பு அவர் ஆளுநருக்கு மடத்துக்கு சட்டப்படி உரிமை உள்ள நிலம் அது என்று தகவல் அனுப்புகிறார்.அந்த தகவல் ஆளுநருக்கு சென்று அடையும் முன்பே ஆளுநர் இங்கிலாந்துக்கு விடுமுறையில் செல்கிறார்.மன்றோ தாற்காலிக ஆளுநராக பொறுப்பேற்கிறார். ஆளுநராக அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு மடத்துக்கு நிலம் அளிப்பது சம்பந்தப்பட்டது தான். நாடெங்கும் இருந்து வரும் பக்தர்களுக்கு ராகவேந்திரர் தனது பிரிந்தாவனத்தில் யோக சமாதி நிலையில் அமர்ந்து அருள் பாலித்து வருகிறார்

தனுஷ் என்றால் வில், கோடி என்றால் கடைசி.ராமர் தன் வில்லின் கோடியால் தொட்டு சேதுவின் ஒரு முனையை காட்டினார் என்பதால் இந்த இடத்திற்கு தனுஷ்கோடி என்று பெயர். இங்கிருந்து இலங்கைக்கு கடல் வழியாக 18 மைல் தொலைவு. 1964 ல் நடந்த கோர ரயில் விபத்துக்கு முன் சென்னை எழும்பூரில் இருந்து தனுஷ்கோடி வரை போட் மெயில் என்ற விரைவு ரயில் ஓடி கொண்டிருந்தது. தனுஷ்கோடியில் இருந்து படகு மூலம் இலங்கையை அடையவும் அப்பொழுது வசதி இருந்ததாக சொல்லப்படுகிறது. உலக அளவில் நடந்த மிக பெரிய ரயில் விபத்துக்களில் தனுஷ்கோடி ரயில் விபத்தும் ஓன்று.இரவு நேரத்தில் அடித்த சூறாவளி புயலில் சிக்கி தனுஷ்கோடி தீவு முற்றிலுமாக அழிந்தது. ரயில் பாலம் முற்றிலுமாக சேதம் அடைந்து ரயில் கடல் நீரில் மூழ்கியது. Dec 23 1964 ல் நடந்த இந்த விபத்தில் அந்த ரயிலில் இருந்த 123 பயணிகளும் ,ரயில் ஓட்டுனர்களும் மாண்டார்கள். இன்று மனிதர்கள் யாரும் வசிக்காத ஒரு இடமாக தனுஷ்கோடி திகழ்கிறது. அழிந்த நிலையில் உள்ள ஒரு மாதா கோவில் இன்றும் அந்த புயலுக்கு சாட்சியாக உள்ளது. எங்கு பார்த்தாலும் மணல் வெளி . தார் சாலை முடிவில் சுமார் 6 கி.மீ தூரம் மிகவும் மெலிதான மணல் ஆன பகுதியாக உள்ளது. அதன் கோடியில் இரு கடல் சங்கமம் உள்ளது. அங்கிருந்து தான் ராமரின் வானர சேனை இலங்கைக்கு சேது பாலம் அமைத்தார்கள் என்பது வரலாறு. இன்று வெறும் மணல் பரப்பாக மட்டுமே காட்சி அளிக்கிறது. இந்த 6 கி.மீ தூரம் four wheel drive உள்ள வாகனங்களில் மட்டுமே பயணிக்க முடியும்.

ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 18 கி. மீ தொலைவில் உள்ளது தனுஷ்கோடி. 1964 இல் வீசிய புயலில் முற்றிலுமாக தனுஷ்கோடி அழிந்துவிட்டது. ஆனால் கோதண்டராமஸ்வாமி கோவில் மட்டும் அந்த புயல் தாக்குதலில் இருந்து தப்பித்தது.ராவணனின் தம்பி விபீடணன் இங்கு வந்து தான் ராமரிடம் சரண் அடைந்து தனது தமயனாருக்காக மன்னிப்பு கேட்டதாக வரலாறு.ராமர் விபீடணின் மன்னிப்பை ஏற்று அவருக்கு லங்காதிபதியாக பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார்.இங்குள்ள கோதண்டராமஸ்வாமி கோவிலில் ராமர்,சீதை,லக்ஷ்மணன்,அனுமன் மற்றும் விபீடணன் காட்சி அளிக்கின்றனர் .

ராமர் பாதம் போகும் பாதையில் சாட்சி அனுமன் கோவில் உள்ளது. இந்த இடத்தில் தான் ஆஞ்சநேயர் பெருமான் ராமனிடத்தில் சீதையை இலங்கையில் கண்டதற்கு சாட்சியாக சீதை அணிந்திருந்த சூடாமணியை ராமரிடம் காண்பிக்கிறார். ராமேஸ்வரத்தில் உள்ள இன்னொரு ஆஞ்சநேயர் கோவில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். காசியில் இருந்து சிவலிங்கம் கொண்டு வரும் அனுமன் சீதை மணலில் சிவ லிங்கம் பிடித்திருப்பதை கண்டு கோபம் அடைந்து அந்த சிவ லிங்கத்தை தன் வாலில் கட்டி இழுக்கிறார். அப்பொழுது அனுமனின் வால் அறுந்து தெறித்து இந்த இடத்தில் வந்து விழுகிறார். அனுமன் வால் அறுந்து விழுந்த அந்த இடத்தில் தான் இந்த பஞ்சமுக அனுமன் கோவில் உள்ளது. ராமேஸ்வரம் கோவிலில் உள்ள சிவ லிங்கத்தில் அனுமனின் வால் தடம் இன்றும் உச்சியில் உள்ளது என்று சொல்லப்படுகிறது.

ராமேஸ்வரத்திற்கு வட மேற்கு திசையில் இருக்கும் ஒரு சிறு குன்றுக்கு பெயர் பர்வத மலை. இங்கிருந்து பார்த்தால் ராமேஸ்வரம் தீவு முழுவதும் மிகவும் ரம்மியமாக தெரியும். இந்த குன்றின் மேல் இருந்து தான் அனுமன் இலங்கைக்கு தாவினதாக கூறப்படுகிறது. ராமர் இந்த குன்றின் மேல் நின்று இலங்கை திசையை நோக்கி பார்த்ததாகவும் சொல்லப்படுகிறது. பாறை மேல் ராமர் பாதம் பதிந்துள்ளது.ராமர்,சீதை மற்றும் லக்ஷ்மணர் சன்னதி இங்குள்ளது.

இந்துக்களின் புனித ஆலயம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி ஆலயம்.இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் இதுவும் ஓன்று .ராவணனை வதம் செய்த பிறகு ப்ரம்மஹத்தி தோஷ நிவாரணத்திற்கு ராமர் சிவ பூஜை செய்ய விரும்பிகிறார். அனுமனை காசிக்கு அனுப்பி சிவலிங்கம் எடுத்து வர பணிக்கிறார்.ஆஞ்சநேயர் வருவதற்கு தாமதமானதால் சீதை மணலில் பிடித்த சிவ லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்கிறார். தாமதமாக வரும் ஆஞ்சநேயர் இதை பார்த்து கோபம் கொள்கிறார். அனுமனை சமாதனம் செய்ய அனுமன் கொண்டு வந்த லிங்கத்தையும் அருகில் வைத்து ராமர் பூஜை செய்கிறார். இன்றும் அனுமன் லிங்கமும் ராமலிங்கமும் இந்த ஆலயத்தில் உள்ளது. முதலில் அனுமன் லிங்கத்திற்கு பூஜை செய்த பின்பே ராமலிங்கத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. இங்கு 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளது. ஒவ்வொரு தீர்த்தத்தின் நீர் ருசி வித்தியாசமாக இருக்கும்.இந்த புண்ணிய தீர்த்தங்களில் நீராடி ராமலிங்க தரிசனம் செய்வது இங்கு வழக்கம். முன்னோர்களுக்கு பித்ரு தோஷ நிவர்த்தியும் ராமேஸ்வரம் கடல் கரையில் இந்துக்கள் செய்வது பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது.

ராமேஸ்வரத்திற்கு பதினைந்து கி.மீ முன்பு உள்ள ஊர் இது.ராமர் இலங்கைக்கு செல்வதற்கு முன்பு இங்கு நவக்கிரக பூஜை செய்து போனார் என்று சான்றுகள் கூறுகிறது. ஒன்பது நவபாஷாண கற்கள் சுமார் நூறு மீட்டர் தூரத்தில் கடலுக்குள் இருக்கிறது. இங்கு சாதரணமாக முழங்கால் அளவிற்கு தான் கடல் நீர் இருக்கும். ஒன்பது கிரகங்களும் நீருக்கு மேல் தெரியும் வகையில் இருக்கும். சில சமயங்களில் நீரின் அளவு அதிகமாகி நாலு அல்லது ஐந்து கிரகங்கள் மட்டுமே நீர் மேல தெரியும். ராமர் இங்கு நவக்கிரக பூஜை செய்யும் பொது கடல் அலை வராமல் ஜெகநாத பெருமாள் தடுத்து நிறுத்துகிறார்.இன்றும் தேவிபட்டினத்தில் கடலைடத்த ஜெகநாத பெருமாள் ஆலயம் கடல் கரையில் உள்ளது. இன்றும் இந்த பகுதியில் கடல் அமைதியாக காட்சி அளிப்பதற்கு இந்த பெருமாள் தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.திருப்புல்லாணி ஜெகநாத பெருமாளையும் தரிசனம் பண்ணிவிட்டு ராமர் இலங்கைக்கு சென்றதாக வரலாறு.


உத்திரகோசமங்கை ஆலயத்தில் இருந்து மிக அருகில் உள்ளது திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் ஆலயம்.108 திவ்ய தேச கோவில்களில் இதுவும் ஓன்று.இங்கு மூலவர் கல்யாண ஜெகநாதர் தாயார் கல்யாண பத்மாசினி .கல்யாணம் ஆகாதவர்கள் இங்கு தாயாரை வேண்டி திருமண ப்ராப்தி அடைகிறார்கள்.இங்கு சயன கோலத்திலும் பெருமாள் சன்னதி உண்டு.ராமர் பட்டாபிஷேக சன்னதியும் உண்டு.ராமர்,சீதை,லக்ஷ்மணன் மற்றும் ஆஞ்சநேயருடன் காட்சி தருகிறார்.

ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது உத்திரகோசமங்கை என்ற பாடல் பெற்ற ஸ்தலம்.மாணிக்கவாசகர் அதிக நாள் இந்த ஆலயத்தில் தங்கி இருந்ததாக குறிப்புகள் கூறுகின்றன.சுவாமிக்கு மங்களநாதர் என்று பெயர்.இங்கு நடராஜர் சிலை மரகதத்தில் உள்ளது.இந்த நடராஜர் தான் ஆதி நடராஜர் என்றும் சொல்லப்படுகிறது.அதாவது தில்லை நடராஜரக்கு முன்பு இருந்தே இந்த ஆலயம் உள்ளது.ஆரூதரா தரிசனத்தன்று மட்டுமே நடராஜரை மரகத கோலத்தில் தரிசிக்கமுடியும்.மற்ற நாட்களில் சந்தனகாப்பு சார்த்தபட்டிருக்கும்.ஆரூதரா தரிசனம் முடிந்த அடுத்த நாள் மீண்டும் சந்தன காப்பு சார்த்தப்பட்டு அடுத்த ஆண்டு ஆரூதரா தரிசனத்தன்று மட்டுமே களையப்படும்.இறைவன் உமையவள் மட்டும் காணுமாறு நடனம் ஆடியது உத்திரகோசமங்கையில் மட்டுமே.இங்கு இறைவன் உமயவளக்கு வேதம் உபதேசித்து நாட்டியமும் காட்டி அருளியதாக வரலாறு.இங்கு உள்ள நடராஜர் சபை ரத்தின சபை என்று அழைக்க படுகிறது.உத்திரகோசமங்கை என்பது அன்னை உமயவளையே குறிக்கும்.ரகசியமாக உபதேசம் அளிக்கப்பட்ட மங்கை என்று பொருள்.இங்குள்ள ஸ்தல விருட்சம் 3000 ஆண்டு பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது

மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அருள்மிகு மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில் மட்டுமே. ஆனால் மதுரையில் மற்றுமொரு பழமை வாய்ந்த மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளது. அதுவும் நகரின் மத்தியில்.அது தான் இன்மையில் நன்மை தருவார் கோவில்.இது மிகவும் முக்கியமான் கோவில்களில் ஓன்று. நேதாஜி சாலையில் இருந்து இந்த கோவிலுக்கு செல்லலாம்.மேல மாசி வீதியில் இருந்தும் இந்த கோவிலுக்கு செல்லலாம்.இங்கு சிவ பெருமான் அவராலயே உருவாக்கப்பட்ட சிவலிங்கத்தை வழிபட்டுள்ளார். சோமசுந்தரர் தான் இங்குள்ள சுவாமியும். போன ஜென்ம பாவங்களுக்கு இந்த ஜென்மத்திலயே மன்னிப்பு அருளுகிறார் இந்த ஆலயத்தில்.வெளி பிரகாரத்தில் விபூதி விநாயகர்,பைரவர்,கால பைரவர்,முருகன்,கணேசர் உள்ளனர்.பொதுவாக சிவன் கோவில்களில் சுவாமி சன்னதி கிழக்கு நோக்கி இருக்கும்.ஆனால் இந்த ஆலயத்தில் சுவாமி சன்னதி மேற்கு நோக்கி அமைக்க பட்டுள்ளது.மற்றுமொரு சிறப்பு சுவாமி சன்னதியில் சிவலிங்கத்திற்கு பின்புறம் சுவாமி அம்மனுடன் இருக்கும் காட்சி.அம்மன் சன்னதி தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.சுவாமி சன்னதியின் உள்புறம் நடராஜர்,மகாலக்ஷ்மி,விசாலாக்ஷி,பிரம்மா,சரஸ்வதி,துர்க்கா,சிவகாமி,தக்ஷிணாமூர்த்தி, மற்றும் கோதண்டராமர் சன்னதிகள் உள்ளது.பிரதோஷ காலத்தில் நடைபெறும் 108 சங்காபிஷேகம் மிகவும் பிரசித்தம்.பிரதோஷ காலத்தில் மீனாக்ஷி கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் இங்கும் சங்காபிஷேக தரிசனம் செய்கிறார்கள். ஆவணி மாதத்தில் மீனாக்ஷி கோவில் உற்சவ மூர்த்திகளான சுவாமியும் அம்மனும் இந்த ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு செங்கோல் பெற்று ஆட்சி புரிகின்றனர்.

மதுரையில் இருந்து தொண்டி செல்லும் பாதையில் கொல்லங்குடி என்ற சிற்றூர் உள்ளது.சிவகங்கையில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ஊர்.இங்குள்ள அருள்மிகு வெட்டுடையார் காளி கோவில் மிகவும் பிரசித்தம்.மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்.பொதுவாக கிராமத்து மக்கள் வம்பு வழுக்ககளில் இருந்து விடுபட இந்த அம்மனிடம் வேண்டுகிறார்கள்.இந்த கோவிலின் மற்றுமொரு சிறப்பு தொலைந்துபோன அல்லது காணாமல் போன பொருட்கள் மீண்டும் திரும்ப கிடைப்பதற்கு இந்த சக்தி வாய்ந்த அம்மனிடம் வேண்டி காரியசித்தி பெற்றவர்கள் ஏராளம்.ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆன்மீக சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் செல்லும் ஒரு கோவிலாக தற்பொழுது வெட்டுடையார் கோவில் உள்ளது.மெயின் சாலையில் இருந்து கோவிலுக்கு சென்றுவர ஆட்டோ வசதி தற்பொழுது உள்ளது.மெயின் சாலையில் இருந்து சுமார் 3 கி.மீ உள் செல்ல வேண்டும். மெயின் சாலையில் கோவிலின் முகப்பு வளைவு உள்ளது.

வெட்டுடயாள் என்பாள் விளங்கும் திருக்கரங்கள்
எட்டுடயாள் சின்ன இடுப்பினிலே பட்டுடயாள்
தெம்புடயாள் பாதகர்க்கு வம்புடயாள்
கிண்கிணிய பூனுன்கிளி

ச்ண்டியாயி ச்ங்கரியாயி சாமாளயாயி
கோமளயாயி அருளும் இறையாவளாயி
அண்டி வருவார் தமக்கெல்லாம்
வாழ்வளிக்கும் காளிதருவாள் நமக்கு தனம்

வேதம் வணங்கிடும் வெட்டுடயாள் காளி
தனில் பாதம் பணிந்தால் பதம் தரும் -நிதம்
கிடைக்கும் சுகம் ஓங்கும் கேடில்லா
வாழ்க்கை படைக்கும் நிலைக்கும் பரந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...