மாந்திரீக அடிப்படைத் தத்துவம்<
ஒருவருக்கு பில்லி, சூன்யம், வைப்பு, செய்வினை, வைக்க வேண்டும் என்றால் அவருடைய ஜதகமோ புகைப்படமோ, வியர்வை நனைந்த அல்லது ரத்தம் நனைந்த துணியோ, தலை முடி, காலடி மண்ணோ, விந்தணு பட்ட துணியோ தேவைப்படும்.
தொடரும்...................
இந்த பரிமாற்ற பகுதியில் ஏதேனும் மாற்றங்கள் குறைகள் இருப்பின் கூறுங்கள். நாங்கள் சரி செய்து கொள்கிறோம்.
.
மாந்திரீகம் என்பது எண்ணங்களின் வலிமையைக் கொண்டும் மனதின் திறமாகிய
மந்திரங்கள் வைத்தும் செய்யப்படும் ஒரு அபூர்வக்கலையாகும். அவ்வாறு செய்ய
விரும்புபவர் ஒரு சக்தி வாய்ந்த இருக்கவேண்டும். இந்த அறிய சக்தியை அவர்
பிரபஞ்சத்தில் இருந்து பெறுவதற்கு சில பயிற்சிகள் தேவை. அத்தகைய பயிற்சி
இல்லாதவர் ஒன்றும் சாதித்து விடமுடியாது.
மாந்திரிகம்
அடிப்படைத் தத்துவத்தை நம் புரிந்து கொள்ளவேண்டும் என்றால் ஆன்மீகத்தை
முதலில் அறிந்து கொள்ளவேண்டும். நாம் எல்லாம் உயிர் உள்ள அதாவது “ஜீவனுள்ள ஆத்துமா” இந்த
ஜீவ ஆத்துமா இந்த யுகத்தில் இந்த பூமியில் வசிக்கிறது. இந்த பிரபஞ்சம்
சமநிலையில் இயங்குகிறது. நன்மையும் உள்ளது தீமையும் உள்ளது. இந்த அறிய
முடியாத சக்தியை அறிய ஜீவாத்துமாகிய நாம் விரும்புகிறோம். அதன்
அடிப்படையில் தான் பரத்தில் (மேலே) உள்ள ஆத்துமா என்று பரமாத்துமா என்று
கூறுகின்றோம். இந்த பரமாத்துமாவைத் தான் கடவுள் என்கிறோம். இந்த
பரமாத்துமாவின் தேடலின் விளைவாக உருவானது தான் பற்பல கடவுள்கள். ஒவ்வொரு
நாட்டிலும் ஒவ்வொரு ஊரிலும் அவரவர் கலாச்சாரத்திற்கு ஏற்ப தெய்வங்கள்
தோன்றின. முதுமை, நோய், இறப்பு
ஆகியவைகளுக்கு உட்பட்ட சில மனிதர்கள் கூட தங்களை கடவுள் என்று
கூறிக்கொள்வதை பார்க்கின்றோம். அத்தகைய மனிதர்களை கடவுளாக எண்ணி வணங்கும்
விந்தைக்குரிய மனிதர்களைக் கூட இன்று நாம் காண்கிறோம். பொதுவாக கடவுள் உருவாக்குதல், நடத்துதல், முடிவுக்கு கொண்டு வருதல் ஆகிய மூன்று தொழில்களைச் செய்வதை பார்க்கின்றோம். இதை இந்து மதம் முத்தொழில் என்றும், கிறிஸ்துவ மதம் திரித்துவம் என்றும் கூறுகின்றது. நாம் பயத்தின் போதும், இயலாமையின் போதும், அறியாமையின் போதும் கடவுளைத் தேடுகிறோம்.
பொதுவாக மாந்திரீகத்தை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
ஆன்மிகம் என்பது ஒரு தேடல் ஆகும். எல்லா மதங்களும்
அந்தந்த நாட்டின் கலாச்சாரத்திற்கும், சூழ்நிலைகளுக்கும் ஏற்ப
உறுவானதாகும். எல்லா மதங்களிலும் பல ஆக்கப்பூர்வமான கருத்துக்கள்
இருப்பினும் சில ஒவ்வாத கருத்துக்கள் உண்டு என்பதில் மாற்றம் இல்லை.
ஆன்மீகத்தை ஆச்சாரம் என்றும் வாமச்சாரம் என்று இரு வகையாகப் பிரிக்கின்றனர். ஆச்சார தியானம் என்பது யோகிகளாலும், முனிவர்களாலும் கடைபிடிக்கப்படும் ஒரு வழியாகும். இவர்கள் பூர்வபுண்ணிய கர்மாவின் பலனையும், பிரபஞ்ச இயக்கத்தின் பலனையும் ஏற்று வாழ்பவர்கள். இவர்களுக்கு விருப்பு, வெறுப்பு கிடையாது. இவர்கள் சமநிலைவாதிகள்.

வாமச்சாரிகள். இவர்கள் எல்லாவற்றையும் வேண்டுதல் மூலம்
பிரபஞ்ச உயர் சக்தியாகிய கடவுளின் மூலம் பெற நினைப்பவர்கள். இவர்கள்
வேண்டுதல் தங்கள் சுயநலத்தின் அடிப்படையில் இருக்கும். இவர்களின் வேண்டுதலை
இருவகையாகப் பிரிக்கலாம். தங்களுக்கோ, மற்றவர்களுக்கோ நன்மை பெறும்
பொருட்டு வேண்டுவதாகும். இவற்றை வெளிநாட்டினர் வெள்ளை மாந்திரீகம் என்பர்.
மற்றொன்று மற்றவர்கள் தனக்கு தீங்கு செய்பவர்களை அழிக்கும் பொருட்டு
செய்யும் வேண்டுதல் மற்றும் கிரிகைகள் ஆகும். இவற்றை வெளிநாட்டினர் கருப்பு மாந்திரீகம் என்பர். இந்த இருவகை வேண்டுதலைத்தான் மாந்திரீகம் என்கிறோம்.
ஆன்மீகத்தில் ஆச்சாரமும், மாந்திரீகமும் ஒரு
காசில் உள்ள தலையும், பூவும் போன்றது. பொதுவாக மனிதன் தனக்கு நன்மை பெரும்
பொருட்டு தீமை அகலவும் ஆன்மீகத்தை நாடுகிறான். ஒருவனுக்கு ஒருவர் செய்த
தீமையை எதிர்க்கும் சக்தி இருந்தால் அதை எதிர்த்துப் போராடி வெற்றி
அடைகிறான். அவ்வாறு இயலாதபொழுது தான் ஆன்மீகத்தை நாடுகிறான். இயலாமையும்,
அறியாமையும் ஒன்று சேரும் பொழுது தான் ஆன்மீக நாட்டம் உருவாகிறது.
மாந்திரீகம் என்பதை இயலாமை மற்றும் அறியாமையால் வரும் பிரச்சனைகளை சீர்
சீய்யவும், பாதிப்பை உருவாக்குபவர்களை பழிவாங்கவும் துடிக்கும் காரணத்தால்
மாந்திரீகத்தின் கருப்பான பகுதியை நாடுகிறான். ஒருவர் தனது வசதி
குறைவின்மை, நோய்நொடி களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள
மாந்திரீகத்தின் வெண்மையான பகுதியை நாடுகின்றான். நாங்கள் இந்த
வலைத்தளத்தில் இத்தகைய நன்மை மற்றும் தீமை செய்யும் பகுதிகளை
கொடுத்துள்ளோம்.
ஆச்சார முறை:-
இதில் தியானம், மந்திர உச்சாடானம், பூஜை, சைவ படையல்
முதலியவை இருக்கும்.பொதுவாக இத்தகைய மாந்திரீகத்திற்க்கு சிவமுறைகள், சக்தி
முறைகள், முருகனின் சரவண பவ மந்திர முறைகளுடன் கூடிய கோரைப்பல் இல்லாத
சாந்த தெய்வத்தின் மூலம் செயல்படுத்துவது ஆகும்.
வாமச்சாரம் முறை:-
வாமச்சாரம் (அனுச்சார)
மாந்திரீகம் என்பது ஓரிடத்திலோ, சுடுகாட்டிலோ, மந்திர உச்சாடனம் கூடியதாக
இருக்கும். அங்கு அசைவ பொருள்கள் தெய்வங்களுக்கு படையலாகப் படைக்கப்பட்டு
இருக்கும். கோழி, ஆடு போன்றவைகள் பலியாக கொடுக்கப்படுவது உண்டு. இத்தகைய
வழிபாட்டிற்கு உக்ர தெய்வங்களான காலி, பைரவர், மாடசாமி, போன்ற பல்லுள்ள
வாமசார தெய்வங்கள் மூலம் நிகழ்த்தப்படுவதாகும். பொதுவாக இந்த ஆச்சார வழிபாடும், வாமசார வழிபாடும் எல்லா மதங்களிலும் உள்ளது. இந்து மதத்தில் ஆச்சாரத்திற்கு என்று தெய்வங்கள் உள்ளன. உதாரணமாக பிள்ளையார், இராஜ இராஜேஸ்வரி போன்றவர்கள் ஆகும். அதே போல் துர்க்கை, வராகி, பைரவர்
ஆகியவர்கள் வாமசார தெய்வங்கள் ஆகும். வாமசார தெய்வங்களுக்கு பொதுவாக
கோரைப்பல் உண்டு. இத்தகைய வாமசார தெய்வங்களின் மூலம் தான் மாந்திரியங்கள்
செய்யப்படுகின்றன. ஆச்சார தெய்வங்களின் மூலம் மாந்திரிகத்தால் நன்மைகள்
செய்யலாம் என்று கருதப்படுகிறது. பொதுவாக இத்தகைய மாந்திரிகத்திற்க்கு கரு
என்று ஒன்று தேவை. இது போன்ற விசயங்களை அடுத்துப் பார்ப்போம்.
பில்லி:-
ஒருவரை உடல் ரீதியிலும் உள்ள ரீதியிலும் செயல் ரீதியிலும் ஈர்த்து மந்திரவாதி தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து தனது விருப்பப்படி செயலாற்ற வைப்பதே பில்லி ஆகும்.
ஒருவரை உடல் ரீதியிலும் உள்ள ரீதியிலும் செயல் ரீதியிலும் ஈர்த்து மந்திரவாதி தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து தனது விருப்பப்படி செயலாற்ற வைப்பதே பில்லி ஆகும்.
சூனியம்:-
சூனியம் என்றாலே வெறுமை என்று அர்த்தம்.அதாவது ஒருவனை உடல் ரீதியிலும், உள்ள ரீதியிலும், செயல்பாட்டிலும், பொருளாதாரத்திலும் ஒன்றும் இல்லாமல் ஆக்குவதற்கு சூனியம் என்று பெயர். சூனியத்தின் மூலம் எவருக்கும் எத்தகைய கெடுதியையும் செய்துவிடலாம், எவரை வேண்டுமானாலும் அழித்து விடலாம், கை, கால்களை முடக்கி விடலாம், சம்மந்தப்பட்டவருக்கு தெரியாமல் அவர் வயிற்றில் மருந்தை செலுத்தி விடலாம், கருவில் வளரும் குழந்தையை கொன்று விடலாம், கர்ப்பத்தை கலைத்து விடலாம், நோய் பிடிக்க செய்து விடலாம்... இப்படியே ஏராளமான கெடுதிகளை சூனியத்தின் மூலம் செய்து விட முடியும்.

ஏவல்:-
ஏவல் என்பதற்கு கட்டளை இடுதல் என்று அர்த்தமாகும்.
தனது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும்படி கட்டளை இடுவதற்கு ஏவல் என்று
பெயர்.
செய்வினை:-
தனது சொந்த வினையின்படி செயலாற்றும் ஒருவனை மாந்திரீக
முறையில் பலவழிகளில் திசைதிருப்பி கேட்டு, அழிந்து போக வைப்பதாகும். இந்த
செய்வினை பொருளாதார ரீதியிலும், உடல் ஆரோக்கிய ரீதியிலும் கஷ்டங்கள்
கொடுப்பதாகும்.
வைப்பு:-
மாந்த்ரீக ரீதியிலோ, மருத்துவ ரீதியிலோ, ஒரு பொருளைக்
கொடுத்து உன்ன வைத்தோ உடலில் தடவியோ, அவர்களுக்கு உடல் ரீதியிலும்,உள்ள
ரீதியிலும்,பொருளாதார ரீதியிலும் கெடுதல் செய்வதையே வைப்பு என்கிறோம்.
இந்த பரிமாற்ற பகுதியில் ஏதேனும் மாற்றங்கள் குறைகள் இருப்பின் கூறுங்கள். நாங்கள் சரி செய்து கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக