செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

சாய் பாபா மந்திர் - ஷிர்டி


எனது நீண்ட நாள் கனவாக இருந்த ஷிர்டி சாய் மந்திர் சென்று தரிசனம் செய்து வந்தோம் . கடந்த 3 ஆண்டுகளாக உள்ளூரில் உள்ள ஷிர்டி பகவானின் கோவில்களுக்கு நான் தவறாமல் சென்று வருகிறேன். சாயி மந்திருக்கு சென்று வர ஆரம்பத்ததில் இருந்து மன அமைதியும் காரிய சித்திகளும் நிரம்ப பெற்று வந்தேன் . அதனால் ஷிர்டி சென்று பகவானின் சமாதியும் பார்த்து வரவேண்டும் என்று விரும்பினேன் . சாய் நகர் தான்ஷீரடிக்கு மிக அருகாமையில் உள்ள ரயில் நிலையம் .சென்னை -சாய் நகர் ரயில் உள்ளது .இந்த ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை .அதனால் கர்நாடக எக்ஸ்ப்ரஸில் சென்று கோபர்கான் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள ஷிர்டி சென்றடைந்தோம் . ஷிர்டி சாய் மந்திர் இணையதளத்தில் தரிசனம் மற்றும் தங்கும் விடுதிக்கு முன்பதிவு செய்திருந்தோம் . சாய் ஆஷ்ரம் தங்கும் விடுதி சமாதி மந்திரில் இருந்து 2 கி. மீ தொலைவில் உள்ளது . தனியார் ஹோட்டல்கள் மந்திர் அருகிலேயே நிறைய உள்ளது .அதிகாலை 4.30 மணிக்கு ஆரத்தி தரசினம் காக்கட் தரிசனம் என்று மராத்தியில் அழைக்கிறார்கள் .நாங்கள் இந்த தரிசனத்திற்கு தான் முன் பதிவு செய்திருந்தோம் .தினமும் 5 முறை ஆரத்தி தரிசனம் நடை பெறுகிறது ஷீரடியில் . இது தவிர இலவச தரிசனமும் உள்ளது . கூட்டத்தை பொறுத்து இலவச தரிசனம் செய்ய 2 முதல் 3 மணி நேரம் ஆகலாம் .வியாழகிழமை மற்றும் வெள்ளிகிழமைகளில்கூட்டம் சற்று அதிகமாக இருக்கும் .

 பாபா இறந்த பிறகும் சமாதியில் இருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். பாபாவின் உருவ சிலையும் சமாதியும் அங்கு உள்ளது . சாவடி என்ற இடத்தில் தான் பாபா வாழ்ந்திருந்த காலத்தில் பெரும்பாலான நேரம் தங்கியிருந்தார். பாபா தங்கியிருந்த மற்றொரு இடம் த்வாரகமயி .த்வாரகமயியிலும் சாவடியிலும் பாபா வாழ்ந்திருந்த காலத்தில் மாறி மாறி தங்கியிருந்தார். இப்பொழுது சமாதியிருக்கும் இடம் அப்பொழுது தான் கட்டப்பட்டு வந்தது . பாபா அங்கு ஒரு மேடை அமைத்து அங்கு ஒரு குழல் ஊதும் முரளீதர் சிலை வைக்க ஏற்பாடு செய்ய சொல்லியிருந்தார் . பாபா உத்தரவு படி சிலை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது . ஆனால் பாபா சமாதி அடைந்த உடன் முரளீதர் சிலை வைக்க வேண்டிய இடத்தில் பாபாவின் சமாதி அமைக்கப்பட்டது.

த்வாரகமயி என்பது பாபா தங்கியிருந்த மசூதி . இங்கு தான் பாபாவால் உருவாக்க பட்ட தூணி எப்பொழுதும் எரிந்துகொண்டே இருக்கும் . அதில் இருந்து கிடைக்கும் உதி ;தான் அங்கு பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது . த்வாரகமயி ஒரு தாயாக பாபா பாவித்தார். தவாரகாமயியின் மடியில் வந்து அமர்ந்து வேண்டுபவர்களுக்கு எல்லா விதமான துன்பங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும் என்று பாபா அருளியிருக்கிறார் . இது தவிர லென்டி தோட்டம் என்பது பாபாவால் அமைக்கபட்ட ஒரு;தோட்டமும் சமாதி காம்ப்ளக்சின் அருகில் உள்ளது . இது தவிர சமாதி காம்ப்ளக்சில் கணபதி கோவில், அனுமார் கோவில் போன்றவைகளும் உள்ளது . கோவிலுக்கு வெளியில் பாபா கும்பிட்ட லக்ஷ்மி கோவில் உள்ளது . பாபாவின் சன்னதிக்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லா வித துன்பங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.பாபா வாழ்ந்த காலத்தில் பக்தர்களுக்கு பார்வையாலும் ச்பரிசத்தினலும் நோய்களை குணபடுத்தியிருக்கிரார் . பாபா ஷீரடியில் இருந்தாலும் உலகெங்கும் வாழும் அவரின் பக்தர்களின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களும் அவரது ஞான திருஷ்டி மூலம் அவருக்கு தெரிந்தது .

 பாபா இப்பொழுதும் சமாதியில் இருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார் . ஷீரடியில் தங்கியிருக்கும் பொழுது இரண்டு முறை தரிசனம் செய்தோம் .ஒரு முறை காலை காக்கட் ஆரத்தியும் இன்னொரு முறை இலவச தரிசனமும் செய்தோம் . இது தவிர வரிசையில்  நிற்காமல் சாயி தரிசனத்திற்கு 'முக தரிசனம் ' என்று ஒரு வழியும் உண்டு . சற்று தொலைவில் இருந்து பாபாவை தரிசிக்கலாம் .ஷீரடியில் இருந்து நாங்கள் சனி ஷிங்காபூர் ,நாசிக் ,திர்யம்பகேஷ்வர் , பஞ்சவதி போன்ற இடங்களுக்க்ம் சென்றோம் இந்த தரிசனங்கள் குறித்தும் எனது பதிவுகளை எழுத உள்ளேன் . உண்மையில் இந்த பதிவே காலம் கடந்து எழுதுகிறேன் .எனது மலையாள வலைதளத்தில் பாபாவின் சத் சரிதத்தை எழுதி வருகிறேன் .இது வரை ஐந்து பகுதிகள் எழுதிவிட்டேன் .பக்தர்களுக்காக பாபா புரிந்த லீலைகள் மூலம் அவரது சரிதத்தை எழுதி வருகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...