செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

மாக ஸ்நானம் :

Photo: மாக ஸ்நானம் :

                 தமிழ் மாதங்கள் 12.ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வகையில் வழிப்பாட்டுக்குரிய விசேஷ மாதங்களாக கருதப்படுகிறது.துலா  மாதம் எனப்படும் ஐப்பசி,கார்த்திகை ,வைகாசி ,மாசி ஆகிய நான்கு  மாதங்களும் ஸ்நானத்துக்கு விசேஷமான மாதங்கள் ஆகும்.

                  அதிகாலையில் எழுந்து ,புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டிய மாதங்கள் இவை.இப்புனித நீராடல் எல்லா வகையான பாவங்களையும் நீக்ககூடியதாகும்.நீராடிய பின் அவரவர் சக்திக்கு ஏற்ப தானங்களை  விசேஷம்.மாக மாதம் எனப்படும் மாசி மாதத்தில் புனித நீராடலை மாக ஸ்நானம் என்பார்கள்.இந்த  ஸ்நான மகிமைகளை ஸ்கந்த புராணமும்,மாக புராணமும் விரிவாக எடுத்துரைக்கின்றன.

மாக  ஸ்நானம் செய்வது எப்படி :

                     மாக  ஸ்நானம் பிரயாகை எனப்படும் திரிவேணி சங்கமத்தில் செய்வது மிக விசேஷம். கிருஷ்ணவேணி, காவிரி, துங்கபத்ரா, திருக்கோகர்ணம் , பிரபாஸம்,தாமிரபரணி ஆகிய தீர்த்தங்களில் முப்பது நாட்களும் நீராடுவது நல்லது.

                      இந்த மாக மாதத்தில் மாசி மாத  ஸ்நானத்தை வசதி வாய்ப்பு உள்ளவர்கள் கும்பகோணத்தில் இருக்கும் புண்ணிய தீர்த்தங்களில் செய்வது விசேஷம்.சூரிய உதய காலத்தில் நதிகளிலும் ,ஓடையிலும் ,ஏரியிலும் ,குளத்திலும், நடைகிணறுகளிலும்(படிக்கட்டுகளுடன் கூடிய பெரும் கிணறு) நீராடுபவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான்.

                         பசுவில் முழங்கால் நனையும் அளவுக்கு ஆழம் இருந்தால் கூட போதும்,அந்த நீர் நிலையில் குளித்தால் புண்ணியப் பலன் கிடைக்கும்.

எத்தனை முறை குளிப்பது:

                       தீர்த்தங்களில் ஒரு முறை குளிப்பது மட்டும் போதாது.குறைந்தது மூன்று முறை குளிக்க வேண்டும்.எந்தத் தீர்த்தங்களில் தீர்த்தமாக இருந்தாலும் முதலில் செய்யும்  ஸ்நானத்தல் புற அழுக்குடன் பாவங்களும் நீங்குகின்றன.இரண்டாவது  ஸ்நானத்தில் வைகுந்தம் முதலான பேறுகள் கிடைக்கின்றன. மூன்றாவது  ஸ்நானம் செய்தவுடன் 'இவருக்கு என்ன பலன் தருவது...நான் கடனாளி ஆவேன்'என்று கடவுள் நினைப்பாராம்.அதனால் தான் ,மாக ஸ்நானத்தில் மட்டுமல்ல.மாகமகக் குளியலுக்கும் மூன்று நாள் குளியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

கவுரிதேவியை வழிபடாலம் :

                     மாக மாதத்தில் கவுரி பூஜை செய்வது மிகவும் நல்ல பலன்களைத் தரும்.ஒரு பெண் இம்மையிலும் ,மறுமையிலும் சுமங்கலியாக இருக்க வழிசெய்யக் கூடியது ஆகும்.மாக கவுரி பூஜையாகும்.பெண்கள் மார்ச் மாதத்தில் காலையில் நீராடி பார்வதி தேவியை வழிபடுவது மாக கவுரி பூஜை ஆகும். 
 
                     பழங்காலத்தில் தை 15ம் தேதி தொடங்கி மாசி இடைப் பகுதி வரை நடந்த ஒருவகை நீரடலில் காத்யானி தேவியைப் பெண்கள் பூஜை செய்தது தொடர்பாக இலக்கியக் குறிப்புகல் உண்டு.மாசி மாதத்தில் கவுரி பூஜை செய்தால் பாவங்கள் அகலும்.

விஷேச நாட்கள் இவை :

                       மாகமக குளத்தில் புண்ணிய தினங்களில் நீராட வேண்டும் என்று நினைக்கிறீர்களா ?மக நட்சத்திரம் உள்ள நாட்களில் நீராடலாம் ,மாதப் பிறப்புகளில் நீரடலாம்.அம்மாவாசை ,பௌர்ணமி,அஷ்டமி முதலான தினங்களில் நீராடுவது விஷேசப் பலனைப் பெற்றுத் தரும்.

நவ கன்னியர்  வழிபாடு:

                       மாகமக குளத்தில் நீராடுபவர்கள் கும்பகோணத்தில் உள்ள எல்லாக் கோயில்களையும் சைவ வைணவ வேறுபாடின்றி தரிசிப்பதுடன் ,காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள நவ கன்னியர்களை வழிபட  வேண்டும்.குறிப்பாக செவ்வாய் கிழமைகளில் பலனை பெற்றுத் தரும்.

செவ்வாயும் சூரியனும் கூடியிருந்தால்:

                      கும்பகோணத்தில் இருக்கும் கும்பேசுவரர் கோயிலில் மங்களாம்பிகை எழுந்தருளியிருக்கிறாள். மிகவும் சக்தி வாய்ந்த தேவதை மந்திர பீடேஸ்வரியான  மங்களாம்பிக்கைக்கு செம்பருத்தி பூவினால் ஆகிய மாலையைச் சாத்துவது ஜனன ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்துடன் சூரியன் கூடியிருப்பதால் ஏற்படக்கூடிய தோசங்களை நீக்கும்.

நன்றி: தினமலர் பக்திமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...