மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி,பாம்புக்கோவில் சந்தை
பாம்புக்கோவில் சந்தை ரயில் நிறுத்தத்தில் இறங்கி, செங்கோட்டை செல்லும்
ரயில் பாதை வழியாகவே ஒரு கி.மீ.தூரத்துக்கு நடந்து செல்ல
வேண்டும்.இரண்டாவது சாலையானது ரயில் பாதையின் குறுக்கே செல்லும்.அந்த
இரண்டாவது சாலையின் இடது பக்கத்தில்,ரயில் பாதையின் மிக அருகில் மாதவானந்த
சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.அருகில்,வெள்ளை மடத்துவிநாயகர்
சன்னிதியும் அமைந்திருக்கிறது.
இங்கு எப்போது சென்றாலும்,அன்னதானம்
உண்டு.ஒவ்வொரு தமிழ் மாதமும் பவுர்ணமி அல்லது அமாவாசை அல்லது
சிவராத்திரியன்று சென்று வழிபட நமது எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் அடியோடு
சில நாட்களிலேயே விலகத் துவங்கும்.இந்த அரிய ஆன்மீக ரகசியத்தை நமக்குப்
போதித்தவர் ருத்ராட்சத்துறவி,சிவகடாட்சம் ,ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக்
செல்வம் ஐயா அவர்களின் ஆயுட்கால சீடர் திரு.புளியங்குடி சிவமாரியப்பன்
அவர்கள் ஆவார்.அவருக்கு கோடி கூகுள் நன்றிகள்.திரு.புளியங்குடி
சிவமாரியப்பன் அவர்களின் செல்:9677696967
கி.பி.2006
ஆம் ஆண்டில் இந்தோனேஷியாவை மையமாகக் கொண்டு சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை
உலகின் பல நாடுகளைத் தாக்கியது;இதற்கு புவியியல் வல்லுநர்கள் பெரிய பெரிய
விளக்கங்களைக் கொடுத்தனர்;ஆனால்,முன்கூட்டியே அவர்களால் எப்போது,எங்கே
ஆழிப்பேரலை வரும்? அது எந்த நாடுகளைத் தாக்கும்? என்பதை
கணிக்கமுடியவில்லை;தமிழினத்தின் ஆதி இருப்பிடமான குமரிக்கண்டம்,இன்றைய
இலங்கைக்குத் தெற்கே சுமார் 2000 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கும்,சுமார்
24,000 கிலோ மீட்டர்கள் அகலத்திற்கு(கிழக்கே ஆஸ்திரேலியாவிலிருந்து மேற்கே
ஆப்ரிக்கா வரையிலும்) பரவியிருந்தது.மனதின் சக்தியை முழுமையாக
பயன்படுத்துவதில் நமது தமிழினம் தேர்ச்சிபெற்றிருந்தனர்;இன்றைய திரைப்படமான
ஏழாம் அறிவில் காட்டப்படும் நோக்கு வர்மத்தின் பரம்பரை நாம் மட்டுமே!!!
இன்றும்
ஒரு சில ஆன்மீகக் குழுவினருக்கு நோக்கு வர்மம் தெரியும்;இந்த
குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர்களையும்,குமரிக்கண்டத்தையும் ஆழிப்பேரலை
தாக்கியது.இன்றைய சேலம் போன்று இருந்த கன்னியாகுமரி,தற்போது முக்கடலும்
சந்திக்கும் இடமாக உருவாகி,ஓராயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டன.
2006
ஆம் ஆண்டில் வந்த ஆழிப்பேரலைக்கு ஆன்மீகரீதியான காரணம் தினத்தந்தியில்
முழுப்பக்க கட்டுரையாக வெளிவந்தது.கடலுக்குள் காகபுஜண்டர் என்னும் சித்தர்
பல லட்சம்(?!?) ஆண்டுகளாக தவம் செய்துவந்தார்;கடலோரம் நிகழ்ந்த காமக்
குற்றங்களால்,அவர் கோப ஆவேசத்தோடு எழுந்தார்;அதனால்,ஆழிப்பேரலை என்னும்
சுனாமி வந்தது.அதன்பிறகு, கி.பி.2010இல் சித்தர்களின் வீடாகிய சதுரகிரியில்
சித்தர்களின் மாநாடு நடைபெற்றது.இதன் முடிவாக சித்தர்களின் ஆசி பெற்ற
ஒருவன்,இந்தியாவின் தலைமை பீடத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவான்;அவனது
ஆட்சிக்காலத்தில் இந்து தர்மம் உலகம் முழுவதும் பரவும் என்று அடிக்கடி
செய்திகளாக பல ஜோதிட இதழ்களில் வெளிவந்தது.குமுதம் ஜோதிடம் ஆசிரியர்
ஏ.எம்.ராஜகோபால் ஐயா அவர்கள் கூட இது தொடர்பாக ஒரு கட்டுரை
எழுதியிருக்கிறார்.அதில்,
“வட
நாட்டைச் சேர்ந்த ஒரு மாவீரன்,தென் நாட்டைச் சேர்ந்த ஒரு துறவியிடம்
பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறான்.அவன் வெகுவிரைவில் இந்தியாவை ஆளத்
துவங்குவான்;அவனது ஆட்சி சர்வாதிகார ஆட்சியாக இருக்கும்;அதே சமயம்,அவனது
ஆட்சியில் நேர்மையாக வாழ்ந்து வருபவர்கள்
போற்றப்படுவார்கள்;அக்கிரமம்,அநீதி செய்தவர்கள் அனைவரும் மீளமுடியாத
கஷ்டத்துக்கு ஆளாகப் போகிறார்கள்”
நாம்
எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் சரி,நமது பகுதியிலிருக்கும்
ஜீவசமாதிகளுக்கு தினமும் சென்று ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;நமது
தீய எண்ணங்களை நீக்கிட,இந்த ஜீவசமாதியில் தினமும் ஜபிக்கப்படும்
ஓம்சிவசிவஓம் காரணமாக இருக்கும்.
சேலத்தில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியல்:
மாயம்மா:கன்னியாக்குமரி
கடற்கரையில் நீண்ட காலம் வசித்தவர்;சேலம் மார்டன் தியேட்டர்ஸ்
எதிர்ப்புறமுள்ள பகுதியில் மாயம்மா சமாதி பீடம் உள்ளது.
அப்பா
பைத்தியம் சாமி: சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்குக் கிழக்கே சூலமங்கலம்
பிரதான சாலையில் சாலையை ஒட்டி வடபுறம் சமாதிகோவில் இருக்கிறது.இங்கு
வருடாந்திர குருபூஜை விழா தைமாதம் வரும் அஸ்வினி நட்சத்திர நாளில்
நடைபெற்றுவருகிறது.
கஞ்சமலை:
காலாங்கிநாதர்:சேலம் கஞ்சமலை சித்தர் கோவில் சேலத்திலிருந்து 2 கி.மீ.தூரத்தில் உள்ளது.
கஞ்சமலை சித்தர்:கஞ்சமலை அடிவாரத்தில் கஞ்சமலை சித்தரே சித்தேஸ்வர சுவாமியாக இருக்கிறார்.
ஓமலூர்
சிரபங்க
முனிவர்: சேலம் மேட்டூர் சாலையில் 16 கி.மீ.தொலைவில் ஓமலூர் கோட்டையில்
வைத்தியநாத ஈஸ்வரர் கோவில் நவக்கிரக சன்னதி அருகில் இவரது சமாதி
இருக்கிறது.
ஆத்தூர்
சந்நியாசி
வரதர்: ஆத்தூரிலிருந்து 5 கி.மீ.தூரத்தில் தளவாய்பட்டி;அங்கிருந்து 3
கி.மீ.தூரத்தில் சாமியார் மடம் இருக்கிறது.இங்கே ஐப்பசி மாதம் வரும் சுவாதி
நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
வடக்குமரை
அப்பண
சாமிகள்:ஆத்தூரிலிருந்து 15 கி.மீ.தூரத்தில் வடக்குமரை கிராமத்தில் சமாதி
இருக்கிறது.வருடாந்திர குருபூசை புரட்டாசி மாதம் வரும் அமாவாசை!
காரியனூர்
நடேச சுவாமி: ஆத்தூரிலிருந்து சற்று தொலைவிலுள்ள காரியனூரில் சமாதி கோவில் இருக்கிறது.
கோயம்புத்தூர் பகுதியில் மறைந்து நின்று காக்கும் மகான்கள்:::
முள்ளங்காடு
ஸ்ரீபிரம்ம
வெள்ளியங்கிரி சாமிகள்: கோவை மேற்கே 22 கி.மீ.தூரத்தில்
இருட்டுப்பள்ளம்;அங்கிருந்து 6 கி.மீ.தூரத்தில் முள்ளங்காடு
செக்போஸ்ட்;பழங்குடி மக்கள் வசிக்கும் காட்டுக்குள் ஸ்ரீவெள்ளியங்கிரி
சுவாமிகளின் ஆஸ்ரமம் என்ற பெயருடன் ஜீவசமாதி இருக்கிறது.
பன்னிமடை
சித்தயோகி
சாமய்யா:கோவை டூ ஆனைக்கட்டி சாலையில் 10 கி.மீ.தூரத்தில் கணுவாய் என்னும்
ஊர்.கிழக்கே 2 கி.மீ. பன்னிமடை சிற்றூர்.ஊரின் கிழக்குப் பகுதியில்
பிரம்மஸ்ரீ சித்தயோகி சாமய்யா ஜீவ ஐக்கிய நிலையம் என்னும் பெயருடன்
ஜீவசமாதி இருக்கிறது.
நாராயணபுரம்(பல்லடம்)
எட்டிக்கொட்டை
சித்தர்:திருப்பூர் பல்லடம் சாலையில் தெற்குபரிளயம் விலக்கு அருகில்
நாராயணபுரம்.மேற்குப்புறம் மருதஞ்செட்டியார் தோட்டத்தில் சமாதி பீடம்
இருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாதத்தில் அவிட்டம் நட்சத்திர நாளன்று
வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
பொள்ளாச்சி புரவிப்பாளையம்
கோடீஸ்வர
சுவாமிகள்:பொள்ளாச்சியிலிருந்து 20 கி .மீ.தூரத்தில் புரவிப்பாளையம்
இருக்கிறது.இங்கிருக்கும் ஜமீன் தார் அரண்மனை வளாகத்துள் சாமிகளின்
அதிஷ்டானம் இருக்கிறது.இவர் 18 ஆண்டுகளாக ராமேஸ்வரம் அருகில் இருக்கும்
தனுஷ்கோடியில் ஒரே இடத்தில்,இரவும் பகலும் உட்கார்ந்திருந்தவர்;இதை பலர்
பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கின்றனர்;இந்த 18 ஆண்டுகளும் இவர்
சாப்பிட்டதில்லையாம்;நீர் அருந்தியதில்லையாம்;இவரை ஒரு ரயில்வே ஊழியர்
அடையாளம் கண்டு,இவரை போற்றி வழிபட்டிருக்கிறார்.அந்த ரயில்வே ஊழியரால்,இந்த
கோடீஸ்வர சுவாமிகள் கொஞ்சகாலம் திருச்சியிலும்,கொஞ்சகாலம் சென்னையிலும்
வாழ்ந்தவர்.இறுதியாக கோவைக்கு வந்து பலதரப்பட்ட அதிசயங்களை
நிகழ்த்தியிருக்கிறார்.விரிவான பதிவு விரைவில் நமது ஆன்மீகக்கடலில்!!!
வேட்டைக்காரன்புதூர்
அழுக்குச்சாமி:
பொள்ளாச்சி அருகே ஆனைமலை தாண்டி வேட்டைக்காரன்புதூர் டூ உப்பாற்றங்கரை
வேட்டைக்காரச்சாமி கோவிலின் வடபுறம் சாமிகளின் அதிஷ்டானம்
அமைந்திருக்கிறது.
இந்த
அரிய தகவல்களை நாட்டு நலன் கருதியும், நேர்மையான தமிழ் சகோதரர்கள் தினமும்
ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டியும் வெளியிட என்னைப் பணித்தவர் எனது ஆன்மீக
குரு திரு.சிவமாரியப்பன் அவர்கள் ஆவார்.
ஓம்சிவசிவஓம்
ஜீவசமாதி
வழிபாடு செய்ய விரும்புவோர்,தனது பிரச்னைகள்,கஷ்டங்கள் தீர வேண்டும்
என்றுதான் செல்வார்கள்.அதுதான் மனித இயல்பும்கூட! அதே சமயம்,ஜீவசமாதி
அல்லது சித்தர் வழிபாடு செய்யத்துவங்கியதுமே,அவரவர் தன்னிடம் இருக்கும்
துர்குணங்களை கைவிட்டுவிட வேண்டும்.அப்போதுதான்,சித்தர்களும்,மகான்களும்
நமக்கு அருள்புரிவார்கள்.இதை ஆன்மீகரீதியாக ஆராய்ந்து கூட
கண்டுபிடிக்கலாம்.
ஒரு
உதாரணம் சொன்னால்,உங்களுக்குச் சுலபமாகப் புரியும்:எனக்கு இருக்கும் நட்பு
வட்டம் பெரியது;எனது நீண்டகால நண்பர் அவர்.எங்களின் நட்பின் வயது 22 !
அவரது குடும்பப் பின்னணி அனைத்தும் எனக்குத் தெரியும்;எனது
குடும்பப்பின்னணியும் அவருக்கு நன்றாகவே தெரியும்.என்னால் அவர் ஒருமுறை கூட
பண உதவி பெற்றதில்லை;அவரும் என்னிடம் கேட்டதில்லை;ஆனால்,எனது ஜோதிடத்
திறனால்,அவரது ஜாதகத்தை தினமும் சில நிமிடங்களுக்கு ஆராய்ந்து
வைத்துக்கொள்வேன்;செல்போன் பரவலாகும் முன்பு,என்னை தினமும் ஏதாவது ஒரு தடவை
நேரில் சந்திப்பார்;அவரது பிரச்னை,மனநிலைக்குத் தகுந்தாற்போல,அவரது
ஜாதகத்தில் ஒளிந்திருக்கும் நல்ல விஷயங்களை அவருக்கு நான்
எடுத்துரைப்பேன்;அதனால், அவர் தன்னை தனது குணக்குறைபாடுகளை
சீர்திருத்திக்கொண்டே வந்திருக்கிறார்.
அதே
சமயம்,காதல்,அரசியல்,மனோதத்துவம்,ஆவிகள்,பேய், இந்தியாவின்
எதிர்காலம்,அணுகுமுறை விஞ்ஞானம்,ஜாதி அரசியலின் பக்கவிளைவுகள்,பத்திரிகைச்
செய்தி என அனைத்து விஷயங்களிலும் ஆக்க பூர்வமான கருத்துப்பகிர்வுகள்
எங்களிடம் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.பல ஆண்டுகளாக பழகியதன் விளைவாக,
அவரிடம் இருக்கும் சில விரும்பத்தகாத குணங்களைக் கண்டறிந்து, அவரிடம்
ஒருநாள் சுட்டிக்காட்டி,இதை நீ கைவிட்டே ஆக வேண்டும் என்று
புரியவைத்தேன்;ஆனால்,அவரோ,அன்று முதல் என்னிடம் நல்லவன் போல நடிக்க
ஆரம்பித்தார்;அதையும் கண்டறிந்து,திருந்தச் சொல்லி பல ஆண்டுகளாகக்
கெஞ்சினேன்.
சில
மாதங்களுக்கு முன்பு,எனது ஆன்மீக குருவிடம் அந்த 22 வருட நண்பரை அழைத்துச்
சென்று அறிமுகப்படுத்தினேன்.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆன்மீக
ஆராய்ச்சியின் படி,ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் வரையோ,அதற்கும் மேலோ
நண்பராக இருந்தால்,அவர்கள் முற்பிறவி நண்பர்கள்;அதே போல,இருவர் தொடர்ந்து
12 ஆண்டுகளுக்கும் மேலாக எதிரியாக இருந்தால்,அவர்கள் முற்பிறவி எதிரிகள்
ஆவார்.
எனவே,எனது
ஆன்மீக குருவிடம், “குருவே,இவர் எனது முற்பிறவி நண்பர்” என
அறிமுகப்படுத்தினேன்.அவரும் அதை மனதில் கொண்டு,அவருக்கு சிலபல ஆன்மீக
ஆலோசனைகளைச் சொன்னார்.அதே நாளில்,எனக்கும் ஒரே ஒரு ஆன்மீக ஆலோசனை சொன்னார்.
இந்த
சம்பவம் நிகழ்ந்த சில மாதங்களில்,ஆன்மீக ஆலோசனையை நான் செயல்படுத்திப்
பார்த்துவிட்டு,எனது தேவைகளை பூர்த்தி செய்துவிட்டேன்.ஆனால்,எனது 22 வருட
நட்பு,இன்னும் அந்த ஆன்மீக ஆலோசனையை ஆரம்பிக்கவே இல்லை;இன்னும் எனது 22
வருட நட்பு பல்வேறு விதமாக கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது.என்னால்,இதற்கு
மேல் எதுவும் செய்ய முடியவில்லை;அவர் மேல் பரிதாபப்பட மட்டுமே முடிகிறது.
யாரையும்,எப்போதும்,எதற்காகவும்
நம்பாத அவரது குணமே காரணம்.நாம் ஒருவரை ஆழமாக நேசிக்கிறோம்.(அது நமது
குழந்தை அல்ல;வாழ்க்கைத் துணை அல்ல;அரசியல் நட்பும் அல்ல;சாதாரண மனித
உறவு)அப்படி நேசிக்கும்போது,அவர்களின் குறைகள் நமக்கு குறைகளாக சிறிதும்
தெரியாது.ஆனால்,ஜோதிடராக நான் இருப்பதால்,எனது 22 வருட நட்பிடம் பல
மாதங்களுக்கு இந்த குறையைச் சுட்டிக்காட்டி,இதிலிருந்து
மாற்றிக்கொள்ளும்படி மன்றாடிக்கொண்டும் கூட மாறவில்லை;ஒரு கட்டத்தில்
பொறுமையிழந்து,நீ உன்னை மாற்றிக்கொள்ளாவிட்டால்,எதாவது ஒரு முக்கிய
சந்திப்பு உனக்கு நிகழ்ந்தும் கூட,அந்த புதிய உறவினை
சரியாகவும்,முழுமையாகவும் பயன்படுத்திக்கொள்ளமுடியாமல் போகும் என்று
எச்சரித்திருக்கிறேன்.இந்த எச்சரிக்கை,நிகழ்ந்த சில ஆண்டுகளில் இப்போது அது
நிகழ்ந்தே விட்டது.ஆக,நம்மில் பெரும்பாலானவர்கள்,யாரையும்
நம்புவதில்லை;தன்னையும் நம்புவதில்லை;தனது வாழ்க்கைத் துணையையும்
நம்புவதில்லை;
நமது
ரத்த உறவுகளுக்கு நாம் எப்போது எப்படி சிந்திப்போம்? எப்படி பேசுவோம்? ஏன்
அப்படிப் பேசுகிறோம்? என்பதெல்லாம் நன்றாகவே தெரியும்.அதே மாதிரி, பொதுத்
தொடர்பில் இருப்பவர்களில் பலருக்கு நம்மை முதன்முதலில் பார்த்த அடுத்த
நொடியே நம்மை,நமது ஆளுமைத் திறனை மதிப்பிட்டுவிடுவார்கள்;
நம்மை
விட செல்வாக்கானவர், நம்மை நம்பி ஒரு சிறிய வேலையை ஒப்படைக்கும்போது,நாம்
அவர்களை நம்புவதைப்போல,அவர்களும் நம்மையறியாமலேயே நாம் அவர்களைப் பற்றி
என்ன நினைக்கிறோம்? என்பதையும் உளவு பார்க்கத் தான் செய்வார்கள்.அப்படி
பார்த்தபின்னர்,அவர்களின் திறனுக்கு ஏற்றபடி,நாம் நம்பிக்கையானவர்களாக
இருந்தால் தான்,நமக்கு மறக்க முடியாத அளவுக்கு உதவி செய்வார்கள்.நமது
ஆழ்மனத்தில் அந்தரங்க சுத்தி இருக்க வேண்டும்.இல்லாவிட்டால்,இந்த உலகில்
நாம் தனி மரமாக நிற்க வேண்டும்.
எல்லோரையும்
நம்பி,நம்பி பல நூறுமுறை ஏமாந்த நல்ல எண்ணமுள்ளவர்களுக்குக் கூட,
வாழ்க்கையில் ஒரு நாள், மிகச் சிறந்த நட்பு அல்லது குரு அல்லது காட்பாதர்
கிடைத்துவிடுவார்.
யாரையும்
நம்பாதவர்களுக்கு ஒரு நல்ல நட்போ அல்லது வழிகாட்டியோ அல்லது காட்பாதரோ
கிடைத்தால் கூட,அவர்கள் வாழ்க்கையில் சிறிதும் முன்னேற முடியாது.
வாழ்க்கையில்
சுயநலம் தேவைதான்;ஆனால்,அடுத்தவரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ
சார்ந்துதான் வாழ வேண்டியிருக்கிறது.கட்டாயம் என்ற அச்சில் தான் நாம்
ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்து வருகிறோம்.அதற்காக, என்னால் மட்டுமே உனது
பிரச்னையைத் தீர்க்க முடியும் என்ற தற்காலிக அகங்காரத்தால்
வீழ்ச்சியடைந்து,நாசமாகப் போனவர்கள் பல கோடிப் பேர்கள்!!!
திண்டுக்கல்
ஓதச்சாமி(சுப்பையாசாமி)
திண்டுக்கல்
மலைக்கோட்டையின் மேற்குப்புறம் முத்தழகுப்பட்டிக்குச் செல்லும் வழியில்
இந்த ஜீவசமாதி இருக்கிறது.பல்வேறு அதிசயங்களை புதைத்து வைத்திருக்கிறது
இந்த ஓதசுவாமி திருக்கோவில்.
கருணாம்பிகை அம்மையார்
திண்டுக்கல்
காமராஜர் தெருவில் சாது கருணாம்பிகை அம்மையார் ஆஸ்ரமத்தில் அதிஷ்டானம்
இருக்கிறது.சமாதியின்மேல் ஸ்ரீகருணானந்தேஸ்வரர் என்னும் பெயரில்
சிவலிங்கப்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கா.புதுப்பட்டி
கள்ளியடி பிரம்மம்
திண்டுக்கல் டூ திருச்சி சாலையில் 20 கி.மீ.தூரத்தில் வடமதுரை அருகே கா.புதுப்பட்டியில் சமாதி இருக்கிறது.
கசவனம்பட்டி
நிர்வாண மவுனகுரு சாமி
திண்டுக்கல் டூ கன்னிவாடி அருகே கசவனம்பட்டி கிராமம் இருக்கிறது.இங்கே ஆஸ்ரமமும்,சமாதிக்கோவிலும் இருக்கிறது.
திருமலைக்கேணி
காமாட்சி மவுனகுரு சுவாமிகள்
திண்டுக்கல்
டூ செங்குறிச்சி சாலையில் 23 கி.மீ.தூரத்தில் திருமலைக்கேணி
இருக்கிறது.இங்கு சிறிய குன்றின் மேல் முருகன் கோவில்
அமைந்திருக்கிறது.ஸ்ரீகாமாட்சி மவுனகுரு சாமிகள் மடாலயம் அமைந்திருக்கிறது.
மடத்துள் சமாதிக்கோவில் இருக்கிறது.பிரதி வருடம் ஆடிமாதம் வரும் பூராடம்
நட்சத்திர நாளில் குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
பெரியகுளம்
மவுனகுரு சாமி
பெரியகுளம் வராகநதி பாலத்தில் இருந்து அருள் தியேட்டர் செல்லும் வழியில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
ஒட்டன் சத்திரம்
ராமசாமி சித்தர்
ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையம் அருகில் இருக்கிறது.
கொடுவிலார்ப்பட்டி
ஸ்ரீசச்சிதானந்த சாமி
தேனியிலிருந்து 10 கி.மீ.தூரத்தில் கொடுவிலார்பட்டி சச்சிதானந்த ஆஸ்ரமம் வளாகத்துக்குள் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
உசிலம்பட்டி கோட்டைப்பட்டி
நமோ நாராயண தேசிக ஆனந்த சாமிகள்
மதுரை
உசிலம்பட்டியிலிருந்து எழுமலை சாலையில் கோட்டைப்பட்டி என்னுமிடத்தில்
ஜீவசமாதி இருக்கிறது. இங்கிருக்கும் நந்திக்கு கீழே சுவாமியின் சீடர்
குருநாத சாமி அடக்கமாகியிருக்கிறார்.வருடாந்திர குருபூஜை விழா ஆடிமாதம் 12
ஆம் நாள்!!!
சாப்டூர் விட்டல்பட்டி
சடையானந்த ரெட்டியார் சாமி
உசிலம்பட்டியிலிருந்து
36 கி.மீ.தூரத்தில் இருப்பது சாப்டூர். அங்கிருந்து 4 கி.மீ.தூரத்தில்
இருப்பது வண்டப்புலி விட்டல்பட்டி.இங்கிருக்கும் தெப்ப ஊரணி அருகில்
சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
செட்டியப்பட்டி
நிலைமாறானந்தா சாமி
செட்டியப்பட்டியில் இருக்கிறது.
கரூர்
கருவூரார்
கரூர்
பசுபதீஸ்வரர் கோவில் கருவூராரின் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
சித்திரை மாதம் வரும் அஸ்தம் நட்சத்திர நாளன்று வருடாந்திர குருபூஜை விழா
நடைபெற்றுவருகிறது.
ஒத்தை வேட்டி சாமி
அமராவதி
ஆற்றின் வடகரை நஞ்சப்பன் படிக்கட்டுத் துறையில் அதிஷ்டானக் கோவில்
அமைந்திருக்கிறது.ஆனி மாதம் வரும் அனுஷம் நட்சத்திர நாளில் வருடாந்திர
குருபூஜை விழா!!!
நெரூர்
சதாசிவ பிரமேந்திரர்
கரூரிலிருந்து 10 கி.மீ.தூரத்தில் காவேரிக் கரையில் கைலாச ஆஸ்ரம வளாகத்தில் ஜீவசமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
சதாசிவானந்தா
சதாசிவானந்தா ஆஸ்ரமத்தில் சமாதியில் மேருபீடம் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி
மவுனகுரு சாமி
திருச்சி
சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஓயாமரி எனப்படும் இடுகாட்டுப்பகுதியில்
தேவஸ்தானம் என்ற பெயரில் நினைவிடம் அமைந்திருக்கிறது.
மாக்கான் சாமி
ஓயாமரி சாலையில் இடதுபக்கம் காவேரிக்கரையில் மடமும் சமாதிக்கோவிலும் உள்ளன.
ஸ்ரீரங்கம்
ராமானுஜர்
ஸ்ரீரங்கம்
ரங்கநாதர் கோவிலுனுள் உடையவர் சன்னதியில் ராமானுஜர் ஸ்தூல திருமேனி
புனுகு சாத்தப்பட்டு அமர்ந்த கோலத்தில் உள்ளது.இங்கு அமர்ந்து
ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்க விரைவான பலன்கள் கிடைக்கும்.
வரகனேரி
ஸ்ரீகுழுமியானந்த சுவாமி
திருச்சி
வரகனேரி பஜார் தெருவின் தென்பகுதியில் ஸ்ரீசற்குரு குழுமியானந்த சுவாமிகள்
மடாலயம் உள்ளே அதிஷ்டானக் கோவில் இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா
வைகாசி மாதம் வரும் திருவோணம்!
திருப்பட்டூர்
பதஞ்சலி
திருச்சி
டூ சமயபுரம் டூ சிறுகனூர் பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பதஞ்சலி
முனிவர் பிருந்தாவனம் இருக்கிறது.இங்கும் ஓம்ஹரிஹரிஓம் ஜபித்துவர,விரைவான
பலன்கள் கிடைக்கும்.
புலிப்பாணி
திருப்பட்டூரிலிருந்து அரை கி.மீ.தூரத்தில் காசி விஸ்வநாதர் கோவிலில் வியாக்ரபாதர் என்ற புலிப்பாணி ஜீவ பிருந்தாவனம் அமைந்துள்ளது.
திருவெள்ளறை
சிவப்பிரகாச சுவாமி
திருச்சி
டூ துறையூர் சாலையில் திருவெள்ளறை இருக்கிறது.இங்கிருக்கும் சிவாலயத்தின்
அருகில் சுவாமிகளின் சமாதி அமைந்திருக்கிறது. கார்த்திகை மாதம் வரும் கடைசி
திங்கட்கிழமையன்று வருடாந்திர குருபூஜை!
லால்குடி பின்னவாசல்
யோகீஸ்வரர்(எ)ராமகிருஷ்ணசாமி
லால்குடி அருகே பின்னவாசல் கிராமம் இருக்கிறது.இங்கே பல்குனி ஆற்றங்கரையில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
தொட்டியம்
நாராயண பிரமேந்திரர்
திருச்சி
டூ சேலம் சாலையில் அமைந்துள்ளது தொட்டியம் கிராமம்.இங்கிருந்து 14
கி.மீ.தூரத்தில் காட்டுப்புத்தூர் காவிரி வடகரையில் சமாதிக்கோவில்
அமைந்திருக்கிறது.
பெரம்பலூர்
தலையாட்டி சித்தர்
புதிய
பஸ்நிலையத்திலிருந்து 2 கி.மீ.தூரத்தில் பிரம்மரிஷி மலைச்சாரலில்
மூசாக்கோட்டை ஆசிரமம் அமைந்திருக்கிறது.இந்த ஆசிரமத்தில் ஜீவசமாதிக்கோவில்
அமைந்திருக்கிறது.
செந்துறை
மெய்வரத்தம்பிரான்
செந்துறை மடத்துக் கொவிலில்(பழனியாண்டவர் கோவில்) சமாதி இருக்கிறது.
தஞ்சை/திருவாரூர்/நாகை
தஞ்சை கரந்தை
பால்சாமி
கரந்தை
பழைய திருவாறு சாலை ராஜாகோரி தாண்டி பால்சுவாமி மடம் வளாகத்தினுள் சமாதி
கோவில் இருக்கிறது.சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தனுத்தாரி பாபா
கரந்தை
தமிழ்ச்சங்கக் கட்டிடத்திற்குத் தென்புறம் தனுத்தாரி பாபா மடம்
இருக்கிறது.இந்த மடத்தில் தென்மேற்கு மூலையில் பாபாவின் சமாதி இருக்கிறது.
தென்பழனி சத்தியநாராயண சித்தர்
கரந்தை
அரசுப்போக்குவரத்துக் கழக பணிமனை தென்புறச் சாலை ‘சித்தர் மண்டபம்’
இருக்கிறது.இதுவே பழைய சித்தர் ஆஸ்ரமம்.இந்த ஆஸ்ரமத்தின் உட்பகுதியில்
சித்தர் சமாதி அடங்கிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஆதித்த குரு
கரந்தை
தமிழ்ச் சங்கத்திற்கு அருகில் சேர்வைக்காரன் தெரு இருக்கிறது.ஆற்றங்கரை
சந்தின் நடுவில் ஆதித்தகுரு மடமும் சமாதிக்கோவிலும் உள்ளன.
மன்னார்குடி & விடயபுரம்
சட்டாம்பிள்ளை சுவாமிகள் (எ) இராமசாமி சாமிகள்
கொரடச்சேரி
ரயில் நிலையத்திற்குத் தெற்கே வெண்ணவாசல் இருக்கிறது.அங்கிருந்து 3
கி.மீ.தூரத்தில் முசிறியம் என்னும் சிற்றூர் அமைந்திருக்கிறது.அங்கிருந்து 1
கி.மீ.தூரத்தில் விசயபுரம் என்னும் ஊரில்,பிடாரியம்மன் கோவில்
இருக்கிறது.இந்தக் கோவிலின் அருகே முத்துச்சாமி பிள்ளை தோட்டத்தின்
கிழக்குப் பகுதியில் சட்டாம்பிள்ளை சமாதி மேடை அமைக்கப்பட்டுள்ளது.
வெண்ணவாசல் கொரடாச்சேரி
பாண்டவையாற்றின் அருகே ஸ்ரீவாலையானந்தா ஆஸ்ரமம் இருக்கிறது.இங்கு மகாமேரு கோவிலுக்கு மேற்கே சமாதிபீடம் இருக்கிறது.
திருப்பூந்துருத்தி
தீர்த்த நாராயண சாமி
தஞ்சை
டூ திருவையாறு டூ கண்டியூர் சாலையில் 6 கி.மீ.தூரத்தில் மேலைத்
திருப்பூந்துருத்தி ஆற்றங்கரையில் சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கு
சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
திருவையாறு
அகப்பேய் சித்தர்
ஐயாரப்பர் கோவிலில் சண்டேசுவரர் சன்னதி பக்கம் மேற்கு நோக்கிய சன்னதியில் சிவலிங்கப் பிரதிஷ்டையுடன் கூடிய சமாதி இருக்கிறது.
தியாகராஜ சுவாமிகள்
சங்கீத
மும்மூர்த்திகளில் ஒருவரான இவரது சமாதி காவிரிக்கரையில்
இருக்கிறது.சங்கீதத்துறையில் சாதிக்க விரும்புவோர்,இவரது ஜீவ சமாதியை
தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளுக்கு சுக்கிர ஓரையில்(காலை 6 முதல் 7 வரை;மதியம்
1 முதல் 2 வரை;இரவு 8 முதல் 9 வரை;) வழிபட்டுவரலாம்.
ஆட்கொண்டார் சாமி
திருவையாறு
திருநெய்த்தானம் சாலை கல்கி அக்ரஹாரம் என வழங்கப்படுகிறது.சாலையின்
வடபுறம் வரிசையில் ஆட்கொண்டார்சாமி கபால மோட்சம் எய்திய சமாதிக்கோவில்
இருக்கிறது.
சுடுகாட்டுச்சாமி (எ) சதானந்த சாமிகள்
கல்கி அக்ரஹாரம் 41 ஆம் எண்ணில் சுடுகாட்டு சாமிகளில்ன் திரு மடம் இருக்கிறது.இந்த மடத்தின் முன்பகுதியில் அதிஷ்டானம் இருக்கிறது.
ஸ்ரீதம்பலசாமி
சுடுகாட்டுச்சாமி மடத்தை அடுத்து 42 ஆம் எண் உட்புறமுள்ள கொல்லையில் சமாதி மேடை இருக்கிறது.
ஸ்ரீசிவப்பிரகாச ஆனந்தகிரி சுவாமிகள்
காவிரியின்
வடகரையில் தியாகராஜ சுவாமிகள் சமாதிக்குப் பின்புறம் சிறிய சமாதிக்கோவில்
இருக்கிறது.இந்த ஜீவசமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது.
பரமானந்த குரு (எ) அருள்சாமிகள்
திருவையாறு
டூ கும்பகோணம் சாலையில் சப்த கன்னியர் கோவில் உள்ளது.அடுத்த கட்டடத்தின்
மேற்புறம் சிறிய சந்தில் அருள்குரு பரமானந்த நிலையம் என்னும் சமாதிக்கோவில்
இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாதம் வரும் சுவாதி
நட்சத்திர நாளில் நடைபெற்றுவருகிறது.
சித்தேசர்
ஐயாரப்பர் கோவிலில் ஐயாரப்பர் சன்னதி எதிரில் சித்தேசர் ஆக லிங்கவடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சாமி(முருகேசன் சாமி)
புஷ்ய மண்டபக்கரை ஓரமாக அறுபத்துமூவர் மடம் இருக்கிறது.இந்த மடத்தினுள் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
ஆண்டார் சமாதி
மேலமடவிளாகம் ஆதிபராசக்தி வழிபாட்டுமன்றம் இருக்குமிடத்தில் சிறிய கோவிலில் லிங்க வடிவில் சமாதி இருக்கிறது.
தாராசுரம்
ஒட்டக்கூத்தர்
தாராசுரம் வீரபத்ரன் கோவில் பின்புறம் சமாதி இருக்கிறது.
சுவாமிமலை
சச்சிதானந்த சாமி
சுவாமிமலை வடகரையில் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் சமாதிக்கோவில் இருக்கிறது.சமாதி மீது சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கீழக்கோட்டையூர்
ஸ்ரீராமா சாது
கும்பகோணம்
சுவாமி மலையிலிருந்து 3 கி.மீ.தூரத்தில் இருப்பது கீழக்கோட்டையூர் கிராமம்
ஆகும்.இங்கிருக்கும் வள்ளலார் கல்வி நிலைய வளாகத்துக்குள் சமாதி
இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா பிப்ரவர் 14 !
நரசிம்மபுரம்
ஸ்ரீவண்சடகோப ஸ்ரீநிவாச யதீந்திர மஹா சாமிகள்
சுவாமிமலை
அருகில் ஆதனூர் டூ புள்ளபூதங்குடி இடையில் நரசிம்மபுரம் சிற்றூர்
இருக்கிறது.இங்கிருக்கும் திருக்குளம் பிருந்தாவன வளாகத்தில் முதலில்
இருப்பது சுவாமிகளின் பிருந்தாவனம் ஆகும். இந்த சுற்றுப்புறத்தில்
இவருக்குப் பின் பீடமேறிய நான்கு பீடாதிபதிகளின் பிருந்தாவனங்களும் இங்கு
இருக்கின்றன.
கும்பகோணம்
திருமழிசை ஆழ்வார்
ஆதி
கும்பேஸ்வரர் கோவில் வடக்கில் சாத்தாரத் தெருவின் தென் கடைசியில்
திருமழிசைபிரான் திருக்கோவில் இருக்கிறது.இங்கு யோகநிட்டையில் அடங்கிய
இடத்தில் மேடையில் திரு உருவபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.ஓம்ஹரிஹரிஓம்
செய்ய மிகவும் உகந்த இடமாகும்.
கும்பமுனி எனப்படும் அகத்தியர்
ஆதிகும்பேஸ்வரர்
கோவிலுக்குள்ளே வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் இருக்கும்
விநாயகர் சன்னதியின் கீழே அகத்தியர் தவம் செய்து கொண்டிருக்கிறார்.
ஸ்ரீவிஜியீந்திர தீர்த்தர்
159,சோலையப்பன்
தெரு அருகில் ஸ்ரீவிஜியீந்திர சுவாமிகள் படித்துறையை ஒட்டி கிழக்குப்
பக்கத்தில் சுவாமிகளின் அதிஷ்டானக் கோவில் இருக்கிறது.
மவுனசாமி
ஆதி கும்பேஸ்வரர் கோவில் சற்றுத்தொலைவில் மவுனசாமி மடத்துத் தெருவில் சுவாமிகளின் மடமும் சமாதிக்கோவிலும் இருக்கின்றன.
அருணாச்சல சாமிகள்
மவுனசாமிகள் சமாதிக்கு தெற்குப் பக்கம் சமாதி இருக்கிறது.
ஸ்ரீஅண்ணாசாமிகள்
மடத்துத்
தெரு வடகோடியில் காசிவிஸ்வநாதர் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின்
வடக்குப் பிரகாரத்தில் துர்க்கைக்கு எதிரில் துளசி மாடமாக சுவாமிகளின்
அஸ்தி பீடம் இருக்கிறது.
கருப்பணசாமி, மூட்டைச்சாமி,ராமலிங்கசாமி
ரயில்
நிலையம் செல்லும் சாலையின் அருகே திருநாராயணபுரம் வடக்கு வீதி
இருக்கிறது.இந்ததெருவின் கடைசியில் திரும்புமிடத்தில் பழைய கருப்பணசாமி
மடம் இருக்கிறது. புதிய கதவு எண்:5 இன் பக்கமாக உள்ள சிறிய சந்தின் வழியாக
சென்றால் வீட்டின் பின்புறம் சுவாமிகள் மூவரும் சமாதியான இடத்தில் முளைத்த
அரசமரமும் மூன்று சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதையும்
காணலாம்.
ராமச்சந்திர தீர்த்தர்
கும்பகோணம்
மேலக்காவிரியில் அமரேந்திரபுர அக்ரஹாரம் இருக்கிறது.தற்போது
அமரேந்திரபுரத் தெரு என்று பெயரால் அழைக்கப்படுகிறது. அதன் கடைசியில்
காவிரிக்கரையில் மூல பிருந்தாவனம் இருக்கிறது.
திருவிசைநல்லூர்
ஸ்ரீதர ஐயாவாள்
கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ.தூரத்தில் திருவிசை நல்லூர் இருக்கிறது.இங்கு திருமடமும் உற்சவ விக்கிரகமும் உள்ளன.
திருவீழிமலை
ஸ்ரீவீழி சிவவாக்கிய யோகிகள்
கும்பகோணத்திலிருந்து
கிழக்கே 20 கி.மீ.தூரத்தில் திருவீழிமலை இருக்கிறது.இங்கிருக்கும்
சிவாலயத்தில் கீழவீதியில் திருமடத்தில் யோகிகளின் சமாதிக்கோவில்
இருக்கிறது.
திருபுவனம்
விராலிமலை சதாசிவ சாமி
கும்பகோணம்
டூ மயிலாடுதுறை சாலையில் 8 கி.மீ.தூரத்தில் திருபுவனம் இருக்கிறது.இங்கு
கம்பரேஸ்வரசாமி சிவாலயத்திற்கு அருகே மடமும் சமாதிக்கோவிலும் இருக்கிறது.
ஆடுதுறை
சைதன்ய சிவம்
ஆடுதுறை
சூரியனார் கோவில் சாலையில் காவிரியாற்றின் மேம்பாலத்தின் மேற்கே அம்மன்
கோவிலுக்கு பின்புறமுள்ள தோப்பில் சைதன்ய விநாயகர் கோவிலில் விநாயகருக்குக்
கீழ் இவரது ஜீவசமாதி உயிர்த்துடிப்புடன் இயங்கிவருகிறது.
சாத்தனூர்
திருமூலர்
ஆடுதுறையிலிருந்து
3 கி.மீ.தூரத்தில் சாத்தனூர் இருக்கிறது.இந்த ஊருக்கு வெளியே ஐயனார்
கோவில் இருக்கிறது.இந்த அய்யனார் கோவிலின் பின்புறம் திருமூலரின் ஜீவசமாதி
இருக்கிறது.ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஏற்ற இடமாகும்.
சூரியனார் கோவில்
சிவாக்கிர யோகிகள்
ஆடுதுறை அருகே சூரியனார் கோவில் இருக்கிறது.இங்கிருக்கும் தெற்குவீதியில் திருமடத்தில் சுவாமிகளின் அதிஷ்டானக்கோவில் இருக்கிறது.
கஞ்சனூர்
ஸ்ரீஹரதத்தர்
ஆடுதுறைக்கு
வடக்கே 2 கி.மீ.தூரத்தில் கஞ்சனூர் இருக்கிறது.இதன் மேற்கு எல்லையில்
மணியாக்குளம் வடகரையில் வடமேற்கு பாகத்தில் அதிஷ்டானக்கோவில்
அமைந்திருக்கிறது.
சுயம்பிரகாசர்
கஞ்சனூர்
மணியாக்குளம் தென்புறம் காசிவிஸ்வநாதர் கோவில் இருக்கிறது.இங்கு
தட்சிணாமூர்த்திக்கு அருகில் உள்ள சந்நிதியில் சிவலிங்கபிரதிஷ்டையுடன்
சமாதி இருக்கிறது.அருகில் இரு சீடர்கள் சிவானந்தர் மற்றும் பரமானந்தர்
ஆகியோரின் அதிஷ்டானங்களும் இருக்கின்றன.ஆலயத்திற்கு வெளியே தெற்கே தள்ளி
ஸ்ரீவைத்தியலிங்க சாமி அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.
திருநாகேஸ்வரம்
ஸ்ரீநாராயணசாமி சித்தர்
உப்பிலியப்பன்
கோவிலுக்கு வடக்கே கீழநடுப்பட்டறை தெருவின் கடைசியில் சமாதி பீடம்
இருக்கிறது.மாசி மாதம் வரும் புனர்பூசம் நட்சத்திர் நாளில் வருடாந்திர
குருபூஜை!!
கீழக் கபிஸ்தலம்
ஸ்ரீதத்துவராய சுவாமிகள்
கும்பகோணம்
டூ திருவையாறு இடையே 15 கி.மீ.தூரத்தில் கீழக்கபிஸ்தலம் இருக்கிறது.இதன்
வடக்கே வாழ்க்கை கிராமம் இருக்கிறது.இங்கே சாமியார்தோப்பு என்னும் இடத்தில்
அதிஷ்டானம் இருக்கிறது.
குடவாசல்
சுப்பிரமணிய சித்தர்
கும்பகோணம் டூ திருவாரூர் சாலையில் 20 கி.மீ.தூரத்தில் குடவாசல் இருக்கிறது.இங்கே இருக்கும் குருசாமி கோவிலே அதிஷ்டானம் ஆகும்.
திருவிடைமருதூர்
பத்திரகிரியார்
பட்டினத்தாரின் சீடரான இவரது ஜீவசமாதி மகாலிங்கசுவாமி கோவில் கிழக்கு கோபுர வாசலில் சிலை வடிவில் அமைந்திருக்கிறது.
வலங்கைமான்
காரை சித்தர்
வலங்கைமானுக்குக்
கிழக்கே குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் ஆண்டாங்கோவில் என்னும் சிற்றூர்
இருக்கிறது.இந்த ஆற்றைக் கடந்தால் காந்தவெளி ஆஞ்சநேயர் கோவில்
இருக்கிறது.இந்த கொவிலின் பின்புறம் 250 அடி தூரத்தில் சமாதிக்கோவில்
இருக்கிறது.இந்த பீடத்தில் காரை சித்தரின் சுதையாலான உருவம்
அமைக்கப்பட்டுள்ளது.ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஏற்ற இடம்;ஜபிக்க உகந்த நேரம்
அமாவாசை நள்ளிரவு மணி 11.50 முதல் 12.10 வரை!!!
பூனைக்கண் சித்தர்
வலங்கைமான்
பாய்க்காரத் தெரு பட்டகுளம் சந்தில் சமாதிக்கோவில் இருக்கிறது.வைகாசி
மாதம் வரும் தசமி திதி அன்று வருடாந்திர குருபூஜை வழிபாடு!!!
சின்னகரம்
வலங்கைமானுக்குத்
தெற்கே சின்னகரம் என்னும் சிற்றூர் உள்ளது.இதன் தொடக்கத்தில் துரவுபதி
அம்மன் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் பின்புறமுள்ள குளத்த்தின்
கரையில் வடமேற்கு மூலையில் சமாதிக்கோவில் இருக்கிறது.
கூந்தலூர்
ரோமரிஷி
ஜீவசமாதி இங்கே தான் இருக்கிறது.பஞ்சபட்சி சாஸ்திரம் கற்க
விரும்புவோர்,கற்றதை சிறப்பாக செயல்படுத்திட விரும்புவோர்,8 அமாவாசைகளுக்கு
இங்கு வந்து இரவு11 முதல் 1 மணி வரை ஓம்சிவசிவஓம் ஜபித்துவரவும்.
திருவாலங்காடு
முதல்வர் நமச்சிவாய மூர்த்தி & திருமாளிகைத் தேவர்
ஆடுதுறை
டூ குத்தாலம் இடையே திருவாலங்காடு இருக்கிறது.இங்கு திருவாடுதுறை
ஆதினத்திருமடத்தில் ஆதீனகுரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் சமாதிக்கோவில்
இருக்கிறது.இந்த வளாகத்துக்குள் சற்று வடபுறம் திருமாளிகைத் தேவர் சன்னதி
இருக்கிறது.இவருக்கு தைமாதம் வரும் அசுபதி நட்சத்திரநாளில் வருடாந்திர
வழிபாட்டு நாள்!!!
முழையூர்
ஆதிசிவப்பிரகாசர்
தாராசுரத்தை அடுத்து முழையூர் முக்கூட்டிற்கு மேற்கே ஆதிசிவப்பிரகாசர் சிவாலயம் இருக்கிறது.இதன் கருவறையே சமாதிக்கோவில் ஆகும்.
கொத்தம்பட்டி
பாலானந்த ஜோதி சுவாமிகள்
தஞ்சாவூர்
டூ புதுக்கோட்டை இடையே 13 கி.மீ.தூரத்தில் புனல்குளம் இருக்கிறது.இதன்
வடக்கே 4 கி.மீ.தூரத்தில் இருப்பது கொத்தம்பட்டி.சாலையின் முடிவில்
பிள்ளையார் கோவில் இருக்கிறது.இதன் வடபுறம் காமாட்சியம்மன் கோவில்
இருக்கிறது.இந்த கோவில் வளாகத்துக்குள் அம்மன் சன்னதியின் தெற்கே
சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை
ஸ்ரீவெங்கிடு சாமிகள்
பட்டுக்கோட்டை
பெரியகடை தெரு மேல்கோடியில் சாமியார் மடம் என்னும் ஸ்ரீவெங்கிடு சுப்பையா
சாமிகளின் அழகிய சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது.
வடகாடு
ஸ்ரீஅம்பலவாண சுவாமிகள்
முத்துப்பேட்டை
ஜாம்பவான் ஓடை ஊரிலிருந்து தில்லை வளாகம் செல்லும் சாலையில் வடகாடு
என்னும் ஊரில் சுவாமிகளின் சமாதிக்கோவில் இருக்கிறது.மாசி மாதம் வரும்
திருவாதிரை நட்சத்தன்று வருடாந்திர வழிபாடு!!!
முத்துப்பேட்டை
ஷைகு தாவுத் வலி
ஜாம்பவான் ஓடை பகுதியில் ஷைகு தாவுத்வலி தர்கா இருக்கிறது.
மன்னார்குடி
சூட்டுக்கோல் ராமலிங்கசாமி
மன்னார்குடி
கிழக்கு எல்லையில் திருவாரூர் செல்லும் சாலையில் மேல்புறம் பைபாஸ் ரோடு
ஐயர் சமாதி என்றழைக்கப்படும் சூட்டுக்கோல் ராமலிங்க சாமிகளின் ஜீவசமாதி
இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.வருடாந்திர
தைப்பூசம் தோறும் குருபூஜை!
மாயாண்டி சாமி
சூட்டுக்கோல் ராமலிங்க சாமியின் சமாதி பின்புறம் மாயாண்டி சாமியின் சமாதி இருக்கிறது.
ஸ்ரீவாட்டார் மவுனகுரு சாமி
மன்னார்குடி தென்வடல் 6 ஆம் தெருவில் கோபிநாதப்பெருமாள் கோவில் அருகில் சமாதிக்கோவில் இருக்கிறது.
ஸ்ரீமேரு சாமி
மன்னார்குடி
ஹரித்ரா நதி தெப்பக்குளம் டூ ஈசானியேஸ்வரர் என்னும் காசி விஸ்வநாதர்
ஆலயத்தின் கிழக்கு வாசலை அடுத்து,வாசலுக்கு வடபுறம் பாமினி ஆற்றுக்குத்
தென்புறம் மேருசாமி சமாதிக்கோவில் இருக்கிறது.
பூந்தி சுவாமிகள்
மேலே குறிப்பிட்டுள்ள சிவன்கோவில் அருகில் சுவாமிகளின் சமாதி இருக்கிறது.
வடகரவாயில்
சாமிநாத சித்தன்
மன்னார்குடிக்கு
10 கி.மீ.தூரத்தில் ராஜப்பையன் சாவடி என்னும் சிற்றூர் இருக்கிறது.அதன்
அருகில் வடகரவாயில் என்னும் கிராமம் இருக்கிறது.இங்கே இருக்கும்
நாகமாரியம்மன் கோவிலுக்கு எதிர்ப்புறம் அதிஷ்டானம்
அமைந்திருக்கிறது.மாசிமாதம் வரும் உத்ராடம் நட்சத்திர நாளன்று வருடாந்திர
குருபூஜை விழா !!!
அருகிலேயே குருநாதர் ஆறுமுக சித்தரின் சமாதி இருக்கிறது.இங்கே பங்குனி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை!!!
முத்தையா சித்தர்
ராஜப்பையன்
சாவடி அருகில் வடகரைவாயில் நாகமாரியம்மன் கோவில் வடக்குப் பக்கத்தில்
சமாதி இருக்கிறது.மாசி மாதம் வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று குருபூஜை
விழா நடைபெற்றுவருகிறது.
செருவாமணி
ஆனந்தசாமி
சூட்டுக்கோல்
ராமலிங்கசாமியின் சீடர் இவர்.மன்னார்குடியிலிருந்து 15 கி.மீ.தூரத்திலுள்ள
சேந்தமங்கலத்தில் இறங்கி செருவாமணியை அடையலாம்.இங்கே இவரது ஜீவசமாதி
இருக்கிறது.
திருக்களர்
வீரசேகர ஞான தேசிகர்
மன்னார்குடி
அருகில் திருப்பத்தூர் என்னும் சிற்றூர் இருக்கிறது.இதன் அருகில்
திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் கோவில் வடக்கு வீதியில் வடகிழக்கு மூலையில்
சமாதிக்கோவில் இருக்கிறது.வைகாசி மாதம் வரும் பவுர்ணமியன்று குருபூஜை
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மருதூர்
சிவப்பிரகாச சாமிகள்
மன்னார்குடி
டூ திருத்துறைப்பூண்டி சாலையில் 7 கி.மீ.தூரத்தில் தட்டாங்கோவில்
இருக்கிறது.இதன் தெற்கே 3 கி.மீ.தூரத்தில் மருதூர் இருக்கிறது.இங்கே
ஸ்ரீசிவப்பிரகாச சாமிகள் அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.இங்கே வருடாந்திர
குருபூஜை கார்த்திகை மாதம் வரும் திருஓணம் நட்சத்திரத்தன்று
நடைபெற்றுவருகிறது.
திருநெல்லிகாவல்புதூர்
ஸ்ரீஅண்ணன் சாமிகள்(எ)அருணாச்சல சாமிகள்
திருத்துறைப்பூண்டி
டூ திருவாரூர் சாலை நான்கு ரோடு சந்திப்புக்கு மேற்கே 3 கி.மீ.தூரத்தில்
புதூர் ரைஸ் மில்லுக்கு எதிரில் உள்ள தோப்பில் சுவாமிகளின் அதிஷ்டானம்
அமைந்திருக்கிறது.
நன்னிலம்
தாண்டவராய சுவாமி & நாராயணசுவாமி
நன்னிலம்
கடைத்தெரு அருகே பிள்ளையார் கோவில் தெற்கு தெரு இலுப்பைத் தோப்பு
இருக்கிறது.இங்கே ஸ்ரீநாராயண தாண்டீஸ்வரர் ஜீவசமாதி இருக்கிறது.அருகருகே
தென்புறத்தில் ஸ்ரீநாராயணகுரு அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.வடபுறம்
ஸ்ரீதாண்டவராய சுவாமிகளின் அதிஷ்டானம் இருக்கிறது.வைகாசி மாதம் வரும்
விசாகத்தன்று குருபூஜை வருடம் தோறும் நடைபெற்றுவருகிறது.
சன்னாநல்லூர்
சின்னான் சுவாமி
திருவாரூர்
டூ மயிலாடுதுறை சாலையில் சன்னாநல்லூரில் சமாதிக்கோவில் இருக்கிறது.வருடம்
தோறும் வரும் ஆடிமாதம் ஆயில்யம் நட்சத்திரநாளில் குருபூஜைவிழா
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
திருவாஞ்சியம்
ராமையா சாமி
நன்னிலத்திலிருந்து
7 கி.மீ.தூரத்தில் திருவாஞ்சியம் அருகில் பால்பண்ணைச்சேரி கிராமம்
இருக்கிறது.இங்கு பாலதண்டாயுதபாணிகோவில் வளாகத்தில் இவரது ஜீவசமாதி
இருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் பங்குனி 2 ஆம் தேதி வருடாந்திர குருபூஜை விழா!
திருவாரூர்
கமலமுனி
திருவாரூர் ஆனந்தீஸ்வரர் சன்னதியில் சித்திபெற்றுள்ளார்.
மடப்புரம் தட்சிணாமூர்த்தி
திருவாரூர்
மடப்புரம் பகுதியில் கமலாலய தெப்பக்குளத்திற்குத் தென்மேற்கே அம்மையப்பன்
செல்லும் சாலையில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.இங்கே இருக்கும்
சிவலிங்கத்தின் கீழே சுரங்கக் குகையில் அடக்கமாகியிருக்கிறார்.
திருக்குவளை
வன்மீகர்
திருவாரூர் அருகே திருக்குவளையிலிருந்து 2 கி.மீ.தூரத்திலுள்ள எட்டுக்குடி சவுந்தர ஈஸ்வரர் கோவிலில் சித்திபெற்றிருக்கிறார்.
திருநெய்ப்பேர்
நமிநந்தியடிகள்
திருவாரூர்
டூ திருத்துறைப்பூண்டி இடையில் 7 கி.மீ.தூரத்தில் இருப்பது திருநெய்ப்பேர்
ஆகும்.இங்கிருக்கும் சிவன் கோயிலைப்பார்த்தவாறு சாலைக்குக் கிழக்கே
சமாதித் திருக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
முடிகொண்டான்
ஆலங்குடி சுவாமிகள்
திருவாரூரிலிருந்து
16 கி.மீ.தூரத்தில் முடிகொண்டான் சிற்றூர் இருக்கிறது.இங்கு
பெரியகுளத்திற்குக் கீழ்க்கரையில் சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
இருக்கிறது.இந்த கோவிலின் நுழைவு வாயிலில் கிழக்கே மதில் சுவருக்கு வடக்கே
ஸ்ரீஆலங்குடி சுவாமிகள் என்னும் சுயம்பிரகாசானந்த சரஸ்வதி சாமிகளின்
அதிஷ்டானம் அமைந்திருக்கிரது.சமாதியில் வில்வமரம் இருக்கிறது.
இதே
கிராமத்தில் காலணா வெங்கடாஜலபதி திருக்கோவில் இருக்கிறது.மிகவும்
புராதனமான,அளவற்ற வீர்யம் மிகுந்த திருக்கோவில் இது.இந்தக்கோவிலில் நமது
மாத/ஆண்டு வருமானத்தில் 5% செலுத்திக்கொண்டே வந்தால்,நமது
தொழில்/வேலை/கமிஷன் தொழில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடையும் என்பது
பலருக்கும் தெரியாத தெய்வீக வைஷ்ணவ ரகசியம் ஆகும்.இங்கு ஏகாதசி தோறும் ஒரு
மணி நேரம் வரை ஓம்ஹரிஹரிஓம் ஜபித்துவந்தால்,நமது நீண்டகாலப் பிரச்னைகள்
தீரும்.இவ்வாறு 9 ஏகாதசிகளுக்கு ஓம்ஹரிஹரிஓம் ஜபித்துவர வேண்டும்.
பொறையாறு
பாப்பையா சுவாமிகள்
மயிலாடுதுறைக்கு
கிழக்கே 35 கி.மீ.தூரத்தில் பொறையாறு இருக்கிறது.இங்கு இருக்கும்
போக்குவரத்துக் கழக பணிமனையின் கிழக்கே பாப்பையா சாமிகளின் சமாதிக்கோவில்
இருக்கிறது.
மயிலாடுதுறை
குதம்பை சித்தர்
மயிலாடுதுறை
சிவாலயத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் அரூட சமாதி இருக்கிறது.இங்கே
வெள்ளைப்பிள்ளையார் சன்னதி இருக்கிறது.இதே இடத்தில் குதம்பைச் சித்தர்
சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பால்சாமி
மயிலாடுதுறை
கூறைநாடு பகுதியில் திருமஞ்சனவீதி இருக்கிறது.இங்கே காவிரிக்கரை அருகே
பள்ளி எதிரில் சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கே கருவறைக்குள் முருகன் சிலை
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மணிவாசக சாமி
கூறைநாடு பகுதியில் காவிரி தென்கரையில் சமாதி இருக்கிறது.சமாதியின் மீது தட்சிணக்காளி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
திருவாலங்காடு
கொங்கணசித்தர்
மயிலாடுதுறைக்கு
15 கி.மீ.தூரத்தில் திருவாலங்காடு தென்னந்தோப்பு இருக்கிறது.இதை
கொங்கணேஷ்வரர் தோப்பு என்பர்.இங்கே தாமரைக்குளம் அருகில் கொங்கணசித்தரின்
ஜீவசமாதி இருக்கிறது.
சுடுகாட்டுச்சாமி
மயிலாடுதுறை
தருமபுரம் சாலையில் ராஜன் தோட்டத்திற்கு எதிரில் 25 ஆம் எண் கொண்ட
இடத்தில் ஜீவசமாதி இருக்கிறது.இங்கே பிரதி கார்த்திகை மாதம் வரும் 2 ஆம்
நாளன்று குருபூஜை விழா!
யோக அபிராமி அம்மையார்
மயிலாடுதுறை
கச்சேரி வீதியில் தண்டபாணி(முருகன்) கோவிலில் முருகனுக்குக் கீழே
நிலவறையில் ஜீவசமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா ஐப்பசி மாதம்
வரும் அஸ்தம் நட்சத்திரநாளன்று நடைபெற்றுவருகிறது.
பாய்கட்டி சுவாமி
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் இவரது ஜீவசமாதி இருக்கிறது.
சித்தர்காடு
காழி சிற்றம்பலநாடிகள் சுவாமி
மயிலாடுதுறை
ரயில்வே மேம்பாலம் மேற்புறம் சித்தர்காடு இருக்கிறது. காழி சிற்றம்பல
நாடிகள் உடன் 60 சீடர்கள் ஒரு சேர சமாதிகொண்ட ஸ்தலம் சித்தர் காடு ஆகும்.
கண்ணப்பர் சாமி
சித்தர்காடு தென்கிழக்கே சாலைக்கு சற்றுதொலைவில் ஸ்ரீஆலந்துரையப்பர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.
மாதிரிமங்கலம்
ரோட்டுசாமி(சிவராமகிருஷ்ணசாமி)
மயிலாடுதுறை
டூ கும்பகோணம் சாலையில் 12 கி.மீ.தூரத்தில் மாதிரிமங்கலம்
இருக்கிறது.இங்கே ரைஸ் மில்லுக்கு தெற்கில் மடமும் சமாதிக்கோவிலும்
இருக்கின்றன.இங்கே பங்குனி மாதம் வரும் சுவாதி நட்சத்திரநாளில் வருடாந்திர
குருபூஜை விழா!
குத்தாலம்
சேதுபாவா சாமி
மயிலாடுதுறை
டூ கும்பகோணம் சாலையில் 10 கி.மீ.தூரத்தில் குத்தாலம் இருக்கிறது.இங்கே
சிவன் கோவில் சன்னதி தெருவில் மரம் அறுக்கும் ஆலைக்குள் சமாதிக்கோவில்
இருக்கிறது.
க்ஷேத்திரபாலபுரம்
உறிக்கட்டி சுவாமிகள்
மயிலாடுதுறை
டூ கோமல் டூ கும்பகோணம் சாலையிலுள்ள க்ஷேத்ட்திரபாலபுரத்தில்
சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கே கார்த்திகை மாதம் வரும் மிருகசீரிடம்
நட்சத்திரநாளில் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
சீர்காழி
சட்டைநாதர்
சீர்காழி சிவாலயத்தில் சித்தியானார்.
தென்பாதி
கதிர்காம சுவாமி
சீர்காழி
டூ வைத்தீஸ்வரன் கோவில் சாலையில் இருப்பது தென்பாதி ஆகும்.இங்கே
உப்பனாற்றில் வடகரையில் பாலத்துக்கு மேற்கே சமாதிக்கோவில் இருக்கிறது.
வைத்தீஸ்வரன்கோவில்
தன்வந்திரி
வைத்தீஸ்வரன்
கோவில் பிரகாரத்தில் இவரது சமாதி மீது தன்வந்திரி விக்கிரகம் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது.சித்த,ஆயுர்வேத வைத்தியம் மற்றும் ஹீலிங்,ரெய்கி
சிகிச்சையாளர்கள் இங்கே வந்து பிரதி செவ்வாய்க்கிழமைகளில் ஒரு மணி நேரம்
வரை ஓம்சிவசிவஓம் ஜபிப்பது நன்று.இவ்வாறு மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை வீதம்
ஓராண்டு வரை வந்து வழிபட,வைத்தியத் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்கள்.
ஓம்சிவசிவஓம்
உலகமயமாக்கலின்
விளைவாக, நமது ஒவ்வொருவரின் தினசரி வாழ்க்கையையும் செல்போனும்,இணையமும்
படுவேகமாக மாற்றிவிட்டன; இந்த உலகமயமாக்கலே குடும்ப அமைப்பின் முதல் எதிரி
ஆகும்;குடும்ப அமைப்பு சிதைந்து போய்விட்டால்,தனிமனித ஒழுக்கம் காணாமல்
போய்விடும்;தனிமனித ஒழுக்கம் காணாமல் போய்விட்டால்,(வேதாத்திரி மகரிஷியின்
ஆன்மீக ஆராய்ச்சியின் படி) வான் காந்தம் கடுமையாக பாதிக்கப்படும்;வான்
காந்தம் பாதித்துவிட்டால்,பூமியில் நீராலும்,நிலநடுக்கத்தாலும் அழிவுகள்
பெருமளவு பெருகிவிடும்.இந்த சூழ்நிலையை இணையத்தின் பரவல் 1990 முதல்
2010க்குள் உண்டாக்கிவிட்டது. தவிர,வல்லரசு நாடுகள் எனப்படும்
அமெரிக்கா,இங்கிலாந்து,பிரான்ஸ்,ஜெர்மனி,ஜப்பான்,சீனா போன்றவைகளின்
பேராசையால்,பூமியின் பல்வேறு நாடுகளில் இருக்கும் அனைத்துவிதமான இயற்கை
வளங்களை வேகமாகவும்,பிரம்மாண்டமாகவும் நுகர்வு செய்ய ஆரம்பித்திருக்கிறான்
மனிதன்.இது பேரழிவுக்கே வழிவகுக்கும்.
இந்த
அழிவுக்கான சுழற்சியை நிறுத்திட,நாம் தமிழ்நாட்டில் இருக்கும்
ஜீவசமாதிகளுக்கு மாதம் ஒரு நாள்/வாரம் ஒரு நாள் சென்று வழிபடுவது அவசியம்
ஆகும்.மாதம் ஒரு நாள் என்பது மாதாந்திர பவுர்ணமி/மாதாந்திர
அமாவாசை/மாதாந்திர சிவராத்திரி அல்லது உங்களின் ஜன்ம நட்சத்திரம் நிற்கும்
நாளில் வழிபாடு செய்வது உங்களுக்கும்,உங்கள் குடும்பத்திற்கும்,நமது பாரத
நாட்டிற்கும்,நமது நாட்டிற்கும் நன்மை பயக்கும்.பூமியின் நலனைக்
கெடுப்பவர்களின் செயல்பாட்டை முடக்கிவைக்கும் என்பது உண்மை.
திண்டிவனம்
சாரம்
முத்துராம பிரம்மம்
திண்டிவனம்
டூ ஒலக்கூர் சாலையில் 10 கி.மீ.தூரத்தில் உள்ளது சாரம்
கிராமம்.இங்கிருக்கும் திரவுபதி அம்மன் கோவில் அருகே ஜீவசமாதி
அமைந்திருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா இங்கு ஒவ்வொரு மார்கழி மாதமும்
வரும் திருஓணம் நட்சத்திரநாளில் நடைபெற்றுவருகிறது.
மயிலம்
சிவஞான பாலசித்தர்
திண்டிவனம்
டூ புதுச்சேரி சாலையில் மயிலம் மலை மேல் உள்ள முருகன் சன்னதியின் தெற்கே
சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.இங்கு வருடாந்திர குருபூஜை விழா ஆனி மாதம்
திருவாதிரை நட்சத்திரநாளில் நடைபெற்றுவருகிறது.
திருவக்கரை
குண்டலினி சித்தர்
மயிலத்தை
அடுத்த திருவக்கரை வக்கிரகாளி கோவிலில் சந்திரமவுலீஸ்வரர் சன்னதியின்
இடப்புறம் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.இங்கு சித்தரின் சிலை பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது.
பெருமுக்கல்
முத்தாலீஸ்வரர்
திண்டிவனத்திலிருந்து 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் பெருமுக்கல் கிராமத்தில் இந்த ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
உப்புவேலூர்
குழந்தைவேல்சாமி
திண்டிவனம்
டூ கிளியனூர் சாலையில் 18 கி.மீ.தூரத்தில் இருப்பது
உப்புவேலூர்.இங்கிருந்து 6 கி.மீ.தூரத்தில் இவரது ஜீவசமாதி
அமைந்திருக்கிறது.
வன்னியநல்லூர்
ஸ்ரீதேவராசு சுவாமிகள்
சூனாம்பேடு
அருகில் வன்னியநல்லூர் கிராமத்தில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.இங்கு ஆனி
மாதம் வரும் பூராடம் நட்சத்திர நாளில் வருடாந்திர குருபூஜை விழா!!!
புதுச்சேரி சுற்றுப்புறம்
இரும்மை மாகாணம்
கழுவெளி சித்தர்
ஆரோவில்லில் இருந்து 3 கி.மீ.தூரத்தில் இந்த சித்தரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
புதுச்சேரி
அரவிந்தர் மற்றும் ஸ்ரீஅன்னை
பறவைச் செட்டித் தெரு கடைசியில் அரவிந்தர் மற்றும் ஸ்ரீஅன்னை இருவரது ஜீவசமாதிகளும் இருக்கின்றன.
தொள்ளை காது சாமிகள்
மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகருக்குப் பின்புறம் இவரது ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
மவுலானா சாகிப் மெய் ஞான சாமிகள்
பாண்டி முல்லா வீதியின் கடைசியில் தர்கா அருகில் இவரது ஜீவ சமாதி அமைந்திருக்கிறது.
நாகலிங்கசாமிகள்
புதுவை
அம்பலத்தாடையர் மடம் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி கோவில் பின்புறம் இவரது
ஜீவசமாதிகள் அமைந்திருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் 7 ஆம் நாள்
வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
அக்கா பரதேசி சாமிகள்
முத்தியால்பேட்டை
வாழைக்குளம் பகுதி குதிரைக்குளம் அருகே ஜீவசமாதிக்கோவில்
அமைந்திருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தட்டாஞ்சாவடி
ஸ்ரீகம்பளி ஞான தேசிக சாமிகள்
தொழிற்பேட்டை
பின்புறம் ருத்ரபூமியில் உள்ள ஆஸ்ரம வளாகத்துள் சமாதிக்கோவில்
இருக்கிறது.இங்கு கருவறையில் உள்ள நந்தியின் கீழ் சுவாமிகளின் சீடர்
அம்பலவாண சாமிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரியவர்களுக்கு பெரியவர்
கம்பளி ஞான தேசிக சுவாமிகளின் சமாதிக்குப் பின்புறம் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
சித்தன்குடி
யாழ்ப்பாணம் கதிர்வேல் சுவாமிகள்
சித்தன்குடி பிருந்தாவன் 3 வது குறுக்குத் தெருவின் மடத்தில் ஜீவசமாதி பீடம் அமைந்திருக்கிறது.
எல்லப்பிள்ளை சாவடி
சுப்ரமணிய அபிநவ சச்சிதானந்த சுவாமிகள்
எல்லப்பிள்ளள சாவடியில் இருக்கும் ஸ்ரீசாரதா கோவிலில் ஜீவசமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
ஸ்ரீசச்சிதானந்த சாமி
ஸ்ரீசாரதா
சிவகெங்கை மடத்திற்கு மேற்கில் 100 அடி சாலையில் 21 எண் வளாகத்தின்
உட்புறம் மண்டபத்தில் ஜீவசமாதி கோவில் அமைந்திருக்கிறது.
முத்திரைப்பாளையம்
ஸ்ரீமண்ணுருட்டி சுவாமிகள்
பழைய பஸ் ஸ்டாண்ட் டூ தென்னஞ்சாலை கோவிந்தசாமி முதலியார் தோட்டம்(சுதேசி காட்டன் மில் எதிரில்) இவரது ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
முத்தியால்பேட்டை
முத்தியால்
பேட்டை அம்பிகா திரையரங்கம் எதிரில் திரு முத்துகுமாரசாமி முதலியார்
தோட்டத்தில் ஜீவசமாதி அமைந்திருக்கிறாது.இந்த ஜீவபீடம் வேலாயுத ஈசுவரர்
திருக்கோவிலாக வழிபடப்படுகிறது.இங்கு சீடர் கோவிந்தசாமியின் சமாதி அருகில்
உள்ளது.
அரியூர் சர்க்கரை ஆலை
குருசாமி அம்மையார்
சர்க்கரை ஆலை காம்பவுண்டு தாண்டியவுடன் ஆஸ்ரம வளாகத்தில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.வருடாந்திர குருபூஜை சித்திரா பவுர்ணமி!!!
பிள்ளையார் குப்பம்
ரெட்டியப்ப சுவாமிகள்
கிருமாம்பாக்கம் அருகில் இவரது ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
திருபுவனை
சிற்றம்பல அப்பார்
திருபுவனையில் அப்பார் சன்னதி என்றழைக்கப்படுகிறது.
ஏம்பலம்
அம்பலத்தாடி அப்பர்
ஏம்பலம்
மடத்திற்கு அருகில் ஜீவசமாதி இருக்கிறது.வருடம் தோறும் வரும் புரட்டாசி 15
ஆம் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
சிங்காரப்பட்டு
ரெங்கசாமி சித்தர்
புதுச்சேரியிலிருந்து
24 கி.மீ.தூரத்தில் மண்ணடிப்பட்டு இருக்கிறது.அங்கிருந்து 2
கி.மீ.தூரத்தில் சிங்காரப்பட்டு இருக்கிறது.இதன் மேற்கு எல்லையில் சிறிய
முருகன் கோவில் கருவறை முன்பு உள்ள மயில் பீடம் இவரது சித்தர்பீடம் ஆகும்.
லாலப்பேட்(கருவடிக்குப்பம்)
சித்தானந்த சுவாமிகள்
கருவடிக்குப்பத்தில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
ஸ்ரீகணபதி சுவாமிகள்
கருவடிக்குப்பம்
டூ இடையஞ்சாவடி ரோட்டின் கடைசியில் ஆஸ்ரமமும் அதன் அருகில்
சமாதிக்கோவிலும் அமைந்திருக்கிறது.இந்த மேடையின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது.
காராமணிக்குப்பம்
ஸ்ரீசக்திவேல் பரமானந்த சுவாமிகள்
காராமணிக்குப்பம் ரயில்வே கேட் தாண்டி உள்ளது.
மண்ணடிப்பட்டு
பவழக்கொடி சித்தர்
புதுச்சேரி
மண்ணடிப்பட்டு சாலையில் சோம்பட்டு கிராமம் இருக்கிறது.இந்த கிராமத்தின்
தொடக்கத்தில் பவழக்கொடி சித்தரின் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
சின்னபாபு சமுத்திரம்
ஸ்ரீமகான் படே சாயபு
பாண்டி
டூ விழுப்புரம் சாலையில் இருப்பது கண்டமங்கலம்!இந்த கிராமத்திலிருந்து 2
கி.மீ.தூரத்தில் உள்ளது சின்னபாபு சமுத்திரம் என்னும் கிராமம்.இங்கு இவரது
ஜீவசமாதி கோவில் இருக்கிறது.செவ்வாய் தோறும் சிறப்பு பூஜைகள்
நடைபெற்றுவருகின்றன.
அரும்பார்த்தபுரம்
தேங்காய் சுவாமிகள்
புதுவை கட்டாஞ்சாவடி எதிரில் சிறிய சமாதி பீடம் அமைந்திருக்கிறது.இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பள்ளித்தென்னல்
தட்சிணாமூர்த்தி சாமிகள்
புதுவை
விழுப்புரம் சாலையில் பள்ளித்தென்னல் கிராமம் அமைந்திருக்கிறது.இங்கு
ஐயனார் கோவிலும் குளமும் உள்ளன.இந்த குளத்தின் வட கரையில் சிவலிங்கம்
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
புதுப்பட்டு
ஸ்ரீலட்சுமண சுவாமிகள்
பாண்டி
வடக்கே கிழக்கு கடற்கரை சாலையில் புதுப்பட்டு காட்டுப்பகுதியில்
ஐயனாரப்பன் என்னும் மஞ்சனீஸ்வரன் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின்
பின்புறம் வடமேற்கு மூலையில் சமாதிபீடம் அமைந்திருக்கிறது.
முத்தியால்பேட்டை
முருகனடிமை பச்சையம்மாள்
கருவடிக்குப்பம் மயானத்தில் சமாதிக்கோவில் இருக்கிறது.
வில்லியனூர்(ஓதியம்பட்டு)
வண்ணார் பரதேசி சாமிகள்
புதுவை
டூ முருகம்பக்கம் வழி வில்லியனூர் சாலையில் 7 கி.மீ.தூரத்தில் ஒதியம்பட்டு
இருக்கிறது.இந்த ஊருக்கு மேற்கே சமாதி பீடம் இருக்கிறது.இங்கே சிவலிங்கம்
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கணுவாய் பேட்டை
திருக்காஞ்சி சாமியார்( எ) வியோமா முனிவர்
வில்லியனூர்
கணுவாய் பேட்டை மல்லிகா தியேட்டர் வீதி கடைசியில் சாமியார் தோப்பு
இருக்கிறது.இந்த தோப்பினுள் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
சுல்தான் பேட்டை
ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்
சுல்தான்பேட்டை திருப்பத்தில் (பைபாஸ் ரோடு அருகில்) மூலக்கடையில் பிருந்தாவன ஜீவபீடம் இருக்கிறது.
நல்லாத்தூர்
சிவப்பிரகாச சாமிகள்
வில்லியனூர்
ஏம்பலம் நல்லாத்தூர் சிவஞான பாலைய சாமிகள் மடத்தில் அடக்கம்
செய்யப்பட்டுள்ளார்.இங்கு இவரது ஜீவசமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது.
தென்னம்பாக்கம்
அழகர்சாமிகள் & சாம்பசிவசாமிகள்
வில்லியனூர்
ஏம்பலம் அருகில் தென்னம்பாக்கம் இருக்கிறது.தோப்பிற்குள் அழகுமுத்து
அய்யனார் கோவில் இருக்கிறது.இந்த அய்யனார் பீடத்திற்குப் பின்னால் இந்த
ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன.
வளவனூர்
ஸ்ரீமுத்தையாதேசிகன் சுவாமிகள்
வளவனூர்
வன்னி மடாலயத் தெருவிலுள்ள மடாலயத்தில் ஜீவசமாதி தரைமட்டத்திற்குக் கீழே
பாதாளத்தில் அமைந்திருக்கிறது.இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது.வருடாந்திர குருபூஜை விழா ஆடிமாதம் வரும் மகம்
நட்சத்திரம்!!!
சத்சொரூபானந்த சுவாமி
வளவனூர்
முதல் பேருந்து நிறுத்தத்தில் சாலையின் தென்புறம் சொரூபானந்த சாமி ஐயப்பன்
மடம் இருக்கிறாது.இந்த மடத்தில் வலப்புறம் கிழக்குப் பார்த்த சிறிய
கருவறையே இவரது ஜீவசமாதி பீடம் ஆகும்.இங்கு கருங்கல்லால் வடிக்கப்பட்ட
திருவடிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.தை மாதம் வரும் உத்திரட்டாதி
வருடாந்திர குருபூஜை நாள்!!!
ஸ்ரீசண்முக சுவாமிகள்
வளவனூர் சத்திரம் ஜீவசமாதி!
ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிகள்
வளவனூர் கிழக்கு பாண்டி ரோட்டில் இருக்கிறது.
பொம்மபுரம்
ஸ்ரீசிவஞான பாலைய சுவாமிகள்
பாண்டி
வடக்கே கிழக்கு கடற்கரை சாலையில் 10 கி.மீ.தூரத்தில் பொம்மபுரம் என்னும்
பொம்மையார்புரம் சிற்றூர் இருக்கிறது. பொம்மபுர ஆதீனத் திருமடம் முருகன்
சன்னதியில் திரு உருவத்திற்கு முன்னதாக உள்ள சுரங்கப்பாதையில் ஜீவ சமாதி
இருக்கிறது.இங்கு வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திர நாளில் வருடாந்திர
குருபூஜை விழா!!
ஓம்சிவசிவஓம்
பின்குறிப்பு: படத்தில்
காணப்படும் இடம் விஜயாபதி ஆகும்.இங்கிருக்கும் பிரம்மரிஷி விஸ்வாமித்ர
மகரிஷி அவர்களின் கோவிலில் திரு.சிவமாரியப்பன் அவர்கள் தியானித்தபோது
எடுத்தபடம்.இந்த படத்தை வைத்தும் ஓம்சிவசிவஓம் தினமும் ஜபிக்கலாம்.
கலியுகத்தில்
வாழ்ந்து வரும் நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தீய குணம் இருக்கத்தான்
செய்கிறது;பொறாமை,கடும் கோபம்,முன் கோபம், எப்போ பார்த்தாலும் குறை
சொல்லிக் கொண்டே இருப்பது, தன்னைப் பற்றி ரொம்ப உயர்வாகவும் அதே சமயம்
பிறரை மிக இழிவாகவும் நினைப்பதும் & பேசுவதும்; ஒற்றுமையாக இருக்கும்
நட்பினைப் பிரிப்பது;ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தம்பதியை பிரிப்பது(இதை
அந்த தம்பதியரின் பெற்றோரே செய்வதுதான் கொடுமை); நேர்மையாகவும்,கடினமாகவும்
உழைக்கும் சுயதொழில் புரிவோரை குடி மற்றும் விபச்சாரப் பழக்கத்துக்கு
அடிமையாக்குவது(இந்த ஒரு கெட்டப்பழக்கத்தால் தமிழ்நாட்டில் எத்தனையோ
நிறுவனங்கள் மூடப்பட்டுவருகின்றன); நேர்மையாக வாழ்ந்து வருபவர்களில்
பெரும்பாலானவர்களுக்கு நயவஞ்சகத்தை எதிர்கொள்ளும் திறன் இருப்பதில்லை;எனவே,
நேர்மையான குடும்பஸ்தர்களுக்கு கடன் கொடுத்து,அவர்களின் மாதாந்திர வட்டியை
வாங்காமல் இருந்து, சில வருடங்களுக்குப் பிறகு அவர்களின்
வீட்டை/சொத்துக்களை/தொழிலை/சேமிப்பை மிரட்டி எழுதி வாங்குவது;
இது
மாதிரியான தீய குணங்கள் இருப்பவர்களிடம் சிக்கியிருப்பவர்கள் மற்றும் மீள
விரும்புவோர்,ஜீவசமாதி வழிப்பாட்டை இந்த சிவராத்திரியன்று
செய்தால்/ஆரம்பித்தால் சிக்கல்கள் அடியோடு விலகிவிடும் என்பது அனுபவ உண்மை
ஆகும்.
சென்னையின் சுற்றுப்புறம் :
புழல்
கண்ணப்ப சாமி
புழல்
சிறைச்சாலையை அடுத்து காவாங்கரையில் கண்ணப்பசாமிகள் ஆசிரமம்;ஜீவசமாதி மேடை
மீது சாமிகள் அமர்ந்த கோலத்துடன் காட்சியளிக்கிறார்.இவருக்கு அருகில்
இவரது சீடர் கோவிந்த சாமியின் ஜீவசமாதி.
காரனோடை
மல்லையா சாமிகள்
காரனோடை
தாண்ட குசஸ்தல ஆற்றுப்பாலத்தின் கீழ் வடகரையில் சமாதிகோவில்
அமைந்திருக்கிறது.இங்கு சாமிகளின் சிலை கருங்கல்லால் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது.
அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்
காரனோடை
கோபிகிருஷ்ணா தியேட்டர் எதிரில் ஆத்தூர் சாலையில் இவரது சமாதி கோவில்
இருக்கிறது.பிரதி ஆவணி மாதம் வரும் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அலமாதி
மார்க்கண்டேய மகரிஷி
அலமாதீஸ்வரர் கோவிலுக்குள் சமாதி அமைந்திருக்கிறது.
கோவணச்சாமி
அலமாதீஸ்வரர் கோவில் அருகில் சமாதி இருக்கிறது.
பூதூர்
ஷா இன்ஷா பாபா
செங்குன்றம்
வடக்கே சோழவரம் டூ ஓரக்காடு ரோட்டில் 6 கி.மீ.பூதூர் கிராமம்
இருக்கிறது.இந்த கிராமத்தின் மேற்குப்பகுதியில் தர்கா உள்ளது.
பஞ்சேஷ்டி
புலேந்திரர்(சித்தர்களின் தலைவர் அகத்தியரின் சீடர்)
ரெட்
ஹில்ஸ் டூ பொன்னேரி நெடுஞ்சாலையில் ஜனப்பன் சத்திரம் கூட்டுரோடு தாண்டி
பஞ்சேஷ்டி திருத்தலத்திலுள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தினுள் ஜீவசமாதி
உள்ளது.இங்கு இருக்கும் இஷ்டலிங்கேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம்
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அம்பத்தூர்
ஐயா சூரியநாத கருவூரார்
பதினெண்
சித்தர் மடம்,13,குமாரசுவாமி தெரு,வரதராசபுரம்,அம்பத்தூர்.பிரதி அக்டோபர்
10 ஆம் தேதி வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
வடதிருமுல்லைவாயில்
அன்னை நீலம்மையார்
37/1
வடக்கு மாடவீதி மாசிலாமணி ஈஸ்வரன் கோவில் அருகில் ஜீவசமாதி
இருக்கிறது.பிரதி கார்த்திகை மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று
வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
மாசிலாமணி சுவாமிகள்
சோளம்பேடு தாமரைக்குளம் ஆஞ்சநேயர் கோவிலில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
பூந்தமல்லி
கர்லாக்கட்டை சித்தர்
வைத்தீஸ்வரன் கோவிலில் சிவன் சந்நதிக்கு வலப்புறம் தூணில் உள்ளார்.
பைரவ சித்தர்
பஸ்நிலையம் எதிரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.
கருடகோடி சித்தர்
பூந்தமல்லி
தண்டரை சாலையில் அமைந்துள்ள சித்தர்காட்டிலிருந்து 1 கி.மீ.தூரத்தில்
சுந்தரவரதபெருமாள் கோவில் தெப்பக்குள இடப்பாகத்தில் ஜீவசமாதி கோவில்
இருக்கிறது.
ஸ்ரீபெரும்புதூர்
அருள்வெளி சித்தர்
பூதேரிபண்டை
கிராமம்= வி.ஜி.பி.ராமானுஜ கிராமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.உயரமான சமாதி
மேடை.சுவாமிகளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
வெள்ளறை கிராமம்
ராஜராஜ பாபா சித்தர்
கொளத்தூர் சமீபம் வெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ளது.
மாங்காடு
சர்வசர்ப்ப சித்தர்
மாங்காடு டூ போரூர் சாலையில் பேரம்புத்தூர் அருகில் கோவிந்தராஜா நகரில் ஸ்ரீசிவசித்தர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.
புதுப்பட்டிணம்(ஈ.சி.ஆர்)
மாயவரம் சித்தர்சாமி & மாதாஜி சித்தர்
ஈ.சி.ஆர்.சாலை
புதுப்பட்டிணம் அருகே மாயவரம் சித்தர்சாமி மற்றும் 18 சித்தர்
திருவுருவங்கள் இருக்கின்றன.இருவருக்கும் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.
கோவளம்
ஆளவந்தார் சாமி
கோவளம் டூ நெமிலி வி.ஜி.பி.தாண்டி பீகாவரம் அருகில் இருக்கும் நெமிலியில் இவரது ஜீவசமாதி இருக்கின்றன.
திருக்கழுகுன்றம்
குழந்தை வேலாயுத சித்தர்
செங்கல்பட்டிலிருந்து
வடக்கே 12 கி.மீ.தூரத்திலுள்ள திருக்கச்சூரில் சிறிய மலையில்
மருந்தீஸ்வரர் கோவில் அருகே ஜீவசமாதிக் கோவில் அமைந்திருக்கிறது.
அப்பூர்=பதஞ்சலி சுவாமி
திருக்கச்சூர்
டூ ஓரகடம் இடையே அமைந்துள்ள அப்பூர் பஸ்நிலையம் அருகில் கருமாரியம்மன்
புதுக்கோவில் அகஸ்தீஸ்வரர் ஆஸ்ரமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.
திருப்போரூர்
சிதம்பரச்சாமி
திருப்போரூரிலிருந்து
2 கி.மீ.கண்ணகப்பட்டு உள்ளது.இங்கே சிதம்பரசாமிகள் மடாலயம் நடுப்பகுதியில்
ஜீவசமாதியின் கருவறையில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.பிரதி
வைகாசி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
செம்பாக்கம்
இரட்டை சித்தர்கள்
செங்கல்பட்டு
டூ கூடுவாஞ்சேரி சாலையில் செம்பாக்கம் ஸ்ரீபொன்னம்பல சாமிகள் மற்றும்
ஸ்ரீதிருமேனிலிங்க சாமிகள் ஆகியோரது ஜீவசமாதிகள் உள்ளன.
கூடுவாஞ்சேரி
மலையாள சாமி
கூடுவாஞ்சேரி
நந்திவரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில்பின்புறம் ஜீவசமாதி
இருக்கிறது.அருகில் இருக்கும் வயல்வெளியில் தியாகராய சாமி ஜீவசமாதி
இருக்கிறது.
அச்சரப்பாக்கம்
முத்துசாமி சித்தர்
அச்சிறுப்பாக்கம்
டூ கயப்பாக்கம் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் நடுப்பழனி முருகன் கோவில் உள்ள
குன்று இருக்கிறது.இந்த முருகன் கோவில் வெளியே சன்னதிக்கு வடபுறம்
முத்துச்சாமி சமாதி மண்டபம் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
திருத்தணி
சுரைக்காய் சித்தர்
சென்னை
டூ ஊத்துக்கோட்டை சாலையில் புத்தூருக்கு 5 கி.மீ.தூரத்தில் உள்ள
நாராயணவனம் என்னும் இடத்தில் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலுக்கு ஈசானிய
திசையில் ஜீவசமாதிகோவில் இருக்கிறது.இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது.
வெற்றிலை தடுக்கு
கங்காதர சுவாமி
புத்தூர்
நாராயண வனம் செல்லும் பாதையில் 7 கி.மீ.தூரத்தில் இருக்கும் கிராமம்
வெற்றிலை தடுக்கு=ஒட்டப்பாளையம் என்னும் ஊரில் ஜீவசமாதி இருக்கிறது.
அரக்கோணம்=அருளானந்தர்
அரக்கோணத்திலிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காவனூர் நரசிங்கபுரத்தில் ஜீவசமாதி இருக்கிறது.
நாகவேடு
அமலானந்தர் & விமலானந்தர்
அரக்கோணத்திலிருந்து
10 கி.மீ.தூரத்திலுள்ள நாகவேடு கிராமத்தில் அமலானந்தர் மடத்தில் இவர்களின்
ஜீவசமாதிகள் இருக்கின்றன.(இவர்கள் இருவரும் அருளானந்தரின் சீடர்கள்!!!)
காஞ்சிபுரம்
ஸ்ரீமஹாபெரியவர்
காஞ்சிபுரம்
சங்கர மடத்தின் உட்பகுதியில் ஸ்ரீமஹா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர
சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானம் அதி சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.
கச்சியப்ப முனிவர்
பிள்ளையார்பாளையம்
டூ புதுப்பாளையம் தெருவில் திருவாடுதுறை ஆதீனக் கிளை மடத்தில் ஜீவசமாதி
அமைந்திருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா சித்திரை மாதம் வரும் புனர்பூச
நட்சத்திர நாளில் நடைபெற்றுவருகிறது.
காளாங்கிநாதர்
ஏகாம்பர நாதர் கோவில் தேவஸ்தான அலுவலகத்தின் பின்புறம் உள்ள இஷ்ட சித்தீஸ்வரர் சன்னதியில் இவரது ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
காஞ்சி ஸ்ரீராமன் சாமி(சிவசாமி)
காஞ்சிபுரம்
மேற்குப்புறம் உள்ள மயான பூமியின் தொடக்கத்தில் சமாதி
கோவிலிருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.(மயான
பூமியை ஒட்டியோ,மயானபூமியுடன் சேர்த்தோ இருக்கும் ஜீவசமாதிகளுக்கு அளவற்ற
சக்தி உண்டு.உதாரணம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவகாசி ரோட்டில் இருக்கும்
மூவர் சமாதி!!!)
விசுவநாத சுவாமி
சின்ன
காஞ்சிபுரம் புண்ணியகோடீஸ்வரர் கோவிலுக்கு அடுத்த பண்ணையின் கன்னியம்மன்
கோவில் தெருவில் ஜீவசமாதிக்கோவில் இருக்கிறது.இங்கு முருகன் சிலை பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது.
சற்குரு சிவசாமி(ஸ்ரீபோடா சாமிகள்)
ஒலிமுகமது
பேட்டைக்கு முன்பாக வெள்ளைக் குளக்கரை மயானபூமியின் தொடக்கத்தில் கங்கை
அம்மன் கோவில் தெருவில் ஜீவசமாதிக்கோவில் இருக்கிறது.
இங்கு வருடாந்திர குருபூஜை விழா சித்திரை மாதம் வரும் சதயம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.
தாண்டவராய சாமி
காஞ்சிபுரத்திலிருந்து 11 கி.மீ.தூரத்திலுள்ள கோவிந்தவாடியில் இவரது சமாதியும் சீடர்களின் சமாதிகளும் இருக்கின்றன.
காகபுஜண்டர்
காஞ்சிபுரம்
டூ வந்தவாசி நெடுஞ்சாலையில் மாங்கால் கூட்டுரோடு அருகில் சோதியம்பாக்கம்
பாவூரில் திருக்கோவில் அமைந்திருக்கிறது.எத்தனை யுகங்கள்
கழிந்தாலும்,எத்தனை பிரம்மாக்கள் அழிந்தாலும் நிரந்தரமாக இருக்கும் ஒரே
சித்தர் இவர் மட்டுமே!!
ஓம்சிவசிவஓம்
அனுபவ
ரீதியாகப்பார்த்தால், கோவிலுக்குச் சென்று நாம் ஒரு குறிப்பிட்ட பரிகாரம்
செய்தால்,அதற்கான பலன்கள் நமக்குக் கிடைக்க கொஞ்சம் காலம்
ஆகும்;ஆனால்,ஜீவசமாதிகள்,சித்தர்களின் பீடங்களுக்குச் சென்று முறையாக
வழிபட்டால்(முந்தைய பதிவில் வழிகாட்டியபடி) விரைவாக அதற்குரிய பலன்கள நம்மை
வந்து சேருகின்றன;(தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான பழமையான ஆலயங்கள்
அனைத்துமே சித்தர்களின் ஜீவசமாதிகளுக்கு மேல்தான் கட்டப்பட்டுள்ளன என்பது
ருத்ராட்சத்துறவி,ஆன்மீக ஆராய்ச்சியாளர்,சிவகடாட்சம் மிஸ்டிக் செல்வம் ஐயா
அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சி முடிவு ஆகும்)நீங்களும் ஒருமுறை டெஸ்ட் செய்து
பார்க்கலாமே? பார்த்துவிட்டு,உங்களின் அனுபவத்தை ஆன்மீகக்கடலுக்கு
எழுதலாமே? அதன் மூலமாக பல ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் பலனடையட்டுமே?
காரைக்கால் பகுதியில் இருக்கும் ஜீவசமாதிகள்:
ஆலத்தூர்
சித்தர்மலை பெருமாள் சுவாமி
காரைக்காலில்
இருந்து 7 கி.மீ.தூரத்திலுள்ள ஆலத்தூரில் ஜீவசமாதியாக இருக்கிறது.இங்கே
சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.இங்கு ஆவணி மாதம் வரும் மகம்
நட்சத்திரத்திலிருந்து 10 நாட்களுக்கு விழா நடைபெறும்.ஆவணி மாதம் வரும்
மூலம் நட்சத்திர நாளில் குருபூஜை விழா வருடந்தோறும் நடைபெற்றுவருகிறது.
காரைக்கால்
சற்குரு சீமான் சாமியார்
காரைக்கால் பேருந்து நிலையம் எதிரிலுள்ள மடத்தில் சமாதிபீடம் இருக்கிறது.இங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
நாகூர்
நாகூர் ஆண்டவர் தர்கா
நாகப்பட்டிணம்
அழுகண்ணி சித்தர்
நாகப்பட்டிணம்
நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் நீலாய தாட்சியம்மன் கோவிலுக்குள்
அழுகண்ணி சித்தரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
வடக்குப் பொய்கை நல்லூர்=கோரக்கர்
நாகப்பட்டிணத்தில்
இருக்கும் சுனாமிப்பாலம் கடந்து 6 கி.மீ.தூரத்தில் இருப்பது கோரக்கரின்
ஜீவசமாதி ஆகும்.தினமும் மதியம் அன்னதானமும்,முறையான,திட்டமிட்ட
பராமரிப்பும் உள்ள சித்தரின் ஜீவசமாதி ஆகும்.பலவிதமான தெய்வீக சிறப்புகள்
இங்கு உண்டு.ஒருமுறை போய் வந்தால்,கோரக்கரின் அற்புதத்தை உணருவீர்கள்.
மேலவாஞ்சூர்
ஸ்ரீரெங்கைய சுவாமிகள்
நாகூருக்கு வடக்கே 2 கி.மீ.தூரத்தில் மேலவாஞ்சூர் சுவாமிகளின் ஜீவசமாதி மடத்துக்குள் சமாதிக்கருவறையாக அமைந்திருக்கிறது.
திருமலை ராயன்பட்டினம்
புண்ணாக்கு சாமிகள்
காரைக்காலில்
இருந்து 6 கி.மீ.தூரத்தில் உள்ள திருமலைராயன்பட்டிணம் ஹைஸ்கூல் சாலையில்
சிவன் கோவில் உள்முகப்பில் புண்ணாக்கு சாமிகள் மடம் இருக்கிறது.இங்கு
கருவறையே ஜீவசமாதியாக இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதம்
வரும் உத்திரட்டாதி நட்சத்திரநாளில் நடைபெற்றுவருகிறது.
நவகண்டயோகி
திருமலைராயன்பட்டினத்தில்
வெங்கடேசப்பெருமாள் கோவில் அருகே எல்லையம்மன் கோவில் மேற்கு கோடியில்
குளம் அருகே சவுரியார் மடம் இருக்கிறது.அந்த மடத்தினுள் சுவாமிகளின்
ஜீவசமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா ஆனி மாதம் வரும் அவிட்டம்
நட்சத்திரநாளன்று நடைபெற்றுவருகிறது.(தூங்கும் போது மனிதனின் உடல் ஒன்பது
துண்டுகளாகப் பிரிந்து தூங்கும் யோகநிலைக்கு நவகண்டம் என்று பெயர்;ஏராளமான
தமிழ் ஆன்மீக வாதிகளுக்கு இந்த நவகண்டம் சர்வசாதாரணமாக
கைகூடியிருக்கிறது.நிச்சயமாக உங்கள் ஊரில் நவகண்டம் திறனைக் கொண்ட ஆன்மீக
முயற்சியாளர்கள் இருப்பார்கள்.தகவல் உதவி:மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின்
ஆன்மீக ஆராய்ச்சி)
அக்கரை வட்டம்
சித்தானந்த சாமிகள்
காரைக்கால்
டூ நாகூர் சாலையில் அக்கரை வட்டம் பிடாரிக்குளத்தில் சாலையைக் கடந்தால்
சமாதிக் கோவில் இருக்கிறது.ஆவணி மாதம் வரும் மூலம் நட்சத்திரத்தன்று
வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
புதுக்கோட்டை
ஜட்ஜ் சாமிகள்
புதுக்கோட்டையின்
கீழ7 ஆம் வீதியில் உள்ள புவனேஸ்வரி கோவில் வளாகத்திற்குள் ஜீவசமாதி கோவில்
அமைந்திருக்கிறது.பிரதி வைகாசி மாதம் வரும் அஸ்தம் நட்சத்திர நாளில்
வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
சாந்தானந்தா சுவாமி
புவனேஸ்வரி அம்மன் கோவிலில் அதிஷ்டானம்
உலகநாத சுவாமி
புதுக்கோட்டை
வடக்கு ராஜவீதி வடபுறம் சுவாமிகள் மடாலயம் பெயர் பொறித்த நுழைவு வாயில்
இருக்கிறது.உள்ளே மடமும் சமாதிகோவிலும் உள்ளன.வருடாந்திர குருபூஜை விழா
பங்குனி மாதம் வரும் உத்திராடம் நட்சத்திரநாளின் போது நடைபெற்றுவருகிறது.
தபசுமலை
தபசுமலை துறவிகள்
புதுக்கோட்டை
டூ மதுரை சாலையில் 14 கி.மீ.தூரத்தில் லேனா விலக்கு
இருக்கிறது.அங்கிருந்து தெற்கே 4 கி.மீ.தூரத்தில் தபசுமலை
அமைந்திருக்கிறது.தபசுமலையில் வடமேற்கே சப்தமுனிவர்கள் அடங்கிய குகைப்பாதை
இருக்கிறது.இங்கே சிலாவடிவங்கள் தனித்தனியே உள்ளன.
வடுகபட்டி
சுருளிச்சாமிகள்
புதுக்கோட்டை டூ திருச்சி சாலையில் கீரனூருக்கு அருகே வடுகப்பட்டியில் சுருளிச்சாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
செம்பூதி
சிவந்திலிங்கசாமி & ஏகம்மை
புதுக்கோட்டை
டூ குழிபிறை டூ பொன்னமராவதி வழித்தடத்தில் செம்பூதியில் சமாதி குருபீடம்
இருக்கிறது.தம்பதியர் இருவரும் ஒரே நேரத்தில் ஜீவசமாதி ஆனார்கள்.வருடாந்திர
குருபூஜை விழா மாசி மாதம் வரும் பவுர்ணமியன்று நடைபெற்றுவருகிறது.
பனையபட்டி
சாதுபுல்லானி சுவாமி
குழிபிறை
அருகே பனையப்பட்டியில் ஆயிரம் பிள்ளையார் கோவில் வளாகத்திற்குத் தெற்கே
அதிஷ்டானக் கோவில் அமைந்திருக்கிறது.சுவாமி திரு உருவம் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது.வைகாசி மாதம் வரும் சதய நட்சத்திர நாளில் வருடாந்திர
குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
தேனிமலை
ஸ்ரீபெருமானந்த சுவாமிகள்
பொன்னமராவதிக்கு
வடக்கே 10 கி.மீ.தூரத்தில் தேனிமலை இருக்கிறது.இங்கே முருகன் குன்றுக்குக்
கீழே அடிவாரத்தில் ஜீவசமாதி கோவில் அமைந்திருக்கிறது.
உலகம்பட்டி
சித்தர்பெருமான்
பொன்னமராவதியிலிருந்து
9 கி.மீ.தூரத்தில் உலகம்பட்டி ஞானியார் திருமடம் இருக்கிறது.இங்கே
இருக்கும் சேவுகான்ந்த சுவாமி ஜீவசமாதி பீடம் அமைந்திருக்கிறது.
அரிமழம்
கோடகநல்லூர் சுந்தரசாமி
புதுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ.தூரத்திலுள்ள அரிமழம் பேருந்து செல்லும் சாலையை ஒட்டி அதிஷ்டானக்கோவில் அமைந்திருக்கிறது.
சிவகெங்கை மற்றும் காரைக்குடி
கோட்டையூர்
எச்சில் பொறுக்கி ஆறுமுகசாமி
காரைக்குடியிலிருந்து
3 கி.மீ.தூரத்தில் கோட்டையூர் இருக்கிறது.இங்கு நகரத்தார் சிவன் கோவிலின்
கிழக்கே 2 கி.மீ.தொலைவு நகர விரிவாக்கப் பகுதியில் சமாதி கோவில்
அமைந்திருக்கிறது.
காரைக்குடி
சிவன்செயல் சித்தர்
காரைக்குடி பழைய பஸ் நிலையம் அருகில் சமாதிகோவில் இருக்கிறது.
கோவிலூர்
கோவிலூர் ஆண்டவர்(எ) முத்துராமலிங்க ஞான தேசிகர்
காரைக்குடி
அருகே மேற்கில் கோவிலூர் டூ கொற்றவாளிசூவரர் கோவிலருகே திரு மடத்தில்
மகாலிங்கப்பிரதிஷ்டையுடன் கோவிலூர் ஆண்டவரின் அதிஷ்டானக் கோவில்
இருக்கிறது.
ஸ்ரீதுறவு அருணாச்சல தேசிக சுவாமிகள்
மேற்படி
மடத்தில் கோவிலூர் ஆண்டவர் லிங்க மூர்த்தியாகவும்,துறவு அருணாச்சல சுவாமி
நந்தியாகவும் சன்னதி பலி பீடமாக கருணாந்திசாமி அதிஷ்டானம் உள்ளது.
சிங்கம்புணரி
வாத்தியார் சாமி (எ) முத்துவடுகேச சுவாமி
திருப்பத்தூரிலிருந்து
20 கி.மீ.தூரத்தில் சிங்கம்புணரி டூ பிரான்மலை செல்லும் பாதையில் ஆற்றின்
தென்கரையில் சித்தர் முத்துவடுகேசர் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.பவுர்ணமி
தோறும் அன்னதானமும்,சிறப்பு வழிபாடும் நடைபெற்றுவருகிறது.கருவறையில் சமாதி
மீது சித்தர் யோகநிலையில் இருக்கும்போது அதே நிலையில் சிலை செய்து தம்
அருளை ஏற்றிய சிலை பிரதிஷ்டை செய்திருக்கிறார்.
நாட்டரசன்கோட்டை
கம்பர்
சிவகெங்கையிலிருந்து
7 கி.மீ.தூரத்தில் நாட்டரசன் கோட்டை இருக்கிறது.இங்கிருக்கும் கருப்பசாமி
கோவில் அருகே கம்பர் பெருமான் சமாதி இருக்கிறது.
இடையமேலூர்
மாயாண்டி சாமிகள்
சிவகெங்கை
மேலூர் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் இடையமேலூர் பேருந்து நிறுத்தத்திற்கு
முன்னதாக சமாதிக்கோவில் அமைந்திருக்கிறாது.வருடாந்திர குருபூஜை விழா
மார்கழி மாதம் வரும் பூரம் மற்றும் உத்திரம் நட்சத்திரநாட்களில்
நடைபெற்றுவருகிறது.
திருப்பத்தூர்
வாலைச்சித்தர்(எ)வேலாயுத சாமிகள்
திருப்பத்தூர்
டூ சிவகெங்கை சாலையில் 4 கி.மீ.தூரத்தில் காட்டாம்பூர் தண்ணீர்ப்பந்தல்
என்னும் சாமியார் மடம் கிழக்கே உள்ள தோப்பினுள் வாலைச் சித்தர்பீடம்
அமைந்திருக்கிறது.
கீழப்பூங்குடி
மிளகாய்சாமி
திருப்பத்தூர்
டூ சிவகெங்கை வழியில் 25 கி.மீ.தூரத்தில் இருக்கிறது.ஒக்கூர் மேற்கே 4
கி.மீ.கீழப்பூங்குடியில் மிளகாய் சாமிகளின் சமாதிக்கோவில்
அமைந்திருக்கிறது.
மதுரையாண்டவர்(எ)பரஞ்சோதி சாமிகள்
கீழப்பூங்குடி
மிளகாய் சாமிகள் சமாதிக்கோவிலுக்குப் பின்புறம் உள்ள தெருவில்
மதுரையாண்டவர் என்னும் பரஞ்சோதி சுவாமிகளின் மடமும்,சமாதிக்கோவிலும்
அமைந்திருக்கிறது.
சிவகெங்கை
மவுனகுரு சாமி
மதுரைமுக்கு ரோடு அருகில் சமாதி இருக்கிறது.
ஒழுகமங்கலம்
ஆரிய சித்தர்
சிங்கம்புணரியிலிருந்து
16 கி.மீ.தூரத்தில் ஒழுகமங்கலம் இருக்கிறது.அங்கிருக்கும் திருமேனிநாதம்
திருக்கோவிலில் கன்னி மூலையில் ஆரிய சித்தர் ஜீவசமாதி நிலவறையில்
இருக்கிறது.அந்த நிலவறையின் மேல் சிவலிங்கத் திருமேனி நிறுவப்பட்டுள்ளது.
சொக்கலிங்கபுரம்
சிவகுருநாத சித்தர்
சிங்கம்புணரியிலிருந்து
1 கி.மீ.தூரத்தில் சோளீஸ்வரர் கோவில் குளக்கரையில் சிவகுருநாத சித்தர்
மற்றும் சீடர்கள் இருவரின் ஜீவசமாதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மானாமதுரை
சதாசிவ பிரமேந்திரர்
நெரூரில்
சமாதி ஆன அதே நேரத்தில் மானாமதுரை சோமநாதர் ஜோதியாக காட்சி தந்த இடத்தில்
பிரகாரத்தில் சந்நிதி உள்ளது.ஆண்டு குருபூஜை விழா சித்திரை மாதம் வரும்
சுத்த தசமியில் !!!
சிவப்பிரகாசம் சித்தர்சாமி மற்றும் வேலாயுதசாமி
மானாமதுரையில் இருவரது சமாதிகளும் இருக்கின்றன.
முனீஸ்வரர் சித்தர்
வேதியனேந்தல் விலக்கு அருகில் பேரில்லா மரம் உள்ள இடத்தில் ஜீவசமாதி இருக்கிறது.
இந்த
முகவரிகளை நமக்கு அருளிய ருத்ராட்சத்துறவி,ஆன்மீக
ஆராய்ச்சியாளர்,சிவகடாட்சம் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆயுட்கால
சீடரும்,எனது ஆன்மீக குருவுமாகிய புளியங்குடி சிவமாரியப்பன் அவர்களுக்கு
கூகுள் நன்றிகள்!!!
ஓம்சிவசிவஓம்
இவ்வ்ளவு அருமயான திரட்டை ஒருசேர கிடைக்க கொடுத்த உங்களுக்கும் சேகரித்த அவருக்கும் அனேக நமஸ்காரங்கள் .
பதிலளிநீக்குஇவ்வ்ளவு அருமயான திரட்டை ஒருசேர கிடைக்க கொடுத்த உங்களுக்கும் சேகரித்த அவருக்கும் அனேக நமஸ்காரங்கள் .
பதிலளிநீக்கு