புதன், 26 பிப்ரவரி, 2014

கோவில் தரிசனம்

திருகோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஓன்று.திருப்பத்தூரில் இருந்து 8 கி.மீ தொலைவிலும் சிவகங்கையில் இருந்து 25 கி.மீ வடக்கும் ,காரைக்குடியில் இருந்து 25 கி.மீ மேற்கு திசையிலும் உள்ளது திருகோஷ்டியூர் என்ற திருத்தலம். திருகோஷ்டியூர் நம்பி பிறந்த ஊர். ராமானுஜருக்கு நம்பி திருமந்திரம் உபதேசித்த ஊர்.திருப்பத்தூர் சிவகங்கை சாலையில் இந்த திருகோயில் உள்ளது.மாசி மாதம் மகம் நட்சித்திர கூடி வரும் தினத்தில் தெப்ப உற்சவம் நடைப்பெறும்.தெப்பத்தில் மிதக்கும் பெருமாளை சேவித்து சங்கல்பம் செய்து விளக்கு எடுத்தால் நினைத்த காரியம் உடனே கை கூடும். காரிய சித்தி ஆன பிறகு மீண்டும் அடுத்த மாசி மகம் தெப்ப திருவிழா நேரத்தில் வந்து விளக்கு தெப்பத்தில் மிதக்க விட வேண்டும்.முதல் முறை விளக்கு எடுப்பவர் காரியசித்தி ஆனவர்கள் விடும் விளக்கை எடுத்து சங்கல்பம் செய்ய வேண்டும்.தெப்ப திருவிழா சமயத்தில் நாடெங்கும் இருந்து வரும் மக்கள் வெள்ளம் கட்டுகடங்காமல் இருக்கும்.இந்த திருகோவில் 3 நிலைகளில் உள்ளது. கீழ் தளத்தில் சிவலிங்கம் உள்ளது.அதன் மேல் 3 நிலைகள் உள்ளது.முதல் நிலையில் பெருமாள் சவுமிய நாராயண பெருமாள் சயன கோலத்தில் உள்ளார்.இரண்டாம் நிலையில் பெருமாள் நின்ற கோலத்தில் உள்ளார்.மூன்றாவது நிலையில் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.மூன்றாவது தளத்தில் ஒரு சிறு இடைவெளி உள்ளது.அங்கிருந்து தான் ராமானுஜர் திருமந்திரத்தை உலகிற்கு தெரிவித்தார் என்று கூறப்படுகிறது. ராமானுஜருக்கு திருமந்திரம் உபதேசிக்க நம்பி 17 முறை மறுக்கிறார்.18 வது முறை ஒத்துக்கொண்டு உபதேசிக்கிறார்.ஆனால் ராமனுஜரிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு,அதாவது அவர் திருமந்திரத்தை வேறு எவருக்கும் சொல்லக்கூடாது என்று வாக்குறிதி.தவறினால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்று நம்பி கூறுகிறார்.ஆனால் ராமானுஜர் சத்தியத்தை மீறுகிறார்.தனக்கு நரகம் கிடைத்தாலும் பலருக்கு மோட்சம் கிடைக்கும் என்று நம்பிக்கு பதில் உரைக்கிறார்.நம்பி உடனே ராமானுஜரை எம்பெருமானார் என்று அழைக்கிறார்.இங்கு எம்பெருமனாருக்கும் சன்னதி உண்டு.

கரூரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வெண்ணைமலை பாலசுப்ரமணிய ஸ்வாமி திருகோயில்.கரூர் திண்டுக்கல் புறவழி சாலையில்,இருந்து இந்த கோவிலுக்கு எளிதாக செல்லலாம்..ஒரு சிறு குன்றின் மேல் இந்த ஆலயம் அமைந்துள்ளது.படிகள் அதிகம் இல்லாததால் மிகவும் எளிதாக மலை ஏறி முருகனை தரிசித்து வரலாம்.ஸ்கந்த கவசத்தில் இந்த திருத்தலத்தை குறித்து "வெண்ணைமலை முருகா மெயவீட்டை தந்திடுவீர்" என்ற வரிகள் இடம் பெறுகிறது.காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாக்ஷி சந்நிதிகளும் இந்த கோவிலில் உள்ளது.தை பூசம் மற்றும் ஆடி கிருத்திகை இந்த கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திண்டுகல்லில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் சுமார் 200 வருடங்கள் பழமையானது.சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் சதுர வடிவில் இந்த கோவில் அமைக்க பட்டுள்ளது.திண்டுகல் கோட்டை (fort) மலை அடிவாரத்தில் கோவில் அமைந்துள்ளதால் கோட்டை மாரியம்மன் என்று பெயர்.இந்த கோவிலில் உள்ள அம்மன் சிலை திப்பு சுல்தானின் படை வீரர்களால் பிரதிஷ்டை செய்ய பட்டது.தெற்கு புறம் வெற்றி விநாயகர் சன்னதியும் வடக்கு புறம் முருகன் சந்நிதியும் இந்த கோவிலில் உள்ளது.அம்மன் சந்நிதிக்கு முன் உள்ள மண்டபத்தில் ஸிம்ஹ வாகனம் உள்ளது.மூல சன்னதியில் அம்மன் சற்று தாழ்வாகவே உள்ளது.தினமும் மாலை 5 மணி முதல் 9 மணி வரை அம்மனக்கு தங்க கவசம் சார்த்தப்படுகிறது.



சென்னை பெங்களூரு தேசீய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ளது சேண்பாக்கம் செல்வா விநாயகர் ஆலயம்.மிகவும் பழமை வாய்ந்த சுயம்பு ஆலயம். ஆரம்ப காலத்தில் ஸ்வயம்பாக்கம் என்பது இந்த தலத்தின் பெயராக இருந்திருக்கிறது.காலபோக்கில் அது மருவி சேண்பாக்கம் என்றாகி விட்டது.சுயம்புவாக செல்வா விநாயகர் இங்கு எழுந்தருளி இருப்பதால் வந்த பெயர் இது.ஆதி சங்கரர் ஒரு முறை விரிஞ்சபுரம் மர்கபன்தீஸ்வரர் ஆலயத்திற்கு வந்திருந்த போது அவரது ஞான திருஷ்ட்யில் இங்கு ஒரு சுயம்பு ஆலயம் இருப்பது தெரிந்திருக்கிறது.இந்த தகவலை காஞ்சி பெரியவர் தனது 'தெயவத்தின் குரல்' நூலில் தெரிவித்துள்ளார்.இந்த கோவிலில் செலவ விநாயாகரை சுற்றி பத்து சுயம்பு விநாயகர்கள் லிங்க வடிவத்திலும் ஓம் வடிவத்திலும் உள்ளது. முன்னொரு காலத்தில் இந்த சுயம்பு விநாயகர்கள் மண்ணிற்குள் புதைந்து கிடந்ததாக கூறப்படுகிறது.சரபோஜி மன்னர் காலத்தில் இருந்த மந்திரி துகோஜி ஒரு முறை இந்த வழியாக தனது ரத்தில் போய் கொண்டிருந்த போது அச்சு முறிந்து ரதம் இங்கு நின்று விட்டது .ரதம் நின்ற இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டிருக்கிறது. தனது பயணம் தடைபட்டதில் வருத்தப்பட்ட துகோஜி விநாயகரிடம் வேண்டுகிறார்.அவரது கனவில் வந்த விநாயகர்,தான் இந்த இடத்தில் புதையுண்டு இருப்பதாகவும்,அங்கு ஒரு ஆலயம் எழுப்பவும் பணிக்கிறார்.இன்றும் செல்வவிநாயகர் தலையில் ரதத்தின் சக்கர தடம் இருப்பதாக கூறப்படுகிறது.செல்வா விநாயகருக்கு எதிர்புறம் சனீஸ்வரன் சந்நிதி உள்ளது.சந்நிதிக்கு மேற்கூரை இல்லாதது மற்றுமொரு சிறப்பு.75 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட வெள்ளி கவசம் விநாயகருக்கு தற்பொழுது பொருந்தவில்லை.விநாயகர் சிலை வளர்ந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

காளஹஸ்தி திருப்பதிக்கு அருகில் உள்ள ஒரு பழமை வாய்ந்த சிவ ஸ்தலம். இது ஒரு நவகிரஹ ஸ்தலமும் கூட .ராகுவும் கேதுவும் சிவனை இங்கு வழிபட்டதாக கூறப்படுகிறது.மற்றொரு சிறப்பு பஞ்சபூத ஸ்தலங்களில் காளஹஸ்தி ஒரு வாயு ஸ்தலம். சொர்ணமுகி நதி கரையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.இங்கு சர்ப்ப தோஷ நிவாரண பூசை மிகவும் பிரசித்தம்.சுவாமிக்கு பெயர் காளத்திநாதர் அல்லது காளத்தியப்பர். அம்மன் பெயர் ஞானப்ரசுனாம்பிகை.இந்த ஆலயம் தக்ஷின கைலாசம் என்றும் அறியப்படுகிறது.இந்த ஆலயத்தில் ஒரு பாதாள விநாயகரும் உள்ளது.திருப்பதியில் இருந்து முப்பது கி.மீ தொலைவில் உள்ளது.சென்னையில் இருந்தும் தடா வழியாக காளஹஸ்தி செல்லலாம்.சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம்.

சென்னை பெங்களூரு தேசீய நெடுஞ்சாலையில் காவேரிபாக்கம் என்ற ஊர் உள்ளது.நெடுஞ்சாலயிலில் இருந்து சுமார் ஐந்து. கி.மீ. ஊருக்குள் செல்லவேண்டும். இந்த ஊருக்கு திருப்பாற்கடல் என்று பெயர்.இங்கு இரண்டு கோவில்கள் மிக அருகில் உள்ளது.பிரம்மா,சிவன்,விஷ்ணு மூவரும் இங்கு ஒரு முனிவருக்கு காட்சி அளித்ததாக கூறப்படுகிறது.முதல் கோவில் பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவில்.நின்ற கோலத்தில் இருக்கும் பெருமாள் அருகில் சிவலிங்கமும் உள்ளது.பக்கத்தில் இருக்கும் கோவிலில் பெருமாள் சயன கோலத்தில் உள்ளார்.சயன கோலத்தில் உள்ள பெருமாளின் தேகம் அத்திமரத்தினால் ஆனது.ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் பெருமாள் பார்க்க மிகவும் ரம்யமாக உள்ளது.இங்கு ரங்கவல்லி தாயார் சன்னதியும் உள்ளது.மிகவும் புராதனமான இந்த க்ஷேத்ரம் தற்பொழுது புதுபிக்கப்பட்டு வரப்படுகிறது.

திண்டிவனம் பாண்டி சாலையில் திருச்சிற்றம்பலம் விலக்கு என்ற இடத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. இந்த இடத்திற்கு பெயர் பஞ்சவடி. திண்டிவனம் பாண்டி சாலையில் 29 வது கி.மீ லும் ,பாண்டியில் இருந்து திண்டிவனம் சாலையில் 9 வது கி.மீ லும் உள்ளது. பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை 36 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது. நடுவில் ஆஞ்சநேயர் முகமும் சுற்றிலும் கருடர், ஹயக்ரீவர், நரசிம்ஹர், வராஹர் முகங்கள் உள்ளது. ஆஞ்சநேயரின் உக்கிரத்தை குறைப்பதற்கும் , ஆஞ்சநேயரின் அநுகிரஹத்தை பெறவும் உளுந்து வடை மாலை சார்த்துகிறார்கள். அஞ்சநேய தரிசனத்தால் சனி தோஷ நிவர்த்தியும் கிடைக்கிறது. காலை ஐந்து மணியில் இருந்து இரவு ஒன்பது மணி வரை இந்த ஆலயம் திறந்த்திருக்கும்.















கோடி லிங்கேஸ்வரர் ஆலயம் பெங்களுருவில் இருந்து நூறு கி.மீ.தொலைவில் உள்ளது.கோலார் அருகே BEML நகரில் கம்மசந்த்ரா என்ற இடத்தில் உள்ளது.ஒரு கோடி சிவ லிங்கங்கள் பிரதிஷ்டை செய்வது தான் கோவில் நிர்வாகத்தினரின் இலக்கு. ஆனால் தற்பொழுது சுமார் எழுபது லக்ஷம் சிவ லிங்கங்கள் இருக்கிறது. பக்தர்கள் மேலும் மேலும் புதிதாக சிவ லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து கொண்டிருக்கிறார்கள்.சிறிது,நடுத்தரம் மற்றும் பெரிய வடிவங்களில் பல தரப்பட்ட சிவ லிங்கங்களை இங்கு காணலாம். இங்குள்ள 108 அடி உயர சிவ லிங்கம் தான் உலகத்திலேயே பெரியது என்று சொல்லப்படுகிறது.அதே போல 40 அடி உயர நந்தி ஒன்றும் இங்கும் உள்ளது. தெலுங்கில் சிவனை குறித்து வந்த திரைப்படம் "ஷரீ மஞ்சுநாதர் " முழுவதும் இங்கும் தான் படமாக்க பட்டது.வேறு எங்கும் பார்க்க முடியாத ஓன்று என்ற வகையில் இந்த கோவில் சற்று வித்யாசமானது.கோடி லிங்கங்கள் தவிர பாண்டுரெங்கன்,காளிதேவி ,சந்தோஷி மாதா,அன்னபூர்ணேஸ்வரி சன்னதிகள் இந்த கோவிலில் உண்டு .



காவிரியின் இடது கரையோரம் உள்ள ஒரு கிராமம் தான் தலக்காடு . தெற்கு திசை நோக்கி ஓடும் காவிரி இந்த இடத்தில் நன்றாக வளைந்து கிழக்கு திசை நோக்கி ஓடுகிறது. அந்த கரையில் தான் இந்த கோவில் உள்ளது .தலக்காடு மைசூரில் இருந்து 45 கி .மீ தொலைவிலும் பெங்களுருவில் இருந்து 185 கி . மீ தொலைவிலும் உள்ளது .காற்றினால் உருவான மணல் குன்றுகள் (sand dunes) நிறைந்த இடம் . எங்கு பார்க்கினும் பரந்த மணல் பரப்புகள் .ஒரு காலத்தில் இங்கு 30 க்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று அவை எல்லாம் மணலுக்குள் புதைந்து விட்டது. 11 ஆம் நூற்றாண்டில் தமிழ் சோழ மன்னர்கள் இங்கு ஆட்சி செய்தார்கள் . 12 ஆம் நூற்றாண்டில் ஹோய்சால அரசர்களும் , அவர்களுக்கு பின் விஜயநகர சாம்ராஜ்யம் மற்றும் மைசூர் அரசர்களின் ஆட்சியின் கீழும் தலக்காடு இருந்ததாக வரலாறு. தலக்காடு குறித்து பல துணை கதைகுளும் உள்ளது . ஆனால் அந்த கதைகளுக்கு சரித்திர சான்றுகள் இல்லை .

இன்று இந்த மணல் பரப்புகளுக்கு மத்தயில் கம்பீரமாக நிற்பது தான் தலக்காடு வைதீஸ்வரன் கோவில் .வைதீஸ்வரன் சந்நிதி போக இங்கு அர்கேஸ்வரர் பாடலேஸ்வரர் ,மரலேஸ்வரர் மற்றும் மல்லிகார்ஜுனர் என்று 4 சிவா லிங்கங்களும் உள்ளது . இந்த 5 லிங்கங்களும் சிவனின் ஐந்து முகங்களை குறிப்பதாக ஐதீகம் .இதில் பாடலேஸ்வரர் காலையில் சிவப்பாகவும் ,மதியம் கருப்பாகவும் மாலையில் வெள்ளையாகவும் தெரிவதாக கூறப்படுகிறது .பஞ்சலிங்க தரிசனம் என்பது 12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் ஒரு திருவிழா . குக யோகமும் விசாக நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் கார்த்திகை மாதத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த திருவிழா கொண்டாடப்படும் . சமீபத்தில் 2006 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது . கர்நாடக மாநிலத்தில் இது ஒரு பெரும் திருவிழா . வேறு நேரங்களிலும் இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம் . மழைகாலம் இல்லாமலும் , காற்று அதிகம் வீசாத நேரத்திலும் சென்று தரிசித்து வரலாம் . பெரும்பாலான சமயங்களில் இன்றும் இங்குள்ள சில கோவில்கள் மணலுக்குள் புதைந்து போகிறது என்றும் கூறப்படுகிறது .

பஞ்சலிங்க தரிசன முறை ஓன்று வழக்கில் உள்ளதாக கூறப்படுகிறது . கோகர்ணதில் உள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு கோகர்நேஸ்வரர் மற்றும் சந்திகா தேவியை முதலில் தரிசிக்க வேண்டும் .அதற்க்கு பின் வைதீசவறரை தரிசிக்க வேண்டும் .பின்பு காவிரியின் வடக்கு ,கிழக்கு ,தெற்கு மற்றும் மேற்கு கரையில் நீராடிவிட்டு அர்கேஸ்வரர் ,பாடலேஸ்வரர் ,மரலேஸ்வரர் மற்றும் மல்லிகார்ஜுனர் தரிசித்து விட்டு மீண்டும் .வைதீஸ்வறரை தரிசிக்க வேண்டும்.நான்கு லிங்கங்களில் ஒவொன்றையும் தரிசித்து விட்டு மீண்டும் வைதீஸ்வறரை தரிசிக்க வேண்டும் .கடைசியாக தலகாட்டிலுள்ள கீர்த்தி நாராயனார் கோவில் தரிசனம் செய்து முடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது .இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவை ஆனந்தும் ஒரே நாளில் முடிக்க வேண்டும் என்பது தான் .இது சாத்தியப்படுமா என்று தெரியவில்லை .

நாங்கள் அப்படி செய்யவில்லை . காவிரி கரையில் கால் நனைத்து விட்டு தலக்காடு கோவில் மட்டும் சென்று வந்தோம் .பார்க்க வேண்டிய இடம் .மிகவும் புராதனமான சிவன் கோவில் .சுற்றிலும் உள்ள மணற்பரப்புகள் பார்ப்பதற்கு ரம்யமாக உள்ளது .மைசூரில் இருந்து டி .நரசிபுரா ,ஹெம்மிகே வழியாக தலக்காடு சென்றடையலாம் .தலக்காடில் சூரிய அஸ்தமனமும் பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது .மணல் பரப்பு சூழ்ந்த இடமாக இருப்பதால் தலக்காடு கோவில் மாலை வெகு சீக்கிரம் மூடி விடுவார்கள் .


தமிழகத்திலிருக்கும் பிள்ளையார்பட்டி போல இது ஒரு விநாயகர் ஸ்தலம். ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பெங்களூரில் இருந்து கோலார் வழியாக சித்தூர் சென்றடையலாம். சித்தூர், பெங்களூரில் இருந்து சுமார் 185 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த சாலை சுமாராக உள்ளது. ஆனால் சித்தூரில் இருந்து காணிப்பாக்கம் செல்லும் சாலை மோசமாக உள்ளது. சென்னையில் இருந்தும் திருப்தியில் இருந்தும் காணிபாக்கத்தை எளிதில் சாலை மார்கமாக வந்தடையலாம்.
ஒன்றாம் குலோத்துங்க சோழ அரசரால் 11 ம நூற்றாண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது . அதன் பின் விஜயநகர அரசரர்களால் இந்த ஆலயம் விரிவுபடுத்தப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
ஸ்தல புராணம்
இந்த கிராமத்தில் உடற்குறை உள்ள மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். ஊமை,செவிடு,குருடு என்று குறை உள்ள இந்த மூவரும் விவசாயம் செய்து பிழைத்த வந்தார்கள். விவசாயத்துக்கு அருகில் இருந்த ஒரு கிணறில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தர்ர்கள் .ஒரு நாள் கிணற்றில் தண்ணீர் வற்றி விடவும்
ஒரு நபர் கடப்பாரையை கொண்டு தோண்ட துடங்க ,கடப்பாரை எதோ ஒரு கல்லில் படுவது போல தெரிந்திருக்கிறது .பார்க்கையில் அங்கு ஒரு விநாயகர் சிலை இருந்திருக்கிறது . அந்த சிலையில் தலையில் இருந்து இரத்தம் வடிய ஆரம்பித்து இருக்கிறது . அந்த வினாடியே மூவருக்கும் உள்ள குறையும் நிவர்த்தியாகிறது.சற்று நேரத்தில் கிணத்து நீர் சிவப்பாகி விடுகிறது . கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து விநாயகர் சிலையை கிணற்றில் இருந்து முழுவதுமாக எடுக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் முயற்சி பலிக்கவில்லை. இன்றும் விநாயகர் நீர் சூழ் அந்த கிணற்றினுள்ளயே இருக்கிறார். முழுவதுமாக வெளிப்படாத நிலையிலையே காட்சி தருகிறார்.
இன்னொரு அதிசய நிகழ்வு ,இந்த விநாயகர் சிலை வளர்ந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு பக்தை விநாயகருக்கு கவசம் சார்தியிருக்கிறார். அந்த கவசம் தற்பொழுது சார்த்த முடியாத அளவிற்கு சிலை வளர்ந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.






திருமுருக கிருபானந்த வாரியார் அருளிய மீனக்ஷியந்தாதி

காப்பு நேரிசை வெண்பா
சேராத செல்வம் எல்லாம் சேர்க்கும் திருவனைய
ஆறாத இன்பம் அருள் புரியும் தீராத
பொய்த் திரளாம் துன்பனைத்தும் போக்கும் புகழ்கூடல்
சித்தி விநாயகனை சேர்.

சிவமயம் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் துணை

அணிசேர் மதுரையுறை அம்மை மீனாக்ஷி
பணிச்சேரும் சுந்தரனார்பன்னீ - தனியா
வினை சேரும் ஈனர் வினைக்கு மிடர் தீர்த்தாள்
உன்னை சேர்ந்தாருக் கேது குறை யோது .

ஒதும்தமிழ்ப்பாவால் உன்னடியை போற்றுகின்றேன்
தீதும் நலமும் நின் சேவடிக்கே - ஏதுமிலேன்
நண்ணார் புரியும் நலிவகற்றியாண்டருள் செய்
தண்ணீர் மீனாக்ஷி சரண் .

சரணடைந்தார் தம்மையிடர் சாராமல் காப்பாய்
கரணமெல்லாம் நின் வசமே கண்டாய் தருணமதில்
தீயே யனையார் செய் தீங்கதனைத தீர்த்தருள் செய்
தாயே மீனாக்ஷி நலந்தா .

தாவென்று மற்றோர் பால் சாரேன் நினைசார்ந்தேன்
ஒ வென்று நானழுதல் ஒண்ணுமோ - பாவென்றும்
கூடல் மதுரயிறை கூடு மீனாக்ஷியே
ஆடலர ககரசியால் .

ஆளாது நீயிருந்தால் ஆர்துணைவர் நாயேன் சொல்
கேளா திருப்பது நற்கேன்மையோ ? வாளா
இருத்தல் கருணைக்கிழுக்கன்றோ ? கூடல்
திருத்த மீனாக்ஷியே செப்பு .

செப்பும் குறைகளெல்லாம் தீரும் நினை கண்டால்
ஒப்புவமையில்லா உமயவளே ! பொய்புல்லர்
செய்யும் இடர்களைவாய் தேவி மீனாக்ஷியே !
எய்யும் வகை செய்யேல் இனி .

இனித்த மதுர மொழி எங்கள் மீனாக்ஷியே !
பனித்தசடை முடியோன் பங்கில் தனிதுறையும்
அம்மையே ! ஞானத்தின் ஆரணங்கே - ஈனர் செய்
வெம்மை தீர்த்தோர் சொள்விளம்பு .

விளம்பும் மறைபோற்றும் மீனாக்ஷியம்மயே !
உளம் புண்ணாய் நாயேன் உலைத்தேன் இளம்புதல்வன்
துன்பம் களைந்தருள்வாய் தூய சிற்சக்தியே !
இன்பவடிவாம் அன்னையே !

அன்ன்யெனவுன்ன அடைந்தேன் அறிவில்லார்
என்னயிடர் செய்கின்றார் என் செய்தேன்? முன்வினை
தீர்த்தாள் திருக்கூடல் தேவி மீனாக்ஷி கண்
பார்த்தாள் வந்தேன் நின்பதம் .

பதமலரை சேர்ந்தேன் பாவை மீனாக்ஷி
நிதமுனது தாளை நினைந்தேன் - இதமில்
கொடியார் புரியுமிடர் கோதகற்றி நின்தாள்
அடியேன் தலைமீதணி .

இவனடியால் என்றென்னை என்று கொண்டாள்வாய்
பவனடியார் போற்றும் பரையே - சிவனடியார்
தங்கள் துயர்களயும்தாயே தயாபரியே !
எங்கள் மீனாக்ஷயுமயே .

என்றும் உனைமறவேன் ஏங்கினேன் உய்வுநெரி
ஒன்றும் அறியேன் உயர் வெள்ளி - மன்றுடையாய்
ஈத்துவக்கும் இன்பே ! இடர்தீர்த்தார் வேதமெலாம்
ஏத்து மீனாக்ஷயுமயே .

அல்லல் அகற்றி நின் அம்புயத்தாள் தருவாய்
கல்லால் புரிகின்றார் கண்ணில்லார் - சொல்லும்
வசையும் பூனாகவுனை வந்தடைந்தேன் கூடல்
இசையு மீனாக்ஷயுமயே .

தீராயோ என் கவலை சேயேன் முன் தாயே நீ
வாராயோ என்னை மலர் கண்ணால் - பாராயோ
சீரார் சொக்கேசர் துணையே ! துணையில்லேன்
ஏரார் மீனாக்ஷயுமயே .

பொன்னும் பொருளும் நின் போதனையை பாதமெல்லாம்
உன்னுமடி யேன் துயரை ஓயத்தருளாய் - பண்ணும்
மின்னும்ச்சடை சொக்கர் மேவு மெய்ஞான ஒளி
எனும் மீனாக்ஷயுமயே .

தவள மலயுறயும்தாயே என் துன்பம்
இவள்வென சொல்லொணாதின்ப பவளமென
வாய்ந்த திருமேனி மணியை மணவாளனென
ஏய்ந்த மீனாக்ஷயுமயே.

கற்றார் புகழ்ங்கருனை கனியமுதே
வற்றாத மெய்ஞ்ஞான வாரிதியே - பொற்றாள்
வணங்கும் அடியேனை வாழ்விப்பாய் கூடல்
இணங்கும் மீனாக்ஷயுமயே.

இன்ப திருவுருவே ஏத்தும் அடியார்கள்
துன்பதுயர் துடைக்கும்தோகயே ! - அன்பர்க்கு
கண்ணும் கருதுமாம் கற்பக பூங்கொடியே !
எண்ணு மீனாக்ஷயுமயே.

அன்னையே ஆலவாய் ஆளும் அரசியே !
என்னையே வந்து இடர்களைவாய் - பொன்னை
அறம் செய்வார்க்கீயும் எம் அம்மையே ! வேதம்
இறைஞ்சு மீனாக்ஷயுமயே.

ஆழிதுரும்பாய் அலைந்தேன் அருளனயே
ஏழிசையின் இன்பே ! இடர்களைவாய் - ஆழியுறை
மாற்கு மறியாத மதுரையுறை சுந்தரரை
ஏற்கு மீனாக்ஷயுமயே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...