வெள்ளி, 26 ஏப்ரல், 2019

சந்திரனின் கிரக காரத்துவங்கள்:



 1) தாய், மாமியார், அழகு, அன்பான, அமைதியான,
Ø  உதாரணமாக:  ஐந்தில் சந்திரன் இருந்தால் அழகான, அமைதியான குல தெய்வம் இருக்கும்.
2) தாய்மை அடைந்த பெண்ணை தான் தாய் என்று கூறுவார்கள்
Ø  உதாரணம் 
Ø  ஒருவர் இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிக்கின்றார், இரண்டாம் திருமணத்தை குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவம். ஒன்பதாம் அதிபதி சந்திரன் சாரம் வாங்கிவிட்டால் இரண்டாவது மனைவி ஏற்கனவே தாய்மை அடைந்த பெண் குழந்தையோடு இருப்பாள்.
3) சந்திரன் எங்கு உள்ளாரோ அந்த உயிர் காரகத்துவம் அழகாக இருக்கும்.
Ø  ஏழில் சந்திரன் இருந்தால் மனைவி அழகாக இருப்பார்.
Ø  நான்கில் சந்திரன் இருந்தால் தாயார் அழகாக இருப்பார்.
Ø  ஒன்பதில் சந்திரன் இருந்தால் தந்தையின் அழகாக இருப்பார்
4) கூட்டங்களை குறிக்கும் கிரகம் சந்திரன், ஆனால் கூட்டம் மெதுவாக சேரும். இதோடு செவ்வாய் சம்பந்தப்பட்டால் கூட்டம் வேகமாக சேரும்.
Ø  ஏழில் சந்திரன் இருந்தால் திருமணத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும், குறிப்பாக மனைவிவழியில் கூட்டம் அதிகமாக இருக்கும். 
Ø  வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாக இருக்கும் ஒவ்வொருவராக சேருவார்கள்.

5)குழப்பமான மனநிலையை குறிக்கக்கூடிய கிரகம் சந்திரன்,
Ø  எதிலும் எளிதாக முடிவெடுக்க முடியாத நிலை.
6)நீர்த்தன்மை. 
Ø  ஒன்றை கரைக்கும் தன்மை கொண்டு காரகத்துவம் சந்திரனுக்கு உண்டு.
Ø  உதாரணமாக - ஒருவருக்கு கட்டி உள்ளது என்று கொண்டால் அந்த கட்டி சந்திரன் சம்பந்தப்பட்டால் காரையும். சனி சம்பந்தப்பட்டால் கரையாது, உறுதியாக இருக்கும்.
7) நீர் சூழ்ந்த இடங்களை குறிப்பது சந்திரன். 
Ø  ஜாதகத்தில் சந்திரன் 8ல் இருந்தால் நீர்நிலை சம்பந்தப்பட்ட இடங்களில் விபத்துக்கள் நடக்கும். 
Ø  மழை பொழியும் போது விபத்துக்கள் நடக்கும்.

8) சந்திரன் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாது, எதையும் முன் நின்று நடத்தாது. கூட்டத்தில் ஒருவராக கலந்து கொள்ளும் தன்மைகொண்டது.
(சூரியன் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய கிரகங்களையும் முன்னின்று நடத்தும்) 
9) இரவுப் பொழுதுகளை குறிக்கும் கிரகம் சந்திரன்.
Ø  6-ல் சந்திரன் இருந்தால் கடன், நோய் சார்ந்த பிரச்சினைகளை இரவு நேரங்களிலும், மாலை நேரங்களிலும் பேசக்கூடாது முடிவு சாதகமாக இருக்காது.
Ø  எட்டில் சந்திரன் இருந்தால் நீண்ட தூர இரவு நேர பயணங்கள் கூடாது, விபத்துகள் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
Ø  குரு, சுக்கிரன் ஆகியவர்கள் சந்திரன் சாரம் வாங்கி இருந்தால் ஜாதகருக்கு வருமானம் மாலை நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் வரும்.
10) பௌர்ணமியை குறிக்கும் கிரகம் சந்திரன்.
Ø  7ல் சந்திரன் இருந்தால் திருமணம் பௌர்ணமி நாளன்று நடத்த வேண்டும் அல்லது சந்திரன் நட்சத்திரம் சாரம் பெற்ற நாட்களில் நடத்த வேண்டும்.
Ø  நான்கில் சந்திரன் இருந்தால் வீடு, வாகனம் சேர்ந்த வேலைகளை பவுர்ணமி அல்லது சந்திரன் நட்சத்திர நாட்களில் செய்வது நலம் பயக்கும்
11) பிறரை அண்டி பிழைத்தல் 
Ø  உதவியாளர் வேலைகள் பயணத்தாரும் 
12) அரசு காரகத்துவம் பெற்ற கிரகம் சந்திரன்.
13) வர்ணங்களை குறிக்கும் கிரகம் சந்திரன் 



14) பழங்கள் 
Ø  ஆரஞ்சு, முலாம் பழம், வெள்ளரிக்காய், வாழை பழம், பூசணிக்காய் போன்றவைகள்.
15) சமையல் தொழிலைக் குறிக்கும் கிரகமும் சந்திரன் 
16) அவசரம்.
Ø  சந்திரன் ஜாதகத்தில் கெட்டு இருந்தால் அவசரப்பட்டு முடிவுகளை எடுத்து நழ்டபடுவார்கள் / கஷ்டப்படுவார்கள்.
17) கண்ணீர்
18) குணச்சித்திர நடிப்பு
19) ஓடி விளையாடும் விளையாட்டுகளுக்கு காரகத்துவம் பெற்றவர் சந்திரன்.
20) கப்பல் சார்ந்த தொழில்கள்.
21) மீன் பிடித்தல்
22) சளி, ஜலதோசம், காக்காய் வலிப்பு, வீசிங் பிரச்சினைகள் 
Ø  சந்திரன் பலமிழந்து 6, 8, 12ல் இருந்தால், திதி சூனியம், சனி சேர்க்கை போன்றவைகள் இருந்தால், இந்த நோய் தாக்கம் இவர்களுக்கு அதிகமாக இருக்கும். இவர்களுக்கு குளிர்ச்சி ஆகாது.
23) புத்தி தடுமாற்றம், புத்தி பேதலித்தல், மன நோய் போன்றவைகள் சந்திரன் காரகத்துவம் பெற்றவை.
24) ஞாபகசக்தி.
Ø  சந்திரன் பலம் பெற்றிருந்தால் நல்ல ஞாபகசக்தி இருக்கும்.
Ø  சந்திரன் பலம் குறைந்தால் அடிக்கடி மறந்து போதல் நினைவாற்றல் குறைவு.
25) வெளிநாடு பயணங்கள் சந்திரனை குறிக்கும்.
26) மக்கள் தொடர்பு (மீடியா)
27) செய்திகள்.
28) மனச்சலனம், தீயபழக்கங்கள்.
Ø  சந்திரன் பலம் பெற்று இருந்தால் மன உறுதியுடன் இருப்பார்கள்.
Ø  சந்திரன் பலமிழந்து இருந்தால் மனசலனம் இருக்கும், தீய பழக்கங்களுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.

29) நீரில் கண்டம்.
Ø  சந்திரன் சுயசாரம் பெற்றால் தாயாருக்கு நீரில் கண்டம்.
Ø  சூரியன் சந்திரன் சேர்க்கை தந்தைக்கு நீரில் கண்டம்.
Ø  செவ்வாய் சந்திரன் சேர்க்கை சகோதரனுக்கு நீரில் கண்டம்.
Ø  குரு சந்திரன் சேர்க்கை குழந்தைக்கு நீரில் கண்டம் 
Ø  சுக்கிரன் சந்திரன் சேர்க்கை அத்தைக்கும், மனைவிக்கும் நீரில் கண்டம் 
Ø  புதன் சந்திரன் சாரம் தாய்மாமனுக்கு நீரில் கண்டம்.
30) உயர்கல்வியில் வெற்றி (சந்திரன் உயர்கல்விக்கு காரகத்துவம் பெற்ற கிரகம்). 
Ø  குரு, சுக்கிரன், சந்திரனுக்கு சம்பந்தம் பெற்றால் உயர்கல்வியில் வெற்றி அடைவார்கள்.
Ø  சந்திரன் 9, 11 ஆம் பாவத்தை பார்த்தாலோ அல்லது இருந்தாலோ உயர்கல்வியில் வெற்றி.
Ø  9, 11ஆம் அதிபதிகள் சந்திரன் சேர்க்கை, பார்வை, சாரம் பெறுதல் உயர்கல்வியில் வெற்றியை கொடுக்கும்.
Ø  ஏழு கட்டத்துக்கு மேல் சந்திரன் இருந்தால் உயர்கல்வியில் வெற்றி
31) உணர்ச்சிவசப்படுதல்
Ø  சூரியன் சந்திரன் சம்பந்தம் தந்தை உணர்ச்சிவசப்படுவார்.
Ø  குரு சந்திரன் சம்பந்தம் ஜாதகர் உணர்ச்சிவசப்படுவார், உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது பேசி விட்டு பின்பு அதற்காக வருந்துவார்கள்.
32) மயக்கம்
33) ஒழுக்கக் குறைவு
34) பருத்தி
35) கள்ளக்காதல் (ஐந்தாமிடம் புதன் நல்ல காதல்)
36) தேய்மானம், குறைவு ஆகியவற்றை குறிக்கும் கிரகம் சந்திரன்.
Ø  நான்கில் சந்திரன் சொத்து தேய்மானம், தாய் வழி உறவில் தேய்மானம், தாய் வழி உறவில் இறந்தவர்களை சொல்லும்.
Ø  ஒன்பதில் சந்திரன் தந்தை உறவில் ஒரு தேய்மானம், தந்தை வழியில் இறந்தவர்களை சொல்லும், கால் முட்டி தேய்மானம் உண்டு.
37) மன்னிப்பது சந்திரன் குணம்.
38) வாந்தி பிரச்சனைகள்.
Ø  சந்திரன் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை உணவு ஊட்டினால் உடனே வாந்தி எடுக்கும்
39) உணவு
40) அரிசி 
41) காய்கறிகள்
42) படுக்கை அறைக்கும் சந்திரன்தான் காரகத்துவம் பெற்றவர்.
Ø  சந்திரன், சனி சம்பந்தப்பட்டால் தரையில் படுத்து உறங்குவார்கள்.
Ø  சந்திரன், குரு சம்பந்தப்பட்டால் படுக்கையில் மெத்தை இருக்கும்
Ø  சந்திரன், சுக்கிரன் சம்பந்தப்பட்டால் படுக்கையறை அலங்காரமாக இருக்கும்.
43) கெஞ்சுதல், கொஞ்சுதல், முத்தமிடுதல், கருவுறுதல் ஆகியவைகள் சந்திரனின் காரகத்துவம்.
44) வயது மூத்த பெண் மற்றும் தாய்மை அடைந்த பெண்ணை குறிக்கும் கிரகம் சந்திரன்.
45) தாழ்வு மனப்பான்மையை குறிப்பதும் சந்திரன்
46) நெய்க்கு காரகத்துவம் பெற்ற கிரகம் சந்திரன். (பாவக  ரீதியாக ஏழாமிடம் நெய்யை குறிக்கும்)
47) பால் மற்றும் பால் சார்ந்த அனைத்தும் சந்திரன் காரகத்துவம் பெற்ற வகைகள்.
Ø  தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்றவைகள்
48) ஜவுளி சந்திரன் காரகத்துவம் பெற்றது.
Ø  சந்திரன் சுக்கிரன் சேர்க்கை பட்டுத்துணி 
Ø  சந்திரன், சூரியன் விலைஉயர்ந்த branded துணிமணிகளை குறிப்பவர்.
49) கலப்படம் 
Ø  சந்திரன் பலம் பெற்றவர்கள் கலப்படம் செய்தால் கண்டுபிடிப்பது சிரமம்.
Ø  சந்திரன் பலம் குறைந்தால் கலப்படம் வெட்ட வெளிச்சமாகத் தெரியும்.
50) பூக்கள்
51)  சுண்ணாம்பு
52) சுவாமி படங்கள்
Ø  நான்கில் சந்திரன் இருந்தால் வீட்டில் நிறைய சுவாமி படங்கள் இருக்கும்.
Ø  பத்தில் சந்திரன் இருந்தால் வேலை செய்யும் இடத்தில் சுவாமி படங்கள் இருக்கும்.
53) இடதுகண்
54) இருதயம் 
Ø  சூரியன் சந்திரன் இரண்டுமே இருதயத்துக்கு காரகத்துவம் பெற்றவர்.
Ø  நான்காமிடம், சூரியன், சந்திரன் மூன்றும் கேட்டால் இருதய பிரச்சனை கட்டாயம் உண்டு.
 55) கர்ப்பப்பை
56) விவசாயம் 
57) இரணியா, குடல் நோய் போன்றவைகளை சந்திரன் குறிக்கும்.
Ø  ஆறாம் பாவத்தில் குரு, சந்திரன், ராகு சம்பந்தம் பெற்றால் வயிற்றில் பிரச்சனைகள் உண்டு.
58) குளியலறை
59) வண்ணாந்துறை (சலவை செய்யும் இடம்)
60) மீன் சந்தை 
61) சாராயக்கடை போன்றவைகளை சந்திரன் குறிக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...