வெள்ளி, 26 ஏப்ரல், 2019

சில சோதிட தகவல்


ஜென்ம நட்சத்தரத்தில் நாம் பிறந்த திதிக்கு அடிப்படையான பிரசாத வழிபாட்டு முறைகள்...

1.பிரதமை அன்று பிறந்தவர்கள் அம்பிகைக்கு நெய் படைத்து வழிபடவேண்டும்.
2. துவிதியை அன்று பிறந்தவர்கள் சர்க்கரை படைத்து வழிபடவேண்டும்.
3. திருதியை அன்று பிறந்தவர்கள் பால் படைத்து வழிபடவேண்டும்.
4. சதுர்த்தி அன்று பிறந்தவர்கள் பட்சணம் படைத்து வழிபடவேண்டும்
5.பஞ்சமி அன்று பிறந்தவர்கள் வாழைப் பழம் படைத்து வழிபடவேண்டும்.
6. சஷ்டி அன்று பிறந்தவர்கள் தேன் படைத்து வழிபடவேண்டும்.
7.சப்தமி அன்று பிறந்தவர்கள் வெல்லம் படைத்து வழிபடவேண்டும்
8.அஷ்டமி அன்று பிறந்தவர்கள் தேங்காய் படைத்து வழிபடவேண்டும்.
9.நவமி அன்று பிறந்தவர்கள் நெற்பொறி படைத்துவழிபடவேண்டும்.
10.தசமி அன்று பிறந்தவர்கள் கருப்பு எள் படைத்து வழிபடவேண்டும்.
11.ஏகாதசி அன்று பிறந்தவர்கள் தயிர் படைத்து வழிபடவேண்டும்.
12. துவாதசி அன்று பிறந்தவர்கள் அவல் படைத்து வழிபடவேண்டும்.
13. திரயோதசி அன்று பிறந்தவர்கள் கடலை படைத்து வழிபடவேண்டும்.
14. சதுர்த்தசி அன்று பிறந்தவர்கள் சத்துமாவு படைத்துவழிபடவேண்டும்.
15. பௌர்ணமி/ அமாவாசை அன்று பிறந்தவர்கள் பாயசம் படைத்து
வழிபடவேண்டும்...பழைய சோதிட நூல்களில் இருந்து.........


ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு திதியிலும் ஜாதகத்தில் இரண்டு வீடுகள் சூன்யம் அடையும் அந்த வீட்டிற்கான பலன்கள் திருப்திகரமாக சரிவர அமையாது.
உதாரணமாக 7ஆம் வீடு திதி சூன்யம் அடைந்தால் ,நல்ல படிப்பு,வீடு,அழகு எல்லாம் இருந்தாலும் திருமணம் தாமதமாகும் அல்லது நல்ல கணவன் மனைவி அமையாது கஷ்டம் ஏற்படும்.தொழில் சார்ந்த பார்ட்னர்கள் சரிவர அமையாமல் ஏமாற்றப்படலாம். இப்படி,எந்த வீடு நம் ஜாதகத்தில் சூன்யம் அடைகிறதோ அதன் பலன் நமக்குப் பூரணமாகக் கிடைக்காது. ஒவ்வொருவருக்கும் அவரவர் பிறந்த திதியில் சூன்யம் அடையும் கிரகங்களால் உண்டாகும் தீமைகளில் இருந்து திதி சூன்ய பரிகாரம் என்று சொல்லப்படும் அந்தந்தத் திதிகளுக்குண்டான திதி நித்யா தேவதைகளை வழிபட்டு வருவதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட பாவத்திற்கான கிரகங்கள் செயல்படத் தொடங்கி நலம் தரும்                                                                                                          திதி சூன்யம் பெறும் ராசிகளின் சந்திரன் சஞ்சரிக்கும் பொழுதும், திதி சூன்ய ராசி லக்னமாக நடைபெறும் சமயத்திலும், சுப காரியங்கள் செய்யலாகாது
எந்த திதியில் பிறந்து இருந்தாலும் உங்கள் ஜென்ம லக்னம் சூன்ய தோசம் அடையக் கூடாது. அவ்வாறு இருந்தால் தலைவலி, மன உளைச்சல், எதிர் மறை எண்ணங்கள், டென்ஷன், வாழ்கையில் விரக்தி, வேதனை, போன்ற பிரச்சனைகள் எற்படும்
பிறந்த திதியில் கும்பகோணம் அருகில் உள்ள சூரியனர்கோவில் சென்று வழிபாடு செய்தால் சூனிய தோஷம் விலகி விடும். திதி சூன்யம் அடைந்த கிரஹங்கள், பகையானாலும்: நீச்சம் பெற்றாலும், பாபிகளுடன் இருந்ததாலும், இயல்பான பலன்கள் அதாவது காரகப் பலன்கள் அதிகமாகவே கொடுக்கும். திதி சூன்யம் பெற்ற கிரஹங்கள் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது உடன் இருந்தாலும் தோசம் இல்லை.

 கிரஹம், அஸ்தங்கதம் அடைந்தாலும், வக்ரமாக இருந்தாலும்; பகை, நீச்சம் பெற்றிருந்தாலும், லக்னத்திலிருந்து 3,6,8,12 இருந்தாலும் மேசம், விருச்சிகம், சிம்மம், கும்பம், ஆகிய ராசி இருந்தாலும் திதி சூன்யம் இல்லை. பாபருடன் கூடி இருந்தாலும் திதி சூன்யம் இல்லை
திதி சூன்யம் லக்னம் திதி சூன்யம் எப்படி பட்ட பாதிப்பு இருக்கும் அவரே அவருக்கு எதிரி  லக்னாதிபதி திதி சூன்யத்தில் எப்படி பட்ட பாதிப்பு இருக்கும் திதி சூன்யம் எந்த பாவமாக வருகிறதோ அந்த பாதிப்பு  ஜாதகருக்கு ஜாதகருக்கு உரிய அங்கீகாரம் இருக்காது. எதிலும் ஆக்டிவ் ஆக இருக்க மாட்டார் ஜாதகருக்கு ஆதிபத்தியம் பலன் பாதிப்பு இருக்கும் காரக கிரகங்கள் உறவுகள் பாதிப்பு இருக்கும்
1  ஜாதகர்
லக்னம் திதிசூன்யம் ஆனாலும் திதி சூன்ய கிரகம் லக்னத்தில் இருந்தாலும் பாதகாதிபதி லக்னத்தில் இருந்தாலும் லக்னாதிபதி திதி சூன்யமாக இருந்து லக்னத்தில்இருந்தால் பிரசவம் சிரமாக இருக்கும்.தலைகாயம்  இவர்களுக்கு ஆகாது ஒரு உறவை விட்டு வெளியேற்றும். பிரிந்தோ இழந்தோ வெளியேற்றும் தலை சார்ந்த வியாதி இருக்கும். லக்னத்தில் ராகு இருந்தால் தலை விகாரமாக இருக்கும். கொடி சுற்றி பிறந்திருப்பார். லக்னம் திதி சூன்யம் ஆனால் தலையை கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும் லக்னாதிபதி 12,ல்  இந்த லக்னாதிபதியை சனி பார்த்தால் ஊனம் உண்டு.சிறைவாசம்  வெளிநாட்டு சிறை வாசம்.தூக்கமின்மை அயனசயன போகம் இருக்காது. காணாமல் போகுதல். ஒரு உயரமான இடத்தில் இருந்து கீழே விழுதல். போன்ற அமைப்பு வரும். இதே லக்னாதிபதி  திதி சூன்யமாகி 8,ல் இருந்தால் தீராத வியாதி வழக்கு உண்டு. பரம்பரை வியாதி. பெரிய விபத்து உண்டு. அவச்சொல் அவமானம். சிறைவாசம் போலீஸ் கோர்ட் உண்டு. திதி சூன்யமாகி லக்னாதிபதி அமர்ந்த வீட்டுக்கு 6 ம்வீடும் அதில் உள்ள கிரகமும் பாதகம் தரும். திதி சூன்யம் ஆகாமலே சந்திரனுக்கு அடுத்த வீடு அதில் உள்ள கிரகம் பாதகத்தை தரும். சூரியனுக்கு 3மிடம்  3 ம்வீடு அதில் கிரகம் பாதகம் தரும். ராகுவுக்கு ரிவேஸ்ட்டில் 5 ம்வீடு பாவிகள்  தொடர்பு இருக்ககூடாது அது பாதிப்படையும். செவ்வாய்யின் 8ம் பார்வை அதில் உள்ள கிரகம் இதுவும்  பாதிப்பு தரும். அஷ்டமி பஞ்சமி திதிகள் புதன் வீடுகளாக வரும் இது கடுமையான புத்திரதோசத்தை உண்டாக்கும். மணவாழ்க்கையை பிரிந்தவரையும் சுட்டிக்காட்டும். திதி சூன்யஅதிபதிகளும் பாதகாதிபதிகளும் ஒரே மாதிரியான விஷயங்களை தான் தரும்.
திதி சூன்ய அதிபதிகள் ஜாதகத்தில் அறிவியல் ரீதியாக பலம் இழக்கும் போது பாதிப்பு இருக்கும் அஸ்தம் பாதகாதிபதி முடக்கு எல்லாம் ஒரு ஜாதகத்தில் பலம் அறியும் விதிமுறைகள் தான் இதை எல்லாம் முழுமையாக சீர்தூக்கிப் பார்கப்படுவது தான் பலம் பலவீனம்
இந்த திதி சூன்ய அதிபதியும் பாதகாதிபதியும் இணையும் போது மிகப்பெரிய பாதிப்பை தருகிறார்கள்.
விதி என்பது லக்கினம்..மதி என்பது ராசி..சந்திரன் என்றும் எடுத்து கொள்ளலாம்..விதியை மதியால் வெல்லலாம் என்றால் , கிரகங்கள் தோசம் தந்தாலும், ஜாதகர் யாருக்கும் தீமை செய்யாமல் கடமையை சரியாக செய்து, தன் புத்திசாலித்தனம் கொண்டு பிரச்சினைகளை வெல்லலாம்..அதே சமயம், விதி பயனால் வரும் பாதிப்புகளை திதி தேவதைகளையும் நட்சத்திர தேவதைகளையும் முறையாக வழிபட்டு பலன் பெறலாம்..விதியோ மதியோ திதியோ எதுவாயினும் பூர்வ புண்ணியம் பலம் பெற்றால் வெற்றி நிச்சயம்..
1 5 9 பலம் இருந்தால் போதும் இராசியும் லக்னமும் சூன்யராசியில் அமர்ந்து விட்டால் வாழ்வில் பலகாலங்கள் விரையம் செய்ய வைக்கிறது. ஐயா வணக்கம் இந்த திதி சூன்யத்துக்கு தீர்வுதான் என்னங்க ஐயா சூரியன் திதி சூன்யம் ஆனாலோ அல்லது பாதகாதிபதி ஆனாலோ சூரியன் காரக பாதிப்பு கொடுக்கும். சந்திரனாக இருந்தால் தாய் அன்பு கிடைக்காது கடன் அவச்சொல் கண்பிரச்சனை ஏமாற்றம். சந்திரனுக்கு உண்டான காரக பாதிப்பு தரும். செவ்வாய் சகோதரன்  சொத்து பிரச்சனை புதன் கைரேகை ஜாமீன் பேஸ்புக் விரல்கள் செக்மோசடி புதன் சம்மந்தப்பட்ட பிரச்சனை. குரு குழந்தை பணம் கல்லீரல் ஆபரணம் கிட்னி பிரச்சனை. மரம் சம்மந்தப்பட்ட தொழில். சுக்கிரன் திருமணம் விந்து கண்பார்வை ஆடம்பரத்தால் பிரச்சனை பெண்களால் தொல்லை சிறுநீரகம் பாதிப்பு. சனி தொழில்  வேலையாட்கள் பிரச்சனை  சித்தப்பா ஒரு ஊனம். 2:4:7:8:12 இந்த இடங்களில் ஏதோ ஒரு இரண்டு வீடுகள் சூன்ய வீடுவந்தால் திருமண வாழ்க்கை புரட்டி போடும்
2 ம்பாவகம்.ஆரம்பம் இரண்டாம் பாவம் திதி சூன்யம்ஆனாலும் இரண்டாம்பதவ அதிபதி திதிசூன்யத்தில்இருந்தாலும்குடும்பம்பொருளாதாரம்சிக்கல் வாயால்வம்புகள் 2 ம் அதிபதி திதி சூன்யம் ஆனாலும் திதிசூன்ய அதிபதி 2 ல் இருந்தாலும். பொருளாதாரத்தடை. குடும்பம் அமைய தாமதம்.புதன் பலம் குறைந்து ஊமை ராசியோடு தொடர்பு ஏற்ப்படும் போது வாக்கு ஸ்தானம் பாதிப்பு ஏற்படும். சந்திரன் சுக்கிரன் சூரியன் ஏதோ ஒரு கிரகம் பாதித்தால் கண் பார்வை குறைபாடு ஏற்படும்.
குடும்பம் பிரிவுகள் இருக்கும் ஸார். தாய் வழி உறவுகள் பகையாக இருப்பார்கள்                                                                                                                                                   குடும்பம் சீக்கிரம் அமைந்தால் காதல் கலப்பு திருமணத்தை கொடுக்கிறது.
பெரியம்மாவிற்கு பாதிப்பு. பாதகாதிபதி 2 ல் இருந்தால் களத்திரம் சொந்த ஜாதியில் அமையாது. 2 மிடத்தை செவ்வாய் அல்லது சனியோ பார்த்தால் பற்களில் பிரச்சனை உண்டு. டிப்ஸ்:செவ்வாய் சனி கேது அல்லது சந்திரன் செவ்வாய் கேது இணைவு  2மிடம் 7மிடம் ஆகிய இடங்களில் இருந்தால் பார்த்தாலும் இரண்டு திருமணம் நடக்கும். ஆண்களுக்கு இரண்டு திருமணம் பெண்களுக்கு  இராண்டாம் தாரமாக போக வேண்டும். பெண் ஜாதகத்தில் செவ்வாய் சனி 2:7:8ம் இடங்களில் இருந்தாலும் பார்த்தாலும்  மாங்கல்யம் போடாத வாழ்க்கை. அல்லது கழற்றி வீசுவது கஷ்டத்துக்காக கழற்றுவது.அமைப்பு வரும். செவ்வாய் சனி முதல் திருமணம் சரி இருக்காது.
3ம்பாவம் ஊமை ராசி எவை என்று பதிவிடவும்  3ம்பாவம் திதி சூன்யம் ஆனாலும் திதி சூன்யா திபதி 3ல் இருந்தாலும்  பாதகாதிபதி 3ல் இருந்தாலும்: செவ்வாய் பலம் குறையக்கூடாது. சகோதரனுக்கு நல்லது அல்ல. நீர் ராசிகள் ஜாதகருக்கு தைரியம் குறைவு. புதன் சனி தொடர்பு இருந்தால் வீரிய பாதிப்பு இருக்கும். E.N.T.பிரச்சனை இருக்கும். 3ம்அதிபதியே திதி சூன்யமாகி 3ல் இருந்தால் தகவல் பரிமாற்றத்தில் ஒரு பிரச்சனை தரும். புதன் வக்கிரமானால் விரலில் சேதம் வரும். தோல்பட்டையில்காயம் ஏற்படும்.ஒப்பந்தம் கைரேகை காண்ட்ரக்ட் ஜாமீன் போடுவது ஆகாது. புதன் வக்கிரம் எப்போதும் படித்துக்கொண்டே இருப்பர் எதையாவது புதன் வக்ரம் படிப்பில் அரியா  உண்டு
இரண்டாம் இடம் இரண்டாம் அதிபதி திதி சூனியம் ஆனால் குடும்பம் அமைவதில் சிக்கல் தனவரவில் தடை சரியான நேரத்திற்கு வராதது வாக்கை காப்பாற்ற முடியாமல் போவது போன்றவை இருக்கும் மேலும் பாதகாதிபதி தொடர்பு ஏற்பட்டால் தேவையில்லாத இடத்தில் தேவையில்லாதவற்றை கதை பேசி பிரச்சனை சந்திக்க நேரும்
மூன்றாம் இடம் மூன்றாம் அதிபதி திதி சூனியம் ஆகி செவ்வாயும் வலுவிழந்து இருந்தால் சகோதரனால் உபயோகமில்லை மூன்றாம் அதிபதி திதி சூனியத்தில் இருந்தால் தைரிய குறைவு வீரிய குறைவு தகவல் தொடர்பு களால் தொல்லை
பாதகாதிபதி 3 மிடத்தை பார்த்தால் இடது கை பழக்கம் இருக்கும் இரண்டு இனட்ரிவ்யூ வரும். தொண்டை பகுதியில் மருத்துவம் பார்ப்பது நல்லது. ஆபரணத்தை கவனமாக வைத்துக் கொள்ளவேண்டும்.கம்மல் மூக்குத்தி மோதிரம் துளைந்து போகும். அம்மை நோய்  தைராய்டு வரும். பெட்டிசன் வதந்தி வரும் சகோதரன் இல்லை அப்படி இருந்தால் சகோதர உறவில் விரிசல் இருக்கும். புத்திரதோசம்இருக்கும். அதிக இடமாற்றம் இருக்கும். ஒரு தற்கொலை முயற்ச்சியை தூண்டும். அடுத்து 4 ம்பாவம் 4 மிடம் திதிசூன்யமானாலும்  திதிசூன்ய அதிபதி4ல்இருந்தாலும் பாதகிதிபதி4ல் இருந்தாலும்  சுகம் கிடையாது. தாய் அன்பு கிடையாது. மாற்றாந்தாய் பால் குடித்தவர் மாற்றாந் தாயுடன் வளர்ந்தவர். ஒரு பதவியில் பிரச்சனை உண்டு. நீரில் கண்டம் இருதய பயம். வாகனத்தால் தொல்லை இருக்கும். சொந்த வீடு இருந்தாலும் அனுபவிக்க முடியாது. பிறந்த இடத்து சொத்து அனுபவிக்க தடையாக இருக்கும் இவர்கள் உறவுகளிடம் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். வீடு வாகனம்  வாங்க இவர்கள் லோன் போடக்கூடாது நீர் நிலைகளில் கவனம் தேவை இவர்கள் வாகனம் ஓட்டுவதில் கவனம் தேவை. உறவுகளை விட்டு ஒதுங்கி வாழ்பவர் தூக்கத்தில் தீய கனவு வரும். தாய  மாமன் உறவில் விரிசல் உண்டு 4 மிடஅதிபதியும் சந்திரனும் பாதிக்கப் பட்டால் தாய்க்கு பாதிப்பு தாயின் பந்துக்கள் உறவில் கவனம் தேவை 4 மிடஅதிபதியும் புதனும் பாதிக்கப்பட்டால் கல்விபாதிப்பு தாய் மாமன் பாதிப்பு வியாபாரத்தில் கவனம் 4 மிடமும் செவ்வாய்யும் பாதிக்கப்பட்டால் சொத்து பிரச்சனை பெண்களாக இருந்தால் கணவனுக்கு பிரச்சனை சுக்கிரனாக இருந்தால் வீடு கட்டுதல்பிரச்சனை உடன் பிறந்தால் மகனிடம் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு . கண்டிப்பாக ஜவுளி கடை வைக்க கூடாது சூரியனாக இருந்தால் இருதயப்பிரச்சனை இவர்கள் கடன்  வாங்கினால் அடைப்பதற்குள்  பெரும்பாடு படுவர் தங்கம் தங்காது 4 க்குடையவன்6ல் இருந்தாலோ 12க்குடையவன் சாரம் வாங்கினா லோ.6 க்குடையன் 12க்குடையவர் சாரம் அவர்கள் வீட்டில் திருட்டு போகும். எந்த விவாத்திலும் தலையிடக்கூடாது சாட்சி சொல்லக்கூடாது                                                                                                                .4மிடம் 4மிட அதிபதி திதி சூன்யம் பாதக தொடர்போடு 6:8:12ல் இருந்தால் அந்த கிரகம் எந்த கிரகத்தை பார்க்கிறதோ எந்த கிரகம் கூடஇருக்கிறதோ அந்த கிரகம் பாதிப்பு. ஹவுஸ்ட் அரஸ்ட். வேறு கிரகம் இருந்தால் அதனுடைய பாதிப்பு வரும்.                                                                   5 ம்பாவம் 5 மிடம்  திதிசூன்யமானாலும்  திதிசூன்யாதிபதி 5 ல் இருந்தாலும் பாதகாதிபதி  5 ல்இருந்தாலும். புதன் கெட்டால் கல்வி தடை.புத்தி குழப்பம். தாய்மாமன் உறவில் விரிசல் சனி சம்மந்தப்பட்டால் வயிறு நோய். வயிற்று பிரச்னை புத்திரா்களால் சிரமம் குலதெய்வ வழிபாடு மதம் மாறுதல் பூர்வீகத்தடை அடுத்த மதத்தில் ஈடுபாடு குழந்தை பிரிவு 5மிடம் கெட்டால் புத்திரன், புத்திரியால் பிரச்னை தந்தைவழிச் சொத்தில் பிரச்னைகள்உண்டு தாய்மாமனுக்கு  புத்திர குறைபாடு இருதய நோய் இருக்கும். புத்தியில் குழப்பம் ஏற்படலாம் பிறக்கும் குழந்தை சிஸேரியன். சாப்பாட்டில் கவனம் தேவை சகோதர உறவில் பிரச்னை வர வாய்ப்பு
5ல். திதி சூன்யம் அதிபதி வலுவாக இருந்துதிசாபுத்தி வந்தால் தனது குழந்தைக்கு சுபகாரியங்கள் செய்ய முடியாது. செய்  தொழிலில் பிரச்னைகள்
காதல் தோல்வி அல்லது உடல் அங்க பலஹீனம்ஆக.  இருக்க வாய்ப்பு உண்டு
பெற்றகுழந்தையால் அவமானம் ஏற்படும் குழந்தை பிறந்த நாள்  முதல் குழந்தைக்காக செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும்
6 மிடம் கடன்பிரச்சனை நோய் எதிரிகள் தொல்லை. இரணியப்பிரச்சனை சித்தியால் பிரச்சனை விபத்து.உத்தியோகம் தகுதிக்கு மீறியபதவி உணவு தொழில் இடுப்பு வலி வாயுதொல்லை உத்தியோகம் செய்யும் இடத்தில் எதிரி உண்டு. 7 மிடம். திருமணதடையை சொல்லும்.கூட்டாளி பிரச்சனை. தாம்பத்திய சுகம் குறைவு. சம்மந்தம் பண்ணும் யோகம் இல்லை. பிரிந்து பிரிந்து வாழ்வார்கள். யூரியன் பிரச்சனை யூரியனில் கல்அடைப்பு 2 வது குழந்தைதாமதம் ஆகும்.காதல் கலப்பு திருமணம் வரும். கிட்னி கல்லீரல்பாதிப்பு 8மிடம்:பெண்ணாக இருந்தால் மாங்கல்யதடை இருக்கும் திருட்டு இருக்கும்.பெரிய விபத்து இருக்கும். சர்ஜரி உண்டு. 8 மிடத்திற்கு 10 மிடம் தொடர்பு வந்தால் கர்மம் செய்யதடை. அவச்சொல் இருக்கும். கர்மம் செய்ய புத்திரர் கிடையாது. இவர்கள் பெரிய கூட்டத்திற்கு எல்லாம் போககூடாது. இயற்கை சீற்றத்தினால் பாதிப்பு இருக்கும். இடி மின்னல் இதனால் வீடு பாதிப்படையும்.
9 மிடம் ஜாதகர் தந்தையிடம் இருந்து பிரிந்து இருப்பார். தந்தையிடம் பகை ஆகும். குருவோ 5  மிடமோ பலம் குறைந்தால் மத மாற்றத்தை தூண்டும். டிப்ஸ்:5:9 அதிபதிகளும் குருவும் கெட்டு இருந்தால் ஜாதகர் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும்  வேறு மதத்திற்கு  மாறி விடுவார். பெண் ஜாதகத்தில் 9 மிடம்திதிசூன்யம் ஆனால் கர்ப்பம் தங்குவதில்லை. 10மிடம்:பயம் தொழிலில் திருப்த்தி இல்லை ஆண்வாரிசு தடை.10 மிடம் சூன்யமாகி 5:8க்குரியவர் பார்த்தால் தத்து புத்திர யோகம். 10 மிடத்திற்கு 8மிடம் சம்மந்தப்பட்டால் கர்மம் செய்ய தடை. எதிரி  இருக்க மாட்டாங்க. இறந்து 24 மணி நேரம் பாடியை வைத்திருந்தால் அங்கு திதி சூன்யம் இருக்கும். முதல் தொழிலை மாற்றும். 10மிடம் கர்ம ஸ்தானம் விருச்சிக ராசி மார்ச்சுரி வீடு                                                                                       . பாதகாதிபதி சூன்யாதிபதி விருச்சிக வீட்டில் அமர்ந்தாலும் பார்த்தாலும் மார்ச்சுரி வீட்டிற்கு போனதை சொல்லும். 11 மிடம்:மூத்த சகோதரம் இருக்காது.இருந்தாலும் பயன் இல்லை. நண்பர்கள் தொல்லை உண்டு.இதில் ராகு கேது இருந்தால்  வேறு மாநிலம் வேறு மொழி நண்பர்கள் இருப்பார்கள். இவர்கள் எண்ணம் ஈடேறுவது ரொம்ப கடினமாக இருக்கும். உயர் கல்விக்கு தடை இருக்கும் திறமைக்கு ஏற்ப லாபம் கிடையாது. 2 வது திருமணமும் நடக்காது. 12 மிடம்: 12 மிடத்திற்கு சனி தொடர்பு  கொண்டால் அங்கத்தில் ஊனம்.தூக்கம் குறைவு கால்பாதங்களில் வியாதி இருக்கும். 2 வது தொழிலில் விரையம் இருக்கும். திருமண வாழ்க்கை சரி இருக்காது. ஒரினச்சேர்க்கை இருக்கும்.12 ல்ராகு  அமர்ந்தாலோ அல்லது  12 மிட அதிபதியோடு ராகு இணைந்தாலோ சேர்ந்து பார்த்த கிரகம் காணாமல் போகும். இதில் புத்திர தோசம் உள்ள நட்சத்திரம் மிருக சீரிடம் ரேவதி புனர் பூசம். இவை எடுக்கலாம். சிம்மம் தனுசு ராசிகளுக்கு திதி சூன்ய பாதிப்பு குறைவு. 3:6:10:11 இந்த வீடுகளுக்கும் பாதிப்பு குறைவு. இவர்கள் சமாளிக்கும் திறமை இருக்கும். 6 ராசிக்கு பாதிப்பு இல்லை குறைவு தான். மீதி 6 ராசிக்கு தான் பாதிப்பு இருக்கும்.
திதிகளின் தெய்வங்கள் !

சுக்லபட்சம்

1. பிரதமை – குபேரன் மற்றும் பிரம்மா
2. துவதியை – பிரம்மா
3. திரிதியை – சிவன் மற்றும் கெளரி மாதா
4. சதுர்த்தி – எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்சமி – திரிபுர சுந்தரி
6. ஷஷ்டி – செவ்வாய்
7. ஸப்தமி – ரிஷி மற்றும் இந்திரன்
8. அஷ்டமி – காலபைரவர்
9. நவமி – சரஸ்வதி
10. தசமி – வீரபத்ரர் மற்றும் தர்மராஜன்
11. ஏகாதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி – மகா விஷ்ணு
13. திரயோதசி – மன்மதன்
14. சதுர்த்தசி – காளி
15. பவுர்ணமி – லலிதாம்பிகை

கிருஷ்ணபட்சம்
1. பிரதமை – துர்க்கை
2. துவதியை – வாயு
3. திரிதியை –அக்னி
4. சதுர்த்தி – எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்சமி – நாகதேவதை
6. ஷஷ்டி – முருகன்
7. ஸப்தமி – சூரியன்
8. அஷ்டமி – மஹாருத்ரன் மற்றும் துர்க்கை
9. நவமி – சரஸ்வதி
10. தசமி – எமன் மற்றும் துர்கை
11. ஏகாதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி – சுக்ரன்
13. திரயோதசி – நந்தி
14. சதுர்த்தசி – ருத்ரர்
15..அமாவாசை – பித்ருக்கள் மற்றும் காளி

திதி சூனிய பரிகாரமாக தெய்வ திருத்தலத்தில் இருக்கும் தல விருட்சத்தின் அடியில் 5 நெய் தீபங்களை ஏற்றி மண்டியிட்டு திதி சூன்ய ராசி தோஷம் மறைய வேண்டும் என்று திதி தேவதையையும் அங்குள்ள தெய்வத்தையும் வணங்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...