வெள்ளி, 26 ஏப்ரல், 2019

8 ஆம் பாவகம்

ஜோதிட சாஸ்திரத்தில்  பொதுவாக 8 ஆம் பாவகம் என்றாலே அனைவருக்கும் பயம் என்பது பிரதானமாக இருக்கும். ஆனால் அதையும் தாண்டி வேறு என்ன நல்ல விஷயங்கள் உள்ளன என்பதை இங்கு காண்போம்.
உடல் உறுப்புக்கு ஆதாரமாக இருப்பது 8 ஆம் பாவம்.
 8 ஆம் பாவத்தில் என்னென்ன நட்சத்திரங்கள் உள்ளன என்பதை கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் அந்த பாவம் வேலை செய்யும்.
 காலப்புருஷனின் 8 ஆம் பாவத்தில் குரு+சனி+புதன் நட்சத்திரங்கள் உள்ளன.
 குரு=ஜீவன்; சனி=ஆயுள்;  புதன்=ஜீவனம்  (6 ஆம் அதிபதி).
 ஒரு மனிதன் உயிர் வாழ உத்தியோகம் மிக அவசியம். இதற்கு பின் தான் தந்தை எனும் பாக்கிய பாவம் (9 ஆம் பாவம்) வருகிறது.
 உழைக்காத வருமானம். திடீர் அதிர்ஷ்டம். 8 ஆம்  பாவம் நன்றாக இருந்தால் தான் மேற்கூறிய இரண்டு பலன்களும் சரியாக கிடைக்கும்.
 8 ஆம் பாவத்தின் 7 ஆம் பாவம் என்பது 2 ஆம் பாவம் ஆகும். வாக்கு, பேச்சு, பொருளாதாரம், குடும்ப உறுப்பினர்கள், வருமானம் இவற்றை சொல்வது 2 ஆம் பாவம் ஆகும்.
காலப்புருஷனின் 8 ஆம் பாவம் நீர் ராசி வீடாகும். உயிர் வாழ அத்தியாவசியமானது நீர். ஒவ்வொரு பாவத்தையும் நாம் அனுபவிக்க வேண்டுமானால் 8 ஆம் பாவம் உதவி செய்ய வேண்டும்.  8 ஆம் பாவம் உதவி இல்லாமல் எதையும் யாரும் அனுபவிக்க முடியாது என்பது உண்மை. அதே சமயம் இது மனைவியின் மாங்கல்ய ஸ்தானம் ஆகும்.
 5 ஆம் பாவத்திற்கு 4 ஆம் பாவம் என்பது இந்த 8 ஆம் பாவம் ஆகும்.  குழந்தைகளுக்கு கிடைக்க போகும் பதவி, கல்வி, சுகம், சொத்து எல்லாமே இந்த 8 ஆம் பாவத்தை பொறுத்தே அமையும்.
அப்படியென்றால் 8 ஆம் பாவம் கெட்ட பாவமா?... கிடையாது . உங்கள் குழந்தைகள் அனுபவிக்க போகும் எல்லாமே உங்களது 8 ஆம் பாவம் சிறப்பாக அமைவதை பொறுத்தே இருக்கின்றது.
 8 ஆம் பாவம் எந்தெந்த பாவத்தோடு தொடர்பு கொண்டு என்னென்ன சொல்லும்?
1. குழந்தையின் ஆதார பாவம் 8 ஆம் பாவம். இதை வைத்தே பலன் சொல்லலாம்.
2.   8 ஆம் பாவம் என்பது ஒரு அபரித்துவமான தன்மை வாய்ந்தது.
3. அதிர்ஷ்டம், சரண யோகம் குறிப்பது 8 ஆம் பாவம்.
4. பயம், மைனஸ், துர் ஸ்தானம், மறைவு ஸ்தானம் என்று கூறுவோம்.
5.   8 ஆம் பாவத்தில் உள்ள நட்சத்திரங்களை கொண்டு பலன் எடுக்க வேண்டும்.
6. அசையா சொத்துக்களை குறிப்பது இந்த 8 ஆம் பாவம் ஆகும்.
7. இந்த  8 ஆம் பாவத்தில் என்னென்ன கிரகங்கள் உள்ளன, என்னென்ன கிரகங்கள் பார்க்கின்றன என்பதை கவனிக்க வேண்டும். காரகத்துவங்கள் இதை ஒட்டியே தான் வரும்.
8. ஆயுளை குறிக்க கூடிய கிரகம் அதன் அதிபதி.சனி,
9. மண்ணுக்கு கீழோ இருக்கும் வளங்களை குறிப்பது இந்த 8 ஆம் பாவம் ஆகும். எடுத்துக்காட்டு : புதையல், நிலக்கரி, சுரங்கம், பெட்ரோல் டீசல்.
10. மண்ணுக்கு கீழோ ஒரு பொருள் என்பது மறைந்து இருந்தால் அந்த பொருள் மறைந்துள்ளதை குறிக்கும் அல்லவா? அப்படியென்றால் ஒரு பொருளை pack , parcel செய்து அடைத்து விட்டால் அது 8 ஆம் பாவத்தையே சேரும்.
11. பார்சல் சர்வீஸ், பெரிய கண்டெய்னர் லாரி, சிலிண்டர் காஸ், அடைக்கப் பட்ட அனைத்தும் 8 ஆம் பாவம் ஆகும்.
 முதலில் நல்ல விஷயங்களை உள் வாங்குவோம்.
 1. அதிர்ஷ்டம்:
ஒருவர் ஒரு தொழிலில் நடைமுறை மாற்றத்தில் உயர்வு பெற்று வர வேண்டுமென்றாலும், தொழிலில் லாபம், வர வேண்டுமென்றாலும்  குழந்தையின் வளர்ச்சி, சகோதர சகோதரியின் உத்தியோகம் இந்த பாவம் தான்.
2. தசாபுத்தியில் இது திருமண பாவமென்றால் அந்த குடும்பத்தில் திருமணம் கொடுக்கும்.
3. குடும்பம் அமையும்.
4. இந்த தசாபுத்தியில் சனி வந்தால் குடும்பத்தில் திருமணத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும். ஏனெனில் காலப்புறுஷனுக்கு 7. ஆம் வீடு துலாம் 7   ஆம் பாவத்திற்கு 4. 5. ஆம் அதிபதி    சனி    
6. ஆவணங்கள் சம்பந்தம் ஏற்படுமானால் புதனின் சம்பந்தம் ஏற்பட வேண்டும்.
7. இந்த ஆவணங்கள், பணம் முதலியவற்றை வங்கியில் கொண்டு வைக்கும் லாக்கர் 8 ஆம் பாவம்.
8. கோச்சார ராகு 8 ஆம் பாவத்தை கடக்கும்போது லாக்கர் இல் பணம் வைக்க, ஆவணம் வைக்க வங்கி செல்வார்கள். (கவனிக்க.. காலப் புருஷனின் 8 ஆம் பாவத்தில் குருவின் நட்சத்திரம் உள்ளது)
9. மறைமுகமாக 8 ஆம் பாவம் அனைத்து பாவங்களுக்கும் உதவி செய்துக் கொண்டே இருக்கும்.
10. சகோதர பாவத்திற்கு 6 ஆம் பாவம் இந்த 8 ஆம் பாவம். சகோதரர் வேலைக்கு செல்வார்.
11. உழைக்காத வருமானம். இது லக்கினத்திற்கு 8 இல் இருந்து 2 ஆம் பாவத்தை பார்க்கும். ஆக சுலபமாக இரண்டு வருமானம் வரும்.
12. கடின உழைப்பு இல்லாமல் வருமானம் வரும்.
13. எல். ஐ. சி, இன்சூரன்ஸ், பி. எஃப், கிராஜுட்டி, ஓய்வூதியம் தரக்கூடிய பாவம்.
14. 8 ஆம் பாவம் அரசாங்கத்தை குறிக்கக் கூடியது. ஆக அரசாங்க வருமானத்திற்கு இந்த 8 ஆம் பாவம் துணைபுரியும்.
15. 8 ஆம் பாவம் 2 ஆம் பாவத்தை பார்க்கும்போது வாரிசு வேலை, வருமானம் வரும்.
16. 8 இல் ஒரு கிரகம் நின்று தசை நடத்தினால் சகோதரருக்கு வேலை, வியாதி தன்மை மாறும், வரவு, உத்தியோகத்தில் மாற்றம், டிரான்ஸ்பர், திருமணத்திற்கு வரவு, தந்தைக்கு விரையம் போன்ற பலனை தரும்.
 17. ஒருவரை பார்த்த உடனேயே அவரின் நிலையைக்குறித்து சொல்லக் கூடிய அமானுஷ்ய சக்தி ஒருவருக்கு இருக்க இந்த 8 ஆம் பாவ செயல்பாடே காரணம். இதற்கு ஜாதகமோ, ஜோதிடமோ தேவை இல்லை.
18. அமானுஷ்ய தேவதைகள் இவர்களுக்கு துணை புரியும்.
19. 8 ஆம் பாவத்தில் குரு சம்பந்தப் பட, அதிர்ஷ்டம் ஏற்படும்.
20. வங்கி லாக்கர் சம்பந்தம் ஏற்பட புதன் சம்பந்தப்படும்.
21. அமானுஷ்ய சக்தி ஏற்பட சனி சம்பந்தம் / சனி நட்சத்திர சம்பந்தம் இருக்கும்.
22. இவர்களுக்கு இயற்கையிலேயே இந்த அமானுஷ்ய சக்தி ஏற்படும்.
23. பெரும் கடன் ஏற்படும்.
24. மரணத்தில் சந்தேகம் - 8 ஆம் இடம் சந்தேகத்தை குறிக்கும். இது மறைவு ஸ்தானம் அல்லவா, மறைந்திருந்து பார்ப்பதை சந்தேகம் என சொல்வோம். எந்த ஒரு பாவத்திற்கும் 8 ஆம் பாவம் சந்தேக பாவம் ஆகும்.
25.  8 ஆம் அதிபதி நீசம், அஸ்தங்கம், அஸ்தமனம், திதி சூனியம் அடைவது மரணம் சந்தேகத்திற்கு உரியது அல்லது மரணம் விமர்சிக்கப் படும்.
26. சுபர் பார்த்தால் மேற்கூறிய பலன் ஏற்படாது.
27. இன்சூரன்ஸ் : காரகர் குரு தசாபுத்தியில் இந்த காரக குரு சம்பந்தப் பட்டாலோ, சம பாவத்தில் செயல்பட்டாலோ இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்.
28. சிறிய வயதாக இருந்தால் இன்சூரன்ஸ் பாலிசி போடுவார். 70 வயது போல் இருந்தால் பாலிசி தொகை கிடைக்கும். வயதுக்கு ஏற்ப பலன் சொல்ல வேண்டும்.
29. குவாரி: காரகர் சனி. மண்ணைத் தோண்டினாலே அதன் காரகர் சனி.
30. பொக்லைன், ஜேசிபி
31. ரகசியத் துறை, உளவுத்துறை - சனி
32. இருட்டு (night) - சனி
33. 6 ஆம் பாவம் ஊக்குவிக்க பட்டு 8 ஆம் பாவ பலனாக வரும்.
34. 6 ஆம் பாவத்தின் வளர்ச்சி 8 ஆம் பாவத்தில் இருக்கும்.
35. இரண்டு வாசலுடைய சொத்து 8 ஆம் பாவத்தை குறிக்கும்.
36. 4-8 சம்பந்தம் உள்ளவர்களின் வீடு பெரிய வீடாக இருக்கும், இரண்டு வாசல் இருக்கும்.
37. பெண் ஜாதகத்தில் மாங்கல்யம். கணவனைக் குறிக்க கூடியது.                                                       38. அதிக வட்டிகள் - குரு+ராகு.
39. பெரிய விபத்து - செவ்வாய்+சனி.
40. அனாதை இல்லம், முதியோர் இல்லம். - சனி.
41. சிறுநீரகம் - சூரியன்+சுக்கிரன்.
42. ஆட்டுத்தொட்டி - செவ்வாய்+சனி.
43. இரத்தப் பரிசோதனை - செவ்வாய்+சந்திரன்.
44. இறைச்சி மார்க்கெட் - செவ்வாய்.
45. அறுவை சிகிச்சை அரங்கம் - செவ்வாய்+சனி.
46. கட்டுமான வேலை - செவ்வாய்+சனி.
47. சுரங்கம் - சனி.
47. தொழிற்சங்கங்கள் - செவ்வாய்+சூரியன்.
48. ஆயுத வர்த்தகம் - செவ்வாய்+சனி.
49. இரும்பு வியாபாரம் - சனி. துரு பிடிக்கும் அனைத்தும் சனி.
50. அரிசி மண்டி - சந்திரன்+ராகு.
51. அரைத்து விற்பது, மசாலா பொடி, மசாலா வியாபாரம் (8-10 சம்பந்தம்) - செவ்வாய்+சனி.
52. பொடி பண்ணுவது, மசாலா, சுண்ணாம்பு, காபித்தூள், மிளகாய்த்தூள், சிமெண்ட், டஸ்ட் வரக்கூடியது எல்லாமே 8 ஆம் பாவம் ஆகும்.
53. சினிமா திரையரங்கம் - சுக்கிரன்+சந்திரன்.
54. தீவிர ஆராய்ச்சி.
55. எந்த ஒரு விஷயத்தையும் தீவிரமாக ஆழமாக யோசிப்பது 8 ஆம் பாவம் ஆகும்.
56. தீவிரமாக தொழிலில் ஆராய்ச்சி பண்ணும்போது சப்தமமாக இருக்கும் 2 ஆம் பாவம் வேலை செய்யும். வருமானம் உயர வழி வகுக்கும். - செவ்வாய் (விடாமுயற்சி). செவ்வாய் 3 ஆம் பாவத்தில் முயற்சிக்கு காரகன், 8 ஆம் பாவத்தில் குறிக்கோள் அடைய காரகன், 4 ஆம் பாவத்தில் வண்டி,வாகனம் ஆகியவற்றிற்கு காரகன்.
57. மனவெறுப்பு - சந்திரன்+சனி. காலப்புருஷனின் 8 ஆம் பாவத்தில் சந்திரன் நீசம், ராசி நாதனின் மற்றொரு வீடு மேஷம், அதில் சனி நீசம். இதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
58. குழப்பம் தரும்.
59. பழி தீர்த்தல் - செவ்வாய்+சனி   *__பழி தீர்த்தால்  என்ன கிடைக்கும்? சிறை.ரூமில் அடைத்தல்.__ *
60. சிறைச்சாலையில் என்ன வரும்தேள், பூரான், விஷ ஜந்துக்கள் வரும். இது 8 ஆம் பாவம்                                                                                                      61. பெரிய கோட்டை, அரண்மனை - புதன்+ராகு.
62. குறுகிய இடங்கள், சந்து பொந்து, அப்பார்ட்மெண்ட் - செவ்வாய்+புதன்.
63. சலவை செய்யும் இடம் - சந்திரன்+சனி.
64. பெரிய காம்பவுண்ட் சுவர் - புதன்+ராகு.
65. சாராயம் காய்ச்சுதல், அரக்கு (heating) - செவ்வாய்+சந்திரன்.
66. பாம்பு புற்று - செவ்வாய்+ராகு/ சனி+ராகு.  8 இல் செவ்வாய்+ராகு அல்லது சனி+ராகு சம்பந்தப் பட்டால் மட்டுமே இந்த பலன்.
67. திருமண மண்டபம் - செவ்வாய்+சுக்கிரன் (7+2 பாவம்).
68. நேர்மையான பேச்சு, மறைமுகமான செயல் - சூரியன்+குரு. லஞ்சத்தை கை நீட்டி வாங்காமல் பெட்டிக்குள் அடைத்து பெறுவது.
69. இயற்கை உணவு - குரு+சூரியன்.
70. தென்னை மரம் - குரு+சூரியன்+ராகு.
71. மாந்திரீகம் - செவ்வாய்+சனி.
72. ஜோதிடம் - செவ்வாய். (5 ஆம் பாவ ஜோதிடம் - சூரியன்).
73. மனையடி சாஸ்திரம் - புதன்+சனி.
74. எண் கணிதம் - புதன்+சனி.
75. மண்ணைத் தோண்டி என்ன வளம் உள்ளது என்பதை கண்டு பிடிப்பது இந்த பாவம். - செவ்வாய்+சனி.
76. பாம்பாட்டி - சனி+ராகு.
77. பட்டாம்பூச்சி - சந்திரன்.
78. அழுகும் நோய்கள் - சனி.
79. தற்கொலை எண்ணம் - செவ்வாய்+சனி.
80. இறக்குமதி தொழில்கள் -  செவ்வாய்+குரு+சந்திரன்.
81. டாய்லெட் - சனி.
82. லைசென்ஸ் துறை - குரு+சூரியன்.
83. ரயில்வே துறை - சனி+செவ்வாய்+ராகு.
84. தார் வண்டி - சந்திரன்+சனி+செவ்வாய்.
85. மீளா கடன் - செவ்வாய்.
86. கந்து வட்டி - சந்திரன்+ராகு.
87. அபகரித்தல் - சூரியன்.
88. கோழிப்பண்ணை - செவ்வாய்.
89. மருத்துவம் - குரு+சூரியன்+செவ்வாய்.
90. எண்ணெய்க் கிணறு - சனி.
91. மண்ணெண்ணெய் வியாபாரம் - சனி.
92. நீரினால் ஏற்படும் அனைத்து கண்டங்களும் - சனி+சந்திரன்.
93. சிவில் என்ஜினீயர் - செவ்வாய்+சனி.
94. ஆட்டோமொபைல் - செவ்வாய்+சனி.
95. விளையாட்டு துறை - செவ்வாய்+புதன்.
96. சிறிய வகை மீன்பிடிப் படகுகள் - சந்திரன்.
97. மணல் லாரி, டிப்பர் - சனி+சந்திரன்.
98. வாகனம் கட்டமைப்பு - செவ்வாய்+சனி.
99. போக்குவரத்து துறை - செவ்வாய்+சந்திரன்.
100. ஆசிரியர் - செவ்வாய்.
101. மர அறுவை மில் (saw mill) - குரு+ராகு.
102. விறகுக் கடை - குரு+சனி.
103. சித்த மருத்துவம் - செவ்வாய்.
104. சுகவாசி - சுக்கிரன்+குரு.  8 ஆம் அதிபதி வலுத்துவிட்டால் எந்த கஷ்டம் வந்தாலும் சுக போகத்திற்கு குறையே இருக்காது.
105. டை அடித்தல் - சனி. (நரையை மறைப்பது).
106. வயிற்றுப் போக்கு - சந்திரன்.
107. அரசியல் - சூரியன்+செவ்வாய்.
108. பேராசை - சந்திரன்+ராகு.
109. சட்டத்துறை - சனி+புதன்.
110. நிர்ணய ஸ்தானம் - குரு+சூரியன்.
111. தேங்கிய நீர் - சனி+சந்திரன்.
112. மலச்சிக்கல் - சனி.
113. முட்டை - சனி.
114. கருவாடு - சனி.
115. குடோன் - சனி.
116. 8 க்கு உடையவன் 4 இல் இருக்க வீடு அருகில் குடோன் இருக்கும்.
117. சுடுகாடு - சனி.
118. பிணவறை - சனி.
119. வர்மம் - சனி.
120. டாஸ்மாக் பார் (side dish) - செவ்வாய்+சனி.
121. அபச்சொல் - சந்திரன்.
122. பிரளயம் - சனி.
123. இடி, மின்னல் - சூரியன்+செவ்வாய்.
124. செய்வினை பயம் - சனி.
125. உதவித் தொகை - சனி.
126. லஞ்சம் - சனி+ராகு.   8 ஆம் பாவம் குறித்து ஜோதிடருக்கு தெரிய வேண்டிய மிக முக்கியமான பாய்ண்ட்.
1. லக்கினம் அல்லது லக்கினாதிபதிக்கோ 6 8 12 அதிபதிகள் மூவரின் தொடர்பு இருந்து மேலும் 2 ஆம் இடத்தில் செவ்வாய் அல்லது சூரியன் அல்லது கேது அல்லது மாந்தி இருந்து வயதோட்டத்தில் 17 வது வயதில் சுபரைத் தொடுமானால் மருத்துவம் படிப்பார்.
(2 இல் மாந்தி மருத்துவம் தரும்). மருத்துவம் படிக்க வாய்ப்பு உண்டா என கேட்பவர்களுக்கு 100% இந்த பலனை சொல்லலாம். 2. 8 ஆம் பாவம் என்பது 6 ஆம் பாவத்தின் வளர்ச்சி என்பதால் 8 ஆம் பாவம் அமைந்த விதத்தைப் பொறுத்து உத்தியோகம், கடன், வழக்கு போன்றவற்றின் தன்மையைக் கூறும். அஸ்டமாதிபதி வலுத்தால் வாழ்க்கையே எளிதாகி விடும்.
3. 8 ஆம் பாவத்திற்கு அதிக சுபர்கள் தொடர்பு கொண்டால் பெரும் புகழைத் தருகிறது. 8 ஆம் பாவத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட சுபர்கள் தொடர்பு கொண்டால் பெரிய அளவிலான புகழை தருகிறது.
4. 8 ஆம் பாவத்திற்கு அரசு கிரகங்கள் (சூரியன்/செவ்வாய்/குரு) தொடர்பு கொண்டால் அரசாங்க அரசியல் பொறுப்புகளை தருகிறது.
5. அஷ்டமாதிபதியாக சூரியன்/செவ்வாய்/குரு அமைந்து, இவர்கள் சுபர் வீட்டில் அமர்ந்தால் புகழ் பெறுகிறார்கள்.
6. 8 ஆம் அதிபதி யாராக இருந்தாலும் 2, 5, 9, 11 இதில் இருந்தாலும் இந்த அதிபதிகள் நோக்கினாலும் பெரும் புகழ் உண்டு. சேர்க்கை அல்லது பரிவர்த்தனை அல்லது சாரம் பெற்றாலோ பெரும் புகழ் உண்டு.
7. 8 ஆம் பாவத்திற்கு பலன் - (9,12 - குரு), (10,11 - சனி), (3,6 - புதன்) இந்த பாவங்கள் பெரும் பலன் பெறுகிறது.
8. உபஜெய ஸ்தானமாக 3,6,10,11 சிறப்படைகிறது.
9. இவர்கள் இறுதிக் காலத்தில் சுகபோகமாக வாழ்கிறார்கள்.
10. அஷ்டமாதிபதி லக்கின கேந்திரம் பெற்று தசை நடத்தும் போது ஜாதகருக்கு ராஜ யோகத்தை தருவார்.
 (இது போன்ற ஜாதகம் வந்தால் இந்த பலனை பயமில்லாமல் அடித்து சொல்லுங்கள்).                                                                                                                                                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...