பொதுவான தகவல்கள்
3 பாவத்திற்கு போகும் முன்பு பாவத்தையும் கிரகங்களையும் பற்றி
சற்று பார்த்துவிட்டு பிறகு 3 ஆம் பாவத்தினுள் செல்லலாம்.
1) ஜாதகத்தில் காலி கட்டங்கள் இருப்பது நல்லது இல்லை, காலியாக உள்ள கிரகங்கள் சனி மற்றும் கேதுவை போல செயல்படும்
(சனி - தடை, கேது - அதிகத்தடை). எனவே பாவகத்தில் எதாவது ஒரு கிரகமாவது
இருப்பது நன்று. காலியாக உள்ள பாவகம் சார்ந்த காரத்துவங்கள் தடைபடும் எனவே அந்த
காரகத்துவத்தின் மீது ஆசை வைக்க கூடாது (விட்டு கொடுப்பது நன்று).
உதாரணம்:
5 ஆம் இடம் காலியாக இருந்தால் பூர்விகம், குழந்தை போன்றவற்றில் சுகம் இருக்காது தடைகள் இருக்கும்.
1.1) சனி கேது இரண்டும் சேர்ந்து பார்க்கும் பாவகத்தின் பலனை அடைய முடியாது.
உதாரணம்:
சனி 10 ஆம் பார்வையாக 4 ஆம் பாவத்தை பார்க்கிறார், கேது 11 ஆம் பார்வையாக அதே 4 ஆம் பாவத்தை பார்க்கிறார் என்று கொண்டால் - வீடு வாங்குவதில், பிரச்சனை அல்லது வீடு வாங்க முடியாது. அந்த 4 ஆம் பாவத்தை குரு பார்த்தல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
2) லக்கினத்தில் இருந்து முதல் 6 கட்டங்கள் காலையையும் 7முதல் 12 வரை உள்ள
கட்டங்கள் மாலையையும் சொல்லும்.
உதாரணம்:
2 ஆம் அதிபதி (தனாதிபதி) அவர் முதல் 6 கட்டத்துக்குள் இருந்தால் பணவரவு காலை பொழுதிலும், 7-12வரை உள்ள கட்டத்தில் இருந்தால் மாலையில் பணவரவு. (வியாபாரம்
செய்பவர்கள் , ஜோதிடர்கள் அதற்க்கு ஏற்றாற்போல் தங்களின் வியாபாரநேரத்தை
வைத்துக்கொள்வது நன்று).
3) கிரகங்களின் பார்வைகள்
அனைத்து
கிரகத்திற்கும் 7
ஆம் பார்வை உண்டு.
செவ்வாய், குரு, சனி,
ராகு/கேது இவர்களுக்கு சிறப்பு பார்வைகள்
உண்டு அதை சற்று பார்ப்போம்.
செவ்வாய் 4,7,8 ஆம் பார்வைகள்
சனி - 3,7,10 ஆம் பார்வைகள்
ராகு / கேது - 3,7,11 ஆம் பார்வைகள்
குரு - 5,7,9 ஆம் பார்வைகள்
3-1) செவ்வாய்
3.1.1) செவ்வாய்க்கு 4 , 8 ஆகியவைகள் சிறப்பு பார்வை (4,7,8 ஆகிய மூன்று பார்வை செவ்வாய்க்கு உண்டு )
3.1.2) செவ்வாயின் 4 ஆம் பார்வை சொத்து பார்வை, சொத்து வீடு, மனை, வண்டி,
வாகனங்கள் போன்றவற்றை கொடுக்கும் பார்வை
3.1.3) செவ்வாயின் 8 ஆம் பார்வை ஒரு ரகசியத்தை சொல்லும், விபத்து பார்வை, அறுவை சிகிச்சை பார்வை.
3.1.4) கேட்டையும் கிணத்தடியும் ஒரு ரகசியத்தை
சொல்லும் என்பது பழமொழி,
8 ஆம் பாவத்தில் கேட்டை நட்சத்திரத்தில் உள்ள
கிரகமும் ரகசியத்தை சொல்லும்.
3.2) சனி, ராகு, கேது - 3 ஆம் பார்வை
3.2.1) இவர்களின் 3 ஆம் பார்வை இடமாற்றத்தை தரும் (3 ஆம் இடம் இடமாற்றம்)
3.2.2) சனி, ராகு, கேது இவைகளின் திசை / புத்தியில் அல்லது இவர்களின் சாரம் வாங்கிய கிரகங்களின்
திசை / புத்தியில் இடமாற்றம் இருக்கும்.
3.2.3) சனி, ராகு, கேது இவைகளின் திசை / புத்தியில் அல்லது இவர்களின் சாரம் வாங்கிய கிரகங்களின்
திசை / புத்தியில் அல்லது இவர்களின் 3 ஆம் பார்வைகொண்ட கிரகத்தின் திசை / புத்தியிலோ இளைய சகோதரன் அல்லது சகோதரி
பிறப்பார்கள்.
3.2.4) சனி, ராகு, கேது இவர்களின் 3
ஆம் பார்வையில் 3ஆம் பாவ காரத்துவங்கள் இயங்கும்.
3.2.5) சனி-செவ்வாய் சேர்ந்த பார்வைக்கு உதாரணம்
சனி லக்கினத்தை 3 ஆம் பார்வையாக பார்க்கிறார் , அதே லக்கினத்தை செவ்வாய் 8 ஆம் பார்வையாக பார்க்கிறார் என்று வைத்து
கொள்வோம்.
Ø நடப்பது செவ்வாய் திசை /புத்தி என்றால் இடம்
மாறவேண்டும் இல்லை என்றால் விபத்து நடக்கும்.
Ø நடப்பது சனி திசை /புத்தி என்றால் இடம்
மாறக்கூடாது,
மாறினால் விபத்து நடக்கும்.
3.3)
சனியின் 10 ஆம் பார்வை:
கர்மம் மற்றும்
தொழிலுக்கு காரகத்துவம் பெற்றவர் சனி ஆகையால் 10 ஆம் பார்வை.
3.4) ராகு/கேது - இவர்களின் 11 ஆம் பார்வை லாபப்பார்வை.
3.5) குரு 5, 9 பார்வைகள்:
5
ஆம் பார்வை பூர்வபுண்ணிய பார்வை,
9 ஆம் பார்வை பாக்கிய பார்வை ஆகையால் தான் குரு
பார்க்க கோடி நன்மை என்று பழமொழி உண்டு.
4)
கிழமை நாதன்:
ஞாயிறு -
சூரியன்
திங்கள் -
சந்திரன்
செவ்வாய் -
செவ்வாய்
புதன் - புதன்
வியாழன் - குரு
வெள்ளி -
சுக்கிரன்
சனி - சனி
இரவில்
பிறந்தவர்கள் அடுத்தநாளே கிழமை நாதனாக கொள்ள வேண்டும் (உதாரணம் - வியாழன் இரவு
பிறக்கும் குழந்தைக்கு கிழமை நாதன் சுக்கிரன் (வெள்ளி )
4.1) கிழமை நாதன் 6/8/12 இல் மறைய கூடாது, திதி சூன்யம், பாதகத்தில் இருக்க கூடாது.
4.2) கிழமைநாதன் பலம்கொண்டு இருப்பதும், லக்கினத்திற்கு தொடர்புகொண்டு இருப்பதும்
நன்று,
11 ஆம் பாவத்தில் இருந்தால் மிக நன்று.
5)
திக் பலம்
5.1)
லக்கினத்தில் குரு / புதன் திக்பலம்
5.2)
4இல் சுக்கிரன் / சந்திரன் திக்பலம்
5.3)
7இல் சனி திக்பலம்
5.4)
10இல் சூரியன் / செவ்வாய் திக்பலம்
6)
சிம்மமும், தனுசும்:
6.1) சிம்ம ராசியில் கிரகங்கள் இருந்தால் உதவிகள்
தேடிவரும்,
நன்மை பயக்கும்.
6.2) தனுசு இழந்த அந்தஸ்த்தை மீட்டு தரும் (கோதண்ட ராசி), குரு அல்லது சுக்கிரன் பார்வை சேர்க்கை தனுசு
ராசியில் இருந்தால் வீட்டில் ராமாயண புத்தகந்தால் இருக்கும் அல்லது இருக்க
வேண்டும்.
6.3) தனுசு, சிம்ம ராசிகள் திதிசூன்ய பாதிப்பை குறைக்கிறது.
6.4) 3ஆம் இடம் சிம்மம், தனுசு போன்றவற்றில்
வரும்போது புகழை சமுதாயத்தில் ஒருஅந்தஸ்த்தை தருகின்றது.
6.5) 10 ஆம் பாவம், 11 ஆம் பாவம் சிம்மம் அல்லது தினுசாக வரும்போது அந்தஸ்த்தும்
கீர்த்தியும் கிடைக்கின்றது, ஆனால் மணவாழ்க்கை மகிழ்ச்சியை குறைகின்றது.
6.6) 6ஆம் இடம் மேஷம், சிம்மம், தனுசு போன்ற வீடுகள் வந்தால் நல்ல நிர்வாக திறனை
தருகின்றது. உத்தியோகத்தில் நல்ல உயர்வு உண்டு.
7) உறவுகள்:
ஒரு உறவின்
காரகத்துவம் பெற்ற பாவதிபதி 6/8/12 இல் மறைய கூடாது, அதே போல் இரு உறவுகள் காரகத்துவம் பெற்ற
பாவதிபதிகள் 6/8
ஆகா இருக்க கூடாது. அப்படி இருந்தால் உறவின்
காரகத்துவம் பெற்ற கிரகத்தின் நிலையை காண வேண்டும்.
உதாரணம்:
7.1) 4ஆம் அதிபதி 6/8/12 இல் மறையக்கூடாது, தாயாருடனான உறவு பாதிக்கும். அப்படி இருந்தால் தாயாரின் காரகத்துவம்
பெற்ற சந்திரனின் நிலையை ஆராயவேண்டும்.
7.2) 4 ஆம் அதிபதியும் 9 ஆம் அதிபதியும் ஒருவருக்கு ஒருவர் 6/8 ஆகா இருக்க கூடாது அப்படி இருந்தால் தாய்
-தந்தையரின் ஒற்றுமை பாதிக்கும், அப்படி
இருக்கும் பட்சத்தில் தயார் காரகத்துவம் பெற்ற சந்திரன் மற்றும் தந்தையின்
காரகத்துவம் பெற்ற சூரியனின் நிலையை ஆராயவேண்டும்.
8) சூரியனுக்கு நின்ற வீட்டின் 3
ஆம் வீடும், சந்திரன் நின்ற வீட்டின் 2
ஆம் விடும் பயன் தராது.
உதாரணம்:
8.1) சூரியன் லக்கினத்தில் இருந்தால் அங்கிருந்து 3 ஆம் விடு இளைய சகோதரன் வீடு, இளைய சகோதரர்கள் இருக்க மாட்டார்கள் அல்லது
அவர்களால் பயன் இல்லை.
8.2) சந்திரன் 4 இல் இருந்தால்,
அதற்க்கு 2
டில் 5ஆம் பாவம், பூர்விக்கம் சார்ந்த பிரச்சனை இருக்கும்.
9) சுபர் / பாவர்:
9.1) சுபர் - குரு, சுக்கிரன், புதன், சந்திரன்.
9.2) அசுபர் - சனி, செவ்வாய், ராகு, கேது
9.3) சூரியன் - வளர்ச்சி (சூரியன் ஆச்சி உச்சம் பெறுவது யோகம்
(அம்சத்திலோ அல்லது ராசியிலோ)
10) திசை / புத்தி நடத்த கூடிய கிரகம் சுபரை
தொடும் பொது சுப பலனையும்,
அசுபரை தொடும் பொது அசுபபலனையும் தருகிறது.
11)
திசை / புத்தி நடத்த கூடிய கிரகம் சூரியனை
தொடும் பொது வளர்ச்சியை கொடுக்கிறது.
12)
கேத்திரதிபத்திய தோஷம்:
கேத்திர
ஸ்தானத்திற்கு சுபர்கள் ஆதிபத்தியம் பெற்று மற்றொரு கேத்திரத்தில் அவர்கள்
அமர்ந்து இருந்தால் அது கேந்திர ஆதிபத்திய தோஷம் என்று பொருள். (இவர்கள் பெயரில் சொத்துக்கள் இல்லாமல்
இருப்பது நலம்)
12.1) உபாயரசிகள் இயற்கையிலேயே கேந்திராதிபத்திய
தோஷம் கொண்டவை.
13) Silent Planets:
ஒவ்வொரு
வீட்டிற்கும் 7
ஆம் விட்டு அதிபதி silent planet
13.1) செவ்வாய்க்கு silent planet சுக்கிரன்
13.2) சுக்கிரனுக்கு silent planet செவ்வாய்
13.3) புதனுக்கு silent planet குரு
13.4) குருவுக்கு silent planet புதன்
13.5) சந்திரனுக்கு silent planet சனி
13.6) சூரியனுக்கு silent planet சனி
13.7) சனிக்கு silent planet சூரியன் மற்றும் சந்திரன்
(திசை நாதனுக்கு silent planet காரகத்துவம் சார்ந்த கேள்விகள் இருக்கும்)
அதாவது
செவ்வாய்
திசையில் சுக்கிரன் காரகத்துவம் பெற்ற கேள்வியும்
சுக்கிர
திசையில் செவ்வாய் காரகத்துவம் பெற்ற கேள்வியும் கேட்பார்கள்
14) விரையாதிபதியோ, சனியோ சிம்மத்தில் அல்லது ஒன்பதாவது
வீட்டில் இருந்தால் தந்தைக்கு அல்லது தந்தை வழியில் ஊனமுடையவர்கள், காணாமல் போனவர்கள், திருமணமாகாதவர்களை குறிக்கும்
15) விரையாதிபதியும் அல்லது சனியோ கடகத்தில் இருந்து அல்லது
நான்காம் இடத்தில் இருந்தால் தாய்க்கோ அல்லது தாய் வழியிலும் ஊனமுடையவர்கள், காணாமல் போனவர்கள்,
திருமணமாகாதவர்கள் இருப்பார்கள்.
இதை இப்படியே ஒவ்வொரு
பாவத்திற்கும் ஒவ்வொரு காரகத்துவம் இருக்கும் பொருத்தி பார்த்தால் சரியாக வரும்.
16) ஜோதிடம் படிக்க
வந்த அனைவரும் ஸ்ரீ ராமானுஜர் அல்லது சித்திரகுப்தனை வழிபடுவது நல்லது
தாக்கப்படுதல் நன்றாக இருக்கும்
Ø ராமானுஜர் கோவில் ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்
கோவில் உள்ளது சித்திரகுப்தன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ளது எல்லா நாட்களிலும் வழிபடலாம்
17) படிப்பில் தடைகள் நீங்கி தொடர்ந்து படிக்க
விவேகானந்தரை வழங்க வேண்டும்.
Ø சென்னை திருவல்லிக்கேணியில் உள்ளது.
18) உத்யோகத்தில் மேலதிகாரியுடன் பிரச்சனை உத்யோகத்தில் புதிய
உயர்வுக்கு தடை போன்றவைகள் இருப்பவர்கள் இரண்டு கொடிமரம் உள்ள கோவிலில் தரிசிக்க
வேண்டும்.
Ø திருவல்லிக்கேணி பார்த்தசாரதி 2 கோடி மரங்கள் உள்ளது
செவ்வாய் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபடலாம் அதேபோல் வாகன பிரச்சனைகள்
இருந்தாலும் இவரை வழிபடுவது நல்லது.
கொடியேற்றத்தை பார்ப்பது நல்லது வாழ்க்கையில் ஏற்றம் தரும் கொடி இறக்கத்தை
பார்க்கக்கூடாது கூடியிருப்பதை பார்க்க நேர்ந்தால் வீட்டுக்கு வந்த பின்பு தலையில்
துண்டு கட்ட வேண்டும் சில மணி நேரங்கள் புல் தரையில் இருக்க வேண்டும்
1)
உபஜெயாஸ்தானம்
1.1) 3,6,10,11 ஆகிய இடங்கள் உபஜெயாஸ்தானம்
(உப + ஜெயம்) ஜெயதிருக்கு துணை நிற்கும் பாவம்.
1.2) கேந்திர, திரிகோண
அதிபதிகள் ஜாதகத்தை வழிநடத்த முடியாமல் போனாலும் இந்த
உபஜெயஸ்தான அதிபதிகள் ஜாதகரின் வெற்றி பாதிக்கு வழி காட்டுவார்கள்
1.3) ஒரு கதவு அடைத்தால் மற்றொரு கதவு
திறக்கும் என்பதையும் குறிக்கும் பாவம் இந்த 3 ஆம் பாவம்.
2)
காமாதிரிகோணம்
2.1) 3,7,11 ஆம் பாவங்கள் காமாதிரிகோணத்தை குறிக்கும்
பாவங்கள்.
2.2) 3 ஆம் பாவம் திருமணத்திற்கு முன் ஏற்படும்
தாபத்திய உறவை சொல்லக்கூடியது.
2.3) 7 ஆம் பாவம் திருமணத்தாள் ஏற்படும் தாபத்திய
உறவை சொல்லக்கூடியது.
2.4) 11 ஆம் பாவம் திருமணத்திற்கு பின் ஏற்படும்
முறையற்ற தாபத்திய உறவை சொல்லக்கூடியது.
ஆகா இந்த மூன்ற
பாவம்,
உபஜெயாஸ்தானத்திலும் , காமாதிரிகோண வீடுகளிலும் முதல் ராசியாக
வருகிறது.
3) இந்த மூன்றாம் பாவம் ஜாதகரின் முயற்ச்சியை குறிக்கும் வீடாக வருவதால், ஜாதகரின் எல்லா கேள்விக்கும் முயற்ச்சி
என்னும் இந்த 3
ஆம் பாவத்தை இணைப்பதே பதில் சொல்ல
வேண்டியுள்ளது.
உதாரணம்:
3-7
அதிபதிகள் சுப சம்மந்தம் இல்லாமல் போனாலும்
அல்லது 3
மற்றும் 7 ஆம் அதிபதிகள் ஒன்றுக்கு ஒன்று 6,8,12 ஆகா அமைத்து விட்டால், ஜாதகருக்கு திருமண முயற்சியை செய்வதற்கு
ஆட்கள் இல்லாமல் போவார்கள்.
4)
3 ஆம் இடத்தில் அதிக கிரகங்கள் இருந்தால்
ஜாதகருக்கு வளமான வாழ்வு நிச்சயம், சமுதாயத்தில் ஒரு நன்மத்திப்பை பெறுவார்கள்.
5) ஒரு உபஜெய ஸ்தானாதிபதி இன்னொரு உபஜெய ஸ்தானத்தில் இருந்தால் நல்ல பொருளாதார
வளர்ச்சி இருக்கும்.
6)
3 ஆம் இடத்தில் பாவிகள் இருப்பின் நல்ல
பொருளாதார வளர்ச்சி உண்டு அதே நேரம் ஆரோக்கிய குறைபாடுகள் இருக்கும். (பொருளாதரம்
சேரும் பொது சில கேட்டபழகங்கள் அல்லது உடல்நிலையை பாதுகாக்க நேரமின்மை
போன்றவற்றால் உடல்நலம் பாதிக்கும் )
7)
3 ஆம் இடத்தில் சுபர்கள் இருந்தால் சுமாரான
பொருளாதார வளர்ச்சி அதே நேரம் நல்ல தேக ஆரோக்கியம் இருக்கும் (பிரச்சனைகளுக்கு
தீர்வு/உதவிகள் கிடைக்கும் ஆகையால் எல்லாப்பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும்).
8) உபஜெயஸ்தானம் திதிசூன்ய / பாதகாதிபதி பாதிப்பை குறைக்கிறது (திதிசூன்ய
பாதிப்பை தாங்கும் மனப்பக்குவத்தை / மனவலிமையை கொடுக்கும்)
உதாரணம்:
ஒருஜாதகருக்கு
திதிசூன்ய அல்லது பாதகாதிபதி பாதிப்பால் வண்டி, வாகன யோகம் இல்லை என்று வைத்து கொள்வோம், உபஜெயாஸ்தானம் சம்மதம் பெற்றால் ஜாதகர் வண்டி வாகனத்தின் மேல் ஆசை வைக்க
மாட்டார்.
9) எந்த ஒருகிரகத்திற்கும் 3,6,10,11 இல் கிரகம்
இருப்பது அந்த கிரகத்திற்கு வலிமையை சேர்க்கிறது.
உதாரணம்:
9.1) லக்கினத்திற்கு 2
இல் கிரகம் இருந்தால் ஜாதகருக்கு சொத்து
உண்டு,
காரணம் 4 ஆம் பாவமான சொத்து பாவத்திற்கு 11 ஆம் பாவமாக (லாபஸ்தானமாக) 2 ஆம் பாவம்
வரும்.
9.2) லக்கினத்திற்கு 3
இல் கிரகம் இருந்தால் ஜாதகருக்கு குழந்தை
பாக்கியம் உண்டு,
5 ஆம் பாவத்திற்கு 11 ஆம் பாவமாக வருவதால்.
10) கேந்திர அதிபதிகளும்,
திகோண அதிபதிகளும் செய்யாத பலனை இந்த
உபஜெயஸ்தனாதிபதிகள் தருவார்கள்.
11)
உபஜெயஸ்தனாதிபதிகள் தங்களின் பலனை 40 வயதுக்கு மேல் அபாரமாக செய்கின்றனர். 3இல் உள்ள கிரகம் பலம் குறைய கூடாது, அதே நேரம் 3 ஆம் அதிபதி பலம் பெரும் பொது குடும்பத்தை விட்டு பிரிகின்றது (வேலைக்காக, படிப்பிற்க்காக குடும்பத்தை வீட்டு பிரிவது போன்றவை)
12) மூன்றாம் பாவகத்தின் காரகத்துவங்கள்
12.1) இளைய சகிதரத்துவம் (சகோதரி அல்லது சகோதரன்).
12.2) வீரம்.
12.3) தைரியம்.
12.4) தேகம்.
12.5) போகம்.
12.6)
வீரியம் (strength)
12.7) எழுப்புதல் அல்லது மீண்டுவருதல்
12.8) அவசரம்
12.9) குரல்
12.10) இசை
12.11) கலை
12.12) பலக்குரல் பேசுதல் (mimicry)
12.13) மாமனார்
12.14) இடமாற்றம்
12.15) தகவல் தொடர்பு
12.16) குறுகிய பயணம்
12.17) வெளிநாட்டு பயணம்
12.18) கவிதை கட்டுரை எழுத்து
12.19) பதிவு / ரெக்கார்ட் (Record)
12.20) வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (Renewal) ரெனிவல் செய்தல்
12.20) கோப்புகள் files
12.21) DTP (Data Entry Operator)
12.22) விடாமுயற்சி
12.23) கவனித்தல்
(Observation)
13.22) கழுத்து
13.22) சுயம்பு
13.23) மூக்குத்தி
13.24) கம்பல்
13.25) கழுத்துக்கு கீழ் அணியும்
ஆபரணங்கள் (நெக்லஸ்).
13.26) சீட்டு தொழில்
13.27) வடிகட்டுதல்
13.28) கைக்குட்டை
13.29) ஆய்வு (analysis)
13.30) காது தொண்டை மூக்கு (ENT)
13.31) அஞ்சல் வழி கல்வி
13.32) இரட்டைப் பிறவி
13.33) இடது கை எழுத்து
13.34) குரல்
13) காரகத்துவ விளக்கங்கள்:
13.1) இளைய சகோதரத்துவம் (சகோதரி அல்லது
சகோதரன்) - காரகத்துவம் பெற்ற கிரகம் செவ்வாய்.
Ø மூன்றாம் அதிபதி, மூன்றாம் இடம், செவ்வாயும் ஆகிய இந்த மூன்றும் கெட்டால் இளைய சகோதரம் இல்லை அல்லது இளைய
சகோதரம் உறவு முறை சரியில்லை.
13.2) வீரம் - காரகத்துவம் பெற்ற கிரகம் செவ்வாய்.
Ø வீரதீர செயல்கள் செய்வது, தண்ணீரில் அடித்துச்செல்பவரை கைப்பற்றுவது, ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வது, நெருப்பில் மாட்டியவரை காப்பாற்றுவது போன்ற
வீரதீர செயல்கள் செய்வது.
13.3) தைரியம் - காரகத்துவம் பெற்ற கிரகம் செவ்வாய்.
Ø ஒருகாரியத்தை அச்சம் இன்றி செய்வது, துணிச்சலுடன் ஒரு பிரச்னையை எதிர்கொள்வது
போன்றவைகள்.
13.4) தேகம் – காரகத்துவம் பெற்ற கிரகம் செவ்வாய்.
Ø திடகாத்திரமான உடலமைப்பை (தேகம்) கொண்டு
இருப்பது
13.5) போகம் - காரகத்துவம் பெற்ற கிரகம் சுக்கிரன், ராகு.
Ø காம உணர்வு அல்லது அனுபவிக்க ஆகைப்படுவது
13.6) வீரியம் (strength) - காரகத்துவம் பெற்ற கிரகம் செவ்வாய்.
Ø 10,11,12 ஆகிய இடங்களில் 3ஆம் அதிபதி பலமுடன் இருந்தால் கால்களில் அதிக
பலம் இருக்கும்,
பலமிழந்து இருந்தால் கால்களில் வலிமை
குறையும் (இவ்வாறாக ஒவ்வொரு பாவத்திற்கும் போட்டு பலன் எடுக்கலாம்).
Ø இதை தாம்பத்திய சுகத்திற்கும் பார்க்க
வேண்டும். 3ஆம் அதிபதி 7 இல் செவ்வாய்,
சுக்கிரனுடன் பலம் பொருந்தி இருந்தால் ஜாதகர்
தாம்பத்தியத்தில் வீரியமானவர், 3ஆம் அதிபதி, செவ்வாய், சுக்கிரன் இவைகள் மூவரும் கேட்டு 7ஆம் இடத்தோடு சம்மதம் பெற்றால் வீரியம் குறைவு.
13.7) எழுப்புதல் அல்லது மீண்டுவருதல் - காரகத்துவம் பெற்ற கிரகம் செவ்வாய்.
Ø ஒருவர் கடனில் இருந்து மீண்டுவருவாரா?
3ஆம் அதிபதி பலம் பெற்று 6 ஆம் பாவத்தோடு
சம்மதம் பெற்றால் கடனில் இருந்து மீண்டுவருவார். அதே 3ஆம் அதிபதி பலம் இழந்து 6 ஆம் பாவத்தோடு சம்மதம் பெற்றால் கடனால்
அவதிப்படுவார்.
Ø மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்
உள்ள ஒருவர் குணமாகி மீண்டுவருவாரா ?
3ஆம் அதிபதி பலம் பெற்று 12 ஆம் பாவத்தோடு
சம்மந்தம் பெற்றால் ஜாதகர் விரைவில் மீண்டுவருவார், அவர்பலம் இழந்து 12ஆம் பாவத்தோடு சம்மந்தம் பெற்றால் நீண்டநாள்
சிகிச்சை தேவைப்படலாம்.
Ø 3ஆம் அதிபதி பலம் பெற்று 8ஆம் பாவத்தோடு சம்மந்தம் பெற்றால் பெரிய
விபத்துகள் நடந்தாலும்,
ஜாதகர் பிறர் உதவியின்றி தானாக எழுந்து
நடந்து வருவார். 3ஆம் அதிபதி பலம் இழந்து 8ஆம் பாவத்தோடு சம்மந்தம் பெற்றால் சிறிய
விபத்தானாலும் ஜாதகர் அடுத்தவர் உதவியை எதிர்பார்ப்பார்.
Ø 3ஆம் அதிபதி கெட்டு லக்கினத்தில் இருந்தால்
ஜாதகர் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க மாட்டார்.
13.8) அவசரம் - காரகத்துவம் பெற்ற கிரகம் சந்திரன்.
Ø அவசர பட்டு ஒருகாரியத்தை செய்து இழப்பை
சந்திப்பது. 2இல் கேது அல்லது 3இல் சந்திரன் இருப்பவர்கள் வரப்பட்டு பேசி
இழப்பை சந்திப்பார்கள்.
Ø சந்திரன் - நெல்மணிகளை காரத்துவம் பெற்றவர், அதனால் தான் நெல்லை போட்டால் பொறுக்கிவிடலாம், சொல்லை போட்டால் பொறுக்கமுடியாது என்ற
பழமொழியும் உண்டு.
13.9) குரல் - காரகத்துவம் பெற்ற கிரகம் குரு
Ø 3ஆம் இடம், 3ஆம் அதிபதி,
குரு மூன்றும் நன்றா இருந்தால் குரல் வளம்
இனிமையாக இருக்கும்.
13.10) இசை - காரகத்துவம் பெற்ற கிரகம் சுக்கிரன்.
13.11) கலை - காரகத்துவம் பெற்ற கிரகம் சுக்கிரன்
Ø 5,12, சுக்கிரன் மூன்றும் சம்மதம் பெற்று பலமுடன்
இருந்தால் நாட்டியம் நடனம் ஈடுபாடு இருக்கும் (5 ஆம் இடம் கலை, 12 ஆம் இடம் கால்,
சுக்கிரன்- கலை)
13.12) பலக்குரல் பேசுதல் (mimicry) - காரகத்துவம் பெற்ற கிரகம் புதன்
Ø ரோகிணி, மூலம் இரண்டு நட்சத்திரமும் மாறுவேடப்போட்டிக்கு நல்ல பலன் தரும்.
13.13) மாமனார் - காரகத்துவம் பெற்ற கிரகம் சூரியன்
Ø 3ஆம் அதிபதியும் சூரியனையும் வைத்து
மாமனாருக்கு பார்க்கவேண்டும்.
Ø 9ஆம் அதிபதியும் சூரியனையும் வைத்து தகப்பனாருக்கு பார்க்கவேண்டும்.
13.14) இடமாற்றம் - காரகத்துவம் பெற்ற கிரகம் சந்திரன்
Ø 3ஆம் இடம் என்றாலே இடம் மாற்றம் தான்.
Ø 3ஆம் அதிபதி 5இல் இருந்தால் குலதெய்வம் இடமாறும், மருத்துவமனையில் குழந்தை மாற வாய்ப்பு உண்டு.
Ø 3ஆம் அதிபதி 4இல் ஒரு சொத்தை மற்றவர் பெயருக்கு மாற்றி எழுதி இருப்பார் அல்லது மாற்றி
எழுதவேண்டியது இன்னும் செய்யாமல் இருப்பார்.
Ø 3ஆம் அதிபதி 7இல் இருந்தால் திருமணத்தேதி மாற்றம், திருமணமண்டபம் மாற்றம்,
சிலநேரங்களில் திருமணபெண்ணே மாறவும் வாய்ப்பு
உண்டு (திதி சூன்யம்,
பாதகத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும்).
Ø 3,5,12 சம்மந்தம் பெற்று திதிசூன்யம் / பாதகமும்
சேர்த்துக்கொண்டால் வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்தவர்களை சொல்லும்.
13.15) தகவல்
தொடர்பு - காரகத்துவம் பெற்ற கிரகம் புதன்
Ø தகவல் பரிமாற்றம் சரியாக
உள்ளதா என்பதை இதன் மூலம் கணக்கிடலாம்.
Ø மூன்றாம் இடமும் கெட்டு, காரக கிரகம் புதனும் கேட்டிருந்தால் நமக்கு வர வேண்டிய
தகவல்கள் நமக்கு வரவேண்டிய கடிதங்கள் அடுத்தவர் வீட்டிற்குச் செல்லும்.
அடுத்தவர்களுக்கு போய் சேர வேண்டிய கடிதங்கள் நமக்கு வந்து சேரும்.
13.16) குறுகிய பயணம் - காரகத்துவம்
பெற்ற கிரகம் சந்திரன்
Ø தோராயமாக ஒரு 30 அளவில் பயணிப்பது
13.17) வெளிநாட்டு பயணம் -
காரகத்துவம் பெற்ற கிரகங்கள் சந்திரன், ராகு.
Ø மூன்றாம் அதிபதி லக்னத்தில்
இருந்தாலும் லக்னாதிபதி 3ல் இருந்தாலும் ஜாதகர் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சைனா, கொரியா,
தாய்லாந்து , தைவான் , இந்தோனேஷியா மற்றும் அரபு நாடுகளுக்கு செல்வார்கள். இவைகள்
மூன்றாம் பாவம் சம்பந்தப்பட்ட நாடுகள்.
Ø மூன்றாம் அதிபதி 10ல் இருந்தால் ஜாதகர் மேற்சொன்ன நாடுகள் சார்ந்த
நிறுவனத்தில் வேலை செய்வார்.
Ø 3க்கு உடையவன் 7, 10, 12 ஆகிய பாவங்களில் இருந்தால்
குறுகிய காலம் வெளிநாட்டில் இருந்து மீண்டும் தாய் நாட்டிற்கு வருவார்கள்.
Ø 7 ஆம் பாவம் மற்றும் 12 ஆம் பாவம் அல்லது 9 ஆம் பாவம் மற்றும் 12 ஆம் பாவம் சம்பந்தப்பட்டால் நீண்ட நாட்கள் வெளிநாட்டில் இருப்பார்கள்.
Ø 3க்கு உடையவன் 4ல் இருந்தால் அவர்கள் வீடு
குறுகிய வாசல் கொண்டதாக இருக்கும் அகலம் குறைவு நீளம் அதிகம்.
உதாரண ஜாதகம் – 1:
மேலே கொடுக்கப்பட்ட ஜாதகத்தில்,
Ø மூன்றாம் அதிபதி லக்கினத்தில், ஜாதகர் சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, சீனா, தைவான் ஆகிய அனைத்து
நாடுகளிலும் வேலைசெய்தவர்.
Ø 3 ஆம் அதிபதியே 10 ஆம் அதிபதியாக
வருகிறார், இவர் வேலை செய்த நிறுவனங்கள் சிங்கப்பூர் சார்ந்தவை.
Ø 9ஆம் அதிபதி
சுக்கிரன் 12 இல், 12 ஆம் அதிபதி சனி 7 இல், ஆகா ஜாதகர் நீண்ட நாட்கள் வெளிநாட்டில் உள்ளவர்.
13.18) கவிதை, கட்டுரை, எழுத்து - காரகத்துவம் பெற்ற கிரகம் புதன்.
Ø 3 மற்றும் 9 ஆகிய பாகங்கள் எழுதுவதை குறிக்கின்றது. மூன்றாம் பாவம்
எழுதுவதை குறிக்கும் ஒன்பதாம் பாவம் எழுதியதின் வளர்ச்சியை குறிக்கும் (முதல்
பாகம், இரண்டாம் பாகம் என்று
தொடர்ச்சியாக எழுதுவதை)
13.19) பதிவு / (Record)ரெக்கார்ட் - காரகத்துவம் பெற்ற கிரகம் புதன்
13.20) விடாமுயற்சி - காரகத்துவம்
பெற்ற கிரகம் செவ்வாய்.
Ø 12, 1, 2, 7, 10 ஆகிய இடங்களில் செவ்வாய்
இருந்தால் விடாமுயற்சி உடையவர்கள். பன்னிரண்டில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் போய்
லக்னத்தை தொடும், இரண்டில் செவ்வாய்
இருந்தால் லக்னம் போய் செவ்வாயை தொடும், ஏழு அல்லது பத்து செவ்வாய்
இருந்தால் லக்னத்தை செவ்வாய் பார்க்கும் ஆக செவ்வாயின் தொடர்பு லக்னத்திற்கு
இருக்கும்.
13.21) கவனித்தல் (Observation) -
காரகத்துவம் பெற்ற கிரகங்கள் புதன், குரு.
Ø மூன்றாம் பாகமும் புதனும்
வலுத்தாலும் அல்லது மூன்றாம் பாவமும் குருவும் வலுத்தாலும் ஜாதகர் ஆசிரியர் இன்றி
கலைகளை கற்பார்.
Ø புதனுக்கு ஐந்தாமிடம்
வலுத்தாலும், புதனுக்கு ஐந்தாம் இடத்தில்
வலுவான கிரகங்கள் இருந்தாலும், ஐந்தாம் இடத்திற்கு ஐந்தாம்
இடத்தில் புதன் இருந்தாலும் ஜாதகர் ஆசிரியரின்றி கலைகளை கற்பார். நல்ல கவனிக்கும்
திறன் இருக்கும் (Observation Capacity).
13.22) கழுத்து நரம்பு - காரகத்துவம் பெற்ற கிரகம் சனி
Ø 3-க்குடையவர் பலம்
குறைந்தால் கழுத்துவலி உண்டு
13.22) சுயம்பு (தானாக வளர்தல்) - காரகத்துவம் பெற்ற
கிரகம் சூரியன்
Ø சிலருக்கு கட்டி எடுக்க எடுக்க வளருதல், இது போன்று தானாக வளரும் பிரச்சினைகளுக்கு
சுயம்பு விநாயகர் அல்லது புற்று போன்றவற்றை
வணங்க வேண்டும்.
13.23) வடிகட்டுதல்
Ø மூன்று வடிகட்டுதல்,
நான்காமிடம் தண்ணீர் மூன்றும் நான்கும் சம்மந்தம் பெற்றால் இவர்கள் தண்ணீரை வடிகட்டி
குடிப்பார்கள்.
13.24)
அஞ்சல் வழி
கல்வி
Ø 5 ஆம் பாவம்
மற்றும் 9ஆம் பாவத்திற்கு, மூன்றாமிடம் தொடர்பு கொண்டால் அஞ்சல் வழிக்கல்வி நிச்சயம்.
13.25)
இரட்டைப் பிறவி - காரகத்துவம் பெற்ற கிரகங்கள் செவ்வாய்
ராகு, கேது, புதன் மற்றும் குரு.
Ø மூன்று இளைய சகோதரம், 11 மூத்த சகோதரம், செவ்வாய் சகோதரகாரகன், ராகு/கேது, புதன் இரட்டைத்
தன்மை கொண்டவர்கள், குரு குழந்தை.
இரட்டை
பிறவி ஜாதக அமைப்பு:
Ø குரு,
செவ்வாய், புதன் வீடுகளில் ராசியையோ அல்லது லக்னமாகவும்
அமைவது.
Ø இரட்டைப் பிறவி நட்சத்திரங்கள் அசுவினி, புனர்பூசம், மகம், விசாகம், கேட்டை, மூலம்.
Ø குரு,
செவ்வாய், சூரியன் இவர்கள் உடைந்த நட்சத்திரங்கள் 50 சதவிகிதம்
சம்பந்தப்படுகிறது
Ø கிரகச் சேர்க்கை குரு+செவ்வாய்,
செவ்வாய்+கேது, செவ்வாய்+ராகு, குரு+ராகு, குரு+கேது ராசியிலோ அல்லது அம்சத்திலோ கிரக
சேர்க்கை பெறுவது.
Ø லக்னமும்,
லக்னாதிபதியும், மூன்றாம் அதிபதி சாரம் பெற்று நவாம்சத்தில்
புதன் வீடுகளில் இருந்தால் ஜாதகர் இரட்டைப் பிறவிகளில் ஒருவர்
Ø 1, 3, 11 ஆம் பாவங்கள் தொடர்பு ஏற்பட்டு, இவர்களுடன் இரட்டைப்பிறவி நட்சத்திரங்கள்
சேர்த்துக்கொள்வதோடு திதிசூன்யம், பாதகாதிபதி
சம்மந்தம் பெற்றால் ஜாதகர் இரட்டை பிறவியில் ஒருவர்.
Ø 5, 7, 11 ஆம் பாவங்கள் தொடர்பு ஏற்பட்டு, இவர்களுடன் இரட்டைப்பிறவி நட்சத்திரங்கள்
சேர்த்துக்கொள்வதோடு திதிசூன்யம், பாதகாதிபதி
சம்மந்தம் பெற்றால் ஜாதகருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும்.
உதாரண ஜாதகம் - 2: ஜாதகர் இரட்டை
பிறவி - மூத்தவர்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில்,
துலாம் லக்கினம்,
திதிசூன்ய அதிபதி - புதன்
பாதகாதிபதி - சூரியன்
Ø மூன்றாம் அதிபதி குரு இரட்டை பிறவியை குறிக்கும் கிரகம்
அதோடு அவர் சொந்தவீட்டில் ஆட்சியாகி உள்ளார், அவருடன் இருப்பது ராகு இதுவும் இரட்டை பிறவியை குறிக்கும்
கிரகம்.
Ø குரு + ராகு சேர்க்கை இரட்டை பிறவியை குறிக்கும்
கிரகசேர்க்கை.
Ø ராகு வாங்கி இருப்பது புதன் சாரம் அவரும் இரட்டை பிறவியை
குறிக்கும் கிரகம். அதோடு இவரே திதிசூன்ய அதிபதியாக வருகிறார். புதனோடு இருப்பது
பாதகதியாதி சூரியன்.
Ø பாதகாதிபதி சூரியன் பொய் தொடுவது மூன்றாம் அதிபதி குருவை.
இரட்டைப்பிறவியை குறிக்கும் பல அமைப்புகள் ஜாதகத்தில் உள்ளது. ஜாதகர் இரட்டை
பிறவியில் மூத்தவர்.
உதாரண ஜாதகம் - 3: ஜாதகரின் இளைய சகோதரம் இரட்டை பிறவி
கும்ப லக்கினம்
திதிசூன்ய அதிபதி - செவ்வாய், சூரியன்
Ø 3 ஆம் அதிபதி
செவ்வாய் லக்கினத்தில் உள்ளார், செவ்வாய் இரட்டை பிறவியை குறிக்கும் கிரகம் அதோடு அவரே
திதிசூன்ய அதிபதியாகவும் உள்ளார், அவரோடு மற்றொரு திதி சூன்ய அதிபதி சூரியனும் உள்ளார்.
Ø செவ்வாய் ராகு சாரம், ராகுவும் இரட்டைப்பிறவியை குறிக்கும் கிரகம்.
Ø செவ்வாய் கேது கிரகசேர்க்கை இரட்டை பிறவியை குறிக்கும் கிரக
சேர்க்கை.
Ø 3ஆம் இடம் இளைய
சதோதரத்தை குறிக்கும் ஆகா ஜாதகத்தரின் இளைய சதோதராம் இரட்டை பிறவி
உதாரண ஜாதகம் – 4 குழந்தைகள் இரட்டையர்கள் உதாரண ஜாதகம்.
Ø ஜாதகர் சப்தமிதிதியில் பிறந்தவர், திதி தனுசு, கடகம் திதிசூன்யம்.
Ø ஐந்தாம் இடத்து அதிபதி புதன் பாதகாதிபதியுடன்
சேர்ந்து ட்வின்ஸ் (twins)
நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் உள்ளார்.
Ø புத்திர காரகன் குருவும் திதிசூன்ய
அதிபதியாகி புனர்பூசம் (twins
நட்சத்திரத்தில்) உள்ளார் இவருக்கு இரட்டை குழந்தைகள்
பிறந்தார்கள்.
Ø குரு வர்கோத்தமம் பெறுவதும் அல்லது ஐந்தாம்
அதிபதி வர்க்கோத்தமம் பெறுவதும் மேலும் உறுதிப்படுத்துகின்றது.
Ø லக்னம் வர்கோத்தமம் பெற்று அதில் ஐந்தாம்
அதிபதியம்,
பாதகாதிபதி சனி லக்னத்தில் இருப்பது மேலும்
உறுதிப்படுத்துகிறது.
13.26) இடது கை எழுத்து -
காரகத்துவம் பெற்ற கிரகம் புதன்.
Ø 3, 9 ஆகிய இரண்டு
பாவங்கள் எழுத்தை கூறும்.
மூன்றாமிடம் எழுத்து அதன் விருத்தியை கூறக்கூடியது 9 ஆவது இடம்
Ø வக்கிரகிரகங்கள், திதிசூன்யம் மற்றும் பாதகாதிபதி இவர்கள் உறவுமுறையை / பழக்க வழக்கங்களை மாற்றி
அமைப்பார்கள்.
·
அதாவது உறவு மாறி
திருமணம் செய்தல், மூத்த
பெண்ணை திருமணம் செய்தல் போன்றவைகள் இதன் பலனாக அமையும்.
·
சாப்பிட்டபின்
குளிப்பது போன்ற முரண்பாடான பழக்கங்களையும் இது குறிக்கும்.
Ø இட ஓட்டு நட்சத்திரங்கள் ஆகிய ரோகிணி, மிருகசீரிஷம்,
திருவாதிரை, மகம், பூரம், உத்திரம், விசாகம், அனுஷம், கேட்டை, திருவோணம், அவிட்டம், சதயம் இவைகள் இடதுகை பழக்கத்திற்கு காரணமாக அமைகின்றன. அதிலும் ரோகிணி, திருவாதிரை, உத்திரம் இவைகள் எல்லாம் இடதுகை
எழுத்துக்கு அதிக பங்கு வகிக்கின்றன.
Ø 3 அல்லது 9 இல் வக்கிரங்கள்
இருப்பது அல்லது பார்ப்பது இடது கை பழக்கத்தை சொல்லும்
Ø மூன்றாம் அதிபதியோ அல்லது புதனோ வக்ரம் பெறுவது இடது கை
பழக்கத்தை சொல்லும்
Ø புதன் +
ராகு, ராகு + புதன் சேர்க்கை பெறுவது
இடது கை பழக்கத்தை சொல்லும்.
Ø திரும்பத் திரும்ப செய்யும் வேலையை விட ஓட்டு நட்சத்திர
நாட்களில் செய்வது நன்று.
Ø அர்ஜுனன் பிறந்தது உத்திர நட்சத்திரம், உத்திரம் இடது கை பழக்கமுடைய நட்சத்திரம்.
Ø இட ஓட்டு நட்சத்திரத்தில் செய்யும் வேலையை இடதுகையால்
ஆரம்பிக்க வேண்டும்.
·
உதாரணமாக - 7 ஆம் அதிபதி இடஒட்டு நட்சத்திரத்தில்
இருந்தால், முதல் பத்திரிக்கையை இடதுகையால் கொடுக்கவேண்டும்.
உதாரண ஜாதகம் – 5 இடதுகை எழுத்து எழுதுபவர் உதாரண ஜாதகம்
Ø 3 மற்றும் 9இல் வக்கிர கிரகங்கள்.
Ø ஒன்பது பாதகாதிபதி சந்திரன் (ரேவதி) புதன்
நட்சத்திரத்தில்.
Ø புதன் திருவாதிரை நட்சத்திரத்தில் - இடஓட்டு
நட்சத்திரத்தில்.
Ø மூன்றாம் அதிபதி சனி உத்திரம்
நட்சத்திரத்தில்
- இடஓட்டு நட்சத்திரத்தில்.
Ø ராகு 9-இல் (ஆயில்யம்) புதன் நட்சத்திரத்தில்.
Ø மூன்றாம் அதிபதி + லக்னாதிபதி + திதிசூன்ய
அதிபதி ஒன்று சேர்ந்து - இடஓட்டு நட்சத்திரத்தில் உள்ளார்கள்.
Ø இந்த ஜாதகத்தில் ஆறு கிரகங்கள் இடஓட்டு
நட்சத்திரத்தில் இருக்கின்றன எனவே இடது கை பழக்கம் உடையவர்.
Ø ஆறு கிரகங்களில் இருக்கின்றது எனவே வாழ்க்கை
பின்னோக்கிப் போகும். இவர்கள் விற்ற பொருளை திரும்ப வாங்கி விற்பது (second hand sales) போன்ற வேலை செய்வது பயன்தரும்
13.27) குரல் - காரகத்துவம் பெற்ற கிரகம் புதன்.
Ø ஆண் ஜாதகத்தில் மூன்றாவது இடம் பெண் ராசியாகி, மூன்றாவது அதிபதியும் பெண்ராசியில் இருந்து, அவர்களுடன் பெண் கிரகங்கள் தொடர்பு பெற்று, இதில் திதி
சூனியம் அல்லது பாதகம் சம்பந்தம் பெற்றால், அவர்களின் குரல்
பெண் குரல் போல் இருக்கும் அல்லது கீச்சுக்குரல் போல் இருக்கும்.
Ø பெண் ஜாதகத்தில் மூன்றாவது இடம் ஆண் ராசியாகி, மூன்றாவது அதிபதி ஆண் ராசியில் இருந்து, இவர்களுடன் ஆண் கிரகங்கள் சம்பந்தப் பட்டு, திதி
சூனியம் அல்லது பாதகம் சேர்ந்துகொண்டால் இவரது குரல் ஆண் குரல் போல் இருக்கும்
அல்லது கீச்சுக் குரலில் பேசுவார்கள்
Ø மூன்றாம் அதிபதி மூன்றாம் இடத்தைப் பார்ப்பது நல்ல குரல்
வளத்தை தரும் (எம்.எஸ்
சுப்புலட்சுமி அம்மையாருக்கு இந்த அமைப்பு உண்டு).
Ø மூன்றில் சுப கிரகங்கள் நல்ல குரல்வளம் அதோடு மூன்றாம்
அதிபதி 3ல் இருந்தால் புகழ் நிச்சயம்.
உதாரண ஜாதகம் – 6 பெண் குரலில் பேசுவதற்கு உதாரண ஜாதகம்:
Ø ஜாதகர் திரியோதசி திதியில் பிறந்தவர், ரிஷபம், சிம்மம் திதிசூன்யம்.
Ø மூன்றாமிடம் பெண் வீடாகி குரலைக் குறிக்கும்
புதன் பாதகாதிபதி சந்திரனின் திருவோணம்
நட்சத்திரத்தில்,
திதி சூன்ய அதிபதி சூரியனுடன்.
Ø மூன்றாம் அதிபதி சனியும், ராகு உடன் (பெண்கிரகம்) சேர்ந்து பெண் ராசியில் உள்ளார்.
Ø ஜாதகர் பெண் குரல் போல் பேசுவார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக