வெள்ளி, 26 ஏப்ரல், 2019

6 ம்,பாவம்


                                                                                                                             ஆரம்பம்   6.ம் பாவம் காரகங்கள்
1. நோய்
2. உத்தியோகம்
3. கடன்
4. எதிரிகள்
5. இடையூறு
6. பொருள் இழப்பு
7. சண்டை
8. கலகம்
9. சந்தேகபுத்தி
10. வம்பு வழக்கு
11. கோர்ட்
12. தாய்வழி மாமா
13. கருமித்தனம்
14. மனக்கவலை
15. கடுமையான வேதனை
16. பலருடன் பகைத்தல்
17.கண்நோய்
18. பிச்சை வாங்குதல்
19. நேரம் தவறி உணவு உட்கொள்ளும் முறை
20. பங்காளிகள் வழியில் பிரச்சினை
21. வயிறு வலி
22. சிறுநீரக கோளாறு
23. வேலை காரர்கள்.
24. விஷ ஜந்துகளால் ஏற்படும் கண்டம்.
25. ஜலகண்டம்
26. கபம்
27. வீட்டு வாடகை
28. எதிலும் தடை
29. மர்ம உறுப்பில்  காயம்
30. போட்டிப் பந்தயம். இவற்றில் வெற்றி தோல்விகள்
31. வழக்குரைஞர்
32 ‌வைத்திய மூலிகைகள்
33. சிறுதொழில்
34. உணவு விடுதி  தங்கும் விடுதி
35. பொருள் பதம் படுத்தும் மையம்
36. வைத்தியம் செய்யும் இடம்
37. வைசூரி
38. பால்வினை நோய்.
39. மற்றவருடன் கருத்து வேறுபாடு
40. ஆரோக்கிய சாஸ்திரம்
41 ‌ஆயுதத்தால் காயம் படுதல்
42. எடை போடும் மையங்கள்
43. அறுசுவைகள்
44. கால்நடைகள்
45. கண்டனம்
46. சிறு பிராணிகளை கடனாக வாங்குதல்
47.  படகிலிருந்து  தவறி விழுதல்
48. பழிச்சொல்
49. மறதிபாவச் செயல்கள் புரிவது
50.சுய மரியாதையை  காப்பாற்றுதல்.
உத்தியோகம்                                                                                                                         அரசு வீடுகள்
மேஷம் கடகம்
சிம்மம் விருச்சிகம்                                                                                                                        அரசு கிரகங்கள்                                                                                                                                                          சூரியன்    செவ்வாய்
குரு.  சுக்கிரன்.   
4,ம் இடம்.   பதவி
6,ம் இடம். உத்யோகம்
10.  தொழில்  ஜீவனம்
       Rules
1.    4,10. ம்வீடு அரசு வீடுகளாகி 6,ம் அதிபதிஅமர்வது அல்லது பார்ப்பது
2.  6,ம் அதிபதி  அரசுவீடாகி 4,அல்லது 10 ம் அதிபதிஅமர்தல் அல்லது பார்த்தல்
3.   செவ்வாயின் 4 ம்பார்வை அரசு வீடாகிஅதில்அரசு கிரகம்அமர அரசாங்கம் அரசியல் ஈடுபாடு உண்டு
 4 குருவும் செவ்வாயும் அரசுவீடுகளில் இருந்து பார்ப்பது அரசியல் அரசாங்க ஈடுபாடு
  5 சனிபகவானின்10,ம் பார்வைஅரசு வீடாகிஅதில் இருக்கும் கிரகங்கள் அரசு வருவாயைதரும் Government related jobs இருக்கும். 
6    10,ம்வீடு 6,ம்வீடு 4,ம்வீடு திதிசூன்யம் பாதகம் ஏற்பட்டால் உத்தியோகம் உயர்வுதடை இருக்கும்.
7 சூரியன் செவ்வாய்  லக்னபடி 6, 8, 12, ல்இருந்தாலும் சூரியனுக்கு
செவ்வாய் 6,  8, 12,ல். இருந்தாலும்  VRS  வாங்குவார்கள்
8.  செவ்வாய் சனி  சம்பந்தம் பார்வை சாரம்  இருந்தால் பிரமோஷன் தடை தாமதங்கள் இருக்கும்.
9.  சனிக்கு 3,ல் செவ்வாய் இருந்தால் பதவிக்கு நல்லது (அதிகாரி)
10.அரசுகிரகம் அரசாங்க வீட்டுக்கு தொடர்பு அரசியல் ஈடுபாடு உண்டு
11 செவ்வாய்  4, ம். பார்வை அரசு வீடாகி அங்கு குரு+சூரியன் அமர்ந்தால் பெரும்பதவியில் இருப்பார்கள் (அமைச்சர் + மந்திரி)
12. 7,ம்பாவம் சனிசம்பந்தம் பொது சேவை செய்வார்கள்.
13 4, 6, சம்பந்தம் உத்தியோகம்
14 ‌கேது செவ்வாய் சம்பந்தம்.  யூனிபார்ம் இல்லாத போலீஸ் (சிஐடி).
மருத்துவ சோதிடம்
1. ஆறாம் அதிபதியை தொடும் கிரகங்களுக்கு மருத்துவ செலவினங்கள் உண்டு.
2. செவ்வாய் ராகு சேர்ந்து பார்த்த பாவம் சர்ஜரி உண்டு அங்கு ஒரு கிரகம் இருந்தால் அதற்கும் சர்ஜரி உண்டு
3. ராகு சாரம் பெற்ற கிரகத்தை செவ்வாய் பார்த்தாலும் செவ்வாய் சாரம் பெற்ற கிரகத்தை ராகு பார்த்தாலும் சர்ஜரி உண்டு
4. சர்ஜரி எட்டாம் பாவம் செவ்வாய் ராகு எட்டாம் பாவம் சர்ஜரியை கூறும்
5. அஷ்டமாதிபதி எங்கு இருந்தாலும் பார்த்தாலும் சர்ஜரி உண்டு
6. செவ்வாயை பார்க்கும் கிரகத்திற்கு வெட்டுக் காயம் தழும்பு உண்டு
7. செவ்வாய் கேதுபல்லுக்குள் பல் பிரச்சினை தரும்.
8.செவ்வாய் சூரியன் முதுகு தண்டுவடம் வலி இருக்கும்
9. சனி சூரியன் எலும்பு உடைதல்
10. சனி அழுக்கு தாமதம்
11. சனியை தொட்ட கிரகங்கள் அதன் இயக்கத்தில் மெதுவாகவும் உறுப்பில் அழுக்கும் இருக்கும்
12.  ஒரு வக்கிர கிரகம் பின்னத்தை (demage) கூறும்.
13. ஒருவக்ர கிரகத்தை இன்னொரு வக்ர கிரகம் பார்த்தால் பின்னம் நிச்சயம்
14. வக்ர கிரகத்தை சனியோ அல்லது பன்னிரெண்டாம் அதிபதியோ பார்த்தால் ஊனம் நிச்சயம். 
15. பலம் குறைந்த கிரகம் மாந்தியுடன் இணைந்தால் வியாதியின் தாக்கம் அதிகம் இருக்கும். 
16.  மாந்தி அழிவை கூறும்.  மருத்துவ ஜோதிடத்தில் அழுகியதைகூறும்
17.  கேது அடைப்பை சொல்லும்  உறுப்பு சிறியதாக இருப்பதை கூறும். 
18.   ராகு விகாரம் அதிகப்படியான எண்ணிக்கை களையும் வெட்டி எடுக்கப்படும்  உறுப்பையும் கூறும்.
19. நீர் கிரகங்கள் சந்திரன் சுக்கிரன் குரு. இந்த நீர் கிரகங்கள் 4ம் பாவத்திற்கு சம்பந்தப் பட்டாலோ
நீர்த் தன்மை அதிகரிக்கும் இந்த சூழலில் எந்த கிரகம் நெருங்கி இருக்கிறதோ அந்த காரக உறுப்பில் நீர்த்தன்மை அதிகம் இருக்கும்.
(உம்) விருச்சிகம் லக்னம் கன்னியில் குரு சனி அஸ்தம் நட்சத்திரத்தில் ல்.  4 ம் அதிபதி சனியைகுரு தொட brainல் நீர் சேர்தல் புத்திசலனம் ( Mind disturb).  குரு.  மூளை சனி 4,ம்,அதிபதி                                                                                                      மருத்துவத்துறை
ஆறாம் பாவகம் மருத்துவர் ஆகும் யோகம். ஆக்சிஜன் தருபவர் சூரியன்,
ஒளிக்கதிர்களால் சக்தியை தருபவர் சூரியன், மருத்துவத்துறையில் வெற்றியை கொடுப்பவர் சூரியன். மருந்து கிரகம் என்றால் சூரியன். செவ்வாய் என்றால் தைரியம். தசை நார்கள், காயங்கள், விபத்து, அறுவை சிகிச்சை இதற்கு காரணகர்த்தா.கதிர்வீச்சு, ஹீமோதெரபி,
ராகு கேது குரு நோயை குணப்படுத்தும் கைராசி டாக்டர் என்ற பெயருக்கு காரணகர்த்தா. மக்கள் சக்தி மருத்துவமனை அமைக்க பணியாற்ற. தீராத வலி வேதனை இதெல்லாம் சனியை குறிக்கும். சனி பார்வை பட்ட கிரக நோய், கிரகத்தினால் உண்டாகும் நோய் குணமாக நீண்ட நாள் ஆகும்.
ராகு கேது தொற்று நோய், கிருமி, ஸ்கேன், எக்ஸ்ரே. இவையெல்லாம்.
மருத்துவ நட்சத்திரம் அஸ்வினி, மகம், மூலம், மிருகசீரிடம், திருவாதிரை, சித்திரை, சுவாதி, உத்திராடம், அனுஷம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி.
இதில் அஸ்வினி மகம் மூலம் மிருகசீரிடம் அனுஷம் சதயம் ரேவதி இவர்கள் பேமஸ் டாக்டர் ஆக இருப்பார்கள்.
துல்லியமாக பார்த்தால், சதயம் நட்சத்திரம் கொண்டவர்கள் டாக்டராக ரொம்ப பிரபலமானவராக இருப்பார்.
மருத்துவர்கள் சிம்மம், விருச்சிகம். சிம்ம ராசியாக வருவது நல்லது.
சிம்ம லக்கினமாக வருவது நல்லது.
பத்தாம் இடமாக வருவது விருச்சிக ராசி அல்லது லக்னமாக வருவது அல்லது பத்தாம் இடமாக வருவது.

ஆறாம் பாவம் நோயை குறிக்கும். இதன் காரகர் சனி.
செவ்வாய் மருத்துவராக பணியாற்றுவதை குறிக்கும்.
எட்டாம் பாவம் மருத்துவமனை மருந்து, தாய்சேய் நலவிடுதி, இறப்பு, இறப்பின் தன்மை, தீராத வியாதியை குறைக்கும்.
பனிரெண்டாம் இடம் மருத்துவத்தில் நீண்ட காலம் பணியாற்றுவது பெயர் பெறுவது

லக்னம் அல்லது லக்னாதிபதி 6, 8, 12, தொடர்பு மருத்துவத்துறை 8, 12, சூரியன் செவ்வாய் தொடர்பு இருந்தால், ஆறு எட்டு பாபங்களும் அல்லது சூரியன் செவ்வாய் குரு இவர்கள் பலம் பெற்றால் மருத்துவத்துறையில் பெயர் வாங்க முடியும்.
புதனுக்கு அடுத்து ராகு அல்லது சூரியன் இருக்க மருத்துவ படிப்பு.
இரண்டாம் அதிபதிக்கு அடுத்து சூரியன் செவ்வாய் கேது மருத்துவத்துறையில் வருமானம் இருக்கும்.

இரண்டாம் அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருப்பது தொழில் காரகன சனிக்கு அடுத்து சூரியன், செவ்வாய், ராகு, கேது இருப்பது மருத்துவத்துறையில் வருமானம் இருக்கும்.

நீர் ராசியில் ஒரு கிரகம் இருந்தால் மருத்துவத்துறைக்கு வரமுடியும்.
சுக்கிரன் அல்லது செவ்வாய் நீர் ராசியில் இருந்தால் சிறந்த மருத்துவம்.
ராகு + மாந்தி, கேது + மாந்தி கொலைப்பழிக்கு ஆளாவார்கள்.
அஸ்வினி, சதயம் நட்சத்திரம் அரசு வருவாய் உள்ள நட்சத்திரம்.
சூரியன் சனி பரம்பரை வைத்தியன்.
சூரியன் புதன் சனி இணைவு வெண்குஷ்டம்.
6, 8, 12,  ஆம் அதிபதிகள் காற்று ராசியில் இருந்தால் கூட்டத்தில் சினிமா தியேட்டருக்கு போக கூடாது.
ஆறில் நீச்ச கிரகம் அல்லது ஆறாம் அதிபதி நீசம் ஆவது இரணியா வரும்.
குரு அல்லது சுக்கிரன் பலமற்று ஆறாம் இடத்தை பார்த்தால் சர்க்கரை நோய் வரும் திதி சூனியத்தை பார்க்க வேண்டும்.
சுக்கிரதிசை என்றால் யூரியன் பிரச்சனை வரும்.
செவ்வாய் திசை என்றால் பல் பிரச்சனை வரும்.
ராகு திசை என்றால் சர்ஜரி வரும்
கேது தசை என்றால் பல் சம்பந்தமான பிரச்சனை இருக்கும்.
புதன் திசை என்றால் தோல் சம்பந்தமான பிரச்சனை வரும்.
நான்கில் ராகு நான்காம் அதிபதி ராகுவை தொட்டால் மன நிம்மதி குறைவு.
கும்பத்தில் சூரியன் இருதய நோய் பாதிப்பு உண்டு சுக்கிரன் சனி சிறுநீரகக் கல் சூரியன் செவ்வாய் 5 பாகைக்குள் இருந்தாலும் அல்லது சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றாலும் மரணம் இயற்கைக்கு மாறாக இருக்கும்.                                                                                                          பலமற்ற சந்திரன் சனி எட்டில் இருந்து பார்த்த காரக உறவுக்கு  நீரில் கண்டம் சந்திரன் நீசம் புதன் உச்சம் இது ஆகாது மனநிலை பாதிப்பு இருக்கும்                                                                                                             செவ்வாய் மாந்தி இருந்தால் ரத்த தானம் செய்யக்கூடாது
நான்கு கிரகங்கள் சுயசாரத்தில் இருந்தால் உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
செவ்வாய், ராகு மனைவிக்கு நோய் சிகிச்சை இருக்கும்
சனி, சுக்கிரன் வீட்டில் இருந்தால் முக அழகு கெடும் பாதிக்கப்பட்ட சுக்கிரனை சனி பார்த்தால் முக அழகு கெடும்.
மேச சனி யாரை பார்க்கிறதோ யாரை தொடுகிறதோ அந்த உறவுக்கு ஆயுள் குறைவு.
சூரியன் மீது செவ்வாய் போனாலும் அல்லது புதன் மீது செவ்வாய் போனாலும் நகம் வெட்ட கூடாது.
மூன்று, ஐந்து, ஒன்பது, பதினொன்றில், சுக்கிரன் இருந்தால் பெண்  சுகபோகம் உண்டு. காதலில் வெற்றி உண்டு. சுக்கிர காரக உறவுகள் அனைத்தும் வெற்றி கிடைக்கும்.
நாலில் சுக்கிரன் இருந்தால் வீட்டில் பழம் தரக்கூடிய மரம் இருக்கும்.
நான்கில் செவ்வாய்  இருந்தால் வீட்டில் முள்மரம் வளரும்.
மேஷ ராசி பித்தம்
ரிஷப ராசி வாதம்
மிதுன ராசி பித்தம் வாதம் கபம்
கடக ராசி கபம்
சிம்மராசி பித்தம்
கன்னி ராசி வாதம்
துலா ராசி பித்தம் வாதம் கபம்
விருச்சக ராசி
தனுசு ராசி பித்தம்
மகர ராசி வாதம்
கும்ப ராசி பித்தம் வாதம் கபம்
மீனராசி கபம்
வாத நோய்க்கு உண்டான கிரகம் சனி ராகு கேது
பித்த நோய்க்கு உண்டான கிரகம் சூரியன் செவ்வாய்
கபம் நோய்க்கு உண்டான கிரகம் குரு கபம்
வாதம் இதற்கு உண்டான கிரகம் சந்திரன் சுக்கிரன் பித்தம் வாதம் கபம் இதற்கு உண்டான கிரகம் புதன்
மருத்துவத்திற்கு முதலில் லக்னம் லக்னம் நின்ற சாரம் லக்னாதிபதி நின்ற இடம் லக்னாதிபதி பெற்ற சம்மந்தம் லக்னத்தை பார்த்த கிரகம் லக்னாதிபதியுடன் சேர்ந்த கிரகம் பார்க்க வேண்டும் ராசியில் நின்ற சந்திரனுக்கு அம்சத்தில் லக்னாதிபதி நின்ற இடம் பார்க்க வேண்டும் அல்லது லக்னம் லக்னாதிபதி வர்கோத்தமம் உள்ளதா என்று பார்க்க வேண்டும் இதையும் பார்க்க வேண்டும் வியாதி குணமாக அந்தரம் பார்க்க வேண்டும் 22 ஆவது திரேகாணம் 64ஆவது நவாம்சம் பாதகாதிபதி லக்ன சுபர் லக்ன பாவி இவையெல்லாம் பார்க்க வேண்டும் 1, 4 , 7, 10 பாதுகாப்பு தரும் இதில் சுபர்கள் இருந்தால் கேந்திராதிபத்திய தோசம் இருக்கும் 1, 4, 7, 10 இதில் பாவிகள் இருந்தால் பாதுகாப்பு குறைவு.                                                                                                                                             3, 6, 10, 11  ல் இந்த உபஜெய ஸ்தானங்களில் சுபர்கள் இருந்தால் நன்மையை தரும் பாவிகள் இருந்தால் நன்மையும் தரும் நோய்கள் தரும்
வக்ர கிரகங்கள் எந்த பாவத்தில் உள்ளதோ அந்த பாவ சம்பந்தப்பட்ட வியாதி வரும்.
அம்சத்தில் விருச்சக ராசியில் எந்த கிரகம் இருக்கிறதோ அந்த கிரகத்தின் சம்பந்தப்பட்ட நோய் உண்டு.                                                              சனி, செவ்வாய் சேர்ந்த எந்த பாவத்தை பார்க்கிறதோ அந்த பாவத்தின் காரகனும் கெடும் அந்த பாவமும் கெடும் வாதத்தை குறிக்கும் நட்சத்திரங்கள் அஸ்வினி திருவாதிரை புனர்பூசம் உத்திரம் ஹஸ்தம் கேட்டை மூலம் அவிட்டம் பூரட்டாதி
பித்தத்தைக் குறிக்கும் நட்சத்திரங்கள் பரணி மிருகசீரிடம் பூசம் பூரம் சித்திரை அனுஷம் பூராடம் சதயம் உத்திரட்டாதி
கபத்தைக் குறிக்கும் நட்சத்திரங்கள் கிருத்திகை ரோகிணி மகம் சுவாதி விசாகம் உத்திராடம் திருவோணம் ஆயில்யம் ரேவதி

ஒருவருடைய ஜாதகத்தில் ஆறாம் அதிபதி
எந்த கிரகத்தின் சாரத்தில் இருக்கிறாரோ அதைப் பொறுத்து அவர்களுடைய நோயை தீர்மானிக்கலாம்.
சூரியனுடைய நட்சத்திரங்களிலே ஆறாம் அதிபதி நின்றால் உஷ்ணம் தொடர்பான நோய்கள் உண்டாகும்.
சந்திரனுடைய நட்சத்திரங்களிலேயே இந்த ஆறாம் அதிபதி நின்றால் சிலேத்துமம் தொடர்பான வியாதிகள் உண்டாகும்.
செவ்வாயினுடைய நட்சத்திரங்களிலேயே இந்த ஆறாம் அதிபதி நின்றால் விபத்து, வெட்டுக்காயம், எலும்பு முறிவு நெருப்பினால் பாதிப்பு ஆகியவை ஏற்படும்.
புதனின் நட்சத்திரங்களில் ஆறாம் அதிபதி நின்றால் அவர்களுக்கு வாயு சம்பந்தமான கோளாறுகள், முடக்கு வாதம், பக்க வலிப்பு, அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.
குருவின் நட்சத்திரங்களை ஆறாம் அதிபதி நின்றால் சம்பந்தமான பாதிப்பு அமைப்புகள மூளை சம்பந்தமான பாதிப்பு, தோல் மற்றும் தசை ஆகிய உறுப்புகள் பாதிக்கக்கூடும்
சுக்கிரனின் நட்சத்திரங்களில் அதிபதி நின்றால் சிறுநீரக கோளாறுகள், ரகசிய வியாதிகள், பெண்களிடம் தகாத உறவுகளை வைப்பதன் மூலமாக வரக்கூடிய நோய்கள் ஏற்படும்.
சனியின் நட்சத்திரங்களில் ஆறாம் அதிபதி நின்றால் நரம்பு சம்பந்தமான கோளாறுகள், மூட்டு வலி,  பாதங்களில் பித்த வெடிப்புகள் போன்றவை ஏற்படும்
ராகுவின் நட்சத்திரங்களில் ஆறுக்குடையவர் நின்றால் பூர்வ ஜென்ம கர்ம நோய்கள், குணப்படுத்துவதற்கு சிரமமான நோய்கள், தொழு நோய் ,புற்று நோய், ரத்தசோகை ,கருச்சிதைவு, மூளைக்காய்ச்சல், இது போல எளிதிலே குணப்படுத்த முடியாத நோய்கள் வரலாம்.
கேதுவின் உடைய நட்சத்திரங்களிலே ஆறாம் அதிபதி இருந்தால் தொழுநோய் , மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள். விஷஜந்துக்கள் பாதிப்பு , முதுகெலும்புகோளாறுகள் ,காச நோய் போன்றவை ஏற்படுத்தக் கூடும்.

ஆறாம் அதிபதி சூரியன் நட்சத்திரங்களிலும் செவ்வாயுடன் நட்சத்திரங்களில் நின்றால் அவர்களுக்கு ஆங்கில மருத்துவம், யுனானி மருத்துவம், அறுவை சிகிச்சை மூலமாக குணப்படுத்தலாம்.
ஆறாம் அதிபதி சந்திரனின் நட்சத்திரங்களில் அல்லது சுக்கிரனின் நட்சத்திரங்களில் நின்றிருந்தால், திரவ சம்பந்தமான மருந்துகள், டானிக் சிறப்பு. அதேபோல ஹோமியோபதி மருந்துகள், மூலிகைச் சாறு இதுபோன்ற வைத்திய முறைகளால் நோய்களை குணப்படுத்தலாம்.
புதனுடைய நட்சத்திரங்களிலேயே ஆறாம் அதிபதி நின்றிருந்தால் குளிகைகளை உட்கொள்வதன் மூலமாகவும் தைலங்களை பயன்படுத்துவது மூலமாகவும் நோய்களை பண்ணலாம்.
குருவினுடைய நட்சத்திரங்களிலே ஆறாம் அதிபதி இருந்தால் பஸ்பம் ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளால் குணப்படுத்தலாம்.
சனியுடன் நட்சத்திரங்களிலேயே
ஆறாம் அதிபதி இருந்தால் இவர்களுக்கும் மூலிகைத் தைலங்கள், சாறுகள், பவுடர் போன்ற மூலிகை தூள் மூலமாக இவர்களின் நோய்களை குணப்படுத்தலாம்.
ராகுவின் சாரத்தில் ஆறாம் அதிபதி இருந்தால்
சித்த மருத்துவம், ஆயுர்வேதம் இது உடன் மகான்கள் யோகிகள்  தரக்கூடிய மருந்துகள் நோய்களைக் குணப்படுத்தும்.
கேது  நட்சத்திரங்களிலே ஆறாம் அதிபதி நின்றிருந்தால் இந்த சித்தர்களுடைய ஜீவசமாதிக்கு சென்று வழிபடுவது மூலமாகவும்.  
மருந்துகள் அவர்கள் கையால் வாங்கியவர்கள் அந்த மருந்துகளை உட்கொள்வதன் மூலமாகவும் இவருடைய கர்மவினைகளின் காரணமாக ஏற்படக்கூடிய அந்த நோய் நொடிகள் எல்லாம்  ஓடிவிடும்.

 வியாதிகள் ஒரு கண்ணோட்டம்
1.  வாதம். 84,வகைகள்
2. பித்தம் 48,வகைகள்
3. சிலேட்டுமம் 96வகைகள்
4.  வாயு. 300
5. காசநோய் 7
6. பெருவியாதி  8
7. சூலை (கக்குவான் அம்மை) ‌. 200
8.  ரத்த சோகை
10. வகைகள்
9. கண். நோய் 96
10. சிலந்தி. 60
11குன்மம்  8
12. ஜன்னி. 76
13. கழலை (தைராய்டு) 95
14. மகோதரம் (தொப்பை). 7
15. தலைவீக்கம். 5
16. உடல்வீக்கம்.16
17. கட்டி. 10
18  கரப்பான் ( ஊறல்) 90
19. குலை  நோய் 46
20. நாக்குபல் நோய். 76
21. உடம்பில் நீர் கோர்ப்பது. 200
22. உதடு நோய் 100
23. பிள்ளை நோய். 100
24. கடி தோஷம் 500
25. வாயு ரோகம் 90
26. கல்லடைப்பு 80
27. மூட்டுசீழ் 30
28. மேகநீர். 21,வகைகள்.  பண்டைய காலங்களில் நடைமுறையில்காணப்பட்ட  நோய்கள்
 சூரியன் காரக நோய்கள்
1.  இருதயநோய்
2. எலும்பு முறிவுகள்
3. ஒற்றை தலைவலி
4. வலது கண்ணில் பிரச்சினை
5. மஞ்சள் காமாலை
6. காய்ச்சல்.  நவாம்சத்தில் விருச்சிகத்தில்
சூரியன் இருந்தால் இந்த நோய் இருக்கும்                                                           சூரியன் சூரியன் சாரம் பெற்றால்
1. தாங்கமுடியாத எரிச்சல்காய்ச்சல். வந்தால் நீடித்து இருக்கும் ஆறாதபுண் அரிப்பு இருக்கும் சொறியும் தன்மை அதிகம் உண்டு                                                                                                                                     2.  சூரியன் சந்திரன் சாரம் பெற்றால்
1.  உணர்ச்சி வசப்படுதல் கண்நோய் தன்னம்பிக்கை குறையும்
3.  சூரியன் செவ்வாய் சாரம் பெற்றால்                                                                            1. Low pressure High pressure தலைசுற்றல் முதுகுவலி (backpain)
4. சூரியன் புதன் சாரம் பெற்றால்
1. ஒற்றை தலைவலி கண்ணாடி அணிதல்
5. சூரியன் குரு சாரம் பெற்றால்
1. பித்தம் கிறுகிறுப்பு
6. சூரியன் சுக்கிரன் சாரத்தில்
1. கல்லடைப்பு யூரின்பிராப்ளம்
7.  சூரியன் சனி சாரத்தில்
1. கண்பிரச்சனை இருதயநோய் இருக்கும்
8. சூரியன் ராகு சாரத்தில்
1. மனநோய் நிம்மதி குறையும்
9. சூரியன் கேதுசாரம்
1. இருதயம் அடைப்பு பிரச்சினை ரத்தம்குறைவு
சந்திரன்  காரக நோய்கள்
1. நுரையீரல்
2. இருதயம்
3. ஆஸ்துமா
4. வீசிங்
5. மாதவிடாய் பிரச்சனை
6. கர்ப்பப்பை
7. தலைசுற்றல்
8. ரத்தம் கெடுதல்
9. குடல் நோய்
10. கண்நோய் கண்புரை.  நவாம்சத்தில் விருச்சிகம் சந்திரன் இருந்தால் வீசிங்சளி தொல்லைவரும் 4ம்பாவம்நீர் தத்துவம் வெள்ளை படுதல் பிரச்சினை தரும்
சந்திரன் சூரியன் நட்சத்திரத்தில்  இருந்தால்
1. கண்நோய் தலைவலி உணர்ச்சி வசப்படுதல்
சந்திரன் சந்திரன் நட்சத்திரத்தில்  இருந்தால்
1. நல்ல கற்பனை வளம் உண்டாகும்
2.கவலையற்ற வாழ்க்கை இருக்கும்
சந்திரன் செவ்வாய் நட்சத்திரத்தில் இருந்தால்
1. சிறுநீர் பிரச்சினை யூரினில்இரத்தம் வருதல் சிறு நீரகத்தில் பிரச்சினை இருக்கும்                                                                                                                                 சந்திரன் புதன் நட்சத்திரத்தில் இருந்தால்
1. கற்பனைவாதி எப்போதும் மனக் கவலை தாய்ஊந்தையை பிரிந்து வாழ்வது
சந்திரன் குரு நட்சத்திரத்தில் இருந்தால்
1. நல்ல உடல் நலம் இருக்கும் வியாதி வந்தால் தீரும் மீண்டு விடுவார்கள்    சந்திரன் சுக்கிரன்  நட்சத்திரத்தில் இருந்தால்
1. நோய் எதிர்ப்பு கம்மிஇருக்கும் பாலியல் நோய் இருமல்நோய்
சந்திரன் சனி நட்சத்திரத்தில் இருந்தால்
1.மனநோய் அமைதிகுறைதல் 5ம்இடம்(புத்தி) நல்ல இருக்கணும்
சந்திரன் ராகுநட்சத்திரத்தில் இருந்தால்
1. கற்பனை வளம் நிறைந்தவர் மனக்குழப்பம் இருக்கும்
சந்திரன் கேது நட்சத்திரத்தில் இருந்தால்
1.எரிச்சலூட்டும் பேச்சு
2.மன இறுக்கம் இருக்கும்
சந்திரன் 8ல் பாதிப்பு அடைந்தால் சிறுநீரக கோளாறு வரும் செவ்வாய் சனிக்கு இடையே சந்திரன் இருந்தால் மூச்சுத்திணறல் கண்டிப்பாக வரும் சந்திரன் புதன் பாதிக்கப்பட்டால் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பார்கள் (லூஸ் டாக்கிங்) தனக்கு தானே பேசிக்கொண்டு இருப்பார்
செவ்வாய் காரக  நோய்கள்
1.வெட்டுக் காயங்கள்
2. சோர்வான கண்கள்
3. கொப்பளங்கள்
4. தீக்காயங்கள்
5. எரிச்சல்
6. எலும்பு முறிவுகள்
7. மஞ்சள் காமாலை
8.ரத்தம்வடிதல்
9. காக்கா வலிப்பு
10. ஆசனவாய் நோய்
11. இரத்த கொதிப்பு
12. கட்டிகள்
செவ்வாய் சூரியன் சாரத்தில் இருந்தால்
1.  ரத்தசோகை ரத்தம் சம்பந்தமான நோய் இருக்கும்
2. ஹீமோ குளோபின் டெஸ்ட் அடிக்கடி எடுக்க வேண்டும்
3. சிவந்த கண்கள் இருக்கும்
4 முதுகு வலி இருக்கும்
செவ்வாய் சந்திரன் சாரத்தில் இருந்தால்
1. தோல் வியாதி இருக்கும்
செவ்வாய் செவ்வாய் சாரத்தில் இருந்தால்
உடல்நலம் சிறப்பாக இருக்கும்
செவ்வாய் புதன் சாரத்தில் இருந்தால்
மனச் சிதறல்கள் இருக்கும்
செவ்வாய் குரு சாரத்தில் இருந்தால்
உடல் நலம் நல்ல சிறப்பு தரும்
செவ்வாய் சுக்கிரன் சாரத்தில் இருந்தால்
1 பாலியல் நோய்
2. சிறுநீர் தாரையில் அரிப்பு                                                                                          செவ்வாய் சனி சாரத்தில் இருந்தால்
1. தற்கொலை எண்ணங்கள் இருக்கும்
2. சின்ன விஷயத்திற்கு மன உளைச்சல் ஏற்படும்
3. அடிக்கடி சிறு விபத்துகள்
4. பல் தொந்தரவு
செவ்வாய் ராகு சாரத்தில் இருந்தால்
1. காமக் கோளாறுகள்
2. தற்கொலை எண்ணம்
செவ்வாய் கேது நட்சத்திரத்தில் இருந்தால்
 1 ரத்த அழுத்தம்
2. பொறுமையின்மை                                                                                                   நவாம்சத்தில் விருச்சிக வீட்டில் செவ்வாய் இருந்தால் மேற்கண்ட செவ்வாய் காரங்க நோய்கள் இருக்கும்
புதன் காரக  நோய்கள்
1. புதன் புத்தி மூளையில் ஏற்படும் மாறுதல்கள்
2. ஐந்தாம் பாவம் பிளஸ் புதன் கெட்டால் புத்தி ஸ்தானம் பாதிப்படையும் இவர்களுக்கு தலையில் அடிபட கூடாது
3. மறதி ஏற்படும்
4. மனம் பாதிப்பு ஏற்படும்
5. ஐந்தாம் இடத்தை செவ்வாய் சனி சேர்ந்து பார்த்து புதன் சனி கேட்டாலும் ஒரு நாளாவது மனநிலை பாதிப்பு வரும்
6. பேச்சுக் குரல் (மிமிக்கிரி)
7. நரம்பு தளர்ச்சி
8. ஆண்மை குறைவு  புதன்+சனி புதன்+கேது சேர்ந்து மூன்றாமிடமும் கெட்டால் வீரியம் பாதிப்பு ஏற்படும் குடும்பப்பற்று இருக்காது
9. சொரி சிறங்கு டைபாய்டு
10. அதிக வியர்வை வருதல்
11. அதிர்ச்சி கூடாது புதன் கெட்டிருந்தால் அவர்களிடம் அதிர்ச்சி தரும் செய்தியை கூறக்கூடாது
12 ENT problem
13. Skin problem
14. விஷக் காய்ச்சல்
15. வெண் குஷ்டம்
16. சூரியன் புதன் சனி சேர்க்கை இருந்தால் தோலில் வெண்குஷ்டம் வரும்.
17. ரோகிணி உத்திரம் பூராடம் இம்மூன்றும் தோல் நோய் வரும் நட்சத்திரங்களாகும்
( உம்) ஆறாம் அதிபதி புதன் ஆக வந்து ரோகிணி உத்திரம் பூராடம் மூன்று நட்சத்திரங்களின் நின்றால் தோல் நோய் உண்டு                                                                                                                                              18. பரணி மகம் உத்திரட்டாதி இம் மூன்று நட்சத்திரங்களும் மனநோய் நட்சத்திரங்கள் ஆகும்   புதன் சனி கெட்டாலும்
புதன் சூரியன் சாரம்பெற்றால்
1. அரிப்பு இருக்கும்
2. நரம்பு பிரச்சினை
3. தோல்வியாதி
புதன் சந்திரன் நட்சத்திரத்தில் என்றால்
1 மிகவும்அதீத கற்பனாவாதி
புதன் செவ்வாய் என்றால்
1. தலைவலி
2 மனச்சிதறல்
புதன்புதன் நட்சத்திரத்தில் என்றால்
1. தன்னம்பிக்கை உடையவர்
2. மிகுந்த மனம் கட்டுப்பாடு உடையவர்
புதன் குரு நட்சத்திரத்தில்  என்றால்
1.  சக்தி உடையவரர்
2. நோய் இருந்தாலும் குணமாகும்
புதன் சுக்கிரன்  நட்சத்திரத்தில் என்றால்
1. Skin பிரச்சினை
2. அறிவாற்றல் மிக்கவர்
3. சிந்தனை திறன் அதிகம்
புதன் சனி நட்சத்திரத்தில் என்றால்
1. மனநோய்
2. பிட்ஸ்வரும்
3. தாமதமான பேச்சு இருக்கும்
4. நாக்கில் மச்சம்
5. கரிநாக்கு
புதன் ராகு நட்சத்திரத்தில்
1.தாழ்வு மனப்பான்மை இருக்கும்
புதன் கேது நட்சத்திரத்தில்
1  மனநோய்
2. விரல்களில் காயம் ஏற்படும்
நவாம்சத்தில் விருச்சிகம் புதன்
கண்டிப்பாக Skin பிரச்சினை விரல்களில் காயம் நரம்பு பிரச்சினை உண்டு
குரு காரக நோய்கள்
1.  கல்லீரல்
2. கனையம்
3. கிட்னி
4. வாதநோய்
5. நுரையீரல்
6. தொடைபகுதி
7. கொழுப்பு
8. மூளை
9. மூட்டுகள்
10. நாக்கு
ஒரு ஜாதகத்தில் பலம் குறைந்த குருவுக்கு சனி தொடர்பு இருக்குமேயானால் கட்டாயம் கிட்னி கணையம் கல்லீரல் தொடைப்பகுதி பாதிப்பு ஏற்படும்
(உம்) மேஷத்திற்கு ஒன்பதாம் இடமான குருவுக்கு சனி சேர்க்கை தொடர்பு கிட்னி கல்லீரல் பிரச்சனை கொடுக்கும் தந்தைக்கு கண்டிப்பாக இருக்கும்
உடைபட்ட நட்சத்திரங்கள் பூராவும் ஜாயிண்ட்   பற்றிக்கூறும்.
1. சூரியன்  2. செவ்வாய்  3. குரு   இம்மூன்றும் உடைபட்ட நட்சத்திரங்கள் ஆகும். இம்மூன்றில் ஒரு கிரகம் கேட்டால் கூட ஜாயிண்ட் பிரச்சனை உண்டா என்று கேட்டால் மிகவும் சரியாக வரும் குரு நீசம் செவ்வாய் நீசம் சூரியன் நீசம் கண்டிப்பாக ஜாயிண்ட் பிரச்சனை இருக்கும் கெட்டால் கூட உடைபட்ட நட்சத்திரங்களில் களத்திரம் அமைந்தால் சில காலமாவது பிரிந்து வாழ்வார்கள்
1. சர்க்கரை வியாதி
2. மஞ்சள் காமாலை
3. 6 8 12 சம்பந்தம் இருந்தால் உடல் வலி இருக்கும்
4. தலை சுத்தல்
5. வயிற்றுக் கோளாறுகள்
6. விரை வீக்கம்
7. கொழுப்பு கட்டிகள்
குரு  சூரியன் நட்சத்திரத்தில் நின்றால் பலன்
1. தொற்றுநோய் (கிளைமேட் மாற்றத்தால்வரும்)
2. அஜீரணம்
3. உணவை குறைத்து எடுத்துக் கொள்வது இருக்கும்
குரு சந்திரன் நட்சத்திரத்தில் நிற்க பலன்
1. நல்ல உடல்நலம் இருக்கும் பயணம் அதிகம் இருக்கும்
குரு  செவ்வாய் குரு சந்திரன் நிற்கபலன்
1. சிறுநீர்த் தாரையில் கல் அடைப்பு
2. யூரினில் உப்பு வருவது
3. குடல் நோய்
4. வயிறு வலி
5. அடிக்கடி பாத்ரூம் போவது இருக்கும்
குரு புதன்  நட்சத்திரத்தில்  குரு சந்திரன் நட்சத்திரத்தில்   நிற்கபலன்
1 விரை வீக்கம்
2 மூலம் நோய் (Piles)
3. மலச்சிக்கல்
4 ‌ஆசனவாய் நோய் இருக்கும்
குருகுரு நட்சத்திரத்தில் நிற்க பலன்கள்
1. நல்ல உடல்நலம் இருக்கும் நோய் இருந்தாலும் குணமாகும்
குரு சுக்கிரன் நட்சத்திரத்தில் நிற்க பலன்கள்
1. தலை சுத்தல்
2. வாந்தி
3. ஏப்பம்
4. குடும்ப வாழ்வில் பற்றில்லாமை உடலுறவில் பற்று இல்லாமல் இருத்தல்
குரு சனி  நட்சத்திரத்தில் நிற்க பலன்கள்
1. வியாதி குணமாக நீண்ட நாள் ஆகும்
குரு ராகு நட்சத்திரத்தில் நின்றால்
1. வயிற்று போக்கு சர்ஜரி இருக்கும் (. ஹிரண்யா) குடல் நோய்
குரு கேது நட்சத்திரத்தில்
1 கல்லீரல் வீக்கம்
2  தொற்று நோய்கள் இருக்கும்
Tips
1. நவாம்சத்தில் உள்ள கிரக காரக நோய்கள் ஜாதகருக்கு உண்டு
2. நவாம்ச விருச்சிகத்தில் ராகு இருந்தால் உடல் உறுப்பில் விகாரம் இருந்து வெட்டி எடுத்து இருப்பார்கள்
சுக்கிரன் காரக  நோய்கள்
1. பாலியல் நோய்
2. sugar
3. அழகு படுத்துவதின் மூலம் வரும் நோய்கள்
4. மூத்திரப்பை
5 கண்புரை
6. மயக்கம்
7. வெண் குஷ்டம்
8 வெள்ளைப் படுதல்.
9. மாதவிடாய் கோளாறு
10. கண்பார்வை கோளாறு போன்றவை வரும்
சுக்கிரன் சூரியன் நட்சத்திரத்தில் நிற்கபலன்
1. கண் நோய் பார்வைக் குறைபாடுகள்
2. யூரின் பிரச்சனை நீர் அதிகம் குடிக்க வேண்டும் நாக்கு வறண்டு போகும்
சுக்கிரன் சந்திரன் நட்சத்திரத்தில் நிற்கபலன்
1. விந்தணு குறைபாடு
2. நீர்த்த விந்து
3. ஆண் வாரிசு தடை. முதல் குழந்தை பெண் குழந்தை இருக்கும்.
4. விரைவில் விந்து வெளியேறும் தூக்கத்தில் விந்து வெளியேறுதல்
5. பிறப்பு உறுப்பில் குறைகள் இருக்கும்
சுக்கிரன் செவ்வாய் நட்சத்திரத்தில்
1. பாலியல் நோய் வரும்
சுக்கிரன் புதன் நட்சத்திரத்தில் இருந்தால்
1. தோலில் புள்ளிகள்.
2. எரிச்சல் உண்டு
சுக்கிரன் குரு நட்சத்திரத்தில் இருந்தால்
1. பலவீனமான காமம்
2. தலைசுற்றல்
3. மயக்கம்
சுக்கிரன் சுக்கிரன் நட்சத்திரத்தில்  இருந்தால்
1.நல்ல உடல்நலம் இருக்கும்.
சுக்கிரன் சனி நட்சத்திரத்தில்
1. கல்லடைப்பு
2. சுகபோகம் தடை
3. விந்தணு குறைவு
4. மிகவும் தாமதமான விந்து வெளியேறல்
சுக்கிரன் ராகு நட்சத்திரத்தில் இருந்தால்
1. நரம்புத் தளர்ச்சி
2. பாலியல் நோய்கள்
3. கண் நோய்கள்
சுக்கிரன் கேது நட்சத்திரத்தில்  இருந்தால்
1. கண்நோய் பார்வை சம்பந்தமான பிரச்சனை இருக்கும்
2. விந்து கோளாறு
3. இரத்த அணுக்கள் குறைவு.
சுக்கிரன் சந்திரன் இருவரும் ஒரு கணவன் மனைவி ஜாதகத்தில் பாதிப்படைந்தால் பலம் இல்லை என்றால்
கரு உற்பத்தி நடைபெறுவது  இல்லை.
சனிபகவான் நோய்கள்
1. சுற்றுச்சூழல் மாற்றத்தால் மாசுபாட்டால் வரக்கூடிய வியாதிகள் இருக்கும்
2. மனச் சிதறல்கள்
3. வயிற்றுக் கோளாறு
4. உணவு செரியாமை
5. குடலில் ஏற்படும் மாறுபாடுகள்.
6. பல் நோய்
7. சிராய்ப்பு காயங்கள்
8. மனநோய்
9 கட்டிகள்
10. காது கேளாமை
11. மூட்டு தளர்வு
12. பக்கவாதம்
13. யானைக்கால் நோய் (நீண்ட நாட்களாக குணமடையாத நோய்கள்)
14. சனி காற்று ராசியாக வந்து மூன்றாம் அதிபதி சம்பந்தம்வந்தால்
காது சம்பந்தமான நோய்கள் வரும்
சனி சூரியன் நட்சத்திரத்தில் நிற்கபலன்
1. கண் நோய்
2. காசநோய்
3.(கக்குவான் இருமல்)
சனி சந்திரன் நட்சத்திரத்தில்
1.  மாதவிடாய் கோளாறுகள் இருக்கும்
2. எதிர்காலம் பற்றிய பயம் இருக்கும்
3. கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்
4. உழைக்காமல் எதையும் பெற மாட்டார்கள்.
சனி செவ்வாய் நட்சத்திரத்தில் நின்றால் பலன்
1. அடிக்கடி காய்ச்சல் வரும்
2. கட்டிகள் கொப்பளங்கள்
3. வயிறு வலி
4 ரத்தம் சம்பந்தமான வியாதிகள் போன்றவை வரும்
சனி புதன் நட்சத்திரத்தில் நின்றால் பலன்
1. நரம்புத் தளர்ச்சி
2. ஞாபக சக்தி குறைவு இருக்கும்
[சனிகுரு நட்சத்திரத்தில் நின்றால்பலன்
1. சோம் பேறித்தனம்.
2. தூங்கி விழுதல்
3. மஞ்சள் காமாலை
4. உயர் ரத்த அழுத்தம்
5. அதிக உணவு எடுத்தல் இருக்கும்
சனி சுக்கிரன் நட்சத்திரத்தில் இருந்தால்
1. பாலியல் நோய்
2. கண் சம்பந்தப்பட்ட நோய் உண்டு
3. உணவு பாதையில் கோளாறு இருக்கும்
சனி சனி நட்சத்திரத்தில்
1. நல்ல உடல் நலம் இருக்கும்
2. அவநம்பிக்கை மேலோங்கும்
  சனி ராகு நட்சத்திரத்தில்
1.கண்டு பிடிக்க முடியாத வியாதிகள் இருக்கும்
2. ஆண் தன்மையை  குறைக்கும்
சனி கேது நட்சத்திரத்தில்
1. உடம்பில் நீர் வற்றி போகும் நீர்சத்து குறைதல்
2. பிட்யூட்டரி சுரப்பியில் மாற்றம்
ராகு நோய்கள்
1. மூலநோய்
2. கனையம்
3. அட்ரீனல் சுரப்பிகள்
4. தமனிகள்
5. ரத்த நாளங்கள்
6. மேலிருந்து கீழ் விழுதல் (tower.   மேலிருந்து கீழே குதித்தல்)
7. குரல் நோய் அறிவு குறை
8 தோல்நோய்
9. உதடுநோய் கண்டறிய முடியாத நோய்கள்.
(சந்திரன்.  மதி.   புதன்.   புத்தி  ராகு.தகவல் தொடர்பு
Communication   Knowledge.
லக்னத்தில் ராகு உடல் நலம்கெடும்.
ஆயுள் பலம் 5,ல் ராகு. இருந்து பாவர்கள் பார்வை பெற்றால்
ஞாபகம் மறதி+ புத்திபேதலித்தல் இருக்கும்.   (உம்).  சனி+செவ்வாய்.  பார்வை.  5ம். அதிபதி கெடுவது. 
கோச்சார ராகு வரும் காலங்களில் ஜாக்கிரதை யாக இருக்கவேண்டும்   6ல் ராகு இருந்தால் நரம்பு மண்டலத்தில் நோய். 
8ல். ராகு இருந்தால் கைகால் மூட்டு வலிகள் இருக்கும்
நரம்புகள். இயங்காமை. 
12. ல் ராகு இருந்தால்  தொடர் நோய் வரும்.  மாதாமாதம் மெடிக்கல் செல்வு இருக்கும்
(ராகு+குரு) 8ல் இருக்க. செவ்வாய் பார்த்தாலும் கூடினாலும் வயிற்றில் அறுவை சிகிச்சை உண்டு.
சந்திரனுக்கு 5ல் ராகு இருந்தால் அடிக்கடி விபத்து நீரில் கண்டம் இருக்கும். ஒரு ஜாதகத்தில் ராகு அல்லது கேது. 6 அல்லது 12ல் அமர்ந்தால் அதன் திசாபுத்தி காலங்களில் நரம்பு சம்பந்தமான பிரச்சினை உண்டு.  
சனிவீடு லக்னமாகி செவ்வாய் சம்பந்தம் வந்தால் எப்போதும் காமசிந்தனை இருக்கும்.
(ராகு+சந்திரன்.) சேர்க்கை மனக்குழப்பம் இருக்கும். பேச்சை மாற்றிமாற்றி பேசுவார்கள். 
லக்னாதிபதி+சந்திரன். இருவரையும் ராகு கூடினாலும் பார்த்தாலும் உடலில்அரிப்பு உண்டு. 
நவாம்சத்தில் விருச்சிகம் ராகு அடிக்கடி கீழே விழுதல் இருக்கும்.  விஷக்கடிஉண்டு அறுவைசிகிச்சை உறுப்பு மாற்றங்கள் உண்டு.
கேது காரக நோய்கள்
1  மண்ணீரல் வீங்குதல்
2  கண்புரை இருக்கும்
3 ‌விரை வீக்கம்உண்டு.
4. விஷகாய்ச்சல் (சிக்கன் குனியா டெங்கு)போன்ற நோய்கள். 
5. நுரையீரல் பாதிப்பு
6. வயிறு வலி.  வாந்திபேதி
7. கொப்புளம்
8. தற்கொலை எண்ணங்கள்
9. கண்டறிய முடியாதநோய்கள்.
1. கேது+சனி இனைந்து 7 ல் இருந்தால்
கொப்புளம் வரும் லக்னத்தில் கேது உடல்நலம் குறைவு. தொடர் மருந்து உண்ணுதல்
புதன் கேது இணைந்து புதன் வீட்டில் இருந்தால் முதுகுத்தண்டு பிரச்சனை வரும்
3,ல் கேது இருந்தால் கை கால் தோள் பட்டை வலி உண்டு.
ஐந்தில் கேது இருந்தால்  வயறு பிரச்சனை மனப்போராட்டம் இருக்கும்.
7ல் கேது யூரின் பிரச்சனை
8ல் கேது மறைவிட நோய் இருக்கும்
10ல் கேது வாயுத் தொல்லை இருக்கும். 
மிதுன கேது வாய்க்கோளாறு
துலாம் கேது தோல் நோய்
கன்னி கேது செரிமானக் கோளாறு. உண்டு.
ஆறாம் வீடு சனியின் வீடாக வந்து பாவி இருந்தால் நோயின் தாக்கம் இருக்கும்.
நவாம்ச விருச்சிகத்தில் கேது இருந்தால் விஷக் காய்ச்சல் பல தொந்தரவு அம்மை நோய் இருக்கும்
பொதுவாக சுய சாரம் பெற்ற கிரகமாக இருந்தால் நோயின் தன்மை குறைவாக இருக்கும் மருந்து மாத்திரையில் குணமாகும் தன்மை இருக்கும்
6 ம் வீடு திதி சூனியம் பாதகம் சம்பந்தப்பட்டு 6-க்குடையவர் எட்டில் அமர்ந்து ஏதாவது நட்சத்திரத்தில் அமரும் பொழுது அந்த நட்சத்திரத்தில் நோய் அதிகமாகும் சுயசாரம் அதிக பாதிப்பை தராது.
மருத்துவம் நட்சத்திரங்கள்
1. அஸ்வினி
2. கார்த்திகை
3. மிருகசீரிஷம்
4. திருவாதிரை (பல்) டாக்டர் வரும்
5. பூசம்
6. மகம்
7. உத்திரம்
8. சித்திரை
9. swathi
10. விசாகம்
11 அனுஷம்
12 மூலம்
13. சதயம்
14. ரேவதி
மன நோய் நட்சத்திரங்கள்
1. பரணி
2. கேட்டை
3. மகம்
5 ம் பாவம் பலம் குறைந்தால் மனநோய் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...