நவகிரகங்களில் ஒன்றான சு ரியனால் நமக்கு பல விதமான நன்மைகள் ஏற்படுகிறது. அவ்வாறு சு ரியனால் ஏற்படும் யோகங்களை பற்றி காண்போம்!...
வசி யோகம் :
ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுக்கு 12-ல் சந்திரன், ராகு, கேதுவைத்தவிர மற்ற ஐவர்களான புதன், குரு, சுக்கிரன், சனி இவர்களில் ஒருவர் இருந்தால் வசியோகத்தில் பிறந்தவர்கள்.
பலன்கள் :
உலகப் புகழ் பெற்றவர்கள். நல்ல குணமும், இனிமையான வார்த்தைகள், தருமம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அமைச்சர்கள், அரசாங்க உயர் பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள்.
வெசி யோகம் :
ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுக்கு இரண்டில் சந்திரன், ராகு, கேதுகள் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் வெசி யோகம்.
பலன்கள் :
அழகானவர், இனிமையாக பேசுவார்கள், தைரியசாலிகளாகவும் இருப்பார்கள். தந்தையர் புகழ் பெற்றிருப்பர். உறவினருக்கு உதவுவார்கள். இவர்கள் பணத்தை சேமிக்க பழக வேண்டும்.
உபயசர யோகம் :
சூரியனுக்கு முன்னும், பின்னும் பஞ்சமகா புருஷக் கிரகங்கள் தனித்தோ அல்லது இணைந்திருந்தாலோ உபயசர யோகமாகும் (இது சந்திரனின் துருதரா யோகத்தை போன்றது) சுபர்கள் இருந்தால் சுப பலனைத்தரும்.
பலன்கள் :
பேச்சுத் திறமையுள்ளவர்கள். கெட்டிக்காரர்கள், தைரியசாலிகள், உறவினர்களுக்கு உதவி செய்வார்கள். அனைவரும் பாராட்டுவார்கள்.
ரவிச் சந்திர யோகம் (வரிஷ்ட, சம, அதம) :
சு ரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் பரஸ்பர கேந்திரத்தில் இருந்தால் வரிஷ்ட யோகம். திரிகோணத்தில் நின்றால் சம யோகம். உபஜெய ஸ்தானங்களில் இருந்தால் அதம யோகம். ரவிச்சந்திர யோகம்.
பலன்கள் :
அரசியல் செல்வாக்கு, லாபங்கள், நுண்ணறிவு, ஞாபகசக்தி, பேச்சுத்திறன், வெற்றி கிட்டும். சம யோகமாக இருந்தால் பலன் குறையும், தீமை தராது.
அதம யோகமானால் குருடு, மன நலம் பாதிப்பு, மூடத்தனம், அவமானம் ஏற்படும்.
பாஸ்கர யோகம் :
சூரியனுக்கு இரண்டில் சந்திரனும் அல்லது லக்கினத்தில் சூரியனும், 2ல் புதனும், 11-ல் சந்திரனும் இருந்தாலும், குரு, சந்திரனுக்கு 4-7-10-ல் இருந்தால் பாஸ்கர யோகம் அமையும்.
பலன்கள் :
தைரியசாலிகளாகவும், உயர்ந்த அந்தஸ்துள்ளவர்களாகவும் இருப்பர். சகல சாஸ்திரங்களை அறிந்தவர்கள். மேடைப் பேச்சுள்ளவர்கள். மனமகிழ்ச்சி உள்ளவர்கள். தனது தொழிலை சிறப்புடன் செய்வார்கள்.
திரிலோசன யோகம் :
சூரியன், சந்திரன், செவ்வாய் ஒருவருக்கொருவர் திரிகோணங்களில் இருந்தால் திரிலோசன யோகம் அமையும்.
பலன்கள் :
சிறந்த சிந்தனையாளர், சிறந்த பேச்சாளர், சகோதரர்களுக்கு உதவி செய்வார்கள். பிறரை எளிதில் எடைபோடுவார்கள். அதிக செல்வம் மற்றும் நீண்ட ஆயுள் கொண்டவர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக