புதன், 15 பிப்ரவரி, 2017

காதலில் வெற்றி தோல்வி யாருக்கு...!

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு திருவிழா, மனித குலம் தோன்றிய காலம் முதலே தோன்றியது, இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான ஒரு உணர்வு, ஒரு ஆண் மற்றும் பெண் இருவரையும் மனதளவில் இணைய வைக்கக்கூடிய நிகழ்வு ஆனது காதல். அந்த காதலை கொண்டாடும் நாளையே உலகம் முழுவது காதலர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இத்தினத்தன்று பரிசு பொருட்களையும் வாழ்த்துக்களையும், அன்பு முத்தங்களையும் காதல் ஜோடிகள் பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மனித குலம் தோன்றியதில் இருந்தே காதலும் இருந்து வருகிறது. காதலுக்கு கிரகங்களும் காரணமாக இருக்கின்றன.

காதலும் - ஜோதிட சாஸ்திரமும் :

ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடியுமா? அல்லது தோல்வியடையுமா? திருமணத்திற்குப் பின்னரும் காதல் நீடிக்குமா? அல்லது விவாகரத்தில் முடியுமா? என்பதை தீர்மானம் செய்கிறது.

குரு :

ஜோதிடத்தில் சுபகிரகமாக முதல் இடத்தில் இருக்கும் குரு பகவான் யோக காரகன், புத்திர காரகன் ஆவார். இவர் தான் போக இச்சை, சம்போகம், காதல், காமம், அதன்மூலம் குழந்தைப்பேறு ஆகிய செயல்களுக்கு காரணமானவர்.

சுக்கிரன் :

சுகபோகம், காதல் மற்றும் காமத்தின் ஏகபோக பிரதிநிதி. ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர்.

செவ்வாய் :

ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். உடல் உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர்.

புதன் - சந்திரன் :

ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மை உடையவர். நரம்பு மண்டலத்தை ஆள்பவர். ஆண்மையின் உந்து சக்தியாக விளங்குபவர். ஆண் ஆண்மையுடன் இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் காரணம் இவரே. மனோகாரகன், மனதை ஆள்பவர். கற்பனை உலகத்தில் திளைக்க செய்பவர். சபல எண்ணங்கள், சஞ்சல புத்தி உண்டாக காரணமானவர். காதல் செய்ய தூண்டுபவர்.

சுக்கிரன் - செவ்வாய் :

ஆகாத கூட்டணி ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், காதல் ஒரு வெறியாகவே இருக்கும். காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள். சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம், காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்களாம்.

காதல் திருமணம் :

ஒருவருக்கு காதல் திருமணம், கலப்பு திருமணம் போன்றவை அமைய களத்திர ஸ்தானம், களத்திரகாரகன், கர்ம காரகன், பாம்பு கிரகங்கள் என்று கூறப்படும் ராகு கேது கிரகங்களுடன் சம்பந்தப்பட்டு இருந்தால் அந்த பெண்ணுக்கோ பையனுக்கோ தூரத்து சொந்தத்தில் அல்லது காதல் திருமணம், கலப்பு திருமணம் அமையும் என்றும் கூறலாம்.

காதலில் சொதப்புவது எது?

12ஆம் இடம் அயன, சயன போக ஸ்தானம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவது மிக அவசியம். இந்த இடத்தில் நீச்ச, பாவ, தீய கிரகங்கள் இல்லாமல் இருப்பது நலம் தரும். இந்த இடத்தை நீச்ச கிரகங்கள், பாவ கிரகங்கள் பார்த்தால் காதல் சிறப்பாக அமையாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...