🌀 ஒருவர் பிறக்கும் போது ஏழையாக பிறந்தாலும் இறக்கும் போது கோடீஸ்வரனாக இருக்கவே பலரும் விரும்புகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருந்தால் அவர் ஏழ்மையான நிலையில் பிறந்தாலும் கோடீஸ்வரனாக உயர்வார்.
🌀 வெள்ளிக்கிழமைக்கு உரிய அதிகாரி என ஜோதிடத்தில் குறிப்பிடபடுபவர் சுக்கிரன் ஆவார். சுக்கிரன் என்பவர் அசுரர்களின் குருவாய் விளங்கும் ஸ்ரீசுக்ராச்சாரியார். இவர்தான் நவக்கிரகங்களில் உள்ள சுக்கிரன் என்ற கிரகம். இந்த வெள்ளி என்ற சுக்கிரனுக்கும் ஸ்ரீமகாலட்சுமிக்கும் புராண ரீதியாக சம்பந்தம் உண்டு.
🌀 ஒருவன் வாழ்வில் முக்கியமான மூன்று செல்வம், வலிமை, அறிவு ஆகும். இவற்றை பெற வேண்டுமானால் முப்பெரும் தேவியரின் யோகம் குறித்தவன் ஜாதகத்தில் சிறப்புற்று இருக்க வேண்டும்.
🌀 அவ்வாறு, முப்பெரும் தேவிகளின் (லட்சுமி யோகம், கௌரி யோகம், சரஸ்வதி யோகம்) பெயரில் அமைந்துள்ள சிறப்பு யோகங்களான லட்சுமி யோகம் பற்றிய சிறப்புகளை சில இங்கு காண்போம்.
🌀 பொன் மட்டுமல்ல வெள்ளி எனும் உலோகமும் மகாலட்சுமிக்குப் பிரியமான பொருளாகிறது. எனவே வெள்ளிக்கிழமையில் வெள்ளி விளக்கில் பசு நெய் ஊற்றி வெண்மையான பஞ்சுத்திரி போட்டு விளக்கு ஏற்றுவதை மகான்கள் சிறப்பாகக் கூறுகிறார்கள்.
மகாலட்சுமி யோகம் :
🌀 வாழ்க்கையில் ஒருவருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர் மகாலட்சுமியே ஆகும். செல்வங்களின் தேவதையாக விளங்குபவர். மகாலட்சுமி. அழகு, செல்வம், மகிழ்ச்சி, அன்பு, கருணை, அமைதி ஆகியவற்றின் ஆதாரமும் அவர்தான். திருமகள் யாகத்தில் தக்ஷ்ணருபியாகவும், தாமரையில் தேஜோருபியாகவும், சந்திரனில் சந்திரிகையாகவும், சூரியனில் சுடராகவும் விளங்குகிறாள். எங்கும் எவ்விடத்திலும் சுகமும் சந்தோஷமும் விளங்க இவளே காரணமாகும்.
செல்வத்திற்கு அதிபதி :
🌀 லட்சுமி என்ற சொல்லுக்கு நிகரில்லாத அழகி என்று பெயர். அழகு பிரதிபலிக்கும் இடங்களிலெல்லாம் திருமகள் காட்சி தருகிறாள். இத்தகைய லட்சுமியை விஷ்ணு தன் இதயத்தில் இடமளித்து ஸ்ரீனிவாசன் எனப் பெயர் பெறுகிறார்.
🌀 இல்லாமை என்ற சொல்லை இல்லாமல் செய்பவள். அதோடு ஒருவருக்கு பொன், பொருள், ஆடை ஆபரணங்களை தருவதும் மகாலக்ஷ்மியே.
லட்சுமி யோகப் பலன்கள் :
🌀 இந்த யோகத்தை ஜெனன ஜாதகத்தில் பெற்ற ஒருவன் அனைத்து செல்வங்களையும் பெற்று அரசனுக்கு நிகராக விளங்குவான். நற்குணங்கள் உடையவராகவும், அழகானவராகவும், புகழ் பெற்றவராகவும் இருப்பார், செல்வ நிலையில் உயர்வு தரும்.
பரிகார பூஜைகள் :
🌀 மாங்காடு தலத்தில் தவமிருக்கும் பார்வதியை பார்க்க ஈசன் அங்கு வருவார், அவரை தரிசித்து இழந்த பார்வையை பெறுவாய் என்று திருமால் கூறியுள்ளார். அங்கு சிவலிங்கத்தை தினமும் பூஜித்த சுக்கிராச்சாரியாருக்கு அங்கு வந்த சிவபெருமான் பார்வை திறனை கொடுத்தார்.
🌀 சுக்கிராச்சாரியார் பூஜித்ததால் இறைவனை தமிழில் வெள்ளீஸ்வரர் என்றும் சமஸ்கிருதத்தில் பார்க்கவேஸ்வரர் என்றும் அழைத்தனர். பார்வை குறைபாடு உள்ளவர்கள் மாங்காடு வெள்ளீஸ்வரரை தரிசித்து பார்வை திறனை பெறுகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் அல்லது பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களில் சுக்கிரனுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் அருகே தெற்கு மாட வீதியில் உள்ள வெள்ளீஸ்வரர் ஆலயத்திற்கும் சென்றும் வழிபடலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக