வான் மண்டலத்தில் பதினொன்றாவது பகுதி
கும்பம் என அழைக்கப்படுகிறது
300 பாகை முதல் 330 பாகைவரை ராசி மண்டலத்தில் வியாபித்துள்ளது. சகோதர காரகன் செவ்வாய்
பகவானின் அவிட்ட நட்சத்திரம் 6 பாகை 40 வரையிலும் போக காரகன் ராகுவின் நட்சத்திரமான சதயம் பதிமூணு பாகை 20 கலை வரையிலும்
தனகாரகன் குருவின் நட்சத்திரம் பூரட்டாதி 10 பாகை வரையிலும் இந்த கும்ப ராசியில் உள்ளது
இந்த வீடு தாய் கிரகமான சந்திர பகவான்
பாகத்தில் சனி பகவானுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி சனிபகவானின் ஆட்சி வீடு ஆயுள் காரகன்
சனிபகவானுக்கு கும்பம் லக்ன பாவம் என்றால் மற்றுமொரு வீடான மகரம் விரயஸ்தானம்
ஆகும்.
கும்பம் குடம் போன்ற அமைப்பை உடையது
மாசி மாதத்தில் சூரிய உதயத்துடன் முதலில் உதயமாகும் ராசி. கும்பம் ஸ்திர ராசியாக
வருகிறது கும்பம் இயல்பான ஒற்றை ராசி இது உறுதியான துணிவான வலிமையான ஆற்றலுள்ள
ராசி.
துலா ராசியில் இருந்து மீனம் முடிய
தென் முகமான ராசிகளில் இது வருகிறது இது காற்று தன்மையான ராசி எனவே மன மகிழ்ச்சியை
கொடுக்கும் இரக்கமுள்ள மனிதத்தன்மை உள்ளது நல்ல மனோ சக்தியையும் கற்பனை வளத்தையும்
கொண்டது சங்கீதம் செழிப்பு இதற்கு உகந்த ராசி.
கும்பம் ஸ்திர ராசி ஆனதால் நிர்வாக
பலமும் ஆற்றலில் சலிப்பு இல்லாமலும்மன அமைதி கலங்காத தன்மை கொண்டவர்கள் கும்பம்
குரல் ஓசை ராசியில் வருகிறது
கும்ப லக்கின ஜாதகர்களுக்கு குடும்ப
வாழ்க்கை நிலையில் சுமார் 60 விழுக்காடு
சிறப்பாக இருக்கும் வீட்டில் பெண்கள் ஆதிக்கம் இருக்கும். பஞ்ச பூதங்களில் கும்பம்
காற்று ராசி ஸ்திர ராசி மனித உறுப்புகளில் கணுக்கால் பகுதியை குறிக்கும் ரத்த
ஓட்டத்தையும் குறிக்கும்.கும்பத்தின் வேறு பெயர்கள் வருமாறு குடம் ஜாடி.
கூன்.சால். கலசம் சட்டுவம் என வரும் கும்பம் ராசிகாரர்கள் பிரம்மான்டமான பேச்சு நம்பி எமாருதல்
உணவு பிரியர் அடுத்தவர் கடனை எற்றுக்கொள்ளுதல்
காலபுருஷனின் 11 ம் வீடு. அதிபதி சனிபகவான் மாதத்தில் மாசி. தன்மையில் ஸ்திரம். பஞ்சபூத
தத்துவத்தில் காற்று. ஆண் ராசி. குடம்
எதையும் வெளிக்காட்டாத இயல்பு. குணத்துடன் கூடிய விவேகம். எல்லா விளையாட்டு
களிலும் ஆர்வமும். கலைகளை ரசிக்கும்.
போக்கும். இழப்புகளை பற்றி கவலைப்படாமல் தன் செயல்களில் காரியம் சாதிப்பதிலும்
இயல்பாக இருக்கும். தெய்வீக நம்பிக்கை
அனுஷ்டானங்களை விருப்பமாக செய்யும் இயல்பும் இருக்கும்.
கும்பத்திடம் இருக்கும் ரகசியம் வாங்க
முடியாது சதயம்
எண்ணைய் செக்கு
குபேரன் கர்ணன் பிறந்தது பூரட்டாதயில் இந்த நட்சதிரகாரர்கள் அழிந்தது கடன் நன்றி கடன் குபேரன் கடன் தந்தார்
பெருமாளுக்கு அந்த கடன் வரவில்லை பூரட்டாதி யில் கடன் கொடுத்தால் வராது கடன் வாங்கினால் திருப்பி கொடுக்க முடியாது ஜாமீன் கையெழுத்து போடகூடாது இவர்கள்
கும்பத்தில் செவ்வாய் அவிட்டம் நட்சத்திரமும்
முன்னோர்களை முன்னிறுத்தும் ராகு நட்சத்திரம் சதயமும். குருவின்
பூரட்டாதியும் உள்ளது. புனிதமாம் கும்பம் எப்போதும் புனிதமானது. கும்பத்திற்குள்
இருப்பது வெளியே யாருக்கும் தெரியாது. கும்பத்தாரை துனையாக்கி கொண்டால் நண்பர்களாக
கொண்டாலும் சிறப்படைவார்கள் இங்கு
செவ்வாய் கர்மாவின் பலனையும் இராகு மூதாதையர் பெருமையையும் குரு தெய்வீக
ஆற்றலையும் மோட்சத்தின் கதவுகள் திறக்கும் உபாயத்தை வழங்குகின்றன
காலபுருஷனின் ஆசை யை நிறைவேற்றும் வீடாக இருப்பதால் இவர்கள் விருப்பப்பட்டது எல்லாம்
நிறைவேறும் தன்மையுண்டு. இவர் எல்லாவிஷ
யஙகளையும் அறிந்தவர்களாக இருப்பார்கள். இந்த இடம் தந்தைக்கு முயற்சி ஸ்தானமாகவும்
காலபுருஷனுக்கு பாதகாதிபதி ஆகவும் இருப்பதால் தந்தையுடன் பிறந்தவர்கள் தொழில் பங்குதாரர் மூலம் நஷ்டம் அடைவது
ஏற்படும் கும்பத்தில் பிறந்த குழந்தை வளரவளர தந்தைக்கு பாதகம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
காலபுருஷனின் விரயம் இவர்களுக்கு
இரண்டாம் வீடு. 2 குரு
இவருக்கு 12 ல் நீச்சம். எவ்வளவு பணவிரவு வந்தாலும் நிலைப்பதில்லை.
காலபுருஷனின் 2. 7 சுக்கிரன் உச்சம்
அதனால் அன்றாடம் அழியும் நிலையில் உள்ள தயாரிப்பு மூலம் வருமானம் இருக்கும்
அதிலும் திருமணம் பின்னர் தான் ஏற்படும் குடும்பம் அமைந்த பின் மேன்மை சிறப்பு தரும் குரு கடகத்தில் உச்சம் ஆகவே வாக்கு சார்ந்த வேலை ஆசிரியர் பேராசிரியர் வக்கீல் நீதித்துறையில்
பெருமைக்கு பாடு படக்கூடியவராகவும்
நியாயமான வழிகளில் வரும்வரையும் குறிக்கும்.
காலபுருஷனின் 12 ம் வீடு இவருக்கு
மறைமுக தனலாபம் வருமானம் இருக்கும் இது ஜல ராசி உல்லாச சுக்கிரன் வேற. அதனால் இவர் முதலீடு செய்யும் போது
விஸ்கி பிராந்தி போதைவஸ்து போன்ற மொத்த விற்பனையாளர் சில்லறை வணிகராகவும்
இருப்பார்கள். வெளி நாடுகளுக்கு
ஏற்றுமதி செய்வதின் மூலம் வருமானம் இருக்கும் ராசியாதிபதியும் விரையாதியும் சனிபகவான் கும்பத்திற்கு 5, 8 ஆம் அதிபதி புதன்
ஆக இருப்பதால் இவர்கள் சீட்டு சிட்பண்ட் மூலம் பொருள் இழப்பு வரும்.
பேராசையில் பெரும் இழப்புகளை சந்திப்பார்கள்
பூர்வீகம் சொத்து அனைத்தும் இழந்தவர்கள் இருப்பார்கள். இது ஜலராசி.
ஆயில் கெமிக்கல்ஸ் வழியாகவும் மற்றும் திருமணம் பந்தம் ஏற்படுத்தும் தகவல்
மையம் மூலமாக வருமானம் இருக்கும். குடும்பத்திற்காக பணம் விரயம் இருக்கும் காலபுருஷனின்
முதல் வீடு இவருக்கு 3 ம் வீடு.
மேஷம் நெருப்பு ராசி சரராசி கும்பம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தகவல் தொடர்பு
பயணம் ஒப்பந்தம் மூலமாக முன்னேற்றம் இருக்கும்
எந்த ஒரு சிறிய காரணத்தை கொண்டும் மற்றவரை தைரியமாக எதிர்த்து நிற்கும்
போக்கு இருக்கும்.
கும்ப ராசி பெண் ஒரு முறையாவது குடம்
அல்லது பாத்திரத்தை போட்டு உடைப்பார்கள்
குடும்பத்தில் இருந்து 4 ம் வீடு. ரிஷபம் பூமி ராசி
ஸ்திரராசி. அதிபதி சுக்கிரன் ஆவார். வீடு வண்டி சொத்து மூலம் மற்றும் விவசாயம்
உணவு பொருட்கள் மூலம் வருமானம் கிடைக்கும் கும்ப
ராசியில் வரும் அவிட்ட நட்சத்திரம் தவிட்டு பானை எல்லாம் தங்கம் என்கிற பழமொழி உண்டு காலபுருஷனின் வாக்கு ஸ்தானம் இவர்களுக்கு கல்வி ஸ்தானமாக அமைகிறது வாக்கு சார்ந்த தொழில் ஜோதிடம்
வழக்கறிஞர்கள் பேராசிரியர் அருள்வாக்கு குறி சொல்பவர் முதலான தொழில் துறை மூலம் மேன்மை அடைதல். கும்பத்திற்கு வாதத்திறமை மிகவும் அதிகமாக இருக்கும்
இவர்களை பேச்சில் வெல்ல முடியாது கும்ப ராசியினர் புகழ்ச்சிக்கு மயங்குவர் ஆனால் அதே சமயம் தாழ்வு
மனபான்மை உண்டு கும்பராசி
1. காற்றுராசி
2. ஸ்திரராசி
3. ஐட ராசி
4. கணுக்கால்
5 குரலோசை மிக்கது
6 எளிதில் புரிந்து கொள்ளல்
7 மெயின் விதி
8 சமமில்லா த இடங்கள்
9 ரேடியோ, டிவி,பிரிட்ஜ்
வைக்கும் இடம்
10. குடம்
11. விரைவில்
12. நம்புவதில்லை
13. விடா முயற்சி
14. கோழைத்தனம்
15. நண்பகல்
16. பாதி பலன் தரும் ராசி
17. முன்று கால் உடையது
18 மாசி மாதம்
19. கரும் பசுமை நிறம்
20. குயவன்
கும்பராசி யின் இடங்கள்
1. சோம்பேறிகள்,
சந்நியாசிகள் இருப்பிடம்
2 . ரகசியமான இடங்கள்
3 இருட்டு பகுதி
4 .கள்ளுக்கடை
5 சூதாடும் இடம்
6 மாமிசம் விற்கும் இடம்
7. சிறு கிராமம்
8. தொழிற்சாலைகள் நிரம்பிய இடம்
9. நீர் சுத்தகரிக்கும் இடம்
10 .புஞ்சைதானியம் விளைநிலம்
11. நீர் சேமிப்பு தொட்டி
12. பாத்திரக்கிடங்கு
13. குகைகள்
14. மறைவான நீர் பகுதிகள்
15. சுரங்க பாதை
16. ஆய்வு கூடங்கள்
17. குயவர்குடியிருப்பு
18. சதுப்பு நில பகுதி
19. பெரும் மரங்கள் வளரும் பகுதி
20. சேமிப்பு கிடங்கு
21. ஆழ்துளை கிணறு
22 குளிர்பிரதேசம்.
23. கற்குழிகள்
24. பள்ளத்தாக்கு
25. கரிசல் மண்
26. நீரில் வளரும் செடி கொடிகள்
27. பூக்கள்
28. சங்கு
29. முத்துச் சிப்பி
30. உளுந்து
31. மின்சார சாதனங்கள்
32. வெளிநாட்டு பயணம்
33. கண் வியாதி
34. ரத்த ஒட்டம்
35. சுவாச வியாதிகள்
36. இருதய நோய்
37. பழ வகைகள்
38 இரத்தினங்கள்
39 கரிவேல மரம்
40. முள் மரம்
41. வனம்
42. முங்கில்
43. பனை மரம்
கும்பராசி தொழில்கள்
1. ஜோதிடம்
2 ஆன்மீகம்
3 ஆசிரியர் பணி
4. ஆராய்ச்சி துறை
5 நிர்வாக பொறுப்பு
6 ஆலோசனை வழங்குதல்
7. விமானத் துறை
8 விண்வெளி துறை
9 உளவுத் துறை
10. மனவியல் கலை
11. ஆகாயத் தொடர்பு
12. பாதுகாப்பு துறை
13.தியணைப்பு துறை
14. சிறைச்சாலை
15. தொல்பொருள் ஆராய்ச்சி
16 . பொறியியல் துறை
17. சுரங்க பாதை அமைத்தல்
18. வெடிகுண்டு தயாரிப்பு
19. சுங்காஇலாகா
20. இறைச்சி கடை
தமிழ்நாட்டில் உள்ள கும்பராசி பகுதிகள்
1 சேலம் மாவட்டத்தின் தெற்கு பகுதி
2 .நாமக்கல் மாவட்டம்
3 திருச்சி மாவட்டத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள்
4. கருர் மாவட்டத்தின் வடக்கு பகுதி
கும்பம்:
1 இவர்களுக்கு பிடிவாதம் அதிகம்
2. இவர்கள் வீட்டில் இருந்து பார்த்தல் கோவில் கோபுரம் தெரியும் or கோபுரம் போல் கட்டி வைத்திருப்பார்
3 இவர்கள் சாப்பாட்டு பிரியர்கள், அடுத்த வேலை சாப்பட்டை முன்னரே plane செய்வார்கள்
4. Hotel சாப்பாடு விரும்புவர்கள்
5 கும்பராசி வீட்டில் ஒரு ஜோதிடர், or மருத்துவர் or
ஆன்மீகம் சம்பந்தபட்டவர் இருப்பார்
6. சன்னியாசி வாழக்கை
7. கும்பராசி மற்றவர்களை மதித்தால் நல்ல காலம்
8 இவர்களுக்கு ஓர் Guide கண்டிப்பாக இருக்க வேண்டும்
9. கும்பத்தில் ராகு இருந்தால் நல்ல அறிவாளி, ஞானம் உடையவர்
10. உண்மை வெளியே வராது
கும்பத்துக்கும், கோமாளி ராஜாவுக்கும் ஜோதிடம் சொல்லாதே... என்கிற பழமொழி ஒன்று உண்டு. கும்ப லக்னத்தை கொண்டு ஜோதிட பலன் சொன்னால் அது அந்த ஜாதகருக்கு
பொருந்தாது...அவரின் நவாம்ச லக்னம் எதுவோ அதை லக்னமாக வைத்து பலன் சொன்னால் அது
அந்த ஜாதகருக்கு சரியான பலனை தரும். இப்படியும் ஒரு கருத்துண்டு
கும்பத்துக்கு கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம் புரட்டாதி மூன்றாம் பாதம் முடிய பிறந்தவர்கள் கும்பத்து
காரர்கள்
கும்பத்தில் பிறந்தவர்கள் மனதில்
எப்போதுமே ரகசியங்கள் புதைந்து கிடக்கும் அவர்களிடமிருந்து ரகசியத்தை யாரும் பெற
முடியாது நிறைகுடம் போல் அமைதியாக இருக்கக்கூடியவர்கள் பரம சாது போல இருப்பார்கள்
ஆனால் கோபம் வந்தால் பொங்கி எழுவார்கள் இவர்கள் அன்பு கருணை மனித நேயம் எல்லாம்
கொண்டவர்களாக இருந்தாலும் பிரச்சினை என்று வந்தால் வேகம் விவேகம் கொண்டு திடீர்
எழுச்சியுடன் புரட்சி செய்யவும் தயங்காதவர்கள்
கும்பத்து ஆண்கள் அகன்ற உருவம் உடையவர்கள் மத்திம
உயரம் உடையவர்கள் கல்வி தடை பட்டு படித்திருப்பார்கள்
பித்த உடம்புக்காரர்கள்
திட சிந்தனை உடையவர்கள் கற்பனைத்திறன்
கலையார்வம் மிக்கவர்கள் தற்புகழ்ச்சி விரும்புபவர்கள் இவர்களிடம் காரியம் சாதிக்க
இவர்களை புகழ்ந்து பேசி அன்புடன் பேசி நடந்து கொண்டால் போதும் இவர்களை ஏமாற்றி
விடலாம் அவரிடம் கோபமாக சென்றாள் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள்
பொதுநல தொடர்புகள் சமூக சேவை
போன்றவற்றில் தீவிரமாக இருப்பார்கள் நண்பர்கள் இருப்பார்கள் தைரியம் இருந்தாலும்
தாழ்வு மனப்பான்மை இவர்களுக்கு பாதிப்பு உண்டாகும் திருமண வாழ்க்கையில் அவ்வப்போது
பிரச்சனைகள் வரும்
கும்ப ராசி பகலில் பலம் பொருந்திய ராசி
ஆண் ராசி கணுக்கால் குறிக்கும் சிரோ
உதயம்
தை மாசம் நிகழ்காலம் காற்று தத்துவம்
குரூர குணம் பச்சை நிறம் ராமர் பச்சை இளநீலம் ஊதா போன்றவை ராசியான வண்ணங்கள்
சந்தனப்பவுடர் இவருக்கு ஈர்ப்பை
கொடுக்கும்
சுக்கிரன் புதன் சனி சுபர்கள்
சந்திரன் செவ்வாய் குரு பாவிகள்
சுக்கிரன் யோகி
சந்திரன் செவ்வாய் மாரகர்கள்
சனி ஆட்சி சூரியன் சந்திரன் செவ்வாய்
புதன் குரு ராகு சமம் சுக்கிரன் நட்பு
கும்பம் காற்று ராசி. சளிபிடிக்கும் ராசி. கோபுரம் போன்ற தோற்றம். சந்நியாசி ராசி.தாம்பத்திய சுகத்திற்கு தடை. தெனாவெட்டு
அதிகம் இருக்கும்
மிதுன ராசிக்காரர்கள் உடன் கூட்டு
வைத்தால் நன்மை சிம்மராசி காரர்கள் இவர்களுக்கு ஆலோசனை அறிவுரை கூறி வழி நடத்த
ஏற்றவர்கள் விருச்சிகம் தனுசு உதவுவார்கள் கும்ப ராசியினருக்கு தனுசு ராசியினர்
மீது ஈர்ப்பு இருக்கும். ரிஷப ராசி இவர்களுக்கு ஒத்துவராது இவர்களுக்கு விஞ்ஞானம் ஆராய்ச்சி வானிலை ஆட்டோ மொபைல் விமானம் கூட்டுறவு விமர்சகர் துறை புகைப்பட சம்பந்தமான தொழில்
போன்றவை அமையும் இவர்கள் எளிதில் மன உளைச்சல்கள் ஏற்பட்டு உறவினர்கள் நண்பர்கள்
போன்றவர்களிடம் கசப்பை சம்பாதிப்பார்கள் இவர்களுக்கு ரத்தம் சம்பந்தமான
பிரச்சினைகள் காலில் காயங்கள் கண் பல் காது மற்றும் கை கால்கள் மூட்டுகளில்
வேதனைகள் சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகள் அல்சர் போன்றவைகளால் பாதிக்கப்படுவார்கள்
கும்பம் ராசியினர் புத்திசாலிகள்
திடீர் கோபக்காரர்கள் இவர்களுக்கு அமையும் களத்திரம் வாழ்க்கைத் துணை
முன்கோபக்காரர்கள்
தைரியசாலிகளாக இருப்பார்கள்
கும்பம் சனீஸ்வரரின் வீடு இவர்களுக்கு
எதுவும் தாமதமாகவே நடைபெறும் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் வெற்றியாக
இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் பண வரவு இருந்தாலும் செலவுகளும் நன்மை தீமைகள்
எதுவாக இருந்தாலும் தாமதமாக நடைபெறும்
கும்பத்துக்கு ஏழில் சனி ராகு கேது
செவ்வாய் போன்ற பாவிகள் இருந்தால் திருமணம் தாமதம் திருமணத்தில் தடைகள் ஏற்படும் துர்கா வழிபாடு திருமணத்தடையை நீக்கும்
கும்ப ராசிக்கு சனி குரு சூரியன்
சுபர்கள் இணைவுடன் இருந்தால் இளமையில் திருமணம். கிழக்கு இவர்களுக்கு நன்மை. வடகிழக்கு ஒத்துவராது கும்பத்திற்கு குடும்ப ஸ்தானமான மீனத்தில் சூரியன் கேது இருந்தால்
காதல் திருமணம் கும்பத்திற்கு
ஏழில் சிம்மத்தில் சந்திரன் இருந்தால் காதல் திருமணம் குரு மகரத்தில் இருந்தால் அவசர திருமணம் கட்டாயத் திருமணம் சூரியன் சுக்கிரன் சேர்க்கை பெண்களுக்கு பாதிப்பு தரும்
கும்பத்தார் வாழ்க்கைத் துணையுடன்
அனுசரித்தால் நல்லது கும்பத்தற்கு 5 க்கும் 8 க்கும்
ஒருவரே அதிபதியாவதால் புதன் 6'8'12 ல் மறைந்து திதி சூனியம் பாதக தொடர்புபட புத்திர தோஷம் புத்திர
சோகம் தத்துப்புத்திரம் '
தத்துப்போதல் இருக்கும் கும்பலக்னத்திற்கு சுக்கிரன்
பலவீனமாக இருந்தால் பெற்றோர்
பாசம் கிடைப்பது அரிது
கும்ப ராசியில் பிறந்தவர்கள்
கல்வியாளர்களாகவும், ஆசார
அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
கல்வி கேற்றபடி உயர் பதவிகள் பெறுவது
கடினமானதாக இருக்கும்.
மற்றவர்களை மதிக்காத குணமும்
பழிவாங்கும் குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள். தன்னை அளவுக்கு மீறி நம்பும்
தன்மையும், அதனால்
அவமானம் அடையும் நிலையில் இருக்கும்.
குடும்பத்தினர் என்ன செய்தாலும் குறை கூறுபவர்களாக இருப்பார்கள். பெண்கள் உடனான உறவுகள் பிரச்சனைகளை தருவதாக அமையும்.
கும்பம்
1: சொத்து பிரச்சனை
2: குறைந்த வயதில் இறந்தவர் உண்டு
குடும்பத்தில்
3:ஆராய்ச்சி குணம்
4: தீவிரமாக செயலாற்றுபவர்
5: சாப்பாட்டு பிரியர்
6: வீட்டருகே செல் டவர்
7: காணாமல் போனவர் உண்டு
8: கணக்கு போட்டு வாழ்வார்
9:கணவன் மனைவி அன்யோன்யம் குறைவு
10:புத்ர தோஷம் உண்டு
11: தத்து புத்திரம் உண்டு
12:கூட இருப்பவரே துரோகி ஆவார்
13:எளிதாக ஏமாறுபவர்
14: பயண விரும்பி
15:மிரட்டுபவர்
16: பயிற்சி தருபவர்
17: லாப நோக்கு பேச்சு உண்டு
18: அதிகம் எழுதுவார்
19: முதல் தொழில் மாற்றம் உண்டு 2வது தொழில் வெற்றி
20: வீடு வண்டி வாகனம் உண்டு
21: வம்சத்தில் இருதார யோகம்
22: பூர்வீக சொத்து வழக்கு உண்டு
23: விட்டு கொடுப்பவர்கள்
24: காற்று ராசி
25: கோவில் பூசாரி
25: பிடிவாதம்
26: அலட்சியம்
27: சளி பிடிக்கும்
28: டிவி பார்த்து கொண்டே
உண்பவர்கள்
29: ஜோதிடர் ராசி
30: கால் பிடித்து விட சொல்வார்கள்
31: மந்திரங்கள் தந்திரம் நம்புவார்
32: மூச்சு பிடிப்பு
33: சுருட்டை முடி
34: மருத்துவர்
35: அதிகம் பேசுவார்கள்
கும்பத்தான் முன்னின்று வெல்வான் என்பது பழமொழி எதிலும் முதன்மை பெறுபவர்கள் இவர்கள்
ஞானிகளது ராசி கும்பம் ஆகும் கும்ப ராசிக்காரர்கள் பொதுவாக கருப்பு நிறம்
உடையவர்களாகவும், சிந்தனை உடையவர்களாகவும் மற்றும் பொறுமைசாலிகளாகவும் இருப்பார்கள் இவர்கள்
எடுத்த காரியத்தை எவ்விதத்திலும் முடிக்கும் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பார்கள்
. இவர்கள் பல பேருக்கு தோழனாக
இருப்பார்கள். அதிக பெருமையுடையவர்கள் உலகில் அனைவரும் சந்தோசப்படுத்தும்
வகையிலும் இருப்பார்கள் .அரசனை போல் வாழ்வு தகுதியையும் பெற்றிருப்பார்கள்.
இவர்கள் தத்துவ மேதைகள், என்ஜினீயர்கள், மின்சார வேலை செய்ய விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள்
ரசாயன சம்பந்தப்பட்ட வேலைகள் , வீடியோ மற்றும் விமான வேலையை செய்ய
பிரிய படுவார்கள்.
இவர்கள் ஆராய்ச்சி செய்தல், ஜோதிடம்
மற்றும் சிறந்த மருத்துவராக இருப்பார்கள் தொழிலில் எதிரிகள் அதிகம்
1. கும்ப லக்கினத்தில் பிறந்தவர் - தாம் எடுத்த காரியங்களில் வெற்றி
பெற்று, கௌரவம் பெற்று மேன்மையடைய பூசம், ஆயில்யம், மூலம், பூராடம் நட்சத்திரம் வரும் நாட்களில் தொடங்க வேண்டும்.
2. கும்ப லக்கினத்தில் பிறந்தவர் - தாம் புதிய வேலையில் சென்று
பதவியேற்க, வங்கியில் பணம் டெபாஸிட் செய்ய, நகைகள் வாங்கவும் விலைமதிப்புள்ள
இரத்தினக் கற்கள் வாங்கவும்,
வெள்ளிப்பாத்திரங்கள் மற்றும்
உலோகபாத்திரங்கள் வாங்கவும்,
சொத்துக்கள் வாங்கி பதிவு செய்யவும், பத்திரங்கள் வாங்கவும், அவற்றை தமது பெயரில் ரிஜிஸ்டர்
செய்யவும், ஷேர் பத்திரங்களில் முதலீடு செய்யவும், உத்திரட்டாதி,
ரேவதி, அனுசம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்து வந்தால், சிறப்பான முறையில் விருத்தியாகும்.
3. கும்ப லக்கினத்தில் பிறந்தவர் - தாம் கடிதம் எழுதி அனுப்ப, சிபாரிசு கடிதம் வாங்க செல்ல, விளம்பரங்கள் செய்ய, ரேடியோ, தொலைக்காட்சிப்பெட்டி, செல்போன், கம்ப்யூட்டர்,
லேப்டாப், ஜெராக்ஸ், அச்சு இயந்திரங்கள் ஆகியன வாங்க, தொலைபேசி இணைப்பு பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க, பத்திரிக்கை சார்ந்த பணிகள் செய்ய, நூல் வெளியிட,
நூலகம் ஆரம்பிக்க, வியாபார விற்பனை, குத்தகை ஒப்பந்தங்கள் செய்ய ஆரம்பிக்க, வீடு, நிலம், தோட்டம், வாகனம் ஆகியவற்றை விற்பனை செய்ய வீட்டுக்கு மின் இணைப்பு குறித்து
விண்ணப்பம் செய்ய, பரணி, கார்த்திகை ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில், செய்தால் மேன்மையான பலன்கள்உண்டாகும்.
4. கும்ப லக்கினத்தில் பிறந்தவர் - தம்முடைய ஆரம்பக் கல்வி படிக்க
தொடங்க, வீடு கட்ட ஆரம்பிக்க, கட்டிய வீட்டை வாங்க, கலைப்பொருட்கள் வாங்க, விவசாய வயல்கள் வாங்க, கிணறுகள், குளம் ஆகியவற்றை வெட்டி அமைக்க, அவற்றை செப்பனிட, போர்வெல் போட ஆரம்பம் செய்ய, பன்ணைகள் வாங்க, பழத்தோட்டங்கள் வாங்க, பரம்பரைச் சொத்துக்களை தன் பெயருக்கு
மாற்ற எடுக்கும் முயற்சிகளை தொடங்க, பள்ளிகள், கல்லூரிகள் துவங்க, மேலும் அவற்றை விஸ்தரிக்க முயற்சிகள்
செய்ய, பால்பண்ணைகள் தொடங்க, தொழிற்சாலைகளில் பொருட்கள் உற்பத்தி
துவங்க, ரோகிணி, அஸ்தம், மிருகசீரிஷம்,
சித்திரை ஆகிய நட்சத்திரங்கள் வரும்
நாட்களில் முயற்சியை துவங்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.
5. கும்ப லக்கினத்தில் பிறந்தவர் - வேதங்கள், மந்திரங்கள் படிக்க தொடங்க,சமயம் சார்ந்த பணிகளை துவங்க, உல்லாச சுற்றுலா செல்ல, காதல் விசயங்களை ஆரம்பிக்க, நோயிலிருந்து விடுபட மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற, சங்கீதம் - வாய்ப்பாட்டு இசைக்கருவிகள் இவைகளை கற்க ஆரம்பிக்க, சினிமா மற்றும்சீரியல் எடுக்க ஆரம்பம் செய்ய, விருந்து விழாக்கள் நடத்த, கிளப்புகள் ஆரம்பிக்க, குழந்தை செல்வம் கிடைக்க வேண்டி முயற்சிகள் செய்ய, கோயில்களில் வேண்டுதல்கள் செய்ய, புத்திரப்பேறு வேண்டி யாகங்கள் செய்ய, புத்திரப்பேறு வேண்டி மருத்து சிகிச்சைகள் செய்ய, சதயம், சுவாதி, பூரட்டாதி, விசாகம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்து வரமேன்மையான
பலன்கள் உண்டாகும்.
6. கும்ப லக்கினத்தில் பிறந்தவர் - தமக்கு விலையுயர்ந்த உடைகள்
வாங்குவதற்கு, உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள் துவங்குதல், புதியதாக வேலைக்கு சேருதல், வேலையாட்கள் அமர்த்திக் கொள்ளுதல், வீட்டு பிராணிகள் வாங்குதல், கடன் வாங்க முயற்சி செய்தல், வீட்டை வாடகைக்கு கொடுத்தல், வாடகைக்கு குடிபோதல், எடுத்த காரியங்களில் வெற்றி பெற, கைத்தொழில் துவங்குதல் ஆகியவற்றை, பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் ஆரம்பிக்க மேன்மையான பலன்கள்
கிடைக்கும்.
7. கும்ப லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய வர்த்தகம் நிமித்தமாக புதிய
நபரை சந்திக்க, தனக்கு கௌரவம்,
மதிப்பு வேண்டி செய்யும் காரியங்களை
துவங்க, திருமணத்திற்க்கு வரன் தேட துவங்க, பெண்/மாப்பிள்ளை ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்க, தொழில் நிமித்தம் வெளிநாடு பயணம் துவங்க, கைவிட்டுப் போன பொருட்களை மீட்பதற்க்கான முயற்சிகள் செய்ய துவங்க, பொதுகூட்டங்கள், வியாபார விளக்க கூட்டங்கள் ஆகியவற்றை
நடத்த திருவாதிரை, புனர்பூசம்,
மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும்
நாட்களில் துவங்கினால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
8. கும்ப லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய இன்சூரன்ஸ் பாலிசி போட
ஆரம்பிக்க மேன்மை தரக் கூடிய நட்சத்திரம் அஸ்தம், சித்திரை
9. கும்ப லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சமயம் சார்ந்த பணிகள், மற்றும் தெய்வ வழிபாடு குறித்த காரியங்கள் துவங்கவும், தியானம் பழக,
தீட்சை பெறவும், ஆராய்ச்சிகளைத் துவங்கவும், புண்ணிய ஸ்தல யாத்திரைகள் செல்ல
துவங்கவும்,ஆவிகளுடன் பேசுதல் இது தொடர்பான முயற்சிகள் செய்ய துவங்கவும், சட்டப்படியான கோர்ட் (அ) வக்கீல் மத்தியஸ்தம் செய்ய முயற்சிகள்
துவங்கவும், ஆன்மீக நூல்கள் வெளியிட துவங்கவும் உயர்படிப்பு (கல்லூரி படிப்பு)
குறித்து காரியங்கள் ஆரம்பிக்கவும், நீண்ட தூரப் பயணங்கள் கடல் வழி, ஆகாய வழியில் செல்ல ஆரம்பிக்கவும், மறுமணம் குறித்து முயற்சிகள் செய்ய தொடங்கவும், தர்ம காரியங்கள் செய்ய துவங்கவும், திருவாதிரை,
புனர்பூசம், சுவாதி, விசாகம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்ய ஆரம்பிக்க
மேன்மையான பலன்கள் உண்டாகும்.
10. கும்ப லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சொந்த தொழிலை துவங்கவும்
தன்னுடைய பணியில் பதவி உயர்வுக்கான முயற்சிகள் செய்ய துவங்கவும், அரசாங்கம் தரும்லைசென்ஸ்சுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கவும், அரசின் உயர்பதவியிலிருப்பவர்களைச் சென்று சந்திக்க, கௌரவமும் மதிப்பும் மிக்க பிரபுக்களைச் சென்று சந்திக்கவும், தன்னுடைய தொழில் அபிவிருத்திப் பற்றி ஆலோசனைகள் பெறவும். பூசம்,ஆயில்யம்,அனுசம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்ய துவங்கினால்
மேன்மையான பலன்கள் உண்டாகும்.
11. கும்ப லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய நண்பர்களின் நட்பை
வலுப்படுத்த, அவர்களைச் சென்று சந்திக்கவும், தனக்கு ஆலோசகர்களை நியமித்து
கொள்ளுவதற்கும், தன்னுடைய ஆதரவாளர்களைச் சென்று சந்தித்து தனக்கு அதரவு பெறவும்,தான் எடுத்த காரியங்களில் குறைந்த முயற்சியில் வெற்றி பறவும், முன்னேற்றம் பெறவும், லாபம் பெறவும், தனக்கு ஏற்படும் நோய்களுக்கு மருந்து சாப்பிட துவங்கவும், ஆபரேசன் சுகமாய் நடந்து மகிழ்ச்சி பெறவும், தனக்கு ஏற்பட்ட பொருட்சேதத்தை புனர்நிர்மாணம் செய்ய ஆரம்பிக்கவும், கம்பெனிகள்,
சபைகள், சங்கங்கள் ஆரம்பிக்க, முன் காரியங்கள் செய்ய தொடங்க மிகவும்
உகந்த நட்சத்திரங்கள் - பரணி, கார்த்திகை, பூராடம், உத்திராடம் ஆகியவை. இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில், மேல் கூறிய காரியங்கள் செய்ய துவங்கினால் மேன்மையான பலன்கள்
கிடைக்கும்.
12. கும்ப லக்கினத்தில் பிறந்தவர் - தனக்கு சொத்துக்களை கிரயத்திற்கு
வாங்குதல், தொழில் மற்றும் நிலங்களில் முதலீடு செய்தல், வெளிநாடு செல்லுதல், தன்னுடைய இரண்டாவது தொழில் துவங்குதல், வைத்திய ஆராய்ச்சிகள் செய்ய துவங்குதல் ஆகிய காரியங்கள் செய்ய துவங்க
வேண்டிய நட்சத்திரங்கள் திருவோணம், ரோகிணி, அவிட்டம், மிருகசீரிஷம் ஆகியவை, மேற்கூறிய காரியங்களை இந்த நட்சத்திரம்
வரும் நாட்களில் செய்ய ஆரம்பித்தால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
ராசி மண்டலத்தில் 11 வது ராசி. கும்பம் தடித்த கழுத்து இருக்கும். சுயமரியாதைக்கு மிகுந்த
முக்கியத்துவம் தருபவர். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து, எதிர்ப்பு இருக்கும். தலை வழுக்கையாக இருக்கலாம் அல்லது கேசம், மிகவும் குறைவாக இருக்கலாம். குழந்தைப் பருவத்தில் சில
துரதிருஷ்டங்களும் துன்பங்களும் இருந்திருக்கலாம். ஆனால், வாழ்க்கையின் பிற்பகுதியில், மகிழ்ச்சி உண்டு அந்த சமயத்தில் செல்வச் செழிப்பும், சொத்துக்கள் வசதியும் கிடைக்கும். சகோதரர்களின் கெட்ட சகவாசம் இவர்களை
பாதிக்கும். 24, 25 வயதில், மிகவும் அதிருஷ்டசாலியாக இருப்பார்கள். ஒரு தத்துவஞானி எந்த ஒரு
விஷயத்தையும், துருவிப்பார்த்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர். அமைதி
விரும்புபவர் நன்கு படித்தவர். பல விஷயங்களைப் பற்றியும், சதா சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள் . மற்றவர்களுக்கு உதவிட விருப்பம் இருக்கும் கூரிய நினைவாற்றல் கொண்ட
எண்ணங்களில் விரைவாகச் செயல். ஒளிவு மறைவின்றி பேசக்கூடியவர் வாழ்க்கையில் பல
ஏற்றதாழ்வுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். நல்ல கவர்ச்சியான, கம்பீரமான தோற்றமுடையவர். பல கஷ்டங்கள் இருந்தாலும், அச்சமின்றி செயல்படுபவர். சமயோசிதமாக செயல்படக் கூடியவர் அரசியலில்
ஆர்வம் கொண்டவர்.. பொது நிறுவனங்களிலும், ஆர்வம் கொண்டவர். விளையாட்டுத்
துறையில், விருப்பம் இருக்கும். வலுவான உடற்கட்டையுடையவர் மிகவும் தாராள சிந்தை
கொண்டவர். நிலபுலன்களுக்கு சொந்தமாக இருப்பதுடன், மிகுந்த கவனமாகவும் பணத்தை செலவு செய்வார்கள். எண்ணங்களிலும்
செயல்களிலும், மிகுந்த உறுதியுடன் இருப்பவர். பலதரப்பட்ட விருந்துகளுக்கும், கிளப்புகளுக்கும் போய்வர விருப்பம் இருக்கும் அதன் விளைவாய் அவப்
பெயரும் ஏற்படும். உணர்ச்சிகளையோ, காதலையோ வெளிப்படையாக, எடுத்துக்காட்டுவதில்லை. மிகவும் தந்திரம்மிக்க சாமர்த்தியசாலி.
நன்கு படித்த, புத்திசாலியான ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்ளவே விரும்பமுடையவர் கும்ப ராசியின் தன்மைகள் :
ஸ்திர ராசி
ராசியின் அதிபதி : சனி பகவான்
ராசியின் சின்னம் : குடம்
ஆண் ராசி
மேற்கு ராசி
காற்று ராசி
காம ராசி
ராசியின் இடம் : குளம்
ராசியின் காலம் : நண்பகல்
ராசியின் குணம் : ஆணவம்
ராசியின் செயல் : மத்திமம்
ராசியில் உள்ள நட்சத்திரங்கள் :
அவிட்டம் 3,4 சதயம் 1,2,3,4 பூரட்டாதி 1,2,3
ராசி குறிப்பிடும் உடல் உறுப்புகள் :
கணுக்கால்
இந்த ராசி தான் சனிபகவானின் மூலதிரிகோண
வீடாகும்.
கும்ப ராசியின் காரத்துவங்கள் :
1. மறைவிடம்
2. ரகசிய இடம்
3. இருண்ட பிரதேசம்
4. மதுபானக் கடைகள்
5. இடுப்பின் பின்புறம்
6. சூதாட்ட ஸ்தலங்கள்
7. கசாப்புக் கடை
8. சோம்பேறிகள்
9. புஞ்சை தானியம் விளையும் இடம்
10. சோதிடம்
11. ஆன்மீகம்
12. ஆசிரியர்
13. ஆலோசனை வழங்குபவர்
14. விமானத்துறை
15. தீயணைப்புத் துறை
16. சிறைச்சாலை
17. வெடிகுண்டு தயாரித்தல்
18. சுங்க இலாகா
19. உளவுத்துறை
20. குளம் நீர் தேங்கிய பகுதி
கும்ப லக்கின சுபர் அசுபர் :
யோககாரகர்கள்:சுக்கிரன்
யோகமில்லாதவர்கள்: சந்திரன், குரு, செவ்வாய்
ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: சனியும், சுக்கிரனும் சேர்ந்தால் அது இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜயோகத்தைக்
கொடுக்கும்.
மாரக அதிபதி: குரு, செவ்வாய்
கும்ப லக்னம் :
லக்கினாதிபதியான சனி 12 – க்குரியவராகி விடுவதால் இவர் தரும் பலன்கள் குறைவே இவர் சுக்கிரன்
புதன், குருவுடன் ராகு, கேதுவுடன் சேரும்போது நல்லப்பலன்களை தர
வாய்ப்பு உள்ளது.
தனித்த சனி எங்கு அமர்ந்தாலும் யோக
பலன்களைத் தருவதில்லை. யோகம் தந்தால் கொடுத்தவனே, பறித்துக் கொண்டாண்டி என்ற நிலை 2,11 – க்குரிய இந்த லக்கினத்திற்கு சுபதன்மை பொருந்தியவர் ஒன்றே சொல்லலாம்.
இவர்தனித்து 1, 2, 5, 6,
8, 10, 11 போன்ற இடங்களில் இருந்தால் நல்ல
பலனைத் தருகிறார். இந்த இடங்களில் இவரோடு ராகு, கேது, சூரியன், சுக்கிரன் சேருவது நன்மையே தருகிறது.
3, 10 – க்குரிய செவ்வாய் இந்த லக்கினத்திற்கு பாபியாகி விடுகிறார்.
சூரியன், செவ், சனி, சேர்க்கை எங்கு இருப்பினும் அதிகபட்ச பாதிப்பான பலனைத் தருகிறார்.
குரு, செவ், சுக், சேர்க்கையானது எங்கு இருந்தாலும் தவறே. எதிர்பாரா விபத்து ஆயுள் பயம்
போன்றவைகளை தந்து விடுகிறார். இவர்களோடு சனி தொடர்பு பெறுவது தவறை
அதிகப்படுத்துவதாக இருக்கிறது.
4, 9 – க்குரிய சுக்கிரன் 3, 6, 8, 12 – ல் இருப்பது
சிறப்பாக தெரிகிறது. அவர் தசாபுத்தி காலங்களில் பல நன்மைகளை செய்கிறது,
இவரோடு ராகு, கேது, சனி, புதன் தொடர்பு பெறுவதும் நல்லதே. 5, 8 – க்குரிய புதன் சுபன் என்றாலும் இவர் செய்யும் நல்ல பலன்களை கடைசியில்
கெடுத்து விடுகிறது.
இவர் 4, 5, 8, 10 – ல்இருப்பது யோக பலன்தரும் அமைப்பேயாகும். இவரோடு சேர்ந்த ராகு – கேதுக்கள் நன்மையே செய்கின்றனர்.
6 – க்குரிய சந்திரன் சனி, குருவுடன் தொடர்பு பெறுவது நன்மை
தருகிறது.
கடின உழைப்பை தந்து உயர்த்துகிறது. 7 – க்குரிய சூரியன் 3, 5, 10, 11 – ல் இருந்தால்
நல்ல பலனைத் தருகிறது. மற்ற இடங்களில் இருப்பது தவறைத் தருகிறது.
இந்த லக்கினத்திற்கு கஜகேசரி யோகம், குரு மங்களயோகம், அதியோகம் நன்மைகளைத் தருவதிலலை.
மாளவியா யோகம், நிபுணயோகம் நன்மையான பலன்களை தருகிறது. சந்திரமங்கள யோகமும் சிறப்பு
பெறுவதில்லை. சந்திரன் 4-ல் இருப்பது ஒருவகையில் நல்ல பலன்களை தந்துவிடுகிறார்
கும்ப ராசியின் உருவம் பானயை
தலையில் சுமந்தபடி நிற்கும் மனிதனாகும். பானையானது சேகரிப்பு
மற்றும் சேமிப்பின் அடையாளமாகும். இதனால்,கும்ப ராசிக்காரர்கள் யாரிடம்
பழகினாலும் அவர்களிடமிருந்து தனக்கு என்ன கிடைக்கும் என்பதிலேயே குறியாக
இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.அதாவது இவர்கள் எதை செய்தாலும் லாபம் கருதியே
செயல்படுவார்கள். பிறரிடம் உதவி கேட்பதற்கு இவர்கள் தயங்கவே மாட்டார்கள், யாரிடம் பழகினாலும் அவர்களிடம் ஏதாவது ஒரு உதவியை
எதிர்பார்ப்பார்கள். மனிதன் பானையை தலையில் சுமந்தபடி நிற்பதால்,இந்த ராசிக்காரர்கள் பிறர் சுமைகளையும் தானே சுமப்பதற்கு தயாராக
இருப்பார்கள். அதாவது அடிமை வேலை செய்வதற்கு தயங்க மாட்டார்கள்.
கும்பம்
கும்ப ராசியின் உருவம் பானயை
தலையில் சுமந்தபடி நிற்கும் மனிதனாகும். பானை
வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் கும்ப ராசியைக்குறிக்கும். குயவன் வீடு, கள்ளுக்கடை,
அடுக்களை,சேமிப்பு கிடங்கு, யாகசாலை போன்ற இடங்களை கும்ப ராசி
குறிக்கும். பானைக்குள் எப்படி இருட்டாக இருக்குமோ அப்படியே குகை மற்றும்
சுரங்கங்களும் இருக்கும். எனவே இவ்விடங்களையும் கும்ப ராசி குறிக்கும்.
கும்பராசியினர் துணிந்து செயல் ஆற்றுவதில் வல்லவர். ரகசியகாய் நகர்த்தலில் வல்லவர்கள்
கும்பலக்னத்தில் பிறந்தவன் பிறர்
அறியாமல் மறைவாக பாவம் செய்பவன்.
கும்பத்திற்கு நிகரான அகண்ட வயிறுடைய
தேகத்தை உடையவன்.
கடுமையாக முயற்சி செய்து
விருத்தியடைபவன்.
புஷ்பம்,சந்தனம்,வாசனைத்திரவியங்கள் அணிந்து கொள்வதில் பிரியனாக இருப்பவன்.
சுக்கிரன், செவ்வாய் கூடியிருந்தால் பிரபல யோகத்தைத் தருவார்கள். நண்பர்களை பாதிப்பவர். சுகவான்.
திடசிந்தனை கொண்டவர்.
தத்துவம், ஞானம், நீதித்துறை, விஞ்ஞானம், தியானம் ,யோகா போன்ற துறைகளில் ஈடுபாடு இருக்கும் கும்ப லக்கினம் கும்ப ராசி
கால புருஷனுக்கு லாபத்தை செல்லக்கூடிய 11ம் வீடு கும்ப ராசி ஸ்திர ராசி காற்று
ராசி சனிபகவானின் மூலத்திரிகோண ஆட்சி வீடு இங்கு சதயம் தனது நான்கு பாதங்களையும்
வியாபித்துள்ளது கும்பராசி பொதுவாகவே உள்ளதை வெளிக்காட்டாது இன்பமும் துன்பமும்
எதையும் வெளிக்காட்டாது சதயம் ஸ்திர மான மனம் கொண்டவர்கள் சாப்பாட்டு பிரியர்கள்
ருசித்து ருசித்து சாப்பிடுவார்கள் பெண்களாய் இருந்தால் மற்றவர் சமைத்ததை விரும்பி
உண்பார்கள் மனதில் ஒன்றை நினைத்து விட்டால் எப்பாடுபட்டாவது நிறைவேற்றி விடுவார்கள் இரண்டாம் அதிபதி
குரு இவர்கள் வாக்கு நேர்மையாய் இருக்கும் முடிந்தவரை நேர்மையாய் இருக்க
நினைப்பார்கள் தம்முடன் இருப்பவர்களும் அவ்வாறு இருக்க வேண்டும் என எண்ணுவார்கள்
நீதி நேர்மை யாவும் இரக்க உணர்வும் கொண்டவர்கள் தனக்காக அதிகமாக இனிமையாகப்
பேசுவார்கள் சமூக காரியங்களிலும் பொதுஜன காரியங்களிலும் முன்னின்று நடத்த
அதற்குண்டான வாய்ப்பு தேடிவரும் தனது துணையுடன் ஒத்துப் போக மாட்டார் இவரின் துணை
இவரைப்போல் இனிமையாய் வார்த்தைகள் பேசாமல் சற்று கடினமாய் இருப்பார் ஏழாம் அதிபதி
சூரியன் பிடிவாதம் அதிகம் இருக்கும் காணாமல் போனவர்கள் இருப்பார்கள் வியாபாரத்
தந்திரம் உண்டு வியாபாரம் செய்வார்கள் ஒரு நாளாவது வியாபாரம் செய்வார்கள் அல்லது
நண்பர் உறவினர் கடைகளில் ஒரு நாளாவது கல்லாவில் உட்கார்ந்து வியாபாரம் செய்வார்கள்
எந்த ஒரு செயலையும் கண்ணும் கருத்துமாக செய்வார்கள் வயிறு சற்று பெரியதாக
இருக்கும் எப்படியும் காரியம் சாதித்து விடுவார்கள் இவர்கள் இயற்கை மிகவும்
விரும்புவார்கள் இயற்கையான இடங்களுக்கு ஊர் சுற்றுவதில் விருப்பம் அதிகம் கற்பனை
மிக்கவர்கள் அரசு சார்ந்த வருமானம் இருக்கும்
கும்பராசியின் காரகத்துவம்
1. தாமச
குணம்
2. சாம்பல்
நிறம்
3. மூல ராசி
4. ஆகாய தத்துவ ராசி
5. தெய்வம்- பரமேஸ்வரன்
6. இவர்கள் சந்திராஷ்டம நாளில் மகாலக்ஷ்மியை வழிபட வேண்டும்
7. காலதாமதம்
8. பழைய பொரூட்கள்
9. கடின உழைப்பு
10. வேலையாட்கள்
11. தாழ்வு மனப்பான்மை
12. தாழ்ந்த இனத்தவருடன் பழக்க வழக்கம்
13. அழிந்த கட்டிடம்
14. பஞ்சம்
15. தண்டனை
16. மலட்டு தன்மை
17. சோம்பல்
18. பயம்
19. பிடிவாதம்
20. அடிமை சிந்தனை
21. விருப்பம் இன்மை
22. ரகசியம்
23. சூதாட்டம்
24. போதை வஸ்து விற்பனை செய்யும் இடம்
25. ஆழமான மனசு
உறவு மூறைகள்
26. சித்தப்பா
27. மூத்தசகோதரன்
28. தொழில் காரகன்
நாடி படி சனிக்கு நட்பு பகை
29. நட்பு - சுக்கிரன் புதன் குரு ராகு
30. பகை - சூரியன் சந்திரன் செவ்வாய் கேது
பாரம்பரிய படி நட்பு/ பகை
31. நட்பு - சுக்கிரன் புதன்
32. பகை - சூரியன் சந்திரன் செவ்வாய்
33. சமம் - குரு
34. மெலிந்த தேகம்
35. எவ்வளவு படித்திருந்தாலும் பிரமலமாவது கஷ்டம்
35. லக்கினத்திற்கு சுபர் பார்வை இருந்தால் புகழ் பெற வாய்ப்பு
36. மற்றவர்களை அடிக்கடி இழிவாக பேசுவார்கள்
37. தற்பெருமை பேசுவார்கள்
38. மற்றவர்கள் செய்த உதவியை உடனே மறந்து விடுவார்கள்
39. ஜோதிடத்தில் புலமை
40. நண்பர்களால் லாபம்
41. தீவிர சிந்தனை
42. கும்பத்தில் புதன் இருப்பவர்கள் ஓயாது படிப்பவர்கள்
43. அறிவாளிகள்
44. பகுத்தாய்யும் அறிவு
45. ராகு சம்பந்தம் - வெளிநாட்டு பயணம் உண்டு
46. ஆழமான மனசு
47. சுமாரான அதிர்ஷ்டம்
48. அதிக உள்ளூணர்வு
49. ராசி கற்கள் - சஃபையர் அமீதுஸ்ட்
50. ஈயம்
51. கணுக்கால்
நோய்கள்
52. மூட்டு வலி
53. ஆஸ்துமா
54. போலியோ
55. குதிகால் வியாதி
56. ஊனமுற்றோர்
57. உடல் மெலிதல்
58. முடகக்குவாதம்
59. ஆயுட்காரகன்
60. தாடை
61. பிருஷ்டம்
62.ஜீரண உறுப்பு
63. மூச்சு தொந்தரவு
தொழில்கள்
64. சூரி-சனி = அரசு பணி
65. சந் சனி = மார்கெட்டிங் ஹோட்டல் தொழில் பண்ணை தொழில்
66. செவ் சனி = டெக்னிகல் மெஷினரி போலீஸ்
67. புத சனி = வணிக வியாபாரம்
கணிதம் போதனை
68. குரு சனி= கௌரமான வசதியான தொழில்
69. சுக் சனி = கலை தொடர்பு தொழில்
70. ரா சனி = கள்ள கடத்தல் நிழல் சார்பு தொழில்
71. கே சனி = மருத்துவம் சட்டம்
72. இரும்பு வியாபாரம்
73. எண்ணெய் வியாபாரம்
74. நிலக்கரி
75. கழிவு பொருள் கள் விற்பனை
76. தோட்டி வேலை
77. ஆடு மாடு பன்றி வளர்த்தல்
78. தோல் வியாபாரம்
79. செருப்பு தைத்தல்
80. துப்புரவு பணி
81. முடி வெட்டும் பணி
82. தொழில் சாலைகளில் எடுபிடி
83. விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள்
84. ஓரே இடத்தில் வேலை செய்ய விருப்பம்
85. சுரங்க காண்ட்ராக்டர்கள்
86. விண்வெளி துறை
87. தீயணைப்பு துறை
88.சிறை சாலை
89. தொல் பொருள் ஆய்வு
90. பொறியியல் துறை
91. சுங்க இலாகா
92. உளவு துறை
93. Cbi வேலை
94. ஏற்றுமதி
95. சட்ட ஆலோசகர்
96. மனோவியல் கலை
97. இறைச்சிக்கடை
98. ஜெயிலர்
99. ஈயவேலை
100. சாக்கு தைத்தல்
101. தூக்கு தண்டணை நிறைவெற்றும் வேலை
102. சவக்குழி தோண்டுதல்
103. எருமை வியாபாரம்
104.பழைய பொருட்களை புதிய பொருட்களாக மாற்றுதல்
105. கட்டிட காண்டராக்ட்
106. கடுகு உளுந்து எள் வியாபாரம்
தெய்வங்கள்
107. கருப்பசாமி
108. அய்யனார்
109. அண்ணமார்
110. கருப்பராயன்
111.சுடலை சாமி
112. எல்லையம்மாள்
113. ஊர்க்காக்கும் காவல் தெய்வங்கள்
114. கூரையில்லாத தெய்வங்கள்
இடங்கள்
115. சாப்பாட்டு அறை
116. சேமிக்கும் அறை store room
117. வேலை பார்க்கும் இடம்
118. கழிவான அசுத்தமான இடங்கள்
119. 1 ராசியை கடக்க 30 மாதம்
120.கும்பம் = காற்று மற்றும் ஸ்திரம் குறிக்கும் ராசி
121. அடைப்பட்ட காற்று,
122. சைக்கிள் சக்கரங்களில் இருக்கும்
அடைப்பட்ட காற்று
123. வயிற்றில் இருக்கும் அபான வாயு காற்று
124. கும்பம் = மூலம் + காற்று
125. தேங்காய்
126.பாக்கு
127. பப்பாளி
128. புடலை
129. மாங்காய்
130. மரிக்கொழுந்து
131. பெரிய பானை
132. கறுப்பு ப் பணம்
133. ரகசிய பாதுகாப்பு அறை
134. மனிதத் தன்மையுள்ளராசி
135. ஆண்தன்மையில்லாமை
136. சமூக சேவை
137.ஜன சமூக ஈர்ப்பு
ஊர்கள்
138. சேலம் மாவட்டத்தின் தெற்கு
139. நாமக்கல்
140. திருச்சி வடக்கு
141. கரூர் மாவட்டத்தின் வடக்கு
142. அரேபியா
143. போலந்து
144. ஊர்ஸ்பெக்
145. சாலிஸ் பேரி
பாவ புண்ணியங்களின் சேமிப்பு கிடங்கு
சனியின் வீடான கும்பம் ஆகும்
கரிசல் மண் இடங்கள் கால் பகுதிகள் பாதிக்கும் ராசி கும்பம்
மண்பாண்டங்கள் செய்வோர் வாழுமிடம்
ரகசியங்களை உள்ளடக்கிய ராசி கும்பம்
கும்ப ராசி: ஸ்திர ராசி உருவம்
மண்பானையை ஏந்தி நிற்கும் மனிதன் பானைக்குள் என்ன இருக்கிறது என்று தெரியாது அது போல் இவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்று யாராலும் கண்டு பிடிக்கமுடியாது அந்த காலத்தில் பானையில்
தங்ககாசுகளை மறைத்து வைத்திருந்தார்கள்
கும்பராசிக்காரர்கள் பணம்
உள்ளவர்களாக இருப்பார்கள். பானையைபூமிக்குள் புதைத்து வைப்பார்கள் ஆனால் எங்குவைத்தோம் என்று மறந்து போய்விடுவார்கள். மற்றவர்களுக்குசெலவு செய்வதை குறைத்து சிக்கனத்தோடு இருப்பார்கள். பானை கீழே விழுந்தால் நொறுங்கி விடும். அதே போல் இவர்கள் அதிர்ச்சியானவிசயத்தை
கேட்டால் மனமும் நொறுங்கிபோய்விடும். பானை மண்ணில் ஆனது வலுவற்று இருக்கும்
உடல்பலத்திலும் வலு
குறைந்தவர்களாக இருப்பார்கள்.பிடிவாதம்
தெனாவட்டு இருக்கும். சாதிக்க பிறந்தது. பெரும்பாலும் விஞ்ஞானிகள் கும்பராசிக்காரர்கள். சளி
பிடிக்கும்ராசி. கும்பராசியில் ஒரு கிரகம் இருந்தால் அது சாமி ஆடும் குறி சொல்லும். ஜோதிடத்திற்கு மிக அருமையான ராசி. ரேடியோ டிவி
இதில் அதிக நாட்டம் இருக்கும். பிரபஞ்சங்கள்எல்லாம் இவர்களின் மூலைக்கு எட்டி விடும். ஏற்றம் இறக்கம் உள்ள ராசி இவர்கள் வாழ்க்கையும் அப்படித் தான் ஒரு ஏற்றம் இருக்கும்
ஒருஇறக்கமும் இருக்கும் ஏனென்றால் கும்பம் கலசம் கோவில்களுக்கு போய் கோபுரகலசத்தை அண்ணாந்து பார்த்து வணங்கி பின் அந்த கும்பத்தை யாருமே பார்ப்பது இல்லை.பெரும்பாலும் கும்பராசிக்காரர்களை அடுத்தவர்கள்
தேவைக்கு பயன்படுத்தி கொள்வார்கள்.பின்பு கழட்டி
விட்டுவிடுவார்கள்.கேசியர் வேலை நாதஸ்வரம் ஊதுபவர் அதிகமாகதிருமணம் ஆகாதவர்களைசொல்லும் மணம் முடித்து பிரிந்தவர்களையும் சொல்லும்.எந்தஒரு விசயத்தையும்
பிரமாண்டமாக பேசுவார்கள்.கற்பனை அதிகம்.சாப்பாட்டுராசி மற்றவர்களை
நம்பி மோசம் போகும் ராசி.
கும்பம் ஸ்திர ராசி இவர்களை எளிதில்
புரிந்து கொள்வது சிரமம்
பிரபஞ்ச ராசி, பணம் உள்ளவர்கள் ,சிக்கனமாக
இருப்பார்கள்,உடல் பலம் குறைவு,சாதிக்க பிறந்தவர், பிடிவாதம், தெனாவட்டு ,ஏற்ற, இறக்கம் உள்ள
ராசி, திருமணம் ஆகாதவர்களை கூறும், மணமாகி பிரிந்தவர்களை கூறும்,வாய்வு தொல்லை உண்டு, தாம்பத்யம்
விரும்பாதவர், கோமாளி ராசி,ஏமாளி ராசி கஞ்சத்தனம் உண்டு அடுத்தவர் குழந்தைகள் மீது பாசம்,சாப்பாட்டு ராசி ஏமாறும் ராசி, பிரமாண்ட பேச்சு, ஜாமீன்
போடக்கூடாது, செய்வினை பயம் உண்டு,கற்பனை ராசி,வரவு செலவு
கணக்கு எழுதி வைப்பார்கள் ,இசைக்கருவிகள் உள்ள வீடு,மருத்துவர்களை கூறும் ராசி,காணாமல் போணவர்களை கூறும் ராசி,இரண்டு திருமணம் செய்தவர்களை கூறும் ராசி,திடீர் மரணத்தை கூறும்,விசத்ததால் மரணத்தை கூறும் ராசி,மாற்றுத்திறனாளிகளை கூறும் ராசி அரசாங்க மற்றும் அரசியல் ஈடுபாடு
உண்டு,தந்தை சொத்து அனுபக்க முடியாது,உழைக்காத வருமானம் உண்டு
1க்குடையவரே 12 க்குடையவர் இவர்கள் காலில் அடிபடும் இவர்கள் குடும்பத்தில் காணாமல்
போணவர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உண்டு
2,க்குடையவரே11. க்குடைவர் லாப நோக்கு பேச்சு மற்றும் தொழில்
3 க்குடையவரே 10 க்குடையவர் எழுந்து ,கவிதை ,
கட்டுரை ஈடுபாடு அதிகம் முதலில் செய்யும்
தொழிலை விட்டு இரண்டாவது தொழில் வெற்றி உண்டு
4 க்குடையவரே 9 க்குடையவர் வீடு வாகனம் யோகம் உண்டு ,
தாய், தந்தை வழியில் இரண்டு திருமணம் உண்டு இவர்கள் கோவில் அருகில்
வசிப்பவர்
5 க்குடையவரே 8 க்குடையவர்
பூர்வீக சொத்து அனுபவிக்க முடியாது, தத்துபுத்திரம்
6 க்குடையவர் சந்திரன் இவர்கள் பெண்களிடம் கடன் வாங்க கூடாது வாமிட்
ராசி ,மது அருந்துதல் ஆகாது
7 க்குடையவர் சூரியன் திருமண சுகம் குறைவு , மனைவி வழியில் அரசாங்க வேலை கூறும் ராசி
: கும்ப
வீடு ஊன வீடு
நவகிரகங்களில் சுக்கிரன் அசுரர்களுக்கு
குருவாக இருந்தமையால் அவர்க்கு அசுரகுரு என்று பெயர். சுக்கிராச்சாரியார் என்று
அழைப்பார்கள். சுக்கிரனுக்கு ஒரு கண்மட்டுமே உண்டு என்பது வரலாற்று உண்மை.
சுக்கிராச்சாரியார் மாபலியின் குருஆவார். மகாவிஷ்ணு 3 அடி மனிதனாக அதாவது வாமணனாக மாபலியின் முன் தோன்றி 3 அடி நிலம் கேட்கிறார். மாபலி சக்ரவர்த்தியும் தருவதாக
ஒப்புக்கொண்டார். வாமன்னின் சூட்சமத்தை உணர்ந்த சுக்ராச்சாரியார் மாபலியிடம் அவர்
ஒரு மாயாஜாலக்காரன் அவன் உன்னை அழிக்கவே வந்துள்ளான் கொடுக்க வேண்டாம் என்று
எச்சரிக்கின்றார்.
ஆனால் மாபலியோ கமண்டலத்துக்குள் நீரை
எடுத்து தாரை வார்த்து 3 அடி நிலம் கொடுக்க முயற்ச்சிக்கின்றான்.அப்போது சுக்ராச்சாரியார்
வண்டாக வேடம் தாங்கி கமண்டலத்தின வாயை அடைத்துக் கொள்கிறார். இதை அறிந்த மகா
விஷ்ணு கமண்டலத்தின் துளையை குச்சியால் துளைக்கின்றார். அப்போது குச்சியானது
சுக்கிராச்சாரியாரின் கண்ணை துளைத்த்து. இதனாலேயே சுக்கிரன் கண்ணை இழந்தார்
கமண்டலம் - கும்பம் அம்சம்
சுக்கிராச்சாரியார் - சுக்கிரன் அம்சம்
எனவே கும்ப சுக்கிரன் ஊனமாயிற்று.
இது கதை மட்டுமல்ல நடைமுறையில்
கும்பத்தில் சுக்கிரன் இருந்தால் கண் ஊனமாகவே இருக்கும்
கும்பகர்ணன் கும்ப ராசி . கும்ப ராசி வாய்ப்புக்களை சரியாக
பயன்படுத்த தெரியாதவர்கள் கும்ப ராசியின் பலன்கள்
குடத்தின்
அமைப்பைக் குறிப்பது கும்பம். குடத்தை திறந்து பார்த்தால்தான் உள்ளே இருப்பது
தெரியும். அதுபோல தனக்குள் இருப்பதை வெளியே தெரியாமல் வைத்து இருப்பார்கள் இவர்களுக்கு மற்றவர்களின்
தூண்டுகோல் இருந்தால்தான் துலங்குவீர்கள். இல்லையெனில் உள்ளேயே விஷயங்களை வைத்துக்
கொண்டு தவிப்பார்கள் மனதில் பல ஆற்றல்கள் குவிந்து கிடக்கும். பத்தாம் இடமான வேலை ஸ்தானத்திற்கு அதிபதியாக
விருச்சிக செவ்வாய் வருகிறார். ஜோதிடம், மாந்திரீகத்தில் ஈடுபாடு இருக்கும் . கெமிக்கல், மருந்து வகைகள் போன்ற கம்பெனிகளில்
இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் அதிகம் பணி புரிவார்கள் . இவர்களிடம் இந்த இரண்டு விஷயங்களுமே கலந்திருக்கும்.
அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தோடு தொடர்புடையவர்களால் எப்போதுமே அதிக லாபம்
பெறுவார்கள்.
வெளிநாடு
சென்று பட்டம் வாங்கினாலும், குலத் தொழிலை செய்ய ஆர்வம் இருக்கும் . ‘‘பொய் சொல்லக் கூடாது. பித்தலாட்டம்
கூடாது. நேர்மையா உழைச்சு சம்பாதிக்கணும்’’ என்று ஸ்லோகம் போல சொல்லிக் கொண்டே இருப்பார்கள் ராசிநாதனாக சனி பகவான் இருப்பதால், கூலிக்கு மாரடிக்காமல் எந்த வேலையாக
இருந்தாலும் பொறுப்பாக எடுத்துச் செய்வார்கள் . ஆனால், இவர்கள் உத்யோக ஸ்தானாதிபதியாக விருச்சிக செவ்வாய்
வருவதால் வேலை பார்க்கும் இடத்தில் எதிர்ப்பு இருந்துகொண்டே இருக்கும். ‘‘அடடா... அற்புதமான சிந்தனையாச்சே இது’’ என்று ஆமோதிக்கவும் ஒரு கூட்டம்
இருக்கும். இப்படி இடைவிடாத ஒரு போராட்ட சூழ்நிலை இருப்பதனால்,இவர்கள் வித்தியாசமாக யோசித்து விறுவிறு என்று
வளருவார்கள்
வியாபாரமாக
இருந்தாலும், வேலையாக இருந்தாலும், அதை முழுவதுமாக சிறப்பாக செய்வார்கள் அதனால்தான் பலர் ஆறு வருடத்தில் முடிக்கிற
விஷயத்தை இவர்கள் இரண்டே வருடத்தில்
முடிப்பார்கள் படித்த படிப்பிற்கும், பார்க்கிற தொழிலுக்கும்
சம்பந்தமில்லாமல் இருக்கும் . இந்த விஷயம் பன்னிரெண்டு ராசிகளில் ஏறக்குறைய ஆறு
ராசிகளுக்குப் பொருந்தி வந்தாலும் இவர்கள் தான் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
மனம் எந்தத் தொழிலில் அதிக ஆர்வம் கொள்கிறதோ, உடனேயே செய்கிற வேலையை விட்டுவிட்டு அதில் இறங்கி
விடுவீர்கள். ஆரம்பத்தில் சாதாரண வேலையில் சேருவார்கள் . ஆனால், தொலைநோக்குச் சிந்தனையும் உழைப்பும்
இவர்களிடம் அதிகமாக இருப்பதால், பெரிய பதவிகளில் இருப்பார்கள் . பல்கலைக்கழக படிப்பு
இல்லாமல் போனாலும் அனுபவ அறிவால் ஆதிக்கம் செலுத்துவார்கள் .
வேலை
ஸ்தானத்திற்கு அதிபதியாக விருச்சிக செவ்வாய் வருவதால், புலம்பிக் கொண்டே வேலை பார்ப்பார்கள் .
‘‘ஒரு டிராஃப்ட் போட்டு எடுத்துக்கிட்டு
வரச் சொன்னா, ஒழுங்கா நாலு வரி எழுதத் தெரியல. ஆனா, டிஸ்டிங்ஷன்ல பாஸ் பண்ணிட்டு டை
கட்டிக்கிட்டு வந்து உட்கார்ந்திருக்கீங்க’’ என்று திறமையற்றவர்களை, வேலை கற்றுக்கொள்ள ஆர்வமில்லாதவர்களை
விமர்சனம் செய்தபடி இருப்பார்கள்
உத்யோகத்தில் எத்தனை பிரமோஷன் வாங்கினாலும் இவர்கள் பேச்சில் பணிவு
குறையாது. உடைகளிலும் பெரிய மாற்றம் இருக்காது. அவ்வப்போது உத்யோக விஷயமாக
வழக்குகளை சந்தித்தபடி இருப்பார்கள் ‘‘நியாயத்துக்குக் காலமில்லை. சட்டப்படி
வரவேண்டிய பதவி உயர்வைக்கூட கோர்ட் வரைக்கும் போய் வாங்க வேண்டியதா இருக்கு’’ என்று சலித்துக் கொள்வார்கள்
ராசிநாதனாக
கும்பச் சனி வருவதால் சொந்தத் தொழில் செய்ய வேண்டுமென்கிற ஆர்வம் எப்போதும்
இருக்கும். சின்ன வயதிலேயே நான்கு பேருக்கு வேலை கொடுத்து வாழ வைக்க படுவார்கள்
.இவர்களில் பலர் சிறந்த தொழிலதிபர் ஆக இருப்பார்கள் விருதெல்லாம் வாங்குவீர்கள்.தொழிலாளிக்கு
. அவிட்டம் 3, 4ம் பாதங்களில் பிறந்தவர் தன்மானத்தோடு
இருப்பார்கள் . அலட்டிக்கொள்ளாமல் வேலை பார்ப்பார்கள் திறமை இல்லாமல் சிபாரிசால்
வேலைக்கு வருபவர்களை பிடிக்காது. மேலதிகாரிகள் சட்ட திட்டத்தை வளைத்து எதையாவது
செய்யச் சொன்னால் உடனே மறுப்பார்கள் . அதனாலேயே அடிக்கடி இடம் மற்றம் இருக்கும் . 3 ம் பாதத்தில் பிறந்தவர்கள் இன்சூரன்ஸ், கெமிக்கல், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு
நிறுவனங்கள், பொருளாதார ஆசிரியர், விவசாய அதிகாரி, கால்நடை மருத்துவர் போன்ற வேலைகளில்
பெரிய முன்னேற்றம் அடைவார்கள் . வியாபாரமெனில், பால் பண்ணை, ஹேர் ஆயில் விற்பனை, தானிய விற்பனை, நெய்க்கடை, அடகு வியாபாரம், பப்ளிகேஷன்ஸ், சர்க்கஸ் கம்பெனி, மரம் இழைப்பகம் என்று ஈடுபாடு
இருக்கும் .
4ம் பாதத்தில் பிறந்தவர்கள் வக்கீல், ஸ்டெனோகிராபர், மொழிபெயர்ப்பாளர், நீதிபதி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத் துறை, கெமிக்கல் எஞ்சினியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், கல்வி அதிகாரி என பணி இருக்கும் .
வியாபாரமெனில், பப்ளிகேஷன், மருந்துக் கடை, ஹோட்டல், துணிக்கடை, நகைக்கடை, ஃபேஷன் ஜுவல்லரி, டிரை கிளீனிங், டியூஷன் சென்டர், எலெக்ட்ரிகல் கடை என்று முன்னேறலாம். சதயம் நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் , அனுசரித்துப் போகத் தெரியாததால் பதவி உயர்வு, சம்பள உயர்வு என்று சில விஷயங்களைப்
பறிகொடுப்பார்கள் . மனசாட்சிப்படி நடக்கிறேன் என்று சொல்வார்கள் தனக்கு தானே
நன்னடத்தை சான்றிதழ் கொடுத்துக் கொள்வார்கள் நிர்வாகத்தை எதிர்க்கிற
இவர்கள் தொழிலாளிகள் மத்தியில் ஆதரவு
பெருகும். ஆனால், பிரச்னை வரும்போது தனி மரமாக நிற்பார்கள் .
சதயம்
முதல் பாதத்தில் பிறந்தவர்கள் அணு உலை, நிலக்கரிச் சுரங்கம், இரும்பு உருக்காலை, கெமிக்கல் கம்பெனி, இதய அறுவை சிகிச்சை நிபுணர், பிசியோதெரபிஸ்ட், ஆம்புலன்ஸ் சர்வீஸ், தோட்டக் கலை என்று சில வேலைகளில்
ஈடுபடுவார்கள் வியாபாரமெனில் ஸ்கேன்
சென்டர், குவாரி, சித்த மருத்துவசாலை, மோட்டார் ரிப்பேர், லாரி பராமரிப்பு, செங்கல் சூளை என்று
மேம்படலாம்.சதயம் 2 ம் பாதத்தில் பிறந்தவர்கள் மனநல
மருத்துவர், பேராசிரியர், காவல் நிலைய எழுத்தர், பாடத்திட்டத்தை உருவாக்குபவர், சி.பி.ஐ., ரயில்வே அதிகாரி, பஸ் கண்டக்டர், நிதித்துறை அதிகாரி, வங்கி அதிகாரி, யோகா மாஸ்டர் என்று சில வேலைகளில்
ஈடுபாடு .இருக்கும் அதுவே வியாபாரமெனில், இறைச்சிக் கூடம் மரப் பயிர், தோட்டப் பயிர் செய்வார்கள் , அசைவ உணவகங்கள், மரக்கடை, சிமென்ட் கடை, பட்டாசுத் தொழிற்சாலை, முதியோர் இல்லம் வைத்து நடத்துதல்
என்று தொழிலில் இறங்கி பாராட்டும்படியாக சாதிப்பார்கள்
சதயம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் வருவாய் அலுவலர், நில அளவையாளர், முத்திரைத்தாள் விற்பனையாளர், தரக் கட்டுப்பாட்டு அதிகாரி, பிளான் அப்ரூவர், பைலட், பாடலாசிரியர், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை பழுது
பார்ப்பவர், இயற்பியல் விஞ்ஞானி, வெள்ளி ஆபரணக்கூடம் என்று சில
வேலைகளில் பணி செய்வார்கள் . அதுவே வியாபாரமெனில், கிளப் வைத்து நடத்துதல், தண்ணீர் சுத்திகரித்து விற்பனை, லாரி கம்பெனி, பெட்ரோல் பங்க், அரிசி மண்டி போன்றவை ஏற்றம் தரும்.
சதயம் 4ம் பாத்தில் பிறந்தவர்கள் ராணுவம், உளவுத்துறை, பாதுகாப்புத் துறை, புவியியல், மண்ணியல் சார்ந்த துறைகளில் வேலை, நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றுதல், உயிரியல் பூங்கா, பத்திரிகையாளர், சர்க்கஸ் மாஸ்டர், மூளை அறுவை சிகிச்சை நிபுணர், பிளாஸ்டிக் சர்ஜரி ஸ்பெஷலிஸ்ட் என்று
பணியாற்றுவார்கள் . அதுவே வியாபாரமெனில், இறால் பண்ணை, பள்ளிக்கூடம், செவிலியர் பயிற்சிக் கல்லூரி, எஞ்சின் ஆயில் கம்பெனி, மணல் வியாபாரம், சூரிய மின்சார சாதனங்கள் தயாரித்தல்
என்று சிலவற்றில் இறங்கி நல்ல லாபம் பெறுவார்கள் .
பூரட்டாதி
நட்சத்திரத்தை அனுபவ ஆச்சார்யன், ஞான பரிபூரணனான குரு ஆட்சி செய்கிறார். இதன் முதல் மூன்று
பாதங்கள் கும்பத்தில் இடம்பெறுகின்றன. அலுவலகத்திலோ அல்லது அரசாங்கத்திலோ ‘மே ஐ ஹெல்ப் யூ’ என்று ஒரு போர்டு இருந்தால் அங்கு
இவர்களை தான் உட்கார வைப்பார்கள். அந்த
அளவிற்கு எல்லோருக்கும் உதவுவார்கள் . ஜென்ம எதிரியாக இருந்தாலும், ஏதேனும் கேட்டு வந்துவிட்டால்
தயங்காமல் கொடுப்பார்கள்
பூரட்டாதி
முதல் பாதத்தில் பிறந்தவர்கள் எலெக்ட்ரிகல் துறை சார்ந்த பணிகள், அக்குபங்ச்சர், தானிய அரவை நிலையம், ஸ்டோர்ஸ் இன்சார்ஜ், உளவியல் நிபுணர், ஹோமம் செய்தல், ஜோதிடத் துறை என்று பணி செய்வார்கள் .
முடநீக்கியலில் சிறப்பு மருத்துவராக இருப்பார்கள் . அதுவே வியாபாரமெனில், பப்ளிகேஷன், தானிய மண்டி, அரிசி வியாபாரம், வேர்க்கடலை மிட்டாய், வெளிநாட்டுப் பொருட்களை விற்பனை
செய்தல் என்று பல தொழில்களில் பிரகாசமான எதிர்காலம் உண்டு.பூரட்டாதி 2ம் பாதத்தில் பிறந்தவர்கள்
கன்ஸ்ட்ரக்ஷன், ஆர்க்கிடெக்ட், நான்கு சக்கர வாகனப் பழுதுபார்ப்பு, சாஃப்ட்வேரில் புரோக்ராமர், புராஜெக்ட் மேனேஜர், வருவாய்த்துறை அலுவலர், அரசு கருவூலம், நீதித்துறை என பணி செய்வார்கள் .
வியாபாரமெனில் புத்தக வெளியீட்டாளர், விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக் கூடம், ஜிம் வைத்து நடத்துதல், ஐஸ்கிரீம், கூல்ட்ரிங்ஸ் கடை, காய்கனி அங்காடி, எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை
என்று ஈடுபட நல்ல லாபம் கிட்டும்.
பூரட்டாதி
3ம் பாதத்தில் பிறந்தவர்கள் யோகா
மாஸ்டர், பர்சனாலிட்டி டெவலப்மென்ட் கோர்ஸ்
மாஸ்டர், வங்கியில் காசாளர், தொடக்கப் பள்ளி ஆசிரியர், கமிஷன் ஏஜென்ட், மருத்துவத்தில் ரேடியோலஜி, அனஸ்தீசியா ஸ்பெஷலிஸ்ட், அஞ்சல்துறை போன்று பல்வேறு பணிகளை சிறப்பாக
செய்வார்கள் . டெலி கம்யூனிகேஷன் கம்பெனிகள் மற்றும் டெலி ஷாப்பிங் போன்ற துறைகள்
நல்ல வருமானம் தரும். வியாபாரம் எனில், கமிஷன், புரோக்கரேஜ், ஃபேன்சி ஸ்டோர், கிஃப்ட் ஆர்ட்டிகல்ஸ், வாஸ்து மீன், வளர்ப்பு மீன்கள் விற்பனைக் கூடம், கூரியர், பூஜை சாமான்கள் விற்பனை என்று இறங்க
நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பத்தின்
வேலை ஸ்தானத்திற்கு அதிபதியாகவும், பத்தாம் இடத்திற்கு உரியவராகவும் விருச்சிகச் செவ்வாய்
வருகிறார். எனவே, முருகன் வழிபாடு மிகவும் அவசியம். நெல்லை மாவட்டம்
தென்காசிக்கு அருகே இருக்கும் ஆய்க்குடி முருகனை தரிசித்து வருவது சிறப்பு அருணகிரிநாதரால் பாடப்பெற்ற புகழுடையது
ஆய்க்குடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக