வெள்ளி, 20 மே, 2016

ஓம் நமது சுவாசம்

உடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல் தியானம் ஒற்றைச் சொல் தியானம் என்பது மதம் சார்ந்த விசயமோ அல்லது ஏதும் தத்துவம் சார்ந்த விசயமோ என்ற ஆய்வுக்குள் நுழைய வேண்டிய அவசியம் எதுவுமே இல்லை.பொதுவில், மனது ஒருங்கிணைப்புக்கான ஒரு பயிற்சி என்றே இதனை எடுத்துக்கொள்ள முடியும். ஒரு குறிப்பிட்ட சொல்லை அல்லது எழுத்தை தொடர்ந்து உச்சரித்து வரும் போது, காற்றானது நமது நாசியில் ஒரே சீராக சென்று வருகிறது. இப்படி ஒரு லயத்தில் செல்லும் மூச்சுக்காற்றானது உடலில் இதுவரை இருந்து வந்த, தாறுமாறான அதிர்வுகளை கட்டுப்படுத்தி ஒரு லயத்தில் ஒருங்கிணைக்கிறது. அதாவது ஒரு பொது இடத்தில் கிளம்பும் இரைச்சல் நின்று போய் அங்கே ஒரு நாதம் கிளம்புகிறது. இந்த நாதமானது உடலுக்கும் மனதுக்கும் மென்மையை தருகிறது. ஒற்றைச் சொல் தியானத்தின் பலன்களை அதனை அன்றாடம் பயிற்சி செய்து வரும் போது மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஓஷோவின் தத்துவங்கள் சில நேரங்களில் புரிதலில் கடுமையானதாக இருந்தாலும் யதார்த்தை பிரதிபலிப்பது உண்மை. இதில் ஒன்றை பார்க்கலாம். ” இறக்கும் சுவர்க்கோழி பூச்சி மரணமடைந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் அது பாடிக்கொண்டு தான் இருக்கிறது. இறந்து கொண்டிருக்கும் அதன் பாட்டு உயிர் நிறைந்ததாய் உள்ளது. ஒவ்வொரு விழிப்புணர்வுடைய மனிதனும் இப்படி தான் இருக்க வேண்டும். மரணத்துக்குள் காலடி வைத்து விட்ட பிறகும், உயிர் நிறைந்த நிலையிலேயே மகிழ்ச்சியுடன் பாடிக் கொண்டிருக்க வேண்டும். அப்போது மரணமே இருக்காது” என்கிறார் ஓஷோ. ஆம். பிறந்த அனைவருக்கும் மரணம் வரத்தான் போகிறது. பிறகு ஏன் நடந்து போனவற்றையும், நடக்க போகிறவற்றையும் பற்றி கவலைப்படுவானேன்? கண்ணதாசன் கூட தனது அர்த்தமுள்ள இந்து மதம் நூலில் எங்கு சுற்றி விளக்கினாலும் கடைசியில் சொல்ல வருவது இது தான். இதே போல் கடஉபநிதஷத்தில் வானத்து தேவர்களுக்கும் மரணம் இருப்பதாக எமன் சொல்வதாக கூறப்பட்டுள்ளது. ஆக, மரணம் இல்லாத வாழ்வு என்பது வானத்து தேவர்களின் வாழ்வை விட சிறப்பாக வாழ்வதில் மட்டுமே என்பதை தான் இந்த உபநிடதங்கள் விளக்கி விட்டு போகின்றன. இயற்கையில், மதங்கள் கூறுவதெல்லாம் அன்பு செய் அனைவருக்கும் என்பதே!. இது எப்போதும் எல்லாருக்கும் எளிதாக வந்து விடக்கூடிய காரியமல்ல. ஆனால் இந்த குணத்தை எளிதாக கொண்டு வர ஏற்படுத்தப்பட்டது தான் இயமங்கள், நியமங்கள் மற்றும் தியானங்கள் என்று அனைத்தும். இதன் ஒரு பகுதி தான் இந்த ஒற்றைச் சொல் தியானமும். அதாவது மிகப்பெரிய மலை என்ற பெருவாழ்வை நோக்கி செல்வதற்கான ஒரு எளிய படி. இந்த படியில் ஏற முடிந்தால், வானத்து தேவர்களை விட பெருவாழ்வை எட்டுகிறேமோ இல்லையோ….இந்த உலக வாழ்வில் பொறுமை, அன்பு போன்ற குணங்களை எளிதில் கடைப்பிடித்து விட இலகுவான ஒன்றாக  ஓம்  இந்த ஒற்றைச் சொல் தியானம் என்ற உத்தி பயன்படும் என்பது உறுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...