ஜோதிட சக்கரவர்த்தி ஜோதிட ஆசிரியர் T.V.வெங்கட்ராம்ஜி கட்டண சேவைக்கு RS-1001 மட்டும் ஜோதிட ஆலோசனை வேண்டும் எனில் உங்கள் பெயர்.பிறந்த தேதி,நேரம் AM/PM.பிறந்த ஊர் போன் மூலம் தெரியப்படுத்தி உங்கள் ஜாதகபலனை தெரிந்து கொள்ளுங்கள்.உங்கள்.பிரச்சனைகளுக்கு.தீர்வு வாட்சப்பில் & வாய்ஸ் ரெக்காடிங் மூலம் அனுப்பப்படும்.CELL.8667710736. whatsapp NO 8124812470 email.sssjn2412@gmail.com V.VENKATESAN ,State Bank Of India. Ac/no. 34790428329 IFS code.SBIN0001603.Chennai.Tiruvottiyur
வியாழன், 5 மே, 2016
கிரகபலன்
சூரியன்:- உடல் உஷ்ணம். லக்ன பாவத்தில் சூரியன் இருப்பின் ஏற்படும் பலன் தலைமயிர் குறைந்திருத்தல், தொழில் தேக்கம், சினம், கொடூர குணம், ஏளனம் செய்தல், எனினும் சிலருக்கு விருப்பமானவர், கொடூரமான பார்வை, கடின உடல் வாகு, வீரம் நிறைந்தவர், பொறுமையற்றவர், தயவின்மை கொண்டவர்.
சந்திரன்:- லக்ன பாவத்தில் சந்திரன் இருப்பின் ஏற்படும் பலன்:அழகா இருப்பார்கள்.குளிர்ச்சியான தேகம் கடகம், மேஷம், ரிஷபம் இவை லக்னமாக இருந்தால் பிற மனிதரின் மனதை அறியும் தன்மை உள்ளவர், அழகு, செல்வம் அனுபவிக்கும் குணம் இருக்கும், தேய்பிறை சந்திரனாக இருந்தால் முற்கூறிய பலன்கள் குறைவுபடும். மற்ற ராசிகள் லக்னமாக வந்தால் அதில் சந்திரன் இருப்பின் பித்தனாகவோ, நீசனாகவோ, உடலில் குறையுள்ளவர்களாகவோ, தகுதியற்ற பேச்சுடையவராகவோ இருப்பார். தேய்பிறை சந்திரனாக இருந்தாலும் வலுகுன்றிய நிலையில் இருந்தாலும் மேற்கூறிய பலன்கள் கண்டிப்பாக நடைபெறும்.
செவ்வாய்:;- லக்ன பாவத்தில் செவ்வாய் இருப்பின் ஏற்படும் பலன்: சிவந்த தேகமுடையவர். கொடூர தன்மை உடையவன், எவரும் செய்ய முடியாத செயல்களை செய்தல், இரக்கமின்மை, செல்வம், வீரம், பற்றும் பாசமும் உடையவர். மிடுக்கான உடலமைப்பு, உடலில் தழும்பு உள்ளவர், சபலப்படுபவர்.
புதன்: லக்ன பாவத்தில் புதன் இருப்பின் ஏற்படும் பலன்: எப்பொழுதும் கேடில்லாத உடல், வலிமையுடன் இருத்தல், அறிவும், ஆற்றலும், காலத்தை உணர்த்துதல், பொதுவிஷயங்கள் பற்றிய தெளிவு, குலத்தின் ஒழுக்கம், ஞான சிந்தனை, காவியம், சோதிடம் மற்றும் கணித அறிவுகளை தெரிந்து கொள்பவர்.
குரு:- லக்ன பாவத்தில் குரு இருப்பின் ஏற்படும் பலன்:அமைதியானவர். ஆன்மிகவாதி அழகான கட்டுடல், கூடுதல் வலிமை, முழு ஆயுள், நன்கு ஆராய்ந்து செயல்களை செய்பவர், ஆற்றலும், கல்வியும், திறமையும், அறிவும், வீரமும் உடையவர், மதிக்க தகுந்தவர்.
சுக்கிரன்:- லக்ன பாவத்தில் சுக்கிரன் இருப்பின் ஏற்படும் பலன்: அழகுள்ள கண்கள், முகம் மற்றும் அழகான உடலமைப்பு உடையவர், இன்பம், முழு ஆயுள், வீரமின்மை உள்ளவர், பார்ப்பவர்களின் கண்களுக்கு அமிர்தமழை பொழிபவராவர், கவர்ச்சி உடையவர்.
சனி:- லக்ன பாவத்தில் சனி இருப்பின் ஏற்படும் பலன்: சோம்பலாக இருப்பார்கள். மந்த புத்தி உடையவர். துலாம், மகரம், கும்பம், ஆகியவற்றில் லக்னமாகி அதில் சனி இருந்தால் அரசருக்கு இணையாக இருத்தல் அல்லது நாடு, நகரங்களுக்கு முக்கியமானவராகவும் உயர்ந்த பதவியிலும் இருப்பார். மற்ற ராசிகள் லக்னமாக இருந்து அதில் சனி இருந்தால் இளமையில் நோய், ஏழ்மை, துக்கம், சிற்றின்ப தாக்கம், தூய்மையின்மை, சோம்பல், தனுசு, மீனம் லக்னமானால் சில நற்பலன்கள் நடைபெறும்.
ராகு::- லக்ன பாவத்தில் ராகு இருப்பின் ஏற்படும் பலன்: யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள்..மூர்க்க குணம் நீண்ட ஆயுள், வலிமை, தலை, முகம் போன்ற இடங்களில் நோய் உள்ளவர்.
கேது:- லக்ன பாவத்தில் கேது இருப்பின் ஏற்படும் பலன்: ஆன்மீகத்தில் ஈடுபாடு நன்றி மறப்பவர், இன்பம் இல்லாதவர். புறம் கூறுபவர். பிறரை இருக்கும் நிலையிலிருந்து கீழே தள்ளுபவர். உடலில் ஊனமும், வஞ்சகர் நட்பும் உடையவர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிறப்புடைய இடுகை
குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்
வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம் சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...
-
உங்களது வாழ்க்கை எங்கே ? சிலர் எங்கோ ஓரிடத்தில் பிறந்து எங்கோ ஒரு இடத்தில் வாழ்கின்றனர். வேறு சிலர் உலகம் சுற்றினாலும் சொந்த ஊரே சொர்க...
-
விருச்சிகம் ஸ்திர ராசி. ஜலராசி. காலபுருஷனின் எட்டாம் இடம் இங்கு குருபகவான் சனிபகவான் புதன்பகவான் நட்சத்திரம் உண்டு. நீர் ராசி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக