ஞாயிறு, 25 ஜனவரி, 2015

மறு ஜென்மம்னு சொல்றாங்களே அது உண்மையா?


முதல்ல ஒரு குட்டி கதைய பாப்போம். ஒருத்தன் ஒரு வீட்ல சில வருஷமா வாடகைக்கு குடி இருக்கான். ஒரு நாள் வீட்டுக்கு சொந்தகாரர் வந்து வீட்ட காலி பண்ண சொல்றாரு. பாவம் அவன் என்ன பண்ணுவான் காலி பண்ணி தான ஆகணும். அவனுக்கு இத விட்ட வேற வீடு கிடைக்காதா என்ன? என்ன ஒன்னு! புண்ணியம் இருந்தா ஒரு நல்ல வீடா கிடைக்கும். புண்ணியம் இல்லனா ஒரு 5 ஸ்டார், ஒரு 3 ஸ்டார் அதுவும் இல்லையா கழுத குடிசையா இருந்தாலும் பரவால இருந்து தான ஆகணும். கடைசியா குடி இருந்தவனோட மனநிலை என்னவா இருக்கும். “முதல்ல கந்து வட்டிக்கு கடன் வாங்கியாவது சொந்தமா ஒரு வீடு வாங்கிடனும்”.
சரிங்க நம்ப விஷயத்துக்கு வருவோம் நான் குடியிருக்குரவனு சொன்னனே அதாங்க நம்ம ஆன்மா. அப்ப வீட்டுக்கு சொந்தகாரன் அது கடவுள் அதாவது பரம்பொருள். பல அணுக்கள் சேர்ந்த ஒரு கூட்டு பொருள் தாங்க நம்ப உடம்பு. அதுல ஒரு சிற்றணு தான் நம்ப ஆன்மா. இந்த இயற்க்கை கடவுள் இருக்கே அதாங்க நம்ம படைச்சி, பரிணாம வளர்ச்சிக்கு உட்படுத்தி பிறகு நம்பள கொன்னுடுது. அதுக்காக நான் கடவுள குத்தம் சொல்லல. அது ஏழ, பணக்காரன், நல்லவன், கெட்டவனு பாக்காம எல்லாருக்கும் சரி சமமா மரணம்ன்ற பரிச குடுக்குது. எதுக்கு இந்த பரிசு அதாங்க நம்ப லட்ச கணக்கான வருஷமா பிறப்பு இறப்புனு மாறி மாறி செத்து செத்து விளையாடரோமே அதுல தோத்தவனுக்குலாம் மரணம்தாங்க பரிசு. சரிங்க நம்ப செத்துட்டோம். இந்த ஆன்ம எங்க போகுது. அது சும்மா போலிங்க நம்ப உயிரோட இருக்கும் போது என்னலாம் பாவம் புண்ணியம் பண்ணினமோ அத சேத்து கொண்டு போகுது. அந்த பாவ புண்ணியத்துக்கு ஏத்த மாதிரி தாங்க நம்ப பிறப்பு திரும்ப அமையும். அந்த ஆன்மா திரும்ப இன்னொரு தாயோட கருப்பைக்குள்ள தாங்க ஒரு உயிரா வளருது. தாய்னு சொன்ன ஒடனே ஒரு மனித தாயோட கருப்பையா தான் இருக்கும்னு நெனைக்காதிங்க. அது ஒரு விலங்கோட கருப்பையா இருக்கலாம், பறவையோட முட்டைக்குள இருக்க கருவா இருக்கலாம், அட ஏங்க எதுக்குமே உதவாத எட்டிச் செடி, கள்ளிச்செடி மாதிரியான விதையாவும் மண்ணுல விழுந்து முளைக்கலாம். ஆறறிவு மனிஷனா பிறந்து திரும்பவும் எதுக்கு ஓரறிவு உயிரா பிறக்கணும்னு யோசிக்கிரிங்களா? அதாங்க பல பேர் நம்ப தான் ரொம்ப அறிவாளி; சட்டத்துல இருந்து தப்பிச்சிடலாம்னுலாம் நெனச்சி கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அடுத்தவன் சொத்த ஆட்டைய போடறது, ஊர அடிச்சி உலைல போடறதுன்னு இருக்காங்களே அந்த மாதிரி பாவிங்கலாம் பாத்த ஒடனே அடிச்சி கொள்ள தோன்ற பாம்பா, தேளா விஷ ஜந்துவா தாங்க பிறப்பாங்க. அது மட்டும் இல்லைங்க இந்த ஞானம், ஆன்ம லாபம், மரணமில்லா பெருவாழ்வுனு லாம் சொல்றாங்களே அதுலாம் மனுஷனா பிறந்தா மட்டும் தாங்க சாத்தியம். அதனால தாங்க மகான் ஔவையார் “ அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” னு சொன்னாங்க.
அது மட்டும் இல்லாம தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொல்லி இருக்காரு
“பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்”
இந்த பிரவின்ற பெருங்கடல எப்படி நீந்தி கடக்குறதுனு பாக்குரிங்க்லா. ஏற்கனவே நீந்தி கடந்தவங்க 9 கோடி பேர் இருக்காங்க. ஞானத்தலைவன் சுப்பிரமணியர்ல தொடங்கி மகான் அகத்தியர், மகான் போகர், மகான் திருமூலதேவர், மகான் இராமலிங்க சுவாமிகள் இவங்க எல்லாருமே பிறவி பெருங்கடல நீந்தி கடந்தவங்க. அதுல சரியை, கிரியை, யோகம், ஞானம் னு நான்கு படிகள் இருக்கு. இத கடக்கும் போது சுனாமி, புயல்னு இப்படி பல இடையூறுகள் வரலாம். அதனால ஞானிகள் திருவருள் துணை இல்லாம இதுல ஒன்ன கூட நம்மால ஒழுங்கா கடக்க முடியாது. கூடவே சேர்ந்து புண்ணிய பலமும் வேணுங்க. அதுக்கு நம்மால முடிஞ்ச அளவுக்கு அன்னதானம் பண்ணனுங்க. எடுத்த ஒடனே பெருசா பண்ணனும் அவசியம் இல்ல மாசம் ஒருத்தருக்கோ, இல்ல இரண்டு பேருக்கோ சாப்பாடு போடலாம். மத்த உயிர்களுக்கு எந்த அளவுக்கு நம்ப மகிழ்ச்சிய தரமோ அந்த உயிர்கள் நம்ம வாழ்த்துங்க. அது தாங்க நமக்கு புண்ணியம். புண்ணியம் செய்யணும்னு நெனச்சா மட்டும் நம்மால முடியுமா? ஞானிகள் நாமத்த சொல்ல சொல்ல அவங்க நம்ம சார்ந்திருந்து நம்மள வழி நடத்துவாங்க. முக்கியாமான விஷயம் எந்த உயிரையும் கொன்னு அதோட இறைச்சிய தின்ன கூடாதுங்க. அது தாங்க நம்ம ஆன்ம முன்னேற்றத்துக்கு பெரிய தடையா இருக்கு. ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டினத சொன்னன். தப்பிருந்தா மன்னிச்சிடுங்க. இப்ப சொல்லுவோமா ஞானிகள் நாமத்த
ஓம் அகத்திசாய நம
ஓம் நந்தீசாய நம
ஓம் திருமூலதேவாய நம
ஓம் சுப்பிரமணியர் திருவடிகள் போற்றி போற்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...