ஞாயிறு, 11 ஜனவரி, 2015

ஸ்ரீசக்கரவழிபாடு(தியானம்)

ஸ்ரீசக்கரத்திற்கு(உலோகங்களில்) தாமிரம்-செப்புத்தகடு உகந்தது.யந்திரத்தை ஒருநாளும் பூஜைசெய்யாது வைத்திருக்கக் கூடாது.அனுதினம் பூஜை செய்ய வேண்டும்.
பெரியோர்களையும், தாய்-தந்தையரையும், குலதெய்வத்தையும், வணங்கி இச்சக்கர பூஜையை செய்யலாம்.
images
தீட்சை பெற வேண்டுமென்பதில்லை. மனம், உடல், சுத்தத்தோடு பூஜையறையில் ஒரு பீடத்திலோ அல்லது படமாக்கி மாட்டிவைத்தோ அம்பாளின் ஸ்லோகங்களை, மந்திரங்களைக் கூறி பூக்களால் அர்ச்சித்து தூப தீபம் காட்டி நிவேதம் செய்து இறுதியாக கற்பூரஹாரத்தி காட்டி வணங்கி வரலாம்.. லலிதாகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் ஏற்றதாகும்.
இந்து மதத்தின் உட்பிரிவுகளுள் எதுவாக இருந்தாலும் சரி,  அவற்றின் வழிபாட்டு முறைகள் யோக தத்துவத்தை நுட்பமாய் விளக்குகின்றன. ஆன்ம லாபத்தை அடையச் செய்யும் பொருட்டு அவைகள் நமக்காக நம் முன்னோர்களால் அளிக்கப்பட்டுள்ளன. ஒரு மதக் கண்ணோட்டத்துடனோ , மூட நம்பிக்கை என்றுடனோ பார்க்காமல் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து பார்த்தால் அதன் உண்மை விளங்கி நம்மை மகிழ்விக்கும்.
வடிவமைக்கப்பட்ட ஒலியின் சக்தியேற்றிய வார்த்தைகளை துதியாகவும் தோத்திரங்களாகவும் மந்திரம் விஞ்சையென்றெல்லாம் இறையருட் பெற்றவர்களால் உருவகப்பட்ட ஒலிவழி வழிபாடாகும்.
ஓலிக்குரிய தெய்வங்களை  உருவவழியாக  உருவாக்கி உருவவழி பாடாகவும்,      அருஉரு வடிவ வழிபாட்டை வரி(கோடுகளால்) வரிப்படம் என்றும் அதற்கு அப்படியே பிம்பங்கள் என உருக்கொடுத்து சுதகன்(மேரு) எனவும் சக்ர வழிபாடும்  எல்லாவழிபாட்டிற்கும் அர்த்தமுள்ளது எனவும் எல்லா  சக்தியையும் அளிக்கவல்லதும் எல்லாவற்றிற்கும் சக்தியாக இருப்பவளுமாகிய யந்திரரூபியே ஸ்ரீசக்ரநாயகியாம் அம்பிகைச் ‘சர்வயந்திராத்மிகாயை‘ மஹாயந்திரா சக்ரராஜ நிகேதனாய  என்று பல பெயர்கள் உடையவள்
43 முக்கோணங்களையுடைய சியாமள சக்கரத்தின் சில அம்சங்களையும் பார்ப்போம்.
இந்த 43 முக்கோணங்களின் உச்சியில் இருப்பது பிந்து ஸ்தானம் அதுவே பராசக்திரத்தியின் உருவம்.இதை  சகஸ்ரதளம் என்றும் யோக சாஸ்திரம் கூறுகிறது.
இதை சுற்றி எட்டு முக்கோணங்களில் கீழ் நோக்கியுள்ள ஐந்தும் சக்திபரம். 
மேல் நோக்கியுள்ள நான்கும்-சிவபரம் மேருவின் வெளிப்பிரகாரம் 25.
மனம் ,புத்தி, சித்தம், அஹங்காரம் ஆகிய தத்துவங்களால்  அமைந்தவை.
இவற்றில் சியாமளை வாராகி விஷ்ணு ஈசானன் என சகல தேவதைகளும் இருக்கினறனர்.பிந்து(புள்ளி) உள்ள முக்கோணத்திற்கும் சர்வ சித்திப்பிரதம் எனவும்  எட்டு முக்கோணத்தினற்கு சர்வரோஹ ஹரத்துவம் எனவும் பெயர்.
உள்பத்துக்கோணம்-சர்வசாகம் வெளிபத்துக் கோணம்.சர்வார்த்த சாதகம்
அதைச்சுற்றியுள்ள 14 கோணங்களும் சர்வ சௌபாக்கி தாயகம்.
ஸ்ரீசக்கரத்தில் அடங்கியுள்ள அம்பிகையின்   ஆத்ம சக்திகள்
அன்னையின் இருதயம்   -பராம்பாள்   
 புத்தி     -சியாமளை
 அகங்காரம் -வாராஹி
 புன்சிரிப்பு  -கணபதி
 6 ஆதார சக்கரங்கள்-ஷடாம்னாய தேவதைகள்
 வளையாட்டு -பாலை
 ஆங்குசம்   -சம்பத்கரி
 பாசம்     -அச்வாரூடை
 இடுப்பு     –  நகுலி
மூலாதாரம் முதல் பிரம்மரந்திரம் வரை தேவதைகள் 36.
இவளே பஞ்ச பிராணனாக இருக்கிறாள்.
உடல்   -பிராணண்.
 வாக்கு  -அபாணன்.
 காதுகள்- வியாணன்.
 மனதில் -சமாணன்
 அகண்டத்தில் -உதானன்
எனவாறு விளங்குகிறாள்.துகராசம் என்ற மனத்தில் ஸ்ரீசக்கரத்தையும், பிந்துஸ்தானத்தை அம்பிகையாகவும் வழிபடும் தியானமாகும். ..................................................................................................................................   ஸ்ரீலலிதா பரமேஸ்வரி உறையும் ஸ்ரீசக்கரத்தை பலரும் பற்பல யந்திர வடிவில் வழிபட்டு வருகின்றனர். ஸ்ரீஆதிசங்கரர் உள்ளிட்ட பல மகான்கள் ஸ்ரீசக்கரத்தை கல், உலோகங்கள் போன்றவற்றில் பொறித்து பல திருத்தலங்களிலும் நிர்மாணித்துள்ளனர். திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயம், திருவல்லிக்கேணி (சென்னை) ஸ்ரீபாரத்தசாரதி பெருமாள் ஆலயம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் ஆலயம் போன்ற திருத்தலங்களில் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை பக்தர்களின் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி திருவானைக் கோவில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஸ்ரீசக்கரம் பொறித்த தாடங்கம் அணிந்து பக்தர்களுக்கு ஸ்ரீவித்யா சக்திகளை வாரி வழங்குகிறாள்.
இவ்வாறு ஸ்ரீசக்கரங்கள் பல வடிவங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் இவற்றில் சிறப்பான முறையில் ஸ்ரீதன ஸ்ரீசக்கர பீடம் அமைக்கப்பட்ட மிகவும் அபூர்வமான திருத்தலமே திருச்சி மணப்பாறையில் அமைந்துள்ள ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலமாகும்.
மணப்பாறை ஸ்ரீஅகத்தீஸ்வரர்
இவ்வுலகில் மிகவும் பவித்திரமான, புனிதமான, தூய்மையான, தெய்வீகமான, அன்பான, சிறப்பான, நலமான, கனிவான, உண்மையான ஒரு பொருளைக் கூற வேண்டுமென்றால் அதுவே பெண்களின் தனமாகும். இக்காரணம் பற்றியே அகிலாண்டநாயகியும் ஸ்ரீஉண்ணாமுலை அம்மன் என்ற திருநாமம் கொண்டு அருளாட்சி செய்து வருகிறாள். ஆனால், இத்தகைய மதிப்பு வாய்ந்த, தெய்வீகப் பொக்கிஷமானது எதிர்காலத்தில் ஒரு வியாபாரப் பொருளாக அவமதிக்கப்படும் என்பதை தனது ஞான திருஷ்டியால் உணர்ந்த ஸ்ரீஅகத்தியப் பெருமான் மனித குலத்தை எதிர் வரும் துன்பத்திலிருந்த மீட்பதற்காக ஸ்ரீதன ஸ்ரீசக்ர சூட்சும பீடத்தை ஸ்ரீஅகத்தீஸ்வர திருத்தலத்தில் நிர்மாணித்து இறைவனின் நிரந்தர அன்பிற்குப் பாத்திரமானார்.
ஸ்ரீதனம் என்பது மக்களின் நற்சந்ததி விருத்திக்காக இறைவன் பெண்களுக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம். மருமகள் என்னும் ஸ்ரீதனம் ஒரு இல்லத்தில் குடியேறாவிட்டால் அந்த இல்லத்தில் எப்படி சந்ததி தழைக்கும்? எனவேதான் அக்காலத்தில் திருமணம் என்பது பெண்கள் கொண்டு வரும் ஸ்ரீதனம் என்று போற்றினார்கள். இதை வருங்கால மாமியார்கள் உணர்ந்தால் மாமியார் மருமகள் தகராறு என்பது ஒரு கடந்த கால சம்பவம் என்று ஆகி விடும் அல்லவா?
அதே போல ஸ்ரீதனத்தைக் கொண்டு மருமகளாய் வரும் பெண்களும் வெறும் பணம், ஆடம்பரம், ஏட்டுப் படிப்பு, உடல் அழகு என்பது ஸ்ரீதனம் அல்ல, கடவுள் பக்தி, பணிவு, நற்குணம், தயை என்பதே பெண்களின் ஸ்ரீதனம் என்று உணர்ந்தால் அதை விட அமைதி நிலவும் சிறந்த குடும்பம் வேறேது?
எனவே, மணப்பாறை ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலம் பெண்களுக்கான ஒரு வரப்பிரசாத தலம் என்றே கூறலாம். பெண்களுக்கு வேண்டிய உடலழகு, நற்பண்புகள் அனைத்தையும் அருள வல்லதே இத்திருத்தலமாகும். கிளியோபாட்ரா என்ற கிரேக்க பேரழகி பூர்வ பிறவிகளில் வழிபட்ட தலமே இத்திருத்தலமாகும். பொங்குதனமாலினி என்று அழைக்கப்பட்ட கிளியோபாட்ரா ஆறு பிறவிகளில் இத்தல இறைவனுக்குத் தொண்டு செய்தே சக்கரவர்த்திகளும் கண்டு வியக்கும் அழகு ராணியாகத் திகழந்தாள் என்பது இதுவரை நீங்கள் அறியாத ரகசியமாகும்.
தெரிந்தோ தெரியாமலோ தங்கள் உடலழகைத் தவறாகப் பயன்படுத்திய பெண்களும் ஆண்களும் மீண்டும் அத்தகைய தவறுகளைச் செய்வதில்லை என்ற உறுதி பூண்டு இத்தல இறைவனை வேண்டி வழிபட்டால் தக்க பிராயசித்த வழிமுறைகளை பெற அருள்புரியும் தலம்.
இத்திருத்தலத்தின் தலவிருட்சமான கொன்றை மரம் தற்போது மறைந்து விட்டாலும் இங்குள்ள வில்வ மரத்திற்கோ, அரச மரத்திற்கோ துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் திருக்குள தீர்த்த நீரை அபிஷேகம் செய்து வழிபடுதலால் அற்புத பலன்களைப் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...