மனிதனாக பிறக்கும் அனைவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக
பல்வேறு வகையில் போராடி வாழ்க்கையை நடத்துகின்றோம். சிலருக்கு இருக்கும்
இடத்திலேயே ஒரு கௌரவமான நிலை பொருளாதார மேன்மை உண்டாகிறது. சிலருக்கோ
வெளியூர் அமைப்பு, உண்டாகிறது. நமக்கு ஏற்படும் ஒவ்வொரு ஏற்றத்
தாழ்வுகளுக்கும் நவகிரகங்கள் தான் முக்கிய காரணமாக அமைகிறது. பொதுவாக ஜனன
ஜாதக அமைப்பு தான் நமக்கு உண்டாகும் பலா பலன்களை அறிந்து கொள்ள உதவுகிறது.
ஜென்ம லக்னத்திற்கு 12ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் நட்புவீட்டில் அமையப் பெற்றிருந்தாலும் நட்பு கிரக சேர்க்கைப் பெற்றிருந்தாலும் பிறந்த ஊரில் பெயர், புகழுடன் வாழக் கூடிய அமைப்பு உண்டாகும். 12ம் வீட்டில் பாவ கிரகங்கள் அமையப் பெற்றிருந்தாலும் 12ல் கிரகங்கள் இல்லாமல் இருந்தாலும் பிறந்த ஊரை விட வெளியூர் செல்லக் கூடிய வாய்ப்பும், தன் மூலம் அனுகூலமும் உண்டாகும். 12ம் வீட்டில் ஒரு கிரகம் பலமாக அமையப் பெற்று அதன் தசா புக்தி நடைபெற்றால், அக்காலத்தில் வெளியூர் யோகம் வெளிநாடு யோகம் உண்டாகும். அதுபோலஜென்ம லக்னத்திற்கு 9ம் பாவம் வெளிநாடு யோகத்தை நிர்ணயம் செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. 9ம் வீடு சர ராசியாகவோ, நீர் ராசியாகவோ இருந்தால் வெளிநாடு செல்லக் கூடிய யோகம் உண்டாகும். 9ம் அதிபதி சர ராசி அல்லது ஜல ராசியில் அமையப் பெற்றால் அதன் தசா புக்தி காலத்தில் வெளிநாடு யோகம் உண்டாகும். அதுபோல 9ம் அதிபதி அமையப் பெற்ற நட்சத்திர அதிபதி ஜல ராசியாகவோ சர ராசியாகவோ அமையப் பெற்றால் வெளிநாடு செல்லக் கூடிய யோகம் உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 9ம் அதிபதி 10, 12க்கு திபதியுடன்
இணைந்திருந்தாலும், பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் வெளியூர் வெளிநாடு
செல்லக் கூடியயோகம் உண்டாகும்.
ஒருவர் ஜாதகத்தில் 3ம் அதிபதி குறுகிய பயணத்தை குறிக்கும் ஸ்தானமாகும்.
3ம் அதிபதியோ 3ம் வீடோ 3ம் வீட்டதிபதி அமையப் பெற்ற நட்சத்திராதிபதியோ சர
ராசியாகவோ ஜல ராசியாகவோ இருந்தால் அடிக்கடி பயணங்கள் உண்டாகும்.
அதுபோல 11ம் வீடோ, 11ம் அதிபதியோ 11ம் அதிபதி நின்ற
நட்சத்திராதிபதியோ சர ராசி அல்லது ஜல ராசியாகவோ இருந்தால் அதன் தசா புக்தி
காலத்தில் வெளிநாடு யோகம் உண்டாகும்.
அதுபோல 9, 12ம் பாவங்களில் ராகு பகவான் அமையப் பெற்று அதன் தசா புக்தி நடந்தால் வெளியூர் யோகம் வெளிநாடு யோகம் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக