✤ பிள்ளைகளை பெற்று, அவர்களை கல்வியில் உயர வைத்து, நல்ல பதவியிலும் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் பெற்றோர்கள். அந்தப் பிள்ளைகளும் வெளி மாநிலம், வெளிநாடு சென்று கை நிறைய சம்பாத்தியம் செய்வார்கள். பெற்றோர்கள் வீடு, வாசல், நிலபுலன்கள் என்றும், பொன்னும் பொருளும் வாங்கிச் சேர்ப்பார்கள்.
✤ மகிழ்ச்சியான வாழ்க்கை வாழும் அவர்கள் திருமணத்திற்கு பெண் அல்லது மணமகன் தேடும்போது திருமணப் பொருத்தம் உள்ளதா என்று மேலோட்டமாக பார்ப்பார்கள், மணமகன் அல்லது மணமகள் ஜாதக் கட்டத்தில் குறைபாடுகள் உள்ளதா-இந்த ஜாதகத்தை இணைத்தால் சிறப்பாக இருக்குமா என்று பலர் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.
✤ பணம், நகை, அழகு இந்த மூன்றின் அடிப்படையில் மட்டுமே சிலர் மணமகளை தேர்வு செய்கின்றனர். ஜாதகத்தில் உள்ள குறைபாடுகளை காணத் தவறிவிடுகின்றனர். எப்படிப்பட்ட ஜாதகங்களை இணைக்கக் கூடாது என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
✤ ஒரு ஜாதகத்தில் குருபகவான் சமசப்தமப் பார்வையாக அமையக் கூடாது. குரு, சுக்கிரன், செவ்வாய் இணைவு இருக்கக்கூடாது. குருபகவானும் சுக்கிரபகவானும் இணைந்து இருந்திட, அதற்குக் கேந்திரத்தில் செவ்வாய் இருக்குமேயானால், அந்த ஜாதகர்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது.
✤ மணமக்களின் ஜாதகத்தில் சனி, ராகு இணைந்தோ அல்லது சம்சப்தமப் பார்வை பெற்றோ இருக்கக் கூடாது. லக்கனத்துக்கு 7ஆம் வீட்டின் அதிபதி 7ஆம் வீட்டிற்கு 6,8,12-ல் அமையக் கூடாது. அதே நேரத்தில், 8ஆம் அதிபது 6,8,12-ல் இருந்தாலும், நீசம், அஸ்தமனம் பெற்றிருந்தாலும் அந்த ஜாதகருக்கு 1,7,8-ஆம் வீடுகளில் பலம் பொருந்தியதாக உள்ள ஜாதகங்களைதான் இணைக்க வேண்டும். இப்படிப்பட்ட வகையில் உள்ள ஜாதகங்களை இணைத்தால் தம்பதிகள் வாழ்க்கை வளமாக அமையும்.
பரிகாரம் :
➠ ஜாதகத்தை நல்ல முறையில் தேர்வு செய்யாமல் திருமணம் செய்தவர்கள் மணவாழ்க்கை சிறப்பாக இல்லயே என்று வருந்தலாம். அப்படிப்பட்டவர்கள் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை தரிசித்துவர மணவாழ்க்கை சிறப்பாகும். குறிப்பு :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக