வாஸ்து சாஸ்திரத்தில் அடிப்படை விதிகளின் படி தென்கிழக்கு, வடமேற்கு பற்றி பார்ப்போம்....!
🌀 வாஸ்து சாஸ்திரத்தில் அடிப்படை விதிகள் உண்டு, அதில் இன்று தென்கிழக்கு, வடமேற்கு உண்டான அமைப்புகளும் அதற்குரிய நன்மை, தீமைகளையும் பற்றி அறிவோம்.
🌀 நாம் கட்டக்கூடிய கட்டிடங்கள் எப்பொழுதுமே சதுர, செவ்வக வடிவில் இருப்பதே சிறப்பை தரும். கட்டிடத்தின் வெளிப்புற பகுதி எப்பொழுதுமே தென்கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதியின் தரைத்தளம் ஒரே உயரமாகவும் சமமான அளவுகளாகவும் இருப்பது சிறப்பு.
🌀 கட்டிடத்தின் உட்பகுதியிலும் தரையை பொருத்தமட்டில் ஒரே சமமான அமைப்பில் இருப்பது மிக மிக சிறப்பை தரும்.
தென்கிழக்கு பகுதியில் நல்ல அமைப்புகள் :
🌀 இங்கு தென்கிழக்கு பகுதியில் என்ன அமைப்பு இருந்தால் நன்மை என்று பார்ப்போம். அதில் படி அமைப்புகள் உள்பகுதியில் இருப்பதும் சிறப்பு, வெளிப்பகுதியில் இருப்பதும் சிறப்பு. சமையலறை உள்பகுதியில் இருப்பது மிக மிக சிறப்பு. வெளிப்புற பகுதியில் போர்டிக்கோ, மாட்டுத்தொழுவம், கார்பார்க்கிங், உயரம் குறைவான மரங்கள் இவை அனைத்தும் நல்ல அமைப்புகள்.
தவறான அமைப்புகள் :
🌀 செப்டிங் டேங், கிணறு, போர், சம்பு, உயரமான மரங்கள், வாழை போன்ற பழ மரங்கள் தென்கிழக்கு பகுதியில் இருக்காமல் இருப்பது மிக சிறப்பு.
வடமேற்கு பகுதியில் நல்ல அமைப்புகள் :
🌀 வெளிப்புற படி அமைப்பு சிறந்தது, கார்பார்கிங், டாய்லெட், செப்டிக் டேங், வாட்சுமேன் செட், போர்டிக்கோ, மாட்டுத்தொழுவம் ஆகியவை வெளிப்புற நல்ல அமைப்புகளே.
தவறான அமைப்புகள் :
🌀 வடமேற்கு பகுதியின் தவறான அமைப்புகளான, உள்முனை படி அமைப்பு, கிணறு, போர், சம்பு, பையோ கேஸ், வடமேற்கு வாசல், வடமேற்கு பகுதியை வாடகைக்கு விடுதல் போன்றவைகள் தவறான அமைப்புகள்.
🌀 நம்முடைய கட்டிடத்திற்கு காம்பவுண்ட்டை பொருத்தவரை தெற்கு, மேற்கு பகுதிகள் சற்று உயரமானதாகவும், வடக்கு கிழக்கு பகுதி சற்று உயரம் குறைவானதாக இருப்பது மிக மிக சிறப்பை தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக