சனி, 29 ஏப்ரல், 2017

பாசமான இராசிகள் விளக்கம்!

பெற்றவர்களாயினும், உடன் பிறந்தோராயினும், மனைவி மக்கள் ஆயினும் உயிர் தோற்றத்தின் விளைவு இயற்கையான பாச உணர்வு கொண்டதாக அமைகின்றது. ஜீவராசிகள் எதுவாயினும் அதற்கு தன்னுடைய இன ரீதியான பாசம் என்பது இயற்கை உணர்வுகள் பிரதிபலிப்பாக அமையும். அப்படி நோக்கும்போது ரிஷபம், சிம்மம், மகரம், மீனம் தான் சார்ந்த அல்லது தன்னை சார்ந்த உயிர்களிடத்து பாசத்தை வெளிப்படுத்தும்.

ரிஷபம் :

💮 ரிஷபம் இயல்பாக பு மித் தத்துவமாகையால் தன் குடும்ப உறுப்பினர்கள் மீதும் அவர்கள் முன்னேற்றத்திலும், நலனினும் உணர்வுப்பு ர்வமான அக்கறையோடு பாசத்தை வெளிப்படுத்தும். அதேநேரம் அதற்குரிய பிரதிபலனை எதிர்பார்க்கும் போது சில வேளைகளில் ஏமாற்றம் அடைவது உண்டு. பு மிக்கு கொடுக்கத் தெரியும். பிரதி பலன் எதிர்பாராமல் கொடுப்பது பு மி மட்டுமே.

சிம்மம் :

💮 சிம்மம் நெருப்பு இராசியாக இருந்தாலும் தன்னிடம் மரியாதை கொண்டவர்கள் மீது நம்பிக்கையும், அன்பும் செலுத்தும் போக்கு காணப்படும். இதிலும் பிரதி அனுகூலம் கிடையாது. உயர்ந்த இடத்தில் இருக்கும் சிம்மம் ஏங்குவது இல்வாழ்க்கையில் இருக்கக்கூடிய பாச உணர்வுக்கும் ஒற்றுமைக்கும். ஆனால் அன்னிய உயிரினங்கள் இதன் மீது மரியாதை கலந்த பாசம் கொண்டு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

மகரம் :

💮 மகரம் இந்த இராசி ஓரளவு மறைவின்றி எதையும் வெளிக்காட்டும் என்பதோடு, இதனிடமிருந்து பாசத்தைக் காட்டி எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். சலிக்காமல் செய்யும் மனப்போக்குடையது. இதற்கு ஏமாற்றம் என்பது மட்டும் பிடிக்காது. உடன் பிறந்தோர், மனைவி, மக்கள் மீது பாசத்தை எதிர்பார்க்கும் போக்கு இதற்கு உண்டு.

மீனம் :

💮 மீனம் இயற்கையான உணர்வுகளுடன் கூடிய பாசம் இதில் காணப்படும். இருப்பது என்ன, எடுத்தது என்ன என்பதை கணக்கு பார்க்காமல் காலத்தால் செய்யும் போக்கு உடையது. எல்லா உயிர்களிடத்தும் இயல்பான பாசம் காட்டும் போக்கு உடையது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...