தனது ராசிக்கேற்ற ராசிக் கற்களை மோதிரமாக அணிந்து கொள்வது ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளோரிடம் தற்போது வேகமாக பரவி வருகிறது.
தொலைக்காட்சிகளில் ஜோதிடர்களும், ஜோதிட(!) ஜுவல்லரிகாரர்களும் உங்கள் ராசி அதுவா? இந்தக் கல்லை மோதிரமாக அணியுங்கள்... அந்த ராசியா? ... இந்தக் கல்தான் சரி... உங்களுக்கு புதன் தசை நடக்கிறதா? மரகதப்பச்சை மோதிரம் அணியுங்கள்... குருதசையா? புஷ்பராகம் அணியுங்கள் என்று நீண்ட உரைகளை வாசித்து பொதுமக்களை ஊக்குவிக்கின்றனர்.
சமீபத்தில் நான் பார்க்க நேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் �ஜோதிட கலா ரத்னா� ஜுவல்லரி பெண்மணி ஒருவர் �சிம்மத்தில் இருக்கும் சூரியனைப் புதன் பார்த்தால் அவர் அரசாங்கத்தில் எழுத்தர் வேலையில் இருப்பார்� என்று பலன் வாசித்துக் கொண்டிருந்தார்...!
நேரடி ஊடகங்கள் வந்த பின் இது போல இருக்கிறது ஜோதிடத்தின் நிலைமை....!
சரி...
தனது ராசிக்கேற்ற கல்லை மோதிரமாக அணிவது சரிதானா? நடக்கும் தசையின் படியும் ராசி மோதிரம் அணியலாமா? போட்டவுடனே அது நல்ல பலனைத் தந்து விடுமா? ஜோதிட சாஸ்திரத்தில் நமது ஞானிகளும், மேதைகளும் இப்படித்தான் நவரத்தினங்களை உபயோகப்படுத்துமாறு அறிவுறுத்தி இருக்கிறார்களா என்று யோசித்தால் நமக்கு மயக்கமே வந்து விடும்.
ஜோதிட சாஸ்திரம் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்னங்கள் என்ன?
சூரியனுக்கு மாணிக்கம்
சந்திரனுக்கு முத்து
செவ்வாய்க்கு பவளம்
புதனுக்கு மரகதம்
குருவிற்கு புஷ்பராகம்
சுக்கிரனுக்கு வைரம்
சனிக்கு நீலம்
ராகுவிற்கு
கோமேதகம்
கேதுவிற்கு
வைடூரியம்
ஆகியவை தான்.
இதில் ராசிப்படி மேற்கண்ட கிரகங்களுக்கான கற்களை ஒருவர் அணிவதாக வைத்துக் கொண்டால், அஷ்டமாதிபதியை ராசிநாதனாக கொண்டவர் ராசிப்படி கல் அணியலாமா? உதாரணமாக விருச்சிக லக்னம் மிதுன ராசியில் பிறந்தவர் மரகதத்தை மோதிரமாகக் கொள்ளலாமா? கன்னி லக்னம் மேஷ ராசியில் பிறந்த ஒருவர் பவளத்தை அணியலாமா?
என்னிடம் ஒருவர் வந்தார். சுயமாக உழைத்து முன்னேறி கோடீசுவரராக ஆனவர். அவருக்கு கடக லக்னம். எட்டில் சனி. சனி தசை ஆரம்பித்த நான்கு வருடங்களில் தொழிலில் பெரும் சரிவு. மனைவி குழந்தைகள் பிரிந்து போய் விட்டனர். அடிமேல் அடி. கையில் நீலக்கல் வைத்து மோதிரம் போட்டிருந்தார். � எதற்காக நீலக்கல்? � என்றதற்கு சனி தசையும் நன்மை செய்வதற்காக ஜுவல்லரிகாரர் போடச் சொன்னார் என்றார்.
எனக்கு குதிரை கீழே தள்ளி குழியையும் பறித்தது என்பதோடு அதே குதிரை மண்ணையும் போட்டு மூடியது என்றுதான் தோன்றியது.
அஷ்டமாதிபதியின் கல்லை அணியக் கூடாது என்ற அடிப்படை அறிவு கூட இன்று அறிவுரை சொல்பவர்களிடம் இல்லை.
நவரத்தினங்களில் எதை அணியலாம்? எதை அணியக் கூடாது?
நமது மேலான ஜோதிட சாஸ்திரம் இதைப்பற்றி தெளிவாகச் சொல்வது என்ன?
லக்னப்படியும், ராசிப்படியும் நல்லது செய்ய விதிக்கப்பட்ட கிரகம் வலிமை குறைந்திருந்தால் அந்தக் கிரகத்திற்குரிய கல்லை அணியலாம்.
6,8 க்குடையவர்களின் ராசிக் கல்லை கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது. பாதகாதிபதியின் ராசிக் கல்லும் அப்படியே... (பாதகாதிபதி ராசிநாதனாக வந்தாலும், அணியக் கூடாது)
லக்னாதிபதி வலிமை குறைந்திருந்தால் வாழ்நாள் முழுவதும் அவரின் ராசிக்கல்லை வலது கை மோதிரவிரலில் அணிவது நல்லது. அவருக்கு ஆறு, எட்டு என மறு ஆதிபத்தியம் இருந்தால் லக்னாதிபதி இருக்கும் இடம், மற்றும் அவரது மூலத்திரிகோணாதிபத்தியம் ஆகியவற்றை வைத்து முடிவெடுக்க வேண்டும்.
5,9 போன்ற யோகாதிபதிகளின் தசை நடக்கும் போது அவர்களின் ராசிக்கல்லை தாராளமாக அணியலாம்.
2,11,4,7,10 பாவங்களின் அதிபதிகள் சுபராகி அவர்களின் தசை நடந்தால் அவர்கள் இருக்கும் இடத்தின்படி ஆராய்ந்து மோதிரம் அணியலாம்.
ராகு,கேதுக்களின் தசை நடக்கும் போது அவர்கள் இருந்த ராசியின் அதிபதி லக்ன சுபராகி அவர் வலிமை குறைந்திருந்தால், அந்த ராகு,கேதுக்கள் இருக்கும் ராசிக்கு அதிபதியின் ராசிக்கல்லை அணியலாம்.
ராகு,கேதுக்கள் 3,11ல் இருந்தால் மட்டுமே அவர்களின் ராசிக் கற்களை அணியலாம். அல்லது அவர்கள் லக்ன சுபரின் வேறு வீட்டில் இருந்தால் அணியலாம். உதாரணமாக மிதுன லக்னத்திற்கு 12ல் ரிஷபத்தில் ராகு இருந்தால் கோமேதகம் அணியலாம்.
கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற அதாவது கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெற்ற குருவும், புதனும் எந்த பாவர் பார்வையும், சேர்க்கையும் இல்லாமல் தனித்து இருக்கும் நிலையில் அவர்களின் ரத்தினங்களை அணியக் கூடாது. (லக்னம் கேந்திரத்திற்கும், திரிகோணத்திற்கும் பொதுவானது. லக்னத்தில் இவர்கள் இருந்தால் தோஷம் இல்லை.)
மிதுன, கன்னி, ரிஷபம், துலாம் லக்னக்காரர்கள் ராசிக்கல்லை வெள்ளியில் அணிய வேண்டும். மகரம், கும்பம், கடக லக்னக்காரர்கள் ராசிக்கல்லை பஞ்சலோகத்தில் அணியலாம். தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், சிம்ம லக்னக்காரர்கள் தங்கத்தில் அணியலாம்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று இருக்கிறது.
அதாவது ரத்தினங்களை கடையில் வாங்கி அப்படியே அணியக் கூடாது. அவைகளை அணியப் போகிறவரின் பெயர், ராசி, நட்சத்திரப்படியும் என்ன நோக்கத்திற்காக அவர் அணியப் போகிறாரோ அதன்படியும் உச்சாடனம் செய்து மந்திர உருவேற்றிய பின்பே அது மோதிரமாக அணியப்பட வேண்டும்.
குறைந்தது ஒரு லட்சத்து எட்டு முறை உச்சாடனம் செய்வது நல்லது.
கோவிலின் வெளியே வாசலில் படிகளாக பதிக்கப்பட்டிருக்கும் கற்களும், உள்ளே இருக்கும் நமது தெய்வங்களும் ஒரே கல்லில் செய்யப்பட்டவைதான். ஆனால் நாம் தெய்வங்களாக வணங்கும் நமது சிலைகள் ஆகம முறைப்படி உருவேற்றப்பட்டு, பலப்பல முறைகளின் படி சக்தியூட்டப் பெற்று பின்னரே பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
அதன் பிறகே அந்த தெய்வங்கள் நமக்கு அருள்புரிகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்...!
உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்; கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடியதாக "அதிர்ஸ்டக் கற்களை" பாவிக்கும்படி சோதிடர்கள் சிபாரிசு செய்கின்றனர். அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக பரிந்துரைக்கிறோம்..உங்கள் பிறந்த ஜாதகத்தில் பலவீனமாக இருக்கும் நன்மை செய்யக்கூடிய கிரகத்துக்குண்டான ராசிக்கற்களை வெள்ளி மோதிரத்தில் அணியும் போது நிச்சயம் நல்ல பலன் உண்டாகும்..இதனை நான் கடந்த 12 வருடமாக சிபாரிசு செய்து பலருக்கும் நல்ல பலன்களை உண்டாக்கி,பிரச்சினைகளை தீர்த்திருக்கிறேன்...மோதிரம் தேவை படும் நபர் என்னை தொடர்பு கொள்ளவும் உங்கள் ஜாதகம் பார்த்து உங்களுக்கான இரத்தின மோதிரம் சிபாரிசு செய்யப்படும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக