வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே ‘அமாவாசை’ ஆகும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி ராசி சக்கரத்தில் தென்மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியன் செல்லும்போது புரட்டாசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதத்தை ஆன்மிக மாதம் என்றே சொல்லலாம்.
புரட்டாசி மாதம் அமாவாசை மகாளயபட்ச அமாவாசை எனப்படும்...மற்ற அமாவாசையை விட புரட்டாசி அமாவாசை சிறப்பு வாய்ந்தது...மகாளய காஅம் இன்று முதல் அமாவாசைக்கு அடுத்த நாள் வரை தொடர்கிறது அதாவது 9.9.2014 முதல் 24.9.2014 வரை.புரட்டாசி அமாவாசைக்கு முன் பதினான்கு நாட்களாக விரதம் இருந்து அமாவாசை அன்று நம் மூதாதயருக்கு தரும் தர்ப்பணம் நம் குலத் தோன்றல்களுக்கும் எதிர்வரும் சந்ததியர்களுக்கும் செல்வச் செழிப்பையும் நற்பண் புகளையும் தரவல்லது. மகாள பட்ச காலத்தில் நமது பித்ருக்கள் (மூதாதையர்கள்) தங்க ரதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்களின் வழியாக பித்ரு தேவதைகளின் அனுமதியுடன் பூலோகத்தில் உள்ள தங்கள் சந்ததியர்களை காணவருகின்றார்கள்.
இறந்தவர்களின் போட்டோவுக்கு வீட்டில் மலர் மாலைகள் சூட்டி, அவர்கள் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளை படைத்து வணங்கலாம். இறந்த அப்பா, அம்மாவுக்கு திதி, சிரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள், அப்பா, அம்மா
இறந்த தேதி, திதி போன்றவற்றை மறந்தவர்கள் இந்த மகாளய அமாவாசையில் அவர்களை நினைத்து வணங்கலாம். துர்மரணம், விபத்து, அகால மரணம்
அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைப்பதற்கு இந்த நாள் மிகவும் உகந்ததாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக