வெள்ளி, 17 நவம்பர், 2017

ஜாதகத்தில் வீடுகளின் - பாவத்திற்கும் காரகங்கள்

   ஜாதகத்தில் முக்கியமானவை ராசி சக்கரம்நவாம்ச சக்கரம் மற்றும் பாவ சக்கரம் ஆகியனவாகும். இதில் ராசி சக்கரம் அடிபடையானது.
இதை வைத்தே பெரும்பாலான பலன்கள் கணிக்கப்படுகின்றன.
இதில் லக்கினம் முதல் வீடாக கருதப்படுகிறது. நவாம்சம் என்பது ராசியை ஒன்பதாக பிரிப்பதாகும்.
பாவ சக்கரம் என்பது துல்லியமான கணக்கீடாகும். இதில் ஒரு வீடு என்பது ஒரு முழு ராசி அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட ராசிகளில் ஒரு பாவம் வியாபித்திருக்கலாம். ராசியில் ஒரு வீட்டில் இருக்கும் கிரகம் பாவத்தில் வேறு வீட்டில் இருக்கலாம். பாவக சக்கரம் கணிக்க பாவ ஸ்புடங்கள் கணிக்க வேண்டும். இதற்கு லக்கினம் எனப்படும்
Ascendant, அதற்கு நேர் எதிரே இருக்கும் Descendant பத்தாம் வீடு எனப்படும் Midheaven அதற்கு நேர் எதிரே இருக்கும் நான்காம் வீடு எனப்படும் Nadir இவற்றை கணிக்க வேண்டும்.
இதற்கு நிறைந்த கணித அறிவும் table of bhavas மற்றும் ephemeris தேவைப்படும்.
ஆனால் இதெல்லாம் கணிப்பொறி காலத்திற்கு முன். இப்பொழுது கணிணியில் பிறந்த தேதிநேரம் மற்றும் இடம் இவற்றை உள்ளீடு செய்தால் சில செய்து வினாடிகளில் அனைத்து கணக்கீடுகளையும் செய்து கணினி நமக்கு தருகிறது.
பல மணி நேரங்களில் செய்ய வேண்டிய கணக்குகள் சில வினாடிகளில் முடிக்கப்படுகிறது! எனவே ராசி சக்கரம் என்பது தோராயமான பாவ சக்கரமாகும்.
ஒவ்வொரு பாவத்திற்கும் காரகங்கள்
----------------------------------------------------------------------
லக்கின பாவம்
உடல்வாகுநிறம்கவர்ந்திடும் அழகுசெல்வம்உடலில் உள்ள இரத்தத்தின் தன்மைஅழகிய உள் பாகங்களும் தலைப்பகுதியும்புகழ்வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும்சுப நிகழ்ச்சிகளையும்அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கப் பெறும் ஆயுளையும் குறிக்கும் பாவமாகும்.
அடித்தளம் பலமாக அமைந்தால்தான் கட்டிடமும் உறுதியாக ஆண்டாண்டு காலத்திற்கு நிலைத்திருக்க இயலும்.
அதே போன்று லக்னமும் பலமாக அமைந்தால்தான் அனைத்தும் அனுபவிக்கும் யோகத்தை நீண்ட ஆயுளைத் தரும். வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால் மட்டும் போதாது.
அதை அனுபவிக்க உடல் நலமும் தேவைதான். உடல் நலத்தோடு அனுபவிக்க ஆயுளையும் பெற வேண்டும். இதற்கு இலக்கின பாவமும் லக்கினாதிபதியும் பலமாக அமைய வேண்டும்.
------------------------------------------------------------------------------இரண்டாம் பாவம்
தனம்குடும்பம்நேத்திரம்கல்விவாக்குபேசும் திறன்கலைகளை கற்கும் ஆர்வம் (சாஸ்திரம்)மனம்நடைநவரத்தினங்கள்நிலையான கொள்கைஉணவுமுகம்நாக்கு இவைகளை குறிக்கும்.
உண்மையே பேசுதல்பொய்யும் சொல்லுதல்முன்கோபம்கண்களில் வலது கண்வஞ்சக நெஞ்சமாபெருந்தகையாளரா என்பதை தெரிவிக்கும் பாவம். சுவை அறிந்து உண்பதையும் குறிக்கும். 
முக்கியமாக தனஸ்தானம் எனப்படும்.
--------------------------------------------------------------------------மூன்றாம் பாவம்
எதிரியை வெற்றி கொள்ளும் திறமைவேலையாட்கள்இசைஇசையில் ஆர்வம்அதில் தொழில் அமையும் நிலைவீரியம்அதாவது ஆண்மை சக்திதைரியம்எதையும் துணிவுடன் பயமின்றி செயலாற்றுதல்போகம்உடல் உறவில் தணியாத தாகம்இளைய உடன்பிறப்புகள்காதில் ஏற்படும் நோய்காது கேளாத நிலைஆபரணங்கள் அணியும் யோகம்தங்கம்வெள்ளிவயிர ஆபரணங்களை பெறும் யோகம்உணவு அருந்தும் பாத்திரங்கள்மற்றவர்களிடம் பணியாற்றும் நிலைஅதனால் பெறும் நன்மைகள்இவைகளை குறிக்கும். குறிப்பாக சகோதர ஸ்தானம் எனப்படும்.
---------------------------------------------------------------------------------நான்காம் பாவம்
உயர் கல்விவாகனம் வீட்டில் நடைபெறுகின்ற சுப நிகழ்ச்சிகள்வசிக்கும் வீடுவியாபாரம்தாய் நலம்தாயின் உறவுஉறவினர்களின் நிலைஅவர்களுடன் ஏற்படும் உறவுபுகழ்பெறும் நிலைபுதையல் கிடைக்கும் யோகம்தாயின் ஒழுக்கம்பால் பால் பொருட்கள்பசு பண்ணைதிருதல தரிசனம்சிறுதூர பிரயாணம்அதனால் ஏற்படும் நன்மைஆலோசனை பெரும் வாய்ப்புகனவுகள்மருந்துகள்அதிகாரம் செய்யும் தகுதிஇவைகளையும் பொதுவாக வீட்டை பற்றி சுகத்தை பற்றி தெரிவிக்கும் பாவமாகும்.
ஆம் பாவத்தையும் புதனின் பலத்தையும் அறிந்து ஒருவரின் கல்வி அதாவது உயர் கல்வி பெறுவதை அறியலாம்.
ஆம் பாவத்தையும் சுக்கிரனின் பலத்தையும் அறிந்து கார்பைக் போன்ற வாகனம்ஆபரணம் பெறும் நிலையை அறியலாம்.
ஆம் பாவத்தையும் செவ்வாயையும் அறிந்து அவர்களின் பலத்தை பொறுத்து அசையாத சொத்துகள் அதாவது வீடுநிலம்தோட்டம்பண்ணை வீடுகள் இவற்றை அறியலாம்.
ஆம் பாவத்தையும் சந்திரனின் பலத்தையும் அறிந்து தாயின் நிலைஆயுள்பாசம் இவற்றை அறியலாம்.
ஆம் பாவத்தையும் குருவின் பலத்தையும் அறிந்து வாழ்க்கையில் பெறும் அனைத்து வசதிகளையும்சுகம் பெறும் நிலையையும் புகழ் பெறும் தகுதியையும் அறியலாம்.
-------------------------------------------------------------------------------ஐந்தாம் பாவம்
மாமன்மார்களின் உறவுதந்தை வழி உறவுகள்குழந்தை செல்வம் பூர்வ புண்ணியம்சென்ற பிறவியில் பெற்ற நன்மை தீமைகளை அதன் அளவை தெரிவிக்கும் பாவம்தமிழ் மொழியில் தேர்ச்சிமந்திரங்களை அறியும் திறமைஉயர் கல்வி பெரும் தகுதிஅறிவாற்றல்அனுபவ அறிவுசொற்பொழிவு செய்யும் திறமைகதாகாலட்சேபம் செய்யும் திறமைபெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் தகுதிதாத்தாவின் நிலைமந்திர உபதேசம்இவற்றை குறிக்கும். குறிப்பாக புத்திர பாவம்பூர்வ புண்ணிய பாவம் எனப்படும்.
குருவையும் ஆம் பாவத்தையும் அறிந்து குழந்தை செல்வத்தை அறியலாம்.
புதனையும் ஆம் பாவத்தையும் அறிந்து கல்வி பெறும் தகுதிஆன்மீக சிந்தனை மந்திரங்கள் கற்பது, உபதேசிப்பதுபிரார்த்தனை செய்வது இவைகளை அறியலாம். சொற்பொலிவாற்றும் தகுதிகதாகலாட்சேபம் செய்யும் வாய்ப்பு இவைகளை அறியலாம்.
-----------------------------------------------------------------------------------ஆறாம் பாவம்
ஒருவருக்கு ஏற்படும் வியாதி - அதனால் ஏற்படும் பாதிப்புபகைவர்களால் ஏற்படும் துன்பம்ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்துகாயங்கள்தாயின் உறவினர்களுடன் ஏற்படும் வழக்குகள்சண்டையிடுதல் யுத்தம் செய்தல்வீண் வம்பிற்கு செல்லுதல்திருடர்களால் ஆபத்துபொருட்கள் களவாடப்படுதல்தண்ணீரால் ஆபத்துபெண்களால் உண்டாகும் வீண் வம்புகள்அதனால் அடையும் துன்பம்பாம்புகளால்-விஷத்தால் ஆபத்துசந்தேகம்சோம்பேறித்தனம்ஒருவரை தூசித்தல்பாவமான காரியங்களை செய்தல்நோய்,. சிறைபடுதல்உயர் பதவி பெறுதல்கால்நடைகளை பற்றி அறிதல் இவை ஆறாம் பாவம் குறிக்கும் காரகங்களாகும்.
--------------------------------------------------------------------------------ஏழாம் பாவம்
திருமணத்தைக் குறிக்கும் பாவம். 
ஆண்களுக்கு மனைவியை பற்றியும்பெண்களுக்கு கணவரை பற்றியும் அறிவிக்கும் பாவம். திருமணம் நடைபெறும் காலம்மனைவிகணவன்ஆயுள் சுற்றுப்புற சூழ்நிலைகூட்டு வியாபாரம்திருமணத்தால் ஏற்படும் சுகம்மகிழ்ச்சிசிற்றின்பம்துணி வியாபாரம்அரசாங்கத்தில் ஏற்படும் கவுரவம்பட்டம்பதவிசன்மானம்தறி நெய்தல்பவர் லூம்சிறிய பஞ்சு மில்எந்த பொருளையும் வாங்கி விற்கும் கமிஷன் தொழில்தரகர் தொழில் இவற்றை குறிக்கும். களத்திர ஸ்தானம் எனப்படும்.
------------------------------------------------------------------------------
எட்டாம் பாவம்
ஒருவரது ஆயுளை தெரிவிக்கும் பாவம். யுத்தத்தில் ஆயுதங்களால் காயம் ஏற்படுதல்உயர்வான இடத்தில இருந்து விழுவதால் ஏற்படும் ஆபத்துமலை மீள் இருந்து விழுதல்நீங்காத வியாதிகளால் ஏற்படும் துன்பம்இடையூறுகள்அவைகளால் ஏற்படும் மனசஞ்சலம்நீங்காத பகையால் ஏற்படும் ஆபத்துகள்வீண் அலைச்சல்செய்ய தகாத காரியங்களை செய்தல்அதனால் ஏற்படும் துயரம்கருத்து மோதல்கள்அஞ்ஞான வாசம்அதிகமாக ஏற்படும் வீண் செலவுகள்மரணம் இவைகளை தெரிவிக்கும் பாவம்.
இது 10 ஆம் பாவத்திற்கு (ஜீவன பாவம்) 11 ஆம் பாவமாகும் (லாப ஸ்தானம்). இதில் உள்ள கிரகங்களில் தசா புக்தி அந்தரங்களில் தொழில் முறையில் யோகத்தைலாபத்தை தரும்.
---------------------------------------------------------------------------------ஒன்பதாம் பாவம்
இந்த பாவம் பாக்கிய ஸ்தானம் எனப்படும். சென்ற பிறவியில் செய்த புண்ணியத்தை அனுபவிக்கும் பாவம். பாவாதி பாவம் என்ற விதிப்படி ஆம் பாவத்திற்கு ஆம் பாவமே ஆம் பாவம். தான தர்மம் செய்யும் குணம்திருகோவில்களை கட்டும் பணியில் ஈடுபடுதல்அவைகளை புணருத்தாரணம் செய்தல்கும்பாபிஷேகம் செய்த போன்ற திருப்பணிகளில் ஈடுபடும் யோகம்ஆன்மீக உணர்வுஅயல்நாடு செல்லும் வாய்ப்புஅங்கு பெறும் பணி,தொழில்கள்அவைகளால் பெறும் லாப-நஷ்டம்நன்றியுணர்வு இவைகளை தெரிவிக்கும் பாவம்.
தர்மம் என்பது கேட்டு கொடுப்பது தானம் என்பது கேட்காமல் கொடுப்பதுஅறம் என்பதை 32 வகைகளில் செய்யலாம் என கூறியுள்ளார்கள்.
தானத்திலே சிறந்தது அன்னதானமும்கல்வி தானமுமாகும். பசித்தோர்க்கு உணவு கொடுப்பது சிறந்த தானமாகும். ஏழை குழந்தைகளுக்கு கல்வி பெற உதவி செய்வதும் சிறந்த தொண்டாகும். வசதி படைத்தோர் அவரவர் தகுதிக்கேற்ப தானதர்மம் செய்வதை உணர்த்தும் இடமாகும். மனித நேயமுடையவர்களாஜீவகருண்ய சீலரா என்பதையும் தெரிவிக்கும் இடம்.
----------------------------------------------------------------------------பத்தாம் பாவம்
பணியாற்றுதல்தொழிலால் பெறும் லாபம்அதனால் பெறும் புகழ்உயர் பதவிஅரசாங்க கவுரவம்புகழ்பட்டம்பதவிஅரசியலில் ஈடுபாடுஅதில் பெறும் புகழ்அரசாளும் யோகம்தெய்வ வழிபாடுஉணவில் ஏற்படும் ஆர்வம்சுவைசுவையான உணவு கடிக்கும் தகுதிஇரவாபுகழ் பெறும் தகுதி இவைகளை உணர்த்தும் பாவம். தொழில் ஸ்தானம்கர்ம ஸ்தானம்ஜீவன ஸ்தானம் எனப்படும்.
----------------------------------------------------------------------------------பதினோராம் பாவம்
மூத்த உடன்பிறப்புக்களை பற்றியும்சேவை செய்யும் நிலைஇளைய மனைவி (இரண்டாம் திருமணத்தை குறிக்கும்)செய் தொழில்தொழிலில் கிடைக்கும் லாபம்பயிர் தொழில்குதிரையானை இவைகளை வளர்த்தல்பராமரித்தல்கால்நடை வளர்ப்புஅறிவாற்றல்மன அமைதி பெறுதல்நண்பர்கள் அமையும் நிலை,அவர்களால் பெறும் நன்மைகள்மாப்பிள்ளை மருமகள் இவர்களால் பெறும் நன்மைகள்லாபங்கள்உதவிகள்வாகன யோகம் இவற்றை குறிக்கும் பாவமாகும். துன்பங்கள்துயர்கள் தீர்ந்திடும் நிலை ஆடை இவைகளையும் குறிக்கும்.
---------------------------------------------------------------------------பன்னிரெண்டாம் பாவம்
அந்நிய நாட்டில் அமையும் தொழில்உத்தியோகம்செலவினங்கள்செலவு செய்வதால் ஏற்படும் சுகம்சயன சுகம்விவசாயம்தியாக மனப்பான்மையாகம் செய்தல்மறுமையில் கிடைக்கும் பேறுமனைவி அல்லது கணவர் அமையும் இடம்அநாவசிய செலவுகள்சிறைபடுதல்நிம்மதியான தூக்கம்தூக்கமின்மைஇல்லற சுகம்பெண்களுடன் ஏற்படும் தாம்பத்திய சுகம் இவைகளை குறிக்கும். மறுபிறவி மரணத்திற்கு பிந்தைய நிலை இவற்றையும் குறிக்கும். குறிப்பாக விரய பாவம் எனப்படும். ஒவ்வொரு பாவத்திற்கும் அதற்கு 12 ஆம் பாவமே அழிவு பாவமாகும்.                                                                                                                                                                  
பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் அனைத்தும் பொதுவானது. இவற்றில் தங்கும் கிரகங்கள் நிலை-விளிமை தன்மை ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.
சர, ஸ்திர, உபய ராசிகள்
            பன்னிரண்டு ராசிகளும் சர, ஸ்திர, உபய ராசிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும். இவற்றை லக்னமாகப் பெற்ற ஜாதகர்களில் பலன்களைப் பார்ப்போம்.                    
                         சர ராசி
               சர ராசியில் பிறந்த ஜாதகனுக்கு பதினோராம் இட அதிபதியான லாபாதிபதியால் நற்பலன்கள் இல்லை. ஏனெனில் அவன் தசை காலங்களில் வீடு, பொருள் நஷ்டமும் அரசாங்க பகையும் உண்டாகும். இந்த பலன்கள் ஏற்படாமல் செல்வம் போன்ற யோக பலன்களை அளித்தாலும் வியாதிகளை உண்டாக்குவான். இதனால் ஜாதகன் பெற்ற தனங்கள் அழியலாம். எனினும் லாப ஸ்தானாதிபதி 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் நன்மையான பலன்களையே தருவார்.                                            
                                           ஸ்திர ராசி
                 ஸ்திர ராசி லக்னமாக அமையப்பெற்ற ஜாதகனுக்கு நன்மை செய்யும் பாக்கிய ஸ்தானாதிபதியான 9ம் இட அதிபதியால் தீமையே உண்டாகும். அதே சமயத்தில் பாக்கியாதிபதி 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் நின்றால் அரசாங்க நன்மை முதலான யோகங்கள் உண்டாகும். மற்ற இடங்களில் நின்றால் பிரயோசனம் இல்லை. நற்பலன்கள் உண்டாவதில்லை. எடுத்த தொழிலில் முற்று பெறாமல் தடை உண்டாகும்.                    
                                 உபய ராசி
          உபய ராசியில் ஜெனித்த ஜாகருக்கு கேந்திர ஸ்தானாதிபதிகளில் 7ம் இட அதிபதி நற்பலன்களைத் தரமாட்டார். ஊழ்வினையின் காரணமாக பூமியில் பல தொல்லைகளை அடைவார். போதுமான வருமானம் இல்லாமல் செய்யும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்காமல் பண விரயமும் ஏற்படும். அரசாங்க பகையும் உண்டாகும். உடல் உபாதையும் நோயும் ஏற்படும். அதே சமயத்தில் மற்ற கிரகங்களின் பலத்தைப் பொறுத்து மேற்கண்ட கெட்ட பலன்களின் ஆதிக்கம் குறைய வாய்ப்புண்டு.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...