வெள்ளி, 17 நவம்பர், 2017

செவ்வாய் குணமும் கிரகங்களின் சேர்க்கை பலன்கள்

செயல்காரகன் "செவ்வாய்":

காலபுருசனின் லக்னமும் பூமியை ஒத்த காரகத்துவமும் கொண்ட செவ்வாய், குசன் என்று அழைக்கபடுகிறார் . குஜன் என்றால் சமஸ்கிருதத்தில் "பூமியின் மகன்" (அ) "நிலமகன்" என பொருள். செவ்வாய் ஒரு ஆண் கிரகம் ஆவார். இவர் மேஷம் மற்றும் விருச்சகத்தை ஆட்சி செய்கிறார். இங்கே ஆட்சி என்பது சொந்த வீடு என்பதை விட, செவ்வாய் தன் கதிர்களை பூமிக்கு சரிவிகிதத்தில் கொடுக்குமிடம் என்பதே சரியானது.

செவ்வாய் பற்றிய அறிவியல் விளக்கம்

தற்கால அறிவியல்படி, பூமியின் அளவை மற்றும் கட்டமைப்பை ஒத்த கிரகம் செவ்வாய் ஆகும். எனவே இவரை கால புருசனின் லக்னமாக முன்னோர்கள் வைத்தனர். சூரியனை சுற்ற செவ்வாய் கிட்டத்தட்ட பூமியை விட ஒரு ஆண்டு அதிகமாக எடுத்து கொள்கிறது. விண்வெளியில் சுற்றிவரும் மாசு மற்றும் விண்கற்கள் மற்றும் வால் நட்சத்திர தாக்குதல்களில் இருந்து பூமியை காப்பதால், இவரை "தளபதி" என்று முன்னோர்கள் வர்ணிக்கின்றனர்.

உடலின் சக்திக்கு காரகம் வகிப்பதும் செவ்வாய். அது போலவே இயற்கையாக, செவ்வாய் மனிதரின் இரத்தத்திற்கு காரகம் வகிக்கிறார். இரத்தம் என்பது எலும்பு மஜ்ஜையில் இருந்து உருவாகும் திரவம் ஆகும். இதுவே கிரியா சக்தியை வெப்ப ஆற்றல் மூலம் உடலெங்கும் வெளிபடுத்தும் தன்மை கொண்டது.
கால புருசனின் ஒன்றாம் வீடான மேஷத்தில் செவ்வாய் அதிக வெப்ப ஆற்றலை வெளிபடுத்தும் தன்மையும், விருச்சகம் என்னும் எட்டாம் இடத்தில் சற்று குறைவான இயக்க தன்மையும் கொண்டு இருக்கிறார்.

சூரியன் நெருப்பு கிரகம் எனில், செவ்வாய் இயற்கையில் ஒரு அனல் கிரகம். சூரியன் நெருப்பை உண்டாகும் தன்மை கொண்டு இருந்தாலும், அந்த வெப்பத்தை கிரியா சக்தியாக மற்றும் கிரகம் செவ்வாய் ஆகும். இதனை நம் உடலின் செய்பாடுகளில் கவனித்து பார்க்க எளிதில் புலப்படும், சூரியனில் இருந்து கிடைக்கும் வெப்ப கதிர்கள் மூலம் பெரும் ஆற்றலை சேமிக்கும் தாவரங்களை உண்ணும் போது, உணவில் இருக்கும் சக்தி இரத்தத்தில் (செவ்வாய்) கலந்து, மனிதனுக்கு இயக்க சக்தியை (கிரியா) கொடுக்கிறது.

செவ்வாய் இரத்தத்தை குறிப்பதால், இவர் நமது ரத்த சமந்தமான உறவான "சகோதர உறவை" குறிக்கிறார். மேலும் செவ்வாய் பூமியின் நிலப்பரப்பை ஒத்த நிலப்பரப்பை கொண்டதால், செவ்வாய் காலி நிலத்தையும் குறிக்கிறார்.
செவ்வாய் ஒரு இயற்கை அசுப கிரகம். இவரின் காரக ஒவ்வாமை கொடுக்கும் கிரகங்களான சனி, புதன், ராகு மற்றும் கேது ஆகும். சுக்கிரன் பகவான் செவ்வாய் பகவான் காரகதுவதை சம அளவில் பாதிக்கிறார். இங்கே காரக ஒவ்வாமை என்பது பூமியில் வசிக்கும் மனிதர்களுக்கே என்பதை நினைவில் கொள்ளவும்.

கேந்திரத்தில் செவ்வாய்

செவ்வாய் கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெரும் போது ருச்ச யோகம் ஏற்படுதிகிறார். ருச்ச என்றால் "கூர்மையான" (அ) " பிரகாசமான" என்று பொருள். லக்ன கேந்திரத்தில் செவ்வாய் அட்சி அல்லது உச்சம் பெற்று, அவரின் திரிகோணத்தில் குரு, சூரியன் அல்லது சந்திரன் இருக்க, ஜாதகர் தீர்க்கமான முடிவெடுத்து, ஒரு குழுவை அல்லது ஒரு சமூகத்தை காக்கும் மற்றும் வழி நடத்தி செல்லும் தளபதி போன்ற ஆற்றல் பெறுவார்.
செவ்வாய் பிற கிரகங்களுடன் சேர்க்கை

குருவுடன் செவ்வாய் :

செவ்வாய் குருவின் தொடர்பை பெற, செவ்வாயின் முரட்டு தனம் விலகி சாந்தம் பெறுகிறார். இங்கே குரு மனித மூளை எனவும், செவ்வாய் (இயக்கம்) மூளையின் கட்டுபாட்டில் இருக்கும் போது, அவசரமில்லா திடமான முடிவெடுத்து அதனை செயல் படுத்தும் நிலையை ஜாதகர் அடைவார். குருவுடன் சேர்க்கை அல்லது கேந்திரத்தில் செவ்வாய் இருக்க குரு மங்கள யோகம் ஏற்படுகிறது, இதனால் குருவின் காரகமான பொன் சேருதல் மற்றும் செவ்வாய் காரகமான நிலபுலண்கள் வாங்கும் தன்மை கொடுக்கிறார்.

சந்திரனுடன் செவ்வாய் :

சந்திரன் வீட்டில் கடகத்தில் நீசம் பெறும் செவ்வாய் தன் பலத்தை இழக்கிறார். எனவே செவ்வாய் காரகதுவங்களான வீரம், தைரியம், போர்குணம், வழிநடத்தி செல்லுதல்மற்றும் சகோதரம் போன்றவை குறைவாகவும் அல்லது இல்லாமலும் இருக்கும். நீச செவ்வாயின் கேந்திரத்தில் இருக்குன் சந்திரன் செவ்வாயின் நீச்சதை பங்கம் செய்து, குறிப்பிட்ட வயதுக்கு பிறகு, தன் காரகதுவதை ஜாதகரிடம் வெளிபடுத்துவார். மேலும் சந்திரனின் கேந்திரத்தில் செவ்வாய் இருக்க சந்திர மங்கள யோகம் ஏற்படுகிறது. இந்த யோகத்தின் பயனாக, தெளிவான மனமும், நல்ல எண்ணங்களும் ஏற்படும், ஏற்ற்றுமதி இறக்குமதி தொழில் பிரகாசிக்கும் ஆற்றலும் ஏற்படும். விவசாயம், பால் பண்ணை, கலை தொழில் சிறக்கும். இதில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று இருக்க, மக்கள் முன்னிலையில் நல்ல பெயரை சம்பாதிக்கும் நிலையை தருகிறது.

சனியுடன் செவ்வாய் :

சனியுடன் சேரும் செவ்வாய் அல்லது சம சப்த பார்வை பெறும் செவ்வாய், அதன் காரகத்துவம் முடுக்கபட்டு, விபத்துகளை, அறுவை சிகிச்சைகளை மற்றும் இயக்கி சீற்றங்களை உருவாகுகிறார். அது போலவே சனியின் காரகத்துவம் பாதிக்கப்பட்டு, வறுமை, நாத்திக தன்மை, தொழிலாளர் போராட்டம், விஷத்தன்மை கொண்ட நோய்கள், தீவிரவாத மற்றும் நாத்திக சதி செயல்கள் அரங்கேறுவார். இந்த சேர்க்கையுடன் சுக்கிரன் சமந்தபட, தவறான அல்லது முறையற்ற காதல் மற்றும் காம எண்ணங்களில் ஜாதகரை ஈடுபடுத்துவார்.

ராகுவுடன் செவ்வாய் :

செவ்வாய் ராகுவுடன் சேரும் போது, விபத்து தைரியம் குறைதல், உடல் மெலிதல், ரத்த புற்று மற்றும் சகோதர பங்கம் ஏற்படுத்துகிறார். குருவின் பார்வை அல்லது செவ்வாய் பாவக மாற்றம் சுபத்தை தரும்.

கேதுவுடன் செவ்வாய் :

செவ்வாய் கேதுவுடன் சேரும் போது நில தகராறு மற்றும் வழக்கு, இரத்த சோகை, சகோதர கருத்து வேற்றுமை உண்டு பண்ணுகிறார். தீர்க்க முடிவில்லாமல் ஒரு செயலில் இறங்கி பிரச்சனைகளை சந்திக்கும் நிலையை இவ்வமைப்பு ஏற்படுகிறது.

புதனுடன் செவ்வாய் :

செவ்வாய் புதனுடன் சேர்ந்து சிந்தையில் குழப்பத்தையும், கல்வி தடை மற்றும் விதண்டாவாதம் செய்தல் மற்றும் பொய் பேசும் குணத்தை கொடுக்கிறது. புதன் பலம் குறைந்து செவ்வாய் உடன் சேர, தீவிரவாத இயக்கங்களில் சேரும் நிலையும் ஏற்படுத்திவிடுகிறது.

சுக்கிரனுடன் செவ்வாய் :

செவ்வாய் சுக்கிரனுடன் சேர, அங்கு செவ்வாய் அல்லது சுக்கிரன் ஆட்சி, உச்சம் அல்லது நட்பு பெற, பிருகு மங்கள யோகம் உருவாகிறது. இது பல அடுக்கு மாடி கட்டடங்களுக்கு சொந்தகாரரகவும், பங்களா மற்றும் கார் போன்றவை கொடுத்து, சொகுசு வாழ்க்கை ஏற்படுத்தி கொடுக்கிறது. சுக்கிரன் மற்றும் செவ்வாய் சந்திரன் அல்லது சூரியன் தொடர்பை பெற, அதீத காம உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.

சூரியனுடன் செவ்வாய் :

சூரியனுடன் சேரும் செவ்வாய் அஸ்தங்கம் பெறாமல் இருக்க, ஆளுமை தன்மை மற்றும் செயல் திறன் அதிகரிக்க செய்கிறார். செவ்வாய் அஸ்தங்கம் அடைந்தால், அறுவை சிகிச்சை மற்றும் ரத்த இழப்பு கொடுக்கிறார்.

செவ்வாய் உப ஜெய ஸ்தானமான 3, 6, 11ல் தனித்து இருக்க சுபத்தையும். கேந்திரம் மற்றும் திரிகோணத்தில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று, குரு, சந்திரன் மற்றும் சூரியன் தொடர்பை பெற நற்செயலும் செய்கிறார். செவ்வாய் பதில் திக்பலம் பெறுகிறார். அவ்வாறு இருக்கும் ஜாதக அமைப்பு, அரசியல் அல்லது அரசாங்க தொடர்ப்பை ஜாதகருக்கு ஏற்படுத்தி கொடுக்கும்.

செவ்வாய் தாக்கத்தை போக்கும் எளிய பரிகாரங்கள்

செவ்வாய் காரகம் பாதிக்கபட்டவர்கள், செவ்வாய் கிழமை முருக வழிபாடும், கந்த சஷ்டி கவசம் பாடுதலும் அல்லது கேட்பதும், சிவ வழிபாடும்,ஞாயிற்று கிழமை  பைரவர் வழிபாடு, மேலும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்த தானம் செய்தலும் மிகுந்த பலனளிக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...