புதன், 19 நவம்பர், 2014

பிரம்ம ஹத்தி தோஷம் நிவாரண தலம்

திருவிடைமருதூர்.......... பிரம்ம ஹத்தி தோஷம் நிவாரண தலம் .........ஒருவரது ஜாதகத்தில் குரு சனியைப் பார்த்தாலும், சனி குருவைப் பார்த்தாலும் இருவரும் சேர்ந்து, ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், பிரம்மஹத்தி தோஷத்தை உண்டாக்கும். தோஷம் எப்படிப்பட்ட பாதிப்புகளை உண்டாக்கும் என்பதை காண்போம்.
1.ஜாதகருக்கு புத்தி சுவாதினம் இல்லாமற் போதல்
2. தான் செய்யாத குற்றத்திற்காக ஜெயில் தண்டனை அனுபவித்தல்.
3. மருத்துவத்துக்கும் கட்டுப்படாத நோய்களினால் அவதிப்படுதல்.
4. தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு சங்கடம், சரிவு, வீழ்ச்சி அடைய நேரிடுதல்.
5. திருமணத்தடை காலம் தள்ளிக்கொண்டே போதல்.
6. புத்திர பாக்கியத்தடை – புத்திர சோகம் உண்டாதல்.
7. உத்தியோகத்தடை உண்டாதல்.இது போன்ற தடைகளிலிருந்து விடுபட பிரம்மஹத்தி தோஷம் நீங்கி, நிவாரணம் பெற திருவிடைமருதூர் சென்று (தஞ்சை மாவட்டம்) உரிய பரிகாரம் செய்து கொள்வது உத்தமம். இங்கு தினமும் காலை 8 மணி ,9 மணி ,10 மணிக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவாரணபரிகாரம் செய்கிறார்கள் .....ஆலயத்தை தொடர்பு கொள்ள :9443484655..........மதுரையை ஆண்ட ஸ்ரீவரகுணபாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய ஸ்தலம் திருவிடைமருதூர். பாண்டிய மன்னன் வேட்டைக்குச் சென்ற சமயம் மாலை வேளையில் அவரையும் அறியாமல் வயோதிக அந்தணர் ஒருவர் குதிரைக்காலில் அடிபட்டு இறந்து போனார். அந்தணரைக் கொன்ற பாவம் பிரம்மஹத்தி தோஷம். மன்னனை பிடித்துக் கொண்டமையால் மன்னர் வெப்ப நோய் கண்டு பெரிதும் உடல் வருந்தினார். அவதிப்பட்டார். ராஜவைத்தியம் செய்தும் நோய் குணமாகவில்லை. அவருடைய மனைவி ராணியாரும் – பெரிதும் மனம் நொந்து –மதுரை மீனாட்சி அம்மனிடம் வேண்டிக் கொண்டார். மீனாட்சி அம்மனும் ராணியார் கனவில் தோன்றி சோழமன்னன் – பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருவான். அவனை உன் கணவரும் துரத்திச் செல்ல திருவிடைமருதூர் மகாலிங்க சாமி கோவிலில் நுழைய மன்னரை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று கூறினார். அதுபோல் பாண்டிய மன்னரும் சோழ அரசனை போரில் துரத்திச் சென்று மகாலிங்க சாமி கோவிலில் நுழைய மன்னரை பிடித்திருந்த பிரம்மஹத்தி கோவிலின் வாசலில் நின்று விட்டது.கோவிலுக்குள் நுழைந்த வரகுண பாண்டியனை, பின்தொடர முடியாமல் பிரம்மஹத்தி தோஷமும், அந்தணனின் ஆவியும், கோவில் உள்ளே நுழைய தைரியமின்றி வாசலிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் பிடித்துக் கொள்ளலாம் என்று கிழக்கு வாசலின் வெளியே காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ, வரகுண பாண்டியனை மேற்கு வாசல் வழியாக வெளியேறி செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டார்.
அதன்படி அரசனும் மேற்கு வாசல் வழியாக வெளியேறி பிரம்மஹத்தி தோஷம் நீங்கியவனாக பாண்டியநாடு திரும்பினான். இன்றளவும் திருவிடைமருதூர் மகாலிங்கச்வாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், பிரதான கிழக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து, மேற்கிலுள்ள அம்மன் சன்னதி வழியாக வெளியே செல்லும் முறையை கடைபிடித்து வருகின்றனர். இன்றும் அக்கோயிலில் சிலையாக வீற்றிருக்கும் பிரம்மஹத்தியை நாம் கிழக்கு வாசலில் காணலாம். மன்னர் சென்ற வழியில் இந்தப்புரம் திரும்ப வருவார். அவரை மீண்டும் பிடித்துக் கொள்ளலாம் என்று பிரம்மஹத்தி அமர்ந்துள்ளது. பிரம்மஹத்தி தோஷத்திற்கான காரணம் ..பரிகாரங்கள் :
ஜாதகர் சென்ற பிறவியில் நீர் வளம் நிரம்பிய சோழநாடு அல்லது கேரளாவில் பிறந்திருக்கலாம். உயர்குலத்தில் பிறந்து கீழ் ஜாதிப் பெண்ணை மணந்து கொள்கிறேன் என வாக்கு கொடுத்து, அவள் கற்பை சூறையாடிய பின்பு, சந்தர்ப்பம் சூழ்நிலையில் திருமணம் செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு, அவள் தற்கொலை செய்து கொள்ளும்படியான சூழ்நிலையை உண்டாக்கிவிடுதல் , பல பேரின் உழைப்பை பெற்றுக் கொண்டு சரியான ஊதியம் கொடுக்காமல் தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அனைவரையும் விரட்டி, அடித்துவிடுவது , பலரின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டு மனசாட்சியேயில்லாமல், பலரையும் மனம் நோக அடிப்பது , வெள்ளிக்கிழமையில் நல்ல பாம்பைக் கொன்றுவிட்ட தோஷத்திற்கு ஆளாவது. இதுபோன்ற காரணங்களினால் இப்பிறவியில் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து இருக்கும். இதிலிருந்து நிவாரம் பெற விடுபட தெய்வ நம்பிக்கையும், தோஷ நிவாரணம் பெற வேண்டிய பாக்கியம் உள்ளவர்கள் மட்டும் திருவிடைமருதூர் சென்று தோஷ நிவாரணம் செய்து கொள்ளலாம்.[இவை மகான்கள் கூறியது ] ...... தோஷ நிவர்த்தி செய்து கொள்பவர்கள்
1. மகாலிங்கசுவாமி
2. ப்ரகத்சுந்தர குஜாம்பாள்
3. விநாயகர்
4. முருகர்
5. மூகாம்பிகை
6. அன்பில் பிரியாள்
என அறுவர்க்கும் மாலை சாத்தி அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்ள பலன் கிட்டும். ஆறு பேருக்கு அன்னதானம் செய்து ஜாதகர் அன்று மதியம் உப்பு இல்லாமல் உணவு அருந்தி பால், பழம் சாப்பிட்டு பூர்த்தி செய்யவும் . இப்படிச் செய்ய தோஷம் நிவர்த்தி ஆகி நன்மைகள் தானே வந்து சேரும். எல்லா நலமும் வளமும் கிட்டும்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...