ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

 ஆண் பெண் இருவருக்கும்

லக்ன ரீதியாக ஒரே பாவம் திதி சூனியம் ஆக வந்தால் அதை தவிர்க்க வேண்டும்
உதாரணமாக
ஆனால் ஜாதகப்படி லக்ன ரீதியாக
3 ஆம் பாவம் திதி சூனியம்
பெண் ஜாதகப்படி லக்ன ரீதியாக 3 ஆம் பாவம் திதி சூனியம்
இது போல்
இரண்டு திதி சூனியம் வீட்டில் ஒன்று இருவருக்கும் லக்ன ரீதியாக ஒரே பாவம் ஆக இருந்தாலும் திருமணம் பொருத்தம் பரிந்துரை செய்ய வேண்டாம்
ஒரே திதியில் பிறந்த நபர்களுக்கு திருமணம் செய்ய வேண்டாம்
அல்லது
இருவருக்கும் லகன ரீதியாக ஒரே பாவம் திதி சூனியம் ஆக வந்தாலும் திருமணம் பொருத்தம் இணைப்பு வேண்டாம்
இதில் இருவருக்கும்
1 ஆம் பாவம் திதி சூனியம் ஆனால்
உடல் பாதிப்பு உண்டு வளர்ச்சி இல்லை
இருவருக்கும் 2 ஆம் பாவம் திதி சூனியம் ஆனால் குடும்ப ஒற்றுமை இல்லை வருமானம் பாதிப்பு வாக்கு வாதம் எப்போதும் இருக்கும்
3 ஆம் பாவம் திதி சூனியம் அடைந்தால்
இருவருக்கும் பயம் அதிகம் இருக்கும் எதையும் எதிர்கொள்ள முடியாது
4 ஆம் பாவம் திதி சூனியம் அடைந்தால்
இருவருக்கும் சுக வாழ்க்கை பாதிப்பு படிப்பு சார்ந்த வழியில் மற்றும் சொத்து தாய் வழியில் பாதிப்பு உண்டு
5 ஆம் பாவம் திதி சூனியம் அடைந்தால்
குழந்தை சார்ந்த வழியில் பிரச்சனை காதல் சார்ந்த வழியில் திருமணம் வாழ்க்கை பாதிப்பு
இது போல் 12 பாவ பலன்
பாவ காரக ரீதியாக பாதிப்பு இருக்கும்
என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை
8124812470
Veeravijayan Veeravijayan, Vijeyhari Vidyambal மற்றும் 32 பேர்
5 கருத்துகள்
7 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

ஐந்தில் செவ்வாய் குலதெய்வம்

 1. முருகன் தேவசேனாபதி சத்ரு சம்ஹார மூர்த்தி சுப்பிரமணியர் .

2. பாண்டி .
3 . வேட்டைக்கார தெய்வம் வீரம் உள்ள தெய்வம் பெயரிலேயே வீரம் என்று இருக்கும் .
4. காவல் தெய்வம் .
5. சிவப்பு ஆடை கட்டும் தெய்வம் .
6. காளி துர்க்கை சண்டி காலபைரவர் வீரபத்திரர் அம்சமுள்ள தெய்வங்கள் .
7. கைகளில் ஆயுதம் ஏந்திய தெய்வங்கள் . பல கரங்களுடைய தெய்வங்கள் .
8. வதம் செய்த கோலத்தில் உள்ள தெய்வங்கள் .
9. காடு அல்லது வனத்தில் உள்ள தெய்வங்கள் ( மேஷம் செவ்வாய் வீடு மலை காடு குறிக்கும் )
10. கொடிய விலங்குகளை விலங்குகளை வாகனமாக கொண்டுள்ள தெய்வம் .
11. . வன தேவதைகள் .
12. ஆயுதம் மட்டுமே வைத்து வணங்கும் தெய்வங்கள் .
13. கோட்டை கொத்தளத்தில் இருக்கும் தெய்வங்கள் .
14. உக்ரரூபம் உள்ள தெய்வங்கள் .
15. சம்ஹார தெய்வங்கள் .
16. படை பரிவாரங்கள் உள்ள தெய்வங்கள் .
.17. கைகளில் ஆயுதம் ஏந்தி போர் கோலத்தில் உள்ள தெய்வங்கள் .
18. அக்னியில் இறங்கிய தெய்வங்கள் அல்லது அக்கினி சொரூபமான தெய்வங்கள் .
19. பலி பூஜை உண்டு .
20. முறுக்கு மீசை அகோர பல் உள்ள தெய்வங்கள்பல் உள்ள தெய்வங்கள் .
21. உடுக்கை பம்பை உறுமி வாத்தியங்கள் வாசிக்கும் கோவில்கள் .
22. செவ்வாய் கிழமை வழிபாடு திருவிழாக்கள் நடக்கும் .
23. நிலை கோயிலாக இருக்கும் .
24. ரத்தம் சிந்தி அழைத்து வழிபாடு செய்வார்கள் .( செவ்வாய் – மார்பு , ஆயுதம் , ரத்தம் )
25. கேது தொடர்பு கொண்டாள் நரசிம்மர் பிரத்யங்கிரா வராகி ஆஞ்சநேயர் வழிபாடு இருக்கும் ( மனித முகம் இல்லாத தெய்வங்கள் ) .
செவ்வாய் புதன் இணைவு பார்த்தசாரதி பெருமாள் ( மீசை வைத்த விஷ்ணு ) அல்லது நரசிம்மர் வழிபாடு சிறப்பு தரும் .
புதன் சனி இணைவு சரபேஸ்வரர் வழிபாடு சிறப்பு தரும் . ஐந்தில் செவ்வாய் கேது இணைவு வீரமாத்தி அம்மன் .

ஐந்தில் புதன் குலதெய்வம்

 1 இரண்டு குலதெய்வம் ( புதன் இரட்டை தன்மை )

2 இரண்டு இடங்களில் குலதெய்வம் ( குலதெய்வத்தின் குழப்பம் . புதன் – குழப்பம் )
3 . விஷ்ணு அம்சம் உள்ள தெய்வங்கள்
4. சப்த / சப்த மாதாக்கள் வழிபாடு .
5 . பச்சையம்மன் பச்சாயி பச்சைவாழி அம்மன் அம்மன் போன்ற தெய்வங்கள்
6 . வடக்கு நோக்கிய தெய்வங்கள் ( புதன் வடதிசை )
7. எல்லையம்மன் .
8. பாதாளத்தில் உள்ள தெய்வங்கள் (புதன்- பள்ளத்தாக்கு)
9. கரங்கள் மட்டும் வைத்து வழிபாடு (புதன் -கை)
10. பூங்கா / காய்கறி மார்க்கெட் / பள்ளிக்கூடம் அருகில் அருகில் உள்ள தெய்வங்கள்
11 . பாஞ்சாலி அம்மன் ( திரௌபதி அம்மன் ) ( 5- பாஞ்ச் / பஞ்சம்)
12. சைவ படைகள் உண்டு
13. பயறு வகைகள் படையில் உண்டு
14. இரண்டு படங்கள் இரண்டு பூஜை இரண்டு அலங்காரம்
15. புடவை வைத்து வணங்குதல்
16. இரண்டு கோஷ்டிகள் சாமி கும்பிடுதல் (புதன் - 2 )
17. கோவிலில் கிணறு இருக்கும் . ( புதன் - பள்ளம் )
18. இரண்டாம் அதிபதி ஐந்தில் இருந்தால் கண்ணகி அல்லது அவர் அம்சமுள்ள தெய்வங்கள் .(2- கண்)

5 ல் சுக்கிரன் குலதெய்வங்கள்

 1 . அலங்காரம் உள்ள பெண் தெய்வங்கள்

2. இளமையான பெண் தெய்வம்
3. லட்சுமி கடாட்சம் / அம்சம் உள்ள தெய்வங்கள்
4. பசு வழிபாடு
5. கோ பூஜை செய்யும் கோயில்கள்
6 . சலங்கை கட்டும் கோயில்கள்
7. பட்டம்மாள் பட்டத்தரசி பட்டாளம்மன் போன்ற தெய்வங்கள் .- பட்டு / அரசி என்று பெயர் வரும் தெய்வங்கள் .
8. புடவை வைத்து வழிபடுதல்
9. பட்டாடை வைத்து வழிபடுதல்
10. காமதேனு வழிபாடு
11. சைவபடையல்
12. இனிப்பு படையல் பலகார படையல்

ஐந்தில் குரு குலதெய்வம்

 1 குழந்தை வடிவில் உள்ள தெய்வம் .

2. குருவாயூர்
3. குருவம்மா என்ற தெய்வம் .
4. குழந்தை என்று பெயர் உள்ள தெய்வம் .
5 பாலமுருகன் /பாலகிருஷ்ணன் / குழந்தைவேலப்பர் / உன்னிகிருஷ்ணன் / பாலசுப்பிரமணி போன்ற தெய்வங்கள் .
6. ஆச்சாரம் உள்ள தெய்வங்கள் .
7. மரத்தடியில் சுவாமி கும்பிடுதல்
8. சக்கரை பொங்கல் வைத்து வழிபாடு செய்தல்
9. ஆடைகள் வைத்து வழிபாடு செய்தல்
10. பெட்டி வைத்து கும்பிடுதல்
11. ஆபரணங்கள் வைத்து வழிபடுதல் .
12. மரங்கள் நிறைந்த இடம் .
13. கதவை மட்டும் வணங்குதல் / கதவுக்கு மட்டும் பூஜை (குரு - கதவு)
14. யானை உள்ள கோவில்கள்
15. நெய் தீபம் நெய் பானை பதார்த்தங்கள் நெய்யபிஷேகம் நடக்கும் கோவில்கள் .
16. இனிப்பு படையல் வைத்து கும்பிடும் கோவில் .
17. தனி பூசாரி உள்ள கோவில் .
18. ஐந்தில் குரு சுந்தரகாண்டம் பாராயணம் செய்ய நன்று (குரு – என்றால் அழகு , சுந்தரம் எனப்பொருள் )

ஐந்தில் சூரியன் குலதெய்வம்

 1. தீப ரூபமான வழிபாடு – சூரியன் – ஒளி / தீப ஒளி .( வள்ளலார் அய்யா வைகுண்டர் )

2. சிவ வழிபாடு
3. பாறைகள் நிறைந்த பகுதி ( மலைப்பகுதி ) - கால புருஷனுக்கு 1 ம் இடம் மேஷம் மலை .
4. மேடான பகுதி அல்லது கரடு நிறைந்த பகுதி .
5. தலை மட்டும் உள்ள தெய்வம் – மேஷம் தலை பகுதி என்பதால் .
6. ஆட்டுக்குடல் நிறைந்த பகுதி – மேஷம் – ஆடு .
7. கேது தொடர்பிருந்தால் பனை ஓலை வைத்திருப்பார்கள் .
8. மதிய நேர பூஜை .
9. சைவபடையல் (மேஷத்தில் சூரியன் உச்சம் அவரின் அதிதெய்வம் சிவம் அவர் சைவம் ) .
10. பெரிய மரங்கள் உண்டு .
11. மரத்தில் சாமி கும்பிடுதல் .
12. ஆபரணம் வைத்து வழிபடுதல் .
13. குதிரை உள்ள இடம் அல்லது குதிரை மீது தெய்வம் ( சூரியன் ஏழு குதிரை தேரில் வருவதால் ) .
14. இயற்கை வழிபாடு ( சூரியன் – இயற்கை ) .
15. முள் வேலி கட்டி இருப்பார்கள் .
16. பூணூல் அணிந்த குடும்பம் .
17. சமயத் தலைவர்கள் ஆன்மீக தலைவர்களை வழிபடுதல் .

ஐந்தில் சந்திரன் குலதெய்வம்

 1. பெண் தெய்வங்கள்

2. அலங்காரம் குறைந்த தெய்வங்கள் .
3 அலங்காரங்கள் மாறிக்கொண்டே இருக்கும் . ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் இருக்கும் . ( சந்திரன் வளர்பிறை தேய்பிறை மாறுவதுபோல் )
4. நீர்நிலை அருகில் உள்ள தெய்வம் . (சந்திரன் நீர் கிரகம் )
5. வயல்வெளியில் உள்ள தெய்வம் . ( சந்திரன் – வயல் )
6. மாரியம்மன் ( மாரி - மழை – நீர் )
7. சக்தி அம்சம் உள்ள தெய்வம் ( பார்வதி ) ( சந்திரன் பெண் கிரகம் சக்தியின் வடிவம் ) .
8. ஆற்றில் அடித்து வந்த தெய்வம் .

5 ல் சனி குலதெய்வம்

 1. சாமி என பெயர் முடியும் தெய்வங்கள் .( பெருமாள் சாமி கருப்பசாமி முனியப்ப சாமி அய்யனார் சாமி )

2. காவல் தெய்வங்கள்
3. கூரை இல்லாத தெய்வங்கள்
4. கல்லில் ஒழுங்காக செதுக்கப்படாத வடிவம் இல்லாத தெய்வ வடிவம் .
5. மண்ணால் கட்டப்பட்ட தெய்வம் .
6. பராமரிப்பு குறைவாக உள்ள தெய்வம் .
7. ஊனமான தெய்வம் .
8. சேதாரம் அடைந்துள்ள தெய்வ திருமேனிகள் .
9. கட்டமுடியாத கோவிலில் உள்ள தெய்வம் .
10. கோவில் வரை வாகனத்தில் செல்ல முடியாமல் சிறிது தூரம் நடந்து சென்று கும்பிடும் கோயில்கள் .

5 ல் ராகு / குலதெய்வங்கள்

 1. உருவமில்லாத தெய்வங்கள்

2. புற்று உள்ள தெய்வங்கள்
3. சாலை / ஆறு / பாலம் / ரயில் பாதை / கால்வாய் அருகில் அமைந்திருக்கும் தெய்வங்கள் .
4. நாகம் வைத்த அம்மன்
5. அகோர தெய்வங்கள்
6. விலங்குகள் உள்ள தெய்வங்கள்
7. அரிவாள் மீது உள்ள தெய்வம் . அரிவாள் மீது ஏறி நின்று குறி சொல்லுதல் .
8. முள் மீது உள்ள தெய்வம் . ஆணி படுக்கை .
9. சட்டை உள்ள தெய்வம்
10. மது வகைகள் வைத்து வழிபடும் தெய்வம்
11. சாட்டை அடித்தல்
12. குதிரை வாகனங்கள் உள்ள தெய்வம்
13. சிதைந்துள்ள தெய்வத் திருமேனிகள் இருக்கும்
14. துர்க்கை காளியம்மன் வழிபாடு
15. ரதி மன்மதன் வழிபாடு ( ராகு - போக காரகன் )

ஐந்தில் கேது குலதெய்வம்

 1. மனித முகம் இல்லாத தெய்வங்கள்

2. உருவமில்லாத தெய்வங்கள்
3. கல் வைத்து வணங்குதல்
4. மரத்தடி கோவில்கள் / குகைக் கோயில்கள்
5. வால் உள்ள தெய்வங்கள்
6. முள் / முள்வேலி / கம்பி வேலி / வலைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள தெய்வங்கள்
7. இலந்தை முள் வேலி போட்ட தெய்வங்கள் _ காய்ந்து போனது எல்லாம் கேது . கேது நெருப்பு ராசியில் இருந்தால் காய்ந்துபோனது எரிப்பார்கள் .
8. ஜக்கம்மா கோவில்
9. ஜீவசமாதிகள்
10. சுற்றி வலை அடித்த கோவில் - நரஹரி தீர்த்தர் கோவில்
11. ஊனமான தெய்வங்கள்
12. மயானத்தில் உள்ள தெய்வங்கள்
13. குறுகிய நடைபாதை உள்ள இடத்தில் கோவில் இருக்கும்
14. கோவில் அருகே பனைமரம் இருக்கும் அல்லது பனைமரத்தை வணங்குவார்கள் .
15. சுமைதாங்கி கல் வழிபாடு
16. ஞானம் என்ற பெயருடைய தெய்வங்கள் / ஞானத்தை வழங்கும் தெய்வங்கள் .
17. மகான்கள் ஞானியர்கள் வழிபாடு .

மனித பிறப்பின் மூலம் பல சொந்தங்கள்

 மனித பிறப்பின் மூலம் பல சொந்தங்கள் உள்ளது

2 ஆம் பாவம் மூலம் தற்போது இருக்கும் குடும்ப உறவினர்கள் இது கூட்டு குடும்பம் சொந்தம் மட்டுமே
3 ஆம் பாவம் மூலம் மாமனார் உடன்பிறந்தவர்கள் சொந்தம் இவர்கள் இருவர் வழி உறவினர்கள் பல வழி சொந்தம்
4 ஆம் பாவம் தாய் வழி மற்றும் பள்ளி பருவத்தில் வரும் நண்பர்கள் சொந்தம்
5 ஆம் பாவம் குழந்தைகள் மூலம் வரும் சொந்தம் மற்றும் இளம் வயதில் காதல் சார்ந்த நபர்கள் மூலம் வரும் பாச சொந்தம் ஒரே குல தெய்வம் ஆக வரும் போது முகம் தெரியாத நபரிடம் சொந்தம்
6 ஆம் பாவம் உத்தியோகம் மூலம் கிடைக்கும் நண்பர்கள் மூலம் சொந்தம்
கடன் வாங்கும் போது கடன் கொடுக்கும் போது இருக்கும் சொந்தம்
7 ஆம் பாவம் திருமண உறவுகள் மூலம் வரும் பல வழி சொந்தம் நண்பர்கள் மூலம் சொந்தம் வாடிக்கையாளர்கள் மூலம் வரும் பழக்கம் மூலம் வரும் சொந்தம்
இது போல் 12 பாவத்தில் சொந்தம் உள்ளது இது தான் எதிர்கால உறவுகளை தரும்
எப்போதும்
ஆனால் சொந்தம் விட்டு போனாலும்
பாசம் எப்போதும் விட்டு போகாது
இது ஜாதக ரீதியாக 4 ஆம் பாவ அதிபதி பலம் பெற்ற நபர்களுக்கு மட்டும்
மனதில் பாசம் இருக்கும் இவர்களுக்கு எப்போதும்
ஆனால் இவர்கள் அவர்களை பற்றி எப்போதும் நினைத்து கொண்டு இருப்பார்கள்
எப்போதும்
நலம் வாழ என்னாலும் என்
வாழ்த்துக்கள்
என்று மன ரீதியாக மற்றும் மறைமுகமாக வாழ்த்தும் நபர் இவர்கள் தான்
எனவே நான்காம் பாவம் பலம் பெற்ற நபர்கள் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் உறவுகள் முலம் அதை அந்த நேரத்தில் அவரச பட்டு பேசி விட்டு உறவை தடுத்து விடுவார்கள்
ஆனால் இவர்கள் மனதில் அவர்கள் எப்போதும் நலமுடன் வாழ வேண்டும் என்று பாசம் இருக்கும்
இது தான் 4 ஆம் பாவம் மற்றும் அதிபதி பலம் ஆக உள்ள நபர்கள் நிலை
என்றும் அன்புடன்
உங்கள்
ஆசிரியர்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை
8124812470

திசா புத்தி பலன்கள்

 அசுவினி நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்து திசை நடத்தும் போது உங்கள் ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்று இருந்தால் திசை முழுவதும் யோகம் தரும்

ஜாதகருக்கு பூர்வீகம் சார்ந்த சில நல்ல தகவல்கள் கிடைக்கும்
குழந்தை பாக்கியம் கிடைக்கும்
பூர்வீகத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும்
திருமணம் வாய்ப்பு கூடி வரும்
காதல் கை கூடும்
அரசியல் ஆர்வம் வரும்
தாத்தா மாமன் உறவினர்கள் பலம் அடையும்
மனைவி வழியில் பெரும் பணம் கிடைக்கும்
தாய் உறவினர்கள் மூலம் தனம் உண்டாகும்
தந்தையின் பூர்வீகம் சொத்து கிடைக்கும்
இளைய உடன்பிறப்பு வீர தீர செயலில் வெற்றி கிடைக்கும்
குழந்தைகள் ஆரோக்கியமான முறையில் இருப்பார்கள்
கூட்டு தொழில் செய்யும் ஆர்வம் வரும்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
மறைமுகமாக வருமானம் கிடைக்கும்
உத்தியோகம் வெளி ஊரில் கிடைக்கும்
படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி சிறப்பாக இருக்கும்
வாடகை வருமானம் அதிகம் கிடைக்கும்
இரட்டை குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு
நண்பர்களுக்கு காதல் திருமணம் செய்து வைக்கும் வாய்ப்பு இருக்கும்
பரிசு பொருட்கள் அதிகம் கிடைக்கும்
இரவு உத்தியோகம் சிறப்பாக அமையும்
குல தெய்வ அனுகூலம் உண்டாகும்
குல தெய்வ கோவில் அன்னதானம் செய்வீர்கள்
தந்தை மற்றும் மாமனார் மூலம் ஆதாயம் கிடைக்கும்
ஊரில் சமுதாய தலைவர் பதவி தேடி வரும்
மாடி வீடு கட்டும் வாய்ப்பு அமையும்
கெளரவம் தேடி வரும்
அரசியல் நபர்கள் உடன் நட்பு கிடைக்கும்
ஆண் வரிசு கிடைக்கும்
கோவில் கும்பாபிஷேகம் அதில் மரியாதை கிடைக்கும்
கூட்டு குடும்ப வாழ்க்கை ஒற்றுமை இருக்கும்
மலை பகுதியில் சுற்றுலா செல்வீர்கள்
தங்க நகைகள் சேர்கை உண்டாகும்
சுதந்திர தினம் போன்ற நாட்டு பற்று போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்
புதிய கண்ணாடி வாங்கி அணிந்து கொள்வீர்கள்
ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள்
பல்கலை கழகத்தில் படிக்கும் ஆர்வம் வரும்
இவை எல்லாம் பாசிடிவ் பலன்கள்
சூரியன் பலம் இழந்து இருந்தால்
இந்த பலன்களுக்கு எதிரான பலன்கள் நடக்கும்
பரிகாரம்
நாக தெய்வ வழிபாடு
விநாயகர் வழிபாடு
திருவண்ணாமலை சிவன் வழிபாடு
சிறந்த பலனை தரும்
என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி சென்னை 8124812470

ஜாதகத்தில் சூரியன்

 ஒரு ஜாதகத்தில் சூரியன் ரோகிணி ஹஸ்தம் திருவோணம் சாரம் பெற்று சூரியன் ஷட்பலத்தில் பலம் இல்லை என்றால் மலை உச்சியில் உள்ள அருவி தீர்த்தம் இவைகளில் நீராடி வரும் போது சூரியன் பாதிப்பு குறையும்

சிவன் என்றால் மலை
சந்திரன் என்றால் நீர்
பிறை நிலவு சிவனின் சிரசில் தான் உள்ளது
சிவன் தலையில் கங்கை நீர் எப்போதும் உள்ளது
எனவே மலை உச்சியில் இருக்கும் தீர்த்தம் அருவி அனைத்தும் கங்கா நீர் புனித தீர்த்தம் ஆக இருக்கும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்
கண் தலை இருதயம் சார்ந்த உபாதைகள் தீரும்
அரசு சார்ந்த வழியில் இருக்கும் தடைகள் நீங்கும்
புத்திர தோஷம் தீரும்
பூர்வீக தோஷம் தீரும்
குல தெய்வ அனுகூலம் கிடைக்கும்
குழந்தைகள் வளர்ச்சி இருக்கும்
முன்னோர்கள் சாபம் தீரும்
கங்கை நீரை விட மலை உச்சியில் இருக்கும் தீர்த்தம் அருவிக்கு பலம் அதிகம்
கங்கை நீர் கூட மலை உச்சியில் இருந்து வரும் நீர் தான்
இருப்பினும்
கங்கை நீரை விட கைலாம் இருக்கும் மலையில் உள்ள மானேஸ்வரர் ஏரிக்கு பலம் அதிகம்
இது போல் மலை உச்சியில் இருக்கும் அருவி மற்றும் தீர்த்தம் உடலுக்கு புத்துணர்ச்சி தரும் உடல் நோய் தீர்க்கும் சக்தி உள்ளது
என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 8124 8124 70

ஜாதகத்தில் சந்திரன்

 ஒரு ஜாதகத்தில் சந்திரன் ஷட் பலத்தில் பலம் இல்லை என்றால்

வாடிக்கையாளரிடம் எல்லாம் எழுதி கொள்ளுங்கள் அல்லது பேசும் போது வாய்ஸ் ரெக்கார்ட் போட்டு கொள்ளுங்கள் என்று சொல்லுங்கள்
இவர்களுக்கு பலன்கள் சொல்வது நேரம் வேஸ்ட்
இவர்கள் இவர்கள் வீட்டில் உள்ள நபர்கள் பேச்சை கூட கேட்க மாட்டார்கள்
பிறகு ஜோதிடர் நிலை எப்படி இருக்கும்
1000 ஜாதகம் பார்த்தாலும் சந்திரன் பலம் இல்லை என்றால்
அந்த ஜாதகர் எதையும் புரிந்து கொள்ள மாட்டார்கள்
காரணம் ஜோதிட நபர்களுக்கு தெரியும்
ஆனால் ஜோதிடம் பழகும் நபர்கள் அனுபவத்தில் கற்று கொள்வார்கள்
தொழில் முறை ஜோதிடர்கள் ஒன்று மட்டும் சொல்வார்கள்
நீங்கள் அடுத்த வாரம் வரவும் உங்கள் ஜாதகம் பார்க்கலாம் என்று
நேரம் பொன் போன்றது
இவர்களுக்கு கற்பனை உலகம்
காரக ரீதியாக பாவ ரீதியாக பாதிப்பு இருக்கும்
20 வருட அனுபவம் அப்படி
எனவே ரெக்கார்ட் போட்டு கொள்ள வேண்டும் அல்லது
எழுதி கொள்ள வேண்டும்
இரண்டும் இல்லை என்றால்
ஜோதிடர் நிலை தான் வருத்தம்
என்றும் அன்புடன்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை 19
8124812470
Bloodsiva Kumar, Balamurugan Balu மற்றும் 43 பேர்
3 கருத்துகள்
2 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...