ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

சுக்கிரன் பற்றிய வகுப்பு

 சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் அதுவும் ஷட்பலத்தில் பலம் இல்லை என்றால்

என்ன பாதிப்பு இருக்கும் இதை எப்படி சரி செய்ய முடியும் என்று இன்று கற்று கொள்ளுங்கள்
முதலில் ஆண் ஜாதகப்படி எப்படி பலன் சொல்வது என்று பார்ப்போம்
1.அழகு சார்ந்த வழியில் தாழ்வு மனப்பான்மை இருக்கும்
2.புதிய ஆடை அணியும் போது அது எதிர்பாராத விதத்தில் அழுக்கு அல்லது உடையில் பாதிப்பு வரும்
3.கண் கரு விழிகள் பாதிப்பு வரும் இதை புறை என்று சொல்வார்கள்
4 இளமையில் காம உணர்வு அதிகம் இருக்கும்
5.முதுமையில் இது இல்லாமல் போகும்
6.திருமணம் வயதில் திருமணம் நடக்காமல் தடை செய்யும்
7.சரியான வரனை காட்டாமல் இருக்கும்
8 வந்த திருமண வரனை நிராகரிக்க செய்ய வைக்கும்
9.மன மகளின் வீட்டில் எதிர்பார்பு அதிகம் இருக்கும்
உதாரணமாக படிப்பு வேலை வரதட்சணை அழகு சொத்து இது போல் ஆசை அதிகம் இருக்கும்
எப்போதும் இல்லாத ஒன்றை தான் மனித மனம் தேடும் பலவீனம் தான் அதிக ஆசையை தரும் கடைசியில் பெண் கிடைத்தால் போதும் என்று வந்து விடுவார்கள்
பெண்கள் சார்ந்த வழியில் பாதிப்பு தொல்லை இருக்கும்
உடலில் மறைமுகமாக உள்ள இடத்தில் சில பாதிப்பு வரும்
தினமும் வரும் வருமானம் தடை இருக்கும்
சுக்கிரன் பலம் அடைய
அலங்காரம் உள்ள பெண் தெய்வ வழிபாடு எப்போதும் தேவை
உணவில் பசு நெய் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்
தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்க இவை பயன்படும்
இதனால் தான் திருமணம் வாழ்க்கை பாதிப்பு வரும் இதை புரிந்து கொள்ள வேண்டும்
பெண்களுக்கு
அழகு சார்ந்த வழியில் எதையும் பயன்படுத்தி முகத்தை கெடுத்து கொள்வீர்கள்
கரு பை சார்ந்த வழியில் நீர் கட்டி பாதிப்பு இருக்கும்
40 வது பிறகு கரு பை எடுக்கும் நிலை வரும்
களத்திரம் வழி உறவுகள் உங்களுக்கு தொல்லை ஆக இருக்கும்
வெள்ளி பொருட்கள் காணாமல் போகும்
அதிகமாக சுற்றுலா ஆர்வம் இருக்கும் ஆனால் போக முடியாது
வீட்டில் ஆடம்பர பொருட்கள் எப்போதும் செலவுகள் வைக்கும்
பட்டு புடவை இருந்தாலும் அதை கட்ட கூட வாய்ப்பு வராது
அழகு சார்ந்த பொருட்கள் உங்களுக்கு மட்டும் அதிகம் செலவுகள் செய்யும் நிலை இருக்கும்
சிறுநீர் தொற்று உபாதைகள் வரும்
சுகர் சார்ந்த உபாதைகள் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்
காதல் சார்ந்த பாடல்கள் அதிகம் பிடிக்கும்
விலங்குகள் மூலம் உங்களுக்கு தொல்லை இருக்கும்
நாய் பூனை சார்ந்த வழியில் உங்களுக்கு மருத்துவ செலவுகள் உண்டு
மற்றும் சுக்கிரன் லக்ன ரீதியாக எந்த பாவ அதிபதி ஆக வருகிறது என்று பாருங்கள் அந்த பாவ ரீதியாக பாதிப்பு இருக்கும்
பரிகாரம்
நெய் அதிகம் உணவில் எடுத்து கொள்ளுங்கள்
அலங்காரம் உள்ள அம்மன் வழிபாடு நல்ல வளர்ச்சி தரும்
என்றும் அன்புடன் உங்கள் ஆசிரியர்
T.V.வெங்கட் ராம்ஜி
சென்னை
செல் 8124 81240 70

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...