வெள்ளி, 6 டிசம்பர், 2019

மாந்தி


1) லக்கினத்தில் மாந்தி இருந்தால் ஜாதகர் உடல்நலக்குறைவு உடையவர்.

2)
இரண்டில் மாந்தி இருந்தால் கண், பல், பேச்சு சார்ந்த பிரச்சனை இருக்கும்.
 
3)
மூன்றில் மாந்தி இருந்தால் இளைய சகோதரருக்கு கண்டம், ஜாதகருக்கு ENT problem உண்டு.

4)
நான்கில் மாந்தி இருந்தால் தாய் வகையில் இளம் வயதில் இறந்தவர்கள் உண்டு, தாயாருக்கு மரணபயம், வீட்டருகில் சுடுகாடு சமாதி இருக்கும், வீட்டில் கொலுசு சத்தம் கேட்கும், தாய் வழியில் சாமி சாமி ஆடுபவர்கள் உண்டு.

5)
ஐந்தில் மாந்தி முதல் குழந்தை கருச்சிதைவு, கல்லூரி அருகில் சுடுகாடு சமாதி இருக்கும், வயிறு பிரச்சனை இருக்கும்.
குரு + மாந்தி இருந்தால் குழந்தை பிறந்தவுடன் குடும்பம் பிரியும்.

6)
ஆறில் மாந்தி இருந்தால் கடனுக்காக மரணமடைந்தல், உத்தியோக பிரச்சனை இருக்கும், எதிரி மரணிப்பார், சாப்பாடு ஒவ்வாமை, காலம் கடந்து மருத்துவம் (மருந்து), சந்திரன் இருந்தால் அன்ன தானம் செய்யக்கூடாது.

7)
ஏழில் மாந்தி மனைவி வழியில் இளம் வயதில் இறந்தவர்களை சொல்லும், திருமணத்தின் போது மரணத்தை காண நேரலாம், திருமணத்தின் போது விபத்து ஏற்படும். திருவெண்காடு கோவில் போகவேண்டும் மந்தீஸ்வரர் தரிசனம் செய்வது இதற்கு பரிகாரம்.

8)
எட்டில் மாந்தி இருந்தால் திடீர் மரணம், இயற்கைக்கு மாறான மரணம், எட்டாம் அதிபதி நீச்சம் வக்கிரம் பெற்றால் மரணம் விமர்சிக்கப்படும்.

9)
ஒன்பதில் மாந்தி தந்தைக்கு கண்டம், தந்தை வழியில் இளம் வயதில் மரணம் அடைந்தவர்களை சொல்லும்

மாந்தியுடன் 5 அல்லது 9 ஆம் அதிபதியுடன் கேது சேர்ந்தால் கல்லறை வழிபாடு இருக்கும்.

10)
பத்தாம் அதிபதி அஸ்தங்கம் ஆனால் தொழில் செய்யும் இடத்தில் மரணம், சனி மாந்தி இருந்தால் தொழில் செய்யும் இடத்தில் மரணம், சுடுகாடு அருகில் தொழில் செய்தால் இந்த பாதிப்பு இருக்காது.

 11)
பதினோராம் இடத்தில் மாந்தி மூத்த சகோதரருக்கு ஆகாது, நெருங்கிய நண்பர் ஒருவர் மரணம் அடைந்திருப்பார்.

12)
பன்னிரெண்டில் மாந்தி இறந்தவர்கள் கனவில் வருவார்கள், சாமி ஆட்டம் வரும், பேய்பிடித்தல்.

செவ்வாய்+மாந்தி அல்லது சுக்கிரன்+மாந்தி வாகன விபத்தில் மரணம் நிகழும், ஆம்புலன்ஸ் சர்வீஸ் தொழில் நல்ல முறையில் இருக்கும். 
செவ்வாய்+சனி+மாந்தி கொலைப்பழி உண்டு. 
எட்டாம் அதிபதி+ராகு+மாந்தி கூட்டு மரணத்தை சொல்லும்.

திதி சூனியம்

1)
வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரண்டும் சேர்த்து 30 திதிகள் உள்ளன.

2)
அம்மாவாசை மற்றும் பௌர்ணமி திதிகளுக்கு திதிசூனியம் இல்லை

3)
ஒவ்வொரு ராசிக்கும் அவர்கள் பிறந்த திதியை பொறுத்து ஒருசில ராசிகள் சூனியமாக அமைகின்றது.
யோகம் தரக்கூடிய கிரகங்கள் ராசிகளில் அமைந்துவிட்டால் அதன் திசை மற்றும் புத்திகளில் முழுமையான யோக பலனை தருவதில்லை. இந்த பலனை மற்றவர்களை அனுபவிக்க செய்கின்றது (உதாரணமாக ஜாதகரின் உழைப்பு அடுத்தவருக்கு பிரயோஜனமாக இருக்கும்).

4)
லக்னப்படி திதி சூனியம் எந்த பாவகத்தில் அமைகின்றதோ அந்த பாவகத்தின் பாதிப்பைத் தருகின்றது.

5)
சிம்மம் மற்றும் தனுசு ஆகிய இரண்டு ராசிகளில் திதி சூனியம் அமைந்தால் திதி சூனியத்தின் பாதிப்பு குறைவாக இருக்கும் (காலபுருஷனுக்கு 5,9 பாவங்களாக வருவதால்).

6)
கஜகேசரி யோகம் உள்ள ஜாதகத்தில் திதி சூனிய பாதிப்பு குறைவு.

7)
தாம்பத்திய குறைபாடு உள்ளவர்களுக்கு அதாவது கணவன் மனைவி வேலை காரணமாக பிரிந்து வாழ்பவர்களுக்கு திதி சூனிய பாதிப்பு குறைவாக இருக்கின்றது. பிரிந்து வாழ்வது தான் இந்த திதிசூன்யத்திற்கு பரிகாரமாக அமைகிறது.

8) 6 8 12
ம் அதிபதிகள் திதிசூன்யத்தில் இருந்தாலும், திதிசூன்ய அதிபதி 6,8,12இல் இருந்தாலும் சூனிய பாதிப்பு அதிகமாகின்றது.

9)
அஷ்டமி மற்றும் நவமி திதியில் பிறந்தவர்களுக்கு புதன் திதிசூனிய அதிபதியாக வருவார். ஐந்தாமிடத்தில் இந்த திதி சூன்யம் அமைந்துவிட்டால் இவர்களுக்கு குழந்தையின்மை அல்லது குழந்தை பேறு கால தாமதம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

10)
திதி சூன்ய அதிபதிகள் திசை புத்தி நேரங்களில் வீடு கட்டினால் கீழ்த்தளம் முடித்து விட்டு பின்பு மேல்தளம் கட்ட வேண்டும். காரணம் மொத்தமாக வேலையை ஆரம்பித்தாள் ஏதாவது ஒரு சிக்கலில் வேலை பாதியில் நிற்கும் நிலை ஏற்படும் ஆகையால் ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு செல்வது புத்திசாலித்தனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...