வெள்ளி, 6 டிசம்பர், 2019

திதி சூனியம்

1) வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரண்டும் சேர்த்து 30 திதிகள் உள்ளன.

2)
அம்மாவாசை மற்றும் பௌர்ணமி திதிகளுக்கு திதிசூனியம் இல்லை

3)
ஒவ்வொரு ராசிக்கும் அவர்கள் பிறந்த திதியை பொறுத்து ஒருசில ராசிகள் சூனியமாக அமைகின்றது.
யோகம் தரக்கூடிய கிரகங்கள் ராசிகளில் அமைந்துவிட்டால் அதன் திசை மற்றும் புத்திகளில் முழுமையான யோக பலனை தருவதில்லை. இந்த பலனை மற்றவர்களை அனுபவிக்க செய்கின்றது (உதாரணமாக ஜாதகரின் உழைப்பு அடுத்தவருக்கு பிரயோஜனமாக இருக்கும்).

4)
லக்னப்படி திதி சூனியம் எந்த பாவகத்தில் அமைகின்றதோ அந்த பாவகத்தின் பாதிப்பைத் தருகின்றது.

5)
சிம்மம் மற்றும் தனுசு ஆகிய இரண்டு ராசிகளில் திதி சூனியம் அமைந்தால் திதி சூனியத்தின் பாதிப்பு குறைவாக இருக்கும் (காலபுருஷனுக்கு 5,9 பாவங்களாக வருவதால்).

6)
கஜகேசரி யோகம் உள்ள ஜாதகத்தில் திதி சூனிய பாதிப்பு குறைவு.

7)
தாம்பத்திய குறைபாடு உள்ளவர்களுக்கு அதாவது கணவன் மனைவி வேலை காரணமாக பிரிந்து வாழ்பவர்களுக்கு திதி சூனிய பாதிப்பு குறைவாக இருக்கின்றது. பிரிந்து வாழ்வது தான் இந்த திதிசூன்யத்திற்கு பரிகாரமாக அமைகிறது.

8) 6 8 12
ம் அதிபதிகள் திதிசூன்யத்தில் இருந்தாலும், திதிசூன்ய அதிபதி 6,8,12இல் இருந்தாலும் சூனிய பாதிப்பு அதிகமாகின்றது.

9)
அஷ்டமி மற்றும் நவமி திதியில் பிறந்தவர்களுக்கு புதன் திதிசூனிய அதிபதியாக வருவார். ஐந்தாமிடத்தில் இந்த திதி சூன்யம் அமைந்துவிட்டால் இவர்களுக்கு குழந்தையின்மை அல்லது குழந்தை பேறு கால தாமதம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

10)
திதி சூன்ய அதிபதிகள் திசை புத்தி நேரங்களில் வீடு கட்டினால் கீழ்த்தளம் முடித்து விட்டு பின்பு மேல்தளம் கட்ட வேண்டும். காரணம் மொத்தமாக வேலையை ஆரம்பித்தாள் ஏதாவது ஒரு சிக்கலில் வேலை பாதியில் நிற்கும் நிலை ஏற்படும் ஆகையால் ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு செல்வது புத்திசாலித்தனம்.


11) திதிசூன்ய பாவங்கள்.

11.1)
லக்கினம் திதிசூனியமாக அமைத்தல் அல்லது திதி சூன்ய அதிபதி லக்னத்தில் இருத்தல் - தலை சார்ந்த வியாதி, தாய் தந்தையரை பிரிந்த வாழ்க்கை, காதல் திருமணம், தாம்பத்திய வாழ்க்கை குறைவு ஏழாம் இடத்தை பார்ப்பதால், திருமணம் ஆன பின்பும் பிரிந்து வாழும் தம்பதிகளை குறிக்கும். இது போன்ற பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

11.2)
இரண்டாம் இடம் திதிசூனியமாக அமைவது அல்லது இரண்டாம் இடத்தில் திதிசூன்ய அதிபதி இருத்தல்- காதல் திருமணம், குடும்பத்தில் பிரிவினை, கண் பல் மற்றும் பேச்சு போன்றவற்றில் பிரச்சனை, பொருளாதார தடை அல்லது பொருளாதாரம் இருந்தும் அதை அனுபவிக்க முடியாத நிலை போன்ற பிரச்சனைகளை தருகின்றது.

11.3)
மூன்றாம் இடம் திதிசூனியம் அல்லது மூன்றாம் இடத்தில் திதிசூன்ய அதிபதி இருந்தாலும் - மூன்றாம் அதிபதி மற்றும் செவ்வாயின் பலம் குறையக்கூடாது சகோதரனுக்கு ஆகாது, தோள்பட்டை, விரல், காது, இடதுகை போன்றவற்றில் வலி இருக்கும். Documents (டாக்குமெண்ட்ஸ்) வரக்கூடிய முக்கிய தகவல்கள் விலாசம் (Address) மாறி அடுத்தவருக்கு போவதற்கான வாய்ப்புகள் உண்டு, கம்யூனிகேஷன் பிரச்சனை உண்டு.

11.4)
நான்காம் இடம் திதிசூனியம் ஆனாலும் நான்காம் இடத்தில் திதிசூனிய அதிபதி இருந்தாலும் - சந்திரன் மற்றும் 4ம் அதிபதியின் பலம் குறையக்கூடாது தாயாருக்கு ஆகாது. வீடு, வண்டி வாகனம், மார்பு, இருதயம், போன்றவற்றில் பாதிப்பைத் தருகின்றது. இவர்கள் கடன் வாங்கி வீடு கட்ட கூடாது. பெண் ஜாதகம் ஆனால் தாயாருக்கு குழந்தைக்கு கொடுக்க பால் இருக்காது அடுத்த பெண்ணின் மார்பில் பால் குடித்து வளர்ப்பவர்களை சொல்லும்.

11.5)
ஐந்தாமிடம் திதிசூனியம் ஆனாலும் ஐந்தாம் இடத்தில் திதிசூனிய அதிபதி இருந்தாலும் - குரு பலம் மற்றும் ஐந்தாம் அதிபதி பலம் குறையக்கூடாது குழந்தை பேரில் பிரச்சினைகள் ஏற்படும். மதமாற்றம், மனநிலை பிரச்சனை, மற்றவர் குழந்தையை வளர்ப்பது, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

11.6)
ஆறாம் இடம் திதிசூனியம் ஆனாலும் திதிசூனிய அதிபதி ஆறில் இருந்தாலும் - ஆறாம் இடத்து அதிபதி மற்றும் செவ்வாயின் பலம் குறையக்கூடாது வேலையில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கடன் பிரச்சனை, அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது, இரணியா பிரச்சனை, ஆசனவாய் அறுவை சிகிச்சை போன்றவைகள் பாதிப்பைத் தரும்.

11.7)
ஏழாம் அதிபதி திதிசூனியம் ஆனாலும் ஏழாம் இடத்தில் திதிசூனிய அதிபதி இருந்தாலும் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள், தாம்பத்திய சுகம் குறைவு, காதல் கலப்பு திருமணம். பரிகாரம் மனைவியை பிரிந்து வாழ்வது வேலைக்காகவோ அல்லது வெளிநாட்டு வேலைக்காகவோ.
சாதாரணமாக ஏழாம் அதிபதி 10ல் இருந்தால் கூட்டுத்தொழில் பலன்தரும் ஆனால் திதிசூன்யம் சம்மந்தம் பெற்றால் இவர்கள் கூட்டுத் தொழில் செய்யக்கூடாது.

11.8)
எட்டாம் இடம் திதிசூனியம் ஆனாலும் எட்டாம் இடத்தில் திதிசூனிய அதிபதி இருந்தாலும் - எட்டாம் அதிபதியும் சனியும் பலம் குறையக்கூடாது ஆயுளை பாதிக்கும், மரணம் இயற்கைக்கு மாறானது, திருமண வாழ்வில் ரகசியம் இருக்கும், இவர்கள் சண்டையை சமாதானம் செய்ய செல்லக்கூடாது சண்டை இவர்கள் பக்கம் திரும்பிவிடும், அரசாங்கத்துக்கு எதிரான மறியல் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது காவல்துறையின் தடி அடி இவர்கள் மேல் விழும்,புதையல், செய்வினை, பில்லி சூனியம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட கூடாது. லாட்டரி சூதாட்டம் போன்றவைகள் நஷ்டத்தை ஏற்படுத்தும், விபத்து மரணத்திற்கு காரணமாக அமைகிறது.

11.9)
ஒன்பதாம் இடம் திதிசூனியம் ஆனாலும் ஒன்பதாம் இடத்தில் திதிசூன்ய அதிபதி இருந்தாலும் சூரியன் பலம் மற்றும் ஒன்பதாம் அதிபதி பலம் குறையக்கூடாது தந்தைக்கு ஆகாது, தந்தையாரால் பிரச்சனை, மதம் சார்ந்த பிரச்சனை, PhD (பிஎச்டி) படிக்க தடை அல்லது PhD (பிஎச்டி) படிப்பு பயன்தராது. பெண்ணிற்கு கர்ப்பப்பையை குறிக்கும் இடம் ஆகையால் கருத்தரிப்பில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

11.10)
பத்தாம் இடம் திதிசூனியம் ஆனாலும் பத்தாம் இடத்தில் திதிசூனிய அதிபதி இருந்தாலும் தொழில் பயம் இருக்கும், VRS (விஆர்எஸ்), தாம்பத்திய சுகம் குறைவு, மாமியார் பகை, சன்னியாசம் போக வாய்ப்புகள் உண்டு, ஜாதகர் கல்நெஞ்சக்காரர்.

11.11)
பதினோராம் இடம் திதிசூனியம் ஆனாலும் பதினோராம் இடத்தில் திதிசூனிய அதிபதி இருந்தாலும் மூத்த சகோதரருக்கு ஆகாது, எண்ணங்கள் தாமதமாகும், இரண்டாம் திருமணம் சிறப்பைத் தராது.

11.12)
பன்னிரெண்டாம் இடம் திதிசூனியம் ஆனாலும் பன்னிரண்டாம் இடத்தில் திதிசூனிய அதிபதி இருந்தாலும் - வெளிநாட்டு வாழ்க்கையில் நிரந்தர குடியுரிமை PR கிடைக்காது, தாம்பத்திய சுகம் குறைவு, வேற்று பெண் தொடர்புகள் இருக்க வாய்ப்புகள் உண்டு, சனி தொடர்பு பெற்றால் உடல் ஊனம் இருக்கும், பலருக்கு திருமணம் இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...