பஞ்சாங்கம் என்பது ஐந்து
அங்கங்களை அதாவது,
வானியல் தொடர்பான
5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல்
தொகுப்பாகும். அவையாவன :
(1) வாரம்
(2) நட்சத்திரம் (3) திதி (4) யோகம் (5) கரணம்
இனி இவைகளைப் பற்றி
விளக்கமாக காண்போம்.
(1) வாரம் : என்பது ஞாயிறு முதல் சனி
வரையான கிழமைகள்
7 ஐக் குறிக்கும்.
(2) நட்சத்திரம்
: என்பது அஸ்வினி
முதல் ரேவதி
வரை உள்ள
27 நட்சத்திரங்கள்.
(3) திதி : என்பது ஒரு
வானியல் கணக்கீடாகும்.
அதாவது, வானில்
சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவாகும்.
(4) யோகம்: வானில் ஒரு
குறித்த இடத்திலிருந்து
சூரியனும், சந்திரனும் செல்லுகிற மொத்த தொலைவாகும்.
(5) கரணம்: என்பது திதியில்
பாதியாகும்.
. பஞ்சாங்கத்தை பயன்படுத்துவது எப்படி?
உதாரணத்திற்கு பஞ்சாங்கத்தில் கீழ்க்கண்டவாறு
கொடுக்கப்பட்டிருந்தால், அதனை எப்படி
புரிந்து கொள்வது
என பார்க்கலாம்.
3 ஏப்ரல் 2011 அன்றைய பஞ்சாங்க எடுத்து தருகிறோம்.
ஆங்கிலம்
தமிழ்
கிழ
திதி (நா,வி)
நட்சத்திரம் (நா,வி)
யோகம் (நா,வி)
கரணம் (நா,வி)
ஏப் 3 பங்
20 ஞா அமா 34. 44 உத்ரட்டாதி 20. 33 பிராம்யம் 8. 32 சதுஷ்பாதம் 1. 40
முதல் நிரலில்
(அதாம்பா first column) வருவது ஆங்கில
தேதி, 2 வது
நிரலில் வருவது
அதற்கு இணையான
தமிழ் தேதி,
3 வது நிரலில்
வருவது அன்றைய
கிழமை (ஞாயிறு),
4 வது நிரலில்
வருவது அன்றைய
திதி அமாவாசை
(அன்றைய சூரிய
உதயத்தில் இருந்து
எவ்வளவு நாழிகை
இருக்கும்), அடுத்து வருவது நட்சத்திரம், யோகம்,
கரணம் போன்றவைகளும்
அன்றைய சூரிய
உதயத்தில் இருந்து
எவ்வளவு நாழிகை
இருக்கும் என்ற
விவரங்களை நமக்கு
மிகவும் எளிமையாகத்
தருகிறது. அன்றைய
தினத்தில் கொடுக்கப்பட்டு
உள்ள நாழிகைக்கு
பிறகு அடுத்தது
தொடங்கும் என்று
பொருள். அதாவது,
நட்சத்திரத்தை எடுத்துக் கொண்டால், உத்திரட்டாதி 34-44 நாழிகைக்கு பிறகு, அடுத்த நட்சத்திரமான
ரேவதி தொடங்கும்
என்று பொருள்.
இப்படியே திதி,
யோகம், கரணம்
போன்றவைகளையும் கண்டு கொள்ள வேண்டும்.
இடத்தை மிச்சப் படுத்துவதற்காக
சுருக்கமாக கொடுத்திருப்பார்கள். அஸ்வினி
என்பதற்கு பதில்
அஸ் என்று
கொடுத்திருப்பார்கள். அமாவாசை என்பதற்கு
பதிலாக அமாஎன்றும்
கொடுத்திருப்பார்கள். இதன் விரிவை
புதியவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, பஞ்சாங்கத்தில் ஏதேனும்
ஒரு பக்கத்தில்
கொடுத்து இருப்பார்கள்.
வாசன் பஞ்சாங்கத்தில்,
79ஆம் பக்கத்தில்
கொடுத்து இருக்கிறார்கள்.
முக்கியக் குறிப்புகள் :
(அ) ஜோதிட ரீதியாக
ஒரு நாளின்
தொடக்கம் என்பது
அன்றைய தினத்தின்
சூரிய உதய
நேரமேயாகும்.
(ஆ) பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள
விவரங்கள் யாவும்
அன்றைய சூரிய
உதய நேரத்தில்
இருக்கும் ஆகாயக்
காட்சியாகும்.
(இ) பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள
கால அளவு
(நாழிகை, வினாடி
அல்லது மணி,
நிமிஷம்) அன்றைய
சூரிய உதயத்திலிருந்து
கணக்கிடப்படுகிறது.
(ஈ) மிக முக்கிய
குறிப்பு என்னவெனில்,
மணி, நிமிஷம்
என்பது நள்ளிரவு
00.00 வில் தொடங்குகிறது. ஆனால், நாழிகைகள் அன்றைய
காலை சூரிய
உதயத்தில்தான் தொடங்குகிறது. சூரிய உதயம் ஆண்டு
முழுமைக்கும், எல்லா நாட்களுக்கும் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டு
இருக்கும்.
பெரும்பாலான பஞ்சாங்கங்கள் மணி,
நிமிஷ அளவுகளிலேயே,
இப்பொழுது கிடைக்கிறது.
இருப்பினும், தெரிந்து கொள்ளுங்கள் 1நாழிகை = 24 நிமிஷங்கள்
ஆகும்.
திதி
திதி என்றால் என்ன
என்பதை முதலில்
தெரிந்து கொள்ள
வேண்டும்.
திதி என்பது ஆகாயத்தில்
சூரியனும் சந்திரனுக்கும்
இடையே உள்ள
தூரத்தை அல்லது
பாகத்தைக் குறிக்கும்.
சூரியனும், சந்திரனும் அமாவாசை
தினத்தில் சேர்ந்து
இருப்பார்கள்.
பவுர்ணமி அன்று இருவரும்
நேர் எதிராக
180 டிகிரி தூரத்தில் இருப்பார்கள்.
சூரியனிலிருந்து சந்திரன் ஒவ்வொரு
நாளும் எவ்வளவு
தூரம் விலகிச்
சென்றுள்ளார் என்பதைக் குறிப்பதே திதி ஆகும்.
ஒரு திதிக்கு
12 பாகை.
திதி என்ற சொல்லே
பிறகு தேதி
என்று பெயரானது.
அமாவாசை அன்று சேர்ந்து
இருக்கும் சூரியனும்,
சந்திரனும் பிரதமை அன்று பிரிந்து பின்னர்
மீண்டும் சேருவதற்கு
30 நாட்கள் ஆகின்றன. இந்த 30 நாட்களும் 30 திதிகள்
ஆகும். அவை
:
1. பிரதமை, 2. துவிதியை, 3.திருதியை,
4.சதுர்த்தி, 5.பஞ்சமி, 6.சஷ்டி, 7.சப்தமி, 8.அஷ்டமி,
9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி
14. சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அ)
அமாவாசை.
30 திதிகளில் பவுர்ணமிக்கும், அமாவாசைக்கும்
மட்டும் பெயர்
உள்ளது.
மற்ற 28 திதிகளும் ஒன்று,
இரண்டு என்ற
வடமொழிச் சொற்களால்
வழங்கப்படுகின்றன.
முழு நிலவு நாளை
வட மொழியில்
பெளர்ணமி என்கிறார்கள்.
புது நிலவு
நாளை வட
மொழியில் அம்மாவசியா
என்று அழைக்கிறார்கள்.
புது நிலவில் நாள்
துவங்கி முழு
நிலவு வரை
உள்ள 15 நாட்களை
வளர்பிறை நாட்கள்
(திதி) என்றும்
முழு நிலவில்
துவங்கி புது
நிலவு நாள்
வரை உள்ள
15 நாட்களை தேய்பிறை நாட்கள் (திதி) என்றும்
அழைக்கிறார்கள்.
1. புது நிலவு மற்றும்
முழு நிலவிற்கு
அடுத்த நாளை
பிரதமை என்று
சொல்வார்கள். பிரதமை என்றால், PRIME, அதாவது முதன்மை
என்று பொருள்
படும். முதல்
நாள். அவ்வளவு
தான். Prime Minister – பிரதம மந்திரி
என்ற வட
மொழி சொல்லிற்கு
முதன்மை அமைச்சர்
என்று சொல்கிறோம்
அல்லவா!
ஆக, தேய்பிறை பிரதமை
என்றால், முழு
நிலவிற்கு அடுத்த
முதல் நாள்.
வளர்பிறை பிரதமை என்றால்,
புது நிலவிற்கு
அடுத்த முதல்
நாள்.
2. இரண்டாம் நாளை துவிதை
என்று அழைக்கிறார்கள்.
துவி என்ற
சமற்கிருத சொல்லிற்கு
இரண்டு என்று
பொருள்.
3. திரி என்றால் மூன்று
என்று நமக்கு
நன்றாக தெரியும்.
அது தான்
திரிதியை ஆயிற்று.
மூன்றாம் நாள்.
4. சதுரம் என்றால் நான்கு
பக்கம் என்று
பொருள் வருகிறதா.
அது தான்
சதுர்த்தி என்கிறார்கள்.
அதாவது நான்காம்
நாள்.
5. பஞ்சாப் என்றால் ஐந்து
ஆறுகள் ஓடும்
மாநிலம் என
நமக்கு நன்றாக
பள்ளிகளில் சொல்லி கொடுத்திருக்கிறார்கள்.
பாஞ் என்றால்
ஐந்து. பஞ்சமி
என்றால் ஐந்தாம்
நாள்.
6. சஷ்டி என்றால் ஆறாம்
நாள்.
7. சப்த ஸ்வரங்கள் என்று
இசையில் குறிப்பிடுகிறார்களே?
அதாவது ஏழு
ஓசைகள் என்று.
அது தான்
சப்தமி என்றால்
ஏழாம் நாள்.
8. அஷ்ட லட்சுமி, அஷ்ட
கோணல் எல்லாம்
கேள்வி பட்டிருப்பீர்கள்.
அஷ்ட என்றால்
எட்டு. அது
தான் அஷ்டமி
என்றால் எட்டாம்
நாள்.
9. நவ நாள் என்று
இறை வழிபாட்டில்
ஒன்பது நாட்கள்
ஆலயம் வந்து
வழிபடுவதை சொல்வார்கள்.
ஒன்பது கோள்களை,
தமிழர் அல்லாதோர்
நவ கிரகம்
என்று சொல்ல
கேட்டதில்லையா? நவமி என்றால் ஒன்பதாம் நாள்.
10. தச என்றால் பத்து.
கமல் நடித்த
தசாவதாரத்தில் பத்து மாறுபட்ட வேடங்களில் நடித்திருந்தார்
அல்லவா. ஆக
தசமி என்றால்
பத்தாம் நாள்.
11. ஏக் என்றால் ஒன்று.
தஸ் என்றால்
பத்து. ஆக
ஏக்-தஸ்
என்பது ஏகாதசி.
அப்படியென்றால் அது பதினொன்றாம் நாள்.
12. துவி என்றால் சமற்கிருதத்தில்
இரண்டு என
பொருள். ஆகா
துவி+தஸ்
என்பது பன்னிரண்டாம்
நாள் ஆகும்.
13. திரி+தஸ் = திரியோதசி.
நீங்களே சொல்வீர்கள்
அது பதிமூன்றாம்
நாள் என்று.
14. சதுரம் என்றால் நான்கு.
அதனுடம் இந்த
தசி என்கிற
தஸ் சேர்ந்து
சதுர்த்தசி என்பதால் அது பதினான்காம் நாள்.
இவ்வளவு தான் இந்த
திதி என்கிற
நாட்களில் மறைந்துள்ள
பெயர்களுக்கான விளக்கம்.
வளர்பிறை திதிகள் (அமாவாசைக்கு
அடுத்த நாள்
முதல்) 14 ஆகும்.
தேய்பிறை திதிகள் (பவுர்ணமிக்கு
அடுத்த நாள்
முதல்) 14 ஆகும்.
அமாவாசை 1, பவுர்ணமி -1
ஆக மொத்த திதிகள்
30
பதினான்கு திதிகளில் அமாவாசைக்கு அடுத்த நாள்
ஆரம்பித்து பவுர்ணமிக்கு முதல் நாள் முடியும்
திதிகள் சுக்ல
பட்ச திதிகள்
அல்லது வளர்பிறை
திதிகள் எனப்படும்.
பவுர்ணமிக்கு அடுத்த நாள்
ஆரம்பித்து அமாவாசைக்கு முதல் நாள் முடியும்
திதிகள் கிருஷ்ண
பட்ச திதிகள்
அல்லது தேய்பிறை
திதிகள் எனப்படும்.
27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்
1. விஷ்கம்பம் (விஷ் யோகம்):-
இது அசுப
யோகமாகும்.இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதிரியை
வெற்றிகொள்வார்கள். உடல் உறவு
சுகத்தில் அதிகமான
விருப்பம் உடையவர்களாகவும்,
எந்த நேரத்திலும்
உடல் உறவு
கொள்ள துடிப்பவர்களாகவும்
இருப்பார்கள். மற்றவர்களை சட்டென்று அறிந்து கொள்வதுடன்
பின்னால் நடக்கப்போவதை
முன் கூட்டியே
உணரும் தீர்க்க
தரிசனம் இருக்கும்.
மாந்திரீக விஷயங்களில்
நாட்டமிருக்கும். எவருக்கும் கட்டுப்படாத தன்னிச்சையான சுதந்திரப்பிரியர்கள்,
சுற்றங்களை மதிப்பார்கள். எவரிடமும் ஏமாறாதவராக இருப்பார்.
2. ப்ரீதி
(ப்ரீ யோகம்):-
இது சுபமான
யோகமாகும். இதில் பிறப்பவர்கள் இனிய சொல்
பேசுபவராகவும், நல்ல செயல்களையும் செய்பவர்களாகவும் இருப்பார்கள். பெரியோர்கள்,
ஞானிகள், மகான்கள்,
குரு ஆகியோர்களை
மதிப்பவராகவும் அவர்களை வணங்குபவராகவும் இருப்பார்கள். உறுதியான
மனமும், செயல்பாட்டுத்
திறமையும் இருக்கும்.
கடவுள் பக்தி
அதிகமுள்ளவர். அனைவரையும் அரவணைத்துச் செல்பவர் தான்.
காம இச்சை
சற்று அதிகம்
இருக்கும் நற்குணமுடை
ய இவர்கள்
நல்ல வாழ்க்கை
வாழ்வார்கள்.
3. ஆயுஷ்மான் (ஆயு யோகம்):-
இது சுபயோகமாகும்.
பெரியவர்கள், மகான்கள், ஞானி – யோகிகள் “ஆயுஷ்மான்
பவ” என்று இந்த
யோகத்தின் பெயரால் வாழ்த்துவது உண்டு. “ஆயுஷ்மான்
பவ” என்றால் நீடுழி
பல்லாண்டு வாழ்க
என்று பொருளாகும்.
அதற் கேற்ப
இந்த யோகத்தில்
பிறந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் நல்ல வசதியாக
வாழ்வார்கள். அனைவரையும் மதிப்பவர்கள், பக்திமான்களாக தெய்வ
காரியங்கள் செய்வார்கள். கால் நடைச் செல்வங்கள்
உடையவர்க ளாக
இருப்பார்கள்.
4. செளபாக்யம் (செள யோகம்):-
பெயரே செளபாக்யம்
எனும் போது
இவர்களின் சுக
செளக்யம் நன்றாகவே
இருக்கும். இதுவும் சுபமான யோகம் தான்.
இதில் பிறந்தவர்கள்
நல்ல செல்வாக்குடையவர்களாகவும்,
உறுதியான மனம்
உடைய செயல்
திறன் மிக்கவர்களாகவும்,
நல்ல பக்தி
மான் களாகவும்,
ஈவு இரக்கம்
உடைய தர்மவான்களாக
இருப்பார்கள். பெரியோர்களை மதிப்பவர்கள் என்பதுடன், சேவை
செய்யும் மனப்பான்மையும்
இருக்கும். உடல் உறவு சுகத்தில் அதிக
ஈடுபாடு இருக்கும்.
அழகை ரசிப்பவர்கள்.
5. சோபனம்
(சோ யோகம்):-
சுபயோகமான இதன்
பொருள் இனிமையான
சுகம் என்பதாகும்.
திருமணமாகி முதல் இரவுக்கு “சோபனம்” என்று குறிப்பிடுவதுண்டு
இதில் பிறந்தவர்கள்
சுகமான இனிமையான
வாழ்க்கையை விரும்புவதுடன் “சோபனம்” எனும் உடல் உறவுக்
கல்வியில் தனியாத
விருப்பத்துடன், நிபுணர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களின் குறிக்கோளே
மகிழ்ச்சியான வாழ்க்கை தான். கஷ்டத்தை வெறுப்பவர்கள்.
சுற்றம் நட்பை
அதிகம் விரும்பு
வார்கள். செல்வாக்குடையவர்கள்
எனலாம்.
6. அதி கண்டம்
(அதி யோகம்):-
பெயரே கண்டம்
என்று பயமுறுத்துகின்றது.
அதிலும் அதி
கண்டம். எனவே
அடிக்கடி விபத்து
கண்டங்கள் ஏற்படும்.
துன்பம் தொல்லை
கஷ்டம் தாக்கும்.
மற்றவர்களுக்கு தொல்லைகளையும், பிரச்சினைகளையும்,
துன்பங்களையும் ஏற்படுத்துவார்கள். பிறரை துன்பப்படுத்தி அதில்
மனம் மகிழ்ச்சியடைவார்கள்.
யான் பெற்ற
துன்பம் பெறுக
வையகம் என்ற
குறுகிய மனப்பான்மையுடையவர்களாக
இருப்பதுண்டு. பேராசையும், முன் கோபமும், முரட்டுத்
தனமும், அலட்சியமும்,
சோம்பலும் இருக்கும். எதிலும் அழுத்தமான நம்பிக்கை
இல்லாத மேம்போக்
கானவர்களாக இருப்பார்கள்.
7. சுகர்மம்
(சுக யோகம்):-
இது நல்லயோகம்.
இதில் பிறந்தவர்கள்
நல்ல செல்வாக்குடன்,
பேரும் புகழும்
பெற்று நல்ல
வாழ்க்கை வாழக்
கூடியவர்கள். பற்று, பாசம், ஈகை உடையவர்கள்.
நல்ல பக்திமான்களாகவும்,
தெய்வ காரியங்கள்
செய்வதில், தீர்த்த யாத்திரை மேற்கொள்வதில் விருப்பம்
இருக்கும். நட்பு சுற்றங்களை விரும்பி மதிப்பவர்களாக
இருப்பார்கள்.
8. திருதி
(திரு யோகம்):-
இது அசுப
யோகம் தான்
என்றாலும் சிலர்
சுபயோகம் என்று
கூறுகின்றார்கள். இதில் பிறந்தவர்கள் வைராக்யமும், தன்னம்பிக்கை
உடையவர்கள். எடுத்த காரியத்தை விடாப்பிடியாக முடிக்கும்
ஆற்றல் உடையவர்கள்.
கொடுத்தவாக்கை காப்பாற்றக் கூடியவர்கள். நல்ல தைரியமும்
உடையவர்கள். சாஸ்திரங்களில் ஈடுபாடு இருப்பதுண்டு.
9. சூலம்
(சூல யோகம்):-
இது அசுபமான
யோகம். முன்கோபம்,
முரட்டுத்தனம், அலட்சியம், சோம்பல், எடுத்தெரிந்து பேசும்
குணம் இருக்கும்.
எவரையும் மதிக்க
மாட்டார்கள். எவருடனும் ஒத்து போகாமல் முரண்டு
பிடிப்பவர்கள். மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பதுடன் வீண்
வம்பு, சண்டை
பிடிக்கவும் செய்வதுண் டு. உடல் உறவு
சுகத்தில் மிக
அதிக மான
ஆசை இருக்கும்.
கண்டபடி அளவற்ற
காமசுகம் அனுபவித்து
அதனால் அவஸ்தைப்படுவதுண்டு.
10. கண்டம்
(கண் யோகம்):-
இதுவும் அசுபமான
யோகம் தான்.
கண்டம் என்ற
பெயரைப் போல
இதில் பிறந்தவர்கள்
அடிக்கடி கண்டங்களையும்,
துன்பங்களையும், உடல் நோய்த் துன்பங்களையும் சந்தி
க்க வேண்டி
வரும். நல்ல
எண்ண ங்களும்
இருக்காது. செயல்பாடுகளும் சிறப்பாக இருக்காது. மற்றவர்களுக்கு
தீமைகள் செய்வார்கள்.
வஞ்சக எண்ணம்
இருக்கும். எவரையும் மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவார்கள்.
கர்வம் அலட்சியம்
இருக்கும்.
11. விருத்தி
(விரு யோகம்):-
செல்வாக்குடையவர்கள். நல்ல அளவில் வசதியான வாழ்க்கை
அமைப்பவர்கள். சாஸ்திர நாட்ட மும், புலமையும்
உடையவர்களாக இருப்பதுடன், தெய்வ பக்தியும், நற்பண்புகளும்
உள்ளவர்கள். ஈகை தரும குணம் உடையவர்களாகவும்,
தெய்வ காரியங்கள்
திருப்பணிகள் செய்பவர்களாக இருப்பார்கள்.
நல்ல எண்ணம்
செயல்பாடுடையவர்கள் எனலாம். இது
சுபமான யோகமாகும்.
12. துருவம்
(துரு யோகம்):-
இதில் பிறந்தவர்கள்
தனிமையை விரும்பக்
கூடியவர்களாக இருப்பதுடன் எதிலும் ஒட்டாமல் தாமரை
இலைத் தண்ணீர்போல
பட்டும், படாமலும்
இருப்பார்கள். கபடமான எண்ணம் உடையவர்கள். சமயம்
கிடைக்கும் போது பழிதீர்த்துக் கொள்ள தயங்க
மாட்டார்கள். நல்ல எண்ணம் இருக்காது. இது
அசுபமான யோகமாகும்.
சிலர் இதையும்
சுப யோகம்
கூறுவதுண்டு. எனினும் சுப காரியங்களுக்கு விலக்களிக்க
வேண்டிய யோகம்
தான்.
13. வ்யாகதம்
(வ்யா யோகம்):-
இதுவும் அசுபமான
யோகம் தான்.
முன்கோபமும், முரட்டுத் தனமும் உடைய இவர்கள்
சமுகத்தோடு ஒன்றிச் செல்லாமல், தன்னிச்சையாக செயல்படக்
கூடியவர்கள். நல்லெண்ணம் இல்லாத இவர்கள் சூது
வாது, கபடம்
உள்ளவர்களே எனலாம். மன உறுதி இல்லாத
இவர்கள் எண்ணங்
ளையும், செயல்களையும்
அடிக்கடி மாற்றிக்
கொள்வார்கள். பழி பாவத்துக்கு அஞ்சாதவர்கள் கெடுதல்
செய்வார்கள்.
14. ஹர்ஷணம்
(ஹர் யோகம்):-
இது சுபமான
யோகமாகும். செல்வாக்கும் – சொல்வாக்கும்
உடையவர்கள். இனிமையான மென்மையான சுபாவம் கொண்டவர்கள்.
பின்னால் வரு
வதை முன்கூட்டியே
யூகிக்கும் தீர்க்கத் தரிசிகளாக இருப் பதுண்டு.
சுகமான ஆடம்பரமான
வாழ்க்கையை விரும்புவார்கள். உடல் உறவு சுகத்தி
ல் சற்று
கூடுதலான அதிகமான
ஈடு பாடுடை
யவர்கள். தெய்வ
பக்தியும், உதவும் மனப்பான்மையும் உள்ளவர்க ளே
எனலாம்.
15. வஜ்ரம்
(வஜ் யோகம்):-
இது சுபமான
யோகமாகும். இதை சிலர் அசுபமான யோகம்
என்று கூறுகின்றார்கள்.
ஆனால் இது
சுபமான யோகம்
தான். இதில்
பிறந்தவர்களுக்கு அசாத்தியமான மனஉறுதி உடையவர்கள். எதற்கும்
அஞ்சாதவர்கள், கொள்கைப் பிடிப்புள்ளவர்கள்.
எதையும் சாதிப்பவர்கள்.
துணிச்சலும், தைரியமும் உள்ள இவர்களிடம் கனிவும்
இருக்கும். உதவும் மனப்பான்மையும் உண்டு. நல்ல
தெய்வபக்தியும், பிறர் மேல் மதிப்பு மரியாதையும்
உள்ளவர்கள் தான் என்றாலும் தனக்கு தீங்கு
செய்தவர்களை மறக்காமல் பழி தீர்த்து கொள்வார்கள்.
16. சித்தி
(சித் யோகம்):-
சுபயோகமான இதில்
பிறந்தவர்களுக்கு எதுவும் சிந்திக்கும் உபாசனா சக்தியுடையவர்கள்.
தியானம் – யோகம்
போன்றவற்றில் ஈடுபாடு உடையவர்கள். தீர்த்த யாத்திரைகள்
மேற் கொள்வதில்
விருப்பம் அதிகம்.
இமாலய யாத்திரை
போன்ற கடினமான
பயணங்களை மகிழ்வாக
மேற்கொள்வதுண்டு செல்வமும், செல்வாக்கும் உடையவர்களே என்பதுடன்
நல்ல குணம்,
உதவும் மனப்பான்மையுடையவர்கள்
எனலாம்.
17. வியதீபாதம் (விய யோகம்):-
இது அசுபமான
யோகமாகும். இதில் பிறந்தவர்கள் சுயநலவாதி களாக
இருப்பார்கள். துன்பங்களை யும், துயரங்களையும், கஷ்டங்களை
யும் அடிக்கடி
சந்திக்க வேண்டிவரும்.
வாழ்க்கை போ
ராட்டமாக இருக்கும்.
சிந்தித்து, முன்யோசனையுடன் செயல் படாமல் அவசர
முடிவால் பிரச்சி
னைகள் சந்திப்பார்கள்.
பிடிவாத குணம்
உடையவர்கள் என்பதா ல் பல நல்ல
வாய்ப்புகளை இழந்து விடு வார்கள். செயல்பாட்டு
உறுதியும், திற னும் இருப்பதில்லை.
18. வரீயான்
(வரீ யோகம்):-
இது சுபயோகமாகும்.
இதில் பிறந்தவர்கள்
தலைமை தாங்கும்
தகுதியுடையவர்களாக இருப்பார்கள். நல்ல
தைரியமும் காரிய
வெற்றியும் உடையவர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மையுடையவர்.
தரும காரியங்கள்
திருப்பணிகள் செய்வதில் நாட்டமிருக்கும் புகழ் பெறக்கூடிய
வகையில் செயல்பாடுகள்
இருக்கும். நல்லெண்ணம் நல்வாக்கு உடையவர்களாக இருப்பார்கள.
19. பரிகம்
(பரி யோகம்):-
இது சுபமான
யோகமாகும். இதில் பிறந்தவர்கள் தனக்கென தனியான
கொள்கையும், குறிக்கோளும் உடையவர்கள். அநேகமாக அதிலிருந்து
மாறமாட்டார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள். பிறர் வாக்கு தவறினால் கோபம்
கொண்டு அவர்களின்
தொடர்பை வெட்டிக்
கொள்வார்கள். கடும் முயற்சியு டையவர்கள். வெற்றி
காணும் வரை
ஓயமாட்டார்கள். விளையாட்டுகளில், பொழுதுபோக்குகளில்
ஆர்வமுள்ளவர்கள். சுற்றுப் பயணத்தை விரும்புவார்கள்.
20. சிவம்
(சிவ யோகம்):-
இதுவும் சுபமான
யோகம் தான்.
இதில் பிறந்தவர்கள்
சிவனை வழிபடுபவர்களாகவும்,
தியானம், யோகம்,
பக்தி, ஞான
மார்க்கத்தில் அதிக ஈடுபாடுடையவர்களாக இருப்பார்கள். ஞானிகள்,
மகான்கள், யோகிகள்,
பெரியோர்களை சந்திப்பதில் அதிக ஆர்வ முடையவர்கள்.
அவர்களின் ஆசியும்
வழிகாட்டுதலும் இவர்களுக்கு கிடைக்கும் தெய்வ காரிய
ங்கள், திருப்பணிகள்,
தீர்த்த யாத்திரைகள்
போன்றவற்றில் அதிக நாட்டமிருக்கும் நல்ல எண்ணமும்,
நல்ல செயல்பாடும்
உடையவர்கள் எனலாம்.
21. சித்தம்
(சித் யோகம்):-
இது சுபமானயோகமாகும்.
இதில் பிறந்தவர்கள்.
அசாத்தியமான மன உறுதியுடையவர்கள். எதற்குமே அஞ்சமாட்டார்கள்.
உறுதியான சித்தமுடையவர்கள்.
எடுக்கும் முடிவுகளை
சட்டென்று மாற்றிக்
கொள்ளமாட்டார்கள். சாஸ்திர புலமை,
பரிச்சியமுடையவர்கள். நல்ல பக்தியும்
இருக்கும். பிறருக்கு உதவும் மனப் பான்மையும்
இருக்கும். பிறருக்குத் தகுந்த ஆலோசனைகளைச் சொல்ல
கூடியவர்களாக இருப்பார்கள்.
22. சாத்தியம் (சாத் யோகம்):-
இது சுபமான
யோகமாகும். பெயரே சாத்தியம் என்று உள்ளதால்,
இந்த யோகத்தில்
பிறந்தவர்கள் எதையுமே சாத்தியமாக்கி விடுவார்கள். பிற
பெண்களை வசியம்
செய்து கொள்ளும்
சாத்தியம் கூட
இவர்களுக்கு உண்டு. சற்று கூடுதலான காம
இச்சை உடையவர்கள்
என்பதில் காமக்கலையில்
வல்லவராகவும் கூட இருப்பதுண்டு. வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் பேசுவதில்
கெட்டிகாரர்கள். இந்த பேச்சினாலேயே மற்றவர் களைக்
கவர்ந்துவிடுவார்கள். சங்கீத ஞானமும்
இருப்பதுண்டு.
23. சுபம்
(சுப யோகம்):-
பெயரே சுபம்
என்பதால் சுபமான
யோகம் தான்.
இனிமையான மென்மையான
சுபாவம் கொண்டவர்கள்.
மகான்கள், யோகிகள்,
ஞானிகள், பெரியோர்களுக்கு
சேவை செய்வதில்
விருப்பம் உடையவர்கள்.
தெய்வ காரியங்கள்,
திருப்பணிகள், பொது சேவையிலும் நல்ல நாட்டமிருக்கும்.
அனைத்து தரப்பினரிடமும்,
சுமுகமான உறவு
வைத்துக் கொள்பவர்கள்.
அமைதியை நாடும்
சாத்வீகமானவர்கள் எனலாம்.
24. சுப்பிரம் (சுப் யோகம்):-
இது சுபமான
யோகமாகும். நல்ல தெய்வபக்தியும், தெய்வ நம்பிக்கையும்
உடையவர்கள். எது நடந்தாலும் அது கடவுள்
செயல் என்று
கூறுவார்கள். அனைத்துக்குமே இவர்களுக்கு கடவுள் தான்.
தான் எந்த
சாதனை செய்தாலும்
தன்னைப் பற்றி
பெருமையாக தம்பட்டம்
அடித்துக் கொள்ள
மாட்டார்கள். அதையும் கடவுளுக்கே சமர்ப்பணம் செய்வார்கள்.
மன உறுதியும்,
வைராக்கியமும் உடைய சாதனையாளர்கள். பிறருக்கு உதவும்
மனப்பான்மையும் இருக்கும். நல்ல தோற்றம். இனிமையான
சுபாவம் உள்ளவர்கள்.
25. பிராம்மியம் (பிரா யோகம்):-
இதுவும் சுபமான யோகம் தான்.
தியானம், யோகம்
ஆகியவற்றில் நல்ல அளவில் ஈடுபாடுடையவர் கள்.
பிரம்ம ஞானம்
அறியும் முயற்சியுடையவர்கள்.
ஞானிகள், யோகி
கள், மகான்களின்
தொடர் புகளை
ஏற்படுத்திக் கொண்டு அதன்மூலம் நல்ல அளவில்
பயன் பெறுவார்கள்.
விவேகத்துடன் செயல்படுவதுடன் தியாக உணர்வும், தரும
சிந்தனையும் இருக்கும். சிலர் உபாசனை மேற்கொள்வதுமுண்டு.
உடல் ஷேமத்தை
விரும்புபவர்களாக இருப்பதால் ஹோமம், யாகம், சமாராதனை,
அன்னதானம் போன்றவைகளை
செய்யக் கூடியவர்கள்
எனலாம்.
26. ஐந்திரம்
(ஐந்யோகம்):-
இதுவும் சுபமான
யோகம் தான்.
இதை சிலர்
மாகேந்திரம் என்ற பெயரிலும் குறிப்பிடுவதுண்டு. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் காரிய
வெற்றியுடையவர்கள். தீர்க்கதரிசிகள் எனலாம்.
ஆழ்ந்து சிந்தனை
செய்பவர்கள். வரும் பொருள் உரைப்பவர்கள். சிலர்
அருள்வாக்கு, ஜோதிடம் போன்றவையும் கூட இவர்களுக்கு
வருவதுண்டு. நல்ல நுணுக்கமான அறிவுள்ளவர்கள். புகழ்ச்சியை
விரும்புவார்கள். முன்கோபம் இருக்கும். கற்றறிந்த பண்டிதர்களையும்,
வேதஞானிகளையும் மதிப்பவர்கள். நல்ல தெய்வ பக்தியுடையவர்கள்.
தெய்வ காரியங்களை
செய்வார்கள்.
27. வைதிருதி
(வை யோகம்):-
இது அசுபமான
யோகமாகும். இதில் பிறந்தவர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள்.
தற்பெருமையும் உடையவர்கள். கலகப் பிரியர்கள். சும்மா
இருக்கும் சங்கை
ஊதிக் கொடுப்பவர்கள்.
நல்லவர்கள் போல் நடித்து ஆதாயம் பெறுவார்கள்.
கபடம் உள்ளதுடன்,
கெடுக்கும் புத்தி இருக்கும். மன உறுதி
இல்லாதவர்கள் என்பதால் மறைமுகமான தொல்லைகளை அளிப்பார்கள்.
நேர்மை இருக்
காது. கடவுள்
பக்தியைக்கூட வியாபாரமாக்கி காசு பண்ணி விடுவார்கள்.
ஆதாயம் இல்லாமல்
எதையுமே செய்யமாட்டார்கள்.
கஞ்சத்தனமும் இருக்கும். காம உணர்வு அதிகமுடையவர்கள்,
தீய பழக்கங்கள்
இருக்கும்.
கரணம்
கரணம் என்பது ஒரு
திதியின் பாதி
அளவைக் குறிப்பதாகும்.
6 பாகை கொண்டது
ஒரு கரணமாகும்.
இரண்டு கரணம்
கொண்டது ஒரு
திதியாகும்.
கரணங்கள் 11 வகைபடுகின்றன.
கரணங்களும் அதற்குரிய
காரணிகளும் (பறவை மிருகங்களும்)
1. பவகரணம் – சிங்கம்
2. பாலவகரணம் – புலி
3. கெளலவகரணம் – பன்றி
4. தைதுலை – கழுதை
5. கரசை – யானை
6. வணிசை – எருது
7. பத்திரை – கோழி (சேவல்)
8. சகுனி – காகம்
9. சதுஷ்பாதம் – நாய்
10. நாகவம் – பாம்பு
11. கிம்ஸ்துக்கினம் –
புழு
மேலே காணப்படும்
11 கரணங்களில் ஜனிக்கும் மனிதர்கள் அந்த அந்த
பறவைகள், மிருகங்களின்
குணாதிசயங்களையும், உணர்வுகளையும் தன்னகத்தே
பெற்றவர்களாக இருப்பார்கள்.
கீழே தரப்பட்டுள்ள
குணாதிசயங்கள் பெற்றிருப்பினும் , அவர்களின்
தாம்பத்திய உறவுகளில் அந்தந்த பறவை , மிருகங்களின்
காம உணர்வினையே
மேலதிகமாக பிரதிபலிக்கின்றார்கள்.
உதாரணமாக :
1. பவ கரணம்
(சிங்கம் )
பவகரணத்தில் பிறந்தவர் எக்காரியத்திலும்
பின் வாங்காத
தைரியம் உடையவர்.
கூர்ந்து ஆராய்ச்சி
செய்பவரும். சுகமுடையவரும், நன்னடத்தை உடையவரும். மென்மையான
தலைமுடி உடையவருமாவர்.
2. பாலவ கரணம்
(புலி)
பாலவகரணத்தில் பிறந்தவர்
சிற்றின்ப பிரியர்.
நீங்காத செல்வமுடையவர்.
அற்பத் தொழில்
முறையையுடையவர். தருமம் செய்பவரும், பிறரால் நிந்திக்கப்படாத
நற்குணமுடையவரும். தன் உறவினரைப்
பேணிக்காக்கும் குணமுடையவருமாவார்.
3. கெளலவ கரணம்
(பன்றி)
அரசாங்கப் பணியாளராக
இருப்பவரும். நல்ல ஆச்சாரமுடையவரும், தந்தை தாய்
மீது பற்றுள்ளவரும்,
நிலபுலன்களைச் சம்பாதிப்பவரும், பராக்கிரமம்
உடையவரும் வாகன
வசதியுடையவருமாவார்.
4. தைதுலை கரணம்
(கழுதை)
தருமம் செய்யாத
கருமியும், வேசியர் மீது பற்றுள்ளவரும், அரசாங்கத்தின்
மூலம் பொருளை
பெறுபவரும், அரசாங்கத்தில் பணி புரிபவருமாவார்.
5. கரசை கரணம்
(யானை)
அரசாங்க மூலம்
பணவரவு உள்ளவரும்,
பெண் நேயரும்,
எதிரிகளை எளிதில்
வெல்லக்கூடியவரும், எல்லோருக்கும் உதவும்
தரும சிந்தனையுடையவருமாவார்.
6. வணிசை கரணம்
(எருது)
கற்பனையான வார்த்தைகளைப்
பேசுபவரும், பிறருக்கு உதவாதவரும், உலகத்தோடு ஒப்ப
ஒழுகாதவரும், பெண் நேயருமாவர்.
7. பத்திரை கரணம்
(கோழி-சேவல்)
ஆண்மையில்லாதவர், மிகுந்த கருமியும், சஞ்சல மனம்
படைத்தவருமாவார்.
8. சகுனி கரணம்
(காகம்)
நல்ல அறிவு உள்ளவரும், அழகானவரும், மிகுந்த
செல்வம் உடையவரும்,
தைரியம் உள்ளவருமாவார்.
9. சதுஷ்பாத கரணம்
(நாய்)
வறுமையுடையவரும், சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவரும், கோபியும், பெண் பிரியரும், தீய
நடத்தையுடையவருமாவார்.
10. நாகவ கரணம்
(பாம்பு)
துன்பத்தை ஆள்பவரும்,
உத்தம குணமும்,
சுவையான உணவு
உண்பவருமாவார்.
11. கிம்ஸ்துக்கினம் கரணம்
(புழு)
தாய் தந்தையர்
மீது பற்றுள்ளவரும்,
சகோதரர்களைக் காப்பவரும், வேத சாஸ்திரம் அறிந்தவரும்,
உலகத்தை நன்கு
அறிந்தவருமாவார்.
இவைகள் கரணத்திற்குறிய
பொதுவான பலன்களாக
இருக்கும்.
இப்போது திருமண
முறிவுக்கான காரணங்களை பார்ப்போம் .
கோழி , நாய்
, பன்றி , கழுதை
, எருது , பாம்பு
போன்றவைகள் எதனைப் பற்றியும் கவலையின்றி தனது
இன்பத்தினை மட்டுமே கருத்தில் கொண்டு சுகித்திருக்கும்.
மற்ற சிங்கம்,
புலி, யானை,
காகம், புழு
போன்றவைகள் தனது இன்பத்தினை யாரும் காணாதவாறு
அமைத்துக்கொள்ளும்.
காமத்தில் அதிக
ஈடுபாடு கொண்டதாக
கோழி, நாய்,
பன்றி, கழுதை,
பாம்பு , புழுக்கள்
இருந்தாலும் இவைகள் கலவியில் ஈடுபடும் நேரம்
ஒரே மாதிரி
இல்லை. குறுகிய
நேரம், நீண்ட
நேரம் என
மாற்றம் உடையதாக
இருக்கின்றது.
உதாரணமாக கோழியின்
(சேவலின்) , காகத்தின் கலவி என்பது சில
நொடிகளே, ஆனால்
நாய்,பன்றி,கழுதை,புழு
போன்றவற்றின் கலவி நேரம் மிக கூடுதலாகும்.
உதாரணத்திற்கு ஒரு
கோழி (பத்திரை
கரணம்)அல்லது
காகத்தின் (சகுனி கரணம்) கரணத்தில் பிறந்த
ஆணின் கலவி
நேரம் என்பது
குறுகிய நேரமாகவே
இருக்கும்.
ஆனால் ஒரு பன்றியின் (கௌலவம் கரணம்)
நாயின் (சதுஷ்பாதம்
கரணம்) கரணத்தில்
பிறந்த ஒரு
பெண்ணின் கலவி
பிரியமானது நீண்டநேரம் இருக்கும்.
மேற்படி இருவருக்கும்
திருமணமானால் இவர்கள் வாழ்வில் எவ்வாறு கலவி
சந்தோஷம் இருக்கும்
? இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எவ்விதமான உணர்வுகளின்
சங்கமமாக இருப்பார்கள்.
இப்படியே போனால்
பிற்கால சந்ததிகளின்
மனோபாவம் எவ்வாறாக
அமையும் ?
யார் ஏற்றுக்கொண்டாலும்
ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் காம உணர்வே
உலகின் இயக்க
மூலமாகும். ஆனால் மேலே சொல்லப்பட்டவைகள் காம உணர்வுகளல்ல, அவை காம
வெறியாகும் .
காரணம் அடக்கப்பட்ட
உணர்வுகள் வெளிப்படும்போது
வெறியாக மாறுகிறது.
அதனால்தான் தனது காம
உணர்வுகளுக்கு எதிராக இருப்பவர்களை மகன், மகள்,
கணவன், மனைவி,
அண்ணி, அண்ணன்,
நண்பன், தந்தை,
தாய், மாமனார்,
மாமியார் என
யாராக இருந்தாலும்
கொலை செய்யும்
அளவிற்கு மாறுகிறது
.
கலவியில் தன்னை
திருப்தி செய்யாத
ஆண்மகனை , அவன்
நாட்டின் அரசனாகவே
இருந்தாலும் மனைவி மதிப்பதில்லை, அதனால் அவளோ,
அவனோ தடம்
மாறுகிறார்கள். இதனை அன்று நாம் கதைகளில்
பலவாறாக கேட்டு
இருக்கின்றோம். அதனை இன்று உலகியலில் கண்கூடாக
காண்கிறோம்.
ஆனால் இன்றைய
ஜோதிடர்களும் , திருமண அமைப்பாளர்களும் (புரோக்கர்கள்) செவ்வாய்
தோஷம், நாக
தோஷம் பார்க்கின்றார்கள்
, செவ்வாய்க்கு செவ்வாய் , நாகத்திற்கு நாகம் என்று
சேர்த்து வைக்கின்றார்கள்
, கரணம் பார்ப்பதே
இல்லை.
மேலும் செவ்வாய்க்கு
செவ்வாய் என்பது
ஏற்றுக்கொள்ள வேண்டிய பொருத்தம்.
ஆனால் நாகதோஷத்திற்கு
நாக தோஷம்
என்பது மிகவும்
தவறான ஒன்றாகும்.
அதிலும் இவர்கள் பார்ப்பது
லக்கினம் , இரண்டாமிடம் , சந்திரன் , இரண்டாமிடம் இந்த
இடங்களில் இராகுவோ
கேதுவோ இருந்தால்
நாக தோஷம்
, இப்படித்தான் பார்க்கின்றார்கள்.
ஆனால் மேலே
சொல்லப்பட்ட இடங்களில் இராகுவோ கேதுவோ இருக்குமாயின்
சம்பந்தப்பட்ட ஜாதகர்கள் வாயாடுபவர்களாகவும்,
சொல்லும் அறிவுரையை
கேளாதவர்களாகவும், எதிர்ப் பேச்சு
பேசுபவர்களாகவும் இருப்பார்கள். இதனை இந்த ஜாதகர்களின்
உறவினர்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.
இதுபோன்ற அமைப்பினைப்பெற்ற
(லக்கினம் , இரண்டாமிடம் , சந்திரன் , இரண்டாமிடம் இந்த
இடங்களில் இராகுவோ
கேதுவோ அமைந்து
இருக்கும்) இரண்டு ஜாதகர்கள் தம்பதிகளாக இணைந்தால்
அவர்களின் வாழ்வு
எப்படி இருக்கும்
கற்பனை செய்து
பாருங்கள் .
எவ்வளவுதான் சகிப்புத்தன்மையும்
, பொறுமையும் , குடும்ப மானத்தையும் எண்ணிஎண்ணி தன்னை
கட்டுக்குள் வைத்தாலும் இத்தனையையும் மீறவே மனம்
வழி வகுத்து
கொடுக்கும் .
காரணம் , நாம்
சரியான பொருத்தத்தை
தேர்வு செய்யாததே
.
ஆனால் நாம்
கொஞ்சமும் யோசிக்காமல்
அவர்களை குறையாக
சொல்வோம் , குற்றம் காண்போம்.
நாகதோஷம் உள்ள
ஜாதகத்திற்கு நாகதோஷம் இல்லாத ஜாதகம்தான் சேர்க்க
வேண்டும். நாகதோஷம்
உள்ள இரண்டு
ஜாதகங்களை இணைப்பது
நல்லதல்ல.
சரியான தேர்வினை
செய்ய நீங்கள்
முதலில் சரியான
அனுபவமுள்ள ஜோதிடரை தேர்வு செய்யுங்கள். அடுத்து
சரியான திருமண
அமைப்பாளரை கண்டுபிடியுங்கள்.
இதைத்தான் கரணம்
தப்பினால் மரணம்
என்றார்கள் பெரியோர்.