திங்கள், 28 செப்டம்பர், 2015

திருப்பதி தரிசன சம்பிரதாயம்:

203 பாசுரங்கள் பெற்றது திருப்பதி. இது 3 பிரிவுகள் கொண்டது.
கீழ்க் காணும் வரிசையில் தரிசிப்பதுதான் சம்பிர தாயம்.
முதலில் கீழ்த்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாளையும் அடுத்து திருச்சானூரில் அலர்மேல் மங்கைத் தாயாரையும் பின் மேல் திருப்பதியில் சுவாமி புஷ்கரணியருகேயுள்ள வராஹரையும் தரிசித்த பின்பே மூலவர் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய வேண்டும்.
கோயில் அமைப்பு:
முதல் வாயிலை படிக்கரவலி என்பர். கோபுரத்தை அழகு செய்யும் வாசல் இது.
முதற்பிராகாரத்தை கடந்தால் வெள்ளி வாயில், அதன்பின் தங்க விமானத்தில் விமான வெங்கடேசரை தரிசிக்கலாம்.
பின் துவாரபாலகர்களை தரிசித்து உத்தரவு பெற்றபின் கருவறைக்குச் செல்லலாம்.
முதலில் சாதாரணமாகக் கட்டப்பட்ட இந்த அனந்தபுரமான திருப்பதி, 13ம் நூற்றாண்டில் விரிவாக்கப்பட்டது.
சயன மண்டபம், முக்கோடி பிரதட்சிணம் (வைகுண்ட ஏகாதசியன்றும், அதற்கு முன் நாள், பின் நாள் என 3 நாட்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும்)
அடுத்து ராமமேடை, ஸ்நபன மண்டபம், தங்கக் கதவுகள் கொண்ட பங்காரு வாகினி (இங்குதான் தினம் அதிகாலையில் சுப்ரபாதம் இசைக்கப்படுகிறது.
மார்கழி மாதம் முழுதும் ஆண்டாளின் திருப்பாவை தமிழில் இசைக்கப்படுவதும் இங்குதான்.)
கோயில் கடல் மட்டத்தினின்று 3000 அடி உயரத்தில் உள்ளது.
மலைப்பாதையில் பாதயாத்திரை வழி 6 கி.மீ. தூரம்.
பல ஆண்டுகளுக்கு முந்தையதான சிலா தோரணம் என்ற கல் வளைவு உலகப்புகழ் பெற்றது.
ரோம் நகரில் திருப்பதி போலவே 7 மலைகளும், சிலா தோரணம் என்ற கல் வளைவும் உள்ளதாகக் கூறுகின்றனர்.
ஸ்ரீபாத மண்டபம்:
பாத யாத்திரையாகச் செல்லும் வழியில் இந்த மண்டபம் உள்ளது.
இங்குள்ள பாதங்களை தரிசித்த பின்பே பாத யாத்திரை செய்யும் பக்தர்கள் மலை ஏறுவார்கள்.
சுப்ரபாத தரிசனம் என்ற விஸ்வரூப தரிசனத்தை அதிகாலை 3:00-3:30 மணிக்கு கட்டணம் செலுத்தியோர் காணலாம்.
ஏழுமலையானை துயில் எழுப்ப 6 பேர் அதிகாலை 3.00 மணிக்கு சந்நதி முன் உள்ள தங்க வாயிலுக்கு வருவார்கள்.
2 அர்ச்சகர்கள், தீவட்டி தூக்குபவர், வீணை இசைப்பவர் ஆகியோர் கொண்ட ஒரு குழு முதலில் தங்க துவார பாலகர்களை வணங்கிய பின் சந்நதி கதவு திறக்க சுவாமியை வணங்குவர்.
பின் உள்ளே சென்று கதவுகளை மூடிக்கொள்வர்.
வெளியில் ஒரு குழுவினர் சுப்ரபாதம் இசைப்பார்கள்.
உள்ளே சென்றதும் தீவட்டியால் விளக்கேற்றும்போது வீணை இசைக்கப்படும். பிறகு கதவுகளைத் திறப்பார்கள்.
அதன்பின் தொட்டிலில் உள்ளே போக ஸ்ரீனிவாசனை உற்சவர் காலடியில் வைப்பர்.
அவருக்கு இடுப்பில் ஒரு துண்டு கட்டுவார்கள்.
பின்பு வெண்ணெய் படைப்பார்கள்.
ஆகாய கங்கையில் இருந்து 3 குடம் அபிஷேக நீர் எடுத்து வருவார்கள்.
அது காலை, நண்பகல், இரவு என 3 அபிஷேகத்திற்கு பயன்படும்.
இந்த நீரை ஒரு உத்திரிணியில் எடுத்து ஏழுமலையான் முகத்தருகே காட்டுவர்.
சுவாமி தன் முகம் கழுவிக் கொள்வதாக பாவனை.
பின் திருவடிக்கு மட்டும் அபிஷேகம்.
அடுத்து போக ஸ்ரீனிவாசனுக்கு முழு அபிஷேகம் செய்வர்.
பசும்பால், சந்தனம், தேன், திருமஞ்சன நீர் அபிஷேகம் செய்து நவநீத ஆராதனை காட்டுவர்.
இத்துடன் காலை சுப்ரபாத தரிசனமான விஸ்வரூப தரிசனம் நிறைவடையும்.
4 மண்டப ஸ்தலங்கள்:
ஸ்ரீரங்கம், போக மண்டபம், கர்நாடகா திருநாராயணபுரம், ரங்க மண்டபம் இவைதான் வைணவ திவ்ய தேச மண்டப ஸ்தலங்கள்.
ரங்க மண்டபம் என்றால் என்ன தெரியுமா?
டில்லி படையெடுப்பால் ஸ்ரீரங்கம் உற்சவத்திருமேனியான நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு கோழிக்கோடு, கர்நாடகா என்று சுற்றிவிட்டு திருமலை வந்து சேர்ந்தார்.
இங்குள்ள மண்டபத்தில் 10 வருடம் தங்கினார். அந்த மண்டபத்தின் பெயர் ரங்க மண்டபம்,
குபேர தரிசனம்:
வியாழன் மாலை 6:00-6:30 மணி வரை உள்ள காலம் குபேர காலம்.
அப்போது மூலவரை பாதம் தொடங்கி சிரசு வரை தரிசிப்பதுதான் குபேர தரிசனம்.
இதனால் செல்வம், புகழ், ஐஸ்வர்யம் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...