சனி, 18 ஜூலை, 2015

மனிதனை மாற்றும் மந்திரங்கள்....

மனதுக்கு திறம், திடம் கொடுப்பது தான் மந்திரம். மந்திர ஜெபங்களை - இந்த காரிய பலிதம் வேண்டும் என்று மனதில் சங்கல்பம் எடுத்துக் கொண்டு, அதை மனதுக்குள் உருவேற்றும் போது - அது உங்கள் மனதை திடப் படுத்துகிறது.
அதன் பிறகு உங்கள் மனதில் ஏற்படும் ஒலியே - பல இன்னல்களை தகர்த்து , நீங்கள் விரும்பிய பாதையில் , உங்களை அழைத்துச் செல்கிறது.
கோபுரங்கள் கூம்பு வடிவத்தில் ஏன் அமைக்கப் பட்டு இருக்கின்றன?விண்ணில் விரவிக் கிடக்கும் நல் அலைகள் கோபுரத்தின் முக்கோண பரிமாண வடிவில் பட்டு , அங்கேயே சுழன்று கொண்டு இருக்கும்படி செய்வதற்காக , திட்டமிட்டே கோபுரங்கள் இந்த வடிவில் அமைக்கப் படுகின்றன.
மனதின் சக்தி, ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபட்டது.அதே சமயம்,அந்த மன சக்தியை ஒருநிலைப்படுத்திடவே மனிதனின் முன்னோர்கள், தெய்வீக சக்தியை பூமியில் சில குறிப்பிட்ட இடங்களில் குவியச்செய்து,அதன் மூலம் எல்லாமனிதர்களும் தத்தம் மனசக்தியை சமநிலைப் படுத்திட ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
அலைந்து திரியும் மனதுடன் ஒருவர் இருந்தாலும், சக்தி வாய்ந்த இந்த கோபுரங்கள் அமைக்கப் பெற்ற ஆலயத்தில் ஒருவர் நுழையும்போதே , அவரது மனது சாந்தியும், சந்தோசமும் பெறுவது அங்கு நிலவும் இந்த தெய்வீக கதிர் வீச்சினால்தான்.
ஒவ்வொரு மாத பவுர்ணமியன்றும் குரு ஓரையில் சித்தர்கள், மகான்கள், துறவிகளின் ஜீவ சமாதிகள், சதுரகிரி மலைப்பகுதி,சதுரகிரியின் கோவில் சன்னதி, திரு அண்ணாமலையின் கோவில்பகுதி, திருவண்ணாமலையின் கிரிவலப்பாதை, அஷ்ட லிங்கங்களின் சன்னதிகளில் அமர்ந்து பின்வரும் மந்திரத்தை 90 நிமிடங்கள் (முற்காலக் கணக்கின்படி ஒரு நாழிகை) ஜபித்துவரவேண்டும். உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் நூற்றுக்கணக்கான வருடங்கள் பழமையான ஒவ்வொரு ஆலயமும், அற்புத சக்தி நிரம்பிய ஆலயங்களே.
இதனால்,முற்பிறவி கர்மம்,நம் முன்னோர்கள் செய்த கர்மம்(பாவம்) தீரும். அப்படித் தீர்ந்தாலே, நாம் செல்வச் செழிப்பின் உச்சத்தை நோக்கி நகரத் துவங்குவோம்.
மந்திரம்
ஓம் ஹ்ரீம் பரஞ்சோதி பரஞ்சோதி ஹம்ஸ ஹம்ஸ
வ்யோம வ்யோம ந்ருத்த பரப்ரகாசானந்த நாதாய
ஹ்ரீம் சிவானய நமஹ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...