(26.7.14சனிக்கிழமை) அன்னதானம்!!!
உலகத்திற்கே மனிதநாகரீகத்தைக் கற்றுக் கொடுத்தது நமது தமிழ்நாடுதான்! ஏனெனில்,மனிதன்நாகரீகமடையத் துவங்கி 20,00,000 ஆண்டுகள் ஆகிவிட்டன;மனித இனம் நாகரீகமடைந்தது இன்றைய இலங்கைக்குத் தெற்கே கடலுக்குள் மூழ்கியிருக்கும் குமரிக்கண்டத்தில் தான்! அன்று முதல் இன்று வரை குலதெய்வத்தை தலைமுறைதலைமுறையாக வழிபட்டு வரும் ஒரே மனித இனம் நமது தமிழ் இனம் மட்டுமே!
இறந்த முன்னோர்களே குலதெய்வங்களாக பரிணமித்திருக்கின்றன;இறந்த முன்னோர்கள் விண்ணில் பித்ருக்கள் உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர்;அவர்கள் பித்ருதேவதைகள்,எமதர்மராஜா போன்றவர்களின் அனுமதியோடு பூமிக்கு வரும் மூன்று நாட்களில் முதன்மையானது ஆடி அமாவாசை!!அவ்வாறு வருகை தந்து பூமியில் வாழ்ந்து வரும் தனது வம்சாவழியினரில் ஒருவராவது முன்னோர்களுக்குத்தர்ப்பணம் செய்கிறார்களா? என்பதை கவனிப்பார்கள்;
அவ்வாறு யாராவது ஒருவர் செய்தாலும் அதைப்பெற்றுக் கொண்டு அவர்களுக்கு பரிபூரண ஆசி வழங்குவார்கள்;இந்த ஆசியினால் அந்த குடும்பத்திற்கு அடுத்த ஒரு வருடத்திற்கு வளங்கள் பெருகும்;நலங்கள் அதிகரிக்கும்;அதே சமயம் வரஇருக்கும் ஆபத்துக்கள்/விபத்துக்களில் இருந்து பித்ருக்களின் ஆசி தடுத்து காப்பாற்றிவிடும்; ஒரே ஒரு ஆடி அமாவாசை நாளன்று நாம் செய்யும்அன்னதானமானது,பித்ருக்கள் உலகில் வசிப்பவர்களுக்கு ஒரு வருடத்துக்குரிய உணவாகப் போய்ச் சேருகிறது;
ஆடி மாதத்தில் ஆத்மாக் காரகனாகிய சூரியன் சந்திரனின் ராசியான கடகத்தைக் கடந்துகொண்டிருப்பார்;அந்த சூரியனுடன் மனக்காரகனாகிய சந்திரன் ஒன்று சேரும் நாள்தான் ஆடி அமாவாசை ஆகும்;
இந்த நன்னாளில் இல்லறத்தாராகிய நாம் ஒவ்வொருவருமே நமது முன்னோர்களுக்கு(பித்ருக்களுக்கு) தர்ப்பணம் செய்ய வேண்டும்;ஒவ்வொருவருமே சிவனடி சேர்ந்த தனது பெற்றோர்களின் நினைவாகவோ அல்லது தாத்தா பாட்டியின் நினைவாகவோ அவர்கள் சிவனடி சேர்ந்த திதியை அறிந்து கொள்ள வேண்டும்;ஒவ்வொரு ஆண்டும் அந்த திதி வரும் நாளில் அவரவர்களுக்கு முறைப்படி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்;இன்றைய வேகமானவாழ்க்கையில் ஒருவரே குறைந்த பட்சம் ஆறு பேர்களுக்கு வருடாந்திரத் திதி கொடுப்பது சாத்தியமா?
அம்மாவின் அப்பா,அம்மாவின் அம்மா
அப்பாவின் அப்பா,அப்பாவின் அம்மா
மற்றும்
சிவனடி சேர்ந்த அம்மா,அப்பா
போன்ற எண்ணிக்கையில் திதி கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் ஒரு ஆண்டில் ஆறு வெவ்வேறு நாட்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்;
இது செய்ய முடியாதவர்கள் நமது ஆன்மீக குருவின் தலைமையில் இது போன்ற ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளவாவது செய்ய வேண்டும்;அப்படி கடந்த வருடங்களில் கலந்து கொண்ட அனைவரது நியாயமான கோரிக்கைகளும் சில நாட்கள்/வாரங்களுக்குள் முன்னோர்களின் ஆசியாலும்,நமது ஆன்மீக குருவின் அருளாசியாலும் நிறைவேறின;பலவாசக,வாசகிகளின் பல ஆண்டு வாழ்வியல் சிக்கல்கள் நிரந்தரமாகத் தீர்ந்தன;வேலைகிடைக்காதவர்களுக்கு நிரந்தரமான வேலை கிடைத்தன;திருமணத்தடை பலருக்குநீங்கியது;குழந்தைப் பாக்கியம் வேண்டி வந்து கலந்து கொண்ட அனைவருக்கும் புத்திர யோகம் கிடைத்தன;பூர்வீகச் சொத்து சிக்கல்கள் பலருக்குதீர்ந்தன;இந்த அனுபவங்களை விவரித்தால் அதற்கே தனி வலைப்பூ தேவைப்படும்;
ஜய வருடத்தின் ஆடி அமாவாசைத் திதியானது26.7.2014 சனிக்கிழமையன்று வருகிறது.இந்த நன்னாளில் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நமது ஆன்மீக வழிகாட்டி சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் தலைமையில் திருநெல்வேலி மாவட்டம்கழுகுமலையில் ஆன்மீக சத்சங்கம் நடைபெற இருக்கிறது;இந்த சத்சங்கத்தின் முடிவில் ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் கழுகுமலைகிரிவலமும்,கிரிவலத்தின் நிறைவாக அன்னதானமும் நடைபெற இருக்கிறது.
இந்த ஆடி அமாவாசை பித்ருக்கள் அன்னதான நிகழ்வில் கலந்து கொள்ள அனைத்து ஆன்மீகஅரசு,ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளையும் ஆன்மீகக்கடல் குழுமம் அன்போடு அழைக்கிறது;
ஓம்சிவசக்திஓம்
கழுகுமலை வர விரும்புவோர் கவனிக்க:-
தமிழ்நாட்டின் வடக்கே இருந்து வருபவர்கள் மதுரை டூ திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை/ரயில்பாதையில் அமைந்திருக்கும் கோவில்பட்டிக்கு வர வேண்டும்;அங்கிருந்து சங்கரன்கோவில் செல்லும் பேருந்து வழித்தடத்தில் அமைந்திருக்கும் கழுகுமலையை வந்தடையலாம்;பொதிகை எக்ஸ்பிரஸின் மூலமாக பயணிப்பவர்கள் சங்கரன்கோவிலில் இறங்க வேண்டும்;அங்கிருந்து கோவில்பட்டி செல்லும் சாலை மார்க்கமாககழுகுமலையை வந்தடையலாம்;
தமிழ்நாட்டின் தெற்கே இருந்து வருபவர்கள் நாகர்கோவில் டூ மதுரை தேசிய நெடுஞ்சாலை/ரயில் பாதையில் அமைந்திருக்கும் கோவில்பட்டியை வந்தடைந்து,அங்கிருந்துகழுகுமலைக்கு வரலாம்;அல்லது திருநெல்வேலி டூ ராஜபாளையம் வழித்தடத்தில் அமைந்திருக்கும் சங்கரன்கோவிலை வந்தடைய வேண்டும்;அங்கிருந்து கோவில்பட்டி செல்லும் சாலை வழியாக கழுகுமலையை வந்தடையலாம்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக